Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 23 பிப்ரவரி, 2019

Our Lady Quotes (Tamil)


பெற்றோர்களுக்குரிய சங்கை மரியாதை!

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கக்கூடிய மிக விலைமதிப்பில்லா கொடைகளில் ஒன்று, அவர்கள் உள்ளத்தில் பெரியவர்களுக்கு ‘சங்கை மரியாதை செலுத்தும்“ உணர்வை ஊட்டுவதேயாகும்.  பெரியவர்களுக்குக் கொடுக்கக்கூடிய இம்மதிப்பு மரியாதை உலகில்  குறையும் போது பாவங்கள் மலிந்து துன்பங் களும் பெருகி மரணங்கள் அதிகரிக்கும்.
மனித வாழ்வின் ஜீவியமும், சந்தோ­மும் பெரியவர் களுக்கு, பெற்றோர்களுக்கு, அர்ச்சிஷ்டவர்களுக்கு, அர்ச்சிஷ்ட பண்டங்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பு, சங்கை மரியாதையுடன் மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.  இத்தகைய சங்கை மரியாதை என்ற புண்ணியத்தின் அடித்தளமானது குழந்தைகளின் உள்ளத்தில், அவர்கள் தங்கள் பெற்றோரை மதித்து சங்கை செய்யக் கற்றுக்கொள்ளும் போது இடப்படுகிறது.  சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தங்களை மதித்து, மரியாதையுடன் நோக்குவதற்குத் தகுதியில்லாத ஈன வாழ்வை ‡ துர்மாதிரிகையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இதன் காரணமாக இத்தகைய பெற்றோரின் குழந்தைகள் சங்கை மரியாதை என்ற இந்த புண்ணியத்தின் அடித்தளமின்றி வளர்ந்து, பின்னர் தெய்வ பயமின்றி மூர்க்கர்களாய் தங்கள் பாவங்களில் நிலைகொண்டு விடுகிறார்கள். 
சில சமயங்களில் பெற்றோர் நல்லவர்களாய் இருக்கும் போதிலும், தங்கள் குழந்தைகளின் மனதில் இப்புண்ணியத்தின் விதையை விதைக்கத் தவறி விடுகிறார்கள்.  குழந்தைகள் தங்கள் விருப்பம் போல், தங்களுக்கு பிடித்தவைகளை மட்டுமே செய்வதை அனுமதிக்கும் போதும்,  அல்லது தவறு செய்யும் போது கண்டித்து திருத்தாதப்போதும் குழந்தைகள் சுயநலம் மட்டுமே நிறைந்த மனதுள்ளவர்களாக வளர்கிறார்கள்.  அத்தகைய குழந்தைகள் உள்ளங்களில் சிறதளவும் சங்கை மரியாதை என்பதே இல்லாமல் இருக்கிறார்கள்.  அத்தகைய குழந்தைகள் பெரியோர்களானதும் அவர்களது வாழ்வு எப்படி கிறீஸ்தவப் பண்புள்ளளதாக இருக்கும்?

நான்காவது கட்டளை


நம் அனைவருக்கும் தேவ கட்டளைகள் மனப்பாடமாகத் தெரியும்.  இதில் நான்காவது கட்டளை ‘பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக!“ என்று கற்பிக்கிறது!  இக்கட்டளை வெறும் கீழ்ப்படிதலை மட்டும் கற்பிக்கவில்லை.  மாறாக அதற்கும் மேலான சங்கை மரியாதையையும் கட்டளையிடுகிறது.  கீழ்ப்படிதல் அவசியம் தான்.  ஆனால் அதுமட்டும் போதாது.  ‘சங்கித்திருத்தல்“ என்றால் பெற்றோருக்கு பயந்து, நேசித்து, மதித்து மேலும் கீழ்ப்படிய வேண்டியதைக் குறிக்கிறது.  குழந்தைகள் செய்ய வேண்டிய நல்ல காரியங்களில் பெரியோரை மதித்து சங்கை செய்வதுதான் முதலில் வருகிறது.  இந்தப் புண்ணியம்தான் குழந்தைகள் பின்னர் பெரியவர் களானதும் தங்கள் வாழ்நாள் முழுவதிலும் தெய்வபயத்துடன் வாழ முதல் தயாரிப்பாகத் திகழ்கின்றது.  வேதாகமத்தில் நாம் வாசிப்பது போல, நீடித்த வாழ்வை இவ்வுலகில் வாழ்வதற்கு இன்றியமையாத நிபந்தனை: பெற்றோர்களுக்கு கொடுக்க வேண்டிய சங்கை மரியாதையாகும்.  இதில் ஒன்றை கவனிக்க வேண்டும்.  இந்த நிபந்தனையை நிறைவேற்றினால் நீடித்த சந்தோ­மான வாழ்வை வாழலாம் என்று சொல்லப்படவில்லை.  ஏனென்றால், சந்தோ­மான வாழ்வு வாழ்வதற்கு இன்னும் மற்ற அநேக புண்ணியங்களும் தேவைப்படுகின்றன.  இதன் சரியான பொருள்: பெற்றோர்களுக்கு அடங்கி அவர்களை சங்கை செய்யாத பிள்ளைகள் மோசமான துன்பங்களுக்கு இட்டுச்செல்லும் பாதையில் ‡ அழிவின் பாதையில் போகிறார்கள் என்பதாகும்.   

உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி சங்கை மரியாதை செய்வது என்று கற்றுக் கொடுங்கள்

இதைக் கற்றுக் கொடுக்காத பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு பெரும் அநீதியை செய்கிறார்கள்.  தங்கள் பெற்றோரை மதிக்க, சங்கை செய்து கீழ்ப்படிய கற்றுக்கொள்ளாத பிள்ளைகள் சர்வேசுரனுக்கு சங்கை செய்யக் கற்றுக்கொள்வது அரிது!  இதைக் கற்றுக் கொடுப்பதற்கு குடும்ப ஜெபம் மிக உதவியாக இருக்கிறது.  பெற்றோர்கள் குடும்ப ஜெபத்தை பக்தியோடு சொல்லும் போதும், பரிசுத்த காரியங்களைப் பற்றி பேசும் போதும் பரிசுத்தமான பொருட்களை கையாளும் போதும் பிள்ளைகளும் அப்படியே கீழ்ப்படிதலுடன் தங்கள் பெற்றோர் மட்டில் உயர்ந்த எண்ணமும் அதைத் தொடர்ந்து சங்கை மரியாதை செய்யும் எண்ணமும் அவர்கள் மனதில் வந்துவிடுகிறது. 


எனவே கத்தோலிக்கப் பெற்றோரே!  உங்கள் பிள்ளைகள் உத்தமர்களாக வேண்டுமானால் பெரியவர்களை, பெற்றோர்களை சங்கை மரியாதை செய்ய கற்றுக் கொடுங்கள்.

மரியாயின் மாசற்ற இருதயமே எங்கள் இரட்சணியமாயிரும்

  மரியாயின் மாசற்ற இருதயமே

 எங்கள் இரட்சணியமாயிரும்



வானத்தில் பெரியதொரு அடையாளம் காணப்பட்டது.  ஓர் பெண் சூரியனை ஆடையாக உடுத்தி, தன் பாதங்களின் கீழ்  சந்திரனையும், தன் சிரசின் மேல் பன்னிரு நட்சத்திரங்கள் அடங்கிய கிரீடத்தையும் தரித்திருந்தாள்.
  - காட்சியாகமம் 12: 1


வியாழன், 21 பிப்ரவரி, 2019

St. Therese Quotes (Tamil) 1

ஆன்மாக்களுக்குப் போதிக்க இயேசுவுக்கு நூல்களோ, அல்லது கற்றறிந்த ஞானிகளோ தேவையில்லை. மறை வல்லுனர்களுக்கெல்லாம் மறை வல்லுனராகிய அவர் வார்த்தைகளின் ஒலி இன்றியே கற்பிக்கிறார் (கிறீஸ்துநாதர் அநுச்சாரம், மூன்றாம் பிரிவு, அத். 43:3). அவர் பேசியதை நான் ஒருபோதும் கேட்டதேயில்லை. ஆனாலும் அவர் எனக்குள் இருக்கிறார் என்பதை நான் அறிவேன்.

                                                         அர்ச். குழந்தை தெரசம்மாள்


புதன், 20 பிப்ரவரி, 2019

தேவதூதர்களின் மகத்துவம்

தேவதூதர்களின் மகத்துவம் ஆழம் காண முடியாததும்,
கரைகள் அற்றதுமான பெருங்கடலுக்கு ஒப்பானது. அது, மனித
மனத்திற்கு எட்டாத பெரும் பாதாளம்! தேவதூதர்களின் இயல்பு
அல்லது சுபாவம் எந்தக் குறைபாடுமில்லாத பூரண முழுமையாக
இருக்கிறது. தேவதூதர்களில் மிகச் சிறியவர்களும் கூட, தேவதாயார்
நீங்கலாக, மற்ற அனைத்து புனிதர்களையும் விட மேலானவர்கள்
என்று புனித அம்புரோஸ் கூறுகிறார்.



“நேரடியாக சேசுவிடம்” என்பதற்கான மறுப்பு



நாம் ஏன் சேசுவிடம் நேரடியாக ஜெபிக்கக் கூடாது?” என்பது பதிதர்களின் கேள்வி. சேசுவிடம் நேரடியாக ஜெபிக்க வேண்டியது உண்மைதான். ஆனால் ஒருவன் தனக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்பது சரியல்ல என்பது இதன் பொருளாகாது. அர்ச்சிய சிஷ்டவர்களிடம் ஜெப உதவி கேட்பது தவறு என்று சொல்லும் இவர்கள் தங்கள் பிரசுரங்களிலும் தொலைக்காட்சிகளிலும் "ஜெப உதவிக்குஎன்று தங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுப்பதை எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்?!
ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பது கத்தோலிக்க வாழ்வின் ஓர் அங்கம். அர்ச். சின்னப்பர் பல சமயங்களில் தமக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்கிறார் (உரோ .15:30, 32; எபே.6:18, 20; கொலோ .4:3; 1தெச.5:25, 2 தெச.3:1 காண்க). தாம் அவர்களுக்காக ஜெபிப்பதாகவும் அவர் உறுதி தந்தார் (2 தெச. 1:11). மேலும், மற்றவர்களுக்காக ஜெபிக்கும் படி சேசுவே நம்மிடம் கேட்கிறார் (மத்.5:44). எனவே பரிசுத்த வேதாகமம் அர்ச்சியசிஷ்ட வர்களிடம் ஜெபிப்பதை ஊக்குவிக்கிறது என்பது தெளிவாகிறது.
இதிலிருந்து நாம் அடையும் பலன்களில் ஒன்று நம் பலவீனங்களில் அவர்களது ஆதர வையும், நம் விசுவாசம் மற்றும் பக்திக் குறை வில் அவர்களது மன்றாட்டின் பலனையும் நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதே. சேசு சிலரது விசுவாசத்தின் அடிப்படையில் மற்றவர்களுக்குப் புதுமைகள் செய்தார் (மத்.8:13; 15:18; மாற்கு.9:17, 29; லூக். 8:49, 55 காண்க). அப்படியிருக்க, பரலோகத்தில், தங்கள் சரீரங்களிலிருந்தும் உலகப் பராக்குகளிலிருந்தும் விடுபட் டிருக்கிற அர்ச்சியசிஷ்டவர்களிடம் நாம் அதிக நம்பிக்கையோடு மன்றாடலாம் என்று சொல்லத் தேவையில்லை.


Tamil Catholic Quotes & Prayer 2


Tamil Catholic Quotes & Prayer 1

எங்களைப் படைத்து காப்பாற்றி ஒளி தந்து மோட்சப் பாதையில் நடத்தும் பிதா சுதன் இஸ்பிரித்துசாந்து என்னும் திரித்துவ ஏக சர்வேசுரனுக்கு எல்லாப் படைப்புகளாலும் ஸ்துதியும் தோத்திரமும் என்றென்றைக்கும் உண்டாகக்கடவது.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

எப்போது ஒரு வீட்டில் கத்தோலிக்கச் சுழ்நிலை ஏற்படும்?


 மெய்யான தேவனும் மெய்யான
மனிதனுமானவரான நமது ஆண்டவரின் அரசாட்சியின்
கீழ் அவ்வீட்டின் அனைத்தும் உட்படும் போது. நான்
அனைத்தும் என்று கூறுவது, நமது ஜெபதவங்களை
மட்டுமல்ல, மாறாக, நமது பொழுது போக்குகள், நமது
உணவுகள், நமது உடையணிகள், நமது பேச்சுக்கள்
போன்றவற்றையும் சேர்த்து தான் குறிப்பிடுகிறேன

Tamil Quotes 1


Catholic tamil Quotes

Quotes on Prayer

CHRIST THE kiNG