Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 20 பிப்ரவரி, 2019

“நேரடியாக சேசுவிடம்” என்பதற்கான மறுப்பு



நாம் ஏன் சேசுவிடம் நேரடியாக ஜெபிக்கக் கூடாது?” என்பது பதிதர்களின் கேள்வி. சேசுவிடம் நேரடியாக ஜெபிக்க வேண்டியது உண்மைதான். ஆனால் ஒருவன் தனக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்பது சரியல்ல என்பது இதன் பொருளாகாது. அர்ச்சிய சிஷ்டவர்களிடம் ஜெப உதவி கேட்பது தவறு என்று சொல்லும் இவர்கள் தங்கள் பிரசுரங்களிலும் தொலைக்காட்சிகளிலும் "ஜெப உதவிக்குஎன்று தங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுப்பதை எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்?!
ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பது கத்தோலிக்க வாழ்வின் ஓர் அங்கம். அர்ச். சின்னப்பர் பல சமயங்களில் தமக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்கிறார் (உரோ .15:30, 32; எபே.6:18, 20; கொலோ .4:3; 1தெச.5:25, 2 தெச.3:1 காண்க). தாம் அவர்களுக்காக ஜெபிப்பதாகவும் அவர் உறுதி தந்தார் (2 தெச. 1:11). மேலும், மற்றவர்களுக்காக ஜெபிக்கும் படி சேசுவே நம்மிடம் கேட்கிறார் (மத்.5:44). எனவே பரிசுத்த வேதாகமம் அர்ச்சியசிஷ்ட வர்களிடம் ஜெபிப்பதை ஊக்குவிக்கிறது என்பது தெளிவாகிறது.
இதிலிருந்து நாம் அடையும் பலன்களில் ஒன்று நம் பலவீனங்களில் அவர்களது ஆதர வையும், நம் விசுவாசம் மற்றும் பக்திக் குறை வில் அவர்களது மன்றாட்டின் பலனையும் நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதே. சேசு சிலரது விசுவாசத்தின் அடிப்படையில் மற்றவர்களுக்குப் புதுமைகள் செய்தார் (மத்.8:13; 15:18; மாற்கு.9:17, 29; லூக். 8:49, 55 காண்க). அப்படியிருக்க, பரலோகத்தில், தங்கள் சரீரங்களிலிருந்தும் உலகப் பராக்குகளிலிருந்தும் விடுபட் டிருக்கிற அர்ச்சியசிஷ்டவர்களிடம் நாம் அதிக நம்பிக்கையோடு மன்றாடலாம் என்று சொல்லத் தேவையில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக