Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

St. Therese Quotes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
St. Therese Quotes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 பிப்ரவரி, 2019

தேவதூதர்களின் மகத்துவம்

தேவதூதர்களின் மகத்துவம் ஆழம் காண முடியாததும்,
கரைகள் அற்றதுமான பெருங்கடலுக்கு ஒப்பானது. அது, மனித
மனத்திற்கு எட்டாத பெரும் பாதாளம்! தேவதூதர்களின் இயல்பு
அல்லது சுபாவம் எந்தக் குறைபாடுமில்லாத பூரண முழுமையாக
இருக்கிறது. தேவதூதர்களில் மிகச் சிறியவர்களும் கூட, தேவதாயார்
நீங்கலாக, மற்ற அனைத்து புனிதர்களையும் விட மேலானவர்கள்
என்று புனித அம்புரோஸ் கூறுகிறார்.



“நேரடியாக சேசுவிடம்” என்பதற்கான மறுப்பு



நாம் ஏன் சேசுவிடம் நேரடியாக ஜெபிக்கக் கூடாது?” என்பது பதிதர்களின் கேள்வி. சேசுவிடம் நேரடியாக ஜெபிக்க வேண்டியது உண்மைதான். ஆனால் ஒருவன் தனக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்பது சரியல்ல என்பது இதன் பொருளாகாது. அர்ச்சிய சிஷ்டவர்களிடம் ஜெப உதவி கேட்பது தவறு என்று சொல்லும் இவர்கள் தங்கள் பிரசுரங்களிலும் தொலைக்காட்சிகளிலும் "ஜெப உதவிக்குஎன்று தங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுப்பதை எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்?!
ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பது கத்தோலிக்க வாழ்வின் ஓர் அங்கம். அர்ச். சின்னப்பர் பல சமயங்களில் தமக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்கிறார் (உரோ .15:30, 32; எபே.6:18, 20; கொலோ .4:3; 1தெச.5:25, 2 தெச.3:1 காண்க). தாம் அவர்களுக்காக ஜெபிப்பதாகவும் அவர் உறுதி தந்தார் (2 தெச. 1:11). மேலும், மற்றவர்களுக்காக ஜெபிக்கும் படி சேசுவே நம்மிடம் கேட்கிறார் (மத்.5:44). எனவே பரிசுத்த வேதாகமம் அர்ச்சியசிஷ்ட வர்களிடம் ஜெபிப்பதை ஊக்குவிக்கிறது என்பது தெளிவாகிறது.
இதிலிருந்து நாம் அடையும் பலன்களில் ஒன்று நம் பலவீனங்களில் அவர்களது ஆதர வையும், நம் விசுவாசம் மற்றும் பக்திக் குறை வில் அவர்களது மன்றாட்டின் பலனையும் நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதே. சேசு சிலரது விசுவாசத்தின் அடிப்படையில் மற்றவர்களுக்குப் புதுமைகள் செய்தார் (மத்.8:13; 15:18; மாற்கு.9:17, 29; லூக். 8:49, 55 காண்க). அப்படியிருக்க, பரலோகத்தில், தங்கள் சரீரங்களிலிருந்தும் உலகப் பராக்குகளிலிருந்தும் விடுபட் டிருக்கிற அர்ச்சியசிஷ்டவர்களிடம் நாம் அதிக நம்பிக்கையோடு மன்றாடலாம் என்று சொல்லத் தேவையில்லை.


சனி, 5 மே, 2018

மே மாதம் 5-ம் தேதி - அர்ச். 5-ம் பத்திநாதர் (St. Pius V,)

*மே மாதம் 5-ம் தேதி*
*St. Pius V, P.*             
*அர்ச். 5-ம் பத்திநாதர்*
*பாப்பாண்டவர் - (கி.பி. 1572).*


அர்ச். தோமினிக் சபை துறவியான மிக்கேல் என்ற இவருக்கிருந்த மேலான ஞானத்தினாலும் அர்ச்சியசிஷ்டதனத்தினாலும் இவர் குருவாகி ஆயர் அபிஷேகம் பெற்றுக் கர்தினால் பட்டத்தை அடைந்து, 4-ம் பத்திநாதர் என்னும் பாப்பரசருடைய மரணத்திற்குப்பின் 5-ம் பத்திநாதர் என்னும் பெயரைக் கொண்டு
அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் ஏறினார். இவர் தமது முந்தைய வழக்கத்தை விடாமல், தபத்தையும் ஒருசந்தியையும் அனுசரித்து புண்ணிய வாழ்க்கை வாழ்ந்துவந்தார். இவர் குருக்களுடைய நல்லொழுக்கத்தைக் கவனித்து, தவறுகளைக் கண்டித்து வந்தார். குருக்கள் செய்யும் கட்டளை ஜெப புத்தகத்தையும், பூசைப் புத்தகத்தையும் சரிபார்த்து, தேவ பாடல்களைச் சீர்திருத்தி, திரிதெந்தின் சங்கத்தின் தீர்மானங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இங்கிலாந்து தேசத்தில் சத்திய வேதத்தினிமித்தம் அநேக கத்தோலிக்கக் கிறீஸ்தவர்களை குரூரமாய்க் கொன்ற எலிசபெத் என்னும் இராணிக்குத் திருச்சபை சாபமிட்டு, வேதத்தினிமித்தம் சிறைபடுத்தப்பட்ட ஸ்காட் மேரி இராணிக்கு ஆறுதலான நிருபம் அனுப்பினார். கிறீஸ்தவ வேதத்தை அழிக்கும் கருத்துடன் துலுக்கர் அநேகப் பட்டணங்களைப் பிடித்துப் பாழாக்கி, கிறீஸ்தவர்களை குரூரமாய் உபாதித்துக் கொன்று லெபாந்த்தோ என்னுமிடத்தில் ஏராளமான கப்பற்படையைச் சேர்த்து, போர் புரிகையில், கிறீஸ்தவர்களுக்கு ஜெயமுண்டாகும்படி இவர் மகா பக்தி விசுவாசத்துடன் தேவமாதாவைப் பார்த்து வேண்டிக்கொண்டார். அற்புதமாய் கிறீஸ்தவர்கள் ஜெயங்கொண்டதை இவர் தூரதிருஷ்டியால் அறிந்து, மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினார். இவர் தமது               68-ம் வயதில் அர்ச்சியசிஷ்டவராகக் காலஞ் சென்றார்.

*யோசனை*

நமது அதிகாரத்திற்கு உட்பட்டவர்களுடைய நடத்தையைக் கவனித்து, அவர்கள் தவறுகளைக் கண்டித்து அவர்களுக்குப் புத்தி புகட்டுவோமாக.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

St. Therese Daily Thought 4

பூமியின் மீதுள்ளவர்களுக்கு நன்மை செய்வதில் என் விண்ணக வாழ்வை நான் செலவிடுவேன்.  இது சாத்தியம் இல்லாதது அல்ல.  ஏணென்றால் வான தூதர்கள் கடவுளின் காட்சியை எப்போதும் கண்டு அனுபவித்து கொண்டிருந்தாலும், அவர்கள் நம்மை கண்காணிக்கிறார்கள்.  இல்லை, உலக முடிவு வரையிலும் என்னால் ஓய்வெடுக்க முடியாது.  





Download Tamil Catholic Songs