Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 20 ஜூன், 2024

"Nurturing Faith: A Guide to Catholic Children's Books for All Ages"

 Creating a list of recommended Catholic children's books involves selecting titles that both engage young readers and impart valuable religious and moral lessons. Here are some beloved Catholic children's books across various age ranges:

 

Picture Books (Ages 3-7)

1. "The Weight of a Mass: A Tale of Faith" by Josephine Nobisso

   - A beautifully illustrated story that teaches about the power and importance of the Mass.

2. "Patrick: Patron Saint of Ireland" by Tomie dePaola

   - A well-loved book that tells the story of St. Patrick in an engaging and accessible way for young children.

3. "The Donkey That No One Could Ride" by Anthony DeStefano

   - A charming story about a humble donkey that carries Jesus into Jerusalem on Palm Sunday.

4. "God Gave Us You" by Lisa Tawn Bergren

   - A tender story that explains to children how they are a precious gift from God to their parents.

5. "The Jesus Storybook Bible" by Sally Lloyd-Jones

   - While not exclusively Catholic, this beautifully illustrated book tells the story of Jesus in a way that is accessible to young children.

 

Early Readers (Ages 6-9)

1. "The Children's Book of Saints" by Louis M. Savary

   - A collection of short biographies of saints that are easy to read and understand for young readers.

 

2. "Saint George and the Dragon" by Margaret Hodges

   - A beautifully illustrated retelling of the legend of Saint George, perfect for young readers.

 

3. "Brother Francis of Assisi" by Tomie dePaola

   - A simple and engaging introduction to the life of St. Francis, illustrated by a beloved children's author.

 

4. "Our Lady’s Wardrobe" by Anthony DeStefano

   - A beautifully illustrated book that introduces children to various Marian apparitions and titles.

 

Middle Grade (Ages 8-12)

1. "The Miraculous Medal: The Story of Our Lady's Appearances to St. Catherine Laboure" by Mary Fabyan Windeatt

   - A detailed yet accessible retelling of the apparitions of Our Lady to St. Catherine Laboure.

 

2. "The Weight of a Mass: A Tale of Faith" by Josephine Nobisso

   - A tale that helps children understand the significance and power of the Mass.

 

3. "Saint Therese and the Roses" by Helen Walker Homan

   - A beautiful biography of St. Therese of Lisieux for children, part of the Vision Books series.

 

4. "Kingdom of Happiness: Living the Beatitudes in Everyday Life" by Fr. Jeffrey Kirby

   - A guide for children to understand and live out the Beatitudes in their daily lives.

 

Teen Readers (Ages 12+)

1. "The Shadow of His Wings: The True Story of Fr. Gereon Goldmann" by Gereon Goldmann

   - The incredible true story of a seminarian who becomes a priest during World War II, full of faith and adventure.

 

2. "Fire of Mercy, Heart of the Word: Meditations on the Gospel According to St. Matthew" by Erasmo Leiva-Merikakis

   - While a bit more advanced, this book offers deep reflections on the Gospel of Matthew, suitable for older teens interested in deepening their understanding of Scripture.

 

Series

1. "Little Acts of Grace" series by Rosemarie Gortler and Donna Piscitelli

   - These books help children understand the importance of small acts of faith and piety in their daily lives.

 

2. "Vision Books" series

   - A classic series of biographies of saints and important figures in the Catholic Church, written for young readers.

 

These books are designed to instill a deep sense of faith, morality, and understanding of Catholic traditions and values in children. They make wonderful additions to any Catholic family's library and can serve as excellent gifts for religious occasions such as baptisms, First Communions, and Confirmations.

 


வெள்ளி, 14 ஜூன், 2024

Little Month of St. Joseph - by Rev. Fr. Fr. Marin De Boylesve Day 2

 

2nd Meditation.

 

 

"And in the sixth month, the Angel Gabriel was sent from God into a city of Galilee, called Nazareth, to a virgin espoused to a man whose name was Joseph, of the house of David: and the virgin's name was Mary."-SAINT LUKE i. 26, 27.

This son of David, the descendant of kings, is in the world's sight nought but a simple workman, obliged to gain his bread by the sweat of his brow.

When God proposes working out some grand design, He renders lowly all the surroundings of the person whose greatness He intends to manifest. That masterpiece of the Divine Wisdom, Power and Love, the Incarnation, was to be divested of all earthly splendour; therefore, during three hundred years the house of David was lost sight of among the other families of Judah, Zerubbabel is the last king who plays any part in history. The branch to which Joseph belonged fell into indigence, and as there is nothing so efficacious as poverty to ensure the world's neglect, Joseph was in a fit position to be associated in the Divine work.

When God abases and humbles you; when He deprives you of the means of action, of the elements of success; when He appears to frustrate and annihilate your every effort, do not be alarmed. In this very way He is about to effect, by you and in you, some great work. Men despise, or worse still, they forget you, and know you no more. This is the moment awaited by God. Now, will the Divine Power (such is the meaning of the name Gabriel) descend to visit you, and, as Mary and Joseph of old, so you too are about to be summoned to concur in the carrying on of the Divine work, in the development of the Incarnation, in the perfecting of the mysterious Body of Christ, in the extension of the Church, and the reign of Jesus.

Watchword. Desire to be ignored, and to ignore oneself.

2. Devotion to Saint Joseph counselled by our Lady.

Father P. Balthazar Alvarez being sick, a religious presented him with an image of Saint Joseph, exhorting him to commend himself to the holy Patriarch. "You are right," replied the Father; "that is precisely what the Blessed Virgin counselled me to do." On hearing these words, a brother who had accompanied Father Alvarez in his journey to Rome, remembered that on quitting the Holy House of Loretto, the Father told him that he had just experienced a deep feeling of devotion to Saint Joseph. It is possible that was the moment when Our Lady exhorted the Father to confidence in her Holy Spouse.

The Holy Ghost: Our Greatest Friend - Book REview




 ""The Holy Ghost: Our Greatest Friend" by Fr. Paul O'Sullivan is a timeless exploration of the role and significance of the Holy Spirit in the lives of Christians. In this book, Fr. O'Sullivan delves into the often overlooked third person of the Holy Trinity, highlighting the Holy Spirit's immense love, guidance, and transformative power.

Through insightful reflections and practical advice, Fr. O'Sullivan emphasizes the importance of developing a personal relationship with the Holy Spirit. He emphasizes the Holy Spirit's role as the Advocate, Comforter, and Sanctifier, offering solace and strength to those who seek His presence in their lives.

One of the key strengths of this book is its accessibility. Fr. O'Sullivan's writing is clear, concise, and filled with examples from everyday life, making complex theological concepts understandable to readers of all backgrounds.

Overall, "The Holy Ghost: Our Greatest Friend" serves as a valuable resource for anyone seeking to deepen their understanding of and relationship with the Holy Spirit. It is a compelling reminder of the Holy Spirit's constant presence and unwavering support in our lives, offering comfort, guidance, and grace to all who are open to receiving it." by Fr. Paul O'Sullivan is a timeless exploration of the role and significance of the Holy Spirit in the lives of Christians. In this book, Fr. O'Sullivan delves into the often overlooked third person of the Holy Trinity, highlighting the Holy Spirit's immense love, guidance, and transformative power.

Through insightful reflections and practical advice, Fr. O'Sullivan emphasizes the importance of developing a personal relationship with the Holy Spirit. He emphasizes the Holy Spirit's role as the Advocate, Comforter, and Sanctifier, offering solace and strength to those who seek His presence in their lives.

One of the key strengths of this book is its accessibility. Fr. O'Sullivan's writing is clear, concise, and filled with examples from everyday life, making complex theological concepts understandable to readers of all backgrounds.

Overall, "The Holy Ghost: Our Greatest Friend" serves as a valuable resource for anyone seeking to deepen their understanding of and relationship with the Holy Spirit. It is a compelling reminder of the Holy Spirit's constant presence and unwavering support in our lives, offering comfort, guidance, and grace to all who are open to receiving it.

Click here to get the book 
https://archive.org/download/holy-ghost/Holy_Ghost.pdf

THE WONDERFUL GRACES WE RECEIVE FROM THE HOLY GHOST

 

THE WONDERFUL GRACES
WE RECEIVE FROM THE
HOLY GHOST




What we wish above all to make clear is that the Holy Ghost does not only give His wonderful help to Apostles, to martyrs, to missionaries, but to all Christians without exception, if only they ask Him as they should. This many fail to do with the saddest consequences.

The happiness of our lives depends on choosing the proper state in life. If we follow the vocation God wishes us to follow, we have a guarantee of success. God gives us graces for every step of the road He has marked out for us. These graces we do not receive if we choose a manner of life different from what God has chosen for us. How are we to know what He wills us to do? Simply by praying earnestly to the Holy Ghost for light and guidance.

This applies very especially to girls and boys when beginning life. If a boy, called on by God to become a priest, or a girl to become a nun, choose instead a secular life, they cannot expect God's help on the wrong way they are following. One reason why so many marriages are unhappy is that boys and girls, never intended by God to marry, blindly follow their own caprice and choose the married state.

Boys and girls should earnestly ask God to manifest to them His Holy Will in this most important step of their lives. They should know if they ought to marry or not. They must ask God also, in case He wishes them to marry, to help them choose the proper partner, for this also is a frequent cause of unhappy marriages, viz., marrying the wrong person.

Parents have the greatest responsibility in the education of their children. They are to blame countless times for the faults and unhappiness of their boys and girls, and many times for the loss of their children's souls.

Once more, the reason is that parents do not think of asking the Holy Ghost to enlighten them in this grave responsibility.

Businessmen frequently embark on serious enterprises never dreaming of or seeking the guidance of the Holy Ghost. Hence, so many failures.

The following incident, one of the many we might quote, shows how true this is.

Two merchants in the city of Lyons, engaged in the same line of business, had their establishments on the same street.

Both worked hard, both were shrewd businessmen, but whereas one prospered, the other lost heavily.

This latter, confiding in his more prosperous rival, explained his difficulties and asked his advice.

"My dear friend," was the reply, "you are fully as clever and keen as I am, and it seems to me that you work even harder. I attribute all my success to the fact that I hear Mass daily and ask for the guidance of the Holy Ghost. Do the same and you will succeed."

Surprised and disappointed at this answer, the less fortunate merchant returned to his home and related the fact to his wife. She gave him the sage advice to follow his friend's counsel. This he did, with the happiest results.

Professional men in every branch of life succeed marvellously in their various callings if they pray earnestly to the Holy Ghost.

Eminent doctors hear Mass and receive Holy Communion before performing important operations. This they do to ask God's help.

The ablest statesmen attribute their success to the guidance of the Holy Ghost, whose help they invoke.

St. Louis, King of France, who labored perhaps more strenuously than any man in his kingdom and who was one of the best and most glorious sovereigns who ever ruled over France, found time to hear two or three Masses every day.

Some of the courtiers suggested that he was overtaxing himself with so many Masses. The King replied: "You forget, my good friends, that by hearing Mass I confer the most important  benefits on my Kingdom, many more than I could possibly do in any other way."

Salazar, the Prime Minister of Portugal, who has done prodigies in the uplifting of his country, is a devout Catholic and places his trust in God's help.

General Franco, who has not only saved Spain from the gravest crisis in her history but who has helped to save Europe from ruin, is known to spend long hours of the night praying before the Blessed Sacrament when faced with grave difficulties.

Mr. de Valera, the Irish Premier, hears Mass and receives Holy Communion daily. He too is a distinguished statesman and has succeeded in doing great things for his country.

The bravest and most successful generals have had recourse to God for help and light to gain their victories.

At Valverde, the celebrated Portuguese general one of the greatest of his day-Nuno Alvares Pereira, was trapped and surrounded by immensely superior forces of the enemy, who while holding him on lower ground, occupied the vantage points on surrounding hills. All seemed irremediably lost. Advance meant death, retreat was impossible, surrender, he would not think of.

In the midst of the battle, when the contest was fiercest, the Portuguese commander fell on his knees. In answer to the cries of his captains who conjured him to get up and save them, he calmly replied:

"My friends, let me finish my prayers." Then, rising as a man inspired, imbued with a new vigor and courage, he leaped on his horse, shouted his battle cry, and pointing to the very center of the enemy lines, he led the attack. Small in stature but herculean in strength, he hewed down with his own hands the leaders of the enemy. The conflict was rude, but the battle was won.

This great general heard three Masses every day and obliged his men to hear one, and this, even during his constant campaigns, for he had ever care to have priests with. his army.

The famous general and hero, Simon de Montfort, with only eight hundred horse soldiers and very few foot soldiers, was unexpectedly surrounded in the town of Muret by an enemy army of 40,000 men, led by the King of Aragon and Raymond, the Count of Toulouse. He sought help from God and was hearing Mass when his officers came to announce that the besieging army was marching to attack the town.

"Let me finish the Mass first," he replied, "and then I will be with you."

Full of trust, he ordered the gates to be flung open, and he charged right at the heart of the approaching army, threw it into utter disorder, struck down the King of Aragon himself, and won a glorious victory.

Emperor Lothaire heard three Masses every day, even when he was on the battlefield with his troops.

A notable case in modern times was that of the French Marshal Foch, who heard Mass every morning, even when the fighting was fiercest.

On one occasion, when the Prime Minister went to consult him on a matter of grave military importance, he was informed that the Marshal was hearing Mass. The aide-de-camp suggested calling him. "No, no," replied the Prime Minister, "we must not disturb him in his devotions. I will wait."

As we have already said, it is by prayer, by receiving the Sacraments and by hearing Holy Mass that we receive the graces and blessings of the Holy Ghost, His light, His guidance and His help.


செவ்வாய், 11 ஜூன், 2024

ஸ்காட்லாந்து அரசியான அர்ச். மார்கரட் (St. Margaret, Queen of Scotland)

 ஜுன் 10 தேதி

ஸ்காட்லாந்து அரசியான அர்ச். மார்கரட் திருநாள்



🌹இவள், இங்கிலாந்து இளவரசரான எட்வர்டுவின் மகளாக 1045ம் வருடம் பிறந்தாள்; இங்கிலாந்து அரசரான எட்மண்டு ஐயன்சைடுவின் பேத்தியுமாவாள். 1066ம் வருடம், நார்மன்கள் இங்கிலாந்தை வெற்றிகொண்டதும், மார்கரட் மற்றும் அவளுடைய அரச குடும்பத்தினர் அனைவரும் ஸ்காட்லாந்திற்கு அடைக்கலம் தேடி ஓடிப்போக நேர்ந்தது; ஸ்காட்லாந்து அரசரான 3ம் மால்கம் இவர்களை வரவேற்று உபசரித்து அடைக்கலமளித்தார்;  பின், மார்கரட்டை திருமணம் செய்துகொண்டார். அரசியான மார்கரட், அரசரையும், அந்நாட்டு மக்களையும் கிறீஸ்துவ உத்தமதனத்தில் மேன்மையடையச் செய்தாள். இவள் ஸ்காட்லாந்து மக்களுக்கு ஆசீர்வாதமாகத் திகழ்ந்தாள். இவள் வருவதற்கு முன், இந்நாட்டு மக்களிடையே மாபெரும் அறியாமையும் அநேக துர்ப்பழக்கங்களும் நிலவி வந்தன! மார்கரட்  ஸ்காட்லாந்தை உத்தம கத்தோலிக்க நாடாக உருவாக்க அயராமல் உழைத்து வந்தாள்; நல்ல ஆசிரியர்களை வருவித்து,  மக்களை சீர்திருத்தி,  தீய பழக்க வழக்கங்களிலிருந்து அவர்களை விடுவிக்கும்படிச் செய்தாள்; அநேக புதிய தேவாலயங்களைக் கட்டுவித்தாள்.

இப்பரிசுத்த அரசிக்கு, சர்வேசுரன் ஆறு மகன்களையும், இரண்டு மகள்களையும் அருளினார். இரண்டு மகன்களும் துறவிகளாயினர்! கடைசி மகன் டேவிட், அர்ச்சிஷ்டவரானார்! ஒரு மகள் அர்ச்.மெட்டில்டா; இவள் இங்கிலாந்தின் முதலாம் ஹென்றி அரசரை திருமணம் செய்தாள்.

அர்ச். மார்கரட்டிற்கு துயரமான காலம் வந்தது; போரில், இவளுடைய கணவரும் அரசருமான 3ம் மால்கம் மற்றும் மூத்த மகன், எட்வர்டு, ஆகிய இருவரும் கொல்லப்பட்ட துயரமான செய்தி வந்தது. அச்சமயம், அர்ச். மார்கரட், “எல்லாம் வல்ல சர்வேசுரா!என் பாவங்களி லிருந்து என்னை சுத்திகரித்துத் தூய்மைப்படுத்தும்படியாக, எனக்கு இம்மாபெரும் துயரத்தை அளித்ததற்காக,  நான் தேவரீருக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்” என்று உருக்கமாக ஜெபித்து வேண்டிக் கொண்டாள். கணவரும், மூத்த மகனும்,ஆலன்விக் என்ற இடத்தில்  இங்கிலாந்திற்கு எதிராக நிகழ்ந்த  போரில்,1093ம் வருடம் நவம்பர் 13ம் தேதியன்று கொல்லப்பட்டார்கள்; இன்னொரு மகன் எட்கர் துயரமான இச்செய்தியை தாயிடம்  அறிவிக்க உயிருடன் திரும்பி வந்தார். அர்ச்.மார்கரட் இடைவிடாமல் அனுசரித்த ஒறுத்தல் உபவாசத்தினால் மிகவும் பலவீனமடைந்தவளாய், வியாதியில் விழுந்து, தன் கணவரும், மூத்த மகனும் மரித்த மூன்றாம் நாளில்  மரித்தாள்.  டூஃபெர்ம்ளின் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டாள்; 1250ம் வருடம் 4ம் இன்னசன்ட் பாப்பரசரால் ஜுன் 19ம் தேதியன்று அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது.

 அர்ச்சிஷ்டப்பட்டமளிக்கப்பட்டபிறகு, இவளுடைய பரிசுத்த அருளிக்கங்கள், அதே மடத்திலிருந்த சிற்றாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பூஜிதமாக ஸ்தாப்பிக்கப்பட்டன! 1693ம் வருடம், 12ம் இன்னசன்ட் பாப்பரசர், ஸ்காட்லாந்து அரசியான அர்ச்.மார்கரட் அம்மாளின் திருநாளை ஸ்காட்லாந்து அரசரான ஏழாம் ஜேம்ஸின் மகனுடைய பிறந்த நாளின் ஞாபகார்த்தமாக ஜுன் 10ம் தேதிக்கு மாற்றி வைத்தார்.

ஸ்காட்லாந்து நாட்டின் பாதுகாவலியாக அர்ச்.மார்கரட் திகழ்கிறாள். 🌹✝️

🌹ஸ்காட்லாந்து அரசியான அர்ச்.மார்கரட் அம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

வேதசாட்சிகளான அர்ச். பிரிமுஸ், அர்ச். ஃபெலிசியான் (St. Primus and St. Felician)

 ஜுன் 9  தேதி
வேதசாட்சிகளான அர்ச்.பிரிமுஸ், அர்ச்.ஃபெலிசியான் திருநாள்.


சகோதரர்களான இவர்கள் இருவரும் உரோமை இராணுவத்தில் மிகுந்த தைரியமுள்ள வீரர்களாயிருந்தனர். இருவரும்  சுவிசேஷத்தை போதிப்பதற்காக, சியம்காவ் என்ற பகுதியில் வேதபோதக அலுவல் புரிந்தனர். இங்கு, ஒரு காட்டில், பிரிமுஸ், ஒரு நீரூற்றைக் கண்டு பிடித்தார்; அது, வியாதிகளுக்குக் குணமளிக்கக் கூடிய மருத்துவ குணமுடையதாயிருப்பதைக் கண்டறிந்தார்.

இங்கு இரு சகோதரர்களும், சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர்; தங்கள் ஜெபங்களால், அநேக வியாதியஸ்தர்களை புதுமையாகக் குணப்படுத்தினர். இருவரும் இத்தாலிக்குத் திரும்பி வந்தபோது, உரோமை அதிகாரிகள், கத்தோலிக்க வேதத்தைப் பிரசங்கித்த தற்காக, இவர்கள் இருவரையும் கைது செய்தனர்.அஞ்ஞான விக்கிரகங்களுக்கு பலிசெலுத்த மறுத்ததால், இருவரையும் சாட்டையால் அடித்துச் சிறையில் அடைத்தனர். இருவரையும் தனித்தனியாக புரோமுதுஸ் என்ற நீதிபதியிடம கூட்டி வந்தனர்; தந்திரமுள்ள இந்த கொடிய நீதிபதி இருவரையும் சேர்த்து, ஒன்றாக சித்திரவதை செய்தான்; பின்னர், இருவரையும் தனித்தனி அறையில் விசாரணை நடத்தினான். உன் சகோதரர், உங்கள் வேதத்தை மறுதலித்து விட்டு, விக்கிரகத்திற்கு பலி செலுத்தி விட்டார்,  என்று  கூறி இருவரையும் ஏமாற்ற முற்பட்டான்.

ஆனால், இருசகோதரர்களும் வேத விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்தனர். ஃபெலிசியான், ஒரு மரத்தில் ஆணிகளால் அறையப்பட்டார்; பிரிமுஸின் வாயில் உருக்கிய ஈயத்தை ஊற்றி விழுங்கச் செய்தனர். 297ம் வருடம், இரு சகோதரர்களையும் தலையை வெட்டிக் கொன்றனர். இது, தியோக்ளேஷியன் சக்கரவர்த்தி,  உரோமாபுரியிலிருந்து, 12 மைல் தொலைவிலுள்ள நொமெந்தும் என்ற இடத்தில் கிறீஸ்துவர்களை உபாதித்துக் கொன்றபோது, நிகழ்ந்தது.

அப்போது, அர்ச்.பிரிமுஸுக்கு 80 வயதாயிருந்தது; இவருக்குத் தோத்திரமாக, வியா நோமெந்தானா என்ற இடத்திலிருந்து இரு அர்ச்சிஷ்ட சகோதரர்களின் கல்லறைகளுக்கு மேலே ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.

இவர்களுடைய பரிசுத்த சரீரங்கள், உரோமை நகர சுவர்களுக்குள் மறுபடியும் புதைக்கப்பட்டன! இவ்விதமாக திருச்சபை சரித்திரக் குறிப்பேட்டில் முதன் முதலாக வேதசாட்சிகளின் அடக்கத்தைப் பற்றிய குறிப்பு, இவர்களுடைய அடக்கத்தைப் பற்றிய குறிப்பாக இருக்கிறது. 

648ம் வருடம், முதலாம் தியோடோர் பாப்பரசர், இவ்விரு அர்ச்சிஷ்டவர்களின் அருளிக்கங்களான பரிசுத்த எலும்புகளை, ரோடொன்டோ என்ற இடத்திலுள்ள அர்ச். முடியப்பர் தேவாலயத் திற்கு இடமாற்றம் செய்யக் கட்டளையிட்டார்; அதன்படி, இவர் களுக்குத் தோத்திரமாகக் கட்டப்பட்ட ஒரு பீடத்தில் இவர்களுடைய பரிசுத்த எலும்புகள் பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.

முதலாம் தியோடோர் பாப்பரசர் கட்டிய அர்ச்.பிரிமோ அர்ச்.ஃபெலிசியானோ சிற்றாலயம் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த மொசைக் கற்களால் கட்டப்பட்டது; ஒரு மொசைக் கல்லில், இரத்தினக்கற்களாலான சிலுவையின் பக்கத்தில் இரு வேதசாட்சிகளும் இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. 

அரச்.பிரிமுஸின் நீரூற்று என்று  அழைக்கப்படுகிற நீரூற்று இன்றும் கூட செந்நீர் ஊற்றுகள் நிறைந்த அடெல்ஹோ்சன் என்ற பகுதியில் உள்ளது. 1615ம் வருடம்  இங்கு  இவ்விருஅர்ச்சிஷ்ட வேதசாட்சிகளுக்குத் தோத்திரமாகக் கட்டப்பட்ட ஒரு சிற்றாலயத்தை இன்றும் காணலாம். இப்பகுதியில் இவ்விரு வேத சாட்சிகளையும் மக்கள், வெகுவாக வணங்கி வழிபடுகின்றனர்.

🌹அர்ச்.பிரிமுஸே! அர்ச்.ஃபெலிசியானே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

அர்ச்.வில்லியம் St. Williams

 ஜுன் 8 ம் தேதி

யார்க் நகர அதிமேற்றிராணியாரான அர்ச்.வில்லியம் திருநாள்



வில்லியம், இங்கிலாந்தின் முதலாம் ஹென்றி அரசனுடைய பொருளாளரான ஹெர்பர்ட் பிரபுவின் மகன். இவருடைய தாய், எம்மா, அரசன் வில்லியமினுடைய ஒன்றுவிட்ட சகோதரி. வில்லியம் இளைஞனாயிருக்கும் போதே யார்க் தேவாலயத்தின் பொருளா ளரானார்; மிக இள வயதிலேயே இவர், 1140ம் வருடம், யார்க் நகரத்தின் அதிமேற்றி ராணியாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவருடைய அதிமேற்றிராணியார் பதவி சீமோனிய பின்னணியில் பணம் கொடுத்து வாங்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டு இவருக்கு எதிராக எழுந்தது. ஆனால், இதைப் பற்றிய முழு விசாரணைக்குப் பிறகு, இவர் குற்றமற்றவர் என்று கண்டறிந்ததும், பாப்பரசர் , இவரை யார்க் நகர அதிமேற்றிராணியார் பதவியில் நீடிக்கச் செய்தார். ஆனால், பின்னர், சிஸ்டர்ஷியன் துறவற சபையிலிருந்து புதிய பாப்பரசரான 3ம் யூஜின் பாப்பரசர் இவரை பதவி இடை நீக்கம்  செய்தார்; பின் 1147ம் வருடம் முழுமையாக அர்ச்.வில்லியம் யார்க்கின் அதிமேற்றிராணியார் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 

      அர்ச்.வில்லியம் வின்செஸ்டர் நகருக்குச் சென்று, தனிமையில், ஒரு துறவியைப்போல்  அதிக ஜெபத்திலும், கடின  தபசிலும்  தன்னையே ஒறுத்து, ஏகாந்த ஜீவியம் ஜீவித்தார்.  பின்னர் வந்த 4ம் அனஸ்தாசியுஸ் என்ற புதிய பாப்பரசர், இவரை மறுபடியும் யார்க் நகர அதிமேற்றி ராணியாராக்கினார். ஒரு மாதத்திற்குப் பிறகு, யார்க் நகர அதிமேற்றிராணியாரான அர்ச்.வில்லியம், 1154ம் வருடம் , ஜுன் 8ம் தேதியன்று பாக்கியமாய் மரித்தார். இவர் மரித்த சில மாதங் களுக்குள் அநேக புதுமைகள் இவரிடம் வேண்டிக் கொண்டதால், நிகழ்ந்தன! இவருடைய கல்லறையிலிருந்து இனிய பரலோக நறுமண வாசனை வந்து கொண்டிருந்தது. அச்சமயம் ஏற்பட்ட தீ விபத்தின்போது, இவருடைய கல்லறை சேதமடைந்தபோதிலும், இவருடைய பரிசுத்த சரீரம், புதுமையாக,  சேதமடையாமலும், நெருப்பினால் எரிந்து போகாமலும் இருப்பதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

3ம் ஹொனோரியுஸ் பாப்பரசர் , இவருடைய புதுமைகள் பற்றி விசாரிக்கும்படிக் கட்டளையிட்டார்; பின் 1227ம் வருடம் இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.

அர்ச்.வில்லியமின் பரிசுத்த அருளிக்கங்கள் 1960ம் வருடம் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டு, யார்க் மின்ஸ்டர் கதீட்ரல்  தேவாலயத்தின் கீழுள்ள கல்லறைச் சிற்றாலயத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கபட்டிருக்கின்றன!


🌹யார்க் நகர அதிமேற்றிராணியாரான அர்ச்.வில்லியமே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!


Download St. Anthony Sermon Here....
Download Our Lady of Fatima Sermon Here...


To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

புதன், 5 ஜூன், 2024

Tamil Catholic Songs Lyrics - மனோமகிழ்வோடே அனைவரும் வாரும்

 பாலனை ஆராதித்தல்

Adeste Fideles (யாழ்ப்பாணம்)

1. மனோமகிழ்வோடே அனைவரும் வாரும்
வாரும் வாரும் பெத்லகேம் ஊருக்கு
பாருங்கள் தேவ தூதரின் ராஜாவை
வாரும் வணங்குவோமே. (3) பாலனை

2. மந்தையை விட்டேதான் மாட்டுத் தொட்டி நோக்கி
வந்து இடையர்கள் வணங்குகிறார்
சந்தோஷமாக நாமும் போவோம் வாரும்
வாரும் வணங்குவோமே (3) பாலனை

3. அநாதி பிதாவின் அநாதிச் சுடரை
மனித வேஷமாகக் காணுவோம்
கந்தைகளாலே சுற்றிய பாலனை
வாரும் வணங்குவோமே (3) பாலனை

ராரி ராராரோ- தேவ இராஜ பாலகனே - Tamil Catholic Songs Lyrics

 ராரி ராராரோ- தேவ இராஜ பாலகனே
ராரோ ராரி ராராரோ தூங்கு பாலகா
ராரோ ராரி ராரோ

சரணங்கள்

1. தூங்கும் பாலகனே நாங்கள் - ஸ்துத்யம் பாடுவோம்
நல்ல மாங்குயில்களே வந்து தாலாட்டுங்கள்
மரியின் பாலனுக்கு

2. பாடுவோம் மகிழ்ந்து திவ்ய பாலனைப் புகழ்ந்து
எல்லோர் கூடியே இங்கு தாலாட்டுப் பாடுவோம்
குழந்தை சேசுவுக்கு

3. பஞ்சுமெத்தை இல்லை சுவாமி - படுக்கக் கட்டிலில்லை
 ஐயோ நைந்த வைக்கோலின் மீதே படுத்தீரோ
நல்ல பாலகனே

4. குளிரு மெத்த உண்டே -ஐயோ - கிட்ட வீடுமில்லை
இதோ அழுது கூப்பிட்டு குளிரைப் பொறாமலே
அமலன் தூங்குகின்றார்.

5. அமிர்தமான பிள்ளாய் - தேவ - அழகு சோபனமே
இதோ உமது அன்பு தூங்காமலே தூங்குறீர்
ஓ ஓ இரட்சகரே

6. தூங்கு பாலகனே ராரோ தூங்கும் கண்மணியே
ராரோ தூங்கி எம்மைப் பவநின்று தூக்கிட
தூங்கும் தூங்குமிப்போ

7. கண்ணை மூடுகின்றார் - தேவ கர்த்தர் தூங்குகின்றார்
ராரோ என்னை நேசிக்கும் அன்பு தூங்காமலே
ஏகன் தூங்குகின்றார்

Tamil Catholic Songs Lyrics - தேவபாலன் பிறந்தாரே

 தேவபாலன் பிறந்தாரே
தேவுலகோர் வெகுவாய்க் களிகூர
தேவபாலன் பிறந்தாரே
சேர்ந்தவரைத் தொழ வாரீரே


1. நாலாயிரம் வருஷமளவாய்
நாதன் வருகையை முன்னுரைத்தாரே
நாலாயிரம் வருஷமளவாய்
நாமவர்க்காகக் காத்திருந்தோமே


2.மாட்டுக் கொட்டில் அரண்மனையோ
மாடு மிதிக்கும் வைக்கோல் பஞ்சணையோ
மாட்டுக் கொட்டில் அரண்மனையோ
மாட்சிமை நிறை சேசு ராஜனுக்கு


3. எவ்வளவோ அழகுள்ள முகம்
எவ்வளவோ குண மதுர சிங்காரம்     
எவ்வளவோ அழகுள்ள முகம்
எவ்வளவோ அருள் சிறந்த தயாளம்


4. கீழ்த்திசை மன்னரே நீர் வாரீர்
கிறீஸ்தெனும் பாலனை வணங்கிடவே
கீழ்த்திசை மன்னரே நீர் வாரீர்
கிளர் ஒளிர்மீன் வழி பின்சென்று


5. நம்முளமே இவர் தேடுகிறார்.
நம் முளமே இவர் கைவசமாக்க
நம் முளமே இவர் தேடுகிறார்
நாம் அதை அவர்க்கின்று அளிப்போமே.

செவ்வாய், 4 ஜூன், 2024

அர்ச். பிரான்சிஸ் கரக்சியோலோ (St. Francis CARACCIOLO) June 4

இன்றைய அர்ச்சிஷ்டவர்


 ஜுன் 4ம் தேதி


ஸ்துதியரான அர்ச். பிரான்சிஸ் கரக்சியோலோ திருநாள்



🌹இவர், 1563ம் வருடம் நேப்பிள்ஸ் நாட்டில் கரக்சியோலோ என்ற உயர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவருடைய ஞானஸ்நானப் பெயர், ஆஸ்கானியோ. இவர் குழந்தைப் பருவத்திலிருந்தே,  எல்லா கேளிக்கைகளையும், விளையாட்டுகளையும், வேடிக்கை வினோதங்களையும் ஒதுக்கிவிடுவார்; ஆனால், திவ்ய சேசுநாதர் எழுந்தருளியிருக்கும் மகா பரிசுத்த தேவ நற்கருணை ஸ்தாபகத்தை சந்திப்பதற்காக தேவாலயத்திற்கு சென்று விடுவார்; அடிக்கடி திவ்ய நற்கருணை சந்திப்பு செய்வதையே அதிகம் சிநேகித்து வந்தார்!

இவருக்கு 22 வயதானபோது, இவருக்கு மிகக் கொடிய தோல் வியாதி வந்தது. விரைவிலேயே சாகுந்தருவாயிலிருந்தார். இவ்வியாதி குணமடைந்தால், சர்வேசுரனுக்காக தன்னையே அர்ப்பணித்து ஜீவிப்பதாக வாக்களித்தார். உடனே புதுமையாக சர்வேசுரன் இவருடைய மன்றாட்டை ஏற்று, இவரை தோல் வியாதியிலிருந்து குணப்படுத்தினார்.

இவர் சர்வேசுரனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஆர்வத்துடன், நேப்பிள்ஸுக்குச் சென்று குருப்பட்டத்திற்காக படித்து, 1587ம் வருடம் குருப்பட்டம் பெற்றார். இவர் குருப்பட்டம் பெற்றவுடன் “நீதியின் வெண் அங்கி” -துறவற சபையில் சேர்ந்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளைத் திருத்தி, பரிசுத்தமான நன்மரணத்தை, அவர்கள் அடையும்படிச் செய்வதே, இத்துறவற சபையின் முக்கிய நோக்கமாயிருந்தது.

குருப்பட்டம் பெற்று, ஐந்து வருட காலத்திற்குப் பிறகு, இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அது, இவருடைய தூரத்து உறவினரான இன்னொரு அஸ்கானியோ கரக்சியோலோவிற்கு வந்த கடிதம், தவறுதலாக இவருக்குக் கிடைத்தது. ஜெனோவா நகரில் சங். ஜியோவான்னி அகோஸ்டினோ அடோர்னோ என்ற குருவானவர்,  ஒரு புதிய துறவற சபையை ஸ்தாபிப்பதில், தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி, அந்த இன்னொரு அஸ்கானியோ கரக்சியோலோவை, அந்த கடிதத்தில் அழைத்திருந்தார்.

 கடிதத்தைப் படித்தபோது, சங்.அடோர்னோ சுவாமியார், அவருடைய புதிய துறவற சபையின் செயல்திட்டத்தின் பேரில் காண்கிற காட்சி, தன்னுடைய இலட்சியங்களின் படி, தான் சேர விரும்புகிற  ஒரு துறவற சபையின் நோக்கங்களையும் விதிமுறைகளையும்  முழுமையாக ஒத்திருப்பதைக் கண்டதும்,  இவர், இக்கடிதம் தனக்குக் கிடைத்தது, தானும் இந்த துறவற சபையில் சேர வேண்டும் என்பதற்கான, சர்வேசுரனுடைய  திட்டத்தினுடைய அடையாளமாக இருக்கிறது, என்பதை உணர்ந்து கொண்டார். உடனே இவர் சங். அடோர்னோ சுவாமியாருக்கு பதில் கடிதம் எழுதினார். இருவரும் சில வாரங்கள் தியானத்தில் இருந்து , புதிய துறவற ஸ்தாபனங்களையும். அவற்றிற்கான விதிமுறைகளையும்  உருவாக்கினர். 1588ம் வருடம், ஜுலை 1ம் தேதி, 5ம் சிகஸ்துஸ் பாப்பரசர்   இத்துறவற சபையை அங்கீரித்து அதற்கான ஒப்புதலை அளித்தார்.

     இத்துறவற சபை , இருவகையான ஜெபதியான ஜீவியத்தையும்,  வேதபோதக அப்போஸ்தல ஜீவியத்தையும் கொண்டிருக்கிறது. இடைவிடாத மகா பரிசுத்த  தேவநற்கருணை ஆராதனை, அவர்களுடைய ஞான ஜீவியத்தினுடைய மிக முக்கிய தூணாகத் திகழ்கிறது.  ஏழைகள், வியாதியஸ்தர்கள்,  சிறைக்கைதிகள், ஆகியோருக்குத் தேவையான சிகிச்சைகளையும் பணிவிடை களையும், பராமரிப்பையும் அளித்து, இத்துறவியர், தங்களுடைய வேதபோதக அப்போஸ்தல அலுவலை நிறைவேற்றி வருகின்றனர்.  கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல், ஆகிய வார்த்தைப்பாடுகளுடன் கூட, திருச்சபை உயர் பதவிகள், பட்டங்கள், மகிமைகள் எதையும் தேடுவதையோ, பெற்றுக்கொள்வதையோ, தடைசெய்கிற நான்காவது வார்த்தைப் பாட்டையும் இத்துறவியர்,எடுக்கவேண்டும்.  இவர் இத்துறவற சபையில் வார்த்தைப்பாடு கொடுத்தபோது, சரீரம் எடுத்த சம்மனசானவரான அர்ச். பிரான்சிஸ் அசிசியாருக்கு தோத்திரமாகவும், அவரைக் கண்டுபாவிக்கும்மேரையாகவும், பிரான்சிஸ் என்கிற பெயரை வைத்துக் கொண்டார்.

அடிக்கடி, மகா பரிசுத்த தேவ நற்கருணையில் எழுந்தருளியிருக்கும் நமதாண்டவர் முன்பாக பக்தி பரவசத்தில் மூழ்கிவிடுவார்; “ஆண்டவரே! உமது பரிசுத்த இல்லத்தின் மீதான ஆர்வம் என்னை முழுமையாக எரித்துவிடும்படியாக ஆட்கொள்கிறது!” என்கிற சங்கீதத்தை அடிக்கடி பக்திபற்றுதலுடன் உச்சரித்துக் கொண்டிருப்பார். பின்னர், ஆஞ்ஞோன்  நகரில், 1608ம் வருடம், ஜுன் 4ம் தேதியன்று, நமதாண்டவரின் மகா பரிசுத்த தேவ நற்கருணை திருநாளுக்கான திருவிழிப்பின்  நாளன்று, இவருக்கு மிகக் கடுமையான காய்ச்சல் வந்தது; அச்சமயம், இவர்“ஆண்டவரே! உமது பரிசுத்த இல்லத்தின் மீதான ஆர்வம் என்னை முழுமையாக எரித்துவிடும்படியாக ஆட்கொள்கிறது!” என்று தன் உதடுகளில் அடிக்கடி  உச்சரித்த அதே ஜெபத்தை ஜெபித்தபடி, பக்திபரவச மிகுதியினால் பாக்கியமாய் மரித்தார்.

14ம் கிளமென்ட் பாப்பரசரால் 1769ம் வருடம்  ஜுன் 4ம் தேதியன்று, இவருக்கு முத்திப்பேறு பட்டமும், 1807ம் வருடம் மே 24ம் தேதி 7ம் பத்திநாதர் பாப்பரசரால் அர்ச்சிஷ்டப்பட்டமும் அளிக்கப்பட்டன!

இவர் மரித்துப் பலவருடங்களுக்குப் பிறகு,  “ஆண்டவரே! உமது பரிசுத்த இல்லத்தின் மீதான ஆர்வம் என்னை முழுமையாக எரித்துவிடும்படியாக ஆட்கொள்கிறது!” என்று இவர் தன் வாழ்நாளெல்லாம் அடிக்கடி   மகா பரிசுத்த தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் திவ்ய இரட்சகரான நேச சேசுவின் முன்பாக  பக்தி பற்றுதலுடன் உச்சரித்த   சங்கீத வாக்கியம், இவருடைய சரீரத்தில், புதுமையாக எரிந்த விதமாக பதியப்பட்டு இருப்பதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.


ர்ச். பிரான்சிஸ் கரக்சியோலோவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹
🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

ஞாயிறு, 2 ஜூன், 2024

Saints quotes in Tamil

கடவுளின் திருத்தாயாரின் மீது மிகுந்த அன்பில்லாதவர் எவரும், அவர்களுடைய திருக்குமாரனின் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கவே முடியாது. 

அரச். பாத்ரே பியோ


அர்ச். எராஸ்முஸ் (St. Erasmus)

⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
 
🇻🇦ஜுன் 0️⃣2️⃣ம் தேதி

🌹மேற்றிராணியாரும் வேதசாட்சியுமான அர்ச்.எராஸ்முஸ் திருநாள்🌹


🌹 இவர் தியோக்ளேஷியன் மற்றும் மாக்ஸமியன் ஹெர்குலஸ் என்கிற கொடுங்கோலர்கள் உரோமையில் கிறீஸ்துவர்களை உபத்திரவப்படுத்திக் கொன்றுபோட்ட காலத்தில், இத்தாலியிலுள்ள ஃபோர்மியும் என்ற நகரின் மேற்றிராணியாராக இருந்தார். இவர் தன் மேற்றிராசனத்தை விட்டு,  லீபானுஸ் மலைக்குச்  சென்று ஒரு குகையில் 7 வருட காலம் ஒளிந்திருந்தார். இருப்பினும், ஒரு சம்மனசானவர் அவருக்குக் காட்சியளித்து, அவருடைய மேற்றிராசன நகரத்திற்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்று ஆலோசனை கூறினார்.  இவர் திரும்புகிற வழியில், உரோமை படை வீரர்களால் கைது செய்யப்பட்டு, அந்தியோக்கு நகரிலிருந்த கிழக்கத்திய உரோமைப் பிராந்திய சக்கரவர்த்தியான தியோக்ளேஷியன் முன்பாக விசாரணைக்கு நிறுத்தப்பட்டார்.

 மிகக் கொடிய சித்ரவதைகளுக்குப் பின், இவர் சங்கிலிகளால் கட்டப்பட்டவராக சிறைக்குள் தள்ளப்பட்டார்; ஆனால், ஒரு சம்மனசானவர் தோன்றி இவரை சிறையிலிருந்து தப்பிக்க உதவினார். இவர் லிசியா நகரத்தைக் கடந்து சென்றபோது, அந்நகரின் மிகப் பிரபலமான ஒரு முக்கிய மனிதனின் மகனை சாவிலிருந்து புதுமையாக உயிருடன் எழச் செய்தார்.  இது அந்நகரிலிருந்த அநேக அஞ்ஞானிகள் மனந்திரும்பி சத்திய வேதத்தில் சேர்வதற்குக் காரணமாயிற்று. இதையறிந்த மேற்கத்திய உரோமை சக்கரவர்த்தியான மாக்ஸ்மியன், அந்நகரில் கிறீஸ்துவர்களாக மனந்திரும்பிய 300 பேர்களையும் கொன்று போட உத்தரவிட்டான்.

 அர்ச். எராஸ்முஸை மாக்ஸ்மியன் அஞ்ஞானிகளுடைய பசாசின் கோவிலுக்கு இழுத்துச் செல்லும்படி கட்டளையிட்டான். இவரை அந்த பசாசின் கோவிலுக்குள் இழுத்துச் சென்றபோது, அந்த கோவிலிலிருந்த பசாசின் விக்கிரகங்கள் எல்லாம் தரையில்  விழுந்து விழுந்து  நொறுங்கிப்போயின! அக்கோவிலிலிருந்து வெளிவந்த நெருப்பு அநேக அஞ்ஞானிகளைக் கொன்றது.
 மாக்ஸ்மியன் மிகுந்த கோபமடைந்தவனாக, அர்ச்.எராஸ்முஸை, உட்புறத்தில் முட்கள் போல் நீட்டிக்கொண்டிருக்கும்    கம்பிகளால் நிறைந்திருக்கும் ஒரு பீப்பாய்க்குள் அடைத்து,  ஒரு குன்றின் உச்சியிலிருந்து அந்த பீப்பாயை உருட்டிவிடச் செய்தான். ஒரு சம்மனசானவர் மறுபடியும் அர்ச்சிஷ்டவரைப் புதுமையாகக் குணமடையச் செய்துக் காப்பாற்றினார்.

 இறுதியாக அர்ச்.எராஸ்முஸை மிகக் கொடூரமாகக் கொன்றனர்; அவருடைய வயிற்றைக் கிழித்து, குடலை ஒரு காற்றாடியில் சுற்றிக் கட்டினர்;இக்கொடிய உபத்திரவத்தினால், அர்ச்.எராஸ்முஸ், 308ம் வருடம், ஜுன் மாதம் 2ம் தேதி மரித்து, மகிமையான வேதசாட்சி முடியைப் பெற்றார்.

அர்ச்.எராஸ்முஸ், திருச்சபையின் 14 பரிசுத்த உதவியாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடைவதற்கு இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். அர்ச். எராஸ்முஸ் ஒருசமயம் பிரசங்கம் நிகழ்த்தியபோது, அவருக்கு அருகில் இடி விழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் இவர் பிரசங்கத்தைத் தொடர்ந்து நிகழ்த்தினார்; அதன் காரணமாக, கப்பல் மாலுமிகள், புயல் மின்னல் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றும்படி,, தங்களுடைய பாதுகாவலரான அர்ச். எராஸ்முஸிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

 அர்ச்.எராஸ்முஸுக்கு இத்தாலிய மொழியில் அர்ச்.எல்மோ என்ற பெயரும் உண்டு.  புயல்நேரத்தில்  இடிமின்னல் ஏற்படுகிறபோது, மேகத்தில் ஏற்படுகிற கோடிக்கணக்கான வோல்ட் அளவிலான  மிக உயிரிய  மின் அழுத்தத்தின் காரணமாக, அது கப்பல கொடியின் வழியாக பூமியை அடையும்போது,  கப்பல் கொடியின் உச்சியில் பிளாஸ்மா ஒளிவட்டம் போல் ஏற்படுகிற நெருப்பை அர்ச்.எல்மோ நெருப்பு என்று மாலுமிகள் அழைக்கின்றனர்.🌹✝️

🌹அர்ச்.எராஸ்முஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



சனி, 1 ஜூன், 2024

Saints Quote's in Tamil

ஒருவர் உயிர் வாழும்போது பங்கெடுக்கும் ஒரு திவ்வியபலி பூசையானது, அவரது மரணத்திற்குப் பிறகு அவருக்காக ஒப்புக்கொடுக்கப் படும் ஆயிரம் திவ்வியபலி பூசைகளைவிடவும் மதிப்புமிக்கது. 

அர்ச். ஆன்செலம்

Saint's quotes in Tamil

என் வேலையயல்லாம் நம் திவ்ய இராக்கினியின் உதவியை மன்றாடி, ஓர் எளிமையான அருள்நிறை மந்திரத்துடன் தான் தொடங்குவேன் 

அர்ச் ஜான் போஸ்கோ