ஜுன் 8 ம் தேதி
வில்லியம், இங்கிலாந்தின் முதலாம் ஹென்றி அரசனுடைய பொருளாளரான ஹெர்பர்ட் பிரபுவின் மகன். இவருடைய தாய், எம்மா, அரசன் வில்லியமினுடைய ஒன்றுவிட்ட சகோதரி. வில்லியம் இளைஞனாயிருக்கும் போதே யார்க் தேவாலயத்தின் பொருளா ளரானார்; மிக இள வயதிலேயே இவர், 1140ம் வருடம், யார்க் நகரத்தின் அதிமேற்றி ராணியாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருடைய அதிமேற்றிராணியார் பதவி சீமோனிய பின்னணியில் பணம் கொடுத்து வாங்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டு இவருக்கு எதிராக எழுந்தது. ஆனால், இதைப் பற்றிய முழு விசாரணைக்குப் பிறகு, இவர் குற்றமற்றவர் என்று கண்டறிந்ததும், பாப்பரசர் , இவரை யார்க் நகர அதிமேற்றிராணியார் பதவியில் நீடிக்கச் செய்தார். ஆனால், பின்னர், சிஸ்டர்ஷியன் துறவற சபையிலிருந்து புதிய பாப்பரசரான 3ம் யூஜின் பாப்பரசர் இவரை பதவி இடை நீக்கம் செய்தார்; பின் 1147ம் வருடம் முழுமையாக அர்ச்.வில்லியம் யார்க்கின் அதிமேற்றிராணியார் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அர்ச்.வில்லியம் வின்செஸ்டர் நகருக்குச் சென்று, தனிமையில், ஒரு துறவியைப்போல் அதிக ஜெபத்திலும், கடின தபசிலும் தன்னையே ஒறுத்து, ஏகாந்த ஜீவியம் ஜீவித்தார். பின்னர் வந்த 4ம் அனஸ்தாசியுஸ் என்ற புதிய பாப்பரசர், இவரை மறுபடியும் யார்க் நகர அதிமேற்றி ராணியாராக்கினார். ஒரு மாதத்திற்குப் பிறகு, யார்க் நகர அதிமேற்றிராணியாரான அர்ச்.வில்லியம், 1154ம் வருடம் , ஜுன் 8ம் தேதியன்று பாக்கியமாய் மரித்தார். இவர் மரித்த சில மாதங் களுக்குள் அநேக புதுமைகள் இவரிடம் வேண்டிக் கொண்டதால், நிகழ்ந்தன! இவருடைய கல்லறையிலிருந்து இனிய பரலோக நறுமண வாசனை வந்து கொண்டிருந்தது. அச்சமயம் ஏற்பட்ட தீ விபத்தின்போது, இவருடைய கல்லறை சேதமடைந்தபோதிலும், இவருடைய பரிசுத்த சரீரம், புதுமையாக, சேதமடையாமலும், நெருப்பினால் எரிந்து போகாமலும் இருப்பதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.
3ம் ஹொனோரியுஸ் பாப்பரசர் , இவருடைய புதுமைகள் பற்றி விசாரிக்கும்படிக் கட்டளையிட்டார்; பின் 1227ம் வருடம் இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.
அர்ச்.வில்லியமின் பரிசுத்த அருளிக்கங்கள் 1960ம் வருடம் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டு, யார்க் மின்ஸ்டர் கதீட்ரல் தேவாலயத்தின் கீழுள்ள கல்லறைச் சிற்றாலயத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கபட்டிருக்கின்றன!
🌹யார்க் நகர அதிமேற்றிராணியாரான அர்ச்.வில்லியமே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
Download St. Anthony Sermon Here....
Download Our Lady of Fatima Sermon Here...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக