Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 2 ஜூன், 2024

அர்ச். எராஸ்முஸ் (St. Erasmus)

⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐
 
🇻🇦ஜுன் 0️⃣2️⃣ம் தேதி

🌹மேற்றிராணியாரும் வேதசாட்சியுமான அர்ச்.எராஸ்முஸ் திருநாள்🌹


🌹 இவர் தியோக்ளேஷியன் மற்றும் மாக்ஸமியன் ஹெர்குலஸ் என்கிற கொடுங்கோலர்கள் உரோமையில் கிறீஸ்துவர்களை உபத்திரவப்படுத்திக் கொன்றுபோட்ட காலத்தில், இத்தாலியிலுள்ள ஃபோர்மியும் என்ற நகரின் மேற்றிராணியாராக இருந்தார். இவர் தன் மேற்றிராசனத்தை விட்டு,  லீபானுஸ் மலைக்குச்  சென்று ஒரு குகையில் 7 வருட காலம் ஒளிந்திருந்தார். இருப்பினும், ஒரு சம்மனசானவர் அவருக்குக் காட்சியளித்து, அவருடைய மேற்றிராசன நகரத்திற்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்று ஆலோசனை கூறினார்.  இவர் திரும்புகிற வழியில், உரோமை படை வீரர்களால் கைது செய்யப்பட்டு, அந்தியோக்கு நகரிலிருந்த கிழக்கத்திய உரோமைப் பிராந்திய சக்கரவர்த்தியான தியோக்ளேஷியன் முன்பாக விசாரணைக்கு நிறுத்தப்பட்டார்.

 மிகக் கொடிய சித்ரவதைகளுக்குப் பின், இவர் சங்கிலிகளால் கட்டப்பட்டவராக சிறைக்குள் தள்ளப்பட்டார்; ஆனால், ஒரு சம்மனசானவர் தோன்றி இவரை சிறையிலிருந்து தப்பிக்க உதவினார். இவர் லிசியா நகரத்தைக் கடந்து சென்றபோது, அந்நகரின் மிகப் பிரபலமான ஒரு முக்கிய மனிதனின் மகனை சாவிலிருந்து புதுமையாக உயிருடன் எழச் செய்தார்.  இது அந்நகரிலிருந்த அநேக அஞ்ஞானிகள் மனந்திரும்பி சத்திய வேதத்தில் சேர்வதற்குக் காரணமாயிற்று. இதையறிந்த மேற்கத்திய உரோமை சக்கரவர்த்தியான மாக்ஸ்மியன், அந்நகரில் கிறீஸ்துவர்களாக மனந்திரும்பிய 300 பேர்களையும் கொன்று போட உத்தரவிட்டான்.

 அர்ச். எராஸ்முஸை மாக்ஸ்மியன் அஞ்ஞானிகளுடைய பசாசின் கோவிலுக்கு இழுத்துச் செல்லும்படி கட்டளையிட்டான். இவரை அந்த பசாசின் கோவிலுக்குள் இழுத்துச் சென்றபோது, அந்த கோவிலிலிருந்த பசாசின் விக்கிரகங்கள் எல்லாம் தரையில்  விழுந்து விழுந்து  நொறுங்கிப்போயின! அக்கோவிலிலிருந்து வெளிவந்த நெருப்பு அநேக அஞ்ஞானிகளைக் கொன்றது.
 மாக்ஸ்மியன் மிகுந்த கோபமடைந்தவனாக, அர்ச்.எராஸ்முஸை, உட்புறத்தில் முட்கள் போல் நீட்டிக்கொண்டிருக்கும்    கம்பிகளால் நிறைந்திருக்கும் ஒரு பீப்பாய்க்குள் அடைத்து,  ஒரு குன்றின் உச்சியிலிருந்து அந்த பீப்பாயை உருட்டிவிடச் செய்தான். ஒரு சம்மனசானவர் மறுபடியும் அர்ச்சிஷ்டவரைப் புதுமையாகக் குணமடையச் செய்துக் காப்பாற்றினார்.

 இறுதியாக அர்ச்.எராஸ்முஸை மிகக் கொடூரமாகக் கொன்றனர்; அவருடைய வயிற்றைக் கிழித்து, குடலை ஒரு காற்றாடியில் சுற்றிக் கட்டினர்;இக்கொடிய உபத்திரவத்தினால், அர்ச்.எராஸ்முஸ், 308ம் வருடம், ஜுன் மாதம் 2ம் தேதி மரித்து, மகிமையான வேதசாட்சி முடியைப் பெற்றார்.

அர்ச்.எராஸ்முஸ், திருச்சபையின் 14 பரிசுத்த உதவியாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடைவதற்கு இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். அர்ச். எராஸ்முஸ் ஒருசமயம் பிரசங்கம் நிகழ்த்தியபோது, அவருக்கு அருகில் இடி விழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் இவர் பிரசங்கத்தைத் தொடர்ந்து நிகழ்த்தினார்; அதன் காரணமாக, கப்பல் மாலுமிகள், புயல் மின்னல் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றும்படி,, தங்களுடைய பாதுகாவலரான அர்ச். எராஸ்முஸிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

 அர்ச்.எராஸ்முஸுக்கு இத்தாலிய மொழியில் அர்ச்.எல்மோ என்ற பெயரும் உண்டு.  புயல்நேரத்தில்  இடிமின்னல் ஏற்படுகிறபோது, மேகத்தில் ஏற்படுகிற கோடிக்கணக்கான வோல்ட் அளவிலான  மிக உயிரிய  மின் அழுத்தத்தின் காரணமாக, அது கப்பல கொடியின் வழியாக பூமியை அடையும்போது,  கப்பல் கொடியின் உச்சியில் பிளாஸ்மா ஒளிவட்டம் போல் ஏற்படுகிற நெருப்பை அர்ச்.எல்மோ நெருப்பு என்று மாலுமிகள் அழைக்கின்றனர்.🌹✝️

🌹அர்ச்.எராஸ்முஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக