Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 17 ஜனவரி, 2024

பரிசுத்த குவாடலூப்பே மாதாவின் அற்புதச் சித்திரம்

1979 ஆம் ஆண்டில் குவாடலூப்பே மாதாவின் அற்புதச் சித்திரம் மிகக் கடுமையான விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்பட திருச்சபையால் அனுமதிக்கப்பட்டது.இந்த ஆய்வைச் செய்தவர் டாக்டர் பிலிப் கல்லதரன் என்பவர் ஆவார். இவர் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் உயிர் இயம்பியல் ஆய்வு வல்லுனர் ஆவார். இவர் ஓர் ஒவியரும். புகைப்பட கலைஞரும், விஞ்ஞான எழுத்தாளரும் கூட. பழைய சித்திரங்களைப் பற்றிய விமர்சன ஆய்வுக்காகப் பரிந்துரைக்கப்படும் செயல்முறைப்படி அகச்சிவப்பு ஒளியில் இவர் முதல் தடவையாக நம் மாதாவின் அற்புதச் சித்திரத்தை மிக விஸ்தாரமாகப் புகைப்படங்கள் எடுத்தார். அப்போது இந்த சித்திரத்தில் சில சிறிய செயற்கை அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததை அவர் கண்டுபிடித்தார். அவை மாமரியைச் சுற்றியுள்ள சூரியக் கதிர்கள், அவர்களது நீல நிற மேற்போர்வையின்மீது காணப்படும் பொன்னிற நட்சத்திரங்கள், பொன்னிறத் துணிப்பின்னல் அலங்காரங்கள். இருண்ட நிலவு. அலங்கார நூற்குஞ்சங்கள், நிலவின் காணப்படும் தேவதூதரின் உருவம் போன்றவை ஆகும். இந்தச் செயற்கை அலங்காரங்களில் காணப்பட்ட வண்ணங்கள் காலத்தால் சிதைந்தும், மங்கியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அநேக ஆண்டுகளுக்குப் பிறகு அநேகமாக 1629-1634-ம் வருடங்களில் மெக்ஸிகோ நகரத்தில் ஏற்பட்ட பெருவெள்ளங்களுக்குப் பிறகு மனிதக் கைகளால் வரையப்பட்டிருக்கவோ, அல்லது சேர்க்கப்பட்டிருக்கவோ வேண்டும். இந்தப் பெருவெள்ளங்களால் இந்தப் பரிசுத்த சித்திரத்தைத் தாங்கியிருந்த டில்மா என்னும் சாக்குத் துணி போன்ற மேலாடை சிறிது பாதிக்கப்பட்டது.(மாதாவைச் சுற்றிக் காணப்படும் சூரியக் கதிர்கள் இச்சித்திரத்தின் தொடக்க கால செவ்வித்திய நகல்களில் காணப்படவில்லை என்பது இவை பிற்காலத்தில் வரையப்பட்டவை என்பதை உறுதி செய்கின்றது.) ஆனால் மாமரியின் முகம் மற்றும் உருவம் ஆகியவை உட்பட சித்திரத்தின் எஞ்சியிருக்கும் பகுதியைப் பொறுத்த வரை, டாக்டர் சுல்லஹனின் முடிவு மிகவும் வேறுபட்டதாக இருக்கிறது. "மேற்போர்வை ஒருவித இருண்ட பச்சை நீல நிறமுடையதாக உள்ளது. இது விளக்கப் பட முடியாதது. ஏனெனில் இத்தகைய நிறமிகள் எல்லாமே நிரந்தரமற்றவை. காலப்போக்கிலும், குறிப்பாக வெப்பமான காலநிலைகளிலும், மிக வேகமாக மங்கி விடக் கூடியவை. செவ்வித்திய மாயன் நீலநிற சுவர்ச் சித்திரங்கள் ஏற்கனவே மிக மோசமாக மங்கிப்போய் விட்டன. ஆயினும் இந்த நீல நிற மேற்போர்வை மட்டும் ஏதோ போன வாரம்தான் வரையப்பட்டது போல பிரகாசமான நிறத்துடன் காணப்படுகிறது. "மாதாவின் மேலங்கியைப் பொறுத்த வரை, எல்லாவற்றிலும் மேலாகக் குறிப்பிடத் தக்கது வியக்கத்தக்க விதத்தில் அது வீசும் ஒளியாகும். கண்ணால் காணக் கூடிய அதிகமான ஒளிப்


பிரதிபலிப்பு அதில் காணப்படுகிறது. ஆனாலும் அகச் சிவப்புக் கதிர்களில் அது ஊடுருவிக் காணக்கூடியதாக இருக்கிறது... நீல நிற மேற்போர்வையிலிருப்பது போல இளஞ்சிவப்பு ஆடையின் ஒளி-நிழல் வேறுபாடானது (Shade of colour), வர்ணப்பூச்சோடு கலந்து காணப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறமியின் கீழ் எந்த ஒரு செயற்கையான ஓளியமும் காணப்படவில்லை. "இந்த இளஞ்சிவப்பு நிறமி வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாததாகத் தோன்றுகிறது.இந்த ஓவியத்தில் நிஜமாகவே விநோதமாக இருக்கும் அம்சங்களில் ஒன்று, அந்த டில்மா சரியான அளவுடையது அல்ல என்பதாகும். அது மட்டுமல்ல, அதன் மீது சித்திரங்களைப் பாதுகாக்கக் கூடிய வார்னிஷ் பூச்சுக்கான தடயமேயில்லை. இப்படி எந்த விதமான பாதுகாப்புக்குரிய மேற்பூச்சும் இல்லாதிருந்தும், மாதாவின் உள்ளங்கியும், மேற்போர்வையும், இப்போதுதான் நெய்யப்பட்டவை போலப் பிரகாசமாகவும், நல்ல நிறங்களுடனும் இருக்கின்றன. மேலும் நெய்யப்பட்ட இதன் இழைகள் அவ்வளவு நெருக்கமானவை அல்ல. ஆகவே அதிக இடை வெளிகள் உள்ள சாக்குத் துணி போன்ற இந்தத் துணியில் இவ்வளவு அற்புதமான நுணுக்கங்கள் நிறைந்த சித்திரத்தை வரைவது என்பதற்கு சாத்தியமேயில்லை. "குவாடலூப்பே கன்னிகையின் முகத்தோற்றம் ஒரு கலை அற்புதமாகும். வடிவழகிலும், பாவனையை வெளிப்படுத்தும் எளிமையிலும், திறங்களைப் பயன்படுத்தியுள்ள கலைநுட்பத்திலும் உலகின் மிகச் சிறந்த கலைப் படைப்புகளுக்கு இந்தச் சித்திரம் எந்த விதத்திலும் குறையாததாக இருக்கிறது. மேலும் இதே போன்ற முறையில் வரையப்பட்டுள்ள எந்த ஒரு சித்திரத்தையும் நான் ஒருபோதும் கண்டதில்லை."

 "இந்தச் சித்திரத்திற்குத் தத்ரூபமான தோற்றம் தருவதில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்திகள் உண்மையாகவே அற்புதமானவை. நம் வார்த்தைகளுக்கு எட்டாதவை. அவற்றில் ஒன்று, சரியான அளவுகளில் இல்லாத அந்த டில்மாவில் இயற்கையாகயே இருக்கும் மடிப்பு களை அல்லது பிசிறுகளை, அல்லது கசங்கல்களைக் கூட, அந்த ஓவியத்திற்கு ஆழமும் உயிரோட்டமும் தரும் விதத்தில் பயன்படுத்தியிருப்பது ஆகும். குறிப்பாக வாயில் இது தெளிவாகத் தெரிகிறது. அங்கு அந்தத் துணியின் ஒரு முரட்டு இழை, துணியின் மற்றப் பகுதிகளின் மட்டத்திற்குச் சற்று மேலாக எழுந்துள்ளது. இது உதட்டின் மேற்பகுதியின் விளிம்போடு மிக மிகச் சரியாகப் பொருந்துகிறது! இதே போன்ற முரட்டுத்தனமான குறைபாடுகள் இடது கன்னத்தின் நிழலூட் டப்பட்ட பகுதியிலும் வலது கண்ணின் மேற்பகுதியிலும், வலப் பகுதியிலும் காணப்படுகின்றன. இதனால் இந்த ஓவியத்திற்கு ஒரு விதமான முப்பரிமாணத் தோற்றம் கிடைத்து, அதன் தத்ரூபத் தோற்றம் நுல்லியம் பெறுகிறது. இப்படி தத்ரூபத் தோற்ற விளைவைத் தரும்படி ஏற்கனவே மிகத் துல்லியமான இடங்களில் மடிப்புகளும், பிசிறுகளும் உள்ள ஒரு டில்மாவை எந்த ஒரு மனித ஓவியனும் தேர்ந்தெடுப்பது முற்றிலும் இயலாத காரியம் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.

இது தற்செயலாக நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை. கண்கள், மற்றும் தலைமுடியின் கறுப்பு நிறம் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இரும்பு ஆக்ஸைடோ அல்லது வேறு ஏதாவது நிறமியோ அல்ல. ஏனெனில் அவை காலப் போக்கில் உடைந்து, பழுப்பு நிறமாகவும் மாறி விடும். மற்றொரு மிக வியப்பான அம்சம் முகத்திலும், கரங்களிலும் காணப்படும் ஒளி-நிழல் வேறுபாடாகும். வர்ணக் கலவையில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியின் இயற்கை விளையு எப்படியிருக்குமோ, அவ்வாறே அந்த முரட்டு டில்மாவிலிருந்தும் பிரதிபலிக்கிறது!... தூரத்திலிருந்து பார்க்கும் போது, நிறமியும், துணியின் மேல்மட்ட கலைத்திறனும் ஒன்றோடொன்று கலக்கிற இடத்தில், ஒலிவ நிறமான திவ்ய கன்னிகையின் அதியற்புத அழகு ஏதோ மந்திரம் போட்டது போல் வெளிப்படுகிறது. அவர்களது முகபாவனை வணக்கத்துக்கு உரியதாகவும். அதே சமயம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் திடீர் திடீரென மாறி மாறித் தோன்றுகிறது. அவர்கள் செவ்விந்தியப் பெண்ணாகவும், அதே வேளையில் ஐரோப்பியப் பெண்ணாகவும் தோன்றுகிறார்கள். ஒலிவ நிறத் தோலுடனும், ஆனாலும் வெண்ணிறமாகவும் காணப்படுகிறார்கள்!"

"மேலும், மிகப் பெரும் அளவில் பெரிதாக்கப்பட்ட மாமரியின் வலது கண்ணின் புகைப்படங்களில் மூன்று மனித உருவங்கள் காணப்படுகின்றன. அவர்களில் ஒருவர் ஹுவான் டியேகோ போலத் தோன்றுகிறார். மற்றொருவர் சுமர்ராகா ஆயர். மூன்றாமவர் ஆயருக்கு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்ட ஹுவான் கொன்சாலஸ் போலத் தோன்றுகிறார். (பிற்பாடு இவர் குவாடலூப்பே மாதா பக்தியின் ஆர்வமிக்க ஆதரவாளராக மாறினார்.) ஹுவான் டியேகோ, ஹவான் கொன்சாலஸ் ஆகிய இருவரின் ஓவியங்களும் நம்மிடமுள்ளன. இவை, தேவ அன்னையின் கண்ணில் உள்ள இரண்டு உருவங்களோடு ஒத்துப்போகின்றன."

டாக்டர் கல்லஹன் மாதாவின் அற்புதச் சித்திரத்திலுள்ள வலது கண்ணை ஆஃப்தால் மாஸ்கோப் என்னும் கண் பரிசோதனைக் கருவியின் முன் வைத்துப் பரிசோதித்தபோது, ஆச்சரியத்தால் அதிர்ந்து போனார். அது படத்திலுள்ள கண்ணைப் போலவே அவருக்குத் தோன்றவில்லை. ஒரு உண்மையான மனிதக் கண்ணிலுள்ள விழித்திரை, லென்ஸ், கண் ரசங்கள் போன்ற அனைத்து பாகங்களையும் அவரால் துல்லியமாக அதில் காண முடிந்தது மட்டுமின்றி. ஒளி கண்ணில் ஏற்படுத்தும் பிரதிபலிப்பின் அனைத்து அம்சங்களையும் அந்தச் சித்திரக் கண்ணிலும் அவர் கண்டார். மாதாவின் கண்கள் சற்று மூடிய தோற்றமாக இருந்தன என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். எந்த அளவுக்கு டாக்டர் கல்லஹன் இந்த அதிசயத்தால் கவரப்பட்டார் என்றால், ஒரு கணம் அவர் தாம் அற்புதச் சித்திரத்தின் முன் இருப்பதையே அடியோடு மறந்தவ ராக, "கொஞ்சம் தலையை உயர்த்துங்கள் அம்மா!" என்றார்! “இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை. இது மனித அறிவுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட காரியம் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும்" என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஓ, அற்புதங்களின் அன்னையே! பரிசுத்த குவாடலூப்பே மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

செவ்வாய், 16 ஜனவரி, 2024

அருட்கருவிகள் - மெழுகுவர்த்தி


  நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம்.
திருச்சி, 1941


தேவ ஆராதனைகளில் தீபம் உபயோகிப்பது தொன்று. தொட்டு வழங்கி வரும் ஓர் நல்ல வழக்கம். யூதரும் அஞ்ஞானிகளுமே இதைப் பிரயோகித்து வந்தார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. கிறிஸ்துவர்களுக்குள் இதன் பிரயோகம் ஆரம்பத்தில் அவசியத்தினிமித்தம் உண்டானது என்று சொல்லக் காரணமுண்டு. அது எவ்வாறெனில், பொழுது விடியுமுன்னர் அல்லது சுரங்கங்களில் திவ்விய பலி ஆராதனை நிறைவேற்ற வேண்டியிருந்த காலத்தில் இருளைப் போக்குவதற்குத் தீபம் அவசியமாயிருந்தது. ஆனால் தீபப் பிரயோகத்தில் உன்னதமான ஞானக்கருத்துகள் அடங்கி இருக்கின்றன வென்பதைக் கிறீஸ்தவர்கள் ஆரம்பத்திலேயே தெளிவாய்க் கண்டு கொண்டார்கள் என்பது நிச்சயம்,

வெளிச்சம் சுத்தமானது. அது அந்தகாரத்தை ஊடுருவுகிறது. அதன் எல்கைக்குள் இருப்பதையெல்லாம் பிரகாசிப்பிக்கிறது. ஆதலால், மகா பரிசுத்தரும், சர்வ வியாபியும், சகல வரங்களுக்கும் ஊற்றுமாயிருக்கிற சர்வேசுரனுக்கு அது உச்சிதமான அறிகுறி என்பது வெளிப்படை. அது தமது திவ்விய இரட்சகரையும் அவரது அலுவலையும் உருவகப்படுத்துகிறது. ஏனெனில், அவர் உலகத்தின் ஒளி, அந்தகாரத்திலும் மரண நிழலிலும் உட்கார்ந்திருப்பவர்களைப் பிரகாசிப்பிக்க வந்தவர். மெழுகுவர்த்தியை உபயோகிப்பதற்கும் விசேஷ காரணமுண்டு. மெழுகு மாசற்றதாயிருப்பதி னிமித்தம், கிறீஸ்துநாதரின் மாசற்ற சரீரத்துக்கு உருவகமாய் இருக்கிறது. அதற்குள் இருக்கிற திரி அவரது ஆத்துமத்துக்கு அடையாளம், அதிலிருந்து புறப்படும் சுடர் ஒரே தெய்வீக ஆளிடமாய் தேவ சுபாவமும் மனுஷ சுபாவமும் ஒன்றித்து இருப்பதைக் காட்டுகின்றது.

பச்சாத்தாபம் ஒன்று நீங்கலாக, மற்ற தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றுகையிலெல்லாம் மெழுகுவர்த்தி உபயோகப்படுகிறது. திவ்விய பலிபூசை வேளையிலும், வேறு தேவ ஆராதனை முயற்சிகளிலும், சுற்றுப்பிரகாரங்களின் போதும், இன்னும் இதர சமயங்களிலும் மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்கிறார்கள்.

பீடத்தின்மேல் மெழுகுவர்த்தியை வைப்பது 11-ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது என்று சொல்லாம். அதற்கு முந்தின காலங்களில், பீடத்துக்கு அருகாமையில் உயரமான தண்டுகளில் அல்லது சுவரிலிருந்து கொளுவியில் ஊன்றி வைப்பது வழக்கம்.

பெரிய பாட்டுப் பூசையில் ஆறு மெழுகுவர்த்திகளும், சாதாரண பாட்டுப் பூசையில் ஒரே குருவானவர் மாத்திரம் நிறைவேற்றும்போது நான்கு திரிகளும், மேற்றிராணியார் செய்யும் பாட்டுப்பூரையில் ஏழு திரிகளும், மேற்றிராணியா ருடைய சாதாரண பூசையில் நான்கும், குருக்கள் செய்யும் சாதாரண பூசையில் இரண்டு திரிகளும் கொளுத்துவது முறை. ஆயினும், உற்சவ ஆடம்பர தினங்களில் இந்த எண்ணிக்கைக்கு அதிகமாய் வைப்பதில் ஆட்சேபனையில்லை.

இதுவரையும் நாம் சொல்லி வந்தது தேன் மெழுகினால் செய்த திரிகளைப் பற்றியேயன்றி, மீன் திரி என்று நமது நாட்டில் வழங்கும் திரிகளைப் பற்றியல்ல. மேலே சொன்ன சமயங்களில் உபயோகிக்கிற திரி தேன்மெழுகினால் செய்து, தேவமாதாவின் சுத்திகரத் திருநாளன்று அல்லது அதற்குப் புறம்பாய் மந்திரிக்கப்பட்டிருப்பதே ஒழுங்கு. மீன் திரி அல்லது கொழுப்புத் திரி பலிபீடத்திலாவது தேவதிரவிய அதுமானங்களை நிறைவேற்றுகையிலாவது உபயோகிப்பது ஒழுங்கல்ல. இந்தத் திரிகளை மந்திரிக்கிறதுமில்லை. இவைகள் வேண்டுதல் திரி எனப்படும். இவைகள் சாதாரணமாய் ஏதாவது ஒரு அர்ச்சியசிஷ்டவருடைய கரூபத்துக்கு முன்பாக எரிகிறவைகள், விசுவாசிகள் அந்தந்த அர்ச்சியசிஷ்டவர் மட்டில் தங்களுக்குள்ள விசேஷ பற்றுதல் வணக்கத்தைக் காட்டுவதற்காக இவைகளை உபயோகிக்கிறார்கள்.

மந்திரித்த மெழுகுதிரி ஒவ்வொரு கத்தோலிக்கர் வீட்டிலும் இருக்க வேண்டும். குருவானவர் அவ்வீட்டில் யாருக்காவது நற்கருணை அல்லது அவஸ்தைபூசுதல் கொடுக்கும்போது அந்தத் திரிகளைக் கொளுத்தி வைக்க வேண்டும். மரணத் தறுவாயிலிருக்கிறவன் கையில் மந்திரித்த திரியைப் பிடித்திருக்கும்படி செய்வது மகா பக்திக்குரிய ஓர் வழக்கம். இந்தத் திரியின் சுடர் அவனது விசுவாசத்துக்கும். அவன் பெற்றுக்கொண்ட தேவ வரங்களுக்கும். அவன் பெறப் போகிற நித்திய மகிமைக்கும் அடையாளமாயிருக்கிறது.








அர்ச். பெரிய யாகப்பர் சீஷனாகிய பிலேத்தென்பவர் (Philete Disciple of St. James)

அர்ச். பெரிய யாகப்பர் சீஷனாகிய 

பிலேத்தென்பவர் சரித்திரம்.

PHILÉTE DISCIPLE DE ST. JACQUES LE MAJEUR.

பிலேத்தென்பவன் ஒரு மாயவித்தைக்காரனிடம் மாய்கை கற்றுப் பழகினான். இப்படி இருக்கையில் அப்போஸ்தலரான அர்ச். பெரிய யாகப்பர் யூதேயா  தேசத்தில் சர்வேசுரனுடைய திவ்விய வேதத்தைப் போதிக்கிறபோது அவர் பண்ணின ஆச்சரியமான புதுமைகளை உலகத்தார் கண்டு அவரோடே தர்க்கம் பண்ணப் பிலேத்து கெட்டிக்காரனென்று எண்ணி அதற்கு அவனைத் தெரிந்து கொண்டார்கள். அப்படி யே பிலேத்து அர்ச். யாகப்பரோடு தர்க்கம் பண்ணு மிடத்தில் அவன் தோல்வியடைந்ததுமன்றி அர்ச். யாகப்பர் சொன்ன நியாயங் களைக் கண்டுபிடித்து மனந்திரும்பி அக்கியானத்தையும் மாய்கை வித்தைத் தொழிலையும் விட்டுவிட்டு ஞானஸ்நானம் பெற்றான்.

பிறகு தனக்கு மாய்கை வித்தை சாஸ்திரம் படிப்பித்தவனிடத்தில் போய் நடந்த செய்திகளை வெளிப்படுத்தி அவனுஞ் சேசுநாதருடைய வேதத்தைத் தழுவும் பொருட்டுப் புத்தி சொன்னான். எர்மொஜேனென்னும் அந்த மனிதன் இந்தச் செய்தியை அறிந்து மிகக் கஸ்திப்பட்டுத் தன்னுடைய சீஷன் கிறீஸ்துவனானதி னாலே அவன் பேரிலே மிகக் கோபம் கொண்டு பில்லி சூனியம் வைத்துப் பிலேத்தின் கை கால் வழங்காதிருக்கப் பண்ணினான். இதை அர்ச். யாகப்பர் அறிந்து தமது கையிலிருந்த ஒரு சின்ன சீலையை அவரிடம் அனுப்பினார். பிலேத்து அதை மிக வணக்கத்தோடு வாங்கின உடனே அதைக்கொண்டு அந்தப் பில்லி சூனியம் நீங்கிப்போய்க் கை கால்கள் எப்போதும்போல் நன்றாய் விழங்கி வந்தது. அவருக்குக் குணமான பிற்பாடு ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்ட ஆரோக்கியத்தை வேதம் போதிக்கச் சுற்றித் திரிந்து பிரயாசைப்படுவதிலே செலவழித்தார். இப்படி இருக்கையிலே திருச்சபையின் எதிரிகள் அவரைப் பிடித்துக் காவலிலே வைத்தார்கள். அவர் அநேக நாள் காவலிலே இருந்து கடைசியிலே வேதசாட்சியாக மரணத்தை அடைந்தார்.

கிறீஸ்துவர்களே ! அர்ச். பிலேத், உலகத்தானும் மாய்கை வித்தைக்காரனுமாய் இருந்தாலும், அர்ச். யாகப்பரோடே தர்க்கம் பண்ணுமிடத்தில் சத்தியத்தைக் கண்டுபிடித்தவுடனே, முன்னையைப்போல தீய வழியில் நடவாமல் நியாயத் தின்படியே நடக்கத் துவக்கினார். அவ்வாறே நீங்களும் நடக்கவேண்டும். இருட் டிலே நடக்கிறவனுக்குப் பள்ளம், மேடு, கிணறு, தாழ்வு, சேறு, பாம்பு இன்னவிடத்தில் இருக்கிறதென்று தெரியாதென்பது உண்மை. ஆனால் அவனுக்கு முன்னே தீ வர்த்தியின் வெளிச்சம் அவனுக்கு நல்ல வழிகாட்டிப் போகிறபோது, அதற்குப் பின் நடந்தால் அவனுக்குக் கேடுவராது. அவன் அந்தத் தீவர்த்தியின் பிறகே போகாமல் தன்மனதின்படியே நடக்கிறபோது கிணறு பள்ளங்களில் விழுவது இயற்கை, அறியாமையாகிய அந்தகாரத்திலே சத்தியமானது ஞானப்பிரகாசம்போல் இருக்கிறதன்றி ஆண்டவர் மனிதர்களுக் குக் கட்டளையிட்ட புத்தியைக்கொண்டு சத்தியத்தைக் கண்டு பிடிக்கலாம்.

அதைக் கண்டுபிடித்த பிறகு, அதின்படியே நடக்க மனிதனுக்குக் கடமை யுண்டு. இதை நன்றாய்க் கண்டுபிடிக்க இப்போது சொல்லப்போகிற உவமையை கேளுங்கள். மாடானது நல்ல பயிரைக் கண்டவுடனே அதைத் தின்கிறபோது பயிரிட்டவனுக்கு வெகு சேதமென்று நினையாமல் தன் பசி அமருமட்டும் அந்தப் பயிரைத் தின்னும். புலியானது காட்டிலே தனிமையாய்ச் சிறு குழந்தையையோ பெரிய இராசாவையோ கண்டவுடனே அவர்கள்மேல் பாய்ந்து பட்சிக்கிறபோது, அதிலே பெரும் தீங்கு இருக்கிறதென்று நினையா மல் தன் சுபாவ கொடுமையின்படியே பாயும். யானை மதமெடுத்துத் திரிகிற போது, அதன் முன்பாக வீடு வாசல் மாடு மனிதர் என்ன எதிர்பட்டாலும் அதை அழித்துத் தகர்த்துப் போடும். அது பெரிய அநியாயமாயிருந்தாலும் அதை நினையாமல் தன் ஆங்காரத்தின்படியே செய்யுமே. மிருகங்களுக்குப் புத்தி இல்லாததினாலே அவைகள் நீதி நியாயங்களைக் கண்டு பிடிக்கவில்லை என்பது உண்மை. மனிதரோவெனில், மெய்யான தேவனை வணங்காமல், பொய்யான தேவர்களை வணங்குகிறதும், பில்லி சூனியம் வைக்கிறதும், களவு செய்வதற்குத் துர்ப்புத்தி சொல்லுவதும், கோள் சொல்லுகிறதும், இவை முதலான பல பொல்லாங்கு செய்கிறதும் அநியாயமென்று 'அவரவருக்குச் சர்வேசுரன் கொடுத்த புத்தியைக் கொண்டு கண்டு பிடிக்கலாம்.

ஆனால் சில பேர்கள் தங்கள் இஷ்டத்தின்படியே பொல்லாத ஆசையை அநுசரிக்க மனதாயிருக்கிறதே யல்லாமல், நியாயத்தின்படியே நடக்க மனதில்லாமல் இருக்கிறார்கள். இதினாலே இத்தகையோர்களுடைய நடத் தைக்கும் மிருகங்களுடைய நடத்தைக்கும் வேற்றுமை காணோம். நீங்கள் புத்தியில்லாத வஸ்துவைப் போல நடவாதபடிக்கு நியாயத்தைக் கண்டுபிடித்த வுடனே அதற்குத் தக்கபடி நடக்கவேண்டும். பழி வாங்குகிறதும் மோக பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறதும் ஆகாதென்று கோபக்காரனும் பொல்லாத இச்சையுள்ளவனும் முதலாய் ஒத்துக்கொள்ளுவார்கள். கோப வெறியிலும் காம வெறியிலும் புத்தி மயங்கித் தங்களுக்குச் சில நியாயந் தோன்றுகிற தென்று அவர்கள் சொல்லுவார்களாக்கும். பச்சைக் கண்ணாடியை மூக்கிலே வைத்துப் பார்க்கிறவனுக்கு எல்லாம் பச்சையாய்த் தோன்றும். அதை எடுத்து விட்டுப் பார்க்கிறபோது, பச்சை நிறம் நீங்கி எல்லாம் இயற்கையாய்க் காணப்படும்.

அப்படி கோபக்காரனுக்கும் பொல்லாத இச்சை யுள்ளவனுக்கும் நியாயமில்லா திருந்தாலும் அந்தப் பாவ மயக்கம் இருக்குமட்டும் அடாத நியாயந் தோன்றும். அந்த மயக்கம் நீங்கின பிறகு, முந்தி நியாயமென்று தோன்றினது அநியாயமாகத் தோன்றும். தாகமுள்ள வியாதிக்காரன் வைத்தியன் விலக்கின தண்ணீரின் பேரிலே வெகு ஆசையாயிருக்கிறபடியினாலே தண்ணீரைக் குடிக்க வேண்டுமென்று ஆயிரம் விசை சொன்னாலும் அவன் அப்படி சாதிக்கிறது நியாயமல்ல. அவன் வைத்தியனைக் கேட்டுத் தண்ணீர் குடிக்கலாமென்று இவன் சொன்னால் அப்போது அது ஞாயந்தானென்று ஒத்துக்கொள்ளலாம். அவ்வண்ணமே ஞான வியாதிக்காரராகிய பாவிகள் தங்கள் துராசைகளை அநுசரிக்காமல் ஞான வைத்தியராகிய குருக் களையோ, பத்தியுள்ள நல்ல கிறீஸ்துவர்களையோ புத்தி கேட்டுத் தங்களுக்குத் தோன்றுகிற சந்தேகங்களைச் சொல்லி அவர்கள் சொல்லும் ஞாயத்தின்படியே நடக்கவேண்டும்.


Download Tamil Catholic Songs Click here

Read more saints lives history in tamil.






அர்ச்‌. முதலாம்‌ மர்செல்லுஸ்‌ (St. Marcellus - I)

  ஜனவரி 16

 வேதசாட்சியான

அர்ச்‌. முதலாம்‌ மர்செல்லுஸ்‌

பாப்பரசர்‌  

தியோக்ளேஷியனுடைய ஆட்சியின்‌ இறுதி காலத்தில்‌, பாப்பரசர்‌ மர்‌செல்லினுஸ்‌ வேதசாட்சியாகக்‌ கொல்லப்பட்டபிறகு, பாப்பரசர்‌ ஸ்தானம்‌, மூன்றரை வருட காலம்‌ காலியாகவே இருந்தது. கி.பி.308ம்‌ வருடம்‌, முதலாம்‌ மர்செல்லுஸ்‌ பாப்பரசரானார்‌. இவர்‌, திருச்சபை அதிகார அமைப்பை சீர்திருத்தம்‌ செய்தார்‌; விசுவாசத்தை இழந்தவர்‌கள்‌ மறுபடியும்‌ மனந்திரும்பி வந்தபோது, அவர்கள்‌ மேல்‌, இவர்‌ மிகவும்‌ இரக்கமாயிருந்தார்‌. ஆனால்‌, லாப்சி என்கிற மக்கள்‌, விசுவாசத்தை மறுதலித்தபிறகு, அதற்காக மனஸ்தாபப் படாததால்‌, இவர்‌ அவர்களை மன்னிக்கவில்லை. 

மாக்சென்ஷியுஸ்‌ சக்கரவர்த்தி, இவரை நாடு கடத்தினான்‌. பின்‌னர்‌, குருக்கள்‌ இவரை விடுவித்துக்‌ காப்பாற்றி, லூசினா என்கிற ஒரு விதவையின்‌ இல்லத்தில்‌ தங்க வைத்தனர்‌. லூசினா என்ற பக்தியுள்ள விதவை, பாப்பர சருக்குரிய மேரை வணக்கத்தையும்‌ செலுத்தினாள்‌; தன்‌ இல்லத்தை, பாப்பரசருக்கு ஒரு தேவாலயமாகப்‌ பயன்படுத்தும்‌ படியாக விட்டுக் கொடுத்தாள்‌. கிறீஸ்துவ திருவழிபாடுகள்‌ இந்த தேவாலயத்தில்‌ நிகழ்வதைப்‌ பற்றிக் கேள்வியுற்ற சக்கரவர்த்தி, இந்த தேவாலயத்தை, ஒரு குதிரை இலாயமாக மாற்றினான்‌. அதிலிருந்த மிருகங்களை கவனிக்கும்படி, பாப்பரசரை வலுவந்தம்‌ செய்தான்‌. 

வேதனைக்குரிய இந்த துயரமான சூழலில்‌, பாப்பரசர்‌ மர்செல்லுஸ்‌, கி.பி.310ம்‌ வருடம்‌, ஜனவரி 16ம்‌ தேதியன்று, மரித்தார்‌. முதலில்‌ இவர்‌, சுரங்கக்‌ கல்லறையிலிருந்த அர்ச்‌.பிரிஸ்சிலாவின்‌ கல்லறையில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டார்‌; பின்னர்‌, உரோமாயுரி அர்ச்‌.இராயப்பர்‌ தேவாலயத்தில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டார்‌.

 அர்ச்‌.மர்செல்லுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 


திங்கள், 15 ஜனவரி, 2024

நம் கடமையைச் செய்வோம்! - Duty of the State

(திருச்சபையிலும் நம் சமுதாயத்திலும் நிலவும் குழப்பத்திற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், அதற்கு பதில் வெகு தெளிவானது. மக்கள் தங்கள் கடமைகளிலிருந்து தவறியதால் ஏற்பட்ட விளைவே! தலைவர்கள் தங்கள் பொறுப்பை அலட்சியப்படுத்தியதால், பெற்றோர்கள் தங்களுடைய கடமையை கட்டிக்கழித்தால் இப்படி பலர் செய்த தவறுகள்தான் இன்றைய சீர்கேட்டிற்கு காரணம். இதை சீர்செய்ய நாம் செய்ய வேண்டியது கடவுள் நமக்களித்த பொறுப்பை சரியாய் செய்வதேயாகும். இதைத்தான் திருச்சபை நம்மிடம் எதிர்ப்பார்க்கிறது. இதைக் குறித்து சங். லெகு சுவாமிகள் எழுதிய பொதுக் கடிதத்தின் தமிழாக்கத்தை உங்களுக்கு அளிக்கிறோம். வாசகர்களே! இதை நன்றாக சிந்திக்க உங்களை அழைக்கிறோம். ஆ.ர்.)

நம் அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் மத்தியில், மனுக்குலத்தின் எதிரியின் தாக்குதலிலிருந்து நம்மை அவசியம் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவேதான் ஒவ்வொரு நாளும் இரவு கட்டளை ஜெபத்தில் நாம் "சகோதர்களே Fratres Sobrii estote et vigilate" என்று பாடி ஜெபிக்கின்றோம்.

இந்த போருக்காக சாத்தான் தனக்கு சாதகமாய் எல்லாவித போர்க் கருவி களையும் பயன்படுத்துகிறான். வெற்றி ஒன்றே அவனது குறிக்கோள். அவனது இலக்கு: ஆன்மாக்களை வீழ்த்தி அவற்றை அடிமைப்படுத்துவதே! அதற்காக அவன் தன்னிடமுள்ள பேய்தனமான வெறுப்புடன் படிப்படியாக புத்திசாலித் தனத்துடன் நகர்கிறான். அழிவு பாதையில் அவன் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.

ஆன்மாக்களை ஏமாற்றுவதற்காக அவன் பல வித்தைகளைப் பயன்படுத்தி னாலும், ஒரேயொரு வித்தையில் மட்டுமே பல வெற்றியுடன் ஜொலிக்கிறான். அது தன்னைத் தானே ஒளியின் தூதனாய் மாற்றி மக்களை ஏமாற்றுவது. எளிதில் கண்டுபிடிக்க முடியாத தீங்கினை மக்களால் எவ்வாறு தவிர்க்க முடியும்? மக்களை கனவு உலகத்திலே வாழ வைக்கிறான். ஜெபத்தின் வாழ்வில்கூட புகுந்து ஆன்மாக்களை ஏமாற்றி, அதன் மூலம் கனவு வாழ்க்கையா? நனவு வாழ்க்கையா? என்று தெரியாமலே எப்படி வாழ்வது? 

இதற்கு பதில் மிக எளிமையானது. ஒருவேளை நம்முடைய சிக்கலான மூளைக்கு புரிந்துகொள்ள முடியாத அளவு எளிமையானதாய் இருக்கலாம்.

நம்முடைய கடமையில் பிரமாணிக்கமாய் இருப்பதே! கடவுளால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையில் நாம் சந்தேகமின்றி பயணிக்கிறோம் என்பதற்கு சாட்சியாய் அமைகிறது. வாழ்வின் தினசரி போராட்டத்தினால், ஒரே பணியை அதே போல் செய்வதால் நம்முடைய கடமைகள் கவர்ச்சியற்று தோன்றுகிறது. ஆனால் அச்செயல்களே கடவுள் விரும்பிய அந்த ஸ்தானத்தில் நம்மை நிலைநிறுத்த செய்கிறது. கடவுள் சித்தத்துடன் நம்மை ஒன்றிணைப்பதே அர்ச்சிஷ்டதனத்தின் அடிப்படை கூறு. அதுவே மோட்சத்திற்கு செல்ல நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய காரியம்.

நம்முடைய கடமையைச் செய்வதற்கு கடவுள் நமக்கு அளிக்கின்ற விசுவாச ஒளியும், வரப்பிரசாதமுமே போதுமானது. நம்முடைய அன்றாட காரியங்களை துணிவுடன் எதிர்கொள்ளவும், கடவுள் சித்தத்தை நேசத்துடன் செயலாற்றவும் கடவுளின் உதவி நம்மோடு இருக்கத்தான் செய்கிறது.

நம் முன்னோர்கள் இதனை நன்கு அறிந்திருந்தனர். செய்யும் தொழிலை அவர்கள் வணங்கினர். கடமையைச் சரியாய் செய்வது ஜெபத்தின் தொடர்ச்சி என்று கருதினர். தொடர்ச்சி மட்டுமல்லாது அதுவே தயாரிப்பாய் அவர்களுக்கு அமைந்தது.

கடமையை அலட்சியப்படுத்தும் தற்கால போக்கின் விளைவு, நாம் திருச்சபையிலும், சமுதாயத்திலும், வன்மையாய் எதிலொலிப்பதை கண்டு கொண்டே  இருக்கிறோம்.

நம்முடைய மதம் வாழும் மனிதாவதாரத்தின் தேவ இரகசியம். நம் கடமையை சரியாய் செய்வது அத்தகைய அவதாரத்தின் நிச்சயமான வெளிபாடு. கடவுளை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்துவது முக்கியமான செயல் அல்லவா? அவற்றை அலட்சியப்படுத்தலாமா?

ஒரு கிறீஸ்தவன் அவனுடைய அன்றாட செயலினால் சேசுநாதரின் பாடுகளிலும், அவருடைய இரட்சிப்பு பணியிலும் பங்குபெறுகிறான். கடவுளின் சந்நிதானத்தில் நாம் தினமும் வளர வேண்டுமானால், நம்முடைய ஆன்மாவில் அமைதி நிலவ வேண்டுமானால் நம்முடைய கடமையை சிறப்பாய் செய்வோம்!




Tamil Catholic Blog : வியாகுலப் பிரசங்கங்கள்

Tamil Catholic Blog : வியாகுலப் பிரசங்கங்கள்: (வாசகர்களே! தபசுகாலம்… அதிலும் அதன் பரிசுத்த வாரம் என்றாலே தமிழக கத்தோலிக்கர்களாகிய நமக்கு நினைவுக்கு வருவது  “வியாகுலப் பிரசங்கங்களே” கத்...

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

Tamil Catholic Blog : அர்ச். பிரான்சிஸ் அசிசியார் (Part -II)

Tamil Catholic Blog : அர்ச். பிரான்சிஸ் அசிசியார் (Part -II): குரல் கேட்டல் பிரான்சிசின் வரலாற்றில் வருகின்ற  பிச்சைக்காரனின் கதை யில் இருந்து உலகப்பற்றை அவர் வெறுத்தது குறித்து அறியலாம். இதன்பட...

அர்ச். ஜான் போஸ்கோ

1815, ஆகஸ்ட் 16 அன்று, இத்தாலியின் பியெத்மோன்ட் மாகாணத்திலுள்ள ஒரு சிறு கிராமமாகிய பெக்கியில், பிரான்செஸ்கோ போஸ்கோ, மார்கரீத்தா ஒச்சியேனா தம்பதியருக்கு ஜான் போஸ்கோ கடைசி மகனாவார். அவரது மூத்த சகோதரர்கள் அந்தோனியோ, ஜூசேப்பே ஆகியோராவர். அவருக்கு இரண்டு வயதானபோது, தந்தை இறந்துவிட, தாயே அவருக்குத் தந்தையுமானாள். மார்கரீத்தா அவரது எதிர்கால உருவாக்கத்தில் மிகச் சிறந்த பங்கு வகித்தாள். சிறுவன் ஜான் ஆடு மேய்க்கும் வேலை செய்தார். இளம் தோழர்களுடன் விளையாடுவார், தீமையிலிருந்து அவர்களை விடுவித்து, புண்ணியத்தை நோக்கி அவர்களை நடத்து வார். அதன்பின் அவர் தன் ஒன்றுவிட்ட சகோதரனின் வயல் களிலும், திராட்சைத் தோட்டத்திலும் வேலை செய்தார்.

ஆனால் 1824-1825 குளிர்காலத்தின்போது, பியெத்மோன்ட்டின் பனிபடர்ந்த வயல்களில் வேலைகள் ஏதும் இல்லாததால், போஸ்கோவின் தாய் அவரைப் பக்கத்துக் கிராமத்திலுள்ள ஒரு பள்ளிக்கு அனுப்பினாள். அங்கே ஒரு குரு அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார். இவர் ஜானுக்கு ஞான உபதேசம் கற்பித்து, அவரை முதல் பாவசங்கீர்த்தனத்திற்குத் தயாரித்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ் ஜான் ஜெபம் மற்றும் ஒறுத்தலின் மூலம் ஆன்மாவில் தேவ வரப்பிரசாதத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவசியமான வழிகளைக் கற்றுக்கொண்டார்.

 வாசிக்கத் தெரிந்த பிறகு, ஜான் போஸ்கோ அடிக்கடி புத்தகமும் கையுமாகவே காணப்பட்டார். ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் சென்று அவற்றைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் போதும் கூட, அவர் புத்தகங்கள் வாசிப்பதில் கருத்தாயிருந்தார். அவருடைய பொறுமையையும், சாந்த குணத்தையும் கண்டு வியந்த மற்ற சிறுவர்கள், அவருடைய நண்பர்களாகி விட்டார்கள். ஜான் போஸ்கோ அவர்களுக்கு ஞான உபதேசம் கற்பித்தார். நம் திவ்ய அன்னையின் பாடல்களைப் பாட அவர்களுக்குப் பயிற்சியளித்தார். ஜான் போஸ்கோவுக்கு ஒன்பது வயதானபோது, அவர் ஒரு கனவு கண்டார். அது, அவரது உழைப்பு மிகுந்த எதிர்கால வாழ்வில், தேவ பராமரிப்பின்படி, சிறுவர்களுக்காக அவர் செய்ய வேண்டியிருந்த மிக நீண்ட பணியை அவருக்கு வெளிப்படுத்தியது. கடவுள் அவருக்கும், அவரு டைய எதிர்காலச் சபைக்கும். அவருடைய சிறுவர்களுக்கும் தாம் செய்ய இருந்த அனைத்தையும் இந்தக் கனவுகள் மூலமாகவே கடவுள் அவருக்கு வெளிப்படுத்தினார். ஒரு கனவில் அவருடைய காவல் தூதர் நரகத்திற்கும் கூட அவரை அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வந்தார்!

1830-ல் அவர் இளங்குருவான ஜோசப் கஃபாஸோ என்பவரைச் சந்தித்தார். ஜானிடம் விளங்கிய இயற்கையான திறமையையும், ஞானத்தையும் கண்டுபிடித்த அவர், அவரது பள்ளிப் படிப்புக்கு உதவி செய்தார். அவரது தாயும் அவருடைய கல்விக்குத் தேவையான பணத்தை கஷ்டப்பட்டுச் சம்பாதித்து அனுப்பினாள். 1835-ல் போஸ்கோ ஷியேரி என்னுமிடத்தில், அமல உற்பவ மாமரி ஆலயத்திற்கு அடுத்திருந்த குருமடத்தில் சேர்ந்து படித்த அவர், ஆறு வருடங்களுக்குப் பின், தமத்திரித்துவத் திருநாளன்று, தமது 26-ஆம் வயதில் குருத்துவ அபிஷேகம் பெற்றார். அபிஷேகத்திற்குப் பிறகு, தூரின் நகரில், சுவாமி கஃபாஸோவின் நிர்வாகத்தில், மேற்றிராசன குருக்களுக்கு உயர் கல்வி வழங்கி வந்த அர்ச். பிரான்சிஸ் அசிசியார் நிறுவனத்திற்கு போஸ்கோ சென்றார். அங்கிருந்தபோது, கஃபாஸோவுடன் சிறைப்பட்டவர்களைச் சந்திக்க அடிக்கடி சென்ற அவர் அங்கே இளம் வயதிலேயே குற்றங்கள் செய்து, தண்டனை அனுபவித்து வந்த சிறுவர்களைச் சந்தித்தார். அந்தக் கைவிடப்பட்ட அனாதைச் சிறுவர்கள் மீது பரிதாபம் கொண்டு, அவர்களுக்காக உழைக்கத் தொடங்கிய அவர், அவர்களுக்கு ஞான உபதேசம் கற்பித்து, அவர்கள் விடுதலையாகும்போது, அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும் உதவினார்.

 இதன்பின் அவர் சிறுவர்களுக்காக, ஆரட்டரி (ஜெப விடுதி) என்னும் அமைப்பைத் தொடங்கினார். அதுவே சுவாமி போஸ்கோவுக்கு நிரந்தரப் பணியாக ஆனது. ஆனாலும் அனைவருக்கும் எல்லா வசதிகளையும் அவரால் செய்து தர முடியவில்லை. சில சிறுவர்கள் பாலங்களின்கீழ் அல்லது கிடைத்த இடங்களில் உறங்கினார்கள். இரு முறை தம் இல்லத்தில் அவர்களைத் தங்க வைக்க அவர் முயன்றார். ஆனால் அதில் பல பிரச்சினைகளைச் சந்தித்தார். ஆயினும் அவர் மனந்தளராமல், தம் தாயுடன் சேர்ந்து, வால்டோக்கோ சேரியில் தாம் வாடகைக்குப் பிடித் திருந்த மூன்று அறைகள் உள்ள வீட்டில் சிறுவர்களைத் தங்க வைத்தார். 1852-ல் 36 ஆக இருந்த சிறுவர்களின் எண்ணிக்கை 1861-ல் 800 ஆக உயர்ந்தது.

சிறுவர்களால் போஸ்கோ பல தொந்தரவுகளுக்கும் ஆளானார். அரசியல்வாதிகளிடமிருந்தும் காவல் துறையினரிடமிருந்தும் அவருக்குப் பல பிரச்சினைகள் வந்தன. அவரைக் கொல்லவும் கூட சில முயற்சிகள் நடந்தன. ஆனால் தேவ பராமரிப்பின்படி, சரியான சமயங்களில் அவருக்குத் துணையாக வந்த ஒரு பெரிய நாயின் உதவியால் அவர் எப்போதும் காப்பாற்றப்பட்டார்.

அவருடைய பாதுகாப்பில் வளர்ந்த இளைஞர்களான சில சிறுவர்கள் அவரைப் பின்பற்றி, கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு ஊழியம் செய்ய முன்வந்தனர். இதுவே சலேசிய நிறுவனத்திற்கு விதையானது. இதற்கான விதிமுறைகளை போஸ்கோ 1857ல் உருவாக்கினார். 1859-ல் அவர் அனுபவம் மிகுந்த குருவான விட்டோரியோ அலாஸோனாட்டி என்பவரையும், 15 குருமாணவர் களையும் கொண்டு அர்ச். சலேசியத் துறவற சபையை ஸ்தாபித்தார். அவர் உருவாக்கிய சபைச் சட்டத் தொகுப்பு 1873-ஆம் ஆண்டில் பாப்பரசர் ஒன்பதாம் பத்திநாதரால் அங்கீகரிக்கப்பட்டது.

1871ல், போஸ்கோ. மார்னீஸ் என்னும் மலைக் கிராமத்தில் மேரி மஸரெல்லோவுடனும், சிறுமிகள் குழு ஒன்றுடனும் பணியாற்றினார். இந்தச் சிறுமிகளுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் துறவற சகோதரிகளின் குழு ஒன்றை ஸ்தாபித்தார். இவர்கள் கிறீஸ்தவர்களின் சகாயமாகிய மாமரியின் புதல்வியர் என்று அழைக்கப்பட்டார்கள்.

போஸ்கோ 1853 முதல் 1984 வரை ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைகள் எந்த அளவுக்கு மிகச் சிறந்தவையாக இருந்தன என்றால், அவர் இறந்தபின் பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் 1949-ஆம் ஆண்டில், அவரைக் கத்தோலிக்க அச்சு வெளியீட்டாளர்களின் பாதுகாவலராகப் பிரகடனம் செய்தார். சலேசிய சபையினர் சில நாடுகளில் வேதபோதகப் பணிக்காக அனுப்பப்பட்டார்கள். குறிப்பாக. 1875 அக்டோபரில், முதல் வேதபோதகர்கள் அர்ஜெண்ட்டினாவுக்குச் சென்றார்கள்.

ஜான் போஸ்கோ, 1888, ஜனவரி 31 அன்று மரித்தார். அவரது புனிதப்பட்ட விசாரணையில் அவரது சபையினர் அவரது அர்ச்சியசிஷ்டதனத்திற்கு ஏராளமான சான்றுகளை அளித்தார்கள். பாப்பரசர் 11-ஆம் பத்திநாதர் 1929 ஜூன் 2 அன்று அவருக்கு முத்திப்பேறு பட்டமும், 1934 ஏப்ரல் 1. உயிர்ப்பு ஞாயிறன்று அர்ச்சியசிஷ்டவர் பட்டமும் வழங்கினார்.


நன்றி: மாதா பரிகார மலர் - ஜனவரி-பிப்ரவரி 2024

சனி, 13 ஜனவரி, 2024

அர்ச். கொந்திறான் - ST. GONTRAN.

 மார்ச் மாதம் 28-ம் தேதி.

அர்ச். கொந்திறான் இராசா


ST. GONTRAN.

கிளோத்தேமென்னும் பிரெஞ்சு இராசாவின் குமாரனாகிய அர்ச்சியசிஷ்ட கொந்திறான் மிகப் பேர்பெற்ற குளோவிஸ் இராசாவுக்கும் அர்ச்சியசிஷ்ட குளோத்தில்தம்மாளுக்கும் பேரனாய் இருந்தார். அவருடைய தகப்பனாகிய இராசா இறந்த பிறகு தன் சகோதரர்களோடு இராச்சியத்தைப் பங்கிட்டு ஒர்லெயான் பகுதிக்கும் புர்கொஞ் பகுதிக்கும் இராசாவானார். தன் சகோதரர்களால் அவர்களோடும் லொம்பாரென்னும் மக்களோடுஞ் சண்டை போடக் கட்டாயப்பட்டு வெற்றி கொண்டிருந்தாலும் வெற்றி பெற்றவர்களைத் தயவோடே நடத்தித் தன் சகோதார்களுடைய மக்களை ஆதரித்துச் சமாதானத்திற்குரிய சாந்த குணத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார்.

 தமது பிரசைகளை பாக்கியவான்களாக்க மாத்திரம் ஆசைப்பட்டு நல்ல தகப்பனாரைப்போல் அவர்களை விசாரித்து நடத்துவார். அவரிடத்தில் தயை  பத்தி விசுவாசம் நிறைந்ததினால் தரித்திரர்களை மிகுந்த தயவோடு விசாரித்து அவர்களுக்கு மிகுந்த தர்ம நன்மைகளைச் செய்து கொண்டு வருவார்.

விசேஷமாய்த் தொற்று வியாதி காலத்திலும் பஞ்சத்திலும் எளியோர்கள் பேரிலும் மற்றவர்கள் பேரிலும் அவருடைய பிறசிநேகம் மிகவும் விளங்கினது. வியாதிக்காரர்களுக்கு குறைவற்ற உதவி செய்யப்படும் பொருட்டு அவர் கண்டிப்பான கட்டளை இட்டதுமல்லாமல் தமது செபங்களினாலும் ஒருசந்தி முதலான தவங்களினாலுந் தேவ கோபத்தைத் தணிக்கவும் பிரயாசைப் படுவார். அந்த ஆக்கினை தமது பாவங்களினால் வந்ததென்றெண்ணி அதை ஒழிக்கும்படி இரவும் பகலுந் தவத்தினால் தம்மைச் சர்வேசுரனுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார். அவருக்குப் பிறந்த பிள்ளைகளெல்லாரும் இள வயதிலே மரித்திருந்தாலுந் தமது இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்ள வேறு பிள்ளை இல்லையென்று அவர் கண்டிருந்தாலும், அதினால் புத்தி மயங்காமலுஞ் சுகிர்த ஒழுக்கம் விடாமலும் பொறுமையோடே தேவசித்தத்திற்குக் கீழ்ப்படிந்து சர்வேசுரனுக்குப் பத்திப் பிரமாணிக்கமாய் இருந்தார்.

போர்ச் சேவகர்களுடைய துர் நடத்தைகளை அடக்க அவர் மிகவும் விவேக முள்ள நல்லொழுக்கக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவரிடத்தில் நீதி நியா யப் பற்றுதலிருந்தமையால் பாதகங்களைக் கண்டிப்பாய்த் தண்டிப்பார். ஆயினும் தமக்கே செய்யப்பட்ட குற்றங்களை மிகுந்த தயவோடே பொறுப்பார். பிறே தெகொந்தென்னுங் கொடிய இராக்கினி தம்மைக் கொல்ல அனுப்பின இரண்டு கொலைப்பாதகர்களில் ஒருவனை மாத்திரம் சிறையிலே போட்டு, மற்றொருவன் ஓர் கோவிலில் அடைக்கலமாய்ப் போனதைப் பற்றி அவனை விடுதலையாக்கினார். தம்மைக் கொல்ல அனுப்பியிருந்த இராக்கினிக்கும் பொறுத்தல் கொடுத்து அவளிடத்தில் பழிவாங்காமலும் அவளைப் பகையாளிகளுக்குக் கையளியாமலும் ஆதரித்துக் காப்பாற்றினார். அரசருக் குரிய பெருந்தன்மையுடன் சிறப்பான அநேகங் கோவில்களையும் மடங்களை யும் கட்டுவித்தார். மேற்றிராணிமார்களை மிகுந்த வணக்கத்தோடே சங்கித்து அவர்களைத் தகப்பன்மார்களாக எண்ணி அவர்களுடைய புத்தி யோசனைக ளைக் கேட்டு அனுசரிப்பார். சுகிர்த சற்குணமுள்ள இந்த நல்ல இராசா முப்பத்திரண்டு வருஷம் ஆட்சி செய்த பின்பு 595-ம் வருஷத்தில் அர்ச்சியசிஷ்டராக மரித்துத் தாம் கட்டுவித்திருந்த ஓர் கோவிலில் அடக்கஞ் செய்யப்பட்டார். அவருடைய கல்லறையில் நடந்த அநேகம் புதுமைகளை டூர்ஸ் நகரத்து மேற்றிராணியாராகிய அர்ச். கிறகோரியார் எழுதி வைத்தார்.

கிறீஸ்துவர்களே! இந்த அர்ச். இராசாவிடத்தில் எத்தனையோ புண்ணியங்கள் விளங்குகின்றன. நீதியுள்ள சண்டையில் அடைந்த வெற்றிகளால் பிற தேசங்களை அபகரிக்கத் தேடாமல், தமது பிரசைகளை மகிழ்விக்க மாத்திரம் விரும்புவார். அப்படியே பெரியோர்கள் பிறர் உடமையை அபகரிக்கத் தேடாமல், தங்கள் சொந்தப் பொருளைக்கொண்டு தர்மங்களைச் செய்யக் கடவார்கள். விசேஷமாய் இந்த அர்ச்சியசிஷ்டவரைப்போல் கொள்ளை நோய் பஞ்சம் முதலிய பொதுத் துன்பம் வருகிறபோது, தரித்திரர்களுக்கும் வியாதிக் காரர்களுக்கும் கூடியமட்டுந் தர்மஞ் செய்ய முயற்சி பண்ணக்கடவார்கள். இராசாக்கள் தங்கள் இராச்சியத்தைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுவிடவுந் தங்கள் சந்ததி இராசாங்கத்திலே நீடித்திருக்கவும் ஆசைப்படுகிறது வழக்க மானாலும் பத்தியுள்ள இந்த இராசா தன் மக்கள் எல்லாரும் இளவயதில் சாவதைக் கண்டு பொறுமையோடே தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தாரே. நீங்களோவெனில், உங்கள் பிள்ளைகள் இறந்து போகிற சமயத்திலே தேவ சித்தத்திற்கு விரோதமாய் முறையிட்டுச் சர்வேசுரனைத் தூஷணிப்பது எவ்வளவு பாவம்!

பிள்ளையில்லாதவர்கள் தேவசித்தத்திற்கு விரோதமாய் முறைப்படுகிறதும், தங்களுக்குப் பிள்ளைகள் உண்டாகும்படிக்கு வேதத்திற்குத் துரோகமான காரியங்களைச் செய்கிறதும் அவர்கள் ஆத்துமத்திற்குத் தின்மையாகு மொழிய நன்மையாகமாட்டாது. தக்க முறையாய்ச் சர்வேசுரனிடத்திலுந் தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்டர்கள் மூலமாகவும் பிள்ளை வரம் கேட்ட பின்பு, அதற்குத் தேவ சித்தம் இல்லாமற் போனால் பொறுமையோடே கீழ்ப்படிந்து, ஓர் அநாதைப் பிள்ளையை தனக்குப் பிள்ளையாகச் சுவீகரித்துக் கொண்டு வளர்ப்பது உத்தம புண்ணியமாகும். இந்த இராசா தம்மைக் கொலை செய்விக்கத் தேடினவளுக்கு முதலாய் மன்னிப்பு கொடுத்து நன்மை செய்தார். அப்படியிருக்கத் தனக்குச் சொல்லப்பட்ட சில தூஷணம் முதலான அற்ப முகாந்தரங்களைப்பற்றி, மாறாத பகை வர்மம் வைத்திருப்பவர்கள் தேவ கற்பனை மீறுவதற்கு என்ன நியாயஞ் சொல்லக்கூடும். அவர்கள் தங்கள் பாவங்களுக்குத் தேவனிடத்தில் பொறுத்தலை அடையும் படி தாங்களுந் தங்கள் பகையாளிகளுக்கு மெய்யாகவே பொறுத்தலைக் கொடுக்க வேண்டுமென்பது திண்ணம்.

திரிகால ஜெபம் - The Angelus





(இந்த ஜெபத்தை முழங்காலிலிருந்து வேண்டிக்கொள்ள வேண்டும். ஆனால் சனிக்கிழமை சாயந்திரமும், ஞாயிற்றுக்கிழமையிலும் இதை நின்று கொண்டு சொல்ல வேண்டியது)

ஆண்டவருடைய சம்மனசானது மரியாயுடனே விஷேஷ் சொல்லிற்று.
 அவள் இஸ்பிரீத்துசாந்துவினாலே கர்ப்பிணியானாள். (அருள்)

இதோ ஆண்டவருடைய அடிமையானவள் உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது" (அருள்)

வார்த்தையானது மாம்சமாகி,
எங்களுடனே கூட வாசமாயிருந்தது (அருள்)

முதல்: சேசு கிறீஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.

எல்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! சம்மனசு சொன்னதினாலே உமக்கு குமாரனாகிய சேசு கிறீஸ்து மனுஷனானதை அறிந் திருக்கிற நாங்கள், அவருடைய பாடுகளினாலேயும், சிலுவையினாலேயும் உத்தானத்தின் மகி மையை அடையத் தக்கதாக, எங்களுக்கு அநுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.



பாஸ்கு காலத்தின் திரிகால ஜெபம்

(இது பெரிய சனி மாலை முதல் அர்ச். தமதிரித்துவத்தின் திருநாள் வரைக்கும் நின்றுகொண்டு சொல்லத்தக்கது )

பரலோகத்துக்கு இராக்கினியே ! மனங் களிகூறும் அல்லேலூயா அதேதெனில் பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர் - அல்லேலூயா

திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார் - அல்லேலூயா
எங்களுக்காக சர்வேசுரனை மன்றாடும்- அல்லேலூயா 

எப்போதும் கன்னிகையான மரியாயே அகமகிழ்ந்து பூரிக்கக்கடவீர் - அல்லேலூயா
அதேதெனில் ஆண்டவர் மெய்யாகவே உத்தான மானார் - அல்லேலூயா.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! உம்முடைய திருக்குமாரனுமாய், எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசு கிறீஸ்துவின் உத்தானத்தினாலே உலகங்களிக்கச் சித்தமானீரே. கன்னி மரியாயாகிய அவருடைய திருத்தாயாராலே நித்திய ஜீவியமான பரலோக வாழ்வை நாங்கள் அடையும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும். இந்த 
மன்றாட்டுக்களை யெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுநாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் - ஆமென்.


The Angelus prayer in Tamil (Paschal time)

The Angelus Prayer in Tamil


அருட்கருவிகள் - திரிகால ஜெபம் (The Angelus)

 திரிகால ஜெபம்

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941

இந்த  ஜெபம் காலை. நடுப்பகல், மாலை இம்மூன்று  வேளைகளிலும் சொல்லப் படுவதால் திரிகால ஜெபம் என்றழைக்கப்படுகிறது. நமதாண்டவர் மனித அவதாரமான சம்பவத்தை இது நமக்கு நினைப்பூட்டுகிறது. இந்தப் பக்தி முயற்சிக்கு ஆரம்பம் யாதொன்றும் திட்டமாய் சொல்ல முடியாது. ஆயினும் சில குறிப்புகளை உத்தேசமாய் எடுத்துரைக்கலாம். முன்னாட்களில் ஜனங்கள் எல்லோரும் விளக்கை அனைத்துவிட்டு நித்திரைக்குப் போகும்படி மணிக் கணக்கு சில நேரங்களில் ஏற்பட்டிருத்தது. அது எவ்வாறெனில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டணக்கிலுள்ள பெரிய மணி அடிக்கப்படும் அந்த மணிச் சத்தம் கேட்ட பிறகு, எந்த வீட்டிலும் வெளிச்சம் இருக்கக் கூடாது. ஒருவரும் விழித்து இருக்கக்கூடாது என்ற சட்டம் ஏற்பட்டிருந்தது. நாளடைவில் இந்த மணியே கிறிஸ்தவ தேசங்களில் இராச் செபத்துக்கு ஜனங்களை அழைக்கும் அடையாளமாயிற்று. 

காலையில் மணி அடித்தவுடன் சமாதானத்துக்காக மூன்று பர. மூன்று அருள் நிறை மந்திரம் சொல்லும்படியாக முதன் முதல் 1318-ம் ஆண்டில் இத்தாலியா தேசத்தைச் சேர்ந்த பார்மாவில் உண்டான கட்டளையே, அதிகாலை மணி அடித்து ஜெபம் சொல்வதற்கு ஆரம்பம் என்று கூற நியாயமுண்டு, மத்தியான வேளையில் மணி அடித்தது. ஆரம்பத்தில் வெள்ளிக் கிழமைகளில் மாத்திரம் நமதாண்டவருடைய பாடுகளின்பேரில் தியானிக்க வேண்டுமென்று இது ஜனங்களுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டு வந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, மற்ற நாட்களிலும் மத்தியான மணி அடித்துக் காலை, மாலை சொல்கிற ஜெபங்களையே சொல்லும்படி, 1456-ம் ஆண்டின் 3-வது கலிஸ்துஸ் என்னும் பாப்பானவர் கட்டளையிட்டார்.

துவக்கத்தில், அருள் நிறை மந்திரத்தின் முதற்பாகத்தை மும்முறை ஜெபிப்பதே திரிகால ஜெபமாயிருந்தது. திரு ஸ்தல மீட்புக்காக இது கட்டளையிடப்பட்டது. நாளடைவில்தான் இப்போது இருக்கிற பிரகாரம், மூன்று வசனங்களும், மூன்று அருள் நிறை மந்திரமும், மன்றாட்டும் சேர்த்துச் சொல்கிற வழக்கம் உண்டானது. ஒவ்வொரு நாளும் மும்முறை நமதாண்டவரின் மனித அவதாரத்தை ஞாபகப்படுத்தி நமது சீவியமும் தஞ்சமும் மதுரமுமாகிய தேவதாயின் சலுகையைத் நேடுவதற்கு நம்மை ஏவித் தூண்டுகிற இந்த ஜெபம் வெகு பிரயோசனமானதென்று சொல்லத் தேவையில்லை.

பாஸ்கு காலத்தில் அதாவது உயிர்த்த சனிக்கிழமை மாலையிலிருந்து அர்ச் தமதிரித்துவத்தின் திருநாள் வரைக்கும் “ஆண்டவருடைய சம்மனசானது" என்னும் செபத்துக்குப் பதிலாக, "பரலோகத்துக்கு இராக்கினியே மனங்களிகூரும்" என்னும் ஜெபத்தைச் சொல்லிவருகிறோம். 596-ம் ஆண்டில். அர்ச். கிரகோரியார் பாப்புவாயிருந்த பொழுது உரோமை நகரில் உண்டான கொள்ளைநோய் அகன்று போகும்படியாக அர்ச். பாப்பானவரும் விசுவாசிகளும் ஜெபித்துக்கொண்டு சுற்றுப்பிரகாரமாய் வருகையில், வானத்திலிருந்து சம்மனசுக்கள் இந்த வசனங்களைப் பாடினார்கள் என்றும், அந்த கணமே கொள்ளை நோய் விலகிப் போயிற்றென்றும் சிலர் சொல்லி இருக்கிறார்கள். ஆணால். இந்த ஜெபம் மத்திய நூற்றாண்டு காலத்தில் உண்டானதென்று மாத்திரம் நிச்சயமாய்ச் சொல்லக்கூடும்.

பலன்கள்: 


திரிகால ஜெபம் சொல்கிற ஒவ்வொரு தடவைக்கும்  
நூறு நாள் பலனும், அநுதினமும் மும்முறை சொல்லி வருகிறவர்களுக்கு மாதக்கடைசியில் பரிபூரண பலனும் 1724-ம் ஆண்டிலேயே, 13 ம் ஆசிர்வாதப்பர் என்னும் பாப்பானவர் கட்டளையிட்டருளினார். இந்தப் பலன்களை அடைவதற்கு நியமித்திருந்த நிபந்தனைகளை 13 ம் சிங்கராயர் 1884 in ஆண்டில் மாற்றி இலகுவாக்கினார். இதனிமித்தம் இப்பலன் களை அடைவதற்கு அவசியம் முழந்தாளிலிருந்து மணிச் சத்தம் கேட்கிற வேளையில் திரிகால ஜெபம் சொல்லவேண்டுமென்று நிபந்தனை யில்லை. சனிக்கிழமை சாயந்திரமும் ஞாயிற்றுக் கிழமையும். நீங்கலாக மற்ற நாட்களில் முழந்தாளிலிருந்து சோல்வதே ஒழுங்கு. ஆயினும் பலனை அடைவதற்கு இது அவசியமில்லை. ஆகையால் பகிரங்கமான பொது ஸ்தலங்களில் இருக்க நேரிடும் காலங்களிலும் இத்த ஜெபத்தைச் சொல்வது எளிதாயிருக்கிறது. மேலும், மணிச்சத்தம் கேட்கையில் ஜெபித் தால்தான் பலன் உண்டு என்கிற நிபந்தனையும் எடுபட்டுப் போனதினால், மணிச்சத்தம் கேட்கக்கூடாத இடங்களில் இருப்பவர்களும் காலை, மாலை, மத்தியானம் இந்த ஜெபத்தைச் சொல்லி அதற்குக் குறிக்கப்பட்ட பலன்களை யெல்லாம். அடைந்துகொள்ளலாம். ஆண்டவருடைய சம்மனசானது என்கிற ஜெபம் தெரியாதவர்கள் 5 தடவை அருள் நிறை மந்திரம் சொன்னால், அந்தப் பலன்களை அடையக்கூடும்
.


வெள்ளி, 12 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Isaac

 மார்ச் மாதம் 27-ந் தேதி.

அர்ச். ஈசாக்

St. ISAAC.


அர்ச், ஈசாக் என்பவர் உலகத்தை வெறுத்து, வனாந்தரத்தில் போய் அங்கே கடின தபம் செய்து வாழ்ந்தார். அவருடைய நாளிலே கொன்ஸ்தான்டி னோப்பிள் இராயனாகிய வலேன்ஸ் என்பவன் பதிதனாக இருந்ததினாலே கத்தோலிக்கு சபையார்களுக்கு பற்பல இடைஞ்சல்களைப் பண்ணி, அவர்களுடைய கோயில்களை எல்லாம் மூடிவிடச் சொல்லித் தன் எதிரிகளின் பேரில் சண்டைக்குப் பயணப்பட்டான்.

இப்படி இருக்கையிலே சர்வேசுரன் அர்ச், ஈசாக்குக் கற்பித்ததாவது: நீ இராயனிடத்தில் போய், அவன் கருதிப்போகிற காரியம் அநுகூலமாக வேண்டு மானால், அடைபட்டிருக்கிற தேவாலயங்களைத் திறக்க வேண்டுமென்று சொல்லென்றார். அவ்வாறே அவர் இராயனிடம் போய் நடந்த சேதி சொல்லுமிடத்தில் அவர் ஓர் பைத்தியக்கார னென்று இராயன் அவரைப் புறக்கணித்தான். மறுபடி அவர் சென்று அப்படி பேசினதற்கு இராயன் இசைவது போல் தோன்றினான். ஆயினுந் தன் ஆலோசனைக்காரரிடம் யோசனை கேட்ட போது பதிதர்களாயிருந்த அவர்கள் சொன்ன துர்ப் புத்தியினாலே இராயன் மனது கலங்கிச் சம்மதிக்க மாட்டோம் என்றான்.

மூன்றாம் முறையும் ஆண்டவர் கட்டளையிட்டபடி யே அர்ச், ஈசாக்கு இராயனிடத்தில் போய்ப் பேசிய போது, இராயன் கோபித்து அவரைப் பிடிக்கவும் முட்புதரில் தள்ளிப் போடவுங் கட்டளையிட்டான். ஆயினும் அவர் மீண்டும் திரும்பி வந்து சொன்னதாவது : நான் சொன்ன காரியத்திற்கு நீர் உடன்படா திருந்தால், இப்போது நீர் தொடுக்கப் போகிற சண்டையிலே உமது இராணுவமெல்லாம் நிர்மூலமாய்ப் போவதுந் தவிர எதிரிகள் உம்மைப் பிடித்து அக்கினி யிலே சுட்டுப்போடுவார்கள் என்றார். இராயன் தபோதனர் சொன்னதை நம்பாமல், அவரைக் கோபித்து காவலிலே வைக்கக் கட்டளையிட்டு, நாம் சண்டைக்கு போய் வந்த பிறகு இந்த முனிவர் பொய்யான தீர்க்கத் தரிசனஞ் சொன்னதினாலே இவனுக்கு ஆக்கினையிடுவோம் என்று சொல்லித் தன் பயணந் தொடர்ந்து பாளையத்திற்குப் போனான். அங்கே அவன் சண்டை தொடுத்த போது, அர்ச். ஈசாக் சொன்னபடியே சத்துருக்களாலே அவன் படை யெல்லாம் நிர்மூலமான தன்றி, இராயனோ அவன் கையில் அகப்பட்டான். அவர்கள் இரக்கமில்லாமல் அவனை அக்கினியில் தள்ளி சுட்டுப் போட்டார்கள்.

இந்தச் சேதிகளெல்லாங் கொன்ஸ்தான் டினோப்பிள் என்னும் தலைநகரில் அறியப்பட்ட பிறகு, அங்கே இராயனுடைய கட்டளையின்படியே அர்ச். ஈசாக்கைக் காவலில் வைத்துக் கொண்டிருந்த பெரிய உத்தியோகஸ்தர் அவர் மெய்யான தீர்க்கதரிசியென்று விசுவசித்து, அவருக்குச் சங்கை பண்ணி, அவரைக் காவலிலே நின்று விடுதலையாக்கினதுமன்றி, அவர் இருக்க ஒரு மடமுங் கட்டுவித்தார்கள். அவர் வேறு முனிவர்களோடு அதிலிருந்து தவ முதலிய புண்ணியங்களைச் செய்துகொண்டிருக் கிறபோது, நான்காம் நூற்றாண்டில் அர்ச்சியசிஷ்ட சாக மரணம் அடைந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். ஈசாக் தேவ ஏவுதலால் சொன்ன புத்திக்கு இராயன் உடன்படாதகினாலே அவன் தனக்குப் பெரிய தண்டனை யாகிய தோல்வியும் சாவும் வர இடங்கொடுத்தான். இக்காலத்தி லேயுஞ் சில முறை இப்படிச் சம்பவிக்கின்றது. ஆண்டவர் சம்மனசுக்கள் வழியாகவும், குருக்கள் வழியாகவும், புண்ணியவான் கள் வழியாகவும் பாவிகளுக்குப் புத்திமதி சொல்லி வருகிறார். அவர்கள் சில பாவங்களை விட்டு விடாதிருந்தால் ஆக்கினை வருமென்று அநேகம் விசை அவர்கள் எச்சரித்து வந்தபடியே நல்ல புத்திக்கு அவர்கள் இடங்கொடாதிருக்கிறகினால் தாங்கள் தானே தங்களுக்கு ஆக்கினை வர வழிசெய்கிறார்கள். 

ஆண்டவர் நமக்கு மனச் சுதந்தரங் கட்டளையிட்டதினால், வேண்டுமானால் அந்தந்த நல்ல புத்திக்கு இடங் கொடுக்கலாம். தலையெழுத்தினாலே அந்த நல்ல புத்திக்கு நான் இடங்கொடுக்க விக்கினப்பட்டேன் என்று உலகத்தார் சொல்லுகிறது அபத்தம். தலையெ ழுத்தென்பது பிரம லிபியென்று சொல்லுகிறார்கள். தலையெழுத்து உண்டென்று உலகத்தார் சொல்லுகி றது பெரும் அபத்தமொழிய மற்றப்படியல்ல. 

அர்ச் ஈசாக் காவலிலே இருந்தபோது மிகுந்த கஸ்திப்பட் டிருந்தாலும் அந்தக் கஸ்தி கொஞ்ச நாளிலே முடிந்ததல்லாமல், அது முகாந்தரமாக இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் அவருக்கு மிகுந்த நன்மை வந்தது. அவ்வண்ணமே நீங்கள் சர்வேசுரனைக் குறித்துக் கஸ்தி அனுபவித் தால் இவ்வுலகத்திலேயாவது மறுவுலகத்திலேயாவது அதனால் உங்களுக்குத் தப்பா மல் நன்மை வருமென்று உணரவேண்டும்.

Lives of Saint in English 2 - Saint Colombe

 Virgin and Martyr in Sens (circa 273).

Celebrated on December 31.

Of Spanish origin, the holy martyr, whose life we will summarize based on Acts written in the 8th century, should not be confused with another saint of the same name. This other saint, also a virgin and martyr, is highly venerated in Cordoba, especially, and died in 853, nearly six centuries later. The account of the passion of the Senonian martyr has not reached us in its entirety, especially not in its original text, which provided more accuracy in its details. Added to the ancient version are episodes that seem inspired by other martyr passions. Here again, we recount the tradition without being able to affirm the historical truth of each detail.

Saint Colombe, instructed by the Holy Spirit.

Colombe was born in the 6th century, under the sky of Spain, to a noble but pagan family. Nevertheless, the Holy Spirit chose the child as a chosen bride.

From her birth, he filled her with his light and love. By divine instinct, Colombe, still in the cradle, knew the vanity of idols. When they tried to make her worship them, she expressed her repugnance with such cries and moans that they dared not force her. "It's just a passing whim," they said, and willingly forgave her.

However, the horror that the young virgin felt for idols grew within her with age. She even shared her feelings with her playmates: Augustin, Sanctien, Béate, all of whom were to be placed on the altars and venerated by the Church of Sens on September 7.

One day, they learned that the worship of the true God was growing in Gaul, amidst bloody persecutions. Urged by grace, they secretly fled, leaving behind their wealth, homeland, and parents forever.

Two thirsts quenched.

During this long journey, exhausted and thirsty, they stopped when they could no longer go on. Colombe, kneeling, prayed to the Master of the earth and waters. She had not yet risen when a clear spring gushed at her feet.

But the devout travelers still craved the living waters that spring forth to eternal life. It was in Vienne, in Dauphiné, that they could quench their thirst. There, they were instructed in the mysteries of the faith, then baptized, becoming the children of Christ and the Church.

How one sanctifies oneself and becomes an apostle.

The neophytes, to better understand the sacred truth, subjected their bodies to fasting and disciplines. Their souls, liberated from the yoke and obscurities of the flesh, persevered in contemplation long into the night. Thus, their prayers and examples had strengthened the Viennese Christianity when God called them to other labors.

Colombe, increasingly enamored of the truth, learned that it had further developed in the Senonian region, and she led her companions there.

In Sens, the young travelers were again an edification for the faithful. They devoted themselves to penance and prayer day and night. They went on pilgrimages to seek virtue at the tombs of martyrs.

The crown of martyrdom is denied to Saint Colombe.

At that time, Emperor Aurelian visited Gaul, and he stopped in Sens. To earn his favor, the magistrates denounced Colombe and her companions as the most fervent proselytes of Christianity. The tyrant summoned the audacious ones to his court and condemned them all to the ultimate punishment. However, out of respect for her birth and nobility, he wanted to save Colombe. Led with her companions outside the city walls, the virgin saw them all die, joy on their faces, hope in their hearts. But when it was her turn to present her head to the executioners, she was chained and taken to a dungeon located, according to tradition, at the site of the Sainte-Colombe-la-Petite church, at the corner of Grande-Rue and Rue de l'Ecrivain.

Thus, the crown of martyrdom escaped her just when she thought she could feel it on her forehead. At this thought, torrents of tears flowed from the eyes of the young girl. Aurelian believed she was shaken in her faith, and he convinced himself that a little anger would be enough to overcome her. Therefore, he had the virgin brought back before him.

Saint Colombe appears before the emperor.

The dialogue that unfolds between the tyrant and the young Christian resembles several others found in the Acts of the Martyrs. It is always, on one side, the initially insinuating tone that will be followed by violence; on the other side, firmness, both gentle and unyielding, resisting with serenity both flattery and threats.

- What is your name? the emperor said, casting an irritated look at Colombe.

And she replied calmly:

- My name is Colombe. Your anger does not frighten me, for the love of Christ strengthens me.

- This love for Christ is your condemnation, Aurelian retorted. But why let yourself be deceived by false beliefs?

- It is your religion that is false, while my faith rests on the truth. I worship the one God who created us in His image. I worship and confess Jesus Christ, the eternal Son of the Father, who became man to save us...

- And thus, you defy our decrees that order the worship of only the gods of the empire?

- These gods are the work of your hands. They will perish, and their worshippers with them. Burn these vain images, inventions of the demon, who, through this senseless worship, wants to attach your hearts. As for me, I give all honor and glory to the God of truth, to Jesus Christ, who gives eternal life.

- But, unfortunate child! Will you prefer these illusions to the sweet joys that your youth and illustrious birth can provide? Become faithful to our gods, and you will see the highest dignitaries of my court vie for your hand.

The prudent virgin did not want to listen further to the seductive serpent.

- The examples of my Jesus teach me to scorn your dangerous offers, she said to the emperor. Could I leave a divine spouse to take a mortal one? No, I will not be foolish enough to exchange the joys of eternity for a day's pleasure. You who want to seduce me will suffer endlessly with Satan, your master, if, before you die, you do not bear witness to the truth.

- That's too many words! Sacrifice to the gods, or I will have you dishonored and perish in the flames.

- God is good and powerful; He will grant me to go to martyrdom still a virgin.

An ironic laughter greeted these words, and Colombe was immediately locked in one of the cages of the amphitheater. This spectacle place, elliptically shaped, was located at the site later called "le Clos des Arènes."

A bear serves God against the impious.

Meanwhile, Aurelian had left the captive to the violence of a young debaucher. Colombe was in prayer when he entered the prison. The virgin stopped him with just one of her looks, where a ray of the divine greatness and majesty, drawn from prayer, still shone.

Recovered from his stupor, the guilty one advanced, but Colombe recoiled invoking the name of Jesus. Immediately, a bear appeared between the victim and her persecutor; the animal overcame the latter and lifted its gaze toward the prisoner, as if to ask her to decide the fate of her tormentor.

- In the name of Him who sent you to save my virginity, said the servant of Christ, spare this guilty one for a moment.

Then, addressing the young man:

- Understand the power and goodness of Jesus Christ, who sends me this animal to rescue me from your outrages. Open your eyes to the truth, say sincerely: "I am a Christian," or else you will become the prey of this ferocious beast.

Fear, the miracle, and undoubtedly the secret wishes of the virgin had changed the soul of the criminal.

- I am a Christian! he said, imploring Colombe's forgiveness; I am a Christian!

Hardly liberated, he proclaimed in the city what had happened to him, repeating endlessly:

- The God of the Christians is the only true God.

The miracle, far from appeasing Aurelian, only enraged him further.

- Let this sorceress be put to death in the flames! he exclaimed in fury.

So, they came to fetch Colombe to lead her to the stake. But the bear was there, lying in front of the door, ready to pounce on the first who entered the cell.

Moreover, the executors of the imperial order rejoiced at this obstacle. The face of Colombe, so gentle, so calm, so full of majesty, had touched them, and the visible protection she had received so far made them fear drawing down the wrath of the Almighty God, who put wild beasts in the service of His own.





Saint Colombe and the Bear in the Flames.

It was reported to the emperor that the bear was defending the condemned, and it was impossible to approach her. Aurelian refused to listen.

- Let her die, he said, or I will make sure all of you perish with her.

The executioners were frightened by the threat of a powerful man. They surrounded the cage where Colombe, kneeling, continued to pray, and soon set it on fire.

As the flames approached and grew, the bear, frightened, licked Colombe's hands and seemed, through cries, to ask her to save him from death. With a sign of the cross, the virgin opened a passage for him in the midst of the bonfire: the animal rushed in, joyful. The frightened crowd let him pass and saw him disappear into the nearby forests.

Soon, from a clear and serene sky, torrents of rain descended, and, like Daniel and his companions of old, Colombe, more beautiful than ever, reappeared, triumphant and unharmed, in the extinguished furnace.

How to describe the joy and enthusiasm of the people at this happy moment? "I am a Christian!" they shouted from all sides. "Let's break our false gods! And let's die for Christ with the blessed Colombe!"

Aurelian condemns Saint Colombe to death.

Those who knew Aurelian knew that, despite everything, Christians could not find favor with him. Indeed, as soon as he learned that Colombe had escaped the fire, he had her brought back to him.

- What tricks do you use, he cried, to escape all the punishments that are prepared for you?

- The victorious arm of Jesus Christ alone protected me from your outrages and cruelty.

- And you push insolence to the point of insulting the emperor! But this time, nothing can take you from my hands. Lictors, untie your bundles. Flog this impious one, tear her with iron nails, and when her body is nothing but a wound, go behead her.

A celestial joy shone in the eyes of the virgin, but out of pity for her persecutor, she left him with these last words:

- I do not fear death. But I tremble at the thought of the sentence that will strike the damned on the last day. You will be among the damned if you do not expiate your crimes in penance.

But Aurelian remained unmoved. Many martyrs had already uttered similar threats in his ears, and he had come to despise them. Thus, the sentence was not changed; Colombe was led to the scaffold.

The Joys of Martyrdom.

She was laid on the rack: her flesh was torn with iron nails, she was flogged to the point of blood, but the generous martyr was not on earth; her spirit was fixed in heaven. Not a complaint came from her lips, not a tear flowed from her eyes.

However, tired of striking, the executioners dragged their victim outside the walls of Sens, north of the village of Saint-Clément, to the fountain of Azon. The virgin's prayer still lasted when they arrived there. Colombe asked for a few moments to finish it. The executioners refused her at first. They were eager to finish their hideous mission as murderers of an innocent. But greed made them overcome this reluctance. The virgin stripped herself of the rich cloak with which she had adorned herself to go to Jesus Christ, her Spouse.

- Take it, she said to them, it is all that remains to me, but at least let me finish my prayer.

And, prostrate on the ground, she invoked for the last time Him for whom she was about to shed her blood, then, rising, she ran to present her head to the soldiers' sword herself, saying:

- My God, forgive them, for they do not know what they are doing.

The sound of the fatal blow mixed with these last words. It was December 31, 273 or 274.

Brutes restore to Saints the honor denied them by men.

Not content with slaughtering the faithful servants of Christ, Aurelian also attacked their corpses. He wanted Colombe's body to be abandoned to the wild beasts. The land on which the virgin had been sacrificed was the property of the noble Aubertus, chief of the legion of Sens. The eyes of his soul and those of his body were closed to the light, as he was blind and a pagan.

One day, while grazing his herds near the fountain of Azon, the slaves saw an ox kneeling beside a bush; from its horns emanated a dazzling light. Surprised, they ran and found Colombe's remains. They prostrated themselves before this chaste body, then hurriedly went to tell their master about the miracle.

As they speak, divine grace descends into Aubertus' heart. The spirit of light reveals to him the futility of idols and inspires in him a burning love for the Church of Christ. The new convert also conceives hope of regaining his sight through the merits of generous Colombe. Led to the sacred remains of the virgin, he bends down to touch them, and immediately, his eyes open and are healed.

In gratitude, he had the body of the Saint honorably buried in his own palace. At the very place where the remains of the martyr had been abandoned, he built a church adjacent to the fountain of Azon and gave for its maintenance a vast meadow designated in ancient documents as "Pré-Aubert."

Popularity of the cult of Saint Colombe in the Middle Ages.

The influx of pilgrims to the tomb of Saint Colombe had become too strong for the secular priests, attached to the church founded by Aubertus, to be able to receive them all. Clotaire II, king of the Franks, erected a monastery there in 620, endowing it with a piece of land from his estate called Cuy. Saint Didier, bishop of Auxerre, and especially Saint Loup, bishop of Troyes, increased the income of the abbey with their generosity. Their example was followed by King Dagobert, who entrusted Saint Eloi with the administration of the monastery's possessions.

Around the middle of the 9th century, the monks, wanting to use part of the wealth of the abbey for the glory of God, replaced the ancient church of Aubertus with a spacious basilica consecrated in 853 by Wénilon, archbishop of Sens, and placed under the common patronage of Saint Colombe, Saint Loup buried nearby, and Sainte Croix. The next day, the bodies of Saint Colombe and Saint Loup were brought out of the crypt where they were enclosed, to be placed in a more accessible location. It is in this abbey that the last competitor of Charles the Simple, Raoul, duke of Burgundy, who died in Auxerre in 936, received burial. He had given it his own crown and enriched it with lands and all kinds of gifts.

During his stay in the province of Sens, Saint Peter Damian († 1072) came on a pilgrimage to the tomb of Saint Colombe, and his works contain the eulogy of the Saint that he delivered, undoubtedly, on this occasion.

In the 12th century, the basilica of Sainte-Colombe was rebuilt for the third time and consecrated by Pope Alexander III on April 26, 1164. The influx of pilgrims was such that thirty thousand were counted that day. Arriving in Sens at the end of September 1163, the Pope extended his stay there until April 1165. It was around the same time that the famous archbishop of Canterbury, Saint Thomas Becket, forced to seek refuge in France to escape the blows of the king of England, Henry II, visited this place.

Like so many other revered relics of our medieval ancestors, those of Saint Colombe were scattered in the 16th century by the Protestant upheaval. Nevertheless, the memory of the glorious victim of Aurelian is still alive not only in Sens but also in more than thirty parishes in France that have chosen her as their patron saint. The feast is celebrated on July 28 in Sens, under the double rite of the second class, and on December 31 in Meaux and Lyon.

In popular art, Saint Colombe is often depicted with attributes such as an angel, a bonfire, a dove, a crown, and a bear.


A. L.


Consulted sources: Mgr Paul Guérin, Les Petits Bollandistes (Paris, 1897). Canon Blondel, Vie des Saints du diocèse de Sens et Auxerre (Sens and Auxerre, 1885). (V. S. B. P., n° 203.)


Source: https://laportelatine.org/spiritualite/vies-de-saints/sainte-colombe

புதன், 10 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Hyginus

சனவரி மாதம் 11-ந் தேதி 
பா. வே 
அர்ச். இஜினார் 
St. Hyginus 


அர்ச். இஜினார் அக்தேன் பட்டணத்திலே பிறந்தார். அவருடைய ஆச்சரியமான புண்ணியங்கள் முகாந்தரமாக அக்காலத்திலிருந்த அர்ச். தெலெஸ் போர் என்னும் பாப்பாண்டவர் இறந்த பிறகு அந்தப் பட்டம் அவருக்கு வந்தது. அவர் அந்தப் பட்டத்திலிருக்கிறபொது உலகத்துக்கு அநேக கடின பொல்லாப்புகள் உண்டாயின. பிற 

மதத்தார் இதைக் கண்டு  சர்வேசுரனுடைய வேதம் பரம்பி மிஞ்சினதினாலே அந்தப் பொல்லாப்பெல்லாம் வருகின்றதென்றும், கிறீஸ்துவர்கள் தங்கள் பலதேவர்களை விட்டுவிட்டதினாலே அந்தத் தேவர்கள் பூலோகத்தின் பேரிலே மகா கோபமாயிருந்து இத்தனை பொல்லாப்புகளை ஆக்கினையாகக் கட்டளையிட்டார்களென்றும், அவர்களுடைய கோபத்தை அமர்த்த இந்த வேதக்காரர் எல்லாரையும் நிர்மூலம் பண்ணவேண்டுமென்றும் அநீயாயமாய்ச் சொல்லித் திருச்சபைக்குக் கனமான கலாபனைகளை  பண்ணினார்கள். அந்தக் கலாப முகாந்தரமாகக் கிறீஸ்தவர்கள் வெகு உபத்திரியப்பட்டாலும் பாப்பாண்டவராகிய இஜினாரென்கிறவர் சொல்லிய புத்தியைக் கேட்டு  வேதத்திலே உறுதியாயிருந்தார்கள். அதல்லாமல் அவருடைய நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்களாகிய வலாந்தீனென்கிறவனும், சேர்தோனென்கிறவனும் ரோமாபுரிக்கு வந்து வேதத்துக்கு விரோதமான அநேகத் தப்பறைகளைக் கிறீஸ்துவர்களுக்குள்ளே போதித்துக் கொண்டு வந்தார்கள், தாங்கள் சொல்லுகிற விஷமுள்ள துர்ப்புத்திகளை நல்ல கிறீஸ்துவர்கள் விசுவசிக்குமாறு தங்களைக் கத்தோலிக்குத் திருச்சபையில் உட்பட்டவர்களைப்போலே கபடாய் மற்றவர்  களுக்குக் காண்பிப்பார்கள். 

அர்ச். இஜினாரென்னும் பாப்பாண்டவர் இவற்றை அறிந்து திருச்சபைக்கு நிருபங்களை அனுப்பி அப்போஸ்தலர்களான அர்ச் இராயப்பர் சின்னப்பர் படிப்பித்த சத்திய வேதத்திலே எல்லாருந் தைரியமும் நிலைமையுமாயிருந்து முன் சொல்லப்பட்ட துர்ப்புத்திகளில் அகப்படாதபடிக்கு பத்திரம்பண்ணினார். மிகுந்த எச்சரிக்கையுள்ள இடையன் ஆடுகளின்மேலே பாய்ந்து வருகிற ஒனாய்க்கு எதிராய்ப்போய் அதைத் துரத்துவதுபோல் பாப்பாண்டவர் அந்த இரண்டு பதிதருடைய பொல்லாப்புக்கு எதிராய்ப் போய் அவர்களைத் துரத்தின படியினாலே தமது ஆடுகளாகிய கிறீஸ்துவர்களுக்கு மோசம் வரவிடாமல் நன்னெறியிற் காப்பாற்றினார். 

மேலும் இந்த பாப்பு ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத் தாய் ஒரே ஞானத்தகப்பன் இருக்க வேண்டுமென்றும், திருச்சபையிலே வழங்கும் மற்ற அநேகஞ் சடங்குகளையுங் கட்டளையிட்டார். அவர் பாப்பு பட்டத்திலே நான்கு வருஷம் மூன்று மாதம் நான்கு நாளும் இருந்தபிறகு கர்த்தர் பிறந்த நூற்றைம்பத்தெட்டாம் வருஷம் அந்தோனினுஸ் என்கிற இராயன் காலத்திலே திருச்சபைக்கு பிறமதத்தார் பண்ணின கலாபத்தில் சனவரிமாதம் பதினோராந் தேதியிலே வேதசாட்சியாகி மகிமையுள்ள மரணத்தை யடைந்தார். 

கிறீஸ்துவர்களே! இப்போது நீங்கள் கேட்ட இந்தச் சுருக்கமான சரித்திரத்திலே ஞான புஷ்பங்களை எடுக்குமாறு அதற்கடுத்த சில புத்திகளைக் கேளுங்கள். இப்போது சொல்லப்பட்ட அர்ச். பாப்பு நாளிலே உலகத்துக்கு வந்த நிற்பந்தங்களை பிறர் கண்டு அவை கிறீஸ்துவர்களுக்குத் தாங்கள் செய்த அநீத உபத்திரியங்களுக்கு ஆக்கினையாக வந்ததென்று ஒத்துக்கொள்ளாமல் சர்வேசுரனுடைய வேதம் பரம்பினதினாலே தங்கள் தேவர்கள் உலகத்துக்கு ஆக்கினையாக அந்தப் பொல்லாப்புகளை வரப்பண்ணினார்களென்று அக்காலத்திலே அவர்கள் சொன்னதுபோல் இக்காலத்திலேயுஞ் சிலர் சொல்வார்கள். அதெப்படி யென்றால் தேவர்கள் தங்களை வணங்குகிறதை அநேகர் விட்டுச் சர்வேசுரனுடைய வேதங் கேட்டதினாலே மழை பெய்ய வில்லையென்றும், பஞ்சம் படை வியாதி முதலான ஆக்கினைகளை உலகத்துக்கு வரப் பண்ணுகிறார்களென்றுஞ் சொல்லுகிறார்கள். ஆனால் அது தப்பிதமாய் இருக்கிறதொழிய நியாமாய் இருக்க வில்லை. அதெப்படி யென்றால் அந்தத் தேவர்களைவிட்டுச் சத்திய வேதங்கேட்கிறது குற்றமானால் அந்தக் குற்றங் கட்டிக்கொண்டவர்களாகிற கிறீஸ்துவர்களை மாத்திரந் தண்டிக்கிறதே நியாயமாய் இருப்பதொழிய அந்தக் குற்றமில்லாதவர்களாகிய புறமதஸ்தர்களைத் தண்டிக்கிறது அநியாயம். பஞ்சம் படை முதலிய பொதுவான நெருக்கடிகள் வந்தால் கிறீஸ்துவர்களும் புறமதஸ்தர்களும் அவதிப்படுகிறார்களென்பதற்குச் சந்தேகமில்லை. ஆகையால் முன் சொல்லப்பட்ட காரணத்தால் அந்தத் தேவர்கள் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவது அநியாயமென்று சொல்லவேண்டும். அநியாயம் பண்ணுகிறவன் மெய்யான தேவனல்ல. அத்தகைய ஆக்கினை எந்த முகாந்தரத்தினால் வருகிற தென்று அறியவேண்டுமானால் இப்போது சொல்லப் போகிறதைக் கேளுங்கள். 

மெய்யான சர்வேசுரனுடைய சொற்படி கேளாதிருக்கிற பாவமே முன் சொல்லப்பட்ட ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும். கிறீஸ்துவனானாலும் பிறனானாலும் ஏதேனும் பாவஞ் செய்தால் அவர்களுடைய பாவத்துக்கு ஆக்கினையாக நியாயத்தின்படியே ஆண்டவர் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவார். இத்தேசத்திலே கிறீஸ்துவர்கள் சிறுபான்மையோர், பிறமதத் தினர் மிகுதியாய் இருக்கிறார்கள். கொஞ்சம்பேருடைய குற்றங்களைப்பற்றிக் கடவுள் திரளான பேரைத் தண்டிப்பாரென்பதைவிடத் திரளான குற்ற வாளிகளின் ஆக்கினையில் அந்தக் குற்றமில்லாத சிலர் வேறு குற்றத்தைப் பற்றி உட்பட்டிருக்கலாமென்பது நியாயம். சனத்தொகையைப் பற்றிக் கிறீஸ்துவர்களிடத்திலே இருக்கிற பாவங்களைவிட பிறரிடத்திலே இருக்கிற பாவங்கள் அதிகம். விசேஷமாய்ப் பசாசைக் கும்பிடுகிற பாவம் அதிகமாய் இருக்கிறபடியினாலே முன் சொல்லப்பட்ட ஆக்கினைகள் வருகிறதற்கு அவர் கள் அதிககாரணமாய் இருக்கிறார்களென்னத்தகும். சத்திய வேதத்துக்கு முழுதும் உட்பட்ட கிறீஸ்துவர்களுடைய இராச்சியங்கள் பிற இராச்சியங்களை விட மிகவும் அதிக செல்வபாக்கிய வல்லமைகொண்டிருக்கிறது. யாவர்க்குந் தெரியும், அதினால் சர்வசந்தேகமுந் தீரலாம். மேலும் கிறீஸ்துவர்களிடத்தில் இருக்கிற புண்ணியங்கள் இத்தேசத்தில் அதிக ஆக்கினைவராத படிக்குஞ் சிலவிசை ஆக்கினை முழுதுந் தீர்ந்துபோகவுங் காரணமாய் இருக்கும். இந்த நிடாயத்தை வேறே தேசங்களில் புறமதஸ்தர்களான சில இராசாக்கள் கண்டு பிடித்துப் பரிசோதித்துப் பார்த்துத் தங்களுடைய இராச்சியங்களில் நடக்கிற சர்வேசுரனுடைய வேதத்துக்கு விக்கினம் பண்ணாமல் இந்த வேதம் பரம்பச் சம்மதித்தார்கள். 

இதன்றியே ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத்தாய் ஞானத்தகப்பன் மாத்திரமிருக்க முன் சொல்லப்பட்ட அர்ச். பாப்பு கட்டளையிட்டா ரென்று சொன்னோமே நீங்கள் எவருக்கேனும் ஞானத்தாய் ஞானத்தகப்பனாய் இருந்தால் அது நல்லதென்று நீங்கள் நினைக்கக்கடவீர்கள், ஆனால் அதற்குண்டான கடனை நிங்கள் தீர்க்கவேண்டும். அதாவது: ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு வேறு யாறும் வேதத்தின் மந்திரங் குறிப்பிடம் படிப்பியாதிருந்தால் ஞானத்தாய் ஞானத்தகப்பன் அவற்றை அவர்களுக்குப் படிப்பிக்கக்கடவார்கள். மேலும் இந்த அர்ச்சியசிஷ்டர் நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்கள் நல்ல கிறீஸ்துவர்கள்போல் வெளியே காண்பித்தாலுந் தங்கள் இருதயத்தில் இருந்த விஷ நிறைந்த துர்ப்புத்தி சொல்லுவார்களே. 

அப்படியே இக்காலத்திலே சில ஊர்களிலேயுள்ள பதிதர், நாடுகளிலே வந்து தாங்கள் மெய்யான கிறீஸ்துவர்களைப்போல் காண்பிக்க கழுத்திலே செபமாலை தரித்துச் சுரூபமும் வைத்து கொண்டு செபம் பண்ணுவதுபோலே திரிகிறார்கள். பத்தியுள்ள அத்தகைய அடையாளங்களை நீங்கள் கண்டு அவர்களுக்கு இடங்கொடுத்துப் பட்சத்தை காண்பித்தபிறகு அவர்கள் சுரூப வணக்கமாகாதென்றுந் தேவமாதாவை வணங்க வேண்டாமென்று. துர்ப் புத்தியாகிய விஷத்தை வீசுவார்கள். ஓனாயானது ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு ஆட்டுக்கிடையிலே போகிறபோது உடனே ஆடுகளைக் கடியாதிருந்தாலும் பிற்பாடு கடித்து வெகு சேதம் வருவிக்கிறாப் போலே இந்தப் பதிதர் செய்கிறார்கள். ஆதலால் அவர்கள் வழியாக உங்கள் ஆத்துமத்துக்கு மோசம் வராதபடிக்கு முன் சொல்லப்பட்ட அர்ச். இஜினாரென்கிவரைப்போலே நீங்கள் பதிதர் மட்டில் மிகவும் எச்சரிக்கையாய் இருப்பதுமன்றியே வேதகாரியங்களிலே ஒருக்காலும் உங்கள் காதிலே விழாத வார்த்தையாகிய நூதனபோதகம் கேள்விப்பட்டால் அதை விசுவசிக் வேண்டாமென்று அறியக்கடவீர்களாக. ஆனால் சாதாரண திருச்சபை படிப்பிக்கிற சத்தியங்களை உறுதியாக விசுவசிப்பதே கடமை.

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 21 அப்போஸ்தலரான அர்ச். மத்தியாஸ். (ST. MATHIAS)

பெப்ரவரி மாதம் 24-ந் தேதி. 
அப்போஸ்தலரான அர்ச். மத்தியாஸ் திருநாள்.
 ST. MATHIAS.

சேசுநாதருடைய பன்னிரண்டு சீஷர்களுக்குள்ளே யூதாஸென்கிற ஒருவன் சேசுநாதரால் அப்போஸ்தலனாகத் தெரிந்துகொள்ளப்பட்டிருந்தாலும், அவன் ஆண்டவரோடு இருக்கிறபோது கர்த்தர் அவனுக்குக் கொடுத்த வல்லமை யினால் அவன் சில புதுமைகளைப் பண்ணியிருந்தாலும் நன்றிகெட்டவனாய் முப்பது வெள்ளிக் காசுக்காகச் சேசுநாதருக்குத் துரோகம் பண்ணி மாசில்லாதவரை அவருடைய சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுத்தான். அத்தகைய பெரிய பாவத்தால் அவன் ஆத்துமமுங் கெட்டு மதியுங் கெட்டுத் தான் செய்த துரோகத்தின் கனத்தைப்பற்றி அவநம்பிக்கைப்பட்டுத் தன்னைச் சகிக்கமாட்டாமல் நான்று கொண்டு நிர்ப்பாக்கியனாய்ச் செத்து நரகத்திலே விழுந்தான் . 

சேசுநாதர் கல்லறையை விட்டு உயிர்த்து மோட்சத்திற்கு எழுந்தருளிப் போன பிறகு அவருடைய சீஷர்களுக்குத் தலைவராகிய அர்ச். இராயப்பர் நேர்த்தியான பிரசங்கம் பண்ணிக் கெட்டுப்போன யூதா ஸென்கிறவனுடைய ஸ்தானத்திலே வேறொருவரை வைக்கவேண்டுமென்று மற்றச் சீஷர்களுடன் சொன்னார். ஆதலால் கர்த்தருடைய எழுபத்திரண்டு சீஷர்களுக்குள்ளே ஆண்டவர் அறிவித்தபடியே அர்ச். மத்தியாஸென்கிறவரைத் தெரிந்து கொண்டார்கள். கர்த்தர் பூலோகத்தில் இருக்கிறபோது அவர் பண்ணின புதுமைகளையும் புண்ணியங்களையும் மத்தியாஸென்கிறவர் கண்டு யேசுநாதருடைய ஞானப் பிரசங்கங்களையும் நல்ல மனதோடு கேட்டதினாலே புண்ணியத்திலே வளர்ந்து மகாத்துமாவாயிருந்தார். இது முகாந்தரமாய் அப்போஸ்தலர் பட்டத்திற்குக் குறிக்கப்பட்டார். 

இத்தகைய மகிமையுள்ள பட்டம் ஆண்டவர் தமக்குக் கொடுத்தார் என்று அர்ச். மத்தியாஸ் கண்டு கர்த்தருக்கு வெகு தோத்திரம் பண்ணினது மல்லாமல் அந்தப் பட்டத்திற்கு உண்டான கடன்களைத் தாம் நிறைவேற்ற சுவிசேஷத்தைச் சுறுசுறுப்போடு சனங்களுக்குப் பிரசங்கித்துச் சத்திய வேதத்தைத் தம்மால் இயன்ற மட்டும் பரப்பப் பிரயாசைப் பட்டார். அர்ச். மத்தியாஸ் முதலில் யூதேயா தேசத்திலே பிரசங்கித்தார். அதற்குப் பிறகு கலிலேயா தேசத்திலே போய் ஆங்கங்கே தான் சொன்ன புத்தி பிரசங்கங் களினாலேயும் பண்ணின ஆச்சரியமான புதுமைகளினாலேயும் அநேகரைச் சேசுநாதருடைய வேதத்தில் உட்படுத்தினார் . 

பின்னும் அத்தேசத்தை விட்டு எத்தியோப்பியா என்னும் பெரிய இராச்சியத் திற்குப் போனார். அவர் அதிலே சத்திய வேதத்தைப் போதிக்கிறபோது பட்ட பிரயாசையினால் அநேகம் பேர் வேதத்தில் உட்பட்டதைக் கண்டு வெகு சந்தோஷப்பட்டார். பசாசு தன் பாரிசமாயிருந்த அநேகம் பேர் தன் ஊழியத்தை விட்டு அர்ச். மத்தியாஸ் சொல்லிய புத்தியைக் கேட் டுச் சர்வேசுரனுக்கு ஊழியம் பண்ணுகிறதை கண்டு காய்மகாரத்சினாலே அந்த அப்போஸ்தலரைக் கொன்றுபோடத் துணிந்தது. அதற்குப் பசாசு சொன்ன துர்ப்புத்தியினால் சில பொல்லாதவர்கள் அர்ச். மத்தியாஸ் குடிக்கிற தண்ணீரிலே விஷத்தைக் கலந்து கொடுத்தார்கள். அவர் அதைக் குடித்திருந் தாலும் புதுமையாகச் சாகாதிருந்தார். பின்பு அக்கியானிகள் கூட்டங்கூடி அவரைக் கல்லால் எறிந்து கொல்ல அநேகம் பெரிய கற்களை அவர்மேலே எறிந்தார்கள். அதினாலே அவர் சாகாதிருக்கிறதைக் கண்டு அவரைச் சிலுவை யில் அறைந்தார்கள். அந்த வேதனை வழியாகவுஞ் சீக்கிரத்திலே அவருக்குச் சாவு வரவில்லையென்று பார்த்து அவர்கள் கடைசியாய் அவர் தலையை வெட்டினார்கள். 

ஆகையால் சேசுநாதர் அனுபவித்த சிலுவை வேதனையும் அர்ச், முடியப்பர் அனுபவித்த கல்லெறி உபத்திரவமும் அப்போஸ்தலராகிய அர்ச். சின்னப்பர் தலை வெட்டப்பட்டு அனுபவித்த பாடும் வேதத்திற்காக அர்ச். மத்தியாஸ் அனுபவித்துக் கர்த்தர் பிறந்த அறுபத்து மூன்றாம் வருஷத்திலே வேதசாட்சியாக மரணமடைந்தார். 


கிறீஸ்துவர்களே! அர்ச். மத்தியாஸென்கிறவர் சேசுநாதரோடு இருந்து கர்த்தருக்கு ஏற்ப  அநேக நாள் நடந்த பிறகு ஆண்டவர் அவருக்கு அப்போஸ்தல பட்டம் கட்டளையிட்டார். சேசுநாதர் உங்களுக்கு இற்றை வரைக்குங் கொடுத்தருளின வரப்பிரசாதங் களைவிட இன்னம் அதிக வரப்பிரசாதங் கட்டளை யிடுவதற்கு நீங்கள் அவருடைய புத்தியைக் கேட்டு வழி செய்ய வேண்டும். ஒரு சேவகன் துரை கிட்டக் காத்திருந்து குறையின்றி அநேக நாள் ஊழியம் பண்ணுகிறபோது, தனக்குத் துரை இனிமேல் சம்பாவனை கொடுக்க வழி பண்ணுகிறானல்லவோ? பின்னையும் அர்ச். மத்தியாஸென்கிறவருக்கு வந்த மகிமையான பட்டத்தை யூதாசென்கிறவன் இழந்துபோனா னென்று நீங்கள் நினைத்து, ஆத்துமப் பிரயோசனம் அடைய வேண்டும். கர்த்தர் பண்ணின எண்ணப்படாத புதுமைகளையும், புண்ணியங்களையும் யூதாசென்கிறவன் கண்டிருந்தாலும், அவருடைய அமிர்தமான பிரசங்கங்களையும் அவன் கேட்டிருந்தாலும், அவர் கொடுத்த வல்லமையால் அவன் அநேகம் புதுமைகளைச் செய்திருந்தாலும், அவன் சாவான பாவத்தினாலே கெட்டு நிர்ப்பாக்கியனாய் நரகத்திற்குப் போனானல்லவோ? 

அதை நீங்கள் அடிக்கடி நினைத்து, உங்களிடத்திலே எத்தனை புண்ணியம் இருந்தாலும், நீங்கள் புதுமைகளைத் தானே பண்ணினாலும் இனிமேல் உங்கள் ஆத்துமத்திற்குப் பாவத்தினாலே மோசம் வருமோவென்று பயந்து, நீங்களே உங்களை நம்பாமல் ஆண்டவர் பேரிலே நம்பிக்கை வைத்தப் பயத்தோடும் எச்சரிக்கையோடும் நடக்கவேண்டும். பலவீனமுள்ளவனும் பலமுள்ளவனும் நடக்கிற போது, பலமுள்ளவன் சேற்றிலே விழுந்ததைப் பல வீனமுள்ளவன் கண்டு, தன்னை நம்பாமல் எச்சரிக்கை யோடு நடப்பா னல்லவோ ? நான் சர்வேசுரனுக்கு இன்னின்ன ஊழியம் பண்ணினேன்; நான் தள்ளப் பட்டால் என்னுடைய ஸ்தானத்திலிருக்கிறதற்கு வேறே ஆள் கிடையா தென்கிற ஆங்காரமுள்ள விசாரத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம்.

 ஏனென்றால், யூதாஸ் தன் பாவத்தினாலே அப்போஸ்தலப் பட்டத்தினின்று தள்ளப்பட்டபிறகு அவனுடைய ஸ்தானத்திலே கெட்டிக்காரரான அர்ச். மத்தியாசை ஆண்டவர் வைத்ததுபோல் உன் பாவத்தினாலே நீ தள்ளப்பட் டால் உன்னைவிடக் கெட்டிக்காரன் உன்னுடைய ஸ்தானத்திலே ஆண்டவராலே வைக்கப்படுவான். கெட்டிக்காரனான ஓர் சேவகன் தன்னுடைய இராசா முன் பாகவும், அநேகந் துரை மக்கள் முன்பாகவுந் தன் வீர சூர செய்கைகளை விபரித்துச் சண்டையிலே இராசாவைப்பற்றி இந்தக் காயங்களைப் பட்டேன் என்று சொல்லுமிடத்தில் வெகு சந்தோஷப் படுவானேயல்லாமல், அவன் பட்ட பிரயாசைக்குத் தக்க வெகுமானத்தையும் பெறுவானல்லவோ? அவ்வாறே அர்ச், மத்தியாஸென்கிறவர் பரமண்டலங்களிலே ஆண்டவருடைய சந்நிதியில் மோட்ச வாசிகள் முன்பாகத் தாம் பட்ட பாடுகளைச் சொல்லி என் சரீரத்தின் மேலே எதிரிகள் எறிந்த கல்லுகளாலே என் உடம்பிலே எத்தனை நோவுகளை யுங் காயங்களையுஞ் சேசுநாதரைக் குறித்துப் பட்டேன். 

எதிரிகள் என்னைச் சிலுவையில் அறைந்தபோதுகர்த்தரைப்பற்றி இத்துணை வேதனையும் உபத்திரவங்களையும் அனுபவித்தேன். தலை வெட்டப் போகிற போது சேசுநாதரைத் துதித்து, இவ்வளவு உபாதை சகித்தேனென்று சொல்லுகிற போது அவர் வெகு சந்தோஷப்பட்டது மல்லாமல், தாம் அனுபவித்த கஸ்திகளுக்குத் தக்க மோட்ச ஆனந்தத்தை அனுபவிக்கிறார்.


 தம்பி தங்கை மாரே! பரமண்டலங்களிலே உங்களுக்கு அத்தகைய சந்தோஷமும் ஆனந்தமும் நிரம்ப வருமாறு நீங்கள் இப்போது கர்த்தரைக் குறித்து புண்ணியஞ் செய்ய பிரயாசைப்படவும், இவ்வுலகத்தில் வருகிற துன்ப துரிதங்களை அவரைப்பற்றிப் பொறுமையோடே அனுபவிக்கவும் வேண்டும்.