Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

வெள்ளி, 8 டிசம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 16 - அர்ச். ஹென்றி வால்போல் சே.ச - St. Henry Walpole. S.J

 'Sanguis Martyrum Semen Christianorum'

(வேதசாட்சிகளின் இரத்தம் கிறீஸ்துவர்களை விளைவிக்கும் வித்து!)


கத்தோலிக்க விசுவாசத்திற்காக உயிர்நீத்தவர்களின் வரலாறு

(இங்கிலாந்து நாட்டில் ஆங்கிலிக்கன் புராட்டஸ்டாண்ட் பிரிவினையின் போது தங்களது சத்திய கத் விசுவாசத்தில் உறுதியாக இருந்து பதிகத்தை மறுத்து தங்களுடைய இன்னுயிரை நீத்தவர்களின் வரலாறு இங்கே வெளியிடப்படுகிறது.)



அது 1581 டிசம்பர் முதல்நாள் அன்று அதிகாலையிலிருந்தே மழை · ஒரே அடை மழை! விடாது பெய்யும் அந்த மழையையும் அலட்சியம் செய்து பெரும் கூட்டம் லண்டன் டைபர்ன் (Tyburn)சிறைச்சாலையின் முகப்பிலே நின்றுகொண்டிருந்தது. வழக்கமாக அங்கே மரண தண்டனை விதிக்கப்படும். மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக நிறைவேற்றப்படும். தண்டனைக் காட்சியைக் காண மக்கள் வருவர். ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக மக்கள் பெருங்கூட்டமாகக் கூடியுள்ளனரே? என்ன காரணம், யார் தண்டனை பெறப் போகிறார்கள்? ஆம்! இன்று லண்டன் மாநகரின் புகழ்பெற்ற பேச்சாளரும் எழுத்தாளரும் சேசு சபை குருவுமான எட்மண்ட் காம்பியன் மரண தண்டனை பெறவிருக்கிறார்.

அங்கே கூடியிருந்த மக்கள் மனதில் “ஐயோ! இப்படி கொடூர தண்டனை பெறுவதற்கு அவர் செய்த குற்றம்தான் என்ன? அரசி ஏற்படுத்தியுள்ள புராட்டஸ்டான்ட் பதிதத்தை ஏற்கவில்லை பாப்பரசரை மறுத்து அரசியே திருச்சபையின் தலைவி என்பதை ஏற்க மறுத்தது இங்கிலாந்து நாட்டில் பாப்புவின் வேதமான கத்.திருச்சபையை அரசுக்கு விரோதமாக போதித்தது இவைகளே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள். இதற்காகத் தானே இங்கே தினமும் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது" என்றெல்லாம் எண்ண அலைகள் ஓடச் செய்வதறியாது திகைத்தனர். தங்களது பொக்கிஷமான கத். விசுவாசம் தங்கள் நாட்டில் அழிக்கப்பட்டு விட்டதே என்ற பரிதாப ஆதங்கம் உள்ளத்தில் எழுந்தாலும் கொடூர தண்டனையைக் குறித்து வாயடைத்தும் போனார்கள்.

இதற்குள் அங்கே ஆரவாரம் எழ, எட்மண்ட் காம்பியன் குரூரமாக இழுத்து வரப்பட்டார். ஒளி வீசிப் பிரகாசமாக ஜொலிக்கும் அவரது முகத்தில் எந்தவிதமான மரண பயமோ வேதனையோ நடுக்கமோ இல்லாததைக் கண்டு மக்கள் கூட்டம் திகைத்தது. அவர் மக்களை ஆசிர்வதிப்பதும், ஏதோ கூறி ஜெபிப்பதும் குழுமியிருந்த மக்கள் கூட்டத்திற்கு பரபரப்பை ஊட்டியது. அவர் தூக்குமரத்தின் அருகே நின்று பேசுகிறார். அதனை கேட்க மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். சப்தம் சரியாக கேட்கவில்லை. "...நான் சத்திய வேதத்திற்காக மரணமடைகிறேன். இங்கிலாந்து அரசிக்காக ஜெபிக்கிறேன்... என் நாடே - இங்கிலாந்து தேசமே... உன் செல்வமான கத்தோலிக்க விசுவாசத்தை பெற்றுக் கொள்..." என்ற அவரது கடைசி பிரசங்கக் குரல் சன்னமாக பலவீனமாக ஒலிக்கிறது

அங்கே கூட்டத்தை விலக்கியவாறு முண்டி அடித்துக்கொண்டு ஒரு இளைஞன் முன்னேறினான். ஐயோ! தமது மனங்கவர்ந்த "காம்பியன் சுவாமி" மரண தண்டனை அடையவிருக்கிறாரே. நாம் சற்று பிந்தி போய் விட்டோமே, அவரது முகத்தை கடைசியாக ஒரு தடவையாவது பார்க்கவேண்டும் என்ற அவனது மனம் பரபரக்க கூட்டத்தை முரட்டுத்தனமாக விலக்கி முன்னேறினான். எரிச்சலடைந்த மக்கள் விலகி வழிவிட "அப்பா! இப்போது முதல் வரிசையைப் பிடித்தாகிவிட்டது. ஐயோ! அங்கே காம்பியன் தூக்கிலிடப்பட்டு விட்டாரே. இதோ அவரது உடல் தூக்குக் கயிறிலிருந்து வெட்டப்பட்டு கீழே விழத்தாட்டப்படுகின்றனவே... ஐயகோ! ஆ! அவரது உடல் கொடுமையாக கை கால்கள் வெட்டப்படுகின்றனவே. ஆ! இதென்னக் கொடூரம்!" அந்த இளைஞனின் உள்ளம் திருதிருவென எரிந்தது. கழிவிரக்கத்தால் துவண்டது. "ஆ! ஏன் இந்த கொடுமை. விசுவாசத்திற்கு பிரமாணிக்கம் காத்ததல்லவா! அப்படியானால் விசுவாசம் எத்துணை மேலானது, உயர்ந்தது, உன்னதமானது. மரணத்தைவிட சிறந்தது... விசுவாசம்". அவனது மனம் விசுவாச உறுதியால் நிரம்பியது. அச்சமயம் "ஆவென்ற" அலறல் அழுகைக் குரல் மக்களிடமிருந்து பெருக்கெடுக்க சலசலப்பு தோன்றியது.

அப்போது சற்று தூரத்தில் உடல் வெட்டப்படும் வேதசாட்சியின் இரத்தத் துளிகள் பீறிட்டு பாய்ந்து நாலா திசையிலும் சிதறி பூமியை நனைத்தது. அதன் ஒரு துளி முன் வரிசையில் மனவேதனையோடும் அச்சத்தோடும் நின்றுகொண்டிருந்த அந்த இளைஞனின் முகத்தில் தெறித்து விழுந்தது. வேதசாட்சியின் புனிதமான இரத்தம் தம் மீது தெறித்ததைக் கண்ட அந்த 23 வயதே நிரம்பிய இளைஞன் பதட்டமடைந்தாலும் மிகுந்த பக்தியோடு தமது கைக்குட்டையால் அதனை மெல்ல துடைத்தான். பொக்கிஷமென அதனை பக்தியோடு தம்மிடம் வைத்துக்கொண்டான். அந்த கணத்திலேயே அவனது உள்ளம் உருகத் துவங்கியது. விசுவாச உறுதியடையத் துவங்கியது.... ஆம்! அவன் மாறினான். உலக வாழ்வில் திளைக்க விரும்பிய அவன் இன்று முழு மனமாற்றம் அடைந்தான். அவன் வாழ்வு தலைகீழாகிப் போனது. ஆம்! அவனும் இன்னும் 10 ஆண்டுகளில் தன்னையே சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து குருவாகி, அங்கே கொல்லப்பட்ட காம்பியன் சுவாமியைப் போலவே சுத். விசுவாசத்திற்காக இதே இடத்தில் இதே சித்திரவதையைப் பெற்று மரணமடையவிருக்கிறான். அந்த இளைஞன் யார்? அவன்தான் ஹென்றி வால்போல் ஆம். வேதசாட்சியான அர்ச். ஹென்றி வால்போல் சே.ச.

இளமைப் பருவம்

ஹென்றி வால்போல் லண்டனை அடுத்த நார் ஃபோல்க் (Norfolk) நகரைச் சேர்ந்த கிறீஸ்டோபர் வால்போல் என்பவரின் மகனாக 1558 அக்டோபர் திங்களில் பிறந்தார். தந்தை பெரிய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும், ஹென்றியின் மாமன் ஜான் வால்போல் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தார். 1720-ல் இங்கிலாந்தின் முதல் பிரதம மந்திரியான சர் இராபர்ட் என்பவரின் கொள்ளுத் தாத்தாவான கால்பட் வால்போல் என்பவர் ஹென்றியின் நெருங்கிய உறவினர். புகழ்பெற்ற குடும்பத்தில் வந்த ஹென்றி பிறந்தபோது அரசி மேரி ஆட்சியில் இருந்தாள் எனவே சுத்தோலிக்கர்கள் பயமின்றி வாழ்ந்தனர். 8வது வயதில் நார்விச் இலக்கண பள்ளிக்கு அனுப்பப்பட்டார். கல்வியில் சிறந்து விளங்கிய ஹென்றி லத்தீன், கிரேக்கம், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். இயல்பாகவே பாடல்கள் எழுதுவதில் திறம் பெற்றிருந்தார்.

அவன் பள்ளியில் படிக்கும் காலத்தில் இங்கிலாந்தில் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான அலைகள் எழுத் துவங்கின. பாப்பரசருக்கெதிரான செயல்கள் மீண்டும் அரங்கேறத் துவங்கின. தனது 17வது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அர்ச். பீட்டர் சுல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்கலானார். அச்சமயத்தில் ஆட்சி பொறுப்பில் வந்த எலிசபெத் அரசி கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிரான செயல்பாடுகளால் புராட்டஸ்டாண்ட் பதிதம் மீண்டும் தலைதூக்கியது. தங்கள் கத்தோலிக்க விசுவாசத்திற்கு பிரமாணிக்கமாயிருப்பவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அரசியான எலிசபெத் தனது தந்தை 8-ம் ஹென்றியையே மிஞ்சும் அளவில் கலாபனையைத் தூண்டி விட்டாள். இங்கிலாந்தில் திருச்சபையின் தலைவர் அரசியே என்ற சட்டத்தை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு உறுதி மொழி வழங்கவேண்டும். அப்படி உறுதிமொழி வழங்கிய மாணவர்கள் மட்டுமே தங்கள் கல்லூரி பட்டப்படிப்பில் தகுதியானவர்களாக உயர்த்தப்பட்டார்கள். இதனை சற்றும் விரும்பாத ஹென்றி அப்படி தேவதுரோகமான சட்டத்தை ஏற்றுப் பட்டம் பெறுவதைவிட, பட்டமே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார். எனவே கல்லூரியி விருந்து வெளியேறி 1579-ல் தமது 21-வது வயதில் Grays Inn என்ற விடுதியில் பணியாளராக சேர்ந்தார். அந்த ஆண்டில் தான் காம்பியன் குருப்பட்டம் பெற்று, இங்கிலாந்தில் கத். விசுவாசத்தை மக்களிடையே போதிப்பதற்கு இரகசியமாக இங்கிலாந்தில் நுழைந்தார்.

Grays Inn என்ற அந்த விடுதி கத்தோலிக்க இளைஞர்கள் ஒன்று சேரும் இடமாகத் திகழ்ந்தது. அங்கே பணக்காரக் குடும்பத்து இளைஞர்கள் ஒரு இயக்கமாகச் சேர்ந்து Douai மற்றும் உரோமையிலுள்ள ஆங்கில கல்லூரியில் பயிலும் குருமாணவர்களுக்கு உதவி செய்து வந்தனர். அந்த வகையில் காம்பியன் சுவாமியின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் ஆங்கிலிக்கன் பதிதத்தை எதிர்த்து கத். விசுவாசத்தை பாதுகாக்க 10 காரணங்கள் என்ற தனது புகழ்பெற்ற நூலினை வெளியிட அச்சகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் அர்ச். காம்பியனைக் கண்டு அவரது ஆற்றல்மிக்க விசுவாசம் நிறைந்த பிரசங்கங் களையும், வீர உரைகளையும் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார் ஹென்றி வால்போல். அதனால் தமது விசுவாச வாழ்வில் உறுதியடைந்தவர் காம்பியன் சுவாமி பிடிபட்டு விசாரணைக் கைதியாக்கப்பட்ட செய்தியால் வேதனை அடைந்தார். பின்னர் 1581 டிசம்பர் முதல் நாள் அன்று அவரது மரணதண்டனை நிறைவேற்றப்படும் போது அவரை கடைசி தடவையாக பார்க்கச் சென்றார். அப்போதுதான் காம்பியன் சுவாமியின் இரத்தத் துளிகள் முன் வரிசையில் பதைபதைப்புடன் நின்றிருந்த ஹென்றியின் மீது தெளித்தது. அதுவே அவரது வாழ்வை மாற்றக் காரணமாயிற்று.

தேவ அழைத்தல்

தமது அன்புக்குரிய சங். காம்பியன் சுவாமியின் வேதசாட்சியத்தைப் பார்த்ததிலிருந்து ஹென்றியின் உள்ளம் மாறிப்போனது. அவரைப் போலவே தாமும் விசுவாசத்தைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் எழத் துவங்கியது.

காம்பியனின் வாழ்வு, அவரது மரணம் பற்றிய நினைவுகள் மனதில் எழ அவைகளை கவிதையாக எழுதினார். "மிகவும் புகழ்பெற்ற புண்ணியம் நிறைந்த குருவான எட்மண்ட் காம்பியனின் வாழ்வும் மரணமும் பற்றிய கல்லறை வாசகம்" என்ற தலைப்பில் 30 பத்தி களைக் கொண்ட கவிதைத் தொகுப்பாக அது உருவெடுத்தது. அதன் இரு பத்திகள் கீழேத் தரப்பட்டுள்ளன: 

"....அவர் வார்த்தைப்பாட்டால் வந்தார் பாவத்தை வென்றிடவே: அவரது ஆயுதம் ஜெபமே, வார்த்தைகளோ காக்கும் கேடயமே; மோட்சமே அவரது ஆறுதல், ஆனமாக்களை வெல்வதே அவரது ஆவல்; பசாசே அவரது எதிரி, பாவ உலகமே அவரது படைக்களம்; மகிழ்ச்சியே அவரது வெற்றி, நித்திய இன்பமே அவரது கூலி; கிறீஸ்துவே அவரது தலைவர், முடிவில்லா காலமுமாகவே அவருக்கு வரப்பிரசாதங்களை அருளிய சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக; தமது வேதசாட்சிகளை வாழ்த்திய கிறீஸ்துவுக்கு நன்றி என்றுமே எஜமானரின் திருமுகதரிசனமே அவரது மகிழ்ச்சி; அவரை எதிரியாகப் பாவித்தவர்களுக்குச் சாபமே. இத்தகைய மனிதரை தோற்றுவித்த கிறீஸ்துவின் நாமமே, எந்நாளும் வாழ்த்தப்பட நமக்குக் கடனே...!"

அவரது இந்த கவிதை தொகுப்பை ஹென்றி வாலேன்கர் (Henry Vallenger) என்ற செல்வந்தர் வெளியிட முன்வரவே அது அச்சிட்டு கத்தோலிக்க மக்களிடையே விநியோகிக்கப்பட்டது. அதன் ஒரு நகல் அரசின் கைகளில் சிக்கவே வந்தது ஆபத்து. உடனே அனைத்து பிரதி களையும் கைப்பற்றி அழிக்க உத்தரவுப் பிறப்பிக்கப்பட, அச்சிட உதவிய ஹென்றி வாவேன்கர் பிடிபட்டார்.

கொடிய வாதனைகளிலும் எழுதியவரின் பெயரை வெளியிட மறுத்துவிட்ட (அர்ச். ஹென்றி வால்போல்) அவருக்கு 100 பவுண்ட் பணம் அபராதம் விதிக்கப்பட்டு அவரது இரு காது மடல்களும் வெட்டப்பட்டன! கவிதை பிரதிகளை வைத்திருந்ததற்காக பல கத்தோலிக்க இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே விடுதியில் பணியாற்றி வந்த ஹென்றி வால்போல் தமது சக தோழர்களிடையே காம்பியன் சுவாமியின் வீர வைராக்கிய மரணத்தைப்பற்றி எப்போதும் எடுத்துக்கூறவே, அவர்களில் அநேகர் கத். விசுவாசத்தில் உறுதிப்பெற்றனர். அதனாலேயே அரசாங்கத்தின் சந்தேகப் பார்வை ஹென்றியின் மீது விழத் துவங்கியது. கவிதை எழுதியது அவர்தான் என்ற சான்று அரசுக்கு எழவே, கைதா வதிலிருந்து தப்பிக்க விடுதியிலிருந்து வெளியேறி தமது சொந்த Norfolk வீட்டிற்குச் சென்றார். இதற்கிடையில் அரசின் தேடுதல் வேட்டைத் துவங்கவே, சிலநாட்கள் பதுங்கு குழியில் பதுங்கி வாழ்ந்து வந்த அவரது உள்ளத்தில் காம்பியன் சுவாமியைப் போல குருவாக வேண்டும், அவரைப் போலவே தமது நாட்டில் கத். விசுவாசத்தை மீண்டும் மலரச் செய்ய உழைக்கவேண்டும் என்ற எண்ணம் உறுதியடையத் துவங்கவே, இரவுபகலாக காடுகளில் மறைந்து நடந்தே New Castle என்ற இடத்திற்கு வந்துசேர்ந்து பிரான்ஸ் நாட்டுக் கப்பலில் பயனித்து Rheins நகருக்கு 1582 ஜூலை 7-ம் நாள் வந்து சேர்ந்தார். 

பின்னர் Douai நகர் வந்து அங்குள்ள ஆங்கில கல்லூரியில் சேர்ந்து குருத்துவக் கல்வியை பெறலானார். கர்தினால் ஆலன் ஆண்டகையின் ஆதரவைப் பெற்று Rheins நகரில் 8 மாதங்கள் வேதசாஸ்திரம் கற்ற அவர் 1584 பிப்ரவரி 2-ம் நாளன்று தமது 26-வது வயதில் சேசுசபையில் உட்பட்டார். அங்கே ஆயத்தநிலை தயாரிப்பில் இரு வருடங்கள் செலவிட்டபின், குருத்துவக் கல்வியில் தொடர்ந்து, தமது 30-வது வயதில் 1588 டிசம்பர் 17-ல் பாரீசில் குருப்பட்டம் பெற்றார். Brussels அனுப்பப்பட்ட அவர், வேதம் போதிக்கும் ஆவலால் அதற்கான பயிற்சியைப் பெற்று, சேசுசபை உயர் தலைவரின் அனுமதியோடு இங்கிலாந்துக்கு வேதம் போதிக்க அனுமதிக்கப்பட்டார். அதற்காக 1593, 4-ம்நாள் மாட்ரீட் நகர் வந்து காத்திருந்தார். அப்போது லண்டனில் பிளேக் நோய் பரவியிருந்ததால், சுப்பல் பயணம் நிறுத்தப்பட்டி ருந்தது. ஆனாலும் வேதபோதக ஆவலால் நிறைத்திருந்த ஹென்றி வால்போல் சுவாமி எப்படியாவது விரைவில் இங்கிலாந்துக்கு சென்றுவிட வேண்டும் என்று துடித்தார். குருக்கள் இங்கிலாந்திற்குள் வர தடை செய்யப்பட்டிருந்ததால் இரகசியமாகவே அங்கு செல்ல வேண்டும் என்பதால் "போர்கால கப்பல்கள் Vessels of War" என்றழைக்கப்பட்ட கப்பலில் பயணத்தைத் துவக்கினார். வேலை வாய்ப்பைத் தேடி இங்கிலாந்து செல்லும் இரு இளைஞர்களும் உடன் சென்றார்கள். அவர்களில் ஹென்றி சுவாமியின் சொந்த சகோதரனான தாமஸ் வால்போலும் ஒருவர்.

கைதுசெய்யப்படல்!

பயணத்தின் போது கடுமையான புயல் விசியநால் இங்கிலாந்தின் Norfolk பகுதியில் Bridlington என்ற ஊரில் கரைசேர்ந்தனர். அவர்களோடு மேலும் இரு கப்பல்களும் அங்கே சேர்த்து கரை ஒதுங்க, வந்தது. ஆபத்து! ஆம்! அந்தக் கப்பல்களில் ஒன்றில் அரசாங்க ஒற்றனும் இருந்தான், அவன் அவர்களுக்கு முன்பாகவே துறைமுகத்தினுள் இறங்கி யார்க் நகர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினான்.

நடந்ததை அறியாத மூன்று இளைஞர்களும் கரை இறங்கி இரவு வரை பதுங்கியிருந்து இரவு முழுவதும் நடந்தே பயணமாகி Kilham என்ற நகரை அணுகினார்கள். அதற்கு முன்பாக தங்களிடமிருந்த கடிதங்கள் ஆவனங்களை யெல்லாம் பத்திரமாக ஒரு பாறைக் கடியில் புதைத்து வைத்திருந்தனர். அவர்கள் கடுமையாகப் பெய்த மழையையும் பொருட்படுத்தாது ஒரு கிராமத்தினுள் நுழைந்தனர். பசியோடு விடுதியைத் தேடிய அவர்களைப் பற்றிய செய்தி கிராம அதிகாரிகளுக்குப் பரவ, அவர்கள் குருக்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தோடு காவலர்களால் கைது செய்யப்பட்டனர். வடக்குப் பகுதி கவுன்சிலின் காவலனான Earl of Huntingdon என்ற அதிகாரியின் முன்பாகக் கொண்டுவரப்பட்டனர். இங்கிலாந்தினுள் இரகசியமாக நுழையும் குருக்களைப் பிடிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவனான அவன் மிகக் கடுமையாக விசாரித்தான். விசாரணை யில் ஹென்றி தாம் ஒரு குரு. அதுவும் சேசுசபை குரு என்பதை ஏற்றுக் கொண்டார். ஏனெனில் அக்காலத்தில் சேசுசபை குருக்களே இங்கிலாந்தில் சுத்தோலிக்க விசுவாசத்தை மீண்டும் கொண்டுவர மிகவும் முனைந்திருந்தனர். அதனாலேயே பதித ஆட்சியாளர்கள் அக்குருக்களை வேட்டையாடி வந்தனர். தாம் எங்கு செல்கிறோம். யாரால் அனுப்பப்பட்டோம். யாரிடம் செல்கிறோம், உதவியவர்கள் யார். யார் என்ற விபரங்களையெல்லாம் வெளியிட மறுத்த சங். வால்போல் எத்தகைய கொடுமையையும் எதிர்கொள்ள ஆயத்த மானார். ஆனால் அவரோடு பயணித்து வந்த இரு இளைஞர்கள் பயந்துபோய் தாங்கள் ஒழித்து வைத்திருந்த ஆவணங்களைப் பற்றியும் வெளிப்படுத்திவிட அவர்கள் விடுவிக்கப்பட்டு வால்போல் சுவாமி கைது செய்யப்பட்டார்.

சேசுசபை குரு பிடிபட்டார் என்ற செய்தி எங்கும் பரவ, விசாரிப்பதற்காக குருக்களை வேட்டையாடவென்று ஏற்படுத்தப் பட்ட Topcliffe என்ற அதிகாரி லண்டனிலிருந்து அனுப்பப்பட்டான். அவன் விசாரித்தும் எந்தவிதமான பதிலையும் வால்போல் சுவாமி யிடமிருந்து பெறமுடியவில்லை. எனவே அவர் York சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே கிடைத்த அவகாசத்தில் சங். வால்போல் தாம் பிடிபட்டது. விசாரிக்கப்பட்டது போன்ற விபரங்களை கடிதங்களில் குறிப்பிட்டு, Yorkshire-ல் இருக்கும் சேசுசபை குருவான சங். ரிச்சர்ட் ஹால்ட்பை (Richard Holtby) என்பவருக்கு அனுப்பி வைத்தார். அதில்: "டாப்கிளிஃப் என்னை லண்டன் டவர் சிறைக்கோ, Bridewell சிறைக்கோ கொண்டுசென்று வதைத்து உண்மையைக் கறந்துவிடுவதாகப் பயமுறுத்தினான். நான் அவனிடம் நமதாண்டவர் என்னை எந்த கொடுமையிலும் வேதனையிலும் பயத்தாலும், அவரது தெய்விக மகத்துவத்திற்கு விரோதமாகவோ அல்லது எனது மனசாட்சிக்கு விரோதமாகவோ எதுவும் செய்ய அனுமதிக்கமாட்டார். அவருக்கு விரோதமாக என்னைப் பேசவிடமாட்டார் என்று ...." (Yepes Historia particular, 1599) πάτη குறிப்பிட்டார்.

எனது விசுவாசத்தின் காரணமென்ன. திருச்சபைக்கு விரோதமான புராட்டஸ்டாண்டாரின் கொள்கை பற்றிய எனது கருத்து என்ன, திவ்விய நற்கருணை. பாப்பரசர் பற்றிய எனது சுருத்து என்னவென்பதையெல்லாம் எழுதி தரும்படி கட்டளையிட்டுள்ளனர். எனவே இக்கடிதத்தை இப்போது சுருக்கமாக எழுதுகிறேன். பிறகு விரிவாக எழுதுகிறேன்" )Yepes. Hist partic, P. 685) is on. York சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவாமியிடமிருந்து எந்தவிதமான தகவல்களையும் பெறமுடியாததால் கோபமடைந்த விசாரணை அதிகாரி அவரை கடுமையாக வதைக்க லண்டன் டவர் சிறைச்சாலைக்கு மாற்றும்படி உத்தரவிட்டான். அங்கே வால்போல் சுவாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது!

எவ்வளவுதான் சித்திரவதை செய்தாலும் சங். ஹென்றி வால்போல் சுவாமியிடமிருந்து எந்தவிதமான தகவல்களையும் பெறமுடிய வில்லை. இதனால் 1594 பிப்ரவரி 24-ம் நாள் லண்டன் /வர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சால்ட் டவச் (Salt Tower) என்ற கட்டிடத்தில் முதல் தன அறையில் இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே போதிய உணவும். மூட துணியும் வழங்கப்படாது துன்புறுத்தப்பட்டார். ஆனாலும் எப்போதும் தேவ சித்தத்தையுடையவராகவே இருந்து அனைத்தையும் இங்கிலாந்து மனத்திரும்ப ஒப்புக்கொடுத்தார்.

தமது கட்டளை ஜெபத்திலுள்ள சங்கீதங்களை வாய்விட்டு பாடிக்கொண்டும், தமது மன ஓட்டங்களை அங்குள்ள மரச்சட்டங்கள். கதவுகளில், கையில் கிடைத்த கற்களால் கீறி, வரைந்து வெளிப்படுத்திக் கொண்டும் வந்தார். அவைகளில் தனது பெயரையும், சேசு சபையின் சின்னமான "IHS" என்ற ஆண்டவரின் திருநாகத்தையும், "பரியே" என்ற வார்த்தைகளையும், கிறீஸ்துவின் காயங்களோடான கைகள், பாதங்கள் ஊடுருவப்பட்ட கிறீஸ்துவின் இருதயம் போன்றவற்றை செதுக்கினார். அவை அவரது விசுவாசத்தின் வெளிப்பாடாகத் திகழ்ந்தன. அவற்றில் மனதிறைவு கொண்டர். (அவர் செதுக்கிய இந்த எழுத் துக்களையும். படங்களையும் இன்னமும் அங்கே. லண்டன் டவர் சிறையின் சால்ட் டவர் சிறைகூடத்தின் முதல் தளத்தில் அவர் தங்கிமரித்த அறையில் காணவாம்.) மே 3-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. வேதம் போதிக்க இங்கிலாந்திற்கு வந்த குருக்கள், அவர்கள் பெயர்கள் அவருக்கு உதவும் சுத்தோலிக்க  மக்கள் யார்,யார் என்றெல்லாம் கேட்டு விசாரித்தனர். அனைத்திற்கும் பதில் தர மறுத்த சுவாமி மேலும் சித்திரவதைக்கு உள்ளானார். இடுப்பில் முரட்டுக் கயிற்றால் சுட்டி தலைகீழாகத் தொங்கவிடப்பட்டார்.
(அர்ச். ஹென்றி வால்போல் சிறைச் சுவரில் செதுக்கிய எழுத்துக்கள்)
ரங். வால்போல் சுவாமி அனுபவித்த கொடூர சித்திரவதைகளைப் பற்றி இங்கிலாந்தின் ரோ அதிபரான சங் ஹென்றி கார்நெட் சுவாமி 1595 அக்டோபர் 23-ல் எழுதிய கடிதத்தில்: “முத் வால்போல் சுவாமி லண்டன் சிறைச்சாலையில் கொடிய துன்புத்கையும் வறுமை யையும் அனுபவித்தார். படுக்க படுக்கையில்லாமல், உடுத்த உடை இல்லாமல் கடுங்குளிரில் விடப்பட்டார். அவர் மீது இரக்கப்பட்ட சிறை காவலாளிதான், சிறிது வைக்கோல்களைக் கொடுத்துப் படுத்துக் கொள்ள  உதவினான். பொது விசாரணையின் போது தந்தையவர்கள், நான் 14 தடவைகள் கொடூரமாய் வாதிக்கப்பட்டதாகவும், 6 தடவைகள் தலைகீழாக கட்டித் தொங்கவிடப்பட்டதாகவும். கூரிய இரும்பு கொக்கிகளால் இரத்தம் வர தசை கிழிய விசாரிக்கக் கொண்டு செல்லப்பட்டார். சிறிதும் தூங்கவிடாது உபாதிக்கப்பட்டார். அங்கே நீதிபதிகளுக்காக பலநாட்கள் காத்திருக்க வேண்டியிருந்ததால் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். 

அரசி எலிசபெத்தை கொலை செய்ய முயன்றார் என்ற பழி சுமத்தப்பட்டது. இதனை கடுமையாக மறுத்த சங், வால்போல் சுவாமிக்கு மரண தண்டனை விதிக்க பிரபுக்கள் சபை முடிவெடுத்தது. 3 நீதிபதிகள் முன்பு விசாரிக்கப்படும் போது தன்னிலை விளக்கம் கொடுத்தார்

வெளியிலிருந்த சங், ஹென்றி வால்போலின் நண்பர்கள் அவரை எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும். அதற்கு அவரை இணங்கச் செய்யவேண்டும் என்று முனைந்தனர். தாம் காம்பியன் சுவாமியைப் போல வேதசாட்சி முடியைப் பெற ஆசித்த அவர், அவர்களது இந்த முயற்சிக்கு மறுப்பு தெரிவித்தார். அவர்களது நெருக்கிடை அதிகமாகவே சேசுசபை குருவான சங். ரிச்சர்ட் ஹாலட்பை சுவாமிக்கு தமது நிலையையும் நண்பர்களின் முயற்சிகளையும் கூறி தமக்கு ஆலோசனை கூறுமாறு கேட்டு அனுப்பினார். அதற்கு அவர், வால்போல் சுவாமி சிறையிலிருந்து தப்பிப்பதானது ஏற்கனவே York Castle சிறையில் அடைபட்டிருக்கும் கத்தோலிக்கர்களுக்கு பெரும் கேடாக அமையும் என்று எச்சரித்தார். இதையறிந்து தப்பிக்க வைக்கும் தமது நண்பர்களின் முயற்சிகளுக்கு இணங்க மறுத்து விட்டார். 

இதுபற்றி சங். ஹாலட்பை சுவாமிக்கு எழுதிய கடிதத்தில் "தங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். தங்களது ஆலோசனை மகிழ்ச்சியைத் தருகிறது. அது நமது ஆண்டவரின் கரத்திலிருந்து வந்ததாக ஏற்றுக்கொள்ளுகிறேன். (தப்பிக்கும் திட்டம்) மற்றவர்களின் திருப்திக்காக மட்டுமே. ஆதலால் உங்களுக்கு வெளிப்படுத்தி ஆலோசனையைக் கேட்டேன். மற்றபடி எனது விருப்பம் அதுவல்ல... அர்ச். இராயப்பரை, தமது சம்மனசானவரை அனுப்பி சிறையிலிருந்து ஆண்டவர் விடுவித்தாரென்றால், அது எதற்காக? அவர் பரிசுத்த திருச்சபையின் பொதுத் தந்தையாகவும், மேய்ப்பனாகவும் விளங்குவதற்கும் அந்த நமது அப்போஸ்தலிக்க தலைமை இடத்தை உரோமையில் நிறுவுவதற்காகவுமே. ஆனால் எனக்கு அப்படியல்ல, எனக்கு நான் இருக்கும் சிறைகூடமே உரோமை. இதைவிட சிறப்பான முறையில்  ஆண்டவருக்கு ஊழியம் செய்ய என்னால் முடியுமென்று எனக்குத் தெரியவில்லை... இங்கேயிருந்தே எனது விசுவாசத்தை அறிக்கையிட முடியும். என்னை தவறாது காத்துவருவதற்காக நமதாண்டவர் சேசு கிறீஸ்துவுக்கு நன்றி செலுத்துகிறேன். எனக்கு விசாரணை கவுன்சில் தலைவரால் ஐந்து தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எனது நோக்கமென்ன? 

"எனது அன்புக்குரிய பிரபுக்களே, தான் மூன்று காரியங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டதாக அறிகிறேன். 

1-வது, நான் ரோமை பரிசுத்த ஸ்தானத்தின் (Holy see) அதிகாரத்தால் பட்டம் பெற்ற குருவானவர். 

2-வது. நான் சேசு சபையினன். 

3-வது, குருவானவரும். சேசு சபையினரான எனது அழைத்தளின் ஊழியமான ஆன்மாக்களை சர்வேசுரனுக்கு பெற்றுத் தருவதற்காக எனது நாட்டிற்கு வந்தது. 

இந்த மூன்றில் எதுவும் தேசத் துரோகமான காரியங்கள் அல்ல குருக்கள் கிறீஸ்துவின் அழைத்தலின்படி உலகிற்கு போதித்து மக்களை மனந்திருப்ப அழைக்கபட்டவர்கள். இங்கிலாத்து தேசந்திற்கு முதன் முதலில் சுவிசேஷ ஒளியைக் கொண்டு வந்தவர்களும் குருக்கலே. ஆகையால் குழுக்கள் ஒரு துரோகியாக இருக்க முடியாது" என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி Ewenn என்பவர், “அப்படியானால் மத விஷயத்தில் அரசியின் சட்டத்திற்கு கீழ்படித்து, அரசியே திருச்சபையின் தலைவர், பாப்பு அல்ல என்பனத ஏற்றுக்கொள்கிறாயா?" என்று கேட்டார். அதற்கு சங். வால்போல் சுவாமி மறுமொழியாக, நாம் வெளிநாட்டில் சில காலம் தங்கியிருந்ததால் இங்கிலாந்தில் என்ன சட்டத்தைக் கொண்டு வத்துள்ளனர் யன்பதை அறியவில்லை. ஆகையால் அதற்கு எப்படி கீழ்ப்படிய வேண்டும் என்ற கேள்வி எழவில்லை என்று கூறியவர், ஆனால் எந்த ஒரு சட்டமும் சர்வேசுரனுடைய சட்டத்திற்கு ஏற்புடையதாக இல்லாதே போனால் அது உடன்பாடற்றதுதான். உலக அரசர்களுக்கு எப்போதும் கீழ்ப்படிவது, பரலோக பூலோக உன்னத அரசரான சர்வேசுரனுக்கு நாம் கீழ்ப்படியும் கடமையைவிட மேலான நல்ல சர்வேசுரனுக்கு கீழ்ப்படிவதே மேலானது" என்று பதிலளித்தார்.

பின்னர் தொடர்ந்து, "அரசிக்காக நான் ஆண்டவராகிய கடவுளிடம் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறேன். அவரே அவளை தமது இஸ்பிரித்துசாத்துவால் ஆசீர்வதிப்பாராக... சர்வேசுரனே எனது சாட்சி இங்கே கூடியிருக்கும் எனது மரணத்தை விரும்பும் மேன்மை மிக்கவர்களின் முன்னிலையில் கூறுகிறேன். நான் உங்களது ஆண்ம இரட்சணியத்தையே விரும்புகிறேன். இதற்கு, நித்திய மகிழ்ச்சிக்கு ஒரே மார்க்கமாகத் திகழும் மெய்யான கத் விசுவாசத்தில் வாழ்வீர்களாக..." என்று கூறினார்.

நீதிபதிகளில் ஒருவரான சர். ஜான் சவிலா (Sir John Savila) என்பவன்  வால்போல் சுவாமியை துரோகி என்று குற்றம் சாட்டி அதற்கு ஆதாரமாக ஸ்பெயின் நாட்டு அரசரோடும், சேசு சபை குருக்களான சங். பெர்சன்ஸ் (Persons) சுவாமி மற்றும் சங். ஹோல்ட் (Holtby) சுவாமியிடமும் அவர் சில காலம் தங்கியிருந்து நட்புறவு கொண்டிருந்ததையும் வெளிப்படுத்தினான். பின்னர் நீதிபதிகள் சங், வால்போல் சுவாமி மேன்மை மிக்க அரசியின் குடிமக்களை ஈட்டத்தால் நிறுவப்பட்ட மதத்திலிருந்து மனம் மாற்றுவதற்காகவும், குழப்புவதற்காகவும் ரோமை ஸ்தானத்தோடு அவர்களை ஒப்புர வாக்குவதற்காகவும் அவர் திரும்பி வந்துள்ளார் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்கள்.

அதற்கு பதில்மொழியாக சங், வால்போல் சுவாமி, “விசாரணை அதிகாரிகளான பிரபுக்களே! இதோ! நானே விரும்பி இவைகளை ஏற்று அறிக்கையிடுகிறேன்: ஆம்! நான் ஒரு குருவானவர் சேசு சபையின் உறுப்பினர். எனது தேசத்தை சுத்தோலிக்க சத்திய விசுவாசத்திற்கு மனந்திருப்பவும். பாவிகளை மனஸ்தாபத்திற்கு அழைக்கவும்தான் வந்தேன். ஆம்! இவைகளை நான் முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறேன். மறுக்கவில்லை. இவை எனது அழைகத்தலின் கடமை. எனது இந்த அழைத்தலுக்கு வேறுபட்டு எதுவும் இருப்பின் எனக்குச் சொல்லுங்கள். அதே சமயம் உங்கள் மனசாட்சியின்படியும் நீங்கள் ஒருநாள் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்பதையும் மறவாதீர்கள்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.

அவரது பதிலில் தொனித்த யதார்த்தத்தையும். உண்மையையும் உணர்ந்து உள்ளம் கலங்கினாலும், நீதிபதிகள் "இவன் குற்றவாவி தேசத்துரோகி" என்று தங்களது தீர்ப்பைக் கூறினார்கள். அதன் பின்னர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சங், வால்போஸ் சுவாமி, சங். ஹோல்ட்பி (Holtby) சுவாமி என்பவருக்கு கடைசியாக எழுதியக் கடிதத்தில் "... நாளை மறுநாள் நான் தூக்கிலிடப் படவுள்ளேன். நமது தந்தையர்கள், சகோதரர்களின் மேலான ஜெபங்களைக் கேட்கிறேன். உண்மையான கத்தோலிக்க இதயங்கள் அனைவரோடும் நான் மகிமையோடு இணைந்து, நமது சர்வேசுரனும் சிருஷ்டிகரும், மீட்பரும், அர்ச்சியசிஷ்டவர்களிடமும் ஜெபிக்கிறேன் என்பதை இஸ்பிரீத்துசாந்துவானவர் உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை... லண்டன் டவர் சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்த நாட்களைப் பற்றி உங்களிடம் எதுவும் கூறவில்லை. அதனை மோட் சத்தில் நாம் மீண்டும் சந்திக்கும்போது அறிந்து கொள்வீர்கள்" என்று குறிப்பிட்டார்.

1595 ஏப்ரல 7 ல் சங். ஹென்றி வால்போல் சுவாமி Douai குருவான ச. அலெக்ஸாண ராவ்லின்ஸ் சுவாமியுடன் York Castleலில் இருந்து இழுத்துவரப்பட்டார். ஒரே கயிற்றால் தலைவிலிருந்து கால் வரைக் கட்டப்பட்டதால் இருவரும் பேசிக்கொள்ளும் ஆறுதலைப் பெற்றனர். கைகிகள் இருவரும் Knavesmire என்ற கொலைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டனர். முதலில் ராவ்லின்ஸ் சுவாமி தூக்கிலிடப்பட்டு உடல் வெட்டப்பட்டு வேதசாட்சியமடைந்தார். அதனைக் கண்டாவது, மனம் மாறுவார் என்று நினைக்கப்பட்ட வால்போல் சுவாமி மிகுந்த துணிவோடும் உற்சாகத்தோடும் தூக்குமேடையில் ஏறினார். அருகி லிருந்த அதிகாரிகள் அரசியின் புராட்டஸ்டாண்ட் ஆங்கிலிக்கன் சபையை ஏற்றுக்கொண்டால் உயிர் பிழைக்கலாம் என்று ஆசை வார்த்தைக் கூறினார்கள். அப்போது "அரசியே திருச்சபையின் தலைவர்" என்பதை பற்றிய அவரது கருத்தைக் கேட்டனர். அதற்கு, “அவள் தானே உயர்ந்தவள் என்று கூறிக் கொள்கிறாள். ஆனால் நான் அதனை ஏற்கமாட்டேன். கடுமையாக மறுக்கிறேன்" என்று திடமாகக் கூறினார். அதனைக் கேட்ட அதிகாரிகள் "ஆஹா! இது தேசத் துரோகம்” என்று கூறினர்.

... ஆனால் சங். வால்போல் சுவாமி அமைதியாக தமது சாவுக்குக் காரணமானவர்களுக்காக ஜெபித்தார். பின்னர் சற்று உரத்தக் குரலில் "பரலோக மந்திரத்தை" ஜெபித்தார். பிறகு "அருள்நிறை" மந்திரத்தை தொடங்கி ஜெபித்துக் கொண்டிருக்கும் போதே அவர் நின்றிருந்த ஏணி அகற்றப் பட முட்டு சுருக்குக் கயிறு அவரது கழுத்தை இறுக்கியது. அவரது புனித உடல் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் விரைத்தவாறு தொங்கியது. இறக்கும்வரை அவர் உடல் தொங்கவிடப்பட்டு, பின்னர் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. அன்று 1595 ஏப்ரல் 7-ம் நாள். ஆம்! அவரது மனங்கவர்ந்த சங். எட்மண்ட் சுவாமியின் வேதசாட்சியத்தின் போது சிதறிய இரத்தத் துளிகள் தம்மீது பட்டு சரியாக 14 ஆண்டுகள் 97 நாட்களுக்குப் பிறகு வேதரா'சியமடைத்தார் ஹென்றி வால்போல்!

அர்ச். ஹென்றி வால்போலே. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!





அமலோற்பவ மரியாயே!!! - Our Lady of Immaculate Conception

 அமலோற்பவ மரியாயே வாழ்க!

(இக்கட்டுரை அதிமேற்றிராணியார் மிக. வந் மார்செல் லெஃபவர் ஆண்டகை 1972-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் நாளன்று நிகழ்த்திய பிரசங்கத்திலிருந்த எடுக்கப்பட்டது - ஆசிரியர்)


நித்திய அமலோற்பவம்


மாதாவின் அமலோற்பவ திருநாளின் முழு வழிபாடு அனைத்தும். எல்லாம் வல்ல சர்வேசுரன் தமது அளவில்லாத ஞானத்தால் ஆதியிலிருந்தே, மிகவும் பரிசுத்த கன்னிமரியாயை நமக்காக தயார் செய்தார் என்பதையே சுட்டிக் காட்டுகிறது. சர்வேசுரன், மரியாய் இவ்வுலகில் உற்பவித்த அந்த கணத்திலிருந்து மாத்திரம் அவர்களை அனைத்துப் பாவமாசுகளிலிருந்தும் விடுவித்து அமலோற்பவமாக ஏற்படுத்தவில்லை. மாறாக, நித்தியத்திலிருந்தே உலகம் உண்டாகும் முன்னமே அவர்களை அவ்வாறு தீர்மானித்திருந்தார்.

நித்திய வார்த்தையானவரின் வார்த்தை களை இத்திருநாளின் நிருப வாசகம் மாதாவிற்கு பொருத்தி இவ்வுண்மையை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. பரிசுத்த கன்னிகை ஏற்கனவே சர்வேசுரனின் சித்தத்தில் இருந்தார்கள். "- iiam concepta erami நான் ஏற்கனவே கர்ப்பந்தரிக்கப்பட்டிருந்தேன்" (பழ. 8:24). ஆம்! சர்வேசுரனுடைய மனதில் கன்னிமாமரி கர்பந்தரிக்கப்பட்டிருந்தார்கள். இப்படியாக தமது தெய்வீக மீட்புத் திட்டத்தில் சர்வேசுரன் கன்னிமரியாயை நினைத்திருந்தார். ஆகையால், அவர்களை தமது வரப்பிரசாதங்களால் நிரப்பவும், அவர்களை அனைத்து பாவக்கறைகளிலிருந்து காப்பாற்றி அமலோற்பவம் என்ற அசாதாரண சலுகையை வழங்கச் சித்தமானார். "i Tota pulchra es, Maria, et macula originalis non est in teî - மரியாயே! நீர் முழுவதும் அழகுள்ளவள். ஜென்மப் பாவத்தின் மாசு ஒருபோதும் இருந்ததில்லை!"

ஆக உலகம் தோன்றும் முன்னமே, சர்வேசுரன். இந்த ஆச்சரியத்துக்குரிய படைப்பை நமதாண்டவர் சேசு கிறீஸ்து நாதருக்கு அடுத்தபடியான. தமது படைப்புகளின் மேலானவர்களாயிருக்கிற மாதாவை நினைத்தார். தேவதாயின் பிறப்பிற்கு முந்திய மனித சமுதாயத்தின் வரலாற்று காலங்கள் அனைத்திலும், எந்நேரமும் இந்த பரிசுத்த கன்னிகை சர்வேசுரனுடைய சிந்தையில் இருந்தார்கள். பழைய ஏற்பாட்டு வரலாறு முழுவதிலும் இதனை நாம் காணலாம். அதிலும் குறிப்பாக, ஆதாம்-ஏவாள் பாவம் கட்டிக் கொண்ட உடனேயே சர்வேசுரன் சாத்தானாகிய சர்ப்பத்திடம் "...உனக்கும், ஸ்திரீக்கும் பகையை மூட்டு வோம்... அவள் உன் தலையை நசுக்குவாள்" (ஆதி. 3:15) என்று கூறினார். ஆகையால், பரிசுத்த கன்னிமாமரி, சர்வேசுரனுடைய ஆவியால் முன் குறிக்கப்பட்டார்கள். மாதாவினுடைய அமலோற்பவம் அவரால் தயாரிக்கப்பட்டது.

பழைய ஏற்பாட்டுப் பெண்மணிகளில் மாதாவின் உருவகம்! 

பரிசுத்த கன்னிமாமரியின் உருவங்கள் பழைய ஏற்பாட்டுப் பெண்மணிகளில் காணக் கிடக்கின்றன. அவர்களில் மாதா முன் அடையாளமாகக் காட்டப்படுகிறார்கள். தோபியாசின் மனைவியான சாராவைக் கவனித்தால், அவளை குறித்தே சம்மனசானவர் சாத்தானைக் கட்டி, பாலைவனத்தில் வீசுகிறார் (தோபி. 8:3), சாரா பரிசுத்த கன்னிமரியாயின் முன் அடையாளமாதக் திகழ்கிறாள். அவளுக்கு முன்பாக பசாசு ஓடும், அவளைக் கண்டு சாத்தான் அஞ்சும்? பரிசுத்த கன்னி மரியாய் சாத்தானின் அரசில் ஒரு சிறு கண மேனும் கூட உட்படவில்லை. ஏனெனில் அவர்கள் அமலோற்பவமாக ஏற்படுத்தப்பட்டுள்ளார்கள். 

யூதித்தின் வரலாற்றைப் பார்த்தோமாகில், பரிசுத்த கன்னிமரியாயின் பங்கை மீட்புத் திட்டத்தில் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அவள் தமது இஸ்ராயேல் மக்களை ஒலாப்பேர்னெசிடமிருந்து காப்பாற்றினார். அவனது தலையை யூதித் வெட்டி இஸ்ராயேல் ஜனங்களை மீட்டது போலவே பரிசுத்த கன்னிமரியாயும் சாத்தானின் தலையை வெட்டி (நசுக்கி) சர்வேசுரனுடைய மக்களைக் காத்தார்கள். அதாவது. சேசு கிறிஸ்துநாதரோடு சிலுவைப்பலி வரை உடனிருந்து பங்கேற்று சாத்தானின் அரசை முறியடித்து மீட்பைப் பெற்றுத் தந்தார்கள்.

இது தவிர பழைய ஏற்பாட்டில் இன்னும் அதிகமான பரிசுத்த பெண்மணிகள் மூலமாக மாதா உருவகமாக வெளிப்படுத்தப்பட்ட காரியங்கள், அவர்கள் எப்பொழுதும் சர்வேசுரனின் நினைவில் -தேவ திட்டத்தில் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கின்றன.


அருள் நிறைந்த மரியாய்!


பரிசுத்த கன்னிமரியாய் தமது தாயின் உதரத்தில் உற்பவமான அந்தக் கணத்திலேயே இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டார்கள். ஆகையால், ஜென்மப்பாவம் அவர்களை மாசுப்படுத்தாமல் விலக்கப்பட்டது. இஸ்பிரித்து சாந்துவானவர் இருக்குமிடத்தில் எப்படி பசாசானது நுழைய முடியும்? எனவே, மகா பரிசுத்தவதியான கன்னிமாமரி ஜென்மப் பாவமில்லாமல் உற்பவமானார்கள். ஆதலால், அவர்களது உற்பவந்தொட்டே - பிறப்பிலிருந்தே இஸ்பிரித்து சாந்துவானவரை முழுமையாகப் பெற்றிருந்தார்கள். அதனால் தான் கபிரியேல் சம்மனசானவர், "பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே; ஸ்திரிகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே!" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். ஆகையால் தான் அவர்கள் சுதனாகிய சர்வேசுரனுக்கு உகந்த இல்லிடமாவதற்காக பாவ மாசின்றி, அமலோற்பவியாக சிருஷ்டிக்கப்பட்டார்கள். இதனையே தான் திருச்சபையும் மாதாவின் அமலோற்பவத் திருநாள் பூசையின் சபை ஜெபத்தில் "சர்வேசுரா, தேவரீர் கன்னிகையின் மாசில்லா உற்பவத்தினால் உம்முடைய திருக்குமாரனுக்கு ஏற்ற இருப்பிடத்தை தயாரித்தருளினீரே..." என்று குறிப்பிட்டு மன்றாடுகிறது.


மாதாவின் அமலோற்பவம் நமக்கு கற்பிக்கும் பாடம்!


நமதன்னையின் அமலோற்பவ மகிமையும், அவர்களது வாழ்வும் நமக்கு ஒரு பாடமாக இருக்கிறது. அவற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறெனில், பரிசுத்த கன்னி மரியம்மாள் அவர்களது உற்பவத்திலிருந்தே பாவ மாசில்லாமல் இருப்பது எதற்கென்றால் "அவர்கள் நமதாண்டவர் சேசு கிறீஸ்துவின் தாயாகும் பொருட்டே!" அவர்கள் தேவ குமாரனை தம்மில் தாங்குவதற்காகவே! உலகிற்கு மீட்பரை வழங்கும் பொறுப்பாளராக இருப்பதற்காகவே! சேசுவோடு அவரது தாயாக, இணை மீட்பராக மீட்புத் திட்டத்தில் உடன் உழைக்க வேண்டும் என்பதற்காகவே!

கிறீஸ்தவர்களாகிய நாம் திவ்விய நற்கருணையை உட்கொள்ளும் போது சேசு கிறிஸ்துநாதர் சுவாமியையே பெற்றுக் கொள்கிறோம். அமலோற்பவ மரியாயிடமிருந்து உற்பத்தியான அதே சரீரமாதலால் நாம் அவரை உட்கொள்ள மிகவும் பரிசுத்தமானவர்களாக இருக்க வேண்டும். எப்படி சேசுவை மகவாகப் பெற மாதா பாவமின்றி ஏற்படுத்தப்பட்டிருந்தார்களோ, அதுபோல நாமும் நமது ஆத்துமத்தின் கறைகளெல்லாம் நீக்கப்பட்டு பரிசுத்த அந்தஸ்தில் இருக்க வேண்டும். தேவதாயைப் போல நாம் இல்லாவிட்டாலும், நம் ஜெபதபங்களாலும், நமது புண்ணிய வாழ்வாலும், சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தின் உதவியோடு நமது ஆத்துமங்களை பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இது நம்மால் முடியுமா? ஆம். முடியும்! நம்மால் பாவமில்லாமல் வாழ முடியும். நமது ஆத்துமங்களில் சிறு பாவத்தின் சளனம் தோன்றினாலும் கூட நாம் அதனை எதிர்த்துப் போராட வேண்டும். அது எந்த அளவிற்கு இருக்க வேண்டுமென்றால். சர்வேசுரன் நம் ஒவ்வொருவருடைய ஆத்துமத்தையும் நோக்கி: "i Tota pulchra est, et macula non est in eaî - முற்றிலும் அழகுள்ளது. இதனிடம் மாசேதுமில்லை" என்று சொல்லப்படும்படியாக நமது ஆத்துமம் தூய்மையாய்த் திகழ வேண்டும்.

தேவதாய் பாவத்தை அழிப்பதற்காகவே சர்வேசுரனால் உருவாக்கப்பட்டு, சிருஷ்டிக்கப்பட்டார்கள். ஆகையால், அவர்களைத் தவிர வேறு எந்த சிருஷ்டியும் பாவத்திலிருந்து விடுபட்டதில்லை. அவர்களே சாத்தானின் தலையை நசுக்கினார்கள். ஆதலால், அவர்களிடம் பசாசோடு எந்தவிதமான உடன்பாடுமில்லை. பாவத்தோடு, தீமையோடு எவ்விதமான ஒட்டுறவுமில்லை. அவர்கள் முழுவதும் பரிசுத்தமானவர்கள். எனவே அவர்களிடம் ஜெபிப்போம். நாமும் அவர்களைப் போலவே. சாத்தானோடு பாவத்தோடு - தீமைகளோடு எந்தவிதமான உடன்பாடோ, ஒட்டுறவோ இல்லாமல் காக்கும்படியாக கேட்போம். நம்மையும் அவர்களைப் போல அமல - தூயவர்களாக்கும்படியாக நம்மை அவர்களது அமலோற்பவ மேலாடையால் போர்த்திக் காக்கும்படி இறைஞ்சி மன்றாடுவோமாக!

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


source: Salve Regina (Magazine) - Dec. 2007 

செவ்வாய், 21 நவம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 15 - அர்ச். சிலுவை அருளப்பர்

 அர்ச். சிலுவை அருளப்பர்

அர்ச். சிலுவை அருளப்பர், ஏழைகளாகிய கொன்சாலோ, கேட்டலினா தம்பதியருக்கு 1542, ஜூன் 24 அன்று பிறந்தார். அவருக்கு மூன்று வயதானபோது அவரது தந்தையும், இரண்டு வருடம் கழித்து, வறுமையால் அவரது அண்ணனும் இறந்தார்கள். இதனால் அவரது தாய் வேலை தேடி அவரோடும், மற்றொரு சகோதரனான பிரான்சிஸ்கோவோடும் முதலில் ஆரவாலோ விலும், அதன்பின் மெதினா தெல்காம்போவிலும் குடியேறினாள்.

மெதினாவில் பெரும்பாலும் அநாதைக் குழந்தைகள் படித்த ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் அருளப்பர் அடிப்படையான, பெரும்பாலும் வேதம் சார்ந்த கல்வி பெற்றார். இங்கே ஓரளவு உணவும், உடையும், இருப்பிடமும் அவருக்குக் கிடைத்தன. 1563ல் அவர் கார்மெல் சபையில் சேர்ந்து அர்ச். மத்தியாஸின் அருளப்பர் என்ற பெயரைப் பெற்றுக்கொண்டார். அடுத்த வருடத்தில் கார்மெல் துறவியாக முதல் வார்த்தைப்பாடு தந்த அவர், சாலமான்கா பல்கலைக் கழகத்தில் வேதசாஸ்திரமும், தத்துவ சாஸ்திரமும் பயின்றார். இதன்பின் ஃப்ரே லூயித லியோன் என்பவரிடம் அவர் வேதாகமப் பாடம் கற்றார்.


அர்ச். அவிலா தெரேசம்மாளின் சீர்திருத்தப் பணியில் இணைதல்

1567ல் குருப்பட்டம் பெற்ற அவரைத் தனி வாழ்வுப் பிரியம், மவுன, காட்சி தியான வாழ்வு ஆகியவற்றைக் கொண்டு, அதிகக் கண்டிப்புள்ள கர்த்தூசிய சபை ஈர்த்தது. 1567 செப்டம்பரில் அவர் ஸாலமான்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்றார். அங்கே தனது இரண்டாவது புதிய மடத்தைத் தொடங்க வந்திருந்த கார்மெல் கன்னிகையான அவிலா தெரேசம்மாளை அவர் சந்தித்தார். அவள் 1432ல் பாப்பரசர் யூஜீனால் தளர்த்தப்பட்டிருந்த "சபையின் தொடக்க கால விதித் தொகுப்பை" அனுசரிக்கும் வாழ்வைப் புதுப்பிப்பதன் மூலம் கார்மெல் சபையின் பரிசுத்த தனத்தை மீண்டும் கொண்டு வர முயன்றுகொண்டிருந்தாள். இந்நிலையில் அவள் தன் திட்டங் களைப் பற்றி அருளப்பரிடம் பேசினாள்.

பண்டைய விதிகளின்படி, கார்மெல் சபையினர் ஒரு நாளின் பெருமளவு நேரத்தைப் பரிசுத்த கட்டளை ஜெபம் சொல்வதிலும், கற்பதிலும், ஞான வாசகங்களிலும், பூசை நிறைவேற்றுவதிலும் காண்பதிலும், தனி வாழ்விலும் செலவிடவும், துறவற குருக்கள் மடத்தைச் சுற்றியிருந்த மக்களுக்கு சுவிசேஷம் போதிக்கவும், இறைச்சியை முழுமையாக விலக்கவும், திருச் சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள் முதல் உயிர்ப்புத் திருநாள் வரை நீண்ட கால உபவாசம் கடைப் பிடிக்கவும், நீண்ட மவுன வேளைகள், குறிப்பாக இரவு ஜெபம் முதல் காலை ஜெபம் வரை அனுசரிக்கப்படவும், எளிய, முரடான, குட்டையான அங்கிகள் பயன்படுத்தப்படவும் கால்களை மூடாத காலணிகள் பயன்படுத்தப்படவும் வேண்டியிருந்தது. இதனால் ஒரு வகையில் இந்தச் சபை காலணிகள் அணியாத சபை என்றும் அழைக்கப்பட்டது.

வால்லடோலிட் நகரத்தில் சிறிது காலம் இருந்தபின், அருளப்பர் துருவேலோ என்னுமிடத் திற்குச் சென்று, புனிதையின் கடுந்தவக் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு புதிய கார்மெல் துறவற குருக்கள் சபையை 28.11.1568 அன்று ஸ்தாபித்தார். அன்றே புனிதர் தம் பெயரை சிலுவை அருளப்பர் என்று மாற்றிக்கொண்டார். இந்த மடம் சிறியதாக இருந்ததால், அது அருகிலிருந்த மென்செராத அபாயோ என்ற ஊருக்கு மாற்றப்பட்டது. துறவற குருக்களின் கல்விப் பயிற்சிக்காக பாஸ்ட்ரானா என்ற ஊரில் புதிய மடம் ஒன்றை ஸ்தாபித்து, புனிதர் அங்கே குடியேறினார்.

1572ல், அவிலாவுக்குச் சென்ற அவர் தெரேசாவுக்கும், அங்கிருந்த 130 கன்னியருக்கும். ஏரான மான விசுவாசிகளுக்கும் ஆன்ம குருவானார். 1574ல் தெரேசாவுடன் ஸ்ெகோவியாவுக்குச் சென்று அங்கு ஒரு புதிய மடத்தைத் தொடங்கியபின், அவிலாவுக்குத் திரும்பி வந்தார். 1577 வாக்கில், தாம் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, சிலுவையில் அறையுண்ட கிறீஸ்து நாதர் அவருக்குக் காட்சி தந்தார். 1641ல் இக்காட்சியைப் புனிதர் ஒரு சித்திரமாக வரைந்தார்.

1575-77 வாக்கில் ஸ்பானிய கார்மெல் துறவற குருக்களுக்குள் தெரேசா மற்றும் அருளப்பரின் கடுந்தவ வாழ்வை அனுசரிப்பதற்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன. 1566 முதல் காஸ்டைலுக்கு ஒருவரும், அந்தலூசியாவுக்கு ஒருவருமாக, அர்ச், சாமிநாதர் சபைத் துறவிகள் இருவர் கார்மெல் மடங்களின்மீது அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். துறவிகளை மடம் மாற்றுவது, மடத்துத் தலைவர்களையும் கூட அவர்களது பதவிகளிலிருந்து விடுவிப்பது போன்ற அதிகாரங்கள் அவர்களுக்குத் தரப்பட்டிருந்தன. காஸ்டைலுக்கு பெத்ரோ பர்னாண்டஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தலூசியாவின் அதிகாரியாக இருந்தவர் பிரான்சிஸ்கோ வர்காஸ் என்பவர் ஆவார். இவர் மாற்றங்களை விரும்பிய துறவிகளுக்கு ஆதரவாக இருந்ததால் மீண்டும் பிரச்சினைகள் எழ, இதன் விளைவாக, இத்தாலியிலுள்ள பியாசென்ஸாவில் 1576 மே மாதத்தில் கார்மெல் சபையின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. ஆயினும் குழப்பம் கை மீறிப் போகவே, தெரேசம்மாளின் காலணிகள் அணியாத துறவிகளின் மடங்களை அடியோடு மூடி விட உத்தரவிடுவது என்று முடிவுசெய்யப்பட்டது.

ஆனால் ஸ்பெயின் அரசர் இரண்டாம் பிலிப் தெரேசம்மாளின் சீர்திருத்தங்களுக்கு ஆதரவா யிருந்ததால், இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவில்லை. மேலும் பாப்பரசரின் திருத்தூதரும், பதுவையின் ஆயருமான நிக்கோலோ ஆர்மனேட்டோ என்பவரின் ஆதரவும் அவளுக்கு இருந்தது. இவர் தெரேசம்மாளின் வேண்டுகோளின் பேரில், வர்காஸை நீக்கி விட்டு, ஆல்கலா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த குருவான எரோனிமோ க்ராஸியன் என்பவரை அந்தலூசியாவின் அதிகாரியாக்கினார். இந்த குரு தாமே தெரேசம்மாளின் சபையைச் சேர்ந்தவ ராசு இருந்தார். 1576ல் மெதினாவில் பாரம்பரிய கார்மெல் துறவிகளால் கைதுசெய்யப்பட்ட அருளப்பர், திருத்தூதரின் தலையீட்டால், விரைவில் விடுவிக்கப்பட்டார். ஆனால் 1577 ஜூன் 18

அன்று ஆர்மனேட்டோ இறந்தபோது, அருளப்பர் பாதுகாப்பின்றி விடப்பட சீர்திருத்தவாதிகளின் கை ஓங்கியது. 1577 டிசம்பர் 2 அன்று, சீர்திருத்தத்தை எதிர்த்து கார்மெல் துறவிகளின் கூட்டம் ஒன்று அவிலாவில் அருளப்பர் தங்கியிருந்த இல்லத்தில் புகுந்து அவரைச் சிறை செய்தது. ஏற்கெனவே சீர்திருத்தத்திற்கு எதிராயிருந்த சபைத் தலைவர்கள் புனிதரை அவிலாவை விட்டு வெளியேறி. தம்முடைய முதல் மடத்திற்குத் திரும்பிச் செல்ல உத்தரவிட்டிருந்தார்கள். ஆனால் அவர்களை விட அதிக அதிகாரமுள்ள ஸ்பெயின் திருத்தூதர் தம் சீர்திருத்தத்தை அங்கீகரித்திருந்தார் என்ற அடிப்படையில் புனிதர் இதை ஏற்க மறுத்திருந்தார். கைது செய்யப்பட்ட அருளப்பர், அச்சமயத்தில் 40 துறவிகளோடு காஸ்டைலில் முன்னணி மடமாக இருந்த டொலேடோ கார்மெல் மடத்திற்கு அவரைக் கொண்டு சென்றார்கள்.

அருளப்பரின் வாதங்களை மீறி, அவர் சபைத் தலைவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வில்லை என்று குற்றஞ்சாட்டி, துறவிகளின் "நீதிமன்றம்" அவரைச் சிறையில் அடைத்தது. ஒரு மடத்தில் சிறை வைக்கப்பட்ட அவர் குறைந்தது வாரம் ஒரு முறை கசைகளால் அடிக்கப்படுவது போன்ற சித்திரவதைகளை அனுபவித்தார்; பத்தடிக்கு ஆறடியுள்ள ஒரு மிகச் சிறிய அறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அறையில் விளக்கு ஏதும் இல்லாததால், அறைச் சுவரிலிருந்த ஒரு துளை வழியாக வந்த வெளிச்சத்தில்தான் அவரால் கட்டளை ஜெபத்தைச் சொல்ல முடிந்தது. மாற்ற உடையில்லை. தண்ணீரில்லை, அப்பமும், உப்பு மீன் துண்டுகளும் தேவைக்கும் குறைவாகவே கிடைத்தன.

இச்சமயத்தில்தான் அவர் புகழ்பெற்ற ஞான சங்கீதம் என்னும் கவிதைகளை எழுதினார். தேவையான காகிதத்தை அறைக்குக் காவலாயிருந்த துறவி இரகசியமாகக் கொண்டு வந்து தந்தார். தம் அறைக்கு அடுத்த அறையிலிருந்த ஒரு சிறு ஜன்னல் வழியாக 1578 ஆகஸ்ட் மாதத்தில், அதாவது எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர் தப்பித்துச் சென்றார்.

ஆறு வார மருத்துவ உதவி பெற்றபின் அவர் தம் சீர்திருத்தங்களைத் தொடர்ந்தார். 1578 அக்டோபரில், பாதணிகள் அணியாத கார்மெல் சபையினர் ஆல்மாடாவரில் நடத்திய கூட்டத் தில் அவர் பங்குபெற்றார். மற்ற கார்மெல் துறவியரின் எதிர்ப்பின் விளைவாக, முறைப்படி கார்மெல் சபையினரிடமிருந்து பிரிந்து வாழ தங்களை அனுமதிக்கும்படி அவர்கள் பாப்பரச ரிடம் விண்ணப்பித்தார்கள். இந்தக் கூட்டத்தில் அருளப்பர் எல் கல்வாரியோ என்ற மடத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்தபோது, தம் "ஞான சங்கீதத்திற்கு" உரை எழுதினார்.

1579-ல் அவர் அந்தலூஸியாவின் பாதணிகள் அணியாத துறவிகளுக்கான புனித பேசில் கல்லூரியின் அதிபராகும்படி பேஸா என்ற நகரத்திற்கு மாற்றப்பட்டார். இப்பதவியில் 1582 வரை இருந்தார். 1580ஆம் ஆண்டில், கார்மெல் சபையினரிடையே நிலவிய பிரச்சினைக்குத் தீர்வு பிறந்தது. ஜூன் 22 அன்று பாப்பரசர் 13ஆம் கிரகோரியார் புதிதாய்ச் சீர்திருத்தப்பட்ட பாதணிகள் அணியாத கார்மெல் சபையினரை அதிகாரபூர்வமாகத் தனிச் சபையாக ஆக்கினார். 1581 மார்ச் 3 அன்று ஆல்கலாவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அவர் சபைத் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1581 நவம்பரில் சேசுவின் ஆனா என்னும் சகோதரி க்ரானடாவில் ஒரு மடத்தை ஸ்தாபிக்க உதவும்படி அருளப்பர் தெரேசாவால் அங்கே அனுப்பப்பட்டார். சகோதரி ஆனா 1582 ஜனவரி யில் அங்கே போய்ச் சேர்ந்து மடத்தை ஸ்தாபிக்க, ஆலாம்பிராவில் இருந்த மடத்தில் அருளப்பர் தங்கியிருந்தார். 1582-ல் அந்த மடத்தில் அதிபராகவும் ஆனார். அவர் அங்கிருந்தபோது, அந்த வருடத்தின் அக்டோபர் மாதத்தில் தெரேசம்மாள் மரணமடைந்ததை அவர் அறிந்துகொண்டார்.

1585-ல் அவர் அந்தலூசியாவின் மாகாண அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவர் எல்லா மடங்களையும் சந்திக்கும்படி அதிகப் பயணங்கள் மேற்கொள்ள நேரிட்டது. இந்தக் காலகட்டத்தில், இந்தப் பகுதியில் அவர் ஏழு ஆண்கள் துறவற மடங்களை நிறுவினார். இச்சமயத்தில் அவர் சுமார் 25,000 கி.மீ. தூரம் பயணம் செய்தார் என்று மதிப்பிடப்படுகிறது.

ஜூன் 1588-ல் அவர் சபை அதிபர் சுவாமி நிக்கோலஸ் டோரியா என்பவரின் மூன்றாம் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, காஸ்டைலின் ஸெகோவியாவுக்குத் திரும்பி வந்தார். ஆனால் டோரியா சபையில் ஏற்படுத்த விரும்பிய மாற்றங்களை அவர் விரும்பாததால் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, லா பெனுவேலா என்ற மடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே நோயுற்று, சிகிச்சைக்காக உபேலாவிலிருந்த மடத்திற்குச் சென்றார். அங்கே உடல் நிலை மோசமாகி, 1591, டிசம்பர் 14 அன்று அக்கி என்னும் தோல் நோயால் அவர் மரணமடைந்தார்.

1675, ஜனவரி 25 அன்று பாப்பரசர் பத்தாம் கிளமெண்ட் அவருக்கு முத்திப்பேறு பட்டம் வழங்கினார். 1726 டிசம்பர் 27 அன்று பாப்பரசர் 13-ஆம் ஆசீர்வாதப்பர் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.

புனிதர் எழுதிய முக்கியமான புத்தகங்கள்: "ஞான சங்கீதம், ""ஆன்மாவின் இருண்ட இரவு." "கார்மெல் மலையேற்றம்"ஆகியவையாகும்.


திருநாள்: நவம்பர் 24.


Source: மாதா பரிகார மலர்-/- நவம்பர் - டிசம்பர், 2023



சனி, 18 நவம்பர், 2023

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 14 - அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ (Margaret Clitherow)


அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ





 அன்று 1586 மார்ச் 25-ம் நாள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாள். 30 வயதே நிரம்பிய குடும்பத் தலைவியான மார்க்கரேட் கிளித்தேரோ என்ற பெண்மணி தண்டனை

நிறைவேற்றப்படும் இடத்திற்கு மிகவும் அமைதியாக ஆனால் மிகுந்த உற்சாகத்துடன் வந்தாள். அவளது நிர்மலமான முகத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிய, சற்று நின்றவள் குனிந்து தனது காலுறைகளையும், காலணிகளையும் கழற்றி வெகு தொலைவில் நின்றுகொண்டிருந்த தனது மகள் அன்னாளிடம் கொடுத்து அனுப்பினாள். அவளும் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை அவள் உள்ளத்தில் எழவே, மகளுக்கு அந்தப் பரிசு!

இரவு வெகு நேரம் விழித்திருந்து பாப்பரசருக்காகவும், கர்தினால்மார், ஆயர்கள், குருக்கள், ஏன் தன்னை சாவுக்குத் தீர்ப்பிட்ட இங்கிலாந்து அரசி எலிசபெத்திற்காகவும் மன்றாடியிருந்தவளது உள்ளம் ஜெபித்துக்கொண்டே இருந்தது. அங்கே மேடையில் இருந்த நகர அதிகாரி அவளது குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்கத் தூண்டவே, "இல்லை, இல்லை அதிகாரியவர்களே!, நான் எனது ஆண்டவர் சேசுவின் அன்பிற்காக சாகப் போகிறேன்" என்று பதிலளித்தாள்.

பின்னர் அவள் கூர்மையான கற்பாறையில் கிடத்தப்பட அவளது கரங்கள் சிலுவை அடையாளம் போல விரிக்கப்பட்டு இரு கம்பங்களில் கட்டப்பட, அவள் உடலில் ஒரு இரும்பு கதவு போடப்பட்டது. அந்த கதவு அவளது தேகத்தை மறைத்துக் கொள்ள அதன் மீது பெரும் பாரச் சுமைகள் போடப்பட்டன! அந்த பாரச் சுமையோடு இரும்பு கதவு அவளை நசுக்க அந்த இளம் பெண்ணின் மெலிந்த, மெல்லிய தேகம் துடித்தது! அவள் அனுபவிக்கும் அந்த வேதனை கைகளின் அசைவுகளில் தெரிய, எந்த விதமான அழுகையோ, அவலக் குரலோ எழவில்லை. 15 நிமிடங்கள் அந்த பாரத்தால் நசுக்கப்பட்ட அவளது கரங்கள் "சேசு! சேசு! என் மீது இரக்கம் வையும்" என்ற இறுதி மன்றாட்டோடு மெல்ல மெல்ல அசைவின்றி விரைத்துப் போயின! ஆம்! அந்த பெண்மணி மரணமடைந்து விட்டாள். உடல் நசுக்கப்பட்டு வேதசாட்சியமடைந்து விட்டாள்!

அவள் செய்த குற்றம் என்ன? கத்தோலிக்கக் குருக்களை தனது இல்லத்தில் பாதுகாத்து காப்பாற்றியது! கத்தோலிக்க பூசையைக் கண்டது!! 

யார் அந்த வேதசாட்சி? அவள் தான் அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோ, "யார்க் நகரின் முத்து" என்று போற்றப்படும் மார்க்கரேட் 1556-ம் வருடம் யார்க் நகர ஷெரிப்பின் தலைவரான தாமஸ் மிடில்டோன் என்பவரின் மகளாகப் பிறந்தவர். புராட்டஸ்டாண்ட் மதத்தைச் சார்ந்த அவள் தமது 15-வது வயதில் செல்வந்தரான ஜான் கிளித்தேரோவுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டாள். இயல்பிலேயே புண்ணியவதியாகத் திகழ்ந்த அவள் திருமணமான 3 வருடங்களில் கணவனின் உத்தரவோடு சத்திய வேதத்திற்கு மனந்திரும்பினாள்.

அக்காலத்தில் 8-ம் ஹென்றியால் ஏற்படுத்தப்பட்ட புராட்டஸ்டாண்ட் பதிதம் நிலைகொண்டிருந்தது. தற்போது ஆட்சி புரிந்த முதலாம் எலிசபெத்தும் கொடூரமாக கத்தோலிக்கத் திருச்சபையை துன்புறுத்தி வந்தாள். எவ்வளவுக்கென்றால், 1585-ல் இங்கிலாந்து நாட்டில் கத்தோலிக்கக் குருக்கள் எவருக்கும் இருப்பிடமோ, வேறு எந்த உதவியும் செய்யக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தையே பிரகடனப்படுத்தினாள். ஏற்கனவே கத்தோலிக்கப் பூசையில் பங்கேற்கவோ. கத்தோலிக்கப் பிரசுரங்களைக் கொண்டிருக்கவோ கூடாது என்ற கடுமையான தடை இருப்பதால் இங்கிலாந்தில் கத்தோலிக்கக் கிறீஸ்தவர்கள் துன்புற்றனர். வெளிப்படையாக திவ்விய பலிபூசை நிறைவேற்ற குருக்களும், விசுவாசிகளும் அஞ்சினர். அதற்கான பதுங்கும் இடத்தைத் தேடவேண்டி வந்தது.

கத்தோலிக்க விசுவாசத்தில் உறுதியாக இருந்த மார்க்கரேட் தனது இல்லத்திலேயே பதுங்கும் அறைகளை அமைத்து அங்கே குருக்களைப் பாதுகாத்து, அவர்கள் நிறைவேற்றும் பூசையைக் கண்டுவந்தாள். அவள் எந்தவிதமான அச்சத்திற்கும் இடம் தராமல் "சர்வேசுரனின் வரப்பிரசாதத்தால் எவ்வளவு குருக்கள் வரமுடியுமோ, அவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கடவுளின் கத்தோலிக்க ஊழியத்துக்கு எவ்வளவு முடியுமோ அனைத்தையும் செய்வேன்" என்று அடிக்கடிக் கூறுவாள்.

அவளது கணவன் தனது மனைவியின் அனைத்து காரியங்களிலும் உறுதுணையாக இருந்தார். தங்களது பிள்ளைகளான ஹென்றி, வில்லியம், மற்றும் அன்னாளை கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்க்கவும் விரும்பினர். இதற்காக மூத்த மகன் ஹென்றியை கத்தோலிக்க பிரான்ஸ் நாட்டில் கல்வி கற்க அனுப்பி வைத்தாள். அதுவே அரசு அதிகாரிகள் அவள் மீது சந்தேகம் கொள்ள காரணமாயிற்று. அதனால் அவளது இல்லம் படை வீரர்களால் சோதிக்கப்படவே, பூசை புத்தகங்களும், ஆயத்தங்களும். பூசை மந்திரங்களும் இறுதியாக குருக்களின் பதுங்கு அறைகளும் கண்டுபிடிக்கப்படவே மார்க்கரேட் சிறைபிடிக்கப்பட்டாள்.

சொந்தப் பிள்ளைகள் சாட்சியாக்கப்பட்டதால் கொலை பாவம் அவர்கள் மீது விழ விரும்பாத மார்க்கரேட் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்து, தான் செய்த காரியங்களுக்கு நியாயம் கற்பித்தாள். தனது கத்தோலிக்க விசுவாசத்தை வீரத்தோடு அறிக்கை யிட்டாள். அவள் விசாரணைக்கு மறுத்ததால் இங்கிலாந்து சட்டப்படி அவள் நசுக்கப்பட்டு மரணமடைய தீர்ப்பிடப்பட்டாள். அதனைக் கேட்டு பெரு மகிழ்ச்சியடைந்த அவள் ஓ! சர்வேசுரா உமக்கு நன்றி. இத்தகைய நல்ல மரணத்திற்கு நான் தகுதியானவள் அல்ல" என்று கூறினாள்.

மரண தண்டனை பெறும்போது அவள் கர்ப்பிணியாக இருந்தாலும் அவள் கொண்ட கத்தோலிக்க விசுவாசத்துக்காக நசுக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

அவள் கொல்லப்படும் போது ஒரு சுவையான சம்பவம் நடந்தது. மரண தண்டனை நிறைவேற்றும் சமயத்தில் சற்று நேரம் ஜெபிக்க விரும்பிய அவளிடம் அருகே இருந்த புராட்டஸ்டாண்ட் போதகன் "மார்க்கரேட் நானும் உன்னோடு ஜெபிக்கிறேன்" என்று கூறினான். அதற்கு உடனே "இல்லை, இல்லை என்னோடு நீ ஜெபிக்க முடியாது. பதிதர்களோடு விசுவாசிக்குப் பங்கில்லை. நான் உமக்காக ஜெபிக்கிறேன். நமது அரசி எலிசபெத்துக்காக அவள் மனந்திரும்பி, கத்தோலிக்க மதத்திற்கு வரவும், திருச்சபைக்கு சுயாதீனம் கொடுக்கவும் ஜெபிக்கிறேன்" என்று மறுப்புத் தெரிவித்தவள். சற்று நேரம் ஜெபித்தபின் தன்னையே கொலைஞர்களிடம் கையளித்தாள். கூரியக் கற்பாறையில் கிடத்தி, உடல் மேல் கனமான இரும்புக் கதவை போட்டு அதில் அதிகமான பாரத்தை வைத்து உடல் நசுக்கப்பட்டு அவள் வேதசாட்சியத்தைத் தழுவினாள்.

அவளது குழந்தைகளான ஹென்றி, வில்லியம் ஆகியோர் கத்தோலிக்கக் குருவாகவும், ஒரே மகள் அன்னாள் பிரான்ஸ் நாட்டில் லூவேன் நகர் அர்ச், உர்சுலா கன்னியர் சபையில் சேர்ந்தாள்.

பாப்பரசர் 6-ம் சின்னப்பர் 1970, அக்டோபர் 25-ம் நாளன்று அவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம் வழங்கினார்.

அர்ச். மார்க்கரேட் கிளித்தேரோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


source: Salve Regina - March 2008 issue.


To Read more about saints in Tamil - Click Here


திங்கள், 23 அக்டோபர், 2023

ஜெபமாலை மீது பக்தியுள்ளவர்களுக்கு தேவமாதா அளித்த வாக்குறுதிகள்

 ஜெபமாலை மீது பக்தியுள்ளவர்களுக்கு அனுகூலமாக பரிசுத்த தேவமாதா அர்ச். சாமிநாதருக்கு அளித்த வாக்குறுதிகள்


1. என் ஜெபமாலையை அன்போடு சொல்லி வருகிறவர்களுக்கு என்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பையும் வரப்பிரசாதங்களையும் கொடுப்பேன். 2. ஜெபமாலையை விடாமல் தொடர்ந்து செபிக்கிறவர்கள் சில விசேஷ வரங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். 3. நரகத்திற்கெதிரான வலிமையுள்ள கேடயமாக இருக்கும் என் ஜெபமாலை. தீய பழக்கங்களை அழிக்கும். பாவத்திலிருந்து விடுவிக்கும், தப்பறைகளை ஒழிக்கும். 4. ஜெபமாலை, புண்ணியங்களையும் நற்கிரியைகளையும் வளர்க்கும். ஆன்மாக்களுக்கு மிக ஏராளமான தேவ இரக்கத்தைப் பெற்றுத்தரும். உலகப் பற்றுள்ள ஆன்மாக்கள் கடவுளை நேசிக்கும்படி செய்யும். ஆன்மாக்கள் பரலோக நித்திய நன்மைகளை விரும்பும்படி அவர்களை உயர்த்தும். ஜெபமாலையால் ஆன்மாக்கள் தங்களை அர்ச்சித்துக் கொள்ள மிகவும் விரும்புகிறேன். 5. ஜெமாலையின் வழியாக தங்களை என்னிடம் ஒப்படைக்கிறவர்கள் அழிவுறமாட்டார்கள். 6. தேவ இரகசியங்களை பக்தியுடன் தியானித்தபடியே ஜெபமாலை சொல்லுகிறவர்களை எந்தத் துர்ப்பாக்கியமும் மேற்கொள்ள மாட்டாது. அவர்களுக்குத் துர் மரணம் நேரிடாது. பாவத்திலிருப்பவர்கள் மனந்திரும்புவார்கள். நல்லவர்கள் தேவ இஷ்டப்பிரசாதத்தில் வளர்ந்து நித்திய வாழ்வுக்கு தகுதியுள்ளவர்களாவார்கள். 7. உண்மையான அன்பு கொண்டு ஜெமாலையைச் செய்து வருகிறவர்கள் திருச்சபையின் கடைசி ஆறுதல்கள் இன்றியாவது தேவ இஷ்டப்பிரசாதமில்லாமலாவது மரண மடைய மாட்டார்கள். 8. என்னுடைய ஜெமாலையைச் செபித்து வருகிறவர்கள் தங்கள் வாழ்நாளிலும், மரண நேரத்திலும் கடவுளின் வெளிச்சத்தைக் காண்பார்கள். அவருடைய வரப்பிரசாத முழுமையைக் கண்டுகொள்வார்கள். புனிதர்களுடைய பேறு பலன்களில் பங்கடைவார்கள். 9. என் ஜெபமாலை மீது அன்புள்ள ஆன்மாக்களை வெகு துரிதமாக உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டுக்கொள்வேன். 10. என் ஜெமாலையின் உண்மைப் புதல்வர்களாயிருப்பவர்கள் பரலோகத்தில் மிகுந்த மகிமையடைவார்கள். 11. ஜெபமாலையின் வழியாக நீங்கள் கேட்பவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள். 12. என் ஜெபமாலைப் பக்தியைப் பரப்புகிறவர்கள் என் மூலமாக தங்கள் எல்லா அவசரங்களிலும் உதவி பெறுவார்கள். 13. ஜெபமாலையைக் கைக்கொண்டுள்ள யாவரும், வாழ்விலும் மரணத்திலும், பரலோக அர்ச்சிஷ்டவர்களை தங்கள் சகோதரர்களாக அடைந்து கொள்ளும்படியான வரத்தை என் திருக்குமாரனிடமிருந்து வாங்கியுள்ளேன். 14. திளமும் தவறாமல் என் ஜெபமாலையைச் செபித்து வருகிறவர்கள் என் அன்புக் குழந்தைகளாயும் சேசுவின் சகோதரரும் சகோதரிகளுமாயிருப்பார்கள். 15. என் ஜெபமாலைமேல் பக்திகொண்டிருப்பது மோட்சம் செல்வதற்கு ஓர் பெரிய உறுதிப்பாடாகும்.

சனி, 30 செப்டம்பர், 2023

October 2 - Feast of Guardian Angel

 அக்டோபர் 2

காவலான சம்மனசுக்களின் திருநாள்



பிரவேசம்: சங். 102. 20

ஆண்டவருடைய சம்மனசுக்களே, அவருடைய வார்த்தையைக் கேட்டு அவரு டைய சொற்படி நடக்கும் பலமும் வல்லபமும் உள்ள நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள். என் ஆத்துமமே, ஆண்டவரை வாழ்த்தி துதிப்பாயாக. என்னுள் இருக்கும் சகல தத்துவங்களே, அவருடைய திருநாமத்தை வாழ்த்துங்கள். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, வாக்குக் கெட்டாத தேவ பராமரிப்பினால் எங்களுக்கு காவலாகத் தேவரீருடைய பரிசுத்த சம்மனசுக்களை அனுப்பி வைக்கத் தயை செய்தருளினீரே. நாங்கள் இம்மையில் அவர்களுடைய ஆதரவினால் என்றும் காப்பாற்றப்பட்டு, மறுமையில் அவர்களுடைய கூட்டத்தில் நித்தியமாய் மகிழும்படி உம்மை இரந்து மன்றாடிக் கேட்போருக்கு கிருபை புரிந்தருளும் . - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (யாத். 23. 20-23)

ஆண்டவர் இவ்விதம் திருவுளம் பற்றுகிறார் : உனக்கு முன் நடந்து உன் வழியில் உன்னைப் பாதுகாக்கிறதற்கும், நாம் உனக்காக  முஸ்திப்புச் செய்த ஸ்தானத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும் இதோ நாம் ஒரு தூதனை அனுப்புவோம். அவரைச் சங்கித்திருக்கவும், அவருடைய வாக்குக்குச் செவிகொடுக்கவும் அவருக்குப் பயந்து நடக்கவுங்கடவாய். ஏனெனில் நீ பாவஞ் செய்தால் அவர் பொறுப்பதில்லை. நமது நாமம் அவரிடத்திலுண்டு. நீ அவரது வாக்குக்குச் செவிகொடுத்து நாம் திருவுளம்பற்றுகிறதெல்லாம் அனுசரிப்பா யாகில் நாம் உன் பகையாளிகட்குப் பகையாளியாகி உன்னை உபாதிப் பவர்களை உபாதிப்போம்.  நமது தூதன் உனக்கு முன்னே செல்லுவார்.

படிக்கீதம்: (சங். 90. 11-12)

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காக சர்வேசுரன் தம்முடைய சம்மனசுக்களுக்கு கட்டளையிட்டார். – உன் பாதம் கல்லில் இட றாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 102. 21) ஆண்டவருடைய சி;த்தத்தின் படியே நடக்கிற அவருடைய சேனைகளும் ஊழியர்களுமான தூதர்களே, நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள். அல்லேலுய்யா

சுவிஷேசம் (மத். 18. 1-10)

அக்காலத்தில் சீஷர்கள் சேசு நாதரிடத்தில் வந்து: பரலோக இராச்சியத்திலே அதிகப் பெரியவன் யாரென்று நினைக்கிறீர்? என்றார்கள். அப்பொழுது சேசு நாதர் ஓர் பாலனை அழைத்து, அவனை அவர்கள் நடுவில் நிறுத்தி: . நீங்கள் மனந்திரும்பி, பாலர்களைப் போல் ஆகாவிட்டால், பரலோக இராச்சியத்திலே பிரவேசிக்கமாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பாலனைப் போல தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக இராச்சியத்தில் அதிகப் பெரியவனாயிருக்கிறான். இப்படிப் பட்ட பாலன் ஒருவனை என் பெயராலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். ஆனால் என்பேரில் விசுவாசமுள்ள இச்சிறியோரில் ஒருவனுக்கு இடறலாயிருப்பவன் எவனோ, அவன் கழுத்திலே கழுதை சுழற்றும் ஏந்திரக் கல்லைக்கட்டி ஆழ்ந்த சமுத்திரத்தில் அவன் அமிழ்த்தப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். இடறலினிமித்தம் உலகத்துக்கு ஐயோ கேடு! ஏனெனில் இடறல்கள் கட்டாயம் வந்துதான் தீரும்: ஆயினும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ கேடு!  ஆகையால் உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலாயிருந்தால், அதைத் தறித்து உனக்குத் தூரமாய் எறிந்து போடு. நீ இருகைகளை அல்லது இரு கால்களை உடையவனாய் நித்திய அக்கினியில் தள்ளப்படுவதைவிட, முடவனாய் அல்லது நொண்டியாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். உன் கண்ணானது உனக்கு இடற லாயிருந்தால், அதைப் பிடுங்கி உனக்குத் தூரமாய் எறிந்துபோடு. இரு கண்ணுள்ளவனாய் அக்கினிச் சூளையில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். இந்தச் சிறுவர்களில் ஒருவனையும் புறக்கணியாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் மோட்சத்திலே அவர்களுடைய சம்மனசுகள் பரமண்டலங்களிலேயிருக்கிற என் பிதாவின் சமுகத்தை இடைவிடாமல் தரிசிக்கிறார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 102. 20-21)

சகல சம்மனசுக்களே, ஆண்டவருடைய வார்த்தையைக்கேட்டு அவருடைய சொற்படி நடக்கும் அவருடைய ஊழியர்களே, நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள்.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத் சம்மனசுக்களுக்கு வணக்கமாக நாங்கள் உமக்குச் சமர்ப்பிக்கும் கொடைகளைக் கையேற்றுக் கொள்ளும். அவர்களுடைய இடைவிடாத ஆதரவினால் நாங்கள் இவ்வுலக இடையூறுகளி னின்று விடுவிக்கப்பட்டு, நித்திய சீவியம் வந்து அடையத் தயவாய்த் திருவருள் புரிந்தருளும்.. – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (தானி. 3. 38)

ஆண்டவருடைய சம்மனசுக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங் கள். அவருக்கு தோத்திரம்பாடி, அவரை சதாகாலமும் எல்லாவற்றிற்கும் மேலா கப் போற்றுங்கள்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, தேவர்Pருடைய பரிசுத்த சம்மனசுக்களின் திருநாளில் ஆனந்தம் கொண்டாடித் தெய்வீக பரம இரகசிய அநுமானங்களை உட்கொண்டோம். அவர்களுடைய பாதுகாப்பால் நாங்கள் விரோதிகளுடைய கண்ணிகளினின்று என்றும் விடுதலையடையவும், சகல பொல்லாப்புகளினின்றும் தற்காக்கப்படவும் தேவரீரை மன்றாடுகிறோம்.. – தேவரீரோடு …


 


October 3 - St. Therese of Child Jesus

அக்டோபர் 3

குழந்தை சேசுவின் அர்ச். தெரேசம்மாள்

போதகநாடுகளின் பாதுகாவலி




பிரவேசம்: உன்னத சங். 4. 84

லீபானின்று வருவாய் மணவாட்டியே, லீபானின்று வருவாய். என் இருதயத்தை புண்ணாக்கி விட்டாய். என் சகோதரியே, மணவாட்டியே, என் இருதயத்தைக் காயப்படுத்தினாய். (சங். 112. 1) பிள்ளைகளே ஆண்டவரை துதியுங்கள். ஆண்வடருடைய திருநாமத்தை புகழுங்கள். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, சிறுவர்களைப்போல் ஆகாவிட்டால் நீங்கள் பரலோக இராச்சயத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று திருவாய் மொழிந்தரு ளினிரே. இருதயத் தாழ்ச்சியிலும் நேர்மையிலும் கன்னிகையான அர்ச். தெரேசம்மாளின் முன்மாதிரியை இவ்வுலகில் பின்பற்றி நடந்து, நித்திய சம்பாவனையை அடைந்துகொள்ள திருவருள் புரிந்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.  - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் 

நிருபம்;  (இசை. 66. 12-14)

ஆண்டவர் இவ்விதம் திருவுளம் பற்றுகிறார் : இதோ நாம் சமாதானத்தை ஓர் நதியைப்போலும், சனங்களுடைய மகிமையை மடைபுரண்ட வெள்ளம்போலும் அவள் பேரில் ஒடவிடுவோம்; அவள் பாலை அருந்துவீர்கள், மாரோடு அணைக்கப் படுவீர்கள், மடியில் சீராட்டப்படுவீர்கள். தாயானவள் தன் மகவைச் சீராட்டுவது எங்ஙனமோ அப்படியே உங்களுக்கு ஆறுதல் செய்வோம், நீங்களும் எருசலேமில் சமாதானமடைவீர்கள். இவைகளை நீங்கள் பார்ப்பீர்கள், உங்கள் இருதயமும் சந்தோஷங் கொள்ளும்; உங்கள் எலும்புகள் புல்லைப்போல் பச்சை கொண்டெழும்; ஆண்டவர் தம் ஊழியர்கள் சார்பாக தம் வல்லபத்தை அறியப் பண்ணுவார்.

படிக்கீதம்: (மத். 11: 25)

பிதாவே பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவரே, நீர் இவற்றை ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து, சிறியோர்களுக்கு வெளிபடுத்தி யதால் உம்மை துதிக்கிறேன். – (சங். 70: 5) ஆண்டவரே, என் இளமை துவக்கி என் நம்பிக்கையாய் இருக்கிறீர்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சர். பிர. 39. 17-19) ஆற்றின் கரையில் நடப்பட்ட ரோசாவைப்போல பலன் கொடுங்கள். லீபானைப்போல இனிய வாசனையக் கொடுங்கள். லீலியைப்போல் பூக்களை புஷ்பியுங்கள். வாசனையை வீசுங்கள். தளிர்த்து அழகை அணிந்து கொள்ளுங்கள். சங்கீதத்தை கூடிப் பாடுங்கள். ஆண்டவரை அவருடைய செய்கைகளைப் பற்றி வாழ்த்துங்கள். அல்லேலுய்யா

சுவிஷேசம் (மத். 18. 1-10)

அக்காலத்தில் சீஷர்கள் சேசுநாதரிடத்தில் வந்து: பரலோக இராச்சியத்திலே அதிகப் பெரியவன் யாரென்று நினைக்கிறீர்? என்றார்கள். அப்பொழுது சேசுநாதர் ஓர் பாலனை அழைத்து, அவனை அவர்கள் நடுவில் நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பி, பாலர்களைப் போல் ஆகாவிட்டால், பரலோக இராச்சியத்திலே பிரவேசிக்க மாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பாலனைப் போல தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக இராச்சியத்தில் அதிகப் பெரியவனாயிருக்கிறான். என்று திருவுளம் பற்றினார்.

ஒப்புக்கொடுத்தல் (லூக்.1. 46-49)

என் ஆத்தும் ஆண்டவரை தோத்திரஞ் செய்கின்றது. என் இரட்சணியமாகிய சர்வேசுரனிடத்தில் என் ஆத்துமம் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது. ஏனெனில் தமது அடிமையானவர்களுடைய தாழ்ச்சியை இரக்கத்துடன் நோக்கி னார். வல்லபமிக்கவர் மகத்தானவற்றை என்னிடத்திற் செய்தருளுனினார்.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய கன்னிகையான அர்ச். தெரேசம்மாளின் பக்தியுள்ள வேண்டுதல் எங்களுடைய பலியை உமக்கு ஏற்றதாகக்கடவது. அவளுடைய மகிமையைக் குறித்து சிறப்பாக அப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறதினால் அவளுடைய பேறுபலன்களை முன்னிட்டு அது உமக்கு உகந்ததாகவும் இருக்கும்படி தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (உபா. 32. 10,21)

அவர் அவளைச் சுற்றி நடத்தி, அவளுக்குப் போதித்துத் தன் கண்மணியைப் போல் அவளைக் காத்தருளினார். கழுகு தன் சிறகுகளை விரிப்பதுபோல் அவளை எடுத்துக் கொண்டு தன் தோள்களின்மேல் சுமந்துபோனார். ஆண்டவர் ஒருவரே அவளை நடத்தினார்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, உம்முடைய கன்னிகையான அர்ச். தெரேசம்மாள் தன்னை மனிதருக்காக சிநேகத்தின் பலியாகத் தேவரீருக்கு தகனமக்கிய அச் சிநேகத்தின் அக்கினியால் இந்த திவ்விய பரம இரகசியம் எங்களைப் பற்றி எரிக்கக்கடவது. – தேவரீரோடு …




 

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

October 1 - St. Remigius அர்ச். ரெமிஜியார்

 


அக்டோபர் 1

அர்ச். ரெமிஜியார்

மேற். துதியர்.

பிரவேசம்: சங். 45. 30

ஆண்டவர் அவருடன் சமாதான உடன்படிக்கையைச் செய்து கொண்டு குருத்துவத்தின் மகிமை அவருக்கு நித்தியமாய் இருக்கும்படி அவரைத் தலை வராக நியமித்தார். (பா. கா. அல்லேலுய்யா, அல்லேலுய்யா) (சங். 131. 1) ஆண்டவரே, தாவீதையும் அவருடைய மகா  சாந்தகுணத்தையும் நினைத்தருளும். – பிதாவுக்கும். . 
.
சபைச் செபம்.

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, தேவரீருடைய துதியரும், மேற்றிராணியாருமான முத்திப்பேறு பெற்ற அர்ச். ரெமிஜீயாருடைய வணக்கத்துக்குரிய திருநாள் எங்கள் பக்தியைப் பெருக்கி, எங்கள் இரட்சணியத்துக்கு உதவியாயிருக்க செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (சர். 44. 16-27, 45. 3-20)

இதோ! பெரிய குரு தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார் ; நீதிமானாகக் காணப்பட்டார்; கோப காலத்தில் சமாதான பந்தனமானார்.  உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்குச் சரி யொத்தவர் எவரும் காணப்படவில்லை. ஆனதால், ஆண்டவர் சத்தியஞ் செய்து, இவருடைய கோத்திரத்தின் நடுவே இவரை அதிகரிக்கச் செய்தார். சகல சாதிகளுடைய ஆசிர்வாதத்தையும்  இவருக்குக் கொடுத்து, இவர் சிரசின் மேல் தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார். தம்முடைய ஆசிர்வாதத்தைக் கொண்டு ஆண்டவர் இவரை அங்கீகரித்துக்கொண்டார்; தமது இரக்கத்தை இவருக்காக வைத்திருந்தார்; இவரும் ஆண்டவருடைய சமூகத்தில் கருணையைக் கண்டடைந்தார். அரசர்கள் முன்பாக ஆண்டவர் இவரை மகிமைப்படுத்தி, மகிமையின் கிரீடத்தைச் சூட்டினார். நித்திய உடன் படிக்கையை இவருக்கு நியமித்தார்; இவருக்கு மகா குருத்துவத்தைக் கொடுத்தார்; மகிமையில் இவரைப் பாக்கியவானாக்கினார். குருத்துவத் தொழிலை நிறைவேற்றவும், அவருடைய நாமத்தினால் புகழ் பெறவும், நல்ல சுகந்தமுள்ள தூபத்தைத் தக்கவிதமாய் அவருக்கு ஒப்புக் கொடுக்கும் படியாகவே.

படிக்கீதம்: (சர். 44: 16)

இதோ! பெரிய குரு, இவர் தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார். – (சர். 20) உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்கு சரியொத்தவர் ஒருவரும் காணப்படவில்லை.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 109. 4) நீர் மெல்கிசெதேக்கின் முறைப் படி நித்தியத்திற்கும் குருவாயிருக்கிறார். அல்லேலுய்யா

சுவிஷேசம் (மத். 25. 14-23)

அக்காலத்தில் சேசுநாதர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரலோக இராச்சியமானது புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போன ஒரு மனிதன் தன் ஊழியரை அழைத்து அவர்களிடத்தில் தன் திரவியங்களை ஒப்புவித்தது போலாகும். அவன் ஒருவனுக்கு ஐந்து தலேந்தும், வேறொருவனுக்கு இரண்டு தலேந்தும், இன்னொருவனுக்கு ஒன்றுமாக, அவனவனுடைய சக்திக்குத் தக்கபடி கொடுத்து, உடனே பிரயாண மாய்ப் போனான். ஐந்து தலேந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு உழைத்து, வேறு ஐந்தைச் சம்பாதித்தான். அவ்வண்ணமே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வேறு இரண்டைச் சம்பாதித்தான். ஒன்றை வாங்கினவனோ போய், பூமியைத் தோண்டித் தன் எஜமானனுடைய பணத்தைப் புதைத்து வைத்தான். வெகுகாலத்துக்குப்பின் அந்த ஊழியருடைய எஜமான் வந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து தலேந்தைப் பெற்றுக் கொண்டவன் அணுகி வேறே ஐந்து தாலந்தை ஒப்புக் கொடுத்து: ஆண்டவனே! ஐந்து தலேந்தை என் வசத்தில் ஒப்புவித்தீரே, இதோ வேறைந்தை ஆதாயமாகச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே! நீ சொற்பக் காரியங்களில் பிரமாணிக்கனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரி யாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.  அப்படியே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே! என் வசத்தில் இரண்டு தலேந்தை ஒப்புவித்தீரே, இதோ வேறிரண்டைச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே நீ கொஞ்சத்தில் பிரமாணிக்க முள்ளவனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரியாக ஸ்தாபிப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

நாம் நமது தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, நமது பரிசுத்த தைலத்தால் அவனை அபிஷேகஞ் செய்தோம். ஏனெனில் நமது கரம் அவனுக்கு உதவிபுரியும். நமது புஜம் அவனை உறுதிபடுத்தும்.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத்தவான்கள் எங்களை எப்பொழுதும் மகிழச் செய்வார்களாக. அதனால் அவர்களுடைய பேறுபலன்களைக் கொண்டாடுகிற நாங்கள் ஆதரவையும் பெற்றுக்கொள்ளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 12)

எஜமான் தன் பணிவிடைகாரருக்கு தக்க காலத்தில் படியளக்க அவர்களுக்கு மேல் அதிகாரியாக்கத்தக்க உண்மையும் விவேகியுமான செயலாளர் இவரே.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, பெற்றுக்கொண்ட கொடைகளுக் காக நன்றி செலுத்தும் அடியோர்கள் தேவரீருடைய துதியரும் மேற்றிராணி யாருமான முத்திபேறுபெற்ற அர்ச். ரெமிஜீயாருடைய  வேண்டுதலினால், இன்னும் அதிக நன்மைகளை அடைந்துகொள்ள எங்களுக்குத் திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு …


Previous

Next
 


Sacerdotes Dei - மேற்றிராணியரான வேதசாட்சி ஒருவர் பெயரால் - பொது 2

 மேற்றிராணியரான வேதசாட்சி ஒருவர் பெயரால் - பொது 2
Sacerdotes Dei

பிரவேசம்: தானி. 3. 84,87

சர்வேசுரனுடைய குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பரிசுத்தர்களே, இருதய தாழ்ச்சியுள்ளவர்களே சர்வேசுரனைத் துதியுங்கள். (தானி. 3. 57)  ஆண்டவருடைய சகல கிரியைகளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். அவரை என்றென்றைக்கும் துதித்து, எல்லாருக்கும் மேலாக உயர்த்துங்கள். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, தேவரீர் உம்முடைய வேதசாட்சியும் மேற்றிராணியாருமான முத்திப்பேறுபெற்ற (இன்னாருடைய) வருடாந்திரத் திருநாளில் மகிழச் செய்கிறீரே. அவருடைய பரலோகப் பிறப்பு நாளை கொண்டாகிற நாங்கள் அவருடைய பாதுகாவலையும் பெற்றுக் களிகூரத் தயவாய்க் கிருபை செய்தருளும். தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (2. கொரி. 1: 3-7)

சகோதரரே, சர்வேசுரனும் நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய பிதாவும், இரக்கங்களின் தகப்பனும், சர்வ ஆறுதலின் தெய்வமுமாயிருக்கிறவர் ஸ்துதிக்கப்படுவாராக. நாங்களே சர்வேசுரனிடத்தில் பெற்றுக்கொள்ளுகிற ஆறுதலைக் கொண்டு எவ்வித இடையூறுகளிலும் அகப்பட்டிருக்கிறவர்களுக்கு நாங்களும் ஆறுதல் வருவிக்கத் திராணியுள்ளவர்களாயிருக்கும்படிக்கு எங்க ளுக்கு நேரிடும் எல்லாத் துன்பங்களிலும் அவரே எங்களைத் தேற்றிவருகிறார். அதெப்படியென்றால், கிறீஸ்துநாதருடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறது போல், கிறீஸ்துநாதர் வழியாக எங்களுக்கு ஆறுதலும் பெருகிவருகிறது. நாங்கள் துன்பப்பட்டால் அது உங்களுடைய ஆறுதலுக்காகவும், இரட்சண யத்துக்காகவுந்தான். நாங்கள் ஆறுதலடைந்தால், அதுவும் உங்களுடைய ஆறுதலுக்காகத்தான். நாங்கள் தெம்படைந்தால், அது உங்களுடைய தெம்புக் காகவும் இரட்சணியத்துக்காகவுந்தான். அந்த இரட்சணியமானது நாங்கள் எவ்வித பாடுகளைப்படுகிறோமோ, அவைகளை நீங்களும் பட்டனுபவிக்கும்படி செய்கிறது. பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளாயிருக்கிறதுபோல, ஆறுதலுக்கும் பங்காளிகளாயிருப்பீர்களென்று நாங்கள் அறிந்திருக்கிறதினாலே, உங்கள் மேல் எங்களுக்கு உறுதியான நம்பிக்கையுண்டாயிருக்கிறது.

படிக்கீதம்: (சங். 8. 6-7)

மகிமையினாலும் கனத்தினாலும் அவருக்கு முடி சூட்டினார். – ஆண்டவரே உம்முடைய கரங்களின் செய்கைகளின்மேல் அவருக்கு அதிகாரம் கொடுத் தருளினீர்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஆண்டவர் முடி சூட்டிய குரு இவர்தான். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 113. 1-3)

ஆண்டவருக்கு அஞ்சி அவருடைய உற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் பாக்கியவான். அவனுடைய சந்ததி பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மை யானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும். மகிமையும் செல்வமும் அவன் வீட்டிலிருக்கும். அவடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

சுவிஷேசம் (மத். 16. 24-27)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீடர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னைத்தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்செல்லக் கடவான். ஏனெனில் தன் பிராணனைக் காப்பாற்ற மனதாயிருக்கிறவன் அதை இழப்பான். என்னைப்பற்றித் தன் பிராணனை இழப்பவனோவென்றால் அதைக் கண்டடை வான். மெய்யாகவே மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும், தன் ஆத்துமம் சேதப்பட்டால் அவனுக்குப் பிரயோசனமென்ன? அல்லது தன் ஆத்துமத்துக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மனுமகன் தம்முடைய பிதாவின் மகிமையிலே தன் தூதர்களோடு கூடவருவார். அப்பொழுது ஒவ்வொ ருவனுக்கும் அவனவன் கிரியைகளுக்குத் தக்கதாகப் பலன் அளிப்பார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

நாம் நமது தாசனாகிய தாவீரைத் தெரிந்துகொண்டு, நமது பரிசுத்த தைலத்தால் அவனை அபிஷேகம் செய்தோம். ஏனெனில், நமது கரம் அவனுக்கு உதவி புரியும். நமது புஜம் அவனை உறுதிபடுத்தும்.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு சமர்பிக்கப்பட்ட கொடைகளை தேவரீர் பரிசுத்த மாக்கியருளும். உம்முடைய வேதசாட்சியும் மேற்றிராணியாருமான முத்திப பேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலால் அவைகளின் நிமித்தம் எங்கள் பேரில் சாந்தியாகிக் கண்ணோக்கியருளும். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (சங். 20. 4)

ஆண்டவரே, அவர் சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, இச்சற்பிரசாத உட்கொள்ளுதல் எங்களைப் பாவத்தினின்று பரிசுத்தமாக்கித் தேவரீருடைய வேதசாட்சியும் மேற்றிராணியாருமான முத்திப் பேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலினால் எங்களை பரலோக மருந்தில் பங்குபற்றுவோராகவும் செய்யக்கடவது – தேவரீரோடு …


Previous                                               Download                                                           Next


சனி, 23 செப்டம்பர், 2023

September -29 St. Michael the Archangel

 செப்டம்பர் 29

அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவரின் 
ஆலய அபிஷேக திருநாள்



பிரவேசம் (சங். 102. 20)

ஆண்டவருடைய சம்மனசுக்களே, அவருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய சொற்படி நடக்கும் பலமும் வல்லபமும் உள்ள நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள். (சங். க்ஷை : 1) என் ஆத்துமமே, ஆண்டவரை வாழ்த்தித் துதிப்பாயாக் என்னுள் இருக்கும் சகல தத்துவங்களே, அவருடைய திருநாமத்தை வாழ்த்துங்கள்.- பிதாவுக்கும்.....

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, தேவரீர் சம்மனசுக்களுடையவும், மனிதர்களுடை யவும் பணிவிடைகளை ஆச்சரியமான ஒழுங்கோடு நடத்திக் கொண்டு வருகிறீரே பரலோகத்தில் தேவரீருக்கு இடைவிடாமல் ஊழியஞ்செய்து, வருகிற வர்களால் இப்பூலோகத்திலும் எங்களுடைய சீவியம் ஆதரித்துக் காப்பாற்றப் படும்படி தயவாய்க் கிருபை செய்தருளும்.- தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில் ...

நிருபம்  (காட்சி. 1. 1-5)

அந்நாட்களில் சீக்கிரத்தில் நடக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியர் களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, சர்வேசுரன் சேசுக்கிறீஸ்துவுக்கு ஒப்புவித் ததும், அவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியனாகிய அருளப்பருக்கு அறிவித்ததுமாகிய காட்சி: இவர் சர்வேசுரனுடைய வாக்கியத் துக்குச் சாட்சியஞ் சொல்லி, தாம் கண்ட யாவற்றையும் சேசுக்கிறீஸ்து நாதருடைய சாட்சியாக வெளிப்படுத்தினார். இந்தத் தீர்க்கதரிசனத்திலுள்ள வாக்கியங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவனும், இதிலே எழுதியிருக் கிறவைகளை அநுசரிக்கிறவனும் பாக்கியவான். ஏனெனில் காலம் சமீபித்திருக் கின்றது. அருளப்பன் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுவதாவது: இருக்கிறவரும், இருந்தவரும், இனி வருபவருமானவராலும், அவருடைய சிங்கா சனத்துக்கு முன்பாக நிற்கிற ஏழு அரூபிகளாலும், சேசுக்கிறீஸ்து நாதராலும் உங்களுக்கு இஷ்டப்பிரசாதமும் சமாதானமும் உண்டாவதாக. இவர் உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதல் பேறானவரும், பூமியின் இராஜாக்களுக்கு அதிபதியுமாயிருக்கிறார். இவர் நம்மைச் சிநேகித்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களினின்று நம்மை கழுவினார். 

படிக்கீதம்: (சங். 102. 20, 1)

ஆண்டவருடைய சம்மனசுக்களே, அவருடைய வார்த்தையைக் கேட்டு அவருடைய சொற்படி நடக்கும் பலமும் வல்லபமும் உள்ள நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்துங்கள். - என் ஆத்துமமே, ஆண்டவரை வாழ்த்தித் துதிப்பாயாக் என் உள்ளங்கள் யாவும் அவருடைய திருநாமத்தை வாழ்த்துங்கள்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா அதிதூதரான அர்ச். மிக்கேலே, பயங்கரமான தீர்வையில் நாங்கள் நாசமடையாதிருக்கும்படி எங்களை யுத்தவேளையில் காப்பாற்றியருளும். அல்லேலுய்யா

சுவிஷேசம் (மத். 10. 34-42)

அக்காலத்தில் சீஷர்கள் சேசுநாதரிடத்தில் வந்து: பரலோக இராச்சியத்திலே அதிகப் பெரியவன் யாரென்று நினைக்கிறீர்? என்றார்கள். அப்பொழுது சேசு நாதர் ஓர் பாலனை அழைத்து, அவனை அவர்கள் நடுவில் நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பி, பாலர்களைப் போல் ஆகாவிட்டால், பரலோக இராச்சியத்திலே பிரவேசிக்கமாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பாலனைப் போல தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக இராச்சியத்தில் அதிகப் பெரியவனாயிருக்கிறான். இப்படிப பட்ட பாலன் ஒருவனை என் பெயராலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். ஆனால் என்பேரில் விசுவாசமுள்ள இச்சிறியோரில் ஒருவனுக்கு இடறலாயிருப்பவன் எவனோ, அவன் கழுத்திலே கழுதை சுழற்றும் ஏந்திரக் கல்லைக்கட்டி ஆழ்ந்த சமுத்திரத்தில் அவன் அமிழ்த்தப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும். இடறலினிமித்தம் உலகத்துக்கு ஐயோ கேடு! ஏனெனில் இடறல்கள் கட்டாயம் வந்துதான் தீரும்: ஆயினும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ கேடு! ஆகையால் உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலாயிருந்தால், அதைத் தறித்து உனக்குத் தூரமாய் எறிந்து போடு. நீ இருகைகளை அல்லது இரு கால்களை உடையவனாய் நித்திய அக்கினியில் தள்ளப்படுவதைவிட, முடவனாய் அல்லது நொண்டியாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். உன் கண்ணானது உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி உனக்குத் தூரமாய் எறிந்துபோடு. இரு கண்ணுள்ளவனாய் அக்கினிச் சூளையில் தள்ளப் படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாய்ச் சீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். இந்தச் சிறுவர்களில் ஒருவனையும் புறக்கணியாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் மோட்சத்திலே அவர்களுடைய சம்மனசுகள் பரமண்டலங்களிலேயிருக்கிற என் பிதாவின் சமுகத்தை இடைவிடாமல் தரிசிக்கிறார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், திருவுளம் பற்றினார்.

ஒப்புக்கொடுத்தல் (காட்சி. 8. 3-4)

ஓர் சம்மனசு பொன் தூபகலசத்தைக் கையிலேந்திக்கொண்டு, ஆலயத்தின் பலி பீடத்தினருகில் நிற்க, அவருக்கு ஏராளமான தூபம் அளிக்கப்பட்டது. தூபவர்க்கப் புகை சர்வேசுரனுடைய சமூகத்தில் எழும்பிற்று, அல்லேலுய்யா.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, இப்புகழ்ச்சி பலியை நாங்கள் தேவரீருக்கு ஒப்புக் கொடுத்து, எங்களுக்காக பரிந்து பேசும் சம்மனசுக்களுடைய மன்றாட்டின் பெயரால் தேவரீர் அதைத் தயவாய் ஏற்றுக்கொள்ளவும், அது எங்களுடைய இரட்சணியத்துக்கு உதவியாயிருக்கும்படி அருள் செய்யவும் தேவரீரை தாழ்மையாய் கெஞ்சி மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (தானி. 3. 58)

ஆண்டவருடைய சம்மனசுக்களே நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த் துங்கள். அவருக்கு தோத்திரம் பாடி, அவரை சதாகாலமும் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்துங்கள்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, தேவரீருடைய அதிதூதரான முத்திப்பேறு பெற்ற மிக்கேலின் சலுகையில் நம்பிக்கையுள்ள நாங்கள், வாயினால் கேட்பதை ஆத்துமத்தில் பெற்றுக்கொள்ளும்படி தேவரீரை இரந்து மன்றாடுகிறோம். – தேவரீரோடு …



 


வெள்ளி, 22 செப்டம்பர், 2023

September - 27 - Sts. Cosmos & Damian - அர்ச். கோஸ்மானும், தமியானும்

 செப்டம்பர் 27

அர்ச். கோஸ்மானும், தமியானும்

வேதசாட்சிகள்



பிரவேசம்: சர். 44. 15-14

பரிசுத்தவான்களுடைய ஞானத்தை மக்கள் வெளிப்படுத்துவார்கள், சங்கத்தார் அவர்களுடைய புகழ்ச்சியைக் கூறுவார்கள், அவர்களுடைய நாமங்கள் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும். (சங். 32. 1) நீதிமான்களே, ஆண்டவரிடத்தில் அகமகிழ்ச்சியுடன் அவரைக் கீர்த்தனஞ் செய்யுங்கள். அவரை புகழ்வது இருதய நேர்மையுள்ளவர்களுக்குரியது. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, உம்முடைய வேதசாட்சிகளான அர்ச். கோஸ்மானும், தமியானுமென்பவர்களுடைய பரலோக பிறப்புநாளைக் கொண்டாடுகிற நாங்கள், எங்களுக்கு நேரிடவிருக்கும் எவ்வித தீமையினின்றும் விடுவிக்கப்பட, அவர்களுடைய வேண்டுதலைப் பார்த்துத் திருவருள் புரிந்தருள உம்மை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்  (ஞான. 5. 16-20)

நீதிமான்கள் என்றென்றைக்கும் சீவிப்பார்கள். கர்த்தரிடத்தில் அவர்களுக்குச் சம்பாவனையுண்டு; அதி உன்னத கடவுள் அவர்களை என்றும் பாதுகாக்கிறார். ஆகையால் ஆச்சரியமான ராசாங்கத்தையும் மகிமையின் கிரீடத்தையும் கர்த்தர் கரங்களினின்றடைவார்கள். அவருடைய வலது கரம் அவர்களை காப்பாற்றியது அவரது பரிசுத்த புஜம் அவர்களை ஆதரித்தது. அவர் பற்றுதலானது ஆயுதமணிந்து கொள்ளும். அவர் சத்துராதிகளைப் பழி வாங்குவதற்குச் சிருஷ்டிகளுக்காக ஆயுதமணிவார். இருப்புக் கவசமாக நீதியையும் சிரசாயுதமாக தமது நேர்மையுள்ள தீர்மானத்தையும் தரித்துக் கொள்ளுவார். ஊடுருவப்படாத கேடயமாக நீதித்தனத்தால் தம்மை மூடிக்கொள்வார்.

படிக்கீதம்: (சங். 33. 18-19)

நீதிமான்கள் அபயமிட்டார்கள். ஆண்டவர் அவர்களுக்கு செவிசாய்த்து, அவர்களுக்கு நேரிட்ட எல்லாத் துன்பங்களினின்று மீட்டருளினார். இருதயத்தில் வேதனைப்படுகிறவர்களுக்கு துணையாக ஆண்டவர் இருக்கிறார். மனத்தாழ்ச்சி யுள்ளவர்களை இரட்சிப்பார்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா உலகத்தின் அக்கிரமங்களை செயிக்கும். உண்மையான சகோதரத்துவம் இதுவே, இது கிறஸ்துவைப் பின்பற்றி, இப்பொழுது மோட்ச இராச்சியத்தை மகிமையாய் அடைந்து கொண்டது.  அல்லேலுய்யா

சுவிஷேசம் (லூக். 6. 17-23)

அக்காலத்தில் சேசுநாதர் மலையினின்று இறங்கி, மைதானமான ஓரிடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷர் கூட்டமும், யூதேயா நாட்டின் எத்திசை யிலிருந்தும், ஜெருசலேம் நகரத்திலிருந் தும், தீர், சீதோன் நகரங்களின் கடற் கரைகளிலிருந்தும் வந்த ஏராளமான ஜனங்களும் இருந்தார்கள். இவர்கள் அவருடைய வாக்கைக் கேட்கவும், தங்கள் நோய்களினின்று சுகமாக்கப்படவும் வந்திருந்தார்கள். அசுத்த அரூபிகளால் உபாதிக்கப்பட்டவர்களும் சொஸ்த மானார்கள். அவரிடத்திலிருந்து ஒரு சக்தி புறப்பட்டு, எல்லோரையும் குணமாக் கினபடியினாலே, ஜனங்களெல்லோரும் அவரைத் தொடும்படி வழிதேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் தம்முடைய சீஷர்கள்மேல் தமது கண்களை ஏறெடுத்துப் பார்த்துத் திருவுளம்பற்றினதாவது: தரித்திரர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் உங்களு டையது.  இப்பொழுது பசியாயிருக்கிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சிரிப்பீர்கள். மனுமகனைப்பற்றி ஜனங்கள் உங்க ளைப் பகைத்து, உங்களை விலக்கித் தூஷணித்து உங்கள் பெயரை ஆகா தென்று தள்ளும்போது, நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே அகமகிழ்ந்து களி கூறுங்கள். ஏனெனில் இதோ, பரலோகத்திலே உங்கள் சம்பாவனை ஏராளமாயிருக்கின்றது.

ஒப்புக்கொடுத்தல் (ஞான. 3. 1-3)

உமது நாமத்தை நேசிக்கும் யாவரும் உம்மில் அகமகிழ்வார்கள். ஏனெனில், ஆண்டவரே, நீர் நீதிமானை ஆசீர்வதிப்பீர். ஆண்டவரே, உமது தயாளத்தினால் கேடயம்போல் எங்களை மூடிக் காத்தருளினீர். 

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய பரிசுத்தவான்களுடைய உருக்கமுள்ள மன்றாட்டு எங்களுக்குக் குறைவுபடமாலிருக்கக் கடவது. மேலும் அது எங்களுடைய காணிக்கைகளை தேவரீருக்கு உகந்தனவாக்கி, உமது மன்னிப்பை எங்களுக்கு என்றும் அடைந்து கொடுப்பதாக. – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 78. 2, 11)

ஆண்டவரே உமது ஊழியர்களுயைட பிரேதங்களை ஆகாயத்தின் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களுடைய சரீரங்களைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகப் போட்டார்கள். கொலையுண்டவர்களுடைய மக்களை உமது புஜபல பராக்கிரமத்தின்படியே காப்பாற்றியருளும். 

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே உமது மக்கள் பரம விருந்தில் பங்கு பற்ற அநுமதிக்கப்பட்டதையும், அவர்களுக்காக அர்ச்சியசிஷ்டவர்கள் செய்யும் பெரும் வேண்டுதலையும் குறித்து, அவர்களை காப்பாற்றியருள உம்மை மன்றாடுகிறோம். – தேவரீரோடு … 




 


September 26 - St. Cyprian and Justina அர்ச். சிப்பிரியான், யுஸ்தீனம்மாள்

 செப்டம்பர் 26

அர்ச். சிப்பிரியான், யுஸ்தீனம்மாள்

வேதசாட்சிகள்



பிரவேசம்: சங். 36: 39

நீதிமான்களுடைய இரட்சணியமோ ஆண்டவரிடமிருந்து வருகிறது. அவர் துன்ப காலத்தில் அவர்களை ஆதரிப்பவராயிருக்கிறார். (சங். 1) பொல்லாத வர்களை குறித்து எரிச்சற்படாதே, அக்கிரமஞ் செய்கிறவர்கள் பேரில் பொறாமை கொள்ளாதே. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளான அர்ச். சிப்பிரியான் மற்றும் யுஸ்தீனம்மாளுடைய வருடாந்திர திருநாளினால் எங்களை மகிழச் செய்கிறீரே: அவர்களுடைய பேறுபலன்களைக் குறித்து மகிழ்கின்ற நாங்கள் அவர்களுடைய முன்மாதிரிகைகளினால் பற்றியெரியவும் தயவாய்க் கிருபை செய்தருளும். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்  (எபி. 10. 32-38)

சகோதரரே,. நீங்கள் உங்கள் முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் தெளிவடைந்து உபத்திரவங்களின் பெரும் போராட்டத்தைச் சகித்தீர்களே. ஒரு பக்கத்தில் நிந்தைகளிலும் உபத்திரவங்களிலும் பார்க்கி றவர்களுக்கு வேடிக்கையானீர்கள். மற்றொரு பக்கத்தில் அப்படிப் பாடுபட்டவர் களுக்கு நீங்களும் கூட்டாளிகளானீர்கள். எப்படியெனில் விலங்கிடப்பட்டவர் களுக்கு நீங்கள் மனதிரங்கினதுமன்றி, அதிக உத்தமும் நிலைபெற்றதுமான ஐசுவரியம் உங்களுக்கு உண்டென்று அறிந்து சந்தோஷமாய் உங்கள் ஆஸ்திகளையும் கொள்ளையடிக்கவிட்டீர்கள். ஆதலால் மிகுந்த சம்பா வனைக்கு ஏதுவான உங்கள் நம்பிக்கையை இழந்து போகாதேயுங்கள். நீங்கள் தேவசித்தத்தை நிறைவேற்றி, வாக்குத்தத்தத்தைக் கைக்கொள்ளும்டியாகப் பொறுமை உங்களுக்கு அவசரமாயிருக்கின்றது. இன்னும் இருப்பது சொற்பக்காலம். வரவேண்டியவர் வருவார். தாமதம்பண்ணார். என் நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான்.

படிக்கீதம்: (சங். 91. 13-14)

நீதிமான்கள் அபயமிட்டார்கள். ஆண்டவர் அவர்களுக்கு செவிசாய்த்து,  அவர்களுக்கு நேரிட்ட எல்லாத் துன்பங்களினின்று மீட்டருளினார். - இருதயத்தில் வேதனைப் படுகிறவர்களுக்குத் துணையாக ஆண்டவர் இருக்கிறார். மனத்தாழ்ச்சியுள்ளவர்களை இரட்சிப்பார்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஆண்டவரே, வெண்தூய்மையணிந்த வேதசாட்சிகளின் சேனை உம்மை புகழ்கின்றது. அல்லேலுய்யா

சுவிஷேசம் (லூக். 12: 1-8)

அக்காலத்தில் சேசுநாதர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரிசேயருடைய கள்ள ஞானமாகிய புளிக்காரத்தின் மட்டில் நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். ஆயினும், வெளியாக்கப்படாத மறைபொருளு மில்லை அறியப்படாத இரகசியமுமில்லை. ஏனென்றால் நீங்கள் இருளிலே சொன்னவைகள் வெளிச்சத்திலே சொல்லப்படும்; நீங்கள் அறைகளிலே காதுக்குள் பேசினது வீடுகளின் மேலே பிரசங்கிக்கப்படும். என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதற்குமேல் ஒன்றுஞ் செய்யத் திராணியற்றவர்களுக்கு நீங்கள் அஞ்சவேண்டாம். ஆனால் நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென்று உங்களுக்குக் காண்பிப்பேன்;  உயிரைப் பறித்த பின்பு நரகத்தில் தள்ள வல்லமையுள்ளவருக்கே அஞ்சுங்கள்;. ஆம், அவருக்கே அஞ்சுங்களென்று உங்களுக்குச் சொல்லு கிறேன். இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலங் குருவிகள் விற்கிறதல்லவோ? ஆயினும் அவைகளில் ஒன்றானாலும் சர்வேசுரனுடைய சமுகத்தில் மறக்கப் படுவதில்லை. உங்கள் தலை உரோமங்களெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன் ஆகையால் நீங்கள் அஞ்சவேண்டாம்;  அநேகம் அடைக்கலங் குருவிகளைவிட நீங்கள் அதிக விலையுள்ளவர்களாயிருக்கிறீர்கள். மீளவும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: மனிதர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுமகனும் சர்வேசுரனுடைய தூதர் முன்பாக அறிக்கை பண்ணுவார்.

ஒப்புக்கொடுத்தல் (ஞான. 3. 1-3)

நீதிமான்களுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய கரத்திலிருக்கின்றன. சாவின் பயம் அவர்களை அணுகாது. மதியீனருடைய கண்களுக்கு முன் அவர்கள் மரித்தவர்களாக தோன்றினார்கள். ஆனால் அவர்கள் சமாதானத்தில் இளைப்பாறுகிறார்கள். (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளின்மேல் களிகூர்ந்து நோக்கியருளும். தேவரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளான அர்ச். வேண்டுதலினால் எல்லா ஆபத்துக்களி னின்றும் எங்களைத் தற்காத்தருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 10. 27)

நான் உங்களுக்கு இருளில் சொல்லுகிறதை வெளிச்சத்தில் சொல்லுங்கள். நீங்கள் காதிலே இரகசியமாய்க் கேட்கிறதையும் வீட்டு கூரையிலிருந்து பிரசங்கியுங்கள். 

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே இந்த சற்பிரசாத உட்கொள்ளுதல் எங்களை பாவத்திலிருந்து பரிசுத்தமாக்கி தேவரீருடைய வேதசாட்சிகளான அர்ச். சிப்பிரியான் மற்றும் யுஸ்தீனம்மாளுடைய வேண்டுதலினால் எங்களைப் பரலோக மருந்தில் பங்கு பற்றுவோராகவும் செய்யக்கடவது. – தேவரீரோடு …


September 28 - St. Wenceslaus - அர்ச். வென்செஸ்லாவுஸ்

 செப்டம்பர் 28

அர்ச். வென்செஸ்லாவுஸ்

வேதசாட்சி



பிரவேசம்: சங். 44: 15,14

ஆண்டவரே, உமது வல்லபத்தில் நீதிமான் மகிழ்வார். உமது இரட்சிப்பின் பேரில் அவர் வெகுவாய்க் களிகூருவார். தேவரீர் அவர் மன விருப்பத்தை நிறைவேற்றினீர். (சங். 4) ஏனெனில், பேரினிமையின் ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டு வந்து, அவருடைய சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சியான அர்ச். வென்செஸ்லாவுஸ் பரலோக பிறப்புநாளை கொண்டாடுகிற  நாங்கள் அவருடைய வேண்டுதலினால், தேவரீருடைய திருநாமத்தின் நேசத்தில் உறுதிபட திருவருள்புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (ஞானா. 10. 10-14)

ஞானமானது நீதிமானை நேர்வழியாய் கூட்டிப்போய், அவனுக்குச் சர்வேசுரனுடைய இராச்சியத்தைக் காண்பித்து அவனுக்குப் பரிசுத்தருடைய அறிவைத் தந்து, அவன் தன் வேலைகளால் வெகு இலாபமும் சம்பாவனையும் அடையும்படி செய்ததுமின்றி அவனை மோசஞ் செய்யத் தேடினவர் களிடத்தினின்று அவனை மீட்டு அவனை ஆஸ்திவந்தனாக்கினது. அது சத்துராதிகளினின்று அவனைக் காப்பாற்றித் துன்மார்க்கரினின்று அவனைப் பாதுகாத்துப் பலமான யுத்தத்தில் அவன் ஜெயங்கொள்ளவும், சகலத்தையும் விட ஞானமே வலுமையுள்ளதென்றறிந்து கொள்ளவுஞ் செய்தது. அது விற்கப்பட்ட நீதிமானை விட்டுவிட்டதில்லை; பாவிகளிடத்தினின்று அவனை மீட்டது; அவனுடன் பாழுங்கிணற்றில் இறங்கினது. அது சிறையிலிருந்து அவனுக்கு இராச செங்கோலைக் கையில் வைத்து அவனை உபாதித்த வர்களை அவன் வசமாக்கினதுமன்றி அவனைக் குற்றஞ் சாட்டினவர்களைப் பொய்யர் என்று காண்பித்து அவனுக்கு நித்திய மகிமையைத் தந்தது.

படிக்கீதம்: (சங். 111. 1-2)

ஆண்டவருக்கு அஞ்சி அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் பாக்கியவான். அவனுடைய சந்ததி  பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மை யானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 20. 4) ஆண்டவரே, அவருடைய சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர். அல்லேலுய்யா

சுவிஷேசம் (மத். 10. 34-42)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீஷர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: நான் பூலோகத்தில் சமாதானத்தை அனுப்ப வந்தேனென்று நீங்கள் நினைக்க வேண்டாம். சமாதானத்தையல்ல, வாளையே அனுப்ப வந்தேன்.  எவ்வா றெனில் தன் தகப்பனுக்கு விரோதமாய் மகனையும், தன் தாய்க்கு விரோதமாய் மகளையும், தன் மாமிக்கு விரோதமாய் மருமகளையும் பிரிக்க வந்தேன். ஏனெனில் மனிதனுடைய சத்துருக்கள் அவனுடைய வீட்டாராமே. என்னிலும் தன் தகப்பனையாவது தாயையாவது அதிகமாய்ச் சிநேகிக்கிறவன் எனக்குப் பாத்திரவானல்ல் எனக்குமேலாய்த் தன் மகனையாவது மகளை யாவது சிநேகிக்கிறவனும் எனக்குப் பாத்திரவானல்ல. தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்செல்லாதவனும் எனக்குப் பாத்திரவானல்ல. தன் ஜீவனைக் கண்டடைகிறவன் எவனும் அதை இழப்பான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்தவனோ வென்றால் அதைக் கண்டடைவான். உங்களை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளு கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் ஒரு தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்ளுகிறவன் தீர்க்க தரிசிக்குரிய சம்பாவனையை அடைவான். நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் ஒரு நீதிமானை ஏற்றுக் கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய சம்பாவனையை அடைவான். அவ்வண்ணமே சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் மிகவும் அற்பரான இவர்களில் ஒருவனுக்கு எவனாகிலும் ஒரு பாத்திரம் தண்ணீர் மாத்திரங் குடிக்கக் கொடுத்தாலும், தனது சம்பாவனையை இழந்து போகானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்றார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 8. 6-7)

மகிமையினாலும் கனத்தினாலும் அவருக்கு முடி சூட்டினீர். ஆண்டவரே, உம்முடைய கரங்களின் செய்கைகளின் மேல் அவருக்கு அதிகாரம் கொடுத்தருளினீர்.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுடைய கொடைகளையும் செபங்களையும் தேவரீர் கையேற்றுக் கொள்ளும். பரலோக பரம இரகசியங்களால் எங்களைப் பரிசுத்தப்படுத்தி, எங்களுக்கு தயவாய் செவி சாய்த்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (16. 24)

யாதொருவன் என் பின் வர மனதாயிருந்தால், அவன் தன்னைத் தானே பரித்தி யாகஞ் செய்து, தன் சிலுவையை சுமந்துகொண்டு என்னைப் பின் செல்லக் கடவான்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எங்கள் தேவனாகிய ஆண்டவரே, உம்முடைய பரிசுத்தவான் களின் ஞாபகத்தை நாங்கள் இவ்வுலக சேவையினால் கொண்டாடி மகிழ்வது போல், அவர்களுடைய தரிசனையைக் கண்டு நித்தியமாய்க் களிகூரவும் எங்களுக்கு திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.. – தேவரீரோடு …