அக்டோபர் 3
குழந்தை சேசுவின் அர்ச். தெரேசம்மாள்
போதகநாடுகளின் பாதுகாவலி
பிரவேசம்: உன்னத சங். 4. 84
லீபானின்று வருவாய் மணவாட்டியே, லீபானின்று வருவாய். என் இருதயத்தை புண்ணாக்கி விட்டாய். என் சகோதரியே, மணவாட்டியே, என் இருதயத்தைக் காயப்படுத்தினாய். (சங். 112. 1) பிள்ளைகளே ஆண்டவரை துதியுங்கள். ஆண்வடருடைய திருநாமத்தை புகழுங்கள். – பிதாவுக்கும். . .
சபைச் செபம்
செபிப்போமாக: ஆண்டவரே, சிறுவர்களைப்போல் ஆகாவிட்டால் நீங்கள் பரலோக இராச்சயத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று திருவாய் மொழிந்தரு ளினிரே. இருதயத் தாழ்ச்சியிலும் நேர்மையிலும் கன்னிகையான அர்ச். தெரேசம்மாளின் முன்மாதிரியை இவ்வுலகில் பின்பற்றி நடந்து, நித்திய சம்பாவனையை அடைந்துகொள்ள திருவருள் புரிந்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில்
நிருபம்; (இசை. 66. 12-14)
ஆண்டவர் இவ்விதம் திருவுளம் பற்றுகிறார் : இதோ நாம் சமாதானத்தை ஓர் நதியைப்போலும், சனங்களுடைய மகிமையை மடைபுரண்ட வெள்ளம்போலும் அவள் பேரில் ஒடவிடுவோம்; அவள் பாலை அருந்துவீர்கள், மாரோடு அணைக்கப் படுவீர்கள், மடியில் சீராட்டப்படுவீர்கள். தாயானவள் தன் மகவைச் சீராட்டுவது எங்ஙனமோ அப்படியே உங்களுக்கு ஆறுதல் செய்வோம், நீங்களும் எருசலேமில் சமாதானமடைவீர்கள். இவைகளை நீங்கள் பார்ப்பீர்கள், உங்கள் இருதயமும் சந்தோஷங் கொள்ளும்; உங்கள் எலும்புகள் புல்லைப்போல் பச்சை கொண்டெழும்; ஆண்டவர் தம் ஊழியர்கள் சார்பாக தம் வல்லபத்தை அறியப் பண்ணுவார்.
படிக்கீதம்: (மத். 11: 25)
பிதாவே பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவரே, நீர் இவற்றை ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து, சிறியோர்களுக்கு வெளிபடுத்தி யதால் உம்மை துதிக்கிறேன். – (சங். 70: 5) ஆண்டவரே, என் இளமை துவக்கி என் நம்பிக்கையாய் இருக்கிறீர்.
அல்லேலுய்யா கீதம்
அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சர். பிர. 39. 17-19) ஆற்றின் கரையில் நடப்பட்ட ரோசாவைப்போல பலன் கொடுங்கள். லீபானைப்போல இனிய வாசனையக் கொடுங்கள். லீலியைப்போல் பூக்களை புஷ்பியுங்கள். வாசனையை வீசுங்கள். தளிர்த்து அழகை அணிந்து கொள்ளுங்கள். சங்கீதத்தை கூடிப் பாடுங்கள். ஆண்டவரை அவருடைய செய்கைகளைப் பற்றி வாழ்த்துங்கள். அல்லேலுய்யா
சுவிஷேசம் (மத். 18. 1-10)
அக்காலத்தில் சீஷர்கள் சேசுநாதரிடத்தில் வந்து: பரலோக இராச்சியத்திலே அதிகப் பெரியவன் யாரென்று நினைக்கிறீர்? என்றார்கள். அப்பொழுது சேசுநாதர் ஓர் பாலனை அழைத்து, அவனை அவர்கள் நடுவில் நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பி, பாலர்களைப் போல் ஆகாவிட்டால், பரலோக இராச்சியத்திலே பிரவேசிக்க மாட்டீர்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பாலனைப் போல தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக இராச்சியத்தில் அதிகப் பெரியவனாயிருக்கிறான். என்று திருவுளம் பற்றினார்.
ஒப்புக்கொடுத்தல் (லூக்.1. 46-49)
என் ஆத்தும் ஆண்டவரை தோத்திரஞ் செய்கின்றது. என் இரட்சணியமாகிய சர்வேசுரனிடத்தில் என் ஆத்துமம் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது. ஏனெனில் தமது அடிமையானவர்களுடைய தாழ்ச்சியை இரக்கத்துடன் நோக்கி னார். வல்லபமிக்கவர் மகத்தானவற்றை என்னிடத்திற் செய்தருளுனினார்.
அமைதி மன்றாட்டு
ஆண்டவரே, தேவரீருடைய கன்னிகையான அர்ச். தெரேசம்மாளின் பக்தியுள்ள வேண்டுதல் எங்களுடைய பலியை உமக்கு ஏற்றதாகக்கடவது. அவளுடைய மகிமையைக் குறித்து சிறப்பாக அப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறதினால் அவளுடைய பேறுபலன்களை முன்னிட்டு அது உமக்கு உகந்ததாகவும் இருக்கும்படி தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….
உட்கொள்ளுதல் (உபா. 32. 10,21)
அவர் அவளைச் சுற்றி நடத்தி, அவளுக்குப் போதித்துத் தன் கண்மணியைப் போல் அவளைக் காத்தருளினார். கழுகு தன் சிறகுகளை விரிப்பதுபோல் அவளை எடுத்துக் கொண்டு தன் தோள்களின்மேல் சுமந்துபோனார். ஆண்டவர் ஒருவரே அவளை நடத்தினார்.
உட்கொண்ட பின்
செபிப்போமாக: ஆண்டவரே, உம்முடைய கன்னிகையான அர்ச். தெரேசம்மாள் தன்னை மனிதருக்காக சிநேகத்தின் பலியாகத் தேவரீருக்கு தகனமக்கிய அச் சிநேகத்தின் அக்கினியால் இந்த திவ்விய பரம இரகசியம் எங்களைப் பற்றி எரிக்கக்கடவது. – தேவரீரோடு …
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக