Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 20 செப்டம்பர், 2023

Salve Sancte Parens - பரிசுத்த தேவதாயின் பேரால் - பொது

 பரிசுத்த தேவதாயின் பேரால் - பொது 
Salve Sancte Parens

பிரவேசம்

வாழ்க! பரிசுத்த தாயே, பரலோகத்தையும் பூலோகத்தையும் என்றென்றைக்கும் ஆள்கின்ற அரசனையீன்ற தாயே, வாழ்க! (பா. கா. அல்லேலுய்யா அல்லேலுய்யா) (சங். 44. 2) என் இருதயம் ஓர் நல்ல வார்த்தையை வெளியிட்டது. என்னுடைய செய்கைகளை இராசாவுக்குச் சொல்லுகிறேன்.  – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: தேவனாகிய ஆண்டவரே, உம்முடைய அடியார்களாகிய நாங்கள் ஆத்தும சரீர சுகத்தால் இடைவிடாது மகிழவும், எப்பொழுதும் கன்னி கையான மரியாயினுடைய மகிமையுள்ள வேண்டுதலினால் இவ்வுலகத் துயரத் தினின்று விடுதலை பெறவும், நித்திய பேரின்ப பாக்கியத்தை சுகிக்கவும் கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்;  (சர். 24. 14-16)

ஆதியிலும், யுகங்களுக்கு முந்தியுஞ் சிருஷ்டிக்கப்பட்டேன்; எக்காலத்துக்கும் இராமலுமிரேன்; பரிசுத்த வாசஸ்தலத்தில் அவருடைய சமுகத்தில் என் தொழிலைச் செய்தேன். ஆனதால் சியோனில் உறுதிப்படுத்தப்பட்டேன்; பரிசுத்த பட்டணத்திலும் இளைப்பாற்றினேன்; எருசலேமில் என் அதிகாரஞ் சென்றது. மகிமைப்படுத்தப்பட்ட பிரசைகளிடத்தில் வேரூன்றினேன்; அவர்கள் சுதந்தரம் என் ஆண்டவருடைய பாகம், பரிசுத்தருடைய கூட்டத்தில் என் வாசஸ்தலம்.

படிக்கீதம்: (சர். 44: 16)

கன்னிமரியாயே, கன்னிமைக்குப் பழுதின்றி இரட்சகரின் தாயாக ஏற்பட்டீரே! நீர் ஆசீர்வதிக்கப்பட்டவள். வணக்கத்துக்குரியவள். – தேவதாயான கன்னிகையே, உலகம் அனைத்துமே கொள்ள முடியாதவர் உமது திருவுதரத்தில் மனிதராய் அடங்கலானாரே. 

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஈன்ற பின்னும் பழுதற்ற கன்னிகையாய் நிலை கொண்டீர். தேவதாயே எங்களுக்காக மன்றாடும். அல்லேலுய்யா

ஆகமன காலத்தில் படிக்கீதத்தை சொன்னபின், மேலே உள்ள அல்லேலுய்யா கீதத்திற்கு பதிலாக:

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா – (லூக். 1: 28) மரியாயே, வரப்பிரசாதத் தினால் நிறைந்தவளே, வாழ்க! கர்த்தர் உம்முடனே, பெண்களுக்குள்ளே ஆசீர் வதிக்கப்பட்டவள் நீரே! அல்லேலுய்யா.

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 111. 1-3)

கன்னி மரியாயே அகமகிழும். பதிதங்கள் அனைத்தையம் தனியாக நீர் ஒருவரே அழித்துவிட்டீர். – நீர் அதிதூதரான கபிரியேலின் வார்த்தையை விசுவசித்தீர். – கன்னிகையாயிருந்து, தேவனும் மனதனுமானவரைப் பெற்றெடுத்தீர். ஈன்றபின்னும் பழுதற்ற கன்னிகையாய் நிலைகொண்டீர்!. தேவதாயே எங்களுக்காக மன்றாடும்.

பாஸ்குகாலத்தில் படிக்கீதம் முதலியவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ளதை சொல்ல வேண்டும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (எண். 17: 8) யெஸ்சேயின் கோல் மலர்ந்தது. கன்னிகையானவள் கடவுளும் மனிதனுமானவரைப் பெற்றெடுத்தாள். சர்வேசுரன் தாழ்மையானதைக் தம்மில் மேலானதோடு இணைத்துக்கொண்டு சமாதானத்தை மறுபடியும் அளித்தார்.  அல்லேலுய்யா. – (லூக். 1: 28) மரியாயே வரப்பிரசா தத்தினால் நிறைந்தவளே, வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, அல்லேலுய்யா.

சுவிஷேசம் (லூக். 11. 27-28)

அக்காலத்தில் சேசுநாதர் ஜனக் கூட்டத்துடன் பேசி கொண்டிருந்த போது சம்பவித்ததேதெனில், ஜனக்கூட்டத்தில் நின்று ஓர் ஸ்திரீயானவள் தன் சத்தத்தை உயர்த்தி, அவரை நோக்கி:  உம்மைச் சுமந்த உதரமும் நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவைகளே என்றார். அதற்கு அவர்: அப்படியானாலும், சர்வேசுரனுடைய வாக்கியத்தைக்கேட்டு, அதை அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்களென்று திருவுளம் பற்றினார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

மரியாயே வரப்பிரசாதத்தினால் நிறைந்தவளே, வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய இரக்கத்தாலும், எப்பொழுதும் கன்னிகையான முத்திபேறுபெற்ற மரியாயின் மன்றாட்டினாலும் இக்காணிக்கை எங்களுடைய பாக்கியத்திற்கும், சமாதானத்திற்கும் உதவக்கடவது. – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 12)

நித்திய பிதாவின் திருக்குமாரனைச் சுமந்த கன்னிமரியாயின் உதரம் பாக்கியம் பெற்றது!  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, எங்கள் இரட்சணியத்துக்குரிய உதவிகளைப் பெற்றுக் கொண்ட நாங்கள் எப்பொழுதும் கன்னிகையான முத்திபேறு பெற்ற மரியாயின் வணக்கத்துக்காக தேவரீருடைய உன்னத மகத்துவத்திற்கு இப்பலியை ஒப்புக்கொடுப்பது போல, அவளுடைய சலுகையினால் நாங்கள் என்றும் காப்பாற்றப்படத் திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு …

Statuitt - மேற்றிராணியரான துதியர் ஒருவர் பெயரால் - பொது

 மேற்றிராணியரான துதியர் ஒருவர் பெயரால் - பொது

Statuitt . .

பிரவேசம்: சங். 45. 30

ஆண்டவர் அவருடன் சமாதான உடன்படிக்கையைச் செய்து கொண்டு குருத்துவத்தின் மகிமை அவருக்கு நித்தியமாய் இருக்கும்படி அவரைத் தலை வராக நியமித்தார். (பா. கா. அல்லேலுய்யா, அல்லேலுய்யா) (சங். 131. 1) ஆண்டவரே, தாவீதையும் அவருடைய மகா  சாந்தகுணத்தையும் நினைத்தருளும். – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, தேவரீருடைய துதியரும், மேற்றிராணியாருமான முத்திப்பேறு பெற்ற (இன்னாருடைய) வணக்கத்துக்குரிய திருநாள் எங்கள் பக்தியைப் பெருக்கி, எங்கள் இரட்சணியத்துக்கு உதவியாயிருக்க செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம் (சர். 44. 16-27, 45. 3-20)

இதோ! பெரிய குரு தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார் ; நீதிமானாகக் காணப்பட்டார்; கோப காலத்தில் சமாதான பந்தனமானார்.  உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்குச் சரி யொத்தவர் எவரும் காணப்படவில்லை. ஆனதால், ஆண்டவர் சத்தியஞ் செய்து, இவருடைய கோத்திரத்தின் நடுவே இவரை அதிகரிக்கச் செய்தார். சகல சாதிகளுடைய ஆசிர்வாதத்தையும்  இவருக்குக் கொடுத்து, இவர் சிரசின் மேல் தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார். தம்முடைய ஆசிர்வாதத்தைக் கொண்டு ஆண்டவர் இவரை அங்கீகரித்துக்கொண்டார்; தமது இரக்கத்தை இவருக்காக வைத்திருந்தார்; இவரும் ஆண்டவருடைய சமூகத்தில் கருணையைக் கண்டடைந்தார். அரசர்கள் முன்பாக ஆண்டவர் இவரை மகிமைப்படுத்தி, மகிமையின் கிரீடத்தைச் சூட்டினார். நித்திய உடன் படிக்கையை இவருக்கு நியமித்தார்; இவருக்கு மகா குருத்துவத்தைக் கொடுத்தார்; மகிமையில் இவரைப் பாக்கியவானாக்கினார். குருத்துவத் தொழிலை நிறைவேற்றவும், அவருடைய நாமத்தினால் புகழ் பெறவும், நல்ல சுகந்தமுள்ள தூபத்தைத் தக்கவிதமாய் அவருக்கு ஒப்புக் கொடுக்கும் படியாகவே.

படிக்கீதம்: (சர். 44: 16)

இதோ! பெரிய குரு, இவர் தம்முடைய வாழ்நாட்களில் கடவுளுக்குப் பிரியமானார். – (சர். 20) உன்னதமானவருடைய கற்பனையைக் காப்பாற்றுவதில் இவருக்கு சரியொத்தவர் ஒருவரும் காணப்படவில்லை.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 109. 4) நீர் மெல்கிசெதேக்கின் முறைப் படி நித்தியத்திற்கும் குருவாயிருக்கிறார். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 111. 1-3)

ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் பாக்கியவான். – அவனுடைய சந்ததி பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மையானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும். – மகிமையும் செல்வமும் அவன் வீட்டிலிருக்கும். அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலை நிற்கின்றது. .

பாஸ்குகாலத்தில் படிக்கீதம் முதலியவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ளதை சொல்ல வேண்டும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 109: 4) நீர் மெல்கிசெதேக்கின் முறைப்படி நித்தியத்திற்கும் குருவாயிருக்கிறீர், அல்லேலுய்யா. – ஆண்டவர் முடிசூட்டிய குரு இவர்தான், அல்லேலுய்யா.

சுவிஷேசம் (மத். 25. 14-23)

அக்காலத்தில் சேசுநாதர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரலோக இராச்சியமானது புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போன ஒரு மனிதன் தன் ஊழியரை அழைத்து அவர்களிடத்தில் தன் திரவியங்களை ஒப்புவித்தது போலாகும். அவன் ஒருவனுக்கு ஐந்து தலேந்தும், வேறொருவனுக்கு இரண்டு தலேந்தும், இன்னொருவனுக்கு ஒன்றுமாக, அவனவனுடைய சக்திக்குத் தக்கபடி கொடுத்து, உடனே பிரயாண மாய்ப் போனான். ஐந்து தலேந்தை வாங்கினவன் போய், அவைகளைக் கொண்டு உழைத்து, வேறு ஐந்தைச் சம்பாதித்தான். அவ்வண்ணமே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வேறு இரண்டைச் சம்பாதித்தான். ஒன்றை வாங்கினவனோ போய், பூமியைத் தோண்டித் தன் எஜமானனுடைய பணத்தைப் புதைத்து வைத்தான். வெகுகாலத்துக்குப்பின் அந்த ஊழியருடைய எஜமான் வந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து தலேந்தைப் பெற்றுக் கொண்டவன் அணுகி வேறே ஐந்து தாலந்தை ஒப்புக் கொடுத்து: ஆண்டவனே! ஐந்து தலேந்தை என் வசத்தில் ஒப்புவித்தீரே, இதோ வேறைந்தை ஆதாயமாகச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே! நீ சொற்பக் காரியங்களில் பிரமாணிக்கனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரி யாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.  அப்படியே இரண்டு தலேந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே! என் வசத்தில் இரண்டு தலேந்தை ஒப்புவித்தீரே, இதோ வேறிரண்டைச் சம்பாதித்தேன் என்றான். எஜமான் அவனைப் பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழியனே நீ கொஞ்சத்தில் பிரமாணிக்க முள்ளவனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரியாக ஸ்தாபிப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88. 21-22)

நாம் நமது தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, நமது பரிசுத்த தைலத்தால் அவனை அபிஷேகஞ் செய்தோம். ஏனெனில் நமது கரம் அவனுக்கு உதவிபுரியும். நமது புஜம் அவனை உறுதிபடுத்தும்.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத்தவான்கள் எங்களை எப்பொழுதும் மகிழச் செய்வார்களாக. அதனால் அவர்களுடைய பேறுபலன்களைக் கொண்டாடுகிற நாங்கள் ஆதரவையும் பெற்றுக்கொள்ளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 12)

எஜமான் தன் பணிவிடைகாரருக்கு தக்க காலத்தில் படியளக்க அவர்களுக்கு மேல் அதிகாரியாக்கத்தக்க உண்மையும் விவேகியுமான செயலாளர் இவரே.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, பெற்றுக்கொண்ட கொடைகளுக்காக நன்றி செலுத்தும் அடியோர்கள் தேவரீருடைய துதியரும் மேற்றிராணியாருமான முத்திபேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலினால், இன்னும் அதிக நன்மைகளை அடைந்துகொள்ள எங்களுக்குத் திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு …

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

September 21 - St. Matthew - அர்ச். மத்தேயு அப்போஸ்தலர், சுவிசேஷகர்

 செப்டம்பர் 21

அர்ச். மத்தேயு

அப்போஸ்தலர், சுவிசேஷகர் 

பிரவேசம்: சங். 36. 30-31

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைக்கும்: அவருடைய நாவு நியாயத்தைப் பேசும். அவருடைய சர்வேசுரனின் நியாயப் பிரமாணம் அவருடைய இருதயத்திலிருக்கிறது. (சங். 1) பொல்லாதவர்களைக் குறித்து அருவருப் படையாதே. அக்கிரமஞ் செய்கிறவர்கள்பேரில் வெறுப்பு கொள்ளாதே .- பிதாவுக்கும்.......

சபைச் செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, அப்போஸ்தலரும் சுவிசேஷகருமான முத்திபேறுபெற்ற மத்தேயு நாதருடைய மன்றாட்டுகள் எங்களுக்கு உதவியாய் வரக்கடவன, எங்கள் சொந்த பலம் பெற்று கொடுக்க முடியாததை, அவருடைய சலுகை வேண்டுதல் எங்களுக்கு அடைந்து கொடுப்பதாக. - தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்......

நிருபம் (எசே. 1: 10-14)

அந்த நான்கு மிருகங்களின் முகச் சாயல் ஏதெனில், நாலுக்கும் முன்னாலே மானிடமுகமிருந்தது. இதன் வலது புறத்தில் நாலுக்கும் சிங்க முகமும், அதன் இடது புறத்தில் நாலுக்கும் எருது முகமும், மேற்புறத்தில் நாலுக்கும் கழுகு முகமும் இருந்தன. அவைகளின் முகங்களும் இறக்கைகளும் உயர்ந்து விரிந்திருந்தன. ஒவ்வொன்றின் இரு இறக்கைகளும் ஒன்றோடொன்று கூடிச் சேர்ந்திருக்க, மற்றிரண்டும் அவைகளின் சரீரங்களை மூடிக்கொண்டிருந்தன. அவைகள் ஒவ்வொன்றுந் தனக்கு எதிரான திசையில் நடந்தது. எவ்விடத் திற்குப் போகவேண்டுமென்று ஆவி அவைகளை ஏவிவிடுமோ அவ்விடத் துக்குப் போகும்; போகையில் திரும்பி பார்க்கவேமாட்டா. அம்மிருகங்கள் பார்வைக்கு அக்கினிபற்றி எரியுங் கரியைப் போலும் கொளுத்தி விட்டெரியும் விளக்கைப் போலுந் தோன்றும்; அவைகளின் நடுவில் அக்கினிச் சுவாலை ஓடித் திரிய அதினின்று மின்னல் புறப்படும். அம்மிருகங்கள் மினுமினுப்பான மின்னலைப் போல் போகிறதும் திரும்பி வருகிறதுமாயிருந்தன.

படிக்கீதம்: (சங். 111. 1-2)

ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் மிகவும் பாக்கியவான். – அவனுடைய சந்ததி பூமியில் வல்லமையுள்ளதாகும். செம்மையானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஆண்டவரே, அப்போஸ்தலர்களின் மாட்சிமை பொருந்திய கூட்டம் உம்மைப் புகழ்கின்றது. அல்லேலுய்யா.

சுவிஷேசம் (மத்;. 9. 9-13)

அக்காலத்தில் சேசுநாதர் ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னப்பட்ட ஓர் மனிதனைக் கண்டு, அவனை நோக்கி: என் பிறகே வாவென்றார். அவனும் உடனே எழுந்து அவரைப் பின்சென்றான். பின்னும் சம்பவித்ததேதெனில், சேசுநாதர் அவன் வீட்டில் பந்தியமர்ந்திருக்கையிலே அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து அவரோடும் அவருடைய சீஷர் களோடுங்கூடப் பந்தி அமர்ந்தார்கள். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் குரு ஆயக்காரரோடும் பாவிகளோடும் அசனம் செய்வானேன் என்றார்கள். சேசுநாதர் அதைக் கேட்டுத் திருவுளம்பற்றினதாவது: சொஸ்தமுள்ளவர்களுக்கு வைத்தியன் வேண்டியதில்லை, நோயாளிகளுக்கே வேண்டும். பலியையல்ல, தயாளத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத் தென்ன வென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நீதிமான்களை யல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்றார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88: 25)

ஆண்டவரே, அவருடைய சிரசின்மேல் விலையுயர்ந்த கற்கள் இழைத்த கிரீடத்தை வைத்தீர். அவர் உம்மிடத்தில் சீவியத்தை கேட்டார். நீர் அவருக்கு அதை அளித்ததீர். அல்லேலுய்யா.

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, அப்போஸ்தலரும் சுவிசேஷகருமான முத்திப்பேறுபெற்ற மத்தேயு நாதருடைய வேண்டுதல்களினால், உமது திருச்சபையின் காணிக்கை தேவரீருக்கு உகந்ததாயிருக்க உம்மை மன்றாடுகிறோம். அவருடைய மகிமையான பிரசங்கங்களினால் உமது திருச்சபை விளங்கப் பெற்றதே. – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (சங். 20. 6)

உமது இரட்சிப்பில் அவருடைய மகிமை மகத்தானது. ஆண்டவரே, மகிமையும் பெரும் அழகையும் அவருக்கு அளிப்பீர்.

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, பரிசுத்த தேவதிரவிய அநுமானங்களைப் பெற்றுக் கொண்ட நாங்கள், உமது அப்போஸ்தலரும், சுவிசேஷகருமான முத்திப்பேறு பெற்ற மத்தேயுநாதருடைய வேண்டுதலைக் குறித்து மன்றாடுவதேதெனில், அவருடைய மகிமைக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட பலிகள் எங்கள் இரட்சணியத்துக்கு மருந்தாக உதவக்கடவன.  - தேவரீரோடு . . .

. .

Si diligis me - பரிசுத்த பாப்புமார்களின் பெயரால் பொது

 பரிசுத்த பாப்புமார்களின் பெயரால் பொது 

Si diligis me

பிரவேசம்: 2 அரு. 21 : 15-17

சீமோன் இராயப்பா,நீ என்னைச் சிநேகிக்கிறாயோ? என் ஆட்டுக்குட்டிகளை மேய், என் ஆடுகளை மேய். (பா.கா.:)  அல்லேலுய்யா, அல்லேலுய்யா.) (சங். 29:1) ஆண்டவரே, தேவரீர் என்னைக் கைதூக்கி, என் பகைவர்கள் என்னை மேற் கொண்டு மகிழாதபடி செய்ததால், உம்மைத் துதிப்பேன்.- பிதாவுக்கும்.......

சபைச் செபம்

செபிப்போமாக: நித்திய ஆயனே, தேவரீருடைய மந்தையைக் கிருபையாய்க் கண்ணோக்கியருளும்; திருச்சபைக்கு அதி மேய்ப்பனாகத் தேவரீர் ஏற்படுத்திய (உம்முடைய வேத சாட்சியும்) பெரிய குருவுமாகிய முத்திப்பேறுபெற்ற இன்னா ருடைய மன்றாட்டை முன்னிட்டு அதை உமது இடைவிடாத பராமரிப்பினால் காப்பாற்றியருளும்.- தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்......

இதே நாளில் மற்றொரு பரி. பாப்பானவரின் ஞாபகச் செபம் சொல்லவேண்டியிருந்தால் பின்வருமாறு:

செபிப்போமாக: சர்வேசுரா, அப்போஸ்தோலிக்கு கற்பாறையினுடைய உறுதியின்மீது அமைக்கப்பட்டிருக்கும் உமது திருச்சபையை நரக வாசல்களின் பயத்திலிருந்து விடுவிக்கிறீNர் (உம்முடைய வேதசாட்சியும்) பெரிய குருவுமாகிய ஜஇன்னாருடையஸ வேண்டுதலினால் அது உமது சத்தியத்திலே மான்றிசின்று, ஆபத்தின்றி என்றும் காப்பாற்றபட, திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்......

நிருபம் (1 இரா. 5. 1-4. 10-11)

சகோதரரே, உங்களிலுள்ள மூப்பர்களுக்கு உடன் மூப்பனும், கிறீஸ்து நாதருடைய பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படப்போகிற மகிமைக் குப் பங்காளியுமாகிய நான் மூப்பர் களைக் கேட்டுக்கொள்ளுகிறதாவது: உங்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட சர்வேசுரனுடைய மந்தையை மேய்த்து, கட்டாயமாயல்ல, கடவுளுக்கேற்க வலியமனதோடும், இழிவான ஆதாயத்தை நாடியல்ல, மனப்பிரீதியோடும்,  (கர்த்தருடைய) சுதந்தரவாளிகளின் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள்போலல்ல் நல்ல மனதோடும் மந்தைக்கு மாதிரிகளாகக் கண்காணித்து வாருங்கள்.  இவ்விதமாய் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளுவீர்கள். கிறீஸ்து சேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராகிய சர்வ கிருபையுள்ள சர்வேசுரன் கொஞ்சக்காலம் துன்பப்படுகிறவர்களை உத்தமராக்கி உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்துவார். அவருக்கே அநவரதகாலமும் மகிமையும் இராச்சியபாரமும் உண்டாவதாக. ஆமென்.

படிக்கீதம்: (சங். 106. 32,31)

ஜனங்களுடைய சபையிலே அவரை ஏத்திப் புகழ்ந்து, மூப்பர்களுடைய ஆசனத்திலே அவரை துதித்துப் புகழ்வார்களாக. - ஆண்டவருடைய இரக்கத் தின் நிமித்தமும், அவர் மனுமக்களுக்கு செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரை துதித்து கொண்டாடுவார்களாக. 

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (மத். 16: 18) நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன். அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 39. 10-11)

மகாசபையிலே தேவரீருடைய நீதியைக் குறித்துப் பிரசங்கித்தேன். ஆண்டவரே, என் உதடுகளை மூடமாட்டேன் என்று நீர் அறிவீர். – நான் உமது நீதியை என் இருதயத்தில் மறைத்து வைக்கவில்லை. உமது சத்தியத்தையும் இரட்ச ணியத்தையுங் குறித்து பேசினேன். – மகாசபையில் உமது தயாளத்தையும் உண்மையையும் மறைத்தேனில்லை.

பாஸ்குகாலத்தில் படிக்கீதம் முதலியவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ளதை சொல்ல வேண்டும்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா – (மத். 16. 18) நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்.. - (சங். 44. 17-18) தேவரீர் அவர்களை உலகமனைத்திற்கும் அல்லேலுய்யா தலைவர்களாக ஏற் படுத்துவீர். ஆண்டவரே, அவர்கள் உமது திருநாமத்தை நினைத்துக்கொண்டு இருப்பார்கள். அல்லேலுய்யா. 

சுவிஷேசம் (மத்;. 16: 13-19)

அக்காலத்தில் சேசுநாதர் பிலிப்புவின் சேசாரேயா என்னுந் திசைகளுக்கு வந்தபோது, தம்முடைய சீஷர்களை நோக்கி: மனுஷர்கள் மனுமகனை யாரென்று சொல்லுகிறார்களென்று கேட்டார். அவர்கள் மாறுத்தாரமாக: சிலர் ஸ்நாபக அருளப்பரென்றும், சிலரோ எலியாஸென்றும், வேறு சிலர் எரேமியாஸ் அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவரென்றுஞ் சொல்லுகிறார்களென்றார்கள். சேசுநாதர் அவர்களைப் பார்த்து: நீங்களோ, என்னை யாரென்கிறீர்கள் என்று கேட்டார். சீமோன் இராயப்பர் மறுமொழியாக நீர் கிறீஸ்துவானவர், சுயஞ்சீவிய சர்வேசுரனுடைய குமாரன் என்றார். அப்போது சேசுநாதர் அவருக்கு மறு மொழியாக, யோனாவின் குமாரனான சீமோனே, நீ பாக்கியவான், ஏனெனில் மாம்சமும் இரத்தமுமல்ல, பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவானவர்தாமே இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன்: நீ இராயாய் இருக்கிறாய்! இந்த இராயின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன், நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. மோட்சத்தின் திறவுகோல்களையும் உனக்குக் கொடுப்பேன்; பூலோகத்தில் நீ எதைக் கட்டுவாயோ, அது பரலோகத்திலுங் கட்டப்பட்டிருக்கும். நீ பூலோகத்தில் எதைக் கட்டவிழ்ப்பாயோ, அது பரலோகத்திலுங் கட்ட விழ்க்கப்பட்டிருக்கும் என்றார்..

ஒப்புக்கொடுத்தல் (சங். 88: 25)

இதோ! நம்முடைய வாக்கியங்களை உம் வாயில் ஊட்டினோம். பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும், இதோ! உன்னைச் சனங்கள் மீதும், இராச்சியங்கள் மீதும் அதிகாரியாய் ஏற்படுத்தியிருக்கிறோம். (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளை பார்த்து, உமது திருச்சபை விளங்கத் தயை செய்தருளும். அதனால் உமது திருச்சபைக்கு எங்கும் நல்ல பலன் கிடைக்கவும், ஞான மேய்ப்பர்கள் உமது பரிபாலனத்தால் உமது திருநாமத்திற்கு உகந்தவர்களாகும்படியும் தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

வேறு அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு நாங்கள் மகிழ்வுடன் ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளைக் கனிவுடன் கையேற்றுக் கொண்டு, முத்திபேறுபெற்ற (இன்னாருடைய) வேண்டுதலினால் உம்முடைய திருச்சபை விசுவாசத்தில் பழுதின்றி மகிழவும், அமைதியுள்ள சீவியத்தால் என்றும் களிகூரவும் திருவருள் புரிந்தருளும். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 16. 18)

நீ கல்லாயிருக்கிறாய். இக்கல்லின் மேல் எனது திருச்சபையைக் கட்டுவேன்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே, தேவரீருடைய திருச்சபையை பரிசுத்த போஷிப்பால் செழிக்கும்படி அதை இரக்கமாய் ஆண்டு நடத்தியருளும். அது தேவரீருடைய வல்லமையுள்ள பரிபாலணத்தால் நடத்தப்பட்டு சுயாதீனத்தில் ஓங்கி வளரவும், வேத அநுசாரத்தில் பழுதின்றி நிலைதிருக்கவும் தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு . . . 

வேறு செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, உம்முடைய திருச்சபையில் தேவரீர் அருளிச் செய்த வரப்பிரசாதத்தின் இஸ்பிரித்துவை பொழிந்தருளும். உம்முடைய (வேதசாட்சியும்) பெரிய குருவுமாகிய (இன்னாருடைய) மன்றாட்டினால் மேய்ப்பருக்கு மந்தையின் கீழ்படிதலும் அல்லது மந்தைக்கு மேய்ப்பரின் பரிவும் குறையாதபடி தேவரீரை மன்றாடுகிறோம். - தேவரீரோடு . . .

---

For other Common mass for saints please click here

Sep. 20 - Saint Eustachius - அர்ச். ஏயுஸ்தாக்கியாரும், துணைவரும் - வேதசாட்சிகள்.

September - 20 
அர்ச். ஏயுஸ்தாக்கியாரும், துணைவரும் - வேதசாட்சிகள்.

பிரவேசம்: சங். 44: 15,14

பரிசுத்தவான்களுடைய ஞானத்தை மக்கள் வெளிப்படுத்துவார்கள். சங்கத்தார் அவர்களுடைய புகழ்ச்சியைக் கூறுவார்கள். அவர்களுடைய நாமங்கள் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும். (சங். 32. 1) நீதிமான்களே, ஆண்டவரிடத்தில் அகமகிழ்ச்சியுடன் அவரை கீர்த்தனஞ் செய்யுங்கள். அவரை புகழ்வது இருதய நேர்மையுள்ளவர்களுக்குரியது.. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளாகிய (இன்னார் இன்னாருடைய..) பரலோக பிறப்புநாளை கொண்டாட எங்களுக்கு கிருபை செய்தருளினீரே. நாங்களும் அவர்களுடைய கூட்டுறவைப் பெற்று, நித்திய பேரின்ப பாக்கியத்தில் களிகூர எங்களுக்கு திருவுளம் புரிந்தருளும். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்

ஞானாகமத்திலிருந்து வாசகம்  (ஞானா. 5. 16-20)

நீதிமான்கள் என்றென்றைக்கும் சீவிப்பார்கள். கர்த்தரிடத்தில் அவர்களுக்குச் சம்பாவனையுண்டு; அதி உன்னத கடவுள் அவர்களை என்றும் பாதுகாக்கிறார். ஆகையால் ஆச்சரியமான ராசாங்கத்தையும் மகிமையின் கிரீடத்தையும் கர்த்தர் கரங்களினின்றடைவார்கள். அவருடைய வலது கரம் அவர்களை காப்பாற்றியது அவரது பரிசுத்த புஜம் அவர்களை ஆதரித்தது. அவர் பற்றுதலானது ஆயுதமணிந்து கொள்ளும். அவர் சத்துராதிகளைப் பழி வாங்குவதற்குச் சிருஷ்டிகளுக்காக ஆயுதமணிவார். இருப்புக் கவசமாக நீதியையும் சிரசாயுதமாக தமது நேர்மையுள்ள தீர்மானத்தையும் தரித்துக் கொள்ளுவார். ஊடுருவப்படாத கேடயமாக நீதித்தனத்தால் தம்மை மூடிக்கொள்வார்.

படிக்கீதம்: (சங். 125. 5-6)

வேடர்களின் கண்ணிக்கு குருவி தப்பினதுபோல, நம்முடைய ஆத்துமம் தப்பிற்று. – கண்ணி தெறித்துப் போயிற்று. நாமோ விடுதலையானோம். பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த ஆண்டவருடைய நாமத்தினால் நமக்கு சகாயமுண்டாயிருக்கிறது.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (சங். 67. 4) நீதிமான் சர்வேசுரன் சமூகத்தில் விருந்து செய்து திருப்தி அடைந்து அகமகிழ்வார்கள். ஆனந்த அக்களிப்படை வார்கள். அல்லேலுய்யா

சுவிஷேசம் (லூக். 6. 17-23)

அக்காலத்தில் சேசுநாதர் மலையினின்று இறங்கி, மைதானமான ஓரிடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷர் கூட்டமும், யூதேயா நாட்டின் எத்திசை யிலிருந்தும், ஜெருசலேம் நகரத்திலிருந் தும், தீர், சீதோன் நகரங்களின் கடற் கரைகளிலிருந்தும் வந்த ஏராளமான ஜனங்களும் இருந்தார்கள். இவர்கள் அவருடைய வாக்கைக் கேட்கவும், தங்கள் நோய்களினின்று சுகமாக்கப்படவும் வந்திருந்தார்கள். அசுத்த அரூபிகளால் உபாதிக்கப்பட்டவர்களும் சொஸ்த மானார்கள். அவரிடத்திலிருந்து ஒரு சக்தி புறப்பட்டு, எல்லோரையும் குணமாக் கினபடியினாலே, ஜனங்களெல்லோரும் அவரைத் தொடும்படி வழிதேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் தம்முடைய சீஷர்கள்மேல் தமது கண்களை ஏறெடுத்துப் பார்த்துத் திருவுளம்பற்றினதாவது: தரித்திரர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் உங்களு டையது.  இப்பொழுது பசியாயிருக்கிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சிரிப்பீர்கள். மனுமகனைப்பற்றி ஜனங்கள் உங்க ளைப் பகைத்து, உங்களை விலக்கித் தூஷணித்து உங்கள் பெயரை ஆகா தென்று தள்ளும்போது, நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே அகமகிழ்ந்து களி கூறுங்கள். ஏனெனில் இதோ, பரலோகத்திலே உங்கள் சம்பாவனை ஏராளமாயிருக்கின்றது.

ஒப்புக்கொடுத்தல் (சங். 149. 5-6)

பரிசுத்தவான்கள் மகிமையில் அக்களிப்பார்கள். தங்கள் மஞ்சங்களில் களிகூறுவார்கள். அவர்களுடைய வாயில் சர்வேசுரனுடைய துதிகள் விளங்கும்.  (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுடைய பக்தியின் காணிக்கையை தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவை தேவரீருடைய நீதிமான்களின் மகிமையின் பொருட்டு உமக்கு பிரியமுள்ளவனவாகவும், உம்முடைய இரக்கத்தினால் எங்கள் இரட்சணியத்துக்குரியனவாகவுங் கடவன – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (லூக். 12. 4)

உங்களை துன்புறுத்திகிறவர்களைப் பற்றி அஞ்சாதீர்கள் என்று என் சிநேகி தராகிய உங்களுக்கு சொல்லுகிறேன்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே தேவரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளாகிய (இன்னார் இன்னாருடைய..) வேண்டுதலினால் நாங்கள் வாயால் உட்கொண் டதைச் சுத்தமான இருதயத்தினால் கிரகிக்குமாறு எங்களுக்கு திருவருள் புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.. – தேவரீரோடு …

Sapientiam Sanctorum - மேற்றிராணியரல்லாத வேதசாட்சிகள் பலர் பெயரால் - பொது

 மேற்றிராணியரல்லாத வேதசாட்சிகள் பலர் பெயரால் - பொது
Sapientiam Sanctorum

நெடுங்கீதம்: (சங். 125. 5-6)

கண்ணீருடன் விதைக்கிறவன் சந்தோஷத்துடன் அறுப்பார்கள். அவர்கள் விதைகளை தெளிக்கையில் அழுதுகொண்டு போனார்கள். ஆனால், தாங்கள் அறுத்த அரிக்கட்டுகளை சுமந்துகொண்டு வருகையில் பெருமகிழ்ச்சியோடு வருவார்கள். 

Sep. 19 Saint Januarius - ஜானுவாரியும் (Bishop) துணைவரும் - வேதசாட்சிகள்

செப்டம்பர் 19 

ஜானுவாரியும் (Bishop) துணைவரும் - வேதசாட்சிகள் 

பிரவேசம்: சங். 36: 39

நீதிமான்களுடைய இரட்சணியமோ ஆண்டவரிடமிருந்து வருகிறது. அவர் துன்ப காலத்தில் அவர்களை ஆதரிப்பவராயிருக்கிறார். (சங். 1) பொல்லாதவர்களை குறித்து எரிச்சற்படாதே, அக்கிரமஞ் செய்கிறவர்கள் பேரில் பொறாமை கொள்ளாதே. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: ஆண்டவரே, தேரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளான (இன்னார் இன்னாருடைய..) வருடாந்திர திருநாளினால் எங்களை மகிழச் செய்கிறீரே: அவர்களுடைய பேறுபலன்களைக் குறித்து மகிழ்கின்ற நாங்கள் அவர் களுடைய முன்மாதிரிகைகளினால் பற்றியெரியவும் தயவாய்க் கிருபை செய்தருளும். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

நிருபம்

அப்போஸ்தலரான முத். சின்னப்பர் எபிரேயருக்கு எழதிய நிருபத்திலிருந்து வாசகம்  (எபி. 10. 32-38)

சகோதரரே,. நீங்கள் உங்கள் முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் தெளிவடைந்து உபத்திரவங்களின் பெரும் போராட்டத்தைச் சகித்தீர்களே. ஒரு பக்கத்தில் நிந்தைகளிலும் உபத்திரவங்களிலும் பார்க்கி றவர்களுக்கு வேடிக்கையானீர்கள். மற்றொரு பக்கத்தில் அப்படிப் பாடுபட்டவர் களுக்கு நீங்களும் கூட்டாளிகளானீர்கள். எப்படியெனில் விலங்கிடப்பட்டவர் களுக்கு நீங்கள் மனதிரங்கினதுமன்றி, அதிக உத்தமும் நிலைபெற்றதுமான ஐசுவரியம் உங்களுக்கு உண்டென்று அறிந்து சந்தோஷமாய் உங்கள் ஆஸ்திகளையும் கொள்ளையடிக்கவிட்டீர்கள். ஆதலால் மிகுந்த சம்பா வனைக்கு ஏதுவான உங்கள் நம்பிக்கையை இழந்து போகாதேயுங்கள். நீங்கள் தேவசித்தத்தை நிறைவேற்றி, வாக்குத்தத்தத்தைக் கைக்கொள்ளும்டியாகப் பொறுமை உங்களுக்கு அவசரமாயிருக்கின்றது. இன்னும் இருப்பது சொற்பக்காலம். வரவேண்டியவர் வருவார். தாமதம்பண்ணார். என் நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான்.

படிக்கீதம்: (சங். 91. 13-14)

நீதிமான்கள் அபயமிட்டார்கள். ஆண்டவர் அவர்களுக்கு செவிசாய்த்து,  அவர்களுக்கு நேரிட்ட எல்லாத் துன்பங்களினின்று மீட்டருளினார். - இருதயத்தில் வேதனைப் படுகிறவர்களுக்குத் துணையாக ஆண்டவர் இருக்கிறார். மனத்தாழ்ச்சியுள்ளவர்களை இரட்சிப்பார்.

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா ஆண்டவரே, வெண்தூய்மையணிந்த வேதசாட்சிகளின் சேனை உம்மை புகழ்கின்றது. அல்லேலுய்யா

சுவிஷேசம் (லூக். 12: 1-8)

அக்காலத்தில் சேசுநாதர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரிசேயருடைய கள்ள ஞானமாகிய புளிக்காரத்தின் மட்டில் நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். ஆயினும், வெளியாக்கப்படாத மறைபொருளு மில்லை அறியப்படாத இரகசியமுமில்லை. ஏனென்றால் நீங்கள் இருளிலே சொன்னவைகள் வெளிச்சத்திலே சொல்லப்படும்; நீங்கள் அறைகளிலே காதுக்குள் பேசினது வீடுகளின் மேலே பிரசங்கிக்கப்படும். என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதற்குமேல் ஒன்றுஞ் செய்யத் திராணியற்றவர்களுக்கு நீங்கள் அஞ்சவேண்டாம். ஆனால் நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென்று உங்களுக்குக் காண்பிப்பேன்;  உயிரைப் பறித்த பின்பு நரகத்தில் தள்ள வல்லமையுள்ளவருக்கே அஞ்சுங்கள்;. ஆம், அவருக்கே அஞ்சுங்களென்று உங்களுக்குச் சொல்லு கிறேன். இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலங் குருவிகள் விற்கிறதல்லவோ? ஆயினும் அவைகளில் ஒன்றானாலும் சர்வேசுரனுடைய சமுகத்தில் மறக்கப் படுவதில்லை. உங்கள் தலை உரோமங்களெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன் ஆகையால் நீங்கள் அஞ்சவேண்டாம்;  அநேகம் அடைக்கலங் குருவிகளைவிட நீங்கள் அதிக விலையுள்ளவர்களாயிருக்கிறீர்கள். மீளவும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: மனிதர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுமகனும் சர்வேசுரனுடைய தூதர் முன்பாக அறிக்கை பண்ணுவார்.

ஒப்புக்கொடுத்தல் (ஞான. 3. 1-3)

நீதிமான்களுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய கரத்திலிருக்கின்றன. சாவின் பயம் அவர்களை அணுகாது. மதியீனருடைய கண்களுக்கு முன் அவர்கள் மரித்தவர்களாக தோன்றினார்கள். ஆனால் அவர்கள் சமாதானத்தில் இளைப்பாறுகிறார்கள். (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளின்மேல் களிகூர்ந்து நோக்கியருளும். தேவரீருடைய பரிசுத்த வேதசாட்சிகளான (இன்னார் . . இன்னாருடைய . .) வேண்டுதலினால் எல்லா ஆபத்துக்களி னின்றும் எங்களைத் தற்காத்தருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 10. 27)

நான் உங்களுக்கு இருளில் சொல்லுகிறதை வெளிச்சத்தில் சொல்லுங்கள். நீங்கள் காதிலே இரகசியமாய்க் கேட்கிறதையும் வீட்டு கூரையிலிருந்து பிரசங்கியுங்கள்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: ஆண்டவரே இந்த சற்பிரசாத உட்கொள்ளுதல் எங்களை பாவத்திலிருந்து பரிசுத்தமாக்கி தேவரீருடைய வேதசாட்சிகளான (இன்னார் இன்னாருடைய ..) வேண்டுதலினால் எங்களைப் பரலோக மருந்தில் பங்கு பற்றுவோராகவும் செய்யக்கடவது. – தேவரீரோடு …

மேற்றிராணியரல்லாத வேதசாட்சிகள் பலர் பெயரால் - பொது - Salus autem

 மேற்றிராணியரல்லாத வேதசாட்சிகள் பலர் பெயரால் - பொது
Salus autem

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

தேவ தோத்திர பாடல்கள்

மனமே வா தொழுவோம் கண்ணிகள்

(தே.தோ.கீ.)

1. மனமே வா தொழுவோம் பரமானந்தமாம் கடவுள் 

மலர்நேர் பொற்பதம் போற்ற எந்நாளும் நீ 

மனமே வா தொழுவோம்.

2. நினைவே நீ நினையாய் நம்மை நேசிக்கும ஆண்டவரை 

நினைவாலே அவர் நேசப் பெருக்கத்தை 

நினைவே நீ நினையாய்.

3. நெஞ்சே நீ ஸ்துதிப்பாய் ஒளிர் நித்தியன் பாதமதை 

நெஞ்சால் என்றவர் திவ்ய புகழ் நிதம் 

நெஞ்சே நீ ஸ்துதிப்பாய்.

4. மலர்காள் நீர் ஸ்துதிமின் பல மாங்கனி பூங்கனிகாள் 

மலர்காள் தேன் பொழிந்தே ஸ்துதிப்பீர்களே.

 மலர்காள் நீர் ஸ்துதிமின்.

5. விண்மீன் விண்ணொளிகாள் தொனிவோடிசை பாடளிகாள் 

விண் ஆள் ஆண்டவர் மாட்சியைப்பாடுவீர் 

விண்மீன் விண்ணொளிகாள்.

ஞாயிறு, 16 ஜூலை, 2023

ஜூலை 16-ம் தேதி பரி. கார்மேல் உத்தரிய மாதாவின் ஞாபகம்

 ஜூலை 16-ம் தேதி 

பரி. கார்மேல் உத்தரிய மாதாவின் ஞாபகம்

பிரவேசம் 

கன்னிகையான முத்திப்பேறுபெற்ற மரியாயிக்கு வணக்கமாக இத்திருநாளைக் கொண்டாடுகிற எல்லோரும் ஆண்டவ ரிடத்தில் அகமகிழ்வோமாக; அவளுடைய திருநாளில் சம்மனசுக்கள் ஆனந்தித்து சர்வேசுரனுடைய திருக்குமாரனைப் புகழ்கின்றார்கள்.* (சங். 44:2) என் இருதயம் ஓர் நல்ல வார்த்தையை வெளியிட்டது; என்னுடைய செய்கைகளை மன்னனுக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.-பிதாவுக்கும்......

சபை செபம்:

செபிப்போமாக: சர்வேசுரா, தேவரீர் உமது திவ்விய மாதாவாகிய மகா முத்திப்பேறுபெற்ற என்றுங் கன்னிகையான மரியம்மாளின் சபைக்குக் காரமேல் என்ற பரிசுத்த பட்டத்தைச் சூட்டி, அதனை அலங்கரித்தருளினீரே ; அவளுடைய ஞாபகத்தை இன்று பக்தி ஆசாரத்துடன் சிறப்பித்துக் கொண்டாடுகிற நாங்கள் அவளுடைய சகாயங்களால் காப்பாற்றப்பட்டு, நித்திய பேரின்ப பாக்கியத்திற்கு வந்துசேர அருகராகும்படி தயவாய்த் திருவருள் புரிந்தருளும். - அவரே தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்.

ஞானாகமத்திலிருந்து வாசகம்:-

சர்வ. 24: 23 31

நான் முந்திரிகைச் செடியைப்போல சுகந்தமான வாசனயின் இனிமையை வீசி னேன்; என்னுடைய பூக்கள் மாண்பினுடையவும், யோக்கியத்தையினுடையவும் கனிகளாம். நான் அரிய நேசத்தினுடையவும், பயத்தினுடையவும், அறிவினுடையவும், பரிசுத்த நம்பிக்கையினுடையவும் தாயாயிருக்கிறேன். என்னிடமே எல்லா நன்னெறியினுடையவும், உணமையினுடையவும் வரம் உண்டு; என்னிடமே சீவியத்தினுடையவும், புண்ணியத்தினுடையவும் சகல நம்பிக்கை யெல்லாம். என்னை ஆசிக்கிறவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து சேருங்கள்; என் கனிகளினால் நிரப்பப்படுங்கள். என் ஆவியானது தேனைவிட இனிப்பாயிருக்கின்றது; என் சுதந்தரம் தேனையும்,  அதன் இனிய சுவையையும்விட மேலானது. எக்காலத்துக்கும் தலைமுறைகளுக்கும் என் ஞாபகம் நிலைத்திருக்கும். என்னைப் புசிப்பவர்கள் இன்னமும் பசிகொள்ளுவார்கள்; என்னை அருந்துகிறவர்கள் இன்னமும் தாகங்கொள்ளுவார்கள். என் மொழி கேட்கிறவன் மோசம் போகமாட்டான்; என்னில் தங்கள் கிருத்தியங்களைச் செய்கிறவர்கள் பாவஞ் செய்யமாட்டார்கள். என்னை மகிமைப் படுத்துகிறவர்கள் நித்திய சீவியத்தை அடைவார்கள்.

படிக்கீதம்

கன்னிமரியாயே, கன்னிமைக்குப் பழுதின்றி இரட்சகருடைய தாயாராக ஏற்பட்டீரே; நீர் ஆசீர்வதிக்கப்பட்டவள்; வணக்கத்துக்குரியவள். - தேவதாயான கன்னிகையே, உலகம் அனைத்தும் கொள்ளமுடியாதவர் உமது திரு உதரத்தில் மனிதனாய் அடங்கலானாரே!

அல்லேலுய்யா, அல்லேலுய்யா.-  தேவதாயே. நாங்கள் இழந்த சீவியம் எங்களுக்கு உம்மாலேதான் கொடுக்கப் பட்டது; வானத்திலிருந்து வந்தவரைச் சிசுவாகத் தரித்து, உலகிற்கு இரட்சகராகப் பெற்றெடுத்தீர் அல்லேலுய்யா.

 சுவிசேஷ வாக்கியம்

லூக். 11:27-28.

 ஜனக்கூட்டத்தில் நின்று ஓர் ஸ்திரீயானவள் தன் சத்தத்தை உயர்த்தி, அவரை நோக்கி:  உம்மைச் சுமந்த உதரமும் நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவைகளே என்றார். அதற்கு அவர்: அப்படியானாலும், சர்வேசுரனுடைய வாக்கியத்தைக்கேட்டு, அதை அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்களென்று திருவுளம் பற்றினார்.

ஒப்புக்கொடுத்தல்

கன்னித்தாயே, எங்களைத் தேவ சந்நிதியில் நினைவுகூர்ந்து, எங்களுக்காக  நன்மையானவைகளைப் பேசி, எங்கள்மேலுள்ள தேவகோபம் தணியும்படி செய்தருளும்.

அமைதி மன்றாட்டு 

ஆண்டவரே, தேவரீருக்கு நாங்கள் ஒப்புக்கொடுத்த காணிக்கைப்  பொருள்களை அர்ச்சித்தருளும்; தேவதாயாகிய முத்திப்பேறுபெற்ற மரியம்மாளின் மகா பலனுள்ள வேண்டுதலைப் பார்த்து, அவை எங்களுக்கு இரட்சணியத்துக்குரியவைகளாகும்படி கிருபைசெய்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம்.-தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்..... அதே சேசுக்கிறீஸ்துவின் பெயரால்

உட்கொள்ளுதல்

பூலோகத்தில் அதியோக்கியமான அரசியே, என்றுங் கன்னிகையான மரியாயே, எங்களுடைய சமாதானத்திற்காகவும் மன்றாடும்; சகலத்திற்கும் இரட்சகரும் ஆண்டவருமான கிறீஸ்துவைப் பெற்றவளே

உட்கொண்டபின்

செபிப்போமாக: ஆண்டவரே, தேவரீருடைய மகிமை நிறைந்த தாயாகிய என்றுங் கன்னிகையான மரியம்மாளின் பக்திக்குரிய வேண்டுதல் எங்களுக்கு ஆதரவாயிருக்கக்கடவது; அவள் தம்முடைய இடைவிடாத சகாயங்களால் நிரப்பப்பட்டவர்களைச் சகல இடையூறுகளினின்று விடுவித்து, தமது அன்பினால் அவர்களை ஒன்றிக்கும்படி தேவரீரை மன்றாடுகிறோம்.- அதே பிதாவாகிய சர்வேசுரனோடு இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில்...!

ஜூலை -15 அர்ச். ஹென்றி அரசர், துதியர்

 ஜூலை -15

அர்ச். ஹென்றி

அரசர், துதியர்

பிரவேச கீதம்: சங். 36: 30-31

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைக்கும்: அவருடைய நாவு நியாத்தை பேசும். அவருடைய சர்வேசுரனின் நியாயப்பிராமாணம் அவருடைய இருதயத்திலிருக்கிறது. (பா. கா. அல்லேலுய்யா, அல்லேலுய்யா) (சங். 1). பொல்லாதவர்களை குறித்து அருவருப்படையாதே. அக்கிரமம் செய்கிறவர்களின்பேரில் கொள்ளாதே. - பிதாவுக்கும் . . . 

சபைச் செபம்

சர்வேசுரா, தேவரீர் உம்முடைய துதியரான முத்திப் பேறுபெற்ற (அர்ச். ஹென்றி. ) வருஷாந்ததிர திருநாளினால் மகிழச் செய்கீறிரே. அவருடைய பரலோக பிறப்புநாளை கொண்டாடுகிற நாங்கள் அவருடைய முன்மாதிரிகளை பின்பற்றி நடக்கத் தயவாய்க் கிருபை செய்தருளும். - தேவரீரோடு ...

ஞானாகமத்திலிருந்து வாசகம்

சர்வ. 31. 8-11

 குற்றமில்லாது காணப்பட்ட ஆஸ்திக்காரன் பாக்கியவான்; பொன்னின் பின் போகாதவனும், பணத்திலுந் திரவியத்திலும் நம்பிக்கை வையாதவனும் பாக்கியவான்.  அவன் யார்? அவனைப் புகழுவோம்; ஏனெனில், தன் சீவியகாலத் தில் அதிசயங்களைச் செய்தான்.  அதில் பட்சிக்கப்பட்டு உத்தமனானவன் எவனோ அவனுக்கு நித்திய மகிமை கிடைக்கும்; மீறி நடந்திருக்கக்கூடும்; ஆனால் மீறினவனல்ல, தின்மை செய்திருக்கக் கூடும், ஆனால் செய்யவில்லை. ஆனதால் அவன் பொருட்கள் ஆண்டவரிடத்தில் நிலையாக்கப்பட்டன; பரிசுத்தருடைய சபையாவும் அவன் தர்மங்களைப் பிரசித்தப்படுத்தும்.

படிக்கீதம்: சங். 91: 13-14

நீதிமான் பனையைப்போல் வளம்பெற்று லீபானிலுள்ள சேதுரு மரத்தைப்போல் ஆண்டவருடைய ஆலயத்திலே செழித்தோங்குவான். - (சங். 3.) காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிக்கும்படியாக.

அல்லேலுய்யா, அல்லேலுய்யா. - (இயாக. 1: 12) துன்பத்தை சகிக்கிறவன் பாக்கியவான். ஏனெனில் அவன் சோதிக்கப்பட்ட பின்னர் சீவியத்தின் முடியைப் பெற்றுக் கொள்வான். அல்லேலுய்யா.

சுவிசேஷம்

அர்ச். லூக்கா எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி:

லூக். 12: 35-40

அக்காலத்தில்: சேசுநாதர் தம் முடைய சீஷர்களுக்குத் திருவுளம்பற்றின தாவது: உங்கள் இடைகள் வரிந்து கட்டப்பட்டிருக்க, எரிகிற விளக்குகள் உங்கள் கரங்களில் இருக்கக்கடவன. தங்கள் எசமான் கலியாணத்திலிருந்து எப்பொழுது திரும்புவானோ என்று காத்துக்கொண்டு, அவன் வந்து கதவைத் தட்டினவுடனே திறக்கும் ஊழியரை ஒத்தவர்களாக இருங்கள். எசமான் வரும்பொழுது விழித்திருக்கக் காணும் அவ்வூழியர்களே பாக்கியவான்கள். அவன் தன் இடையை வரிந்து கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியில் அமர்த்தி, அருகில் வந்து அவர்களுக்குப் பரிமாறுவானென்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல்கிறேன். அவன் இரண்டாஞ் சாமத்தில் வந்தாலுஞ்சரி, மூன்றாஞ் சாமத்தில் வந்தாலுஞ்சரி, அவ்வண்ணமே அவர்கள் விழித்திருக்கக் காண்பானாகில், அவ்வூழியர்கள் பாக்கியவான்களாமே. மேலும், குடும்பத் தலைவன் திருடன் வரும்மணிநேரத்தை அறிந்திருப்பானாகில், சந்தேகமில்லாமல் விழித்திருந்து தன் வீட்டைக் கன்னமிட விடமாட்டான் என்பதை அறியக்கடவீர்கள். அப்படியே நீங்களும் ஆயத்தமாயிருங்கள்; ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார், என்றார்.

ஒப்புக்கொடுத்தல்: சங்.88:25

நமது உண்மையும், நமது இரக்கமும் அவரோடிருக்கும்; நமது நாமத்தால் அவருடைய வல்லமை உயரும். [பா.கா.: அல்லேலுய்யா.)

காணிக்கைச் செபங்கள் 

எல்லாம்வல்ல சர்வேசுரா, உமது அர்ச்சிஷ்டவருடைய மகிமைக்காக நாங்கள் தாழ்மையுடன் அளிக்கும் இக்காணிக்கை உமக்கு உகந்ததாகி. எங்கள் உள்ளத்தையும் உடலையும் தூய்மைப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு ...

அமைதி மன்றட்டு 

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத்தவான்களின் ஞாபகமாகத் தோத் திரப் பலிகளைத் தேவரீருக்குப் பலியிடுகிறோம்: இவைகளினால் இப்பொழுதும் எப்பொழுதும் நேரக் கூடிய தீமைகளினின்று விடுதலையாவோம் என நம்பியிருக் கிறோம்.- தேவரீரோடு இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்

உட்கொள்ளுதல்: மத் 24: 46-47

எசமான் வரும்போது விழித்திருக்கிறவனாய்க் காணப்படும் ஊழியன் பாக்கியவான்; தன் செல்வம் அனைத் துக்கும் அவனை அதிகாரியாக ஏற்படுத்துவான், என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். [பா.கா.: அல்லேலுய்யா.)

உட்கொண்டபின்

செபிப்போமாக: எங்கள் சர்வேசுரா, பரலோக போசனத்தினாலும்  பானத்தினாலும் உண்பிக்கப்பட்ட நாங்கள் யாருடைய ஞாபகமாக அவற்றைப் பெற்றுக் கொண்டோமோ, அவருடைய செபங்களினால் பாதுகாக்கப்படத் தேவரீரை இரந்து மன்றாடுகிறோம்.- தேவரீரோடு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில்...

சனி, 15 ஜூலை, 2023

மேற்றிராணியரல்லாத துதியர் ஒருவர் பெயரால் - பொது (Os Justi)

மேற்றிராணியரல்லாத துதியர் ஒருவர் பெயரால் - பொது

Os Justi

பிரவேசம்: சங். 36: 30-31

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைக்கும். அவருடைய நாவு நியாயத்தைப் பேசும். அவருடைய சர்வேசுரனின் நியாயப்பிரமாணம் அவருடைய இருதயத் திலிருக்கிறது. (பா. கா. அல்லேலுய்யா, அல்லேலுய்யா) (சங். 1) பொல்லா தவர்களைக் குறித்து அருவருப்படையாதே: அக்கிரமம் செய்கிறவர்கள் பேரில் வெறுப்பு கொள்ளாதே. – பிதாவுக்கும். . .

சபைச் செபம்

செபிப்போமாக: சர்வேசுரா, தேவரீர் உம்முடைய துதியரான முத்திபேறுபெற்ற (இன்னாருடைய) வருடாந்திர திருநாளினால் எங்களை மகிழச் செய்கிறீரே. அவருடைய பரலோக பிறப்புநாளைக் கொண்டாடுகிற நாங்கள் அவருடைய முன் மாதிகையைப் பின்பற்றி நடக்கத் தயவாய்க் கிருபை செய்தருளும். தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .

ஞானகமத்திலிருந்து வாசகம்  (சர்வப். 31. 8-11)

குற்றமில்லாது காணப்பட்ட ஆஸ்திக்காரன் பாக்கியவான்; பொன்னின் பின் போகாதவனும், பணத்திலுந் திரவியத்திலும் நம்பிக்கை வையாதவனும் பாக்கியவான். அவன் யார்? அவனைப் புகழுவோம்; ஏனெனில், தன் சீவிய காலத்தில் அதிசயங்களைச் செய்தான். அதில் பட்சிக்கப்பட்டு உத்தம னானவன் எவனோ அவனுக்கு நித்திய மகிமை கிடைக்கும்; மீறி நடந் திருக்கக்கூடும்; ஆனால் மீறினவனல்ல, தின்மை செய்திருக்கக் கூடும், ஆனால் செய்யவில்லை. ஆனதால் அவன் பொருட்கள் ஆண்டவரிடத்தில் நிலையாக்கப் பட்டன் பரிசுத்தருடைய சபை யாவும் அவன் தர்மங்களைப் பிரசித்தப்படுத்தும்.

படிக்கீதம்: (சங். 91. 13-14)

நீதிமான் பனையைப்போல வளம்பெற்று, லிபானிலுள்ள சேதுரு மரத்தைப் போல ஆண்டவருடைய ஆலயத்திலே செழித்தோங்குவான். (சங். 3) காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிக்கும்படியாக. 

அல்லேலுய்யா கீதம்

அல்லேலுய்யா, அல்லேலுய்யா (இயாக. 1. 12) துன்பத்தைச் சகிக்கிறவன் பாக்கியவான்: ஏனெனில் அவன் சோதிக்கப்பட்ட பின்னர், சீவியத்தின் முடியை பெற்றுக் கொள்வான், அல்லேலுய்யா

சப்தரிகை ஞாயிறுக்குப்பின் அல்லேலுய்யா கீதத்தை விட்டுவிட்டு கீழேயுள்ளதைச் சொல்ல வேண்டும்

நெடுங்கீதம்: (சங். 111. 1-3)

ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய கற்பனைகளில் மிகவும் பிரியப்படுகிறவன் பாக்கியவான். – அவனுடைய சந்ததி பூமியில் வல்லமையுள்ளதாகும்;:. செம்மையானவர்களின் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும். மகிமையும் செல்வமும் அவன் வீட்டிலிருக்கும். அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைநிற்கின்றது.

பாஸ்குகாலத்தில் படிக்கீதம் முதலியவற்றை விட்டுவிட்டு கீழேயுள்ளதை சொல்ல வேண்டும்.

அல்லேலுய்யா, அல்லேலுய்யா – (இயாக. 1: 12) துன்பத்தைச் சகிக்கிறவன் பாக்கியவான். ஏனெனில் அவன் சோதிக்கப்பட்ட பின்னர், சீவியத்தின் மூடியை பெற்றுக் கொள்வான். - (சர்வ. 45: 9) ஆண்டவர் அவரை நேசித்து, அவரை அலங்கரித்தார். மகிமையின் ஆடையை அவருக்கு உடுத்தினார், அல்லேலுய்யா

சுவிஷேசம் (லூக். 12: 35-40)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீடர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: உங்கள் இடைகள் வரிந்து கட்டப்படவும், எரிகிற தீபங்கள் உங்கள் கைகளில் இருக்கவுங்கடவது.  தங்கள் எஜமான் வந்து தட்டும்போது, உடனே அவருக் குத் திறக்கும்படியாக அவர் கலியாணத்தினின்று எப்பொழுது திரும்புவாரென்று காத்திருக்கிற மனிதருக்கு நீங்கள் ஒப்பாயிருக்கக்கடவீர்கள்.  எஜமான் வரும் போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியரே பாக்கியவான்கள்;  அவர் தமது இடையை வரிந்து கட்டி, அவர்களைப் பந்தியமரச்செய்து, அவர்களில் ஒவ்வொருவரிடத்திலும் போய் அவர்களுக்குப் பரிமாறுவாரென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர் இரண்டாஞ் சாமத்தில் வந்தாலும், மூன்றாஞ் சாமத்தில் வந்தாலும், அவ்வண்ணமே காண்பாராகில், அவ்வூழியர் பாக்கியவான்கள். அல்லாமலும், திருடன் இன்ன வேளையில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், சந்தேகமற விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிந்து கொள்ளுங்கள். அப்படியே, நீங்களும் ஆயத்தமாயிருங்கள். ஏனென்றால் நீங்கள் நினையாத வேளையில் மனுமகன் வருவார் என்று திருவுளம்பற்றினார்.

ஒப்புக்கொடுத்தல் (சங். 88: 25)

நமது உண்மையும், நமது இரக்கமும் அவரோடிருக்கும். நமது நாமத்தால் அவருடைய வல்லமை உயரும். (பா. கா. அல்லேலுய்யா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, தேவரீருடைய பரிசுத்தவான்களின் ஞாபகமாகத் தோத்திரப் பலிகளைத் தேவரீருக்குப் பலியிடுகிறோம். இவைகளினால் இப்பொழுதும் எப்பொழுதும் நேரக்கூடிய தீமைகளிலிருந்து விடுதலையாவோம் என நம்பியிருக்கிறோம். – தேவரீரோடு ….

உட்கொள்ளுதல் (மத். 24. 46-47)

எசமான் வரும்போது விழித்திருக்கிறவனாய்க் காணப்படும் ஊழியன் பாக்கியவான். தன் செல்வம் அனைத்துக்கும் அவனை அதிகாரியாக ஏற்படுத்துவான், என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  (பா. கா. அல்லேலுய்யா)

உட்கொண்ட பின்

செபிப்போமாக: எங்கள் சர்வேசுரா, பரலோக போசனத்தினாலும் பானத்தி னாலும் உண்பிக்கப்பட்ட நாங்கள் யாருடைய ஞாபகமாக அவற்றை பெற்றுக் கொண்டோமோ, அவருடைய செபங்களினால் பாதுகாக்கப்படத் தேவரீரை இரந்து மன்றாடுகிறோம். தேவரீரோடு . . .

வெள்ளி, 14 ஜூலை, 2023

ஜூலை - 14 அர்ச். போனவெந்தூர் மேற்., துதி., வேதபா.

  ஜூலை - 14

அர்ச். போனவெந்தூர்

மேற்., துதி., வேதபா.

பிரவேச கீதம்: சர்வப். 15:5.

சபை நடுவில் பேச ஆண்டவர் அவருக்கு நாவன்மை அளித்தார்: விவேகமும், அறிவாற்றலும் நிறைந்த உணர்வை அவருக்குத் தந்தருளினார்: மகிமையை மேலாடையாக அவருக்கு அணிவித்தார். (T.P. அல்லேலூயா, அல்லேலூயா). (சங். 91:2) ஆண்ட வரைப் புகழ்வது நலமே; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவதும் நலமே. V. பிதாவுக்கும்... சபை நடுவில். 

சபை மன்றாட்டு :

சர்வேசுரா, உம்முடைய மக்களுக்கு முத்திப்பேறுபெற்ற போனவெந்தூரா நாதரை நித்திய ஈடேற்றத்தின் போதகராக தந்தருளினீரே. சீவிய வாழ்வின் போதகராக எங்களால் இவ்வுலகில் போற்றப்படுகிற அவரை மோட்சத்திலே மனுபேசுகிறவராக அடைய நாங்கள் அருகராகும்படித் திருவருள்புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். உம்மோடு . . . 

அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்

(II தீமோத். 4:1-8)

மிகவும் பிரியமானவரே: சர்வேசுரன் முன்பாகவும், ஜீவியர்களையும் மரித்தவர்களையும் நடுத்தீர்க்கப் போகிறவராகிய யேசுகிறிஸ்துநாதர் முன்பாகவும், அவருடைய ஆகமனத்தையும் அரசாட்சியையுங் குறித்து உமக்குச் சாட்சியாகக் கற்பிக்கிறதாவது: நீர் தேவ வாக்கியத்தைப் பிரசங்கம் பண்ணக்கடவீர். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் அதில் ஊன்றி நிற்பீராக எவ்விதப் பொறுமையோடும் உபதேசத்தோடும் கண்டித்து, மன்றாடி, கடிந்து கொள்வீராக. ஏனெனில் மனிதர்கள் குணமான உபதேசத்தைச் சகிக்க மாட்டாமல், காதரிப்புள்ளவர்களாய், சுய இச்சைகளுக்கு இசைவான போதகர்களைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, சத்தியத்திற்கு செவிகொடாமல் விலகி, கட்டுக் கதைகளைப் பின்பற்றுகிற காலங்கள் வரும். நீரோ விழிப்பாயிருந்து,  எல்லா விதத்திலும் பிரயாசைப்பட்டு, சுவிசேஷகனுக்குரிய தொழிலைச் செய்து, உம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுவீராக; மன அமைதியுள்ளவராயிரும். நானோ இதோ பலியாகப் போகிறேன் என் தேகக்கட்டு அவிழுங் காலம் கிட்டியிருக்கிறது. நல்ல யுத்தம் செய்தேன், என் அயனத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்தேன். கடைசியாய் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதை நீதியுள்ள நடுவராகிய கர்த்தர் அந்த மகா நாளில் எனக்குக் கொடுப்பார். எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை ஆசிக்கிற சகலருக்கும் அவர் அதைக் கொடுப்பார்.

படிக்கீதம் சங்.36:30, 31, 

ஞானத்தைப் நீதிமானின் வாய் பேசும்: அவரது நாவும் நியாயத்தை நவிலும். V. கடவுள் கட்டளை அவர் உள்ளத்தில் இருக்கின்றது: அவரது நடை தடுமாறாது.

அல்லேலூயா, அல்லேலூயா .(சர்ப் 45:9) ஆண்டவர் அ மீது அன்புகொண்டு அவரை அணி செய்தார்; மகிமையை மேலாடையாக அவருக்கு அணிவித்தார், அல்லேலூயா.

மத்தேயு எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி (மத் 5:1319)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீஷர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: நீங்கள் பூமியின் உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப் போனால் எதனால் சாரமாக்கப்படும்? இனி அது வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதரால் மிதிக்கப்படுவதற்கு மேயன்றி, வேறொன்றுக்கும் உதவாது.  நீங்கள் உலகத்தின் ஒளியாயிருக்கிறீர்கள். பர்வதத்தின்மேலிருக்கிற பட்டணம் மறைவாயிருக்கமாட்டாது. தீபத்தைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்காமல் வீட்டிலுள்ள யாவருக்கும் பிரகாசிக்கும்படி அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள். அவ்வண்ணமே மனிதர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரமண்டலங்களிலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் பொருட்டு, உங்கள் ஒளி அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.  வேதப் பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களை என்கிலும் அழிக்க வந்தேனென்று நீங்கள் நினைக்க வேண்டாம். அழிப்பதற்கல்ல; நிறைவேற்றுவதற்கே வந்தேன். உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: வானமும் பூமியும் ஒழிந்து போகுமுன் வேதப்பிரமாணத்திலுள்ள சகலமும் நிறைவேறுமொழிய அதில் ஓர் சிறு அட்சரமாவது ஓர் புள்ளியாவது நிறைவேறாமற் போவதில்லை. ஆகையால் மிகவும் சிறிதாகிய இந்தக் கற்பனைகளில் ஒன்றை மீறி, அவ்வண்ணமே மனிதருக்குப் போதிப்பவன் மோட்ச இராச்சியத்தில் மிகவும் சிறியவனாக எண்ணப்படுவான். அவைகளை அனுசரித்துப் போதிப்பவனோ மோட்ச இராச்சியத்தில் பெரியவனாக எண்ணப்படுவான். 

ஒப்புக்கொடுத்தல்: சங்.91: 13

நீதிமான் ஈந்துபோல் செழித்தோங்குவான். லீபானின் சேதுரு மரம்போல் படர்ந்து வளர்வான். (T.P. அல்லேலூயா)

அமைதி மன்றாட்டு:

ஆண்டவரே, தேவரீருடைய துதியரும், மேற்றிராணியாருமான அர்ச். போனவெந்தூரா நாதரின் வருஷாந்திர திருநாள் எங்களை உமது இரக்கத்திற்கு ஏற்றவர்களாகும்படி தேவரீரை மன்றாடுகிறோம். இப்பாவ பரிகாரப் பலியின் பக்தி நிறைந்த ஒப்புகொடுத்தலினால் அது அவரது பரலோக மகிமையை அதிகரிக்கவும், எங்களுக்கு உம்முடைய வரப்பிரசாதத்தின் கொடைகளை அடைந்து கொடுக்கவுங்கடவது. தேவரீரோடு இஸ்பிரித்து சாந்துவின் ஐக்கியத்தில். . . 

உட்கொள்ளுதல் லூக் 12:42, 

தக்க காலத்தில் தன் வேலையாட் களுக்குப் படியளக்கத் தலைவன் ஏற்படுத்திய நம்பிக்கையும் விவேகமுமுள்ள கண்காணிப்பாளர் இவரே. (T.P. அல்லேலூயா)

உட்கொண்ட பின் :

வேதபாரகர் பெயரால் - பொது (In Medio)

 வேதபாரகர் பெயரால் - பொது 

(In Medio)

பிரவேச கீதம்: சர்வப். 15:5.

சபை நடுவில் பேச ஆண்டவர் அவருக்கு நாவன்மை அளித்தார்: விவேகமும், அறிவாற்றலும் நிறைந்த உணர்வை அவருக்குத் தந்தருளினார்: மகிமையை மேலாடையாக அவருக்கு அணிவித்தார். (T.P. அல்லேலூயா, அல்லேலூயா). (சங். 91:2) ஆண்ட வரைப் புகழ்வது நலமே; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவதும் நலமே. V. பிதாவுக்கும்... சபை நடுவில். 

சபை மன்றாட்டு :

செபிப்போமாக: சர்வேசுரா, உம் முடைய மக்களுக்குப் அர்ச்....ஐ நித் திய மீட்பின் தொண்டராகத் தந்தருளினீர். மண்ணுலகில் அவரை வாழ்க்கையின் போதகராகப் பெற்ற நாங்கள் நித்தியத்திலும் அவரை எங்களுக் காகப் பரிந்து பேசுவோராக அடையும் தகுதிபெறச் செய்தருளுமாறு உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு...

அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்

(II தீமோத். 4:1-8)

மிகவும் பிரியமானவரே: சர்வேசுரன் முன்பாகவும், ஜீவியர்களையும் மரித்தவர்களையும் நடுத்தீர்க்கப் போகிறவராகிய யேசுகிறிஸ்துநாதர் முன்பாகவும், அவருடைய ஆகமனத்தையும் அரசாட்சியையுங் குறித்து உமக்குச் சாட்சியாகக் கற்பிக்கிறதாவது: நீர் தேவ வாக்கியத்தைப் பிரசங்கம் பண்ணக்கடவீர். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் அதில் ஊன்றி நிற்பீராக எவ்விதப் பொறுமையோடும் உபதேசத்தோடும் கண்டித்து, மன்றாடி, கடிந்து கொள்வீராக. ஏனெனில் மனிதர்கள் குணமான உபதேசத்தைச் சகிக்க மாட்டாமல், காதரிப்புள்ளவர்களாய், சுய இச்சைகளுக்கு இசைவான போதகர்களைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, சத்தியத்திற்கு செவிகொடாமல் விலகி, கட்டுக் கதைகளைப் பின்பற்றுகிற காலங்கள் வரும். நீரோ விழிப்பாயிருந்து,  எல்லா விதத்திலும் பிரயாசைப்பட்டு, சுவிசேஷகனுக்குரிய தொழிலைச் செய்து, உம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுவீராக; மன அமைதியுள்ளவராயிரும். நானோ இதோ பலியாகப் போகிறேன் என் தேகக்கட்டு அவிழுங் காலம் கிட்டியிருக்கிறது. நல்ல யுத்தம் செய்தேன், என் அயனத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்தேன். கடைசியாய் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதை நீதியுள்ள நடுவராகிய கர்த்தர் அந்த மகா நாளில் எனக்குக் கொடுப்பார். எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை ஆசிக்கிற சகலருக்கும் அவர் அதைக் கொடுப்பார்.

படிக்கீதம் சங்.36:30, 31, 

ஞானத்தைப் நீதிமானின் வாய் பேசும்: அவரது நாவும் நியாயத்தை நவிலும். V. கடவுள் கட்டளை அவர் உள்ளத்தில் இருக்கின்றது: அவரது நடை தடுமாறாது.

அல்லேலூயா, அல்லேலூயா .(சர்ப் 45:9) ஆண்டவர் அ மீது அன்புகொண்டு அவரை அணி செய்தார்; மகிமையை மேலாடையாக அவருக்கு அணிவித்தார், அல்லேலூயா.

(முன் தவக் காலத் துவக்கத்திலிருந்து அல்லேலூயாவுக்குப் பதிலாக)

நெடும் பாடல் சங். 111 : 1.3, 

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன்: அவர் கட்டளைகளை பெரிதும் விரும்புவான். V. அவன் சந்ததி நாட்டில் வலிமைபெற்றிருக்கும்: நேர்மனத்தோரின் தலைமுறை ஆசி பெற்றிருக்கும். V. புகழும் செல்வமும் அவன் வீட்டில் நிறைந்திருக்கும் : அவன் நீதி நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

(பாஸ்கா காலத்தில்)

அல்லேலூயா, அல்லேலூயா. V. (சர்வப். 45:9) ஆண்டவர் அவர் மீது அன்புகொண்டு, அவரை அணி செய்தார் ; மகிமையை மேலாடையாக அவருக்கு அணிவித்தார்.

அல்லேலூயா. V. (ஓசே. 14: 6) நீதிமான் லீலியைப்போல் தளிர்விடுவான். ஆண்டவர் திருமுன் என்றென்றும் செழித்திருப்பான். அல்லேலுயா.

மத்தேயு எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி (மத் 5:1319)

அக்காலத்தில் சேசுநாதர் தம் சீஷர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: நீங்கள் பூமியின் உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப் போனால் எதனால் சாரமாக்கப்படும்? இனி அது வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதரால் மிதிக்கப்படுவதற்கு மேயன்றி, வேறொன்றுக்கும் உதவாது.  நீங்கள் உலகத்தின் ஒளியாயிருக்கிறீர்கள். பர்வதத்தின்மேலிருக்கிற பட்டணம் மறைவாயிருக்கமாட்டாது. தீபத்தைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்காமல் வீட்டிலுள்ள யாவருக்கும் பிரகாசிக்கும்படி அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள். அவ்வண்ணமே மனிதர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரமண்டலங்களிலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் பொருட்டு, உங்கள் ஒளி அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.  வேதப் பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களை என்கிலும் அழிக்க வந்தேனென்று நீங்கள் நினைக்க வேண்டாம். அழிப்பதற்கல்ல; நிறைவேற்றுவதற்கே வந்தேன். உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: வானமும் பூமியும் ஒழிந்து போகுமுன் வேதப்பிரமாணத்திலுள்ள சகலமும் நிறைவேறுமொழிய அதில் ஓர் சிறு அட்சரமாவது ஓர் புள்ளியாவது நிறைவேறாமற் போவதில்லை. ஆகையால் மிகவும் சிறிதாகிய இந்தக் கற்பனைகளில் ஒன்றை மீறி, அவ்வண்ணமே மனிதருக்குப் போதிப்பவன் மோட்ச இராச்சியத்தில் மிகவும் சிறியவனாக எண்ணப்படுவான். அவைகளை அனுசரித்துப் போதிப்பவனோ மோட்ச இராச்சியத்தில் பெரியவனாக எண்ணப்படுவான். 

ஒப்புக்கொடுத்தல்: சங்.91: 13

நீதிமான் ஈந்துபோல் செழித்தோங்குவான். லீபானின் சேதுரு மரம்போல் படர்ந்து வளர்வான். (T.P. அல்லேலூயா)

அமைதி மன்றாட்டு:

ஆண்டவரே, உம்முடைய மறை ஆயரும் (துதியரும்) மறை வல்லுநருமான.... உடைய உருக்கமான மன்றாட்டு எங்களுக்குக் குறைபடாமலிருப்பதாக, அந்த மன்றாட்டு எங்கள் காணிக்கைகளை உமக்கு உகந்தன வாக்கி, உமது மன்னிப்பை எங்களுக்கு என்றும் பெற்றுத்தருவதாக. உம்மோடு...

உட்கொள்ளுதல் லூக் 12:42, 

தக்க காலத்தில் தன் வேலையாட் களுக்குப் படியளக்கத் தலைவன் ஏற்படுத்திய நம்பிக்கையும் விவேகமுமுள்ள கண்காணிப்பாளர் இவரே. (T.P. அல்லேலூயா)

உட்கொண்ட பின் :

செபிப்போமாக: ஆண்டவரே,உம் பலிகள் எங்களுக்கு மீட்பு அளிக்கும் படி உம் மறை ஆயரும் (துதியரும்) புகழ்மிக்க மறை வல்லுநருமான அர்ச்... உம்மை அணுகி எங்களுக்காகப் பரிந்து பேச வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு 

(மற்றொரு வாசகம்)

ஞானாகமத்திலிருந்து வாசகம் (சர்வப். 39:6-14)

நீதிமான் தன்னை உண்டாக்கின கடவுள் மட்டில் விழித்திருப்பதற்குத் தன் இருதயத்தைக் கையளிப்பான்; உன்னத ஆண்டவருடைய சமூகத்தில் மன்றாடுவான். செபத்தில் தன் வாயைத் திறப்பான்; தன் குற்றங்களுக்காக மன்றாடுவான். ஏனெனில், மகத்தான ஆண்டவர் மனது வைப்பாரேயாகில் அறிவினால் அவனை நிரப்புவார். தமது ஞானத்தின் போதகங்களை மழையைப் போல வரவிடுவார்; அவனும் தன் செபத்தில் ஆண்டவரைத் தோத்தரிப் பான். அவர் அவனுடைய யோசனை யையும் மார்க்கத்தையும் நடத்துவார்; மறை பொருட்களை யோசித்துப் பார்ப் பான். தமது போதகத்தின் மார்க் கத்தை வெளியாக்குவார், ஆண்டவர் உடன்படிக்கையின் கட்டளையில் மகிமை கொள்ளுவான். அநேகர் அவ னுடைய ஞானத்தைப் புகழ்வார்கள்: சதாகாலத்திற்கும் அழிவடையமாட் டான். அவன் ஞாபகம் போய்விடாது; தலைமுறை தலைமுறைக்கும் அவன் பெயர் கொண்டாடப்படும். ஞானத்தைப் பிரசைகள் அவன் சொல்லிக் காட்டுவார்கள், பரிசுத்த சபையும் அவன் புகழ்ச்சியைக் கொண்டாடும்.

புதன், 12 ஜூலை, 2023

மடாதிபர் - பொது (Os Justi)

 மடாதிபர் - பொது 

(Os Jus

பிரவேச கீதம் : சங். 36 : 30.31 

ஞானத்தைப் நீதிமானின் வாய் பேசும்; அவரது நாவும் நியாயத்தை நவிலும்; கடவுள் கட்டளை அவர் உள் ளத்தில் இருக்கின்றது. (T. P. அல்லே லூயா, அல்லேலூயா). (சங். 36: 1) திங்கிழைப்போரைக் கண்டு மனம் பதறாதே; தீமை செய்வோரின் நிலை கண்டு பொறாமை கொள்ளாதே. V. பிதாவுக்கும்.... நீதிமானின்.

சபை மன்றாட்டு :

செபிப்போமாக: ஆண்டவரே, மடாதிபரான அர்ச். ......எங்களுக்காகப் பரிந்து பேசுவாராக ; எங்கள் பேறு பலன்களால் அடைய இயலாததை அவர் ஆதரவினால் நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று மன்றாடுகிறோம். உம்மோடு....

ஞானாகமத்திலிருந்து வாசகம் 

(சர்வப். 45. 1 - 6 )

 சர்வேசுரனுக்கும், மனிதருக்கும் பிரியப்பட்டவர் மோயீசனென்பவர்; அவருடைய ஞாபகங் கொண்டாடப்பட்டது. பரிசுத்தருடைய மகிமையில் அவரைச் சமானமாக்கினார்; சத்துராதிகளுடைய பயத்தில் அவரை மகிமைப்படுத்தினார்; தமது வார்த்தைகளால் கொடிதான காரியங்களை அடக்கினார். அரசர் முன்பாக அவரை மகிமைப்படுத்தினார், தமது சனங்களுக்கு முன்பாக அவருக்குக் கற்பித்தார்; அவருக்குத் தமது மகிமையைக் காண்பித்தார். விசுவாசத்திலும், சாந்த குணத்திலும் அவரைப் பரிசுத்தராக்கினார்; சகல மனிதரிடத்தினின்று அவரை தெரிந்துகொண்டார்  அவருக்குச் செவிகொடுத்தார்; அவர் வேண்டுதலைக் கேட்டார்; அவரை மேகத்திற்குள் கூட்டிப் போனார். சனங்களுக்கு முன்பாக அவருக் குக் கட்டளைகளைக் கொடுத்தார்; சீவியத்தினுடையவும், நடத்தையினுடையவுஞ் சட்டத்தையுந் தந்து, தமது உடன்படிக்கையை யாக்கோபுக்கும், தமது தீர்மானங்களை இஸ்ராயேலுக்கும் போதிக்கும்படி கொடுத்தார்.

தியானப் பாடல் : சங்.20:4-5.

ஆண்டவரே, இனிய ஆசிகளுடன் அவரை எதிர்கொண்டு அழைத்தீர். அவரது தலையில் மணிமுடி சூட்டினீர். V. அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி னார்; அவருக்கு நீர் என்றென்றும் நீடிய வாழ்வை வழங்கினீர்.

அல்லேலூயா, அல்லேலூயா. V. (சங்.91:13) நீதிமான் ஈந்துபோல் செழித்தோங்குவான்; லீபானின் சேதுரு மரம்போல் படர்ந்து வளர்வான்.  அல்லேலூயா ...

(முன்தவக் காலத் துவக்கத்திலிருந்து அல்லேலூயாவுக்குப் பதிலாக)

நெடும் பாடல்: சங். 111 : 1-3.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன். அவர் கட்டளைகளைப் பெரிதும் விரும்புவான். V. அவன் சந்ததி நாட்டில் வலிமை பெற்றிருக்கும்; நேர்மனத்தோரின் தலைமுறை ஆசி பெற்றிருக்கும். V. புகழும் செல்வமும் அவன் வீட்டில் நிறைந்திருக்கும்; அவன் நீதி நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

(பாஸ்கா காலத்தில்)

அல்லேலூயா, அல்லேலூயா. V. (சங். 91: 13) நீதிமான் ஈந்துபோல் செழித்தோங்குவான்: லீபானின் சேதுரு மரம்போலப் படர்ந்து வளர்வான்.

அல்லேலூயா. V. (ஓசே. 14:6) நீதி மான் லீலியைப்போல் தளிர்விடுவான் ; ஆண்டவர் திருமுன் என்றென்றும் செழித்திருப்பான். அல்லேலூயா.

* மத்தேயு எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி 

(மத். 19:27-29)

அக்காலத்தில் இராயப்பர் மாறுத்தாரமாக, சேசுநாதரை நோக்கி: இதோ நாங்கள் எல்லாவற்றையுந் துறந்து விட்டு, உம்மைப் பின்சென்று வந்தோமே. அதனால் எங்களுக்கு என்ன கிடைக்கும்? என, சேசுநாதர் அவர்களுக்குச் சொன்னதாவது: மறு ஜென்மத்தில் மனுமகன் தம்முடைய மகிமை பத்திராசனத்தில் வீற்றிருக்கும் போது, என்னைப் பின் சென்ற நீங்களும், இஸ்ராயேலருடைய பன்னிரண்டு கோத்திரங்களையும் நடுத் தீர்ப்பவர்களாகப் பன்னிரண்டு சிம்மாசனங்களில் உட்காருவீர்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அல்லாமலும் என் நாமத்தைப் பற்றி வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தந்தையையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது, விட்டுவிட்ட எவனும், நூறுமடங்கு பெறுவான், நித்திய சீவியத்தையும் சுதந்தரித்துக்கொள்ளுவான் என்றார்.

காணிக்கைப் பாடல்:  சங். 20. 3-4. 

ஆண்டவரே, அவன் இதயத்தின் ஆவலை நிறைவு செய்தீர் ; அவனுடைய விண்ணப்பத்தை நீர் புறக்கணிக்க வில்லை; அவன் தலையில் மணிமுடி சூட்டினீர். (T.I'. அல்லேலூயா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருப் பீடத்தின் மேல் நாங்கள் வைத்த காணிக்கைகள், மடாதிபரான அர்ச்.   உடைய வேண்டுதலால், எங்களுடைய மீட்புக்குப்பலனுள்ளதாகுமாறு உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு... 

உட்கொள்ளுதல் : லூக், 12 42 

தக்க காலத்தில் தன் வேலையாட் களுக்குப் படியளக்கத் தலைவன் ஏற்படுத்திய நம்பிக்கையும் விவேகமுமுள்ள கண்காணிப்பாளர் இவரே. (T. P. அல்லேலூயா.)

உட்கொண்ட பின் 

செபிப்போமாக: ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இந்தத் திருஅனு மானமும், மடாதிபரான அர்ச்......... உடைய வேண்டுதலும் எங்களை என்றும் காப்பனவாக ;இதனால் நாங்கள் அவரது புனித வாழ்வைப் பின்பற்றி அவரது வேண்டுதலின் அடைந்துகொள்வோமாக. உம்மோடு.