ஜூலை - 14
அர்ச். போனவெந்தூர்
மேற்., துதி., வேதபா.
பிரவேச கீதம்: சர்வப். 15:5.
சபை நடுவில் பேச ஆண்டவர் அவருக்கு நாவன்மை அளித்தார்: விவேகமும், அறிவாற்றலும் நிறைந்த உணர்வை அவருக்குத் தந்தருளினார்: மகிமையை மேலாடையாக அவருக்கு அணிவித்தார். (T.P. அல்லேலூயா, அல்லேலூயா). (சங். 91:2) ஆண்ட வரைப் புகழ்வது நலமே; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவதும் நலமே. V. பிதாவுக்கும்... சபை நடுவில்.
சபை மன்றாட்டு :
சர்வேசுரா, உம்முடைய மக்களுக்கு முத்திப்பேறுபெற்ற போனவெந்தூரா நாதரை நித்திய ஈடேற்றத்தின் போதகராக தந்தருளினீரே. சீவிய வாழ்வின் போதகராக எங்களால் இவ்வுலகில் போற்றப்படுகிற அவரை மோட்சத்திலே மனுபேசுகிறவராக அடைய நாங்கள் அருகராகும்படித் திருவருள்புரிந்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். உம்மோடு . . .
அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்
(II தீமோத். 4:1-8)
மிகவும் பிரியமானவரே: சர்வேசுரன் முன்பாகவும், ஜீவியர்களையும் மரித்தவர்களையும் நடுத்தீர்க்கப் போகிறவராகிய யேசுகிறிஸ்துநாதர் முன்பாகவும், அவருடைய ஆகமனத்தையும் அரசாட்சியையுங் குறித்து உமக்குச் சாட்சியாகக் கற்பிக்கிறதாவது: நீர் தேவ வாக்கியத்தைப் பிரசங்கம் பண்ணக்கடவீர். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் அதில் ஊன்றி நிற்பீராக எவ்விதப் பொறுமையோடும் உபதேசத்தோடும் கண்டித்து, மன்றாடி, கடிந்து கொள்வீராக. ஏனெனில் மனிதர்கள் குணமான உபதேசத்தைச் சகிக்க மாட்டாமல், காதரிப்புள்ளவர்களாய், சுய இச்சைகளுக்கு இசைவான போதகர்களைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, சத்தியத்திற்கு செவிகொடாமல் விலகி, கட்டுக் கதைகளைப் பின்பற்றுகிற காலங்கள் வரும். நீரோ விழிப்பாயிருந்து, எல்லா விதத்திலும் பிரயாசைப்பட்டு, சுவிசேஷகனுக்குரிய தொழிலைச் செய்து, உம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுவீராக; மன அமைதியுள்ளவராயிரும். நானோ இதோ பலியாகப் போகிறேன் என் தேகக்கட்டு அவிழுங் காலம் கிட்டியிருக்கிறது. நல்ல யுத்தம் செய்தேன், என் அயனத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்தேன். கடைசியாய் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதை நீதியுள்ள நடுவராகிய கர்த்தர் அந்த மகா நாளில் எனக்குக் கொடுப்பார். எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை ஆசிக்கிற சகலருக்கும் அவர் அதைக் கொடுப்பார்.
படிக்கீதம் சங்.36:30, 31,
ஞானத்தைப் நீதிமானின் வாய் பேசும்: அவரது நாவும் நியாயத்தை நவிலும். V. கடவுள் கட்டளை அவர் உள்ளத்தில் இருக்கின்றது: அவரது நடை தடுமாறாது.
அல்லேலூயா, அல்லேலூயா .(சர்ப் 45:9) ஆண்டவர் அ மீது அன்புகொண்டு அவரை அணி செய்தார்; மகிமையை மேலாடையாக அவருக்கு அணிவித்தார், அல்லேலூயா.
மத்தேயு எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி (மத் 5:1319)
அக்காலத்தில் சேசுநாதர் தம் சீஷர்களுக்கு திருவுளம் பற்றினத்தாவது: நீங்கள் பூமியின் உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப் போனால் எதனால் சாரமாக்கப்படும்? இனி அது வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதரால் மிதிக்கப்படுவதற்கு மேயன்றி, வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்தின் ஒளியாயிருக்கிறீர்கள். பர்வதத்தின்மேலிருக்கிற பட்டணம் மறைவாயிருக்கமாட்டாது. தீபத்தைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்காமல் வீட்டிலுள்ள யாவருக்கும் பிரகாசிக்கும்படி அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள். அவ்வண்ணமே மனிதர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரமண்டலங்களிலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் பொருட்டு, உங்கள் ஒளி அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. வேதப் பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களை என்கிலும் அழிக்க வந்தேனென்று நீங்கள் நினைக்க வேண்டாம். அழிப்பதற்கல்ல; நிறைவேற்றுவதற்கே வந்தேன். உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: வானமும் பூமியும் ஒழிந்து போகுமுன் வேதப்பிரமாணத்திலுள்ள சகலமும் நிறைவேறுமொழிய அதில் ஓர் சிறு அட்சரமாவது ஓர் புள்ளியாவது நிறைவேறாமற் போவதில்லை. ஆகையால் மிகவும் சிறிதாகிய இந்தக் கற்பனைகளில் ஒன்றை மீறி, அவ்வண்ணமே மனிதருக்குப் போதிப்பவன் மோட்ச இராச்சியத்தில் மிகவும் சிறியவனாக எண்ணப்படுவான். அவைகளை அனுசரித்துப் போதிப்பவனோ மோட்ச இராச்சியத்தில் பெரியவனாக எண்ணப்படுவான்.
ஒப்புக்கொடுத்தல்: சங்.91: 13
நீதிமான் ஈந்துபோல் செழித்தோங்குவான். லீபானின் சேதுரு மரம்போல் படர்ந்து வளர்வான். (T.P. அல்லேலூயா)
அமைதி மன்றாட்டு:
ஆண்டவரே, தேவரீருடைய துதியரும், மேற்றிராணியாருமான அர்ச். போனவெந்தூரா நாதரின் வருஷாந்திர திருநாள் எங்களை உமது இரக்கத்திற்கு ஏற்றவர்களாகும்படி தேவரீரை மன்றாடுகிறோம். இப்பாவ பரிகாரப் பலியின் பக்தி நிறைந்த ஒப்புகொடுத்தலினால் அது அவரது பரலோக மகிமையை அதிகரிக்கவும், எங்களுக்கு உம்முடைய வரப்பிரசாதத்தின் கொடைகளை அடைந்து கொடுக்கவுங்கடவது. தேவரீரோடு இஸ்பிரித்து சாந்துவின் ஐக்கியத்தில். . .
உட்கொள்ளுதல் லூக் 12:42,
தக்க காலத்தில் தன் வேலையாட் களுக்குப் படியளக்கத் தலைவன் ஏற்படுத்திய நம்பிக்கையும் விவேகமுமுள்ள கண்காணிப்பாளர் இவரே. (T.P. அல்லேலூயா)
உட்கொண்ட பின் :
ஆண்டவரே, தேவரீருடைய துதியரும், மேற்றிராணியாருமான அர்ச். போனவெந்தூரா நாதரின் வருஷாந்திர திருநாள் எங்களை உமது இரக்கத்திற்கு ஏற்றவர்களாகும்படி தேவரீரை மன்றாடுகிறோம். இப்பாவ பரிகாரப் பலியின் பக்தி நிறைந்த ஒப்புகொடுத்தலினால் அது அவரது பரலோக மகிமையை அதிகரிக்கவும், எங்களுக்கு உம்முடைய வரப்பிரசாதத்தின் கொடைகளை அடைந்து கொடுக்கவுங்கடவது. தேவரீரோடு இஸ்பிரித்து சாந்துவின் ஐக்கியத்தில். . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக