Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 12 ஜூலை, 2023

மடாதிபர் - பொது (Os Justi)

 மடாதிபர் - பொது 

(Os Jus

பிரவேச கீதம் : சங். 36 : 30.31 

ஞானத்தைப் நீதிமானின் வாய் பேசும்; அவரது நாவும் நியாயத்தை நவிலும்; கடவுள் கட்டளை அவர் உள் ளத்தில் இருக்கின்றது. (T. P. அல்லே லூயா, அல்லேலூயா). (சங். 36: 1) திங்கிழைப்போரைக் கண்டு மனம் பதறாதே; தீமை செய்வோரின் நிலை கண்டு பொறாமை கொள்ளாதே. V. பிதாவுக்கும்.... நீதிமானின்.

சபை மன்றாட்டு :

செபிப்போமாக: ஆண்டவரே, மடாதிபரான அர்ச். ......எங்களுக்காகப் பரிந்து பேசுவாராக ; எங்கள் பேறு பலன்களால் அடைய இயலாததை அவர் ஆதரவினால் நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று மன்றாடுகிறோம். உம்மோடு....

ஞானாகமத்திலிருந்து வாசகம் 

(சர்வப். 45. 1 - 6 )

 சர்வேசுரனுக்கும், மனிதருக்கும் பிரியப்பட்டவர் மோயீசனென்பவர்; அவருடைய ஞாபகங் கொண்டாடப்பட்டது. பரிசுத்தருடைய மகிமையில் அவரைச் சமானமாக்கினார்; சத்துராதிகளுடைய பயத்தில் அவரை மகிமைப்படுத்தினார்; தமது வார்த்தைகளால் கொடிதான காரியங்களை அடக்கினார். அரசர் முன்பாக அவரை மகிமைப்படுத்தினார், தமது சனங்களுக்கு முன்பாக அவருக்குக் கற்பித்தார்; அவருக்குத் தமது மகிமையைக் காண்பித்தார். விசுவாசத்திலும், சாந்த குணத்திலும் அவரைப் பரிசுத்தராக்கினார்; சகல மனிதரிடத்தினின்று அவரை தெரிந்துகொண்டார்  அவருக்குச் செவிகொடுத்தார்; அவர் வேண்டுதலைக் கேட்டார்; அவரை மேகத்திற்குள் கூட்டிப் போனார். சனங்களுக்கு முன்பாக அவருக் குக் கட்டளைகளைக் கொடுத்தார்; சீவியத்தினுடையவும், நடத்தையினுடையவுஞ் சட்டத்தையுந் தந்து, தமது உடன்படிக்கையை யாக்கோபுக்கும், தமது தீர்மானங்களை இஸ்ராயேலுக்கும் போதிக்கும்படி கொடுத்தார்.

தியானப் பாடல் : சங்.20:4-5.

ஆண்டவரே, இனிய ஆசிகளுடன் அவரை எதிர்கொண்டு அழைத்தீர். அவரது தலையில் மணிமுடி சூட்டினீர். V. அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி னார்; அவருக்கு நீர் என்றென்றும் நீடிய வாழ்வை வழங்கினீர்.

அல்லேலூயா, அல்லேலூயா. V. (சங்.91:13) நீதிமான் ஈந்துபோல் செழித்தோங்குவான்; லீபானின் சேதுரு மரம்போல் படர்ந்து வளர்வான்.  அல்லேலூயா ...

(முன்தவக் காலத் துவக்கத்திலிருந்து அல்லேலூயாவுக்குப் பதிலாக)

நெடும் பாடல்: சங். 111 : 1-3.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன். அவர் கட்டளைகளைப் பெரிதும் விரும்புவான். V. அவன் சந்ததி நாட்டில் வலிமை பெற்றிருக்கும்; நேர்மனத்தோரின் தலைமுறை ஆசி பெற்றிருக்கும். V. புகழும் செல்வமும் அவன் வீட்டில் நிறைந்திருக்கும்; அவன் நீதி நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

(பாஸ்கா காலத்தில்)

அல்லேலூயா, அல்லேலூயா. V. (சங். 91: 13) நீதிமான் ஈந்துபோல் செழித்தோங்குவான்: லீபானின் சேதுரு மரம்போலப் படர்ந்து வளர்வான்.

அல்லேலூயா. V. (ஓசே. 14:6) நீதி மான் லீலியைப்போல் தளிர்விடுவான் ; ஆண்டவர் திருமுன் என்றென்றும் செழித்திருப்பான். அல்லேலூயா.

* மத்தேயு எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் தொடர்ச்சி 

(மத். 19:27-29)

அக்காலத்தில் இராயப்பர் மாறுத்தாரமாக, சேசுநாதரை நோக்கி: இதோ நாங்கள் எல்லாவற்றையுந் துறந்து விட்டு, உம்மைப் பின்சென்று வந்தோமே. அதனால் எங்களுக்கு என்ன கிடைக்கும்? என, சேசுநாதர் அவர்களுக்குச் சொன்னதாவது: மறு ஜென்மத்தில் மனுமகன் தம்முடைய மகிமை பத்திராசனத்தில் வீற்றிருக்கும் போது, என்னைப் பின் சென்ற நீங்களும், இஸ்ராயேலருடைய பன்னிரண்டு கோத்திரங்களையும் நடுத் தீர்ப்பவர்களாகப் பன்னிரண்டு சிம்மாசனங்களில் உட்காருவீர்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அல்லாமலும் என் நாமத்தைப் பற்றி வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தந்தையையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது, விட்டுவிட்ட எவனும், நூறுமடங்கு பெறுவான், நித்திய சீவியத்தையும் சுதந்தரித்துக்கொள்ளுவான் என்றார்.

காணிக்கைப் பாடல்:  சங். 20. 3-4. 

ஆண்டவரே, அவன் இதயத்தின் ஆவலை நிறைவு செய்தீர் ; அவனுடைய விண்ணப்பத்தை நீர் புறக்கணிக்க வில்லை; அவன் தலையில் மணிமுடி சூட்டினீர். (T.I'. அல்லேலூயா)

அமைதி மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருப் பீடத்தின் மேல் நாங்கள் வைத்த காணிக்கைகள், மடாதிபரான அர்ச்.   உடைய வேண்டுதலால், எங்களுடைய மீட்புக்குப்பலனுள்ளதாகுமாறு உம்மை மன்றாடுகிறோம். உம்மோடு... 

உட்கொள்ளுதல் : லூக், 12 42 

தக்க காலத்தில் தன் வேலையாட் களுக்குப் படியளக்கத் தலைவன் ஏற்படுத்திய நம்பிக்கையும் விவேகமுமுள்ள கண்காணிப்பாளர் இவரே. (T. P. அல்லேலூயா.)

உட்கொண்ட பின் 

செபிப்போமாக: ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இந்தத் திருஅனு மானமும், மடாதிபரான அர்ச்......... உடைய வேண்டுதலும் எங்களை என்றும் காப்பனவாக ;இதனால் நாங்கள் அவரது புனித வாழ்வைப் பின்பற்றி அவரது வேண்டுதலின் அடைந்துகொள்வோமாக. உம்மோடு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக