Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
புதன், 10 அக்டோபர், 2018
அர்ச். பிரான்சீஸ்கு போர்ஜியார் , 10/10/18
வியாழன், 20 செப்டம்பர், 2018
உங்கள் காவல்தூதரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
செவ்வாய், 18 செப்டம்பர், 2018
அர்ச். பிரான்ஸிஸ் சலேசியாரின் அஞ்சாநெஞ்சம்!
நமது அர்ச்சிப்பில் தேவமாதாவின் பங்கு!
திங்கள், 17 செப்டம்பர், 2018
2-ம் சங்கீதம்
பொல்லாதவர்கள் கிறீஸ்துநாதருக்கும் அவர் திருச்சபைக்கும் விரோதமாயெழும்பி எண்ணங்குலைந்து போவதின்பேரிற் பாடியிருக்கின்றது. 1. சனங்கள் ஏன் சினங்கொண்டு துடித்தார்கள்? ஏன் பிரசைகள் வியர்த்தங்களைச் சிந்தித்தார்கள்? 2. இவ்வுலக அரசர்களும் அதிகாரிகளுந் தேவனுக்கும் அவருடைய அபிஷேகருக்கும் விரோதமாயெழும்பி ஒன்றுகூடினார்கள்.
முதல் சங்கீதம்
முதற் சங்கீதம்
ஞாயிறு, 16 செப்டம்பர், 2018
தேவமாதாவுக்கு ஓர் புகழ்மாலை -2
புதன், 23 மே, 2018
*மே மாதம் 21-ம் தேதி* *St. Felix, C.* *அர்ச். பெலிக்ஸ்* *துதியர் - (கி.பி. 1587).*
*மே மாதம் 21-ம் தேதி*
*St. Felix, C.*
*அர்ச். பெலிக்ஸ்*
*துதியர் - (கி.பி. 1587).*
கான்றாலிசியோ என்னும் ஊரில் ஏழைக் குடும்பத்திலிருந்து பெலிக்ஸ் பிறந்து, சிறுவயதில் ஆடுமாடுகளை மேய்த்து வந்தார். இவருக்கு வயது வந்தபின் விவசாயம் செய்துவந்தார். எவ்வளவு அவசரமான வேலையிருந்த போதிலும், இவர் ஜெபத் தியானத்தை மறக்க மாட்டார். திவ்விய பூசையை பக்தியுடன் கண்ட பின்பே வேலையைத் தொடங்குவார். வயலில் வேலை முடிந்தபின் மாடுகளை மேயவிட்டு, ஒரு மரத்தின்கீழ் உட்கார்ந்து ஜெபம் செய்வார். கர்த்தர் கற்பித்த ஜெபம் முதலிய ஜெபங்களின் அர்த்தத்தை நினைத்து தியானிப்பார். கர்த்தருடைய திருப்பாடுகளை நினைத்து துக்கித்து அழுவார். மற்றவர்கள் இவரை அர்ச்சியசிஷ்டவர் என்று அழைப்பர்கள். இவர் புண்ணிய வாழ்வில் வளரும் கருத்துடன், பிரான்சீஸ்கு சபையில் தப சந்நியாசியாக சேர்ந்தார். மடத்தின் ஒழுங்குகளை வெகு கவனமாக அனுசரித்து, இடைவிடாமல் ஜெபத் தியானம் செய்துவந்தார். கடினமான மற்றும் தாழ்ந்த வேலைகளைச் சந்தோஷமாகச் செய்துவந்தார். தளர்ந்த வயதிலும் சிரேஷ்டருடைய உத்தரவுடன் கடின வேலைகளைச் செய்வார். தன்னைப் பெரும் பாவியாகப் பாவித்து, மடத்தின் ஒழுங்கில் குறிக்கப்பட்ட தபசு போதாதென்று எண்ணி, வேறு தவச் செயல்களைக் கடைபிடிப்பார். இவருக்கு வாசிக்கத் தெரியாவிடினும் உத்தமமான புண்ணியவாளர்கூட இவருடைய ஆலோசனையைத் தேடுவார்கள். கடைசியாய், பெலிக்ஸ் தமது புண்ணியத்தாலும் கடுந் தபத்தாலும் மடத்தாருக்கும் ஊராருக்கும் ஞான கண்ணாடியாகப் பிரகாசித்து, தமது 72-ம் வயதில் இம்மையை விட்டு மறுமையை அடைந்தார்.
*யோசனை*
தங்கள் சரீரப் பிழைப்புக்காக அல்லும் பகலும் உழைப்பவர்கள் தங்கள் ஆன்ம வேலையை மறவாதிருப்பார்களாக.
சனி, 19 மே, 2018
*மே மாதம் 19-ம் தேதி**St. Peter Celestine, P.C.* *அர்ச். பீற்றர் செலஸ்டின்**பாப்பாண்டவர், துதியர் - (கி.பி. 1296).*
*அர்ச். பீற்றர் செலஸ்டின்*
*பாப்பாண்டவர், துதியர் - (கி.பி. 1296).*
இவருடைய பெற்றோர் ஏழைகளாயிருந்தாலும் தங்கள் மகனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். புத்திக்கூர்மையுள்ள பீற்றர் திறமையுடன் கல்வி கற்று, சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றார். இவர் சிறு வயதிலே மிகவும் பக்தியுள்ளவராய் ஜெபத் தியானம் முதலிய ஞானக் காரியங்களைக் கடைப்பிடித்து வந்ததினால், பல முறை தேவதாயாருடையவும், சம்மனசுக்களுடையவும் தரிசனத்தைப் பெற பாக்கியம் பெற்றார். இவருக்கு 20 வயது நடக்கும்போது ஒரு மலைக் கெபியில் வசித்து, ஜெப தபங்களில் காலத்தைக் கழித்தார். இவ்விடத்தில் பசாசாலும் சரீர துர் இச்சையாலும் பல சோதனைகளால் பீடிக்கப்பட்டபோது, தேவ உதவியால் அவைகளை ஜெயித்து புண்ணிய வாழ்வில் உயர்ந்தார். இவருடைய பரிசுத்தத்தனத்தைப்பற்றி கேள்விப்பட்ட அநேகர் இவருக்கு சீஷர்களானபடியால், ஒரு மடத்தைக் கட்டி பரிசுத்த பாப்பரசரிடம் உத்தரவு பெற்று, ஒரு புது சபையை ஸ்தாபித்தார். அக்காலத்திலிருந்த பாப்பரசர் இறந்தபோது, பீற்றருடைய பரிசுத்தத்தனத்தையும் புதுமைகளையும்பற்றி கேள்விப்பட்ட கர்தினால்மார்கள் அவரைப் பாப்பரசராகத் தேர்ந்தெடுத்தனர். பாப்பரசர் பட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அவர் செய்த முயற்சியெல்லாம் வீணாகப் போனதினால், கட்டாயத்தின் பேரில் அதற்குச் சம்மதித்து செலஸ்டின் என்னும் பெயரைத் தரித்துக்கொண்டார். நான்கு மாதம் பாப்பரசர் ஸ்தானத்திலிருந்தபின் கர்தினால்மாருடைய ஆலோசனையைக் கேட்டு, பாப்பாண்டவர் பட்டத்தை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு குடிசையில் வசித்து, ஜெபத்தால் ஆண்டவருக்கு ஊழியம் செய்து மோட்ச முடியைத் தரித்துக்கொண்டார்.
*மே மாதம் 18-ம் தேதி* *St. Theodotus & Co., MM.* *அர்ச். தெயதோதுசும் துணைவரும்* *வேதசாட்சிகள் - (கி.பி. 303)
*மே மாதம் 18-ம் தேதி*
*St. Theodotus & Co., MM.*
*அர்ச். தெயதோதுசும் துணைவரும்*
*வேதசாட்சிகள் - (கி.பி. 303).*
தெயதோதுஸ் சின்ன ஆசியாவில் அன்சீரா ஊரில் கடை வைத்து வாழ்ந்து வந்தார். இவர் சிறு வயதிலிருந்தே தேவ பயபக்தியுள்ளவராய் ஜெபம், தபம், உபவாசம், ஒருசந்தி முதலிய புண்ணியங்களை அனுசரித்து, விசேஷமாக ஒறுத்தல் முயற்சியை கடைப்பிடித்து வந்தார். இவருக்கு மிகுந்த செல்வமிருந்தும், அதில் பற்றுதல் வைக்காமல் தான தர்மம் செய்துவந்தார். அக்காலத்தில் எழும்பிய பயங்கர வேத கலாபனையில் கணக்கில்லாத கிறீஸ்தவர்கள் வேதசாட்சிகளாக மரித்தார்கள். அநேகர் நாட்டை விட்டு காடுகளுக்கும், மலைகளுக்கும் ஓடிப்போனதினால் பிறமதத்தினர் கிறீஸ்தவர்களுடைய வீடுகளைக் கொள்ளையடித்தார்கள். மேலும் ஊர்களில் தங்கியிருந்த கிறீஸ்தவர்களைப் பசியால் துன்புறுத்தும் எண்ணத்துடன், கடைகளில் விற்கப்படும் ஆகார பொருட்களை சிலைகளுக்குப் படைத்து விற்கும்படி இராயன் கட்டளையிட்டான். அப்போது தெயதோதுஸ் தமது கடையிலுள்ள பொருட்களை கிறீஸ்தவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்து, ஜெபத்தாலும் புத்திமதியாலும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்தார். இவர் அநேகப் புதுமைகளைச் செய்து, அஞ்ஞானிகளையும் யூதரையும் மனந்திருப்பி, வேதசாட்சிகளின் திருச்சரீரத்தைப் பக்தியுடன அடக்கம் செய்துவந்தார். அச்சமயத்தில் வேதத்திற்காக பிடிபட்ட 7 கன்னியரைச் சந்தித்து, அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து, அவர்களுக்கு ஆறுதலும் அளித்தார். அவர்கள் வேதத்திற்காக மரித்தபின் அவர்களுடைய சரீரங்களை அடக்கஞ் செய்தார். இதனால் இவர் பிடிபட்டு, சரீரம் முழுவதும் கிழியும்படி அடிக்கப்பட்டு, நெருப்பில் போட்டு சுடப்பட்டார். கற்களால் இவருடைய அலகு எலும்புகள் உடைக்கப்பட்டு, பெரும் வேதனைக்குரிய சக்கரத்தில் வாதைப்பட்டு, மரணத்திற்கு உள்ளாகி வேதசாட்சி முடி பெற்றார்.
*யோசனை*
நாமும் நமது ஆலோசனையாலும், நன்னடத்தையாலும், பொருளுதவியாலும் பிறருக்கு உதவி புரிவோமாக.