பொல்லாதவர்கள் கிறீஸ்துநாதருக்கும் அவர் திருச்சபைக்கும் விரோதமாயெழும்பி எண்ணங்குலைந்து போவதின்பேரிற் பாடியிருக்கின்றது. 1. சனங்கள் ஏன் சினங்கொண்டு துடித்தார்கள்? ஏன் பிரசைகள் வியர்த்தங்களைச் சிந்தித்தார்கள்? 2. இவ்வுலக அரசர்களும் அதிகாரிகளுந் தேவனுக்கும் அவருடைய அபிஷேகருக்கும் விரோதமாயெழும்பி ஒன்றுகூடினார்கள்.
3. நாம் அ வ ர் க ளு ன ட ய க ட் டு க் க ளை அ று த் து அ வ ர் க ள்
சுமையை ந ம் ம ம . விட்டெறிந்து போடுவோம் (என்றார்கள்.)
4. *பரமண்டலங்களிலே வாசம்பண்ணுகிறவர் அவர்களை நகைப்பார்; ஆண்டவர் அவர்களை நிந்திப்பார்.
5. அப்போது தமது கோபத்தில் அவர்களோடு பேசி, தமது கோபாக்கினியில் அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.
6. நாமோவென்றால் அவரது கற்பனையைப் போதிக்க அவருடைய பரிசுத்தப் பர்வதமாகிய சீயோனில் அவரால் இராசாவாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறோம்.
7. ஆண்டவர் நமக்குத் திருவுளம்பற்றினதாவது: நீர் நம்முடைய சுதன், இன்று நாம் உம்மைச் சனிப்பித்தோம்.
8. நீர் நம்மிடத்தில் கேளும்; உமக்குச் சுதந்தரமாகச் சனங்களையும், உமக்குச் சொந்தமாகப் பூமியின் எல்லைகளையுங் கொடுப்போம்.
9. நீர் இருப்புக் கோலினால் அவர்களை ஆளுவீர்; மண்பாண்டத்தைப் போல் அவர்களை நொறுக்கிப்போடுவீர்.
10. இராசாக்களே! இப்போதே கண்டுணருங்கள், பூமியில் நியாயந்தீர்ப்பவர்களே! படித்தறியுங்கள்.
11. பயங்கொண்டு ஆ ண் ட வ ரு க் கு ப் ப ணி செய்து நடுநடுக்கத்துடனே அவரில்) களிகூருங்கள்.
12. ஆண்டவருக்குக் கோபம் வராதபடிக்கும் நீங்கள் நீதிநெறியைவிட்டுச் சிதறுண்டு போகாதபடிக்கும் தேவ பிரமாணத்தை அனுஷ்டித்துக்கொள்ளுங்கள்.
13. கொஞ்சத்தில் அவர் கோபம் பற்றிக்கொள்ளும்போது *அவர்பேரில் நம்பிக்கை கொண்டிருக்கிறவர்கள் எவர்களோ, அவர்களே பாக்கியவான்கள்.
* தீர்வை நாளாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக