டிசம்பர் 06ம் தேதி
ஸ்துதியரும் மேற்றிராணியாருமான
அர்ச். நிக்கோலாஸ்
அர்ச். நிக்கோலாஸ்
(சாந்தா கிளாஸ் என்றும் கிறீஸ்துமஸ் தாத்தா என்றும் அழைக்கப்படுகிறார்)
துருக்கியின் தெற்குக் கடற்கரையிலுள்ள படாரா நகரத்தில், கி.பி.280ம் வருடம், நிக்கோலாஸ் பிறந்தார். செல்வந்தர்களான இவருடைய பெற்றோர்கள் இருவரும், இவருடைய சிறுவயதிலேயே, ஒரு கொள்ளை நோயினால் இறந்து போயினர். இவர் தனது சொத்துக்களையெல்லாம், ஏழைகளுக்கும், நோயுற்றோருக்கும், துன்பப்படுகிறவர்களுக்கும், உதவி செய்வதற்குப் பயன்படுத்தினார்.
இவர் தனது ஜீவியத்தை சர்வேசுரனுக்கு ஊழியம் செய்வதற்காகவே அர்ப்பணித்தார். இளவயதிலேயே மீரா நகருக்கு இவர் மேற்றிராணியாரானார். இவர், ஏழைகள் மேலும், தேவையில் இருக்கிறவர்கள் மீதும், சிநேகத்துடனும் தாராளமான இருதயத்துடனும் செய்த உதவிகளும், குழந்தைகள் மேல் இவர் கொண்டிருந்த சிநேகமும், கப்பலில் வேலை செய்கிற மாலுமிகள் மீது இவர் கொண்டிருந்த அக்கறையும், அந்த பிரதேசம் முழுவதிலுமுள்ள மக்கள் சகலராலும் அறியப்பட்டிருந்தன!
அச்சமயம், கிறீஸ்துவர்களை ஈவு இரக்கமில்லாமல் உபாதித்துக் கொடுமைப் படுத்தி வந்த உரோமை அரசன், தியோக்ளேசியன், வேத விசுவாசக்திற்காக, நிக்கோலாஸையும் உபாதித்தான்; இவரை நாடு கடத்தினான்; சிறையிலடைத்தான்; ஆனால், மகா கான்ஸ்டன்டைன் பேரரசர், கிறீஸ்துவராக மாறியவுடன், 313ம் வருடம், பிறப்பித்த ஆணையின்படி, நிக்கோலாஸ் சிறையிலிருந்து, விடுவிக்கப்பட்டார். 325ம் வருடம் , ஆரிய பதிதத்தைக் கண்டிப்பதற்காக நிசேயாவில் நடைபெற்ற திருச்சபை சங்கத்தில் நிக்கோலாஸ் கலந்துகொண்டார். சங்கம் கூடியிருந்தபோது, கிறீஸ்து நாதர், பிதாவைப்போல் சர்வேசுரன் அல்ல! என்கிற தப்பறையான பதிதத்தைக் கூறிய ஆரியுஸை, அணுகிச்சென்று, வந். நிக்கோலாஸ் மேற்றிராணியார், அவனுடைய கன்னத்தில் அறைந்தார். 343ம் வருடம் டிசம்பர் 6ம் தேதி, மீரா நகரில், அர்ச். நிக்கோலாஸ் மரித்தார். அந்நகர கதீட்ரலில், இவர் அடக்கம் செய்யப்பட்டார்; இவருடைய கல்லறையில் மன்னா என்கிற ஒரு அதிசய அருளிக்கம் உருவானது; நோயைக் குணப்படுத்தும் திரவ நிலையிருந்த இந்த அருளிக்கத்தினால், அநேக நோயாளிகள் புதுமையாகக் குணமடைந்தனர்; இதனால் அர்ச். நிக்கோலாஸின் கல்லறை ஒரு மாபெரும் திருயாத்திரை ஸ்தலமாக மாறியது; அர்ச். நிக்கோலாஸ் மீதான பக்தி உலகம் முமுவதும் பரவியது.
1087ம் வருடம் அர்ச்.நிக்கோலாஸின் அருளிக்கங்கள், இத்தாலியிலுள்ள பாரி என்ற நகரில்,அர்ச்,.நிக்கோலாஸ் பசிலிக்கா தேவாலயத்தில் ஒரு பீடத்தில் பொது வணக்கத்திற்காக பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இக்காலத்தில், இந்நகரிலுள்ள அர்ச். நிக்கோலாஸ் தேவாலயம், திருயாத்திரை ஸ்தலமாகவும், டிசம்பர் 6ம் தேதி, அர்ச். நிக்கோலாஸ் திருநாளாகவும் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அர்ச். நிக்கோலாஸின் அசாதாரணமான குணாதிசயத்தை விவரிக்கும் சில நிகழ்வுகளைப் பார்ப்போம்: உதவி தேவைப்படுகிறவர்களுக்குப் பாதுகாவலராக விளங்கும் அர்ச்.நிக்கோலாஸின் உன்னதமான குணாதிசயத்தைப் பற்றிப் பார்ப்போம்.
1. அக்காலத்தில் அர்ச்.நிக்கோலாஸ் வாழ்ந்தபோது, அந்நாட்டு மக்களிடையே திருமணமாகாத பெண்களுக்கு அதிக வரதட்சணைக் கொடுக்கும் பழக்கம் இருந்தது.அதிக பணத்தை வரதட்சணையாகக் கொடுக்கிற பெண்ணிற்கு நல்ல கணவன் கிடைப்பான்; வரதட்சணை கொடுக்க இயலாத பெண்களை அடிமைகளாக விற்கும் அவல நிலைமை இருந்தது. அர்ச். நிக்கோலாஸின் மேற்றிராசனத்திலிருந்த ஒரு ஏழைக்கு மூன்று மகள்கள் இருந்தனர்; அவளால், தன் மகள்களுக்கு வரதட்சணைக் கொடுக்க இயலாமலிருந்தாள்; அடிமைகளாக விற்கப்படும் ஆபத்தான நிலைமை வந்தது; அப்போது, மூன்று வேறு வேறு சந்தர்ப்பங்களில், அந்த வீட்டிற்கு, மாறு வேடத்தில், அர்ச். நிக்கோலாஸ் சென்று, மூன்று பெண்களுக்கும் தேவையான வரதட்சணைக்கான பணத்தையும், பொன்னையும், நிரப்பிய பைகளை போட்டு விட்டுச் சென்றார்.அர்ச்.நிக்கோலாஸின் கொடைகளான மூன்று பொற்பந்துகளை மூன்று ஆரஞ்சுகளால் இதன்காரணமாகவே காண்பிக்கப்படுவது வழக்கத்திலிருந்து வருகிறது.
2. அர்ச்.நிக்கோலாஸ், குழந்தைகளுடைய பாதுகாவலர்
ஒரு சமயம், மீரா நகர மக்கள், அர்ச்.நிக்கோலாஸ் திருநாளுக்கு முந்தின நாள் திருவிழிப்பைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, கிரீட்டிலிருந்து வந்த அரேபியக் கடற்கொள்ளைக்காரர்கள், மீரா நகரத்திற்குள் புகுந்தனர். அர்ச். நிக்கோலாஸ் கதீட்ரலிலிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்; போகிறபோது, பசில்லோஸ் என்ற சிறுவனையும் சிறைபிடித்துச் சென்றனர்; அவனை அவர்களுடைய அரசன் முன்பாகக் கூட்டிச் சென்றனர். அரசமாளிகையில் அரசன் குடிக்கிற பானங்களின் கிண்ணத்தை ஏந்துகிற வேலையில் அவனை அமர்த்தினர்; அடுத்த வருடம், அர்ச்.நிக்கோலாஸ் திருநாள் வந்தது. பசில்லோஸ், அரசனுக்கு திராட்சை இரசத்தை ஒரு தங்கக் கிண்ணத்தில், கொண்டு சென்றான். அந்த வருடம் முழுவதும், பசில்லோஸின் பெற்றோர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கியிருந்தனர்; அர்ச். நிக்கோலாஸ் திருநாள் கொண்டாட்டத்தில் சேராமல், பசில்லோஸின் தாய், அர்ச். நிக்கோலாஸிடம் உருக்கமாக, தன் மகனை மீட்டு பாதுகாப்பாகக் கொண்டு வரும்படி வேண்டிக்கொண்டிருந்தாள். அதே சமயம், தங்கக் கிண்ணத்தில் திராட்சை இரசத்தைக் கொண்டு வந்த பசில்லோஸ், தன்னை , திடீரென்று யாரோ மேலே உயரமாக வானத்திற்குக் கொண்டு சென்றதுபோல் உணர்ந்தான். அர்ச். நிக்கோலாஸ் தோன்றி, அஞ்சி நடுங்கியபடி இருந்த பசில்லோஸை ஆசீர்வதித்தார்; மீரா நகரிலுள்ள அவனுடைய வீட்டில் அவனை இறக்கி விட்டார். அப்போது, அவன் அரசனுக்கு எடுத்துச் சென்ற அதே தங்கக் கிண்ணத்துடன், தன் பெற்றோர்கள் முன்பாக போய் நின்றான். அதைக்கண்ட அவனுடைய பெற்றோர்களும் உறவினர்களும், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினர்; உடனே, அர்ச். நிக்கோலாஸுக்கும், ஆண்டவருக்கும் தேவமாதாவிற்கும் முழங்காலிலிருந்து நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்தினர். இன்று பெற்றோர்கள், சகல தீமைகளிலிருந்தும், பிள்ளைகளுடைய ஆத்தும சரீர பாதுகாப்பிற்காக, அர்ச். நிக்கோலாஸிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.
3. நீதியின்பால் அர்ச்.நிக்கோலாஸ் கொண்டிருந்த ஆர்வமும், அக்கறையும்.
யுஸ்டாஸ் என்ற ஆளுநன், கையூட்டைப் பெற்றுக்கொண்டு மூன்று மாசற்ற மனிதர்களைத் தீர்ப்பிட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான்; அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்போகிற நேரத்தில், அர்ச். நிக்கோலாஸ், அங்கு தோன்றி, மரண தண்டனையை நிறுத்தி, அவர்களை விடுவித்தார். யுஸ்டாஸ், முதலில்,அர்ச்சிஷ்டவரை அதற்காகக் கடிந்து கொண்டான்; பின்னர், தன் தவறை உணர்ந்து, அதற்காக மனஸ்தாபப்பட்டான். இச்சமயத்தில் அங்கிருந்த மூன்று அதிகாரிகள் கூட, சிறிது காலத்திற்குப் பிறகு, மரண ஆபத்திற்குத் தள்ளப்பட்டனர். அவர்கள், உடனே அர்ச். நிக்கோலாஸிடம் வேண்டிக் கொண்டு மன்றாடினர். அதே இரவில், கான்ஸ்டன்டைன் அரசன் முன்பாக அர்ச். நிக்கோலாஸ் தோன்றி, அந்த மூன்று அதிகாரிகளையும் விடுவிக்கும்படி அவனுக்குக் கட்டளையிட்டார். அடுத்த நாள், கான்ஸ்டன்டைன், அந்த மூன்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினான்; அவர்களும் அர்ச். நிக்கோலாஸிடம் வேண்டிக்கொண்டதைப் பற்றி அறிந்தவுடன், அவர்கள் மூவரையும் விடுதலை செய்தான்; அவர்களிடம், பரிசுத்த மேற்றிராணியாரான அர்ச். நிக்கோலாஸிடம் கொடுக்கும்படி ஒரு கடிதத்தைக் கொடுத்து அனுப்பினான். அந்த கடிதத்தில், இந்த உலகத்தில் சமாதானம் நிலவுவதற்காக வேண்டிக்கொள்ளும்படியாக, அர்ச்சிஷ்டவரிடம் விண்ணப்பித்திருந்தான். வெகுகாலமாக, உலகத்தில் இது மிகப்பிரபலமடைந்த புதுமையாக திகழ்ந்தது. 847ம் வருடம் மரித்த அர்ச்.மெக்தோடியஸ் காலம் வரை, இப்புதுமை சகலராலும் அறியப்பட் டிருந்தது.
தேவையிலிருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாவலரே! நீதியை நிலை நாட்டுபவரும்,ஸ்துதியரும், மேற்றிறாணியாருமான அர்ச். நிக்கோலாஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
December 6
Feast of St. Nicholas of Bari
⚡
(The saint nicknamed Santa Claus)
The true story of Santa Claus begins with St. Nicholas, born in 280 A.D. in Patara, a town on the southern coast of Turkey.
His wealthy parents, devout Catholics, died in an epidemic when Nicholas was still young. He used his entire inheritance to assist the needy, the sick, and the suffering.
Nicholas dedicated his life to God and became the Bishop of Myra at a young age. He was known for his generosity to those in need, his love for children, and his care for sailors and ships.
Under Emperor Diocletian, who persecuted Christians, Bishop Nicholas was exiled and imprisoned. He was later freed by the Edict of Milan, issued by Emperor Constantine the Great in 313 A.D.
In 325 A.D., Nicholas attended the Council of Nicaea, which condemned the Arian heresy—the false teaching that Christ was not divine. During the council, Nicholas famously slapped Arius for preaching this doctrine.
St. Nicholas died on December 6, 343 A.D., in Myra and was buried in his cathedral. A miraculous liquid called manna, believed to have healing powers, formed in his grave and fostered devotion to him.
In 1087, his relics were moved to Bari, Italy, where they remain enshrined in the Basilica of St. Nicholas. His feast day, December 6, is celebrated worldwide.
🍁🍁🍁🍁🍁🍁🍁
The Legacy of St. Nicholas
The following stories highlight his extraordinary character and why he is revered as a protector and helper of those in need:
1️⃣ St. Nicholas Provides Dowries for Three Sisters
⚡
In those days, a dowry was essential for a woman to marry. Without it, women often faced dire consequences, such as slavery.
A poor man with three daughters had no dowries for them. On three separate occasions, Nicholas secretly tossed stockings filled with gold into their home, providing the needed dowries.
This act inspired the tradition of children hanging stockings or placing shoes by the fireplace, awaiting gifts from St. Nicholas. The three gold balls, often represented as oranges, became a symbol of his generosity.
2️⃣ St. Nicholas Protects a Kidnapped Child
⚡
Long after his death, St. Nicholas saved a boy named Basilios, who had been kidnapped by pirates during the feast day celebrations in Myra.
The pirates stole treasures from the Church of St. Nicholas and took Basilios as a slave. The emir of Crete made him his personal cupbearer.
Basilios' parents, grieving for their only child, prayed for his safekeeping. On the following feast day, St. Nicholas appeared to Basilios, blessed him, and miraculously returned him to his parents—still holding the emir’s golden cup.
This story established St. Nicholas as a protector of children in the Western tradition.
(Today, parents pray to St. Nicholas for their children’s safety and protection from harm.)
3️⃣ St. Nicholas’ Zeal for Justice
⚡
When three innocent men were sentenced to death by a corrupt governor named Eustace, Nicholas intervened at the moment of execution. He stopped the executioner, exposed the governor’s crime, and secured the men’s release.
Later, when three officials were falsely accused and faced death, they prayed to St. Nicholas for help. That night, St. Nicholas appeared to Emperor Constantine in a dream, urging him to investigate the case.
After questioning the men and learning of their innocence, Constantine released them and sent a letter to St. Nicholas, asking for his prayers for peace in the world.
This miracle became widely known during the time of St. Methodius, who died in 847 A.D.
🙏
Through these stories, we see why St. Nicholas is beloved as a protector of children, a bringer of justice, and a helper of those in need.