Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 3 மே, 2015

தேவதாய் மீதான பக்தி முயற்சிகள் (Devotion to Mother Mary)

 திருச்சபை சொல்லி தருகிற இரண்டு பாடம் என்னவென்றால்
         1. கடவுள் மட்டும் தான்,தொடக்கமும் முடிவும் இல்லாதவர்.
அவர் மட்டுமே ஆராதனைக்கு உரியவர்.  அவரால் படைக்கப் பட்ட ஒன்றை ஆராதிப்பவன் ஒன்றாம் கற்பனைக்கு எதிராக பாவம் செய்கிறான். கத்தோலிக்கர்கள் தேவமாதாவை ஆராதிக்கவில்லை.   அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.
              அவர் கடவுளின் தாய்.  பரிசுத்த தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சேசுவினுடைய தாய்.  எப்படி நாம் இந்த உலகில் நம் பெற்றோரை மதிக்கிறோம். அப்பிடி இருக்க கடவுள் தம் தாயாரை எப்படி உயர்த்துவார்.  தம்மை பெற்று 30 வருடங்கள் வளர்த்த அந்த தாயை எவ்வளவு உயர்த்துவார்.  சேசுநாதர் 30 வருடம் இந்த உலகில் தேவமாதாவிற்கு கிழ்படிந்து இருந்தார்.  காணா ஊர் திருமணத்திலே அவர்களுக்கு ரசம் தீர்ந்து போக தேவதாய் சேசுநாதரை அவர்களுக்கு உதவுமாறு சொல்லுகிறார்.  அவரும் தன் தாயின் கட்டளைக்கு கீழ்படிகிறார்.(அரு. 2. 3-8) சேசுநாதர் தம்மை பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்திற்கு இரங்கி தமது காலம் வரும் முன்னே தண்ணிரை திராட்சை ரசமாக மாற்றின புதுமையை செய்த படியால், அவர் அந்த தாயின் மீது எவ்வளவு மரியாதை வைத்து இருந்தார் என்பதை நமக்கு காட்டுகிறது.
Annunciation
         கபிரியேல் தேவதூதன் மூலமாக ஆண்டவர் மாதாவை இவ்வாறாக வாழ்த்துகிறார். (லூக் . 1. 28) "பிரிய தத்ததினாலே பூரணமானவளே வாழ்க.  கர்த்தர் உம்முடனே. ஸ்திரிகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே." இவ்வாறாக தேவதூதன் மாதாவை வாழ்த்துகிறார்.  இந்த உலகில் உள்ள எல்லா பெண்களையும் விட தேவதாயை ஆண்டவர் உயர்த்தினார்.
Visitation
         மற்றொரு இடத்தில் அர்ச். லூக்காஸ்  தனது சுவிசேஷத்தில் (லூக். 1. 41-45) எலிசெபத்தமாளும் இஸ்பிரித்து சாந்துவினால் நிரப்பபட்டு உரத்த சத்தமாய் கூப்பிட்டு சொன்னதாவது, : ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய ஆண்டவருடைய தாயார் என்னிடம் எழுந்தருளிவர எனக்குக் கிடைத்ததெப்படி? இதோ, நீர் வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றில் உள்ள பிள்ளை அக்களிப்பால் துள்ளிற்று. அன்றியும் விசுவசிதவளாகிய நீரே பாக்கியவதி: ஏனெனில் ஆண்டவரால் உமக்கு வசனிக்கப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
வயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்ப்ட்டதாமே. என்
இவ்வாறாக தேவதாயை குறித்து பல உதாரணங்களை சொல்லலாம். நாம் தேவமாதாவை ஆராதிக்கவில்லை .  மாறாக அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.  ஏனெனில் அவர் நமது இரட்சகருடைய தாயார் என்பதனால்.

      2.  சேசுநாதர் ஒருவரே இரட்சகர். அவர் மட்டுமே தமது பாடுகளின் மூலம் மனுக்குலத்தை இரட்சிக்கிறார்.  தேவதாய் மனுக்குலத்தை இரட்சிக்கிறவர் அல்ல.  மாறாக மனுகுல இரட்சணியத்தில் சேசுநாதருக்கு ஒரு துணை இரட்சகராக(Co -Redeemer) இருக்கிறார்.
ஆண்டவர் மாதாவுக்கு மனுகுல இரட்சணியத்தில் பல சலுகைகளை
வழங்கியுள்ளார்.  மாதா பல நாடுகளில் காட்சி அளித்து மக்களை மோட்ச பாதைகளில் சேர்கிறார்.  தம்மிடத்தில் அன்பு கொண்டுள்ள பிள்ளைகளை மோட்சத்தில் அவர்களை வரவேற்கிறார்கள்.  ஏனென்றால் தேவதாய்  ஆண்டவருடைய தாய்.  அவர் சொல்லுவதை சேசுநாதர் ஒருபோதும் மறுக்கமாட்டார்.

பாரீஸ் பட்டணத்திலே அர்ச். ஞானபிரகசியார் என்னும் அரசரால் ஒரு அழகான கோவில் உண்டு.  அந்த கோவில் முன்பு சலவை கல்லால் ஆன  ஒரு அழகிய மாதா சுருபம் உண்டு. ஒரு நாள் ஒரு சிறுவன் தன் வீட்டுத் தோட்டத்தில் பூக்களால் ஒரு மாலை செய்து மாதாவின் கழுத்திலே அணிய வேண்டும் என்று சென்றான்.  அந்த சுருபத்தின் அருகில் சென்ற போதுதான் தன்னால் அந்த மாலையை சுருபத்தின் கழுத்தில் இடமுடியாது என கண்டான்.  ஆனாலும் பல முயற்சி செய்து பார்த்தான்.  அவனால் முடியவில்லை.  எனவே மிகவும் மனம் சோர்ந்தான். உடனே அந்த தாய் அந்த சிறுவன் மனம் சோர்ந்ததை கண்டு, அந்த சிறுவனை சமாதனம் செய்ய ஆவல் கொண்டார்.  அந்த கற்சுருபமானது அற்புதமாக தன் உடலை வளைத்து அந்த சிறுவனின் இரு கரங்களுக்கு எட்டும்படி தன் திரு சிரசை சாய்த்ததாம்.  அந்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் அது நிமிராமலே இருப்பதை நாம் காணலாம்.
   தேவமாதா தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவரையும் கைவிடுவதில்லை.  மாதா இந்த உலகில் இருக்கும் போதே பிறருக்கு உதவும் குணம் இருந்தது.  அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் ( 1. 40-56)  கப்ரியல் தூதன் எலிசபெத் அம்மாள் கர்பந்த்தரித்து இருக்கிறாள் என்று சொன்னதும் அவளுக்கு உதவி செய்ய செல்கிறாள்.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (11. 27) "ஜனக் கூட்டத்தில் இருந்து ஒரு ஸ்திரியானவள் தன் சத்தத்தை உயர்த்தி : உம்மை சுமந்த உதரமும், நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவையே என்றாள்." இப்படி அந்த பெண் புகழ காரணம் தேவமாதா சேசுநாதரை எவ்வளவு உத்தமமான முறையில் அவரை வளர்த்து வந்தாள் என்பதை நமக்கு காட்டுகிறது.

தேவமாதா சேசுநாதரை கல்வாரி மலையில் சிலுவையில் அறையும் மட்டும் அவரை பின் சென்றார்.  சேசுநாதர்  இந்த உலகில் அவள் பெற்ற நாள் முதல் அவர் சிலுவையில் மரிக்கும் வரை அவரை பின் சென்றார்.  சுவிசேஷத்தில் ஆண்டவர் ஒரு இடத்தில் சொல்லுகிறார் "தன் சிலுவைகளை (துன்பங்களை ) சுமந்து கொண்டு என்னை பின் செல்லாதவன் எனக்கு சீடனாயிருக்க முடியாது." தேவதாய் தன்னுடைய துன்பங்களை எல்லாம் சுமது கொண்டு சேசுநாதரை பின் சென்றார்.

நல்ல கள்ளன்

நல்ல கள்ளன் தன்னுடைய கடைசி நேரத்திலே தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, மனம் திரும்பினான்.  அவனுக்கு ஆண்டவர் மோட்ச பாக்கியத்தை கொடுக்கிறார்.  அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (23. 40-43) "மற்றவனோ மறுமொழியாக அவனைக் கண்டித்து, நீயும் இந்த ஆக்கினித் தீர்ப்புக்குள்ளாயிருந்தும் சர்வேசுனுக்கு பயப்படுகிறதில்லையா?   நமக்கு இது நியாயம் தான்.  நம்முடைய செய்கைகளுக்கு தக்க சம்பாவணையை பெறுகிறோம். ஒரு பொல்லாப்பும் செய்தவரல்ல என்று சொல்லி, சேசுநாதரை நோக்கி: சுவாமி தேவரீர் உம்முடைய இராச்சியத்தில் சேரும்போது அடியேனை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான்.  சேசுநாதர் அவனை நோக்கி: இன்றே நீ என்னோடு கூட பரகதியில் இருப்பாயென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்."
தன் சாவில் நுணியில் மனம் திரும்பிய நல்ல கள்ளனுக்கே மோட்சம் என்றால், தன்னை பெற்று , வளர்த்து, தன்னுடைய சிலுவை மரணம் மட்டும் தன்னை பின் சென்ற அன்னைக்கு என்ன வரங்கள் எல்லாம் கொடுப்பார் என்று யோசித்து பாருங்கள்.
இந்த உலக மக்கள் மீது உள்ள பாசத்தால் தன் அன்னையை நமக்கும் தாயாக அவர் கொடுத்தார். அர்ச் . அருளப்பர் சுவிசேஷத்தில் சேசுநாதர் தம் தாயாரை இந்த உலகத்தின் தாயாராக தம்மால் நேசிக்கப்பட்ட சிஷனிடம் ஒப்படைத்தார்.

பிரிவினைகாரர்களின் ஏமாற்றுதல் 

பிரிவினைகாரர்கள் தங்கள் எண்ணம் போல் பைபிளில் உள்ள கருத்துக்களை மாற்றுகிறார்கள்.  அவர்கள் நாம் ஏன் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். மரியாள் ஒரு சாதாரண பெண் அவளை ஏன் நாம்  ஆராதிக்க வேண்டும் என்று எல்லாம் நம் அன்னையை அவர்கள் மிகவும் கேவலமாக பேசுகிறார்கள்.  

பைபளில் உள்ள வசனங்களுக்கு தங்களுக்கு வேண்டியது போல அவர்களே ஒரு கதை கட்டுகிறார்கள். உதாரணமாக அரு. 2. 4. ஸ்திரியே எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய காலம் இன்னும் வரவில்லையே என்று அவளுக்கு(தேவதாய்) திருவுளம் பற்றினார்.

விளக்கம் 
        எனக்கும் உமக்கும் என்ன?" என்னும் இந்த வாக்கியத்தை "என்னோடு உனக்கு காரியமென்ன" என்பதாக சிலர் அர்த்தம் பண்ணி இவ்விதமாய் சேசுநாதர் தம்முடைய தாயாரை இகழ்ந்த்தாக சொல்லிக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த வாக்கியத்தை மூல பாஷையாகிய எபிரேய பாஷையில் பார்க்குமிடத்தில் கலியானக்காரர் விஷயத்தில் கலந்து கொள்வது "நம்மிருவருக்கும் காரியமில்லையே" என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டதாக நிச்சயமாகிறது.  
        அன்றியும் தாயை நோக்கி: ஸ்திரியே என்பது கிரேக்கர்களுக்கும் கீழ்திசைகளிலும் மரியாதையான வார்த்தையேயொழிய தாழ்மையான வார்த்தை அல்ல. மேலும் சேசுநாதர் தம்மை பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்துக்கு இரங்கி தமது காலம் வரும் முன்னே தண்ணீரை ரசமாக மாற்றின புதுமையை செய்தபடியால் அவர் அந்த ஆண்டவளை  சங்கித்து கனம்பண்ணினார்ரென்று சொல்ல வேணுமேயொழிய அவளுக்கு கனகுறை செய்தாரென்று எவரும் நினைப்பதற்கு இடமில்லை.
கள்ள தீர்க்கதரிசிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.  தமிழ் நாட்டிலே அனேக கள்ள போதகர்கள் தோன்றியுள்ளனர்..  அவர்களின் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் ஒன்று கூட நடப்பது கிடையாது. அவர்கள் ஒரு குத்து மதிப்பாக சொல்கிறார்கள்.
அவர்கள் பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு உள்ளனர்.
https://www.youtube.com/watch?v=eVDAPJuhLtQ

https://www.youtube.com/watch?v=lmZoqSsgI1s

False prophets 
இவர்கள் தங்களை எப்போதும் உயர்த்தி பேசுகிறார்கள்.  இவர்கள் ப
ர்சேயர்கள்.

நாம் சுவிஷேசத்தில் வாசிக்கிற பரிசேயன், ஆயக்காரன் கதை தான் இவர்களது.இவர்கள் தங்களை தான் ஆண்டவர் முன் உயர்த்தி பேசுகிறார்கள். நாங்கள் இதை செய்தோம், அதை செய்தோம், நாங்கள் நோன்பு இருக்கிறோம், நாங்கள் ஆண்டவரை கண்டோம், அவர் எங்கள் மேல் இருக்கிறார், பரிசுத்த ஆவி எங்கள் மேல் இருக்கிறது. என்றெல்லாம் கதைகளை சொல்லுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் ஆண்டவர் முன் பரிசேயர்கள்.  தன்னைத் தான் உயர்த்துகிறவர்கள் எல்லாம் தாழ்த்தப்படுவார்கள்.

நாம் நம் அன்னையிடம் மன்றாடுவோம்.  தாயே எங்களை நல்ல வழியில் நடத்தியருளும் என்று மன்றாடுவோம்.

ஜென்ம பாவமின்றி உற்பவித்த மரியாயே, உம்மிடம் தஞ்சம் அடையும் எங்களுக்காகவும் மற்ற அனைவருக்காகவும், விசேஷமாய் சாத்தானின் இரகசிய சபையினருக்காகவும், உம் பாதுகாவலில் ஒப்படைக்கப்படுபவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளும்.


Download.....
Download about Catholic Tamil Sermons about Our Lady

வெள்ளி, 1 மே, 2015

May the Month of Mary



மே மாதம் தேவதாயின் மாதம்.  மே மாதம் அன்னை மரியாள் உலகத்தின் அரசி என்று உலகுக்கு எடுத்து சொல்லும் மாதம். இந்த மாதத்தில் உலகம் எங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் தேவ மாதாவிற்கு வணக்கமாக ஒப்பு கொடுத்து, சில பக்தி முயற்சிகளை செய்கிறார்கள்.  இந்த மாதத்தில் சில கோவில்களில் தேவ அன்னையின் பிராத்தனையை பாடுவார்கள்.
இன்றைய காலங்களில் அநேகர் தேவதாயை மறந்து, மே மாதம் எதற்கு தேவதாவிற்கு ஒப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி சிந்தியாமல் தங்களை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். வேறு சிலர் தொலைக்காட்சியில் வரும் CSI, Protestant....etc.. அவர்களின் சேனல்களில் வரும் செப கூட்டம்,
ஆசிர்வாத பெருவிழா என்று இருக்கிறார்கள்.  வேறு சிலர் மே மாதம் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதனால் சுற்றுலா செல்கிறார்கள்.

மே மாதம் எதற்காக என்பதை கூட பலர் மறந்து போனார்கள்.

இது தேவ தாயின் மாதம். நாம் இதை சிறப்பாக கொண்டாட வேண்டும்.  நம் அன்னையை புகழ்ந்து பாடுவோம். அன்னை நம் வாழ்வில் செய்த சகல நன்மைகளுக்கும் நன்றி சொல்லுவோம். நாம் நம் அன்னையிடம் நமது தேவைகள் அனைத்தையும் எடுத்து கூறுவோம்.
தேவதாய் தான் சகல வரங்களின் மத்தியஸ்தி. தேவதாய் மூலம் தான் நமது ஆண்டவர் வரங்கள் அனைத்தும் சகல மனிதருக்கும் கொடுக்கின்றார். நாம் அன்னையிடம் வேண்டுவோம். கத்தோலிக்க திருச்சபையில் இருந்து விலகி போகிரவர்களுக்காகவும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனை படுகிற ஆன்மாக்களுக்காகவும், நமது உற்றார் உறவினர்களுக்காகவும், நமது தேவைகளுக்காகவும் நமது தேவ அன்னையிடம் மன்றாடுவோம்.அவர் நமக்கு உதவி செய்வார்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

காவல் சம்மனசுக்கள்


"எனக்கு காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து காத்து நடத்தி ஆண்டருளும் காவலரே 
                                                                                                      -ஆமென்."


காவல் சம்மனசுக்கள் என்பவர்கள் யார்?


                         
          காவல் சம்மனசுக்கள் என்பவர்கள் கடவுளால் நியமிக்கப்பட்ட  ஒரு சம்மனசு. இவர்கள் நாம் பிறந்தது முதல் நாம் இறக்கும் வரை நம்மோடு இருக்கிறார்கள். நாம் அவர்களை காண முடியாது.  ஆனால் நாம் அவர்களோடு பேசலாம். நாம் அவர்களை தொட முடியாது. ஆனால் அவர்களை உணரலாம். 
அவர்களை எப்படி உணர்வது என்றால் நம் மனது பாவமான ஒரு காரியத்தை செய்ய நினைக்கிறது.  உடனே நம் மனதில் மற்றொரு சிந்தனையும் வருகிறது.  இந்த காரியம் ஒரு பாவம் என்றும், இதை செய்யாதே என்றும் நமக்கு நினைவு படுத்துகிறார்.   

அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறவர். நாம் புண்ணியங்கள் செய்யும் போது சந்தோஷபடுகிரவறாகவும் , நாம் பாவம் கட்டி கொள்ளும் போது வேதனை படுபவராகவும் இருக்கிறார்.  சர்வேசுரன் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு காவல் சம்மனசு இருக்கிறார். அவர்கள் நாம் வெளியில் செல்லும் போதும், நாம் பயணம் செய்யும் போதும், நாம் விளையாடும் போதும், நாம் தூங்கும் போதும் நம்முடனே இருக்கிறார். 

காவல் சம்மனசுக்கள் நம் கண்களுக்கு தென்படுவார்களானால்  நாம் இந்த பூமியில் நிற்பதற்கு கூட இடம் இருக்காது.  என் என்றால் கடவுள் மனிதருக்கு மட்டும் அல்லாமல் அவன் வசிக்கும் வீடு, தெரு, ஊர், நகரம், மாநிலம், நாடு என அனைத்திற்கும் அவர் ஒவ்வொரு காவல் சம்மனசுக்களை கொடுத்து இருக்கிறார்.

நம் வாழ்வில் பல வேளைகளில் மிகவும் கஷ்டமான சூழலில் மாட்டிக்கொள்கிறோம். அந்த வேளையில் நமக்கு  அறிமுகம் இல்லாத சிலரிடம் இருந்து நமக்கு உதவிகள் கிடைக்கும். அவர்கள் தான் நம் காவல் சம்மனசுகள்.
இவ்வாறு பல உதவிகளை அவர்கள் நமக்கு செய்கிறார்கள். நாம் அவர்களிடம் பேச வேண்டும்.  நாம் இரவில் தூங்க செல்லும் முன் இந்த நாளில் நம்மை காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். காலையில் எழும் போதும் நாம் அவர்களிடம் "இந்த நாள் முழுவதும் சேசுவுக்கு எதிராக எந்த வித பாவங்களையும் செய்யாமல் இருக்க செய்யும்" என்று வேண்டிக் கொள்வது உத்தமம்.


"எனக்கு காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து காத்து நடத்தி ஆண்டருளும் காவலரே 
                                                                                                      -ஆமென்."


Click Here To Download ...





Sermon about Our Lady of Fatima in Tamil (Audio)





சனி, 11 ஏப்ரல், 2015

Download the Preaching about Our Lady in Tamil (தேவமாதா பற்றிய பிரசங்கம்)

தேவமாதா பற்றிய பிரசங்கம்
பிள்ளை தன் தாயை மறந்தாலும் தாய் ஒரு போதும் தன் பிள்ளையை மறப்பது கிடையாது.  தேவமாதா ஒருவரே நம் எல்லோரையும் மோட்சம் அழைத்து செல்ல ஒரே வழியாக இருக்கிறார்.  ஏனெனில் அவர் தான் வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தியாக இருக்கிறார். சேசு நாதர் தம் தாயின் மூலமாக வரப்பிரசாதங்களை நமக்கு தருகிறார். 
தேவதாயை நாம் மறப்பதினால் தான் நாம் வெகு எளிதாக பாவம் கட்டிக் கொள்கிறோம். இன்று திருச்சபையில் தேவமாதா மீதான பக்தி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.  அனைவரும் பிரிவினைகாரர்களைப் போல் பைபிள் மூலமாக நாம் இரட்சிக்கப் படுவோம் என்று சொல்லுகிறார்கள். அன்பியம், போன்ற கூட்டங்களில் அனைவரும் சேர்த்து பைபிளை எடுத்துக் கொண்டு வீடு வீடாக செல்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் கூட்டங்களில் செபமாலை சொல்லுவது இல்லை.
ஒரு முறை ஞான தூதன் பத்திரிக்கையை வாசிக்க நேர்ந்தது.  அதில் ஒரு பெண் எழுதி இருந்தது.  "கோவிலில் தான் செபமாலை சொல்லுகிறார்களே ஏன் அன்பிய கூட்டங்களிலும் சொல்ல வேண்டும்."  இத்தகைய அன்பிய கூட்டங்களினால் கோவிலில் செபமாலை சொல்லுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருக்கிறார்கள்.  
இப்போது வரக் கூடிய கத்தோலிக்க பத்திரிக்கைகள் எல்லாமே உலகம் சார்ந்த பத்திரிக்கைகளாகவே இருக்கின்றன.  நம்முடைய ஞான வாழ்வுக்கு தேவையான எதையும் அவைகள் சொல்லுவதில்லை.

இப்போதைய காலகட்டத்தில் நமது தேவ அன்னையின் உதவி எவ்வளவு அவசியம் என்பதை மிக அழகாகவும் தெளிவாகவும் நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.  இதை நீங்கள் download செய்து பிறருடன் பகிருங்கள்.  அன்னை எவ்வளவு முக்கியம் என்பதை உலகுக்கு நாம் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.


To Download right click on the below link and Save As

my email id is Click here.......


புதன், 1 ஏப்ரல், 2015

தினமும் மூன்று அருள் நிறைந்த மரியாயே (dAILY THREE HAIL MARY)

நம்முடைய இரட்சணியதிருக்கும், நாம் மோட்சம் செல்ல மிக முக்கியமான பக்தி முயற்சி தான் நாம் அன்னை மரியிடம் வைக்கும் பக்தி.  திருச்சபையின் அணைத்து வேத போதகர்களும் ஒரு மித்த கருத்து "அன்னையிடம் செல்வோருக்கு எதுவும் மறுக்கப் படுவதில்லை."
நாம் மிகப் பெரிய பக்தி முயற்சிகள் செய்ய வேண்டும் என்று அன்னை ஒரு போதும் நம்மை கேட்பது இல்லை.  ஒரு தாய் தன் பிள்ளையை ஒரு போதும் மிக கடினமான வேலைகளை செய்ய வேண்டும் என்று சொல்லுவது இல்லை.  அதை போல் நம் பரலோகத் தாய் ஒரு போதும் நம்மை கடினமான பக்தி முயற்சிகளை செய் என்று  கேட்பதில்லை. 
தேவதாய் குறித்து நிறைய பக்தி முயற்சிகள் இருக்கின்றன. நம் அன்னை நம்மை கேட்பது வெறும் மூன்று அருள் நிறைந்த மந்திரம் மட்டுமே.  அதுவும் நாம் வேலை செய்யும் போதோ அல்லது நாம் விளையாடும் போதோ அந்த பக்தியை அனுசரிக்க சொல்லவில்லை.  

தினமும் நாம் காலையில் எழுந்தவுடனும் இரவு நாம் தூங்க செல்லும் முன்னும் மூன்று அருள் நிறைந்த மரியாயே என்ற செபத்தை சொல்ல சொல்லுகிறார்.  இது எவ்வளவு எளிதான பக்தி முயற்சி.  

இந்த பக்தி முயற்சியை உலகுக்கு முதலில் சொல்லியது அர்ச் . பதுவை  அந்தோணியார்.  இந்த பக்தி முயற்சி நோக்கமே இந்த உலகில் உள்ளவர்களால் மாதாவிற்கு எதிராக செய்யப்படும்
நிந்தைகளுக்கு பரிகாரமாக இந்த பக்தியை பரப்பினார்.  பலரும் இந்த பக்தி முயற்சிக்கு ஆதரவு தந்து அதனை பரப்பினர்.

பின்னர் St. Leonard of Port-Maurice, இந்த பக்தி முயற்சியை ஒவ்வாரு  நாளும் நாம் படுக்கும் முன்னும், காலையில் எழுந்தவுடனும் சொல்லி நம்மை சாவான பாவத்தில் விழாதபடி நம்மை காக்க வேண்டும் என்று அன்னையிடம் வேண்டி இந்த பக்தி முயற்சியை அனுசரிக்க சொன்னார்.  அவர் இந்த பக்தி முயற்சியை தினமும் பக்தியாக அனுசரிகிரவர்களுக்கு தேவதாய்  நித்திய இளைப்பற்றியை தருவதாக அவர் வாக்குறுதி அளித்து இருக்கிறார்.




His Holiness, Benedict XV raised the Confraternity of the Three Hail Marys to an Archconfraternity and accorded it indulgences.
Our Lady requested the daily recitation of three Hail Marys, revealing the following to St. Melchtilde:

"The first Hail Mary will be in honor of God the Father, Whose omnipotence raised my soul so high above every other creature that, after God, I have the greatest power in Heaven and on earth. In the hour of your death I will use that power of God the Father to keep any hostile power from you.

"The second Hail Mary will be in honor of God the Son, Who communicated His inscrutable wisdom to me . . . In the hour of your death I will fill your soul with the light of that wisdom so that all the darkness of ignorance and error will be dispelled.

"The third Hail Mary will be in honor of God the Holy Ghost, Who filled my soul with the sweetness of His love and tenderness and mercy . . . In your last hour I will then change the bitterness of death into Divine sweetness and delight."



PROMISE:
During an apparition to St. Gertrude, the Blessed Mother promised, "To any soul who faithfully prays the Three Hail Marys I will appear at the hour of death in a splendor of beauty so extraordinary that it will fill the soul with Heavenly consolation." 


ஞாயிறு, 29 மார்ச், 2015

அன்னையுடைய ஏழு வியாகுலங்கள் ( Devotion to Our Lady of Sorrows)


தேவ தாய் அர்ச். பிரிஜிட் அவர்களுக்கு காட்சி அளித்து, அன்னையுடைய ஏழு வியகுலங்களை தியானித்து, ஏழு அருள் நிறைந்த மரியாயே என்ற செபத்தை தினமும் செபித்தால் அன்னை அவர்களுக்கு பல வரப்பிரசாதங்களை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்.
அந்த வாக்குறுதிகள் 
  •   அவர்களுடைய குடும்பங்களுக்கு  அமைதியை அருளுவேன்.
  • அவர்களுக்கு ஞான வெளிச்சத்தை கொடுப்பேன்.
  • அவர்களுடைய துன்பங்களில் அவர்களுக்கு ஆறுதலாகவும், அவர்களுடைய பணிகளில் அவர்களுக்கு துணையாகவும் இருப்பேன்.
  • அவர்கள் என்னை நோக்கி கேட்கும் எல்லா நன்மைகளையும் அவர்களுக்கு நான் அளிப்பேன்.
  • அவர்கள் மோட்சம் செல்ல வேண்டிய அனைத்து உதவிகளையும் சேசுவிடம் இருந்து பெற்று தருவேன்.
  • அவர்களுடைய ஞான யுத்தத்திலே அவர்களுக்கு அரணாகவும்,  அவர்களுடைய வாழ்நாள் முழுதும் அவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பேன்.
  • அவர்களுடைய மரண நேரத்தில் நானே அவர்களுக்கு தோன்றி அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்.
  • இந்த பக்தியை அதிகமாக பரப்புகிறவர்களுக்காக நான் என் மகனிடம் அவர்களுக்காக மன்றாடி, அவர்களுடைய கண்ணீரையும், துன்பங்களையும் நீக்கும் படியாக மன்றடுவேன். அவர்களுடைய மரண சமயத்தில் அவர்களுடைய அற்ப பாவங்கள் எல்லாம் மன்னிக்கப் பெற்று உததரிக்கிற ஸ்தலத்தில் இருந்து அவர்களை பாதுகாப்பேன்.
அன்னையுடைய ஏழு வியாகுலங்கள் 
  1.   சிமியோன் தீர்க்கதரிசியுடைய தீர்க்கதரிசனம் (லூக். 2. 34-35)
  2.   எகிப்து தேசத்துக்கு தப்பியோடியது. (மத் . 2. 13-14)
  3.  குழந்தை சேசு கோவிலில் காணாமல் போனது.(லூக். 3. 43-45)
  4. தேவமாதா தனது குமாரனை சிலுவை சுமந்து போகும் போது சந்தித்தது.
  5. சேசுநாதர்  சிலுவையில் அறையப்பட்டது.
  6. சேசுநாதர் சிலுவையில் இருந்து இறக்கி மாதா மடியில் வளர்தப்பட்டது.
  7. சேசுநாதர் அடக்கம் பண்ணப்பட்டது.

To download Catholic Songs pls Click here...

To download Catholic Books pls click here..

To download life history of St. Antony in Mp3 pls Click here...


புதன், 25 மார்ச், 2015

மங்கள வார்த்தை திருநாள் (மார்ச் 25)

"இதோ ஆண்டவருடைய அடிமையானவள், உம்முடைய வார்த்தையின் படியே ஆகக்கடவது "


அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்திலே கபிரியேல் தூதர் மாமரிக்கு மங்கள வார்த்தை சொன்னதை விரிவாக நமக்கு சொல்லுகிறார். அர்ச். லூக்காஸ் அதிகாரம் 1 வசனம் 26 – 38.  கபிரியேல் என்னும் தேவதூதன் கலிலேயா நாட்டிலுள்ள நசரேத்தூருக்கு சர்வேசுரனால் அனுப்பப்பட்டு தாவீதின் கோத்திரத்தாராகிய சூசையப்பர்; எனப்பட்ட ஓர் மனிதனுக்க விவாகப் பந்தனமான ஓர் கன்னிகையிடத்தில் வந்தார்.  அந்த கன்னிகையின் பெயர் மரியம்மாள்.  தேவதூதன் அவள் இருந்த இடத்தில் பிரவேசித்து பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே. ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே என்றார்.  இதை அவள் கேட்ட மாத்திரத்தில் இந்த வார்த்தையினால் கலங்கி இந்த மங்களம் எத்தன்மையானதோ என்று யோசனையாயிருக்கையில், தேவதூதன் அவளை நோக்கி: மரியே! நீர் அஞ்ச வேண்டாம், எனெனில் சர்வேசுரனுடைய கிருயை பெற்றிருக்கிறீர்.  இதோ, உமது உதரத்தில் கெற்பந் தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர்.  அவருக்கு யேசு என்னும் நாமம் சூட்டுவீர்.  அவர் பெரியவராயிருப்பார்.  உன்னதமானவருடைய சுதன் எனப்படுவார்.  ஆண்டவராகிய சர்வேசுரன் அவர் தந்தையாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்கு கொடுப்பார்.  அதலால் அவர் யாக்கோபின் கோத்திரத்தில் என்றென்றைக்கும் அரசாளுவார்.  அவருடைய அரசாட்சிக்கு முடிவு இராது.  என்றார்.
அப்போது மரியம்மாள் தேவதூதனை நோக்கி “இது எப்படியாகும்?  நான் புருஷனை அறியனே” என்று சொல்ல, தேவதூதன் அவளுக்கு மாறுத்தாரமாக: இஸ்பிரித்து சாந்து உமது மேல் எழுந்தருளுவார்.  உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும்: ஆகையால் உம்மிடத்தில் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் எனப்படுவார்.  இதோ உமது பந்துவாகிய எலிசெபத்தும் தம் முதிர் வயதிலே ஓர் புத்திரனைக் கெர்ப்பந்தரிக்கிறாள்.  மலடி எனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.  ஏனெனில் சர்வேசுரனால் கூடாத வாக்கு ஒன்றுமில்லை என்றார். அதற்கு மரியம்மாள் “இதோ ஆண்டவருடைய அடிமையாளவள், உம்முடைய வார்த்தையின் படியே ஆகக்கடவது”..

வியாழன், 5 மார்ச், 2015

Download Lives of Saints in Tamil

You can download life history of Daily saints in Tamil. Its in a very simple text.  These books are not a full life history of Saints in Tamil.  Its a brief History of Saints in Tamil.

There are Twelve books are here.  Twelve month Twelve books.

You can download and please share with others.

Thank You..



January  -  Click Here


February  -  Click Here


March  -  Click Here

April  -  Click Here

May -  Click Here

June  -  Click Here

July  -  Click Here

August -  Click Here

September -  Click Here

October  -  Click Here

November  -  Click Here

December -  Click Here


To Download more Catholic Tamil Books Pls Click Here

+
AVE MARIA

சனி, 21 பிப்ரவரி, 2015

மோக பாவம்

மோக பாவம்



அவரவர் சிறு வயது முதல் இதுவரை செய்த பாவ்களை எல்லாம் கண்முன் வைத்துப் பார்த்த போது, அத்தனை பாவ்களுக்குள்ளே ஒரு வகைப்பாவம் மகா விஷமுள்ள நாகப் பாம்பைப்போல் தன் பொடிய நஞ்சை எங்கும் கக்கி, உடலையும் உயிரையும் கெடுத்து, மனதில் கலக்கமும், சலிப்பும் உண்டாகி ஓயாத கவலையும் மனக்குத்தும் கொடுத்துவருகிறதாக அநேகம் பேர்கள் துக்கத்தோடு அறிந்திருப்பார்கள்.  அந்த விஷமுள்ள பாவம் இன்னதென்றறிந்து அதைத் தன் மனதிலிருந்து நீக்கும்படி  துவக்கத்திலே முயற்சி செய்வது வெகு பிரயோசனமாயிருக்கும்.
மகா ஞானியான சாலமோன் என்றவரைப் போல புத்தியிலும் விவேகத்திலும், அறிவின் விசாலத்திலும் கீர்த்திப் பிரபலம் பெற்றவர் மனிதருக்குள் இருந்ததில்லை.  சர்வேசுரனே இவருக்குத் தரிசனமாகி தந்தை தன் மகனோடு பேசுவது போல் இவருடன் முகங்கொடுத்துப் பேசினார். ஆகிலும் இவர் தன் வயோதிப காலத்திலன் தன் சர்வேசுரனை மறந்து தன்னையும் மறந்து, பசாசின் சிலைக்கு தூபங்காட்டி அதை ஆராதித்துப் பாவம் செய்து வந்ததாக வேத புத்தகம் சொல்லுகிறது. (1 அரசர். 11: 1-10)
வான மண்டலத்தின் உச்சியில் பிரகாசம் நிறைந்த நட்சத்திரம் போல் மின்னித் துலங்கினவன்.  கடைசியில் ஒளி மங்கி நிலைபெயர்ந்து, கீழே விழுந்து விழுந்தவன் தப்பிவர வகையின்றி மாட்டிக் கொண்டான்.  கடும் விஷம் அவனைத் தீண்டினது.  அவன் புத்தியும் அறிவும் மங்கிப் போனது.  hனி சாலமோன் அஞ்ஞானியானான்.   சர்வேசுரன் மனிதனை மகமையிலுயர்த்தி வைத்திருக்கையில் அவன் அதை மறந்து போனதால் புத்தியற்ற மிருக்களுக்குச் சமமானான் என்ற வேதவாக்கியத்துக்குச் சாலமோன் உதாரணமானான்.  முன் ஞான அறிவபால் எவ்வளவு உயர்ந்திருந்தானோ அவ்வளவு பின் மோக பாவத்தால் தாழ்ந்து போனான்.
சர்வேசுரன் பாவத்தை எவ்வளவு பகைக்கிறாரென்றும், பாவத்தோடு சாகிறவர்களை எவ்வளவு கொடுமையாய் நரகத்தில் தண்டிக்கிறாரென்றும் யோசி. யாரிடத்தில் இந்த பாவம் குடிபுகுந்ததோ அவன் ஆத்துமத்தில் நரகத்தின் சாயலும் முத்திரையும் இருக்கிறதென்று சொல்லலாம்.  அவனுடைய அறிவும் புத்தியும், மங்கிப் போகும்.  நரகத்தின் இருள் அவன் மனதில் மூடத் துவக்கும்.
இந்தப் பாவத்ததால் மனிதர்கள் திரளாய் நரகத்தில் வழுகிறார்கள்.  கிறீஸ்துவர்களுக்குள் பாவத்தால் கெட்டுப் போகிறவர்கள் அநேகமாய் இந்தப் பாவத்தால் தான் கெட்டவர்கள்.  ஆனதால் இந்த பாவத்தை, மற்ற எந்தப் பாவத்தைப் பார்க்கிலும் பகைத்து வெறுக்கும்படி, இதற்குள்ள விஷமும் பொல்லாப்பும் இவ்வளவென்று சொல்லுவது அவசியம்.
வேத அறிஞர்கள் சொல்வதுபோல் மனிதன் பாவங்களைச் செய்யும் போது. அந்தந்தப் பாவத்தின் தோஷத்தை காட்ட அதற்குரிய ஓர் முத்திரை அவன் ஆத்துமத்தில் பதிகின்றது.  அசுத்தப் பாவமாகிற மோக பாவத்தைச் செய்கிறவன் இருதயத்தில் பதியும் முத்திரை விசேஷமாய் நரகத்தின் முத்திரை.  ஆனதால் நரகத்தைக் காட்டும் சாயல் உலகத்தில் எங்கே உண்டு என்று அறிய வேண்டுமானால், மோக பாவியின் இருதயத்தில் பார்க்கலாம்.  நரகத்தின் முக்கிய அறிகுறி என்ன?  வேதவாக்கியமே இன்னதென்று குறித்துக் காட்டுகிறது.  நரகம் இருள் அடர்ந்து நிறைந்த இடம்.  ஆத்துமத்திலும் சரீரத்திலும் மனிதன் நினைவுக்கு மேற்பட்ட துன்ப வேதனைகளால் நரகத்திலுள்ள நிர்ப்பாக்கியர் வருத்தப்படுகிறார்கள்.
மோக பாவியின் மனதில் நரக இருள் அடர்ந்தது போல் அவன் புத்தி மங்கிப் போகின்றது.  அறிவாகிற கண் பெட்டுப் போகின்றது.

அறிவில்லாததால் மிருகத்தைப்போல் தன் சரீர சுக இன்பத்தை மாத்திரம் தேடுகிறான்.  இந்த பாவியை குறித்து தேவ வாக்கியம்:
மிருகமாகிய மனிதன் சர்வேசுரனை சார்ந்த விஷயங்களை அறியான் என்று சொல்லுகிறது.  மற்;ற பாவங்களை செய்யும் போது புத்தியுள்ள மனிதனைப் போல செய்கிறவன், அசுத்தப் பாவத்தைச் செய்கையில், மனிதனைப் போல் அல்ல ஒரு மிருகத்தைப் போல செய்கிறான். புத்தியில்லாத மிருகம் எப்படி தன்னிடம் எழும் கெட்ட ஆசையைத் தேடி நிறைவேற்ற திரிகின்றதோ, அப்படியே மோக பாவியும் சுய அறிவை இழந்து தன் ஆசையைத் தேடி அலைகிறான்.
அறிவு மங்குவதால் அவன் தன்னை மறந்துபோகிறான்.  தான் செய்யும் பாவத்தின் கனத்தையும் அறிகிறதில்லை.  தன்னைச் சிருஷ்டித்த சர்வேரனையும் மறந்து போகிறான்.  தான் இருக்கும் நிலைமையும் தன்னைச் சுற்றி இருக்கும் உறவினர்கள் சுற்றம் சிநேகிதர் எவரையும் எண்ண மாட்டான்.  தனக்கிருக்கும் கொளரவம், புகழ், பெயர், ஒன்றும் மதியான்.  தன் தேக சௌக்கியத்தை முதலாய் மதியான்.  இழிவான நடைத்தையால், தனக்கும் தன்னால் மற்றவர்களுக்கும் வரும் பழிச்சொல், நிந்தை, வெட்கம், அவமானம் யாதொன்றும் கவனியான்.  தான் பார்த்துவரும் வேலைக்கு தன் வாழ்வுக்கும் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை யோசியான்.
இப்படி மதிக்கெட்டுப் பேரிழந்து நாலு தெருவும் திரிபவர்கள் எல்லாரும் தாங்கள் செய்வது இன்னதென்று சற்றாவது கவனித்து யோசித்தால்? இவ்வித நடத்தையிலுள்ள அயோக்கியமும் அவலட்சணமும் அறிவார்கள்.  ஆனால் இவர்கள் அப்படி யோசியாதபடி அவர்கள் புத்தியாகிற கண் பாவத்தின் நஞ்சால் மறைப்பட்டு ஒளி மங்கிப்போய் விட்டது.  அதுவே நரக இருளின் சாயல்.

கிறிஸ்தவர்களுக்குள்ளே எந்த ஊரிலும் தெய்வமேது, குருவேது, நரகமேது, மோடசமேது, யார் கண்டது, யார் பார்த்தது என்று இவ்விதமாய் பிதற்றி பாவசங்கீர்த்தனமின்றி திரிபவர்கள் உண்டல்லவா?  இவர்கள் சாதாரணமாய் எவ்வழி நடப்பவர்களென்று தெரியுமா?  இவர்கள் மோக பாவத்தின் கஷ்டத்தில் விழுந்தவர்கள்.  புத்தியாகிய கண்ணை இழந்து விசுவாசத்தின் தேவப் பிரகாசமின்றிப் போனதால் இப்படி அபத்தத்தைப் பிதற்றுகிறார்கள்.
 

Open Letter to Confused Catholics






வியாழன், 19 பிப்ரவரி, 2015

நரகம் (Hell)

நரகம் (Hell)

சர்வ வல்லப சர்வேசுரன் தமது கட்டளைகளை மீறி பாவம் செய்த துரோகிகளை தண்டிக்கும் படியாக ஏற்படுத்திய தண்டனை இடம் தான் நரகம்.  அக்கினி கடல்.  பேய்கள் வாழும் சுடுகாடு.

நரகத்தில் தண்டனைகளிளெல்லாம் மகா பயங்கர தண்டனையான நித்திய சாபமும், பாவத்தின் தன்மைக்கும் அனைத்துக்கும் தக்க ஐம்புலன்களுக்குரிய தண்டனைகளும் உண்டென்பது விசுவாச சத்தியம். நரகத்தில் பாவிகள் படும் ஐம்புலன்களின் தண்டனைகள் இவ்வுலகில் நாம் நினைக்கவும் கருதவும் கூடிய வகை வேதனைகளிளெல்லாம் அதி உக்கிர அதி பயங்கரம் என்பது நிச்சயம்.
மனிதனுக்கு இயல்பாயுள்ள சுய அறிவே நரகம் உண்டென்று சொல்லுகிறது.  சர்வேசுரன் தாம் படிபித்த வேதத்தில் தெளிவாய் பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.  சத்திய திருச்சபையும் தன் தவறா வாக்கோடு நரகம் உண்டென்று படிப்பிக்கின்றது. நமது மனமே நமக்கு சாட்சியாயிருந்து பாவம் செய்தால் சர்வேசுரன் நரகத்தில் நம்மைத் தண்டிப்பாரென்று சொல்லுகின்றது.  ஆகையால் நரகம் உண்டென்பது சத்தியம்.

பாவி நரகத்தில் விழுந்தால் அவனுக்கு துணையாய் இருப்பவர் யார்?  பசாசுகள் முதல் துணை.  சர்வேசுரனை பகைக்கும் இந்த நீச அரூபிகள் சர்வேசுரன் பேரில் தங்களுடைய கோபமும் பகையும் செல்லாதென்று கண்டு, சர்வேசுரன் சாயலாயிருக்கும் மனிதன் பேரில் தங்கள் பகையை காட்டும்.  அவலட்சண கோலத்தோடு தோன்றி மனிதரை உபாதிக்கும். உலகம் உண்டான நாள் முதல் உலகத்தின் கடைசி நாள் மட்டும் இருக்கும் சகல வகை பாவிகளும்? துன்மார்க்கரும், அநீதரும், அக்கிரமிகளும், கொலைபாதகரும், திருடரும், குடியரும், காமவெரியரும் ஆகிய இவர்கள் எல்லோரும் அங்கே கூடியிருப்பார்கள். இப்படிப்பட்ட தீயோர் மத்தியில் பாவியும் ஒருவனாயிருப்பான்.


இவர்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் சண்டை செய்து கொடிய மிருகங்களைப் போல் ஒருவரொருவரை கடித்து, உதைத்து, கர்சித்து கதறி அலறிப் புலம்புவார்கள்.  நரக தண்டனை இவ்வளவோடு முடிந்ததென்று நிணைக்க வேண்டாம்.  நீங்கள் பாவம் செய்யும் போது ஆத்துமம் சரிரமும் கூடிப் பாவம் செய்வதால், இவ்விரண்டும் நரகத்தில் உபாதிக்கப்படும்.  ஆனதால் சரீரத்தின் ஒவ்வொரு புலனும் தனக்கு உரிய வகையில் தான் பாவத்தை கட்டிக்கொண்ட சந்தோஷத்தின் அளவுக்கு தக்கதாய் துன்பப்படும்.  ஆத்துமத்தில் ஒவ்வொரு தத்துவமும், புத்தி, மனம், ஞபாகம், இவைகள் தங்கள் தொழிலுக்கு இசைந்த வண்ணம் வேதனைப்படும்.
உலகத்தில் இருக்கும் காலத்தில் செல்வனாயிருந்து, நன்றாக உண்டு வளர்ந்து பாவத்தில் தன் காலத்தைப் போக்கினவன், நரகத்திலே பசியாலும் தாகத்தாலும் வருந்துவான்.  இப்போது மகிமையைத் தேடி அகங்காரம் பொங்கி, தான்தான் பெரியவன் என்று பெருமை பேசி, பிறரை இகழ்ந்து பேசி, நிந்தித்து நடப்பவன் நரகத்தில் தாழ்த்தப்பட்டு பசாசின் காலில் மிதியுண்டு, அவமானம் அடைவான்.  இங்கே தன் சர்pரத்தை பேணி, மினுக்கி, வளர்த்து வருகிறவர்கள், நரகத்தில் வாயால் சொல்ல முடியாத அவஸ்தைப் பட்டு பன்றிகளைப் போல் துர்நாற்ற அசுத்தத்தில் உருண்டு புரண்டு அகோர வேதனை அனுபவிப்பார்கள்.

பாவிகள், பொதுத்தீர்வை நாளுக்குப்பின் ஆத்தும சரீரத்தோடு நரக அக்கினியின் சமுத்திரத்தில் வெந்து எரிவார்கள்.  அந்த அக்கினியோ, சர்வேசுரனுடைய சத்ருக்களை மாத்திரம் தண்டிக்கும்படி உருவாக்கப் பட்டதால், அதற்கும் இந்த பூமியில் இருக்கும் நெருப்பிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.  தேவ கோபத்தினால் மூட்டப்பட்ட அந்த அக்கினி நரக பாதாளத்தின் அடிமுதல் உச்சிவரை தணலாய் எழும்பி சரீரத்தை எப்பக்கத்திலும் துன்பப்படுத்தும்.  நெருப்பில் போடப்பட்ட இரும்பு ஏகமும் நெருப்பாய் மாறுவது போல பாவியும் நரக நெருப்பிலே சர்வாங்கமும், உள்ளும் வெளியும் அக்கினி மயமாய் மாறி,  வேதனை அனுபவித்து உணர்ச்சி மாறாமல் வெந்து துடிப்பான்.
பாவியும் நரகத்தில் எந்தப் பக்கம் போனாலும், என்ன செய்தாலும் அக்கினி மத்தியில் தான் அமிழ்ந்திருப்பான்.
நரக தீயின் உக்கிரம் இவ்வளவு கொடிதானாலும், இதிலும் கொடிதான தண்டனை நரகத்தில் ஒன்று உண்டு.  அது ஏதென்றால் சர்வேசுரனை இழந்துபோய் அவரை விட்டு பிரிந்திருப்பது.  இது தான் துன்பங்களில் பெரிய துன்பம்.  சர்வ நன்மை நிறைந்த சமபூரண பாக்கியமாகிய சர்வேசுரனை இழந்த ஆத்துமம் அக்கினிக்குள் எத்தனை நாள் தான் இருக்கும்? அந்த பாதாள லோகத்தில் நாள் கணக்கு இல்லை.  நித்திய காலம் என்றென்றும் ஊழியுள்ள காலமும், சதாகாலமும் சர்வேசுரனை காணாமல் நரக நெருப்பில் வேக வேண்டும்.
பூமியில் இருக்கும் போது நீ உன் மனப்பூர்வமாய் சர்வேசுரனாகிர உன் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய உனக்கு பிரியமில்லையோ,  மறு உலகில் உனக்கு மனமிருந்தாலும் இல்லாவிட்டாலும், சர்வேசுரனுடைய கோணாத நீதிக்கு தொண்டு செய்வாய்.  சேசுநாதருடைய பரிசுத்த நாமத்தை கேட்கும் போது பரலோக பூலோக பாதாள உலகத்தில் உள்ள சகலரும் முழங்கால் ஊன்றி நமஸ்காரம் செய்வார்களாக (பிலி. 2 :10) என்பது தேவ வாக்கியம்.


Download Catholic Tamil Books for Free------------------> Click Here...
Download Catholic Tamil Songs for Free------------------> Click Here....
Download Life History of St. Antony of Padua-----------> Click Here.... Part 1

புதன், 18 பிப்ரவரி, 2015

திருச்சபையின் ஆறாம் கட்டளை (Sixth Commandment of Church)


நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறது


Priest giving Communion to faithfuls
பழைய ஏற்பாட்டில் தேவாலய குருக்களின் ஆதரவுக்காகவும், வேதத்தை பேணுவதற்காகவும், கடவுள் ஏற்படுத்திய ஒரு விசேஷ சட்டம் இருந்தது.  புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவர் தம் ஊழியர்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அவர்களால் ஆதரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்.  கோவில் பணிவிடைக்காரர் கோவிலுக்குரியவைகளில் பங்கடைகிறார்கள்.  பீடத்தின் பரிசாரகர்கள் பீடத்துக்கு உரியவைகளில் பங்கடைகிறார்கள் என்றும் அறியீர்களோ?  அவ்வாறே சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறவர்களும் சுவிசேஷத்தினாலே பிழைக்கும்படி ஆண்டவர் ஏற்பாடு செய்திருக்கிறார். என்று சின்னப்பர் கூறுகிறார்.  எனவே தேவ கட்டளைப்படி தங்களால் இயன்ற அளவில் விசுவாசிகள் தங்கள் மேய்ப்பர்களுக்குத் தேவையானவைகளைத் தர கடமைப்பட்டிருக்கிறோம்.
Fr. Giving Baptism to a Old Lady

இக்கடமையை நிறைவேற்றுவதற்கான முறை அந்தந்த காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது.  ஆதி திருச்சபையில் இருந்தது போலவே இன்றைய நாட்களிலும் மக்களின் காணிக்ககை தான் ஏறத்தாழ திருச்சபையின் ஒரே நிதி ஆதாரமாக இருக்கின்றது.  மேலும் குருக்கள் கடவுளுக்கு உரியவையும், ஆத்துமாக்களின் பராமரிப்புக்கு உரியவையான காரியங்களுக்காக அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் தங்கள் பிழைப்புக்காக உலகத் தன்மையான வேலைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
Fr. blessing a House
 எனவே, திருச்சபை தனது ஆறாம் கட்டளையில், தனது தெய்வீக ஸ்தாபகரால் விசுவாசிகள் மேல் சுமத்தப்பட்ட கடமையை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறது.

நீதியின்படி குருநிலையினர் தங்கள் மக்களால் ஆதரிக்கப்பட உரிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  ஏனென்றால் சட்டபூர்வமான அதிகாரத்தால் ஒரு பங்கின் ஆன்ம நலன்களுக்குப் பொறுப்பாளராகளாக பங்கின் ஆன்ம நலன்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிற குருக்கள் விசுவாசிகளின் எல்லாத் தேவைகளிலும் அவர்களுக்கு உதவுகிறார்கள்.

Fr. preparing young boys and girls for confession
திருச்சபையின் இக்கட்டளை மிகக் கண்டிப்பான ஒன்று.  ஆனாலும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்த கட்டளை அனுசரிக்கத் தவறுவதால் சாவான பாவம் கட்டிக்கொள்ளப்படுகிறதா என்பது கடினம்.  அத்தகைய சூழலில் ஒரு பங்கு குருவானவர் எந்த அளவு தேவையில் இருக்கிறார், அவருக்கு உதவி செய்ய தவறுகிற விசுவாசியின் நிதி நிலைமையை என்ன, ஆகியவற்றை பொறுத்து பெருமளவு சார்ந்திருக்கிறது.  ஆயினும் பல வருடங்களாக தங்கள் வேதக் கடமைகளை அசட்டை செய்து வரும் அக்கறையற்ற கத்தோலிக்கர்கள் தங்கள் அயலாருக்கு துர்மாதிரிகையாக இருப்பதுமின்றி, அவர்கள் திருச்சபையின் ஆறாம் கட்டளைக்கு எதிராக, கடமையில் தவறுவதாகிய ஒரு சாவான பாவத்தையும் கட்டிக் கொள்கிறார்கள்.

திருச்சபையின் மேய்ப்பர்கள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும்.  தேவாலயங்களும் பள்ளிகளும் கட்டப்பட வேண்டும்.  தேவ வழிபாட்டோ
giving blessing to the Sick people
டு தொடர்புடைய அனைத்தும் தகுதியுள்ள முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மட்டும் இந்த திருச்சபையின் கட்டளையின் நோக்கமல்ல.  மாறாக இந்தப் பூலோகத்தில் கிறிஸ்து அரசரின் இராச்சியம் ஆத்துமங்களின் இரட்சிப்புக்காக எங்கும் பரவவேண்டும் என்பதும் அதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது.  குரு நிலையினரையும், விசுவாசிகளையும் 
பிறர் சிநேகத்தின் கட்டுகளாக ஒன்றிப்பது இந்த கட்டளையின் நோக்கமாக இருக்கிறது.  ஏனென்றால் இந்த பரஸ்பர நேசம் பலமுள்ளதாக இருக்கும் இடங்களில் எல்லாம் கத்தோலிக்க திருச்சபை விசுவாசம் செழித்து வளர்ந்து வருகிறது.
Bishop Visiting people



குருக்கள் தங்கள் பங்கு மக்களின் ஆதரவுகளுக்கு பிரதிபலனாக அவர்களுக்கு போதுமானதை திருப்பி செலுத்தவில்லையா?  ஏனெனில் அவர்கள் தங்கள் பங்கு மக்களின் ஆன்ம
 தேவைகள் அனைத்திலும் உதவும்படி தங்கள் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள் அல்லவா?  விசுவாசிகள் திருச்சபைக்கு செய்யும் சகல உலக ரீதியான உபகாரங்களும், அவற்றைப் பெற்றுக் கொள்வோராகிய ஞான மேய்ப்பர்களுக்கு மட்டுமல்லாமல், அவற்றை தருபவர்களாகிய விசுவாசிகளுக்கும் நன்மை பயப்பவையாக இருக்கின்றன.  ஏனென்றால் திருச்சபையும், அது கொண்டுள்ள சகலமும், மக்களின் நன்மைக்காகவே உலகில் நிலைத்திருக்கின்றன.





திருச்சபையின் ஐந்தாம் கட்டளை (Fifth commandment of Church)

விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவுமுறையாரோடு  கலியாணம் செய்யாதிருப்பது 


திருமணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்வதாக தங்களுக்குள்ளே செய்து கொள்ளும் ஒப்பந்தம்.  மரணம் மட்டும் ஒன்று சேர்ந்து வாழும் கடமையை இந்த ஒப்பந்தம் அவர்கள் மீது சுமத்துகிறது. சர்வேசுரன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற வார்த்தையை கொண்டு சேசுநாதர் இதை தெளிவு படுத்தினார்.

சேசுநாதர் திருமணத்தை ஒரு தேவதிரவிய அனுமானமாக உயர்த்தினார். அர்ச். சின்னப்பர் இந்த மெய்விவாகத்தை ஒரு மாபெரும்  தேவதிரவிய அனுமானம் என்கிறார்.  மெய்விவாகம் வாழ்வோரின் தேவதிரவிய அனுமானமாக இருப்பதால், அது தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் பெறப்பட வேண்டும்.  அதாவது திருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் சாவான பாவமின்றி இருக்க வேண்டும்.  மெய்விவாகம் என்னும் தேவதிரவிய அனுமானம் கணவனுக்கும் மனைவிக்கும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற தேவையான வரப்பிரசாதத்தை தருகிறது; தங்கள் பிள்ளைகளை தேவசிநேகத்திலும் தேவ பயத்திலும் வளர்க்க அவர்களுக்கு உதவுகிறது.

சட்டபூர்வமான வழிமுறைகள் பின்பற்றப்படாமல் செய்யப்பட்ட ஓர் ஒப்பந்ததை ரத்து செய்ய ஓர் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருப்பது போலவே மெய் விவாகம் என்னும் தேவதிரவிய அனுமானத்தை பெறுவதற்கான நிபந்தனைகளுக்குச் கட்டுப்படாமல் ஒரு கத்தோலிக்க ஆணும், பெண்ணும் செய்து கொண்ட திருமணம் செல்லாது என அறிவிக்கிற அதிகாரம் திருச்சபைக்கு இருக்கிறது.

ஒரு திருமணம் செல்லத்தக்க கத்தோலிக்க திருமணமாக இருப்பதற்கு இரு சாட்சிகள் முன்னிலையில் பங்கு குருவுக்கு முன்பாக அல்லது  அவரால் ,முறைப்படி அனுமதிக்கப்படுகிற ஒரு குருவுக்கு முன்பாக தங்கள் சம்மதத்தை தெரிவிப்பது அவசியம்.ஆனால் ஓர் அரசு அதிகாரி முன்போ அல்லது கத்தோலிக்கரல்லாத ஓர் ஊழியர் முன்போ நிகழ்கிற ஒரு கதோலிக்கனின்  திருமணம் சர்வேசுரனுடைய பார்வையில் திருமணமே அல்ல. ஏனெனில் மெய்விவாக அனுமானத்திற்கென ஏற்படுத்திஇருக்கிற நிபந்தனைகளுக்கு அவர்கள் கட்டுப் படுவதில்லை.  

அடுத்ததாக ஒரு திருமணம் செல்லுபடியாக ஆணும் பெண்ணும் சுதந்திரம் உள்ளவர்களாகவும் சுதந்திரமான விதத்தில் தங்கள் சம்மதத்தை தெரிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.  விவாகரத்து செய்து கொண்ட அல்லது திருமண பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஓர் ஆளுக்கு மீண்டும் திருமணம் செய்யும் உரிமை இல்லை.   

ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயது முடியுமுன் செய்து கொள்வதை கத்தோலிக்க திருச்சபை விலக்குகிறது. 

இறுதியாக திருமணத்தை செல்லாததாக ஆக்கக்கூடிய விக்கினங்கள் எதுவும் இருக்க கூடாது.  இரண்டு விதமான விக்கினங்கள் இருக்கினறன.  அவை தடை செய்கிற விக்கனம், மற்றும் செல்லாததாக்குகிற விக்கினம் ஆகும்.

தடை செய்யும் விக்கினம் என்பது விசேஸ சலுகைபெறப்படாத நிலையில் திருமண ஒப்பந்தத்தை சட்டத்திற்கு எதிரானதாக ஆக்குகிறது.  திருமணம் செய்த இருவரில் ஒருவர் கன்னிமை வார்த்தைப்பாடு அல்லது உபதியோக்கன், தியோக்கன் மற்றும் குருத்துவம் பட்டம் பெற்றிருத்தல், அல்லது துறவற அந்தஸ்தில் சேரும் வார்த்தைப்பாடு கொடுத்தவராக இருந்தால் அவர் திருமணம் செய்து கொள்வது சட்டத்திற்கு விரோதமானது.

கலப்புத் திருமணம் மற்றொரு தடை செய்கிற விக்கினம் ஆகும்.  கத்தோலிக்ககர் ஒருவரும், எதாவது ஒரு பதித பிரிவினை சபையில் ஞானஸ்தானம் பெற்ற உறுப்பினராக இருக்கும் மற்றொருவரும் திருமணம் செய்து கொள்வதை திருச்சபை மிகக் கடுமையான முறையில் தடை செய்கிறது.  இத்தகைய திருமணங்கள் வேத அலட்சிய போக்கிற்கும் விசுவாச இழப்பிற்கும், குழந்தைகளின் ஞான உபதேசத்தில் அசட்டைத்தனத்திற்கும் வழிவகுத்து விடும் என்பதால் திருச்சபை கலப்பு திருமணத்தை தடை செய்கிறது.  சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் மட்டும் இந்த விக்கினத்திற்கு திருச்சபை விலக்கு அளிக்கிறது.  கலப்பு திருமணம் செய்வதற்கு ஒரு நியாமானதும், தீவிரமுள்ளதுமான காரணம் இருக்க வேண்டும்.  திருமணம் செய்து கொள்ள போகும் இருவரில் கத்தோலிக்கராக இருக்கும் மற்றவருக்கு கத்தோலிக்க விசுவாசத்தை அனுசரிப்பதில் எந்த தடையும் விதிப்பதில்லை என்ற உத்திரவாதம் தர வேண்டும்.  மேலும் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் கத்தோலிக்க ஞானஸ்தானமும், கத்தோலிக்க கல்வியும் மட்டுமே பெறுவார்கள் என்று திருமணம் செய்து கொள்ள போகும் இருவரும் வார்த்தைப்பாடு தர வேண்டும்.

செல்லாதாக்குகிற விக்கினம் ஒரு திருமண ஒப்பந்தத்தை ரத்துச் செய்கிறது.  திருமணத்தை செல்லாதக்குகிற விக்கினங்கள் குறைந்த வயது, ஏற்கனவே உள்ள திருமண உறவு. இதர மதத்தினரோடு திருமணம், ஆள் கடத்தி திருமணம். உபதியோக்கன், தியோக்கன் மற்றும் குருத்துவம் பட்டம் பெற்றிருத்தல் ஞானத்தாய் அல்லது ஞானத்தகப்பன் அல்லது ஞானப்பிள்ளை உறவு, இரத்த உறவு நெருங்கின உறவு என்னும் உறவுகள் திருமணத்தை செல்லாததாக்குகிற விக்கினங்கள் ஆகும்.  திருமணத்திற்கு முந்தைய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் பங்கு குருவானவர் திருமண அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதால் தங்கள் திருமணத்திற்கு சர்வேசுரனுடைய ஆசிர்வாதம் வேண்டும் என விரும்புவோர் தங்கள் திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாக தங்கள் பங்கு குருவுக்கு அறிவிக்க வேண்டும்.  


கத்தோலிக்கர் ஆண்டின் எந்தக் காலத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம்.  ஆனாலும் ஆகமணக் காலம், தபசுகாலம் ஆகிய தவ, ஒறுத்தல் முயற்சிகளின் காலங்களிலும், அதாவது, ஆகமன காலத்தின் முதல் ஞாயிறு முதல் கிறிஸ்மஸ் திருநாள் முடியவும், சாம்பல் புதன் தொடங்கி உயிர்ப்பு ஞாயிறு முடியவும் திருமணங்கள் அர்ச்சிக்கப்படுவதைத் திருச்சபை தடை செய்கிறது. 


மரியாயே வாழ்க 
Ave Maria