Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 1 மே, 2015

May the Month of Mary



மே மாதம் தேவதாயின் மாதம்.  மே மாதம் அன்னை மரியாள் உலகத்தின் அரசி என்று உலகுக்கு எடுத்து சொல்லும் மாதம். இந்த மாதத்தில் உலகம் எங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் தேவ மாதாவிற்கு வணக்கமாக ஒப்பு கொடுத்து, சில பக்தி முயற்சிகளை செய்கிறார்கள்.  இந்த மாதத்தில் சில கோவில்களில் தேவ அன்னையின் பிராத்தனையை பாடுவார்கள்.
இன்றைய காலங்களில் அநேகர் தேவதாயை மறந்து, மே மாதம் எதற்கு தேவதாவிற்கு ஒப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி சிந்தியாமல் தங்களை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். வேறு சிலர் தொலைக்காட்சியில் வரும் CSI, Protestant....etc.. அவர்களின் சேனல்களில் வரும் செப கூட்டம்,
ஆசிர்வாத பெருவிழா என்று இருக்கிறார்கள்.  வேறு சிலர் மே மாதம் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதனால் சுற்றுலா செல்கிறார்கள்.

மே மாதம் எதற்காக என்பதை கூட பலர் மறந்து போனார்கள்.

இது தேவ தாயின் மாதம். நாம் இதை சிறப்பாக கொண்டாட வேண்டும்.  நம் அன்னையை புகழ்ந்து பாடுவோம். அன்னை நம் வாழ்வில் செய்த சகல நன்மைகளுக்கும் நன்றி சொல்லுவோம். நாம் நம் அன்னையிடம் நமது தேவைகள் அனைத்தையும் எடுத்து கூறுவோம்.
தேவதாய் தான் சகல வரங்களின் மத்தியஸ்தி. தேவதாய் மூலம் தான் நமது ஆண்டவர் வரங்கள் அனைத்தும் சகல மனிதருக்கும் கொடுக்கின்றார். நாம் அன்னையிடம் வேண்டுவோம். கத்தோலிக்க திருச்சபையில் இருந்து விலகி போகிரவர்களுக்காகவும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனை படுகிற ஆன்மாக்களுக்காகவும், நமது உற்றார் உறவினர்களுக்காகவும், நமது தேவைகளுக்காகவும் நமது தேவ அன்னையிடம் மன்றாடுவோம்.அவர் நமக்கு உதவி செய்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக