மோக பாவம்
அவரவர் சிறு வயது முதல் இதுவரை செய்த பாவ்களை எல்லாம் கண்முன் வைத்துப் பார்த்த போது, அத்தனை பாவ்களுக்குள்ளே ஒரு வகைப்பாவம் மகா விஷமுள்ள நாகப் பாம்பைப்போல் தன் பொடிய நஞ்சை எங்கும் கக்கி, உடலையும் உயிரையும் கெடுத்து, மனதில் கலக்கமும், சலிப்பும் உண்டாகி ஓயாத கவலையும் மனக்குத்தும் கொடுத்துவருகிறதாக அநேகம் பேர்கள் துக்கத்தோடு அறிந்திருப்பார்கள். அந்த விஷமுள்ள பாவம் இன்னதென்றறிந்து அதைத் தன் மனதிலிருந்து நீக்கும்படி துவக்கத்திலே முயற்சி செய்வது வெகு பிரயோசனமாயிருக்கும்.
மகா ஞானியான சாலமோன் என்றவரைப் போல புத்தியிலும் விவேகத்திலும், அறிவின் விசாலத்திலும் கீர்த்திப் பிரபலம் பெற்றவர் மனிதருக்குள் இருந்ததில்லை. சர்வேசுரனே இவருக்குத் தரிசனமாகி தந்தை தன் மகனோடு பேசுவது போல் இவருடன் முகங்கொடுத்துப் பேசினார். ஆகிலும் இவர் தன் வயோதிப காலத்திலன் தன் சர்வேசுரனை மறந்து தன்னையும் மறந்து, பசாசின் சிலைக்கு தூபங்காட்டி அதை ஆராதித்துப் பாவம் செய்து வந்ததாக வேத புத்தகம் சொல்லுகிறது. (1 அரசர். 11: 1-10)
வான மண்டலத்தின் உச்சியில் பிரகாசம் நிறைந்த நட்சத்திரம் போல் மின்னித் துலங்கினவன். கடைசியில் ஒளி மங்கி நிலைபெயர்ந்து, கீழே விழுந்து விழுந்தவன் தப்பிவர வகையின்றி மாட்டிக் கொண்டான். கடும் விஷம் அவனைத் தீண்டினது. அவன் புத்தியும் அறிவும் மங்கிப் போனது. hனி சாலமோன் அஞ்ஞானியானான். சர்வேசுரன் மனிதனை மகமையிலுயர்த்தி வைத்திருக்கையில் அவன் அதை மறந்து போனதால் புத்தியற்ற மிருக்களுக்குச் சமமானான் என்ற வேதவாக்கியத்துக்குச் சாலமோன் உதாரணமானான். முன் ஞான அறிவபால் எவ்வளவு உயர்ந்திருந்தானோ அவ்வளவு பின் மோக பாவத்தால் தாழ்ந்து போனான்.
சர்வேசுரன் பாவத்தை எவ்வளவு பகைக்கிறாரென்றும், பாவத்தோடு சாகிறவர்களை எவ்வளவு கொடுமையாய் நரகத்தில் தண்டிக்கிறாரென்றும் யோசி. யாரிடத்தில் இந்த பாவம் குடிபுகுந்ததோ அவன் ஆத்துமத்தில் நரகத்தின் சாயலும் முத்திரையும் இருக்கிறதென்று சொல்லலாம். அவனுடைய அறிவும் புத்தியும், மங்கிப் போகும். நரகத்தின் இருள் அவன் மனதில் மூடத் துவக்கும்.
இந்தப் பாவத்ததால் மனிதர்கள் திரளாய் நரகத்தில் வழுகிறார்கள். கிறீஸ்துவர்களுக்குள் பாவத்தால் கெட்டுப் போகிறவர்கள் அநேகமாய் இந்தப் பாவத்தால் தான் கெட்டவர்கள். ஆனதால் இந்த பாவத்தை, மற்ற எந்தப் பாவத்தைப் பார்க்கிலும் பகைத்து வெறுக்கும்படி, இதற்குள்ள விஷமும் பொல்லாப்பும் இவ்வளவென்று சொல்லுவது அவசியம்.
வேத அறிஞர்கள் சொல்வதுபோல் மனிதன் பாவங்களைச் செய்யும் போது. அந்தந்தப் பாவத்தின் தோஷத்தை காட்ட அதற்குரிய ஓர் முத்திரை அவன் ஆத்துமத்தில் பதிகின்றது. அசுத்தப் பாவமாகிற மோக பாவத்தைச் செய்கிறவன் இருதயத்தில் பதியும் முத்திரை விசேஷமாய் நரகத்தின் முத்திரை. ஆனதால் நரகத்தைக் காட்டும் சாயல் உலகத்தில் எங்கே உண்டு என்று அறிய வேண்டுமானால், மோக பாவியின் இருதயத்தில் பார்க்கலாம். நரகத்தின் முக்கிய அறிகுறி என்ன? வேதவாக்கியமே இன்னதென்று குறித்துக் காட்டுகிறது. நரகம் இருள் அடர்ந்து நிறைந்த இடம். ஆத்துமத்திலும் சரீரத்திலும் மனிதன் நினைவுக்கு மேற்பட்ட துன்ப வேதனைகளால் நரகத்திலுள்ள நிர்ப்பாக்கியர் வருத்தப்படுகிறார்கள்.
மோக பாவியின் மனதில் நரக இருள் அடர்ந்தது போல் அவன் புத்தி மங்கிப் போகின்றது. அறிவாகிற கண் பெட்டுப் போகின்றது.
அறிவில்லாததால் மிருகத்தைப்போல் தன் சரீர சுக இன்பத்தை மாத்திரம் தேடுகிறான். இந்த பாவியை குறித்து தேவ வாக்கியம்:
மிருகமாகிய மனிதன் சர்வேசுரனை சார்ந்த விஷயங்களை அறியான் என்று சொல்லுகிறது. மற்;ற பாவங்களை செய்யும் போது புத்தியுள்ள மனிதனைப் போல செய்கிறவன், அசுத்தப் பாவத்தைச் செய்கையில், மனிதனைப் போல் அல்ல ஒரு மிருகத்தைப் போல செய்கிறான். புத்தியில்லாத மிருகம் எப்படி தன்னிடம் எழும் கெட்ட ஆசையைத் தேடி நிறைவேற்ற திரிகின்றதோ, அப்படியே மோக பாவியும் சுய அறிவை இழந்து தன் ஆசையைத் தேடி அலைகிறான்.
அறிவு மங்குவதால் அவன் தன்னை மறந்துபோகிறான். தான் செய்யும் பாவத்தின் கனத்தையும் அறிகிறதில்லை. தன்னைச் சிருஷ்டித்த சர்வேரனையும் மறந்து போகிறான். தான் இருக்கும் நிலைமையும் தன்னைச் சுற்றி இருக்கும் உறவினர்கள் சுற்றம் சிநேகிதர் எவரையும் எண்ண மாட்டான். தனக்கிருக்கும் கொளரவம், புகழ், பெயர், ஒன்றும் மதியான். தன் தேக சௌக்கியத்தை முதலாய் மதியான். இழிவான நடைத்தையால், தனக்கும் தன்னால் மற்றவர்களுக்கும் வரும் பழிச்சொல், நிந்தை, வெட்கம், அவமானம் யாதொன்றும் கவனியான். தான் பார்த்துவரும் வேலைக்கு தன் வாழ்வுக்கும் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை யோசியான்.
இப்படி மதிக்கெட்டுப் பேரிழந்து நாலு தெருவும் திரிபவர்கள் எல்லாரும் தாங்கள் செய்வது இன்னதென்று சற்றாவது கவனித்து யோசித்தால்? இவ்வித நடத்தையிலுள்ள அயோக்கியமும் அவலட்சணமும் அறிவார்கள். ஆனால் இவர்கள் அப்படி யோசியாதபடி அவர்கள் புத்தியாகிற கண் பாவத்தின் நஞ்சால் மறைப்பட்டு ஒளி மங்கிப்போய் விட்டது. அதுவே நரக இருளின் சாயல்.
கிறிஸ்தவர்களுக்குள்ளே எந்த ஊரிலும் தெய்வமேது, குருவேது, நரகமேது, மோடசமேது, யார் கண்டது, யார் பார்த்தது என்று இவ்விதமாய் பிதற்றி பாவசங்கீர்த்தனமின்றி திரிபவர்கள் உண்டல்லவா? இவர்கள் சாதாரணமாய் எவ்வழி நடப்பவர்களென்று தெரியுமா? இவர்கள் மோக பாவத்தின் கஷ்டத்தில் விழுந்தவர்கள். புத்தியாகிய கண்ணை இழந்து விசுவாசத்தின் தேவப் பிரகாசமின்றிப் போனதால் இப்படி அபத்தத்தைப் பிதற்றுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக