Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

காவல் சம்மனசுக்கள்


"எனக்கு காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து காத்து நடத்தி ஆண்டருளும் காவலரே 
                                                                                                      -ஆமென்."


காவல் சம்மனசுக்கள் என்பவர்கள் யார்?


                         
          காவல் சம்மனசுக்கள் என்பவர்கள் கடவுளால் நியமிக்கப்பட்ட  ஒரு சம்மனசு. இவர்கள் நாம் பிறந்தது முதல் நாம் இறக்கும் வரை நம்மோடு இருக்கிறார்கள். நாம் அவர்களை காண முடியாது.  ஆனால் நாம் அவர்களோடு பேசலாம். நாம் அவர்களை தொட முடியாது. ஆனால் அவர்களை உணரலாம். 
அவர்களை எப்படி உணர்வது என்றால் நம் மனது பாவமான ஒரு காரியத்தை செய்ய நினைக்கிறது.  உடனே நம் மனதில் மற்றொரு சிந்தனையும் வருகிறது.  இந்த காரியம் ஒரு பாவம் என்றும், இதை செய்யாதே என்றும் நமக்கு நினைவு படுத்துகிறார்.   

அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறவர். நாம் புண்ணியங்கள் செய்யும் போது சந்தோஷபடுகிரவறாகவும் , நாம் பாவம் கட்டி கொள்ளும் போது வேதனை படுபவராகவும் இருக்கிறார்.  சர்வேசுரன் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு காவல் சம்மனசு இருக்கிறார். அவர்கள் நாம் வெளியில் செல்லும் போதும், நாம் பயணம் செய்யும் போதும், நாம் விளையாடும் போதும், நாம் தூங்கும் போதும் நம்முடனே இருக்கிறார். 

காவல் சம்மனசுக்கள் நம் கண்களுக்கு தென்படுவார்களானால்  நாம் இந்த பூமியில் நிற்பதற்கு கூட இடம் இருக்காது.  என் என்றால் கடவுள் மனிதருக்கு மட்டும் அல்லாமல் அவன் வசிக்கும் வீடு, தெரு, ஊர், நகரம், மாநிலம், நாடு என அனைத்திற்கும் அவர் ஒவ்வொரு காவல் சம்மனசுக்களை கொடுத்து இருக்கிறார்.

நம் வாழ்வில் பல வேளைகளில் மிகவும் கஷ்டமான சூழலில் மாட்டிக்கொள்கிறோம். அந்த வேளையில் நமக்கு  அறிமுகம் இல்லாத சிலரிடம் இருந்து நமக்கு உதவிகள் கிடைக்கும். அவர்கள் தான் நம் காவல் சம்மனசுகள்.
இவ்வாறு பல உதவிகளை அவர்கள் நமக்கு செய்கிறார்கள். நாம் அவர்களிடம் பேச வேண்டும்.  நாம் இரவில் தூங்க செல்லும் முன் இந்த நாளில் நம்மை காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். காலையில் எழும் போதும் நாம் அவர்களிடம் "இந்த நாள் முழுவதும் சேசுவுக்கு எதிராக எந்த வித பாவங்களையும் செய்யாமல் இருக்க செய்யும்" என்று வேண்டிக் கொள்வது உத்தமம்.


"எனக்கு காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து காத்து நடத்தி ஆண்டருளும் காவலரே 
                                                                                                      -ஆமென்."


Click Here To Download ...





Sermon about Our Lady of Fatima in Tamil (Audio)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக