நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறது
|
Priest giving Communion to faithfuls |
பழைய ஏற்பாட்டில் தேவாலய குருக்களின் ஆதரவுக்காகவும், வேதத்தை பேணுவதற்காகவும், கடவுள் ஏற்படுத்திய ஒரு விசேஷ சட்டம் இருந்தது. புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவர் தம் ஊழியர்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அவர்களால் ஆதரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். கோவில் பணிவிடைக்காரர் கோவிலுக்குரியவைகளில் பங்கடைகிறார்கள். பீடத்தின் பரிசாரகர்கள் பீடத்துக்கு உரியவைகளில் பங்கடைகிறார்கள் என்றும் அறியீர்களோ? அவ்வாறே சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறவர்களும் சுவிசேஷத்தினாலே பிழைக்கும்படி ஆண்டவர் ஏற்பாடு செய்திருக்கிறார். என்று சின்னப்பர் கூறுகிறார். எனவே தேவ கட்டளைப்படி தங்களால் இயன்ற அளவில் விசுவாசிகள் தங்கள் மேய்ப்பர்களுக்குத் தேவையானவைகளைத் தர கடமைப்பட்டிருக்கிறோம்.
|
Fr. Giving Baptism to a Old Lady |
இக்கடமையை நிறைவேற்றுவதற்கான முறை அந்தந்த காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது. ஆதி திருச்சபையில் இருந்தது போலவே இன்றைய நாட்களிலும் மக்களின் காணிக்ககை தான் ஏறத்தாழ திருச்சபையின் ஒரே நிதி ஆதாரமாக இருக்கின்றது. மேலும் குருக்கள் கடவுளுக்கு உரியவையும், ஆத்துமாக்களின் பராமரிப்புக்கு உரியவையான காரியங்களுக்காக அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் தங்கள் பிழைப்புக்காக உலகத் தன்மையான வேலைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
|
Fr. blessing a House
|
எனவே, திருச்சபை தனது ஆறாம் கட்டளையில், தனது தெய்வீக ஸ்தாபகரால் விசுவாசிகள் மேல் சுமத்தப்பட்ட கடமையை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறது.
நீதியின்படி குருநிலையினர் தங்கள் மக்களால் ஆதரிக்கப்பட உரிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் சட்டபூர்வமான அதிகாரத்தால் ஒரு பங்கின் ஆன்ம நலன்களுக்குப் பொறுப்பாளராகளாக பங்கின் ஆன்ம நலன்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிற குருக்கள் விசுவாசிகளின் எல்லாத் தேவைகளிலும் அவர்களுக்கு உதவுகிறார்கள்.
|
Fr. preparing young boys and girls for confession
|
திருச்சபையின் இக்கட்டளை மிகக் கண்டிப்பான ஒன்று. ஆனாலும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்த கட்டளை அனுசரிக்கத் தவறுவதால் சாவான பாவம் கட்டிக்கொள்ளப்படுகிறதா என்பது கடினம். அத்தகைய சூழலில் ஒரு பங்கு குருவானவர் எந்த அளவு தேவையில் இருக்கிறார், அவருக்கு உதவி செய்ய தவறுகிற விசுவாசியின் நிதி நிலைமையை என்ன, ஆகியவற்றை பொறுத்து பெருமளவு சார்ந்திருக்கிறது. ஆயினும் பல வருடங்களாக தங்கள் வேதக் கடமைகளை அசட்டை செய்து வரும் அக்கறையற்ற கத்தோலிக்கர்கள் தங்கள் அயலாருக்கு துர்மாதிரிகையாக இருப்பதுமின்றி, அவர்கள் திருச்சபையின் ஆறாம் கட்டளைக்கு எதிராக, கடமையில் தவறுவதாகிய ஒரு சாவான பாவத்தையும் கட்டிக் கொள்கிறார்கள்.
திருச்சபையின் மேய்ப்பர்கள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். தேவாலயங்களும் பள்ளிகளும் கட்டப்பட வேண்டும். தேவ வழிபாட்டோ
|
giving blessing to the Sick people
|
டு தொடர்புடைய அனைத்தும் தகுதியுள்ள முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மட்டும் இந்த திருச்சபையின் கட்டளையின் நோக்கமல்ல. மாறாக இந்தப் பூலோகத்தில் கிறிஸ்து அரசரின் இராச்சியம் ஆத்துமங்களின் இரட்சிப்புக்காக எங்கும் பரவவேண்டும் என்பதும் அதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. குரு நிலையினரையும், விசுவாசிகளையும் பிறர் சிநேகத்தின் கட்டுகளாக ஒன்றிப்பது இந்த கட்டளையின் நோக்கமாக இருக்கிறது. ஏனென்றால் இந்த பரஸ்பர நேசம் பலமுள்ளதாக இருக்கும் இடங்களில் எல்லாம் கத்தோலிக்க திருச்சபை விசுவாசம் செழித்து வளர்ந்து வருகிறது.
|
Bishop Visiting people |
குருக்கள் தங்கள் பங்கு மக்களின் ஆதரவுகளுக்கு பிரதிபலனாக அவர்களுக்கு போதுமானதை திருப்பி செலுத்தவில்லையா? ஏனெனில் அவர்கள் தங்கள் பங்கு மக்களின் ஆன்ம
தேவைகள் அனைத்திலும் உதவும்படி தங்கள் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள் அல்லவா? விசுவாசிகள் திருச்சபைக்கு செய்யும் சகல உலக ரீதியான உபகாரங்களும், அவற்றைப் பெற்றுக் கொள்வோராகிய ஞான மேய்ப்பர்களுக்கு மட்டுமல்லாமல், அவற்றை தருபவர்களாகிய விசுவாசிகளுக்கும் நன்மை பயப்பவையாக இருக்கின்றன. ஏனென்றால் திருச்சபையும், அது கொண்டுள்ள சகலமும், மக்களின் நன்மைக்காகவே உலகில் நிலைத்திருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக