Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 12 மார்ச், 2019

சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். கன்னிமரியம்மாள் சர்வேசுரனுடைய மாதா! இது எத்தகைய பாக்கியம்! மகிமை!! மாதாவின் எல்லா மகிமைப் பெருமைகளிலெல்லாம்இரத்தினமாகபிரகாசிக்கும் இது ஒரு வேத சத்தியம்!
ஆம்! மகா பரிசுத்தவதியான கன்னிமரியாய்கடவுளின் தாய்என்பது பரம இரகசியம் - மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனின் மனிதாவதார பரம இரகசியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விசுவாச சத்தியம்! சேசுகிறீஸ்து மனுவுருவெடுத்த சுதனாகிய சர்வேசுரன்; எனவே அவளை ஈன்றெடுத்தவள்சர்வேசுரனின் தாய்என்றழைக்கப் படுவது முற்றிலும் சரியே. அதற்கு மாறானவைகள் தப்பறையென்று திருச்சபை கண்டித்து ஒதுக்குகிறது. எபேசியுஸ் பொதுச்சங்கம் கி.பி.431-ல் கூடி, இந்தச் சத்தியத்திற்கு விரோதமான போதனைகளைச் சபித்துமகா பரிசுத்த கன்னிமரியம்மாள் சர்வேசுரனின் தாய்என்று பிரகடனம் செய்துள்ளது.
வேதாகமச் சான்றுகள்:
பரிசுத்த கன்னிமரியம்மாள் சர்வேசுரனுடைய தாயாக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வேதாகம வசனங்கள் அநேகமுள்ளன. அவற்றில்: (1) “... இஸ்பிரீத்துசாந்து உமது மேல் எழுந்தருளி வருவார்; உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும்; ஆகையால் உம்மிடத்தில் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் என்னப்படுவார்” (லூக். 1:35). (2) “... என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக்குக் கிடைத்ததெப்படி...” (லூக். 1:43). (3) “... காலம் நிறைவேறியபோது ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும்... தம்முடைய சுதனை சர்வேசுரன் அனுப்பினார்...” (கலாத்தி. 4:5).
புனிதர்களின் போதனைகள்:
பரிசுத்த கன்னிமரியாய் சர்வேசுரனின் தாயார் என திருச்சபையின் பிதாப்பிதாக்களும், புனிதர்களும் ஏற்றுப் போதித்து வந்துள்ளனர். “தேவதாய்” - “Theotokos” என்ற வார்த்தையை திருச்சபையின் பிதாப்பிதாவான ஒரிஜன் என்பவர் முதன் முதலில் பயன்படுத்தி மாதாவை அழைத்தார்.
அர்ச். இரேணிமுஸ்சர்வேசுரன் மரியன்னையால் நமக்கு கொடுக்கப்பட்டார்என்கிறார். அர்ச். நாஸியான் கிரகோரியாரோமரியம்மாள் கடவுளின் தாய் என்று ஏற்றுக்கொள்ளாத எவனும் சர்வேசுரனிடமிருந்து புறம்பாக்கக் கடவான்என்று கூறுகிறார். கத்தோலிக்கத் திருச்சபையும் மாதாவை மன்றாடும்அருள்நிறைந்த மந்திரத்தில்அர்ச். மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்என்று மன்றாடுகிறது.
தொன்றுதொட்டு கத்தோலிக்கக் கிறீஸ்தவனின் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் தேவதாயைப் போற்றுவது என்பது கூடாத ஒன்றா? இல்லை! ஆகவே பரிசுத்த கன்னிகையைசேசுவின் தாய் - தேவதாய், என்னுடைய தாய்என்று தமது வாழ்நாளில் எப்போதும் அழைத்து வந்த அர்ச். ஸ்தனிஸ்லாஸ் கோஸ்காவோடு சேர்ந்து நாமும் மரியன்னையைசர்வேசுரனுடைய தாய், என்னுடைய தாய்என்று கூறி மகிழ்வோமாக. அதுவே நமது நாவில் என்றும் ஒலிப்பதாக!
சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


Download Tamil Catholic Songs


ஞாயிறு, 10 மார்ச், 2019

Litany of St. Antony in Tamil .அர்ச். அந்தோனியார் பிரார்த்தனை

அர்ச். அந்தோனியார் பிரார்த்தனை


சுவாமீ கிருபையாயிரும். - மற்றதும்.
சென்மப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். அந்தோனியாரே, எங்க...
அலீஸ் போன் என்கிற பட்டணத்தில் உதித்த ஞான நட்சத்திரமே, எங்க...
உயர்ந்த பாரம்பர்யத்தில் பிறந்தவரே, எங்க... ம்
பக்தி நிறைந்த தாய் தந்தையால் தர்ம ஒழுக்கம் படிப்பிக்கப் பட்டவரே, எங்க..
இளமை தொடங்கிச் சுகிர்த ஞான சீவியத்தை அனுசரித்தவரே, எங்க...
வாலிபப் பிராயமுதல் சந்நியாசம் செய்தவரே, எங்க..
பரலோக நித்திய சீவியத்தைப்பற்றிப் பூலோக சுக வாழ்வெல்லாம் வெறுத்தவரே, எங்க....
சுற்றத்தார் சிநேகிதரின் உறவை விலக்கி விலகி ஏகாந்தத் தியானத்திலிருக்கச் சொந்த
பட்டணத்தையும் விட்டுத் தூரத்திலிருந்த மடத்திற்போய் வசித்தவரே எங்க...
சேசுகிறீஸ்துவைப்பற்றிப் பிராணனைத் தரவேண்டுமென்கிற ஆசையால் அர்ச். ஐந்துகாய
ராஞ்சீஸ்குவின் சபைக்கு உட்பட்டவரே, எங்க...
உலகத்துக்குத் தெரியாதிருக்கவேண்டுமென்கிற தாழ்ச்சி யினாலும் அதிசிரேஷ்ட
முனிவரான அர்ச். அந்தோனியார் பேரிலுள்ள பக்தியாலும் அவருடைய நாமத்தைத் தரித்து
முந்தின உமது சுயபெயரை மாற்றினவரே, எங்க..

வேதசாட்சி முடியை அடைவதற்குச் சத்தியவேதத்தின் சத்துருக்களுடைய தேசத்தில்
பிரசங்கிக்கப்போனவரே, எங்க...
ஏகாந்த மறைவுள்ள ஞான சீவியமாகச் சீவித்தவரே, எங்க.
மாசற்றவராய்ப் பிரகாசித்த சீவிய ஒழுக்கத்தையும் அனுசரித்தவரே, எங்க..
சேசுநாதருக்கும் தேவமாதாவுக்கும் மிகவும் உத்தம பிரியம் தருபவரே, எங்க...
தேவ பாலனை உம்முடைய கரங்களில் கட்டி அணைக்கப் பாக்கியம் பெற்றவரே, எங்க...
ஸ்பெய்ன் தேசத்தின் அலங்காரமான இரத்தினமே, எங்க..
இத்தாலிய தேசத்தின் பிரகாசித்த ஒளியே, எங்க...
பிரான்சு தேசத்தில் அப்போஸ்தலராக வலம் வந்தவரே, எங்க..
இரவும் பகலும் செபத்தியானத்தின்மேல் அதிக விருப் பமாயிருந்தவரே, எங்க...
நெடுநாள் பதுவா என்கிற பட்டணத்தில் சகல புண்ணியங் களினாலும் விளங்கினதினால் அதின் பேரால் சிறப்பிக்கப் பட்டவரே, எங்க...
சுவிசேஷத்தைப் போதித்த எக்காளமே, எங்க... பக்திச் சுவாலகச் சபையின் அலங்காரமே, எங்க...
பரிசுத்தக் கற்பினால் வெண்மையான லீலி என்கிற புஷ்பத்திற்கு இணையானவரே, எங்க...
ஆச்சரியமான பொறுமையால் சகல விரோதங்களையும் செயித்தவரே, எங்க.
அத்தியந்த மன ஒறுத்தலால் விலைமதியாத மாணிக்க மானவரே, எங்க.. )
அத்தியந்த தாழ்ச்சியால் பணிந்து பிறருக்குப் பணிவிடை செய்ய விரும்பினவரே, எங்க...
சிரவணக் கீழ்ப்படிதலால் எல்லோருக்கும் மாதிரிகை யானவரே, எங்க
தயங்குமட்டும் உபவாசம் முதலாய் சகல விதத்திலும் சரீரத்தை ஒறுத்து அருந்தவத்தின்
அதிசயமான கண்ணாடி யாயிருந்தவரே, எங்க...
சத்திய வேத விசுவாசத்தின் தீபமே, எங்க...
சர்வேசுரன் பேரில் உறுதியான நம்பிக்கைக் கொண்டவரே, எங்க ...
தேவசிநேகத்தின் பிரகாசமுள்ள சுவாலையே, எங்க...
ஆத்துமாக்களின் ஈடேற்றத்துக்காக அத்தியந்த சுறுசுறுப்புள்ள பற்றுதலைக் கொண்டவரே, எங்க..
ஒடுக்க வணக்கமுள்ள பக்தி நடத்தையால் பிரசங்கித்தவரே, எங்க ..
பிறர் சிநேகத்தால் சொல்லிலடங்காதபடி உடலை வருத்தி உமது சீவனைச் செலவழித்தவரே, எங்க..
அர்ச்சியசிஷ்டதனத்தின் பாத்திரமே, எங்க... எப்போதும் சிலுவை நெறியில் தவறாமல்
ஒழுகினவரே, எங்க... திருச்சபையின் அசையாத தூணே, எங்க...
அர்ச். பாப்பானவரால் உடன்படிக்கையின் பெட்டகம் எனப்பட்டவரே, எங்க..
வேத வாக்கியங்களின் ஞானப் பொக்கிஷமே, எங்க...
எவராலும் ஆச்சரிய விருப்பத்துடனே கேட்கப்பட்ட உத்தம பிரசங்கியே, எங்க...
எண்ணிறந்த பாவிகளையும் பதிதர்களையும் சத்திய சுகிர்த நெறியில் திருப்பின் மேலான போதகரே, எங்க...
விரோத வர்ம வைராக்கியத்தை நீக்கிச் சமாதானம் உண்டாக்க வரம் பெற்றவரே, எங்க...
துர்க்கந்த மோக தந்திரச் சோதனைகளையும், மற்றச் சகல பாவ துர்க்குணங்களையும்
அழிக்கச் செய்ய உதவியானவரே, எங்க.
மிருகங்களைக்கொண்டு துர்மார்க்கருக்குப் பாவ மயக்கம் தெளிவித்தவரே, எங்க...
அபத்த மதங்களை மறுத்து நிர்மூலமாக்கினதால் பதிதருக்குப் பயங்கரமான சுத்தியல் எனப்பட்டவரே, எங்க...
சாவுக்கு அஞ்சாமல் அநியாய துஷ்ட பிரபுக்களுக்குத் தேவ நீதியைத் தெளிவித்து அச்ச நடுக்கம் வருவித்தவரே, எங்க...
குற்றமில்லாதவர்களுக்காக பரிந்து பேசிக் காத்தவரே, எங்க.. சிறையிலிருந்து அநேகரை
மீட்டுக்கொண்டவரே, எங்க..
பிறர் உடமையை உத்தரிக்கச் செய்வதற்குத் தேவ அனுக்கிரகம் பெற்றவரே, எங்க...
விசுவாசம் இல்லாதவர்களுக்குத் தேவ பயம் உறுத்தினவரே, எங்க...
பசாசுகளுக்குப் பயங்கரமானவரே, எங்க... துன்ப துயரப் படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்க..
எளியவர்களுக்கும் பரதேசிகளுக்கும் உதவி சகாயமானவரே, எங்க ...
வியாதிக்காரர்களுக்கு உத்தம் வைத்தியரே, எங்க... மரித்தவர்களை உயிர்ப்பித்தவரே,
எங்க...
அந்தகருக்குப் பார்வை தந்தவரே, எங்க... செவிடருக்குச் செவிடு நீக்கினவரே, எங்க..
வெட்டவெளியில் உமது பிரசங்கத்தைக் கேட்கும் சனங்களை இடி குமுறல் கல்மாரியோடு
எப்பக்கத்திலும் பெய்த மழையில் நனையாமல் அதிசயமாய்க் காப்பாற்றினவரே, எங்க...
பற்பல அதிசய அற்புதங்களைக் காணச் செய்தவரே, எங்க... காணாமற்போன
பொருட்களைக் காணச் செய்தவரே, எங்க.. பிறர் இருதயத்தில் மறைந்ததை அறிந்தவரே, எங்க...
பரிசுத்தத்தனத்தால் சம்மனசுகளுக்கு இணையானவரே, எங்க ...
பிதாப்பிதாக்களைக் கண்டுபாவித்தவரே, எங்க.. வருங் காரியங்களை முன் அறிவித்த தீர்க்கதரிசியே, எங்க...
அப்போஸ்தலர்களின் சாயலே, எங்க...
அத்தியந்த ஆசையால் வேதசாட்சியே, எங்க...
வேதபாரகரிலும் ஸ்துதியரிலும் ஒருவராக விளங்கினவரே, எங்க...
விரத்த கன்னிமையில் அநேகரை நிலைநிறுத்தின மாறாத விரத்தரே, எங்க..?
சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய மகிமையுள்ள பாக்கியத் திற்குப் பங்காளியானவரே, எங்க...
"உமது மரண காலத்தை ஏற்கனவே அறிந்தறிவித்து அதற்கு உத்தம் ஆயத்தம் செய்தவரே, எங்க...
ஏழு தப சங்கீதங்களைச் செபித்துத் தேவமாதாவைத் துதித்து மன்றாடுகையில் பாக்கியமான மரணத்தை அடைந்தவரே,
மரித்தவுடனே எண்ணிறந்த புதுமைகளினாலே முத்திப்பேறு பெற்ற அர்ச்சியசிஷ்டவராக விளங்கி வணங்கப்பட்டவரே,
உமது திரு நாக்கு அழிவில்லாமையால் சிறந்த வணக்கம் பெற்றவரே, எங்க..
பக்தியுள்ளவர்களுக்குத் தயை நிறைந்த பிதாவே, எங்க...
பஞ்சம் படை நோய் புயல் முதலிய ஆபத்துகளில் ஆதரவும் தஞ்சமுமானவரே, எங்க..
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற - மற்றதும். முதல்: சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு
நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக. துணை: அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்
கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்.
சர்வேசுரா சுவாமீ! உம்முடைய ஸ்துதியரும், முத்திப்பேறு பெற்றவருமாகிய அர்ச்.
அந்தோனியாரைக்கொண்டு உமது திருச் -- சபைக்கு எண்ணிறந்த அற்புத நன்மைகளைச்
செய்தருளினீரே, அவருடைய மன்றாட்டினால் அடியோர்கள் தேவரீரிடத்தில் கிருபை
பெறவும், சகல பொல்லாப்பு துயர ஆபத்துகளிலே நின்று இரட்சிக்கப்படவும், எங்கள்
ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் வேண்டிய உதவி சகாய உபகாரங்களை அடையவும், பாவ
தந்திரங்களையும் விலக்கி உலகம் பசாசு சரீரமென்கிற மூன்று சத்துருக்களையும்
செயித்து நித்திய பேரின்ப ஆனந்தத்தில் வாழப் பாத்திரவான்களாகவும் அனுக்கிரகம்
செய்தருளும் சுவாமி. - ஆமென்.

Catholic Quotes


வெரோணிக்கம்மாள், ஆண்டவரின் முகத்தைத் துணியால் துடைக்கிறாள்


..
.;

பிறர் கேலி செய்வார்களே, திட்டுவார்களே என்பதை பொருட்படுத்தவில்லை. தைரியத்துடன் அவள் - தனியே வருகிறாள் ; கூட்டத்தைத் தாண்டி. சேசுமீது தனக்குள்ள நேசத்தை வெளிக்காட்ட அவள் அஞ்சவில்லை. நல்ல யேசுவே, முகத் தாட்சணியத்தை முன்னிட்டு நன்மை செய்ய பின்வாங்குவேனானால், வெரோனிக்கம்மாளின் நன்மாதிரியை நான் பின்பற்றும் வரத்தை எனக்குத் தாரும். மனிதர் என்ன நினைப்பார்கள், என்ன சொல்வார்கள் என்பதை நான் பொருட்படுத்தாமல், உம்மையும் உமக்கு மகிழ்ச்சி தருவதையுமே நான் நினைத்து அதைத் துணிந்து செய்ய எனக்கு உதவி செய்வீராக.


என் அயலாரைப்பற்றி.. நான் அநியாயமாக தீர்ப்புக் கூறாதிருப்பேனாக. அங்கு இருந்த
உம்முடைய ஏனைய நண்பர்கள் யாரும் உம்மைத் தேற்ற முன்வரவில்லையே என
வெரோணிக்கம்மாள் தீர்ப்புக் கூறவில்லை... அவள் செய்தது போல் செய்ய வேறு யாருக்கும்
நினைவு வராதிருந்திருக்கலாம்; பிறர் உமக்கு சேவை செய்தாலும் செய்யாவிட்டாலும் நான்
ஆர்வத்துடன் உம்மைச் சேவிக்க எனக்கு உதவி செய்வீராக.

மாதாவைப் பார்ப்பதற்கு கண்கள்




மாதாவைப் பார்ப்பதற்கு கண்கள்

அர்ச். தோமினிக் சாவியோ தன் கற்பை பழுதின்றி காப்பற்ற பெரு முயற்சி செய்வார்.  ஒரு சமயம் ஒரு வினோத காட்சிகள் நடக்கும் கடைத் தெரு வழியாக அவர் தன் தோழர்களோடு செல்ல நேரிட்டது.  மற்றவர்கள் அக்காட்சிகளை கண்டு ரசித்துக் கொண்டே போனார்கள். ஆனால் சாவியோ தன் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டார்.
இதை கண்ட நண்பர்கள் இக்காட்சிகளை எல்லாம் இப்பொழுது பார்த்துச் சந்தோ´க்கவிட்டால் உன் கண்களை எதற்காக வைத்து கொண்டிருக்கிறாய் என்று ஏளனமாக கேட்டார்கள்.  அதற்கு அவர் நான் மோட்சம் சென்றவுடன் மாதாவின் திருமுகத்தை பார்க்கப் போகும் இக்கண்களைக் கொண்டு இந்தக் காட்சிகளை காண விரும்பவில்லை என்று பதிலளித்தார்.



Marriage at Cana




திராட்ச ரசம் அவர்களுக்குக் குறைவாய்ப் போனதினாலே, சேசுநாதருடைய தாயார் அவரை நோக்கி:  அவர்களுக்கு ரசமில்லை என்றாள். அதற்கு சேசுநாதர்: ஸ்திரீயே, எனக்கும் உமக்கும் என்ன?  என்னுடைய காலம் இன்னும் வரவில்லையே என்று அவளுக்குத் திருவுளம்பற்றினார்.  (அரு. 2: 3‡4)


எனக்கும் உமக்கும் என்ன” என்னும் இந்த வாக்கியத்தை “என்னோடு உனக்குக் காரியமென்ன” என்பதாகச் சிலர் அர்த்தம்பண்ணி, இவ்விதமாய் சேசுநாதர் தம்முடைய தாயாரை இகழ்ந்ததாகச் சொல்லிக்காட்டுகிறார்கள்.  ஆனால் இந்த வாக்கியத்தை மூல பாஷையாகிய எபிரேய பாஷையில் பார்க்குமிடத்தில் கலியாணக்காரர் வி­யத்தில் கலந்துகொள்வது “நம்மிருவருக்குங் காரியமில்லையே” என்கிற அர்த்தத்தில் சொல்லப் பட்டிருக்கிறதாக நிச்சயமாயிருக்கிறது.
அன்றியும் தாயைநோக்கி: ஸ்திரீயே என்பது கிரேக்கருக்குள்ளும் கீழ்த்திசைகளிலும் மரியாதையான வார்த்தையேயயாழியத் தாழ்மையான வார்த்தையல்ல.
மேலும் சேசுநாதர் தம்மைப் பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்துக்கு இரங்கித் தமது காலம் வருமுன்னே தண்ணீரை இரசமாக மாற்றின புதுமையைச் செய்தபடியால், அவர் அந்த ஆண்டவளைச் சங்கித்துக் கனம்பண்ணினாரென்று சொல்லவேணுமே ஒழிய அவளுக்குக் கனக்குறை செய்தாரென்று எவரும் நினைப்பதற்கு இடமில்லை.


Catholic Quotes



திவ்விய சேசுவே, உம்மை ஆராதித்து உமக்கு
நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம்.
அது ஏனென்றால் அர்ச்சிஷ்ட பாரமான 
சிலுவையை சுமந்து கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

Our Lady Quotes (Tamil) மரியாயின் மகிமை



மரியாயின் மகிமை

“இவளிடமாய் கிறிஸ்தெனப்படுகிற சேசுநாதர் பிறந்தார்” (மத். 1: 16) என்று சொல்வதே போதுமானதே ! இதைவிட அதிகப்படியாக  இக்கன்னிகையின் மகிமைகளைப்  பற்றி சுவிசேஷத்தில் ஏன்    தேடுகிறீர்கள்?  மாதா கடவுளிள் தாய்.  என்று அத்தாட்சி கொடுப்பதே போதுமே! இந்த அத்தாட்சியிலே மாதாவின் சகல சலுகைகளும் விவரமாய் கூறிவிட்ட சுவிசேஷகர்கள் அவைகளைப்பற்றி தனித்தனியே கூறத்தேவையில்லை.

- அர்ச். வில்லனோவா தோமையார்.

மரிக்கிறவர்களுக்கு பாதுகாப்பான அர்ச். சூசையப்பர்

அர்ச். சூசையப்பர் மரிக்க இருப்பவர்களுக்கு பாதுகாவலராகத் திகழ்கின்றார். மரண சமயத்தில் ஆன்மாக்கள் சேதம் அடையாத படிக்கு அவர்களை காப்பதில் வல்லமை கொண்டுள்ளார். தமது மன்றாட்டால் மரண சமயத்தில் தமது நேசர்களை சாத்தானின் பிடியில் இருந்து தப்புவித்து, சேசுவிடம் கொண்டுவரும் சக்தி படைத்தவர் புனித சூசையப்பர். அதனால்தான் திருச்சபையும்;
' ''சவுக்கியனாய் ஜீவிக்கவும் கடைசியாய் ஜீவியத்தின் பாக்கியமான மரணத்தை அடையவும் விரும்புகிறவன் எவனோ அவன் அர்ச்சிஷ்ட சூசையப்பரின் உதவியைக் கேட்கக் கடவான் என்று '' அவரைப் பார்த்து மன்றாடுகிறது, விசுவாசிகள் அனைவரும் அவரது உதவி சகாயங்களை கேட்கும்படி பணிக்கிறது.
சம்பவம்
அடைக்கலம் ஓர் திறமை மிக்க லாரி டிரைவர். கத்தோலிக்கனாய் இருந்தும் விசு வாசத்தை இழந்து, மனம் போன போக்கில் வாழுபவன். அவனது பெற்றோர்கள் அவனைக் கண்டித்தும் பயனில்லாமல் போயிற்று. அவர்களால் அவனுக்காக கடவுளிடம் ஜெபிக்க மட்டுமே முடிந்த து!
அடைக்லம் விசுவாசமற்றவனாக இருந்தாலும், சிறுவயதிலேயே அவனுக்கு புனித சூசையப்பா பேரில் பக்தி மட்டும் இருந்தது
எனவே தமது சட்டைப் பையில் அவரது சிறு படம் ஒன் ைற மட்டும் எப்போ து ம் வைத்திருப்பான். எப்போதாவது அ ைத எடுத்து, பக்தியுடன் பார்த்துவிட்டு மீண்டும் தமதுசட்டைப் பையில்வைத்துக் கொள்வான்.
ஒருநாள், ஒரு பட்டணத்திற்கருகே லாரி வரும்போது, எதிர்பாராத விதமாக எதிரே இருந்த பெரிய மரத்தில் லாரி மோதி, விபத்து நடந்து விட்டது. அடைக்கலம் தூக்கி யெரியப்பட்டான். உடல் முழுவதும் அடிபட்டு குற்றுயிறாகக் கிடந்தான். ஆயினும், ஆச்சர்யம்! அவன் நினைவிழக்கவில்லை. விபத்து நடந்த இடத்தில் கூடிய மக்கள் அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆயத்தம் செய்யும் போது, அவனது சட்டைபையில் இருந்த புனித சூசையப்பரின் படத்தைக் கண்டு, அவன் ஒர் கத்தோலிக்கனாய் இருக்க வேண்டும் என்று எண்ணி அருகேயிருந்த ஆலய குருவானவரை அழைத்தனர். அவரும் சுய நினைவோடு சாகும் தருவாயில் வேதனை அனுபவித்துக் கொண்டு கிடக்கும் அடைக்கலத்திற்கு அவஸ்தை பூசுதல் கொடுத்து அவனைத் தயாரித்தார். அவனும் அதை தமது வாயசைவின் மூலம் ஏற்றுக் கொண்டான். தமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டதன் அறிகுறியாக அவன் கண்கள் கலங்கின. சிறிது நேரத்தில் அவன் அமைதியாக மரித்தான்!

மரியாயே வாழ்க !

சனி, 9 மார்ச், 2019

சேசுநாதருடைய திருநாமத்தின் பிரார்த்தனை

சேசுநாதருடைய திருநாமத்தின் பிரார்த்தனை

சுவாமீ கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும். கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரலோகத்திலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டுரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்க...
இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்க..
அர்ச். தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்க..
நித்திய பிதாவின் திருச்சுதனாயிருக்கிற சேசுவே, எங்க...
பிதாவின் பிரகாசமாயிருக்கிற சேசுவே, எங்க...
நித்திய ஒளியின் தூய்மையாகிய சேசுவே, எங்க..
மட்டில்லாத மகிமை உடைய இராசாவாகிய சேசுவே, எங்க.
நீதி ஆதித்தனாகிய சேசுவே, எங்க.
பரிசுத்த கன்னிமரியாயின் குமாரனாகிய சேசுவே, எங்க..
மகா அன்புக்குரிய சேசுவே, எங்க…
ஆச்சரியத்திற்குரிய சேசுவே, எங்க..
மிகுந்த வல்லபக் கடவுளாயிருக்கிற சேசுவே, எங்க...
வரப்போகிறபாக்கியங்களுக்குக் காரணராயிருக்கிற சேசுவே, எங்க...
பரம ஆலோசனைகளின் திவ்விய தூதரான சேசுவே, எங்க..
மகா சக்தியுடைத்தான சேசுவே, எங்க...
மகா பொறுமையுள்ள சேசுவே, எங்க..
மகா சிரவணம் பொருந்திய சேசுவே, எங்க... மனத் தாழ்ச்சியையும் மதுர குணத்தையும் கொண்டிருக்கிற சேசுவே, எங்க..
கற்பை நேசிக்கிற சேசுவே, எங்க.. எங்கள்

அன்பராகிய சேசுவே, எங்க.. சமாதான தேவனாகிய சேசுவே, எங்க...
சீவியத்திற்குக் காரணமாயிருக்கிற சேசுவே, எங்க...
சகல புண்ணியங்களுக்கும் மாதிரிகையாயிருக்கிற சேசுவே, எங்க..
ஆத்துமங்களை இரட்சிக்கிறதிலே அதிக ஆர்வமுள்ள சேசுவே,
எங்கள் தேவனாயிருக்கிற சேசுவே, எங்க..
எங்களுக்கு அடைக்கலமாயிருக்கிற சேசுவே, எங்க...
தரித்திரருடைய பிதாவாயிருக்கிற. சேசுவே, எங்க…
விசுவாசிகளுடைய பொக்கிஷமாயிருக்கிற சேசுவே, எங்க...
நல்ல ஆயராயிருக்கிற சேசுவே, எங்க..
உண்மையான பிரகாசமாயிருக்கிற சேசுவே, எங்க...
நித்திய ஞானமாயிருக்கிற சேசுவே, எங்க...
மட்டில்லாத நன்மைத் தன்மையைக் கொண்டிருக்கிற சேசுவே,
எங்கள் சீவியமும் உண்மையும் வழியுமாயிருக்கிற சேசுவே, எங்க..
சம்மனசுகளுடைய சந்தோஷமாயிருக்கிற சேசுவே, எங்க...
பிதாப்பிதாக்களுக்கு இராசாவாகிய சேசுவே, எங்க..
தீர்க்கதரிசிகளுக்கு ஞானம் கொடுக்கிற சேசுவே, எங்க..
அப்போஸ்தலருக்குக் குருவாகிய சேசுவே, எங்க...
சுவிசேஷகருக்குப் போதகரான சேசுவே, எங்க...
வேதசாட்சிகளுக்குப் பலமாயிருக்கிற சேசுவே, எங்க...
ஸ்துதியருடைய பிரகாசமான சேசுவே, எங்க...
விரத்தருடைய துப்புரவான சேசுவே, எங்க...
சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கு முடியான சேசுவே, எங்க...

தயாபரராயிருந்து, - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.
தயாபரராயிருந்து, - எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமீ.
சகல பாவங்களிலிருந்து - எங்களை இரட்சித்தருளும் சுவாமி. தேவரீருடைய கோபத்திலிருந்து, எங்க.. ,
பசாசின் தந்திரங்களிலிருந்து, எங்க...
மோக ஆசையிலிருந்து, எங்க...
நித்திய மரணத்திலிருந்து, எங்க...
தேவரீர் தருகிற தரும் விசாரங்களை அசட்டைபண்ணுகிற துர்க்குணத்திலிருந்து, எங்க..
தேவரீருடைய மனுஷாவதாரத்தின் பரம இரகசியத்தைப் பார்த்து, எங்க ..
தேவரீருடைய பிறப்பைப் பார்த்து, எங்க..
தேவரீருடைய குழந்தைப் பருவத்தைப் பார்த்து, எங்க..
தேவரீருடைய விருத்தசேதனத்தைப் பார்த்து, எங்க..
தேவரீருடைய திவ்விய நடத்தையைப் பார்த்து, எங்க…
தேவரீருடைய பிரயாசத்தையும் பிரயாணங்களையும் பார்த்து, எங்க..
தேவரீருடைய கலக்கத்தையும் இரத்த வேர்வையையும் பார்த்து, எங்க ...
தேவரீருடைய சிலுவையையும் பாடுகளையும் பார்த்து, எங்க...
தேவரீருடைய உபத்திரவங்களையும் நிற்பந்தங்களையும் பார்த்து, எங்க...
தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து, எங்க…
தேவரீருடைய சந்தோஷத்தையும் மகிமையையும் பார்த்து, எங்க..
தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவின் வருகையைப் பார்த்து, எங்க …
நடுத்தீர்க்கிற நாளிலே, - எங்களை இரட்சித்துத்தருளும் சுவாமி.


உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, - எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமீ.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமீ. )
சேசுவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
சேசுவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
முதல்: இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும், துணை: ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவது.
I
*,
பிரார்த்திக்கக்கடவோம்

எங்கள் திவ்விய இரட்சகருமாய் ஆண்டவருமாயிருக்கிற சேசு கிறிஸ்துவே! எங்கள் ஆத்துமத்தையும் சரீரத்தையும் புத்தி மனது நினைவையும் எங்களுக்குண்டான சகலத்தையும் உமக்குக் காணிக்கையாக வைக்கிறோம். நாங்கள் எங்கள் சிந்தனை வாக்குக்கிரியைகளினாலே முழுதும் உம்மைச் நேசிக்கவும், துதிக்கவும், உமது திவ்விய சிநேகத்தின் அக்கினியினால் எங்கள் இருதயம் பற்றி எரியவும் தயை செய்தருளும் சுவாமி, எங்களுக்கு இதுவே போதும். பிதாவோடேயும் இஸ்பிரீத்துசாந் து வோடேயும் சதாகாலஞ் சீவியருமாய் இராச்சிய பரிபாலகருமாயிருக்கிற ஆண்டவரே. ஆமென்.