Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 10 மார்ச், 2019

Litany of St. Antony in Tamil .அர்ச். அந்தோனியார் பிரார்த்தனை

அர்ச். அந்தோனியார் பிரார்த்தனை


சுவாமீ கிருபையாயிரும். - மற்றதும்.
சென்மப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அர்ச். அந்தோனியாரே, எங்க...
அலீஸ் போன் என்கிற பட்டணத்தில் உதித்த ஞான நட்சத்திரமே, எங்க...
உயர்ந்த பாரம்பர்யத்தில் பிறந்தவரே, எங்க... ம்
பக்தி நிறைந்த தாய் தந்தையால் தர்ம ஒழுக்கம் படிப்பிக்கப் பட்டவரே, எங்க..
இளமை தொடங்கிச் சுகிர்த ஞான சீவியத்தை அனுசரித்தவரே, எங்க...
வாலிபப் பிராயமுதல் சந்நியாசம் செய்தவரே, எங்க..
பரலோக நித்திய சீவியத்தைப்பற்றிப் பூலோக சுக வாழ்வெல்லாம் வெறுத்தவரே, எங்க....
சுற்றத்தார் சிநேகிதரின் உறவை விலக்கி விலகி ஏகாந்தத் தியானத்திலிருக்கச் சொந்த
பட்டணத்தையும் விட்டுத் தூரத்திலிருந்த மடத்திற்போய் வசித்தவரே எங்க...
சேசுகிறீஸ்துவைப்பற்றிப் பிராணனைத் தரவேண்டுமென்கிற ஆசையால் அர்ச். ஐந்துகாய
ராஞ்சீஸ்குவின் சபைக்கு உட்பட்டவரே, எங்க...
உலகத்துக்குத் தெரியாதிருக்கவேண்டுமென்கிற தாழ்ச்சி யினாலும் அதிசிரேஷ்ட
முனிவரான அர்ச். அந்தோனியார் பேரிலுள்ள பக்தியாலும் அவருடைய நாமத்தைத் தரித்து
முந்தின உமது சுயபெயரை மாற்றினவரே, எங்க..

வேதசாட்சி முடியை அடைவதற்குச் சத்தியவேதத்தின் சத்துருக்களுடைய தேசத்தில்
பிரசங்கிக்கப்போனவரே, எங்க...
ஏகாந்த மறைவுள்ள ஞான சீவியமாகச் சீவித்தவரே, எங்க.
மாசற்றவராய்ப் பிரகாசித்த சீவிய ஒழுக்கத்தையும் அனுசரித்தவரே, எங்க..
சேசுநாதருக்கும் தேவமாதாவுக்கும் மிகவும் உத்தம பிரியம் தருபவரே, எங்க...
தேவ பாலனை உம்முடைய கரங்களில் கட்டி அணைக்கப் பாக்கியம் பெற்றவரே, எங்க...
ஸ்பெய்ன் தேசத்தின் அலங்காரமான இரத்தினமே, எங்க..
இத்தாலிய தேசத்தின் பிரகாசித்த ஒளியே, எங்க...
பிரான்சு தேசத்தில் அப்போஸ்தலராக வலம் வந்தவரே, எங்க..
இரவும் பகலும் செபத்தியானத்தின்மேல் அதிக விருப் பமாயிருந்தவரே, எங்க...
நெடுநாள் பதுவா என்கிற பட்டணத்தில் சகல புண்ணியங் களினாலும் விளங்கினதினால் அதின் பேரால் சிறப்பிக்கப் பட்டவரே, எங்க...
சுவிசேஷத்தைப் போதித்த எக்காளமே, எங்க... பக்திச் சுவாலகச் சபையின் அலங்காரமே, எங்க...
பரிசுத்தக் கற்பினால் வெண்மையான லீலி என்கிற புஷ்பத்திற்கு இணையானவரே, எங்க...
ஆச்சரியமான பொறுமையால் சகல விரோதங்களையும் செயித்தவரே, எங்க.
அத்தியந்த மன ஒறுத்தலால் விலைமதியாத மாணிக்க மானவரே, எங்க.. )
அத்தியந்த தாழ்ச்சியால் பணிந்து பிறருக்குப் பணிவிடை செய்ய விரும்பினவரே, எங்க...
சிரவணக் கீழ்ப்படிதலால் எல்லோருக்கும் மாதிரிகை யானவரே, எங்க
தயங்குமட்டும் உபவாசம் முதலாய் சகல விதத்திலும் சரீரத்தை ஒறுத்து அருந்தவத்தின்
அதிசயமான கண்ணாடி யாயிருந்தவரே, எங்க...
சத்திய வேத விசுவாசத்தின் தீபமே, எங்க...
சர்வேசுரன் பேரில் உறுதியான நம்பிக்கைக் கொண்டவரே, எங்க ...
தேவசிநேகத்தின் பிரகாசமுள்ள சுவாலையே, எங்க...
ஆத்துமாக்களின் ஈடேற்றத்துக்காக அத்தியந்த சுறுசுறுப்புள்ள பற்றுதலைக் கொண்டவரே, எங்க..
ஒடுக்க வணக்கமுள்ள பக்தி நடத்தையால் பிரசங்கித்தவரே, எங்க ..
பிறர் சிநேகத்தால் சொல்லிலடங்காதபடி உடலை வருத்தி உமது சீவனைச் செலவழித்தவரே, எங்க..
அர்ச்சியசிஷ்டதனத்தின் பாத்திரமே, எங்க... எப்போதும் சிலுவை நெறியில் தவறாமல்
ஒழுகினவரே, எங்க... திருச்சபையின் அசையாத தூணே, எங்க...
அர்ச். பாப்பானவரால் உடன்படிக்கையின் பெட்டகம் எனப்பட்டவரே, எங்க..
வேத வாக்கியங்களின் ஞானப் பொக்கிஷமே, எங்க...
எவராலும் ஆச்சரிய விருப்பத்துடனே கேட்கப்பட்ட உத்தம பிரசங்கியே, எங்க...
எண்ணிறந்த பாவிகளையும் பதிதர்களையும் சத்திய சுகிர்த நெறியில் திருப்பின் மேலான போதகரே, எங்க...
விரோத வர்ம வைராக்கியத்தை நீக்கிச் சமாதானம் உண்டாக்க வரம் பெற்றவரே, எங்க...
துர்க்கந்த மோக தந்திரச் சோதனைகளையும், மற்றச் சகல பாவ துர்க்குணங்களையும்
அழிக்கச் செய்ய உதவியானவரே, எங்க.
மிருகங்களைக்கொண்டு துர்மார்க்கருக்குப் பாவ மயக்கம் தெளிவித்தவரே, எங்க...
அபத்த மதங்களை மறுத்து நிர்மூலமாக்கினதால் பதிதருக்குப் பயங்கரமான சுத்தியல் எனப்பட்டவரே, எங்க...
சாவுக்கு அஞ்சாமல் அநியாய துஷ்ட பிரபுக்களுக்குத் தேவ நீதியைத் தெளிவித்து அச்ச நடுக்கம் வருவித்தவரே, எங்க...
குற்றமில்லாதவர்களுக்காக பரிந்து பேசிக் காத்தவரே, எங்க.. சிறையிலிருந்து அநேகரை
மீட்டுக்கொண்டவரே, எங்க..
பிறர் உடமையை உத்தரிக்கச் செய்வதற்குத் தேவ அனுக்கிரகம் பெற்றவரே, எங்க...
விசுவாசம் இல்லாதவர்களுக்குத் தேவ பயம் உறுத்தினவரே, எங்க...
பசாசுகளுக்குப் பயங்கரமானவரே, எங்க... துன்ப துயரப் படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்க..
எளியவர்களுக்கும் பரதேசிகளுக்கும் உதவி சகாயமானவரே, எங்க ...
வியாதிக்காரர்களுக்கு உத்தம் வைத்தியரே, எங்க... மரித்தவர்களை உயிர்ப்பித்தவரே,
எங்க...
அந்தகருக்குப் பார்வை தந்தவரே, எங்க... செவிடருக்குச் செவிடு நீக்கினவரே, எங்க..
வெட்டவெளியில் உமது பிரசங்கத்தைக் கேட்கும் சனங்களை இடி குமுறல் கல்மாரியோடு
எப்பக்கத்திலும் பெய்த மழையில் நனையாமல் அதிசயமாய்க் காப்பாற்றினவரே, எங்க...
பற்பல அதிசய அற்புதங்களைக் காணச் செய்தவரே, எங்க... காணாமற்போன
பொருட்களைக் காணச் செய்தவரே, எங்க.. பிறர் இருதயத்தில் மறைந்ததை அறிந்தவரே, எங்க...
பரிசுத்தத்தனத்தால் சம்மனசுகளுக்கு இணையானவரே, எங்க ...
பிதாப்பிதாக்களைக் கண்டுபாவித்தவரே, எங்க.. வருங் காரியங்களை முன் அறிவித்த தீர்க்கதரிசியே, எங்க...
அப்போஸ்தலர்களின் சாயலே, எங்க...
அத்தியந்த ஆசையால் வேதசாட்சியே, எங்க...
வேதபாரகரிலும் ஸ்துதியரிலும் ஒருவராக விளங்கினவரே, எங்க...
விரத்த கன்னிமையில் அநேகரை நிலைநிறுத்தின மாறாத விரத்தரே, எங்க..?
சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய மகிமையுள்ள பாக்கியத் திற்குப் பங்காளியானவரே, எங்க...
"உமது மரண காலத்தை ஏற்கனவே அறிந்தறிவித்து அதற்கு உத்தம் ஆயத்தம் செய்தவரே, எங்க...
ஏழு தப சங்கீதங்களைச் செபித்துத் தேவமாதாவைத் துதித்து மன்றாடுகையில் பாக்கியமான மரணத்தை அடைந்தவரே,
மரித்தவுடனே எண்ணிறந்த புதுமைகளினாலே முத்திப்பேறு பெற்ற அர்ச்சியசிஷ்டவராக விளங்கி வணங்கப்பட்டவரே,
உமது திரு நாக்கு அழிவில்லாமையால் சிறந்த வணக்கம் பெற்றவரே, எங்க..
பக்தியுள்ளவர்களுக்குத் தயை நிறைந்த பிதாவே, எங்க...
பஞ்சம் படை நோய் புயல் முதலிய ஆபத்துகளில் ஆதரவும் தஞ்சமுமானவரே, எங்க..
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற - மற்றதும். முதல்: சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு
நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக. துணை: அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்
கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்.
சர்வேசுரா சுவாமீ! உம்முடைய ஸ்துதியரும், முத்திப்பேறு பெற்றவருமாகிய அர்ச்.
அந்தோனியாரைக்கொண்டு உமது திருச் -- சபைக்கு எண்ணிறந்த அற்புத நன்மைகளைச்
செய்தருளினீரே, அவருடைய மன்றாட்டினால் அடியோர்கள் தேவரீரிடத்தில் கிருபை
பெறவும், சகல பொல்லாப்பு துயர ஆபத்துகளிலே நின்று இரட்சிக்கப்படவும், எங்கள்
ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் வேண்டிய உதவி சகாய உபகாரங்களை அடையவும், பாவ
தந்திரங்களையும் விலக்கி உலகம் பசாசு சரீரமென்கிற மூன்று சத்துருக்களையும்
செயித்து நித்திய பேரின்ப ஆனந்தத்தில் வாழப் பாத்திரவான்களாகவும் அனுக்கிரகம்
செய்தருளும் சுவாமி. - ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக