Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 10 மார்ச், 2019

மரிக்கிறவர்களுக்கு பாதுகாப்பான அர்ச். சூசையப்பர்

அர்ச். சூசையப்பர் மரிக்க இருப்பவர்களுக்கு பாதுகாவலராகத் திகழ்கின்றார். மரண சமயத்தில் ஆன்மாக்கள் சேதம் அடையாத படிக்கு அவர்களை காப்பதில் வல்லமை கொண்டுள்ளார். தமது மன்றாட்டால் மரண சமயத்தில் தமது நேசர்களை சாத்தானின் பிடியில் இருந்து தப்புவித்து, சேசுவிடம் கொண்டுவரும் சக்தி படைத்தவர் புனித சூசையப்பர். அதனால்தான் திருச்சபையும்;
' ''சவுக்கியனாய் ஜீவிக்கவும் கடைசியாய் ஜீவியத்தின் பாக்கியமான மரணத்தை அடையவும் விரும்புகிறவன் எவனோ அவன் அர்ச்சிஷ்ட சூசையப்பரின் உதவியைக் கேட்கக் கடவான் என்று '' அவரைப் பார்த்து மன்றாடுகிறது, விசுவாசிகள் அனைவரும் அவரது உதவி சகாயங்களை கேட்கும்படி பணிக்கிறது.
சம்பவம்
அடைக்கலம் ஓர் திறமை மிக்க லாரி டிரைவர். கத்தோலிக்கனாய் இருந்தும் விசு வாசத்தை இழந்து, மனம் போன போக்கில் வாழுபவன். அவனது பெற்றோர்கள் அவனைக் கண்டித்தும் பயனில்லாமல் போயிற்று. அவர்களால் அவனுக்காக கடவுளிடம் ஜெபிக்க மட்டுமே முடிந்த து!
அடைக்லம் விசுவாசமற்றவனாக இருந்தாலும், சிறுவயதிலேயே அவனுக்கு புனித சூசையப்பா பேரில் பக்தி மட்டும் இருந்தது
எனவே தமது சட்டைப் பையில் அவரது சிறு படம் ஒன் ைற மட்டும் எப்போ து ம் வைத்திருப்பான். எப்போதாவது அ ைத எடுத்து, பக்தியுடன் பார்த்துவிட்டு மீண்டும் தமதுசட்டைப் பையில்வைத்துக் கொள்வான்.
ஒருநாள், ஒரு பட்டணத்திற்கருகே லாரி வரும்போது, எதிர்பாராத விதமாக எதிரே இருந்த பெரிய மரத்தில் லாரி மோதி, விபத்து நடந்து விட்டது. அடைக்கலம் தூக்கி யெரியப்பட்டான். உடல் முழுவதும் அடிபட்டு குற்றுயிறாகக் கிடந்தான். ஆயினும், ஆச்சர்யம்! அவன் நினைவிழக்கவில்லை. விபத்து நடந்த இடத்தில் கூடிய மக்கள் அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆயத்தம் செய்யும் போது, அவனது சட்டைபையில் இருந்த புனித சூசையப்பரின் படத்தைக் கண்டு, அவன் ஒர் கத்தோலிக்கனாய் இருக்க வேண்டும் என்று எண்ணி அருகேயிருந்த ஆலய குருவானவரை அழைத்தனர். அவரும் சுய நினைவோடு சாகும் தருவாயில் வேதனை அனுபவித்துக் கொண்டு கிடக்கும் அடைக்கலத்திற்கு அவஸ்தை பூசுதல் கொடுத்து அவனைத் தயாரித்தார். அவனும் அதை தமது வாயசைவின் மூலம் ஏற்றுக் கொண்டான். தமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டதன் அறிகுறியாக அவன் கண்கள் கலங்கின. சிறிது நேரத்தில் அவன் அமைதியாக மரித்தான்!

மரியாயே வாழ்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக