Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 25 ஜூன், 2024

June 25 - அர்ச். மோந்தே விர்ஜினே வில்லியம் (St. Williams)

 

ஜுன் 2️5ம் தேதி

மடாதிபதியான அர்ச். மோந்தே விர்ஜினே வில்லியம்

 

இவர் 1085ம் வருடம் வடமேற்கு இத்தாலியிலுள்ள வெர்செல்லியில்  ஓர் உயர்குடும்பத்தில் பிறந்தார். குழந்தையாயிருக்கும்போதே, பெற்றோர்களை இழந்தார்; மாபெரும் பக்திபற்றுதலுடைய சூழ்நிலையில், இவர் நண்பர்களால் வளர்க்கப்பட்டார்.

                 14வது வயதில், தபசின் ஜீவியத்தின் மீதான பேராவலினால், தன் ஆஸ்திகளையெல்லாம் ஏழைகளுக்குக் கொடுத்தார்; ஸ்பெயின் நாட்டின் காம்போஸ்தெல்லா என்ற அர்ச்.யாகப்பரின் திருயாத்திரை ஸ்தலத்திற்கு திருயாத்திரைச் சென்றார். இத்தாலியிலிருந்து ஸ்பெயின் நாட்டிலிருந்த இந்த திருயாத்திரை ஸ்தலத்திற்கு செல்ல வேண்டிய மாபெரும் பயண தூரத்தைக் கால் நடையாகவே  தபசாக காலணியில்லாமல் நடந்து சென்றதில் திருப்தியடையாதவராக, இவர், தன் சரீரத்தை இன்னும் அதிகமாக ஒறுத்து மாபெரும் தபசு செய்யும்படி, இரும்பு வடங்களால் தன் சரீரத்தைக் கட்டிக் கொண்டார்.

                திருயாத்திரை முடிந்து, இத்தாலிக்குத் திரும்பியபோது,  தெற்கு இத்தாலியிலுள்ள ஒரு மலையின் மேல் ஏகாந்த ஜீவியம் ஜீவிக்கிற ஒரு தபோதனருடைய ஜீவியம் ஜீவிக்க வேண்டும் என்று, ஒரு பரலோக வெளிப்படுத்துதல் மூலம் இவருக்கு வெளிப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக, இவர், நேப்பிள்ஸ் நாட்டில்  தங்கினார்; ஒரு வனாந்தர பாலைவனமாயிருந்த ஒரு மலையைத் தேர்ந்தெடுத்தார்; மிகக் கடின தபசு ஒறுத்தல்களுடன் கூட நித்திய கால தியான ஜீவியம் ஜீவிக்கலானார்.

 இவர் தன்னைத் தேடி வந்த திருயாத்ரீகர்கள் கூட்டத்தினால், தன் தபசினுடையவும் தியானத்தினுடையவும் ஜீவியத்திற்கு இடையூறு ஏற்படுகிறதை உணர்ந்தவராக, தனது  இடத்தை, நோலாவிற்கும் பெனவெந்தோ  என்ற இடங்களுக்கு இடையேயுள்ள மோந்தே விர்ஜினே என்ற இடத்திற்கு மாற்றிக் கொண்டார். ஆனால், இவருடைய கீர்த்தியினால், கவர்ந்திழுக்கப்பட்ட இரண்டு குருக்கள் அருகாமையிலிருந்து வந்து, பக்திபற்றுதலுள்ள மனிதர்களை இவர் தன்னுடன் கூட ஆழ்ந்த தியான ஜீவியம் ஜீவிக்க அனுமதிக்கும்படி விண்ணப்பித்தனர். இவ்விதமாக,1119ம் வருடம்,  மோ்நதே விர்ஜினே என்ற அர்ச்.ஆசீர்வாதப்பர் துறவற  சபையின் ஒரு கிளைச் சபை ஸ்தாபிக்கப் படுவதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது!

 நேப்பிள்ஸ் நாட்டின் முதலாம் ரோஜர் அரசர், இவருடைய ஆதரவாளராக இருந்து, இவருக்கு அநேக துறவற மடங்களை ஆண்களுக்கும் பெண்களுக்குமாகக் கட்டிக் கொடுத்தார்;  சாலர்னோ என்ற இடத்தில் இவருக்கென்று ஒரு துறவறமடத்தைக் கட்டிக் கொடுத்தார்;வில்லியம், எப்போதும் தன்னருகில் தங்கியிருக்கும்படியாக இந்த மடத்தை அரசர் இவருக்குக் கட்டிக் கொடுத்தார். 1142ம் வருடம் ஜுன் 25ம் தேதி, அவெல்லினோ  பிராந்தியத்தில் நுஸ்கோவினருகிலுள்ள கொலேட்டோவிலிருந்த மோந்தே விர்ஜினே துறவற மடத்தின் கிளை மடத்தில், அர்ச்.வில்லியம் , பாக்கியமாய் மரித்தார்.  ஒரு பரலோக வெளிப்படுத்துதலின் மூலம் இவர் தன் மரணத்தை முன்கூட்டியே பார்த்தார், என்று கத்தோலிக்க பாரம்பரியம் தெரிவி்க்கிறது.

 மோந்தே விர்ஜினே  என்ற மலை,பண்டைகாலத்தில் அஞ்ஞான உரோமை கவிஞனான விர்ஜிலுக்கு மகிமையாக  பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், அர்ச். வில்லியம் இங்கு மகா பரிசுத்த தேவமாதாவிற்கு தோத்திர மகிமையாக ஒரு தேவாலயத்தைக் கட்டியபிறகு, இந்த மலை மகா பரிசுத்த தேவமாதாவைக் குறித்தே , மோந்தே விர்ஜினே என்று  அழைக்கப்படுகிறது.

அர்ச்.வில்லியமே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக