Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 22 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 22-ம் தேதி*



*St. Vincent, M.*
*அர்ச். வின்ஸென்ட்*
*வேதசாட்சி - (கி.பி. 304).*
இவர் ஸ்பெயின் தேசத்தில் பிறந்து கல்வியில் தேர்ச்சியடைந்தபின்   6-ம் பட்டம் பெற்று, ஆயர் இட்ட உத்தரவினால் பிரசங்கம் பல செய்துவந்தார். வேதக் கலாபனையில் இவரும், இவருடைய ஆயரும் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நடுவனுடைய உத்தரவின்படி, இருவரும் குரூரமாய் உபாதிக்கப்பட்டும், இவர்கள் வேதத்தை மறுதலியாததினால், ஆயர் நாடுகடத்தப்பட்டும், வின்ஸென்ட் சிறையிலும் அடைக்கப்பட்டார். வின்ஸென்டை கொடூரமாய் உபாதித்தபின் கொலைஞர் அவரைக் கீழே கிடத்தி இவர் கை, கால்களைக் கட்டியிருந்த கயிறுகளில் கம்பிகளை மாட்டி இழுத்தபோது, இவர் கைகால் மூட்டுகள் பிசகி, வெகுவாக வேதனைப்பட்டார். பிறகு அவர்கள் இவரை கொடூரமாய் அடித்ததினால், உடல் முழுவதும் காயமாகி, இரத்தம் வெள்ளமாகத் தரையில் ஓடியது.  மேலும் இவரை ஒரு இரும்பு கட்டிலில் கிடத்தி அடியில் நெருப்பு மூட்டியபோது, இவர் சிறிதும் அஞ்சாமல் வேதத்தில் தைரியமாயிருப்பதை அதிகாரி கண்டு, இவரை அதிகக் கடுமையாய் உபாதிக்க நினைத்து இவருடைய காயங்கள் ஆறும் வரையில் இவரைச் சிறையில் அடைத்துவைத்தான். அங்கு காணப்பட்ட அதிசயப் பிரகாசத்தைக் கண்ட காவல் சேவகன் உடனே மனந்திரும்பினான். கிறீஸ்தவர்கள் இவரைச் சந்தித்து இவருடைய இரத்தத்தை வஸ்திரங்களில் நனைத்து பக்தியோடு கொண்டுபோனார்கள். அர்ச். வின்ஸென்ட் சிறையில் உயிர் விட்டு, வேதசாட்சியாய் மரித்து, மோட்சம் போய் சேர்ந்தார்.            

*யோசனை*

நமக்கு வரும் துன்ப துயரத்தால் மனம் கலங்காமல் ஜெபத்தால் தேவ உதவியைத் தேடுவோமானால், அவை நமக்கு நித்திய சம்பாவனை கிடைக்க வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக