*St. Simeon Stylites, C.*
*தூணில் நின்று தவம் புரிந்த*
*அர்ச். சிமெயோன் - துதியர்.*
இவர் சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துவந்தார். தமது 13-ம் வயதில், இவர் நமது கர்த்தரின் மலைப் பிரசங்கத்தைக் கேட்டு, அவைகளின்படி நடக்க
விருப்பம்கொண்டு, இடைவிடாமல் ஜெபமும் தியானமும் செய்து கண்ணீர் சிந்தி அருந் தவம் புரியத் தொடங்கினார். இதில் திருப்திகொள்ளாமல் ஒரு மலையின் மேல் ஒதுங்கி கடின தவம் செய்துவந்தார். இவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஏராளமான ஜனங்கள் அவ்விடம் சென்று இவருடையப் புண்ணியங்களையும் புதுமைகளையும் கண்டு அதிசயப்பட்டார்கள். இவர் மேலும் கடின தவம் புரிய தீர்மானித்து 60 அடி உயரமுள்ள தூண் ஒன்றின்மேல் ஏறித் தவம் புரிந்துவந்தார். ஆட்டுத் தோலை ஆடையாக உடுத்தி, கடுமையாக ஒருசந்தி இருப்பார். ஒரு நாளைக்கு அநேகத் தடவை முழந்தாற்படியிட்டு ஆண்டவரை ஆராதிப்பார். ஒவ்வொரு நாளும் இருமுறை தூணைச் சுற்றிக் கூடியிருக்கும் திரளான ஜனங்களுக்குப் பிரசங்கம் செய்வார். இவருடையப் புண்ணியச் செயல்களைப் பரிசோதிக்கும் எண்ணத்துடன் அருகாமையில் இருந்த மேற்றிராணிமார் சிலர், இவரைத் தூணிலிருந்து இறங்கி வரும்படி கட்டளையிட்டார்கள். உடனே சிமெயோன் இறங்க முயற்சிப்பதை அவர்கள் கண்டு, இவர் தேவசித்தப் பிரகாரம் நடக்கிறாரென்று அறிந்து, இவரைத் தூணிலேயே இருக்கும்படி சொன்னார்கள். இவர் செய்துவந்த கடின தபசையும் பல புதுமைகளையும் கண்ட அரசர்கள் இவரைச் சந்தித்து, இவர் ஆலோசனையைக் கேட்டுவந்தனர். இவர் ஒருநாள் தூணில் அசைவற்று இருந்ததைக் கண்ட சிலர், அதன்மேல் ஏறிப் பார்த்தபோது இவர் மரித்திருப்பதைக் கண்டார்கள். அர்ச். சிமெயோன் தமது 69-ம் வயதில் இவ்வாறு மரித்து வெகு ஆடம்பரமாக அடக்கம் செய்யப்பட்டார்.

*யோசனை*
நாம் கடினத் தவம் செய்யாவிடினும் நமது ஐம்புலன்களையும், உணர்ச்சிகளையும் அடக்கி ஒறுக்கப் பழகுவோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக