Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 22 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 18-ம் தேதி*



*St. Peter’s Chair at Rome*
*உரோமையில் அர்ச். இராயப்பருடைய* 
*பத்திராசனத் திருநாள்.*

நமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் அர்ச். இராயப்பரை திருச்சபைக்குத் தலைவராக ஸ்தாபித்தார். ஆகையால் அப்போஸ்தலர்களும், விசுவாசிகளும அர்ச். இராயப்பரை சேசுநாதருக்குப் பதிலாகப் பாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்துவந்தார்கள். அவர் தமது சிம்மாசனத்தை அந்தியோக்கியா நகரில் ஸ்தாபித்து, அங்கிருந்து திருச்சபையை நடத்திக்கொண்டு வந்தார். ஆனால் அக்காலத்தில் உலகத்தின் முக்கிய பாகத்தை அரசாண்ட உரோமைச் சக்கரவர்த்திகள் உரோமையைத் தங்களுக்குத் தலைநகரமாக ஸ்தாபித்ததினாலும், உலகத்தின் நான்கு திசைகளிலுமிருந்து சகல ஜாதி ஜனங்கள் அவ்விடத்திற்கு அடிக்கடி வந்து போயிருந்ததினாலும், அவ்விடத்தில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்தால் திருச்சபைக்கு அதிக நன்மை உண்டாகும் என்று                                                                                                                                                                            அர்ச். இராயப்பர் கருதி, உரோமையில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்தார். அவர் அவ்விடத்தில் அநேகரை மனந்திருப்பி, அர்ச். சின்னப்பருடன் அவ்விடத்தில் வேதசாட்சியாக மரணமடைந்தார். அது முதற்கொண்டு சகல பாப்பரசர்களும்                                 அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்து திருச்சபையை நடத்தி வருகிறார்கள்.           

*யோசனை*

திருச்சபைப் போதகர்களாகிய ஆயர், குருக்கள் இவர்களை நாம் மதித்து இவர்களுக்குக் கீழ்படியவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக