Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 22 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 19-ம் தேதி*


*St. Canutus, K.M.*
*அர்ச். கனூத்துஸ்*
*இராஜா, வேதசாட்சி - (கி.பி. 1086).*
இவர் டென்மார்க் தேசத்தின் அரசனாகி, நற்குணசாலியும் தேவபக்தி உள்ளவருமாயிருந்தார்.  இவருடைய சகோதரர் சிம்மாசனம் ஏறி அரசு புரிந்த இரண்டாம் வருடம் மரித்தபடியால், கனூத்துஸ் என்பவர் இராஜாவாகத் தெரிந்துகொள்ளப்பட்டார். இவர் காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தார்மேல் படையெடுத்து அவர்களை ஜெயித்து, சத்திய வேதக் குருக்களை அவ்விடம் அனுப்பி அவர்களை கிறீஸ்தவர்களாக்கினார். தன் தேசத்தில் நிலவிய அநேக அலங்கோலங்களைத் திருத்தியமைத்து, மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றி, எங்கும் சமாதானமும், திருப்தியும் உண்டாகும்படி செய்தார். மேலும் அநேக தேவாலயங்களைக் கட்டிவைத்து, குருக்களுடைய தேவைகளுக்கு, மக்கள் வேண்டிய உதவி புரியும்படி நாட்டில் சட்டம் இயற்றினார். கடைசியாய் சகலமும் ஆண்டவரால் உண்டாகிறதென்று தெளிவாய் அறிந்து தமது இராஜ முடியை பாடுபட்ட சுரூபத்தின் பாதத்தில் காணிக்கையாக சமர்ப்பித்தார். இந்த நல்ல அரசர், வேதம் பரவுவதற்காக பல சட்டதிட்டங்களைக் கொண்டுவந்தார். இதனால் இவர்மீது கோபம்கொண்ட சில துஷ்டர், ஒருநாள் இவர் ஜெபித்துக்கொண்டிருக்கும் போது இவரை ஈட்டியால் குத்திக் கொன்றார்கள். இவருடைய மரணத்துக்குப்பின், இவரை ஆண்டவர் அநேக புதுமைகளால் மகிமைப்படுத்தி, இவரைக் கொலை செய்தவர்களைப் பலவாறான துன்பங்களால் தண்டித்தார்.            

*யோசனை*


தேவ காரியங்களுக்கு வேண்டிய உதவி செய்யப் பின்வாங்காது இருப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக