Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 18 டிசம்பர், 2018

10-ம் சங்கீதம் (10th Psalms)

10-ம் சங்கீதம்

தருமவாளன் துன்பங்களில் சர்வேசுரனிடத்தில் நம்பிக்கை வைப்பதின் பேரில்
பாடியிருக்கின்றது. 

1. நான் ஆண்டவர்பேரில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; பின்னே ஏன் என் ஆத்துமத்தை நோக்கி அடைக்கலான் குருவி போல மலைக்கு அகன்று போ என்கிறீர்கள்?*
2. இதோ பாவிகள் வில்லை வளைத்துச் செம்மையான இருதயத்தார் பேரில் அந்தகாரத்தில் எய்யத் தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
3. ஏனெனில் நீர் ஏற்படுத்தினவைகளை அவர்கள் அழித்துப்போட்டார்கள்; ஆனால் நீதிமார்க்கன் என்ன செய்தான்? 
4. ஆண்டவர் தமது பரிசுத்த ஆலயத்திலிருக்கிறார்; ஆண்டவர் தமது ஆசனமாகிய பரலோகத்திலிருக்கிறார். 
5. அவருடைய நேத்திரங்கள் தரித்திரவானை நோக்குகின்றன; அவருடைய இமைகள் மறுப்புத்திரரைச் சோதிக்கின்றன.
6. ஆண்டவர் நீதிமானையும் துர்மார்க்கனையுஞ் சோதிக்கிறார்; ஆகையால் தோஷத்தை விரும்புகிறவன் தன் ஆத்துமத்தைப் பகைக்கிறான்.
7. பாவிகள்பேரில் கண்ணிகளை வருவிப்பார்; அக்கினியும் கந்தகமும் புயல்களின் கொந்தளிப்பும் அவர்கள் பாத்திரத்தின் பங்காம்.*
8. ஆண்டவர் நீதியுள்ளவர், நீதிகளின் மேல் பிரியப்பட்டிருக்கிறார்; அவருடைய முகம் நியாயமானதைக் கிருபாகடாட்சித்துப் பார்த்தது.

9-ம் சங்கீதம் (9th Psalms)

9-ம் சங்கீதம்
கிறீஸ்துநாதர் திருச்சபையின் சத்துருக்களை
அடக்கி அதைப் பாதுகாப்பதின் பேரில் பாடியிருக்கின்றது

1. ஆண்டவரே, என் முழு இருதயத்தோடு நான் உம்மைத் துதிப்பேன்; உமது அதிசயங்களையெல்லாம் விவரித்துக் கூறுவேன்.
 2. நான் உம்மில் மகிழ்ந்து களிகூர்வேன்; மகா உந்நதமான தேவரீரே, உமது திருநாமத்தைக் குறித்து நான் கீர்த்தனம் பண்ணுவேன். 
3. என் சத்துரு பின்னாகத் திரும்பும்படி செய்தீர்; அவர்கள் உமது சமுகத்தில் பலமற்று அழிந்து போவார்கள்.
4. ஏனெனில் தேவரீர் என் நியாயத்தையும் வழக்கையும் தாபரித்தீர். நீதியைத் தீர்க்கிற நியாயாதிபதியே, சிங்காசனத்தில் எழுந்தருளினீர்.
5. தேவரீர் உலகத்தாரைக் கடிந்து கொண்டீர்; துர்மார்க்கன் அழிந்து போனான்; நீர் அவர்களுடைய நாமம் என்றென்றைக்கும் சதாகாலமும் இல்லாதபடி அழித்துப் போட்டீர்.
6. சத்துருக்களுடைய பட்டயங்கள் என்றென்றைக்கும் பலமற்றுப்போயின; அவர்கள் பட்டணங்களையும் நிர்மூலமாக்கினீர். அவர்கள் கீர்த்தி அமளியோடு அழிந்துபோயிற்று.
7, ஆண்டவரோ என்றைக்கும் இருக்கிறார்; தமது சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார். 
8. அவர் பூச்சக்கரத்திற்குச் சரி நியாயந்தீர்த்து, பிரஜைகளுக்கு நீதியோடு தீர்ப்பு செய்வார்.
 9. சிறுமைப்பட்டவனுக்கு ஆண்டவரே அடைக்கலமானார்; துன்பத்தின் தகுந்த காலத்தில் அவரே (அவனுக்குத்) தஞ்சமானவர்.
10. உமது திரு நாமத்தை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைக்கக் கடவார்கள். ஏனென்றால், ஆண்டவரே உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடு கிறதில்லை .
11. சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணி அவருடைய வழிகளைச் ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள். 
12. அவர்கள் சிந்தின இரத்தத்தைக் கணக்குக் கேட்க வேண்டுமென்று அவர் ஞாபகப்படுத்திக்கொண்டார்; எளியவர்களின் அபய சப்தத்தை அவர் மறந்ததில்லை . 
13. ஆண்டவரே, என்பேரில் இரக்கமாயிரும்; என் சத்துருக்களாலே எனக்கு வந்த தாழ்வைப் பாரும்.
14. நான் உமது துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விபரிக்கும்படி மரண வாசல்களில் நின்று நீர் என்னைத் தூக்கிவிடுகிறீர்.
15. உமது இரட்சிப்பில் நான் அகமகிழ்வேன்; ஜனங்கள் தாங்கள் வெட்டின குழிகளிலேயே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த கண்ணியிலே அவர்கள் கால் அகப்பட்டுக்கொண்டது.
 16. ஆண்டவர் தீர்வையிடுகிறாரென்று அறியப்பட்டும் பாவிதன்கைகளின் செய்கைகளில் பிடிபட்டிருக்கிறான். 
17. பாவிகளும், சுவாமியை மறக்கிற சகல ஜனங்களும் நரகத்தில் தள்ளப்படக் கடவார்கள்.* 
18. ஏனெனில் எளியவன் எப்போதைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப் பட்டவர்களுடைய பொறுமை கடைசியில் அழிவதில்லை .
19. ஆண்டவரே, எழுந்தருளும்; மனிதன் பலங்கொள்ளாதபடியிருக்கட்டும்; ஜனங்கள் உமது சமுகத்தில் நியாயம் தீர்க்கப்படட்டும். 
20. ஆண்டவரே, ஜாதிகள் தாங்கள் நரர்களென்று அறியும்படிக்கு அவர்கள் மேல் அதிகாரியை ஏற்படுத்தும்.*
* கிறீஸ்தவ அரசர்களை 
21. ஆண்டவரே, ஏன் தூர அகன்று போனீர்? துன்பங்களிலும் என் அவசரங்களிலும் ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்?
22. துன்மார்க்கன் கர்வங்கொள்கையில் தரித்திரன் நெருப்பாய் எரியப் படுகிறான்; அவர்கள் பண்ணுகிற சதி ஆலோசனைகளிலே அவர்களே பிடிபட்டு இருக்கின்றார்கள்.
23. ஏனென்றால் பாவி தன் ஆத்துமம் இச்சித்தவைகளில் புகழ்பெற்று இருக்கின்றான்; அநியாயமுள்ள மனிதன் வாழ்த்தப்பட்டிருக்கிறான். 
24. பாவி ஆண்டவருக்குக் கோபமூட்டினான்; அவன் மூர்க்கத்தனம் மிஞ்சிப் போனதால் அவரைத் தேடமாட்டான்.
25. அவன் தெய்வத்தைச் சிந்திக்கிறதில்லை; எக்காலத்திலும் அவனுடைய வழிகள் அசுத்தமானவைகளே; உம்முடைய நியாயத் தீர்ப்புகள் அவன் பார்வைக்கு அகன்று இருக்கின்றன; அவன் தன் எதிரிகள் எல்லோரையுங் கொடுமையாய் ஆள்வான்.
26. ஏனெனில் தலைமுறை தலைமுறையாய்த் தான் அசைக்கப்படுவதில்லை யென்றும், தனக்குப் பொல்லாப்பு வருவதில்லையென்றும் அவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டான்.
27. அவன் வாய் சாபத்தினாலும், கொடுமையினாலும், கபடத்தினாலும் நிறைந்திருக்கின்றது; அவன் நாவின்கீழ் தீவினையும் கஸ்தியும் இருக்கின்றன.
28. மாசற்றவனைக் கொல்லும் பொருட்டு மறைவிடங்களில் ஐசுவரியவான் களோடு கண்ணி வைத்துகொண்டிருக்கிறான்.
29. ஏ  ைழ யி ன்  ேபரி லே ேய அ வ ன் க ண் க ள் ; த ன்  ெக பி யி லி ரு க் கி ற சி ங் க த் ைத ப் போல அவன் மறைவில் பதிவிருக்கிறான்.
30. தன் கண்ணியில் அவனை மடக்கி விழத்தாட்டி, ஏழைகளின்பேரில் அதிகாரங்கொண்டபின் அவர்கள்மேல் குனிந்து விழுவான்.
31. ஏனெனில் அவன் இருதயத்தில் அவன் சொல்லிக்கொண்டதாவது: சுவாமி மறந்துவிட்டார்; முடிவுபரியந்தம் பாராதபடி தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
32. தேவனாகிய ஆண்டவரே, எழுந்தருளும்; உமது கரம் உயர்த்தப் படட்டும்; எளியவர்களை மறந்துவிடாதேயும்.
33. என்னத்திற்காக துர்மார்க்கன் கடவுளுக்குக் கோபமூட்டினான்? ஏனெனில், அவன் தன் இருதயத்தில் அவர் இதைச் சட்டை பண்ணமாட்டாரென்று சொல்லிக்கொண்டான்.
34. தேவரீர் இதைப் பார்க்கிறீர்; தேவரீர் உமது கரங்களில் அவர்களை மடக்கும்படி அவன் தீவினையையுங் கஸ்தியையுங் கண்டு யோசிக்கிறீர்; ஏழைக்கு நீர்தான் அடைக்கலம்; திக்கற்றவனுக்கு நீர்தான் சகாயம் பண்ணுவீர். 
35. பாவியினுடைய கையையுங் கெட்டவனுடைய கையையும் முறியும்; அவன் பாவங்கள் தேடப்படும், அகப்படாது.*
36. ஆண்டவர் நித்திய காலத்திலும் ஆளுவார்; ஆம். சதா நித்திய காலத்திலும் ஆளுவார்; அக்கியானிகளே நீங்கள் அவர் பூமிக்கப்பால் நின்று கெடுவீர்கள்.
37. பூமியின் பேரில் மனிதன் தன்னைப் புகழ்ந்து கொள்ள நினையாத படிக்கும், யாருமற்றவனுக்கும், துன்பப்படுகிறவனுக்கும் நீதி செலுத்தும்படிக்கும் ஆண்டவர் எளியவர்களுடைய ஆசையைக் கேட்டருளினார்; உமது செவி அவர்கள் இருதயம் இச்சித்தவைகளைக் கேட்டருளினது.


8-ம் சங்கீதம் (8th Psalms)

8-ம் சங்கீதம்

சர்வேசுரன் தமது சிருஷ்டிப்பில் விசேஷமாய் மனிதனைச் செய்ததில் இன்னமும் அதிகமாய் அவரே மனுஷனானதில் எம்மாத்திரம் ஆச்சரியமுள்ளவராயிருக்கிறார் என்பதின்பேரிற் பாடியிருக்கின்றது.

1. எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூவுலகெங்கும் எம்மாத்திரம் ஆச்சரியத்துக்குரியதாயிருக்கின்றது! ஏனெனில் உம்முடைய மகத்துவம் பரமண்டலங்களுக்கு மேலே உயர்த்தப்பட்டிருக்கின்றது.
2. பகைவனையும், பழிக்காரனையும் அழிக்கத்தக்கதாகத் தேவரீருடைய சத்துருக்களின் நிமித்தம் குழந்தைகளுடைய வாயிலும் பாலர்களுடைய வாயிலும் நின்று உத்தமப் புகழுண்டாகப் பண்ணினீர்.
3. ஏனெனில், தேவரீருடைய கரங்களின் வேலைகளாகிய உமது வான மண்டலங்களையும் நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்குமிடத்தில்,
4. மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் மனுஷப் புத்திரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
 5. நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றே தாழ்த்தி மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடி சூட்டினீர்.
 6. உமது கரங்களின் செய்கைகளின்மேல் அவனுக்கு அதிகாரங் கொடுத்தருளினீர்.
7-8. சகல ஆடுகள், காட்டு மிருகங்கள், ஆகாயத்துப் பறவைகள், சமுத்திரத்தின் விசாலத்தில் உலாவும் மச்சங்கள் முதலிய சகல ஜெந்துக்களையும் அவனுடைய கால்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
9. எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, பூவுலகெங்கும் உம்முடைய திரு நாமம் எம்மாத்திரம் ஆச்சரியத்துக்குரியதாய் இருக்கிறது!

சனி, 15 டிசம்பர், 2018

ஏழாம் சங்கீதம் (7th Psalms)

ஏழாம் சங்கீதம் 

அநியாயமாய் எதிர்க்கும் சத்துருக்களுக்கு விரோதமாய்த் தேவன் சகாயத்தைக் கேட்டு மன்றாடுவதின் பேரில் பாடியிருக்கின்றது.

1. என்னை விடுவித்துக் காக்கிறவன் இல்லாமையால் சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமத்தைப் பிடிக்காதபடிக்கு.
2. என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மை நம்பியிருக்கிறேனே; என்னைத் துன்பப்படுத்துகிற எல்லோரிடத்திலும் நின்று என்னைப் பாதுகாத்து இரட்சியும்.
3. என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என்கைகளில் தோஷமிருக்கிறதும்,*
4. தின்மை செய்வோரைப் பழிவாங்கினதும் உண்டாயிருந்தால், உள்ள படியே என் சத்துருக்கள் முன்பாக நான் வெறுமையாய்ப் போவேனாகவும்.
5. பகைஞனும் என் ஆத்துமத்தைத் தொடர்ந்து பிடித்து என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து என் மகிமையைத்தூசியோடு தூசியாய் ஆக்கக் கடவான்.
6. ஆண்டவரே, நீர் உமது கோபத்தில் எழுந்திருந்து என் சத்துருக்களுடைய எல்லைகளில் உமது வல்லபத்தைக் காட்டும், என் சர்வேசுரனாகிய கர்த்தாவே, தேவரீர் நிரூபித்த கற்பனையின் நிமித்தம் எழுந்தருளும்.
7. ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும்; அதற்காகவே உன்னதத்தில் எழுந்தருளும்.
8. ஜனங்களுக்கு ஆண்டவர் நியாயந்தீர்க்கிறார்; ஆண்டவரே, என் நீதியின்படியும், என் மாசற்றதனத்தின்படியும் எனக்கு நியாயந் தீர்த்தருளும்.
9. இருதயங்களையும், உள்ளிந்திரியங்களையும் சோதித்து அறிகிறவர் சர்வேசுரன்; துர்மார்க்கருடைய தீங்கொழியும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீர்.
10. செவ்வையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் எனக்கு ஞாயமான நம்பிக்கையுண்டு.
11. சர்வேசுரன் நீதியுள்ள நியாயாதிபதியும், வல்லவரும் பொறுமையுள்ள வருமாயிருக்கிறார்; தினந்தோறுங் கோபங்கொள்ளுவாரா?
12. நீங்கள் மனந்திரும்பாதேபோனால் அவர் தமது பட்டயத்தைக் கருக் காக்குவார்; வில்லையும் நாணேற்றி அதை ஆயத்தப்படுத்தினார்.
13. அதற்காக மரண ஆயுதங்களை முஸ்திப்பு செய்து தம்முடைய அம்பு களை அக்கினி அம்புகளாக்கினார்.
14. இதோ அவன் அக்கிரமத்தை விரும்பித் தீயக் கருத்தைக் கர்ப்பங்கொண்டு பாவத்தைப் பெற்றான்.
15. குழியை வெட்டி அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியிலேதானே விழுந்தான்.
16. அவன் நினைத்த தின்மை அவன் தலையிலேயே விழும்; அதனுடைய அக்கிரமம் அவன் உச்சந்தலையில் இறங்கும்.
17. நான் ஆண்டவருக்கு நீதியின்படி துதி செலுத்துவேன்; உன்னதமான ஆண்டவருடைய திருநாமத்தைக் கொண்டாடிப்பாடுவேன்.

ஆறாம் சங்கீதம் (6th Psalms)

ஆறாம் சங்கீதம் 

வியாதியஸ்தன் வைத்தியனை மன்றாடுகிறது போல் பாவத்தில் மெலிந்து கலங்கின ஆத்துமமானது சர்வேசுரனைப் பிரார்த்தித்து, அவருடைய சந்நிதியிலே அழுது பிரலாபிக்கிறதைக் குறித்தும், ஆண்டவர் அந்தப் பிரலாபத்தைக் கேட்பதைக் குறித்தும் பாடியிருக்கின்றது.

1. சுவாமி, தேவரீர் கோபமாயிருக்கும்போது என்னைத் தண்டியாதேயும்; உமது கோபாக்கினிவேளையில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும், நான் வெகு பலவீனனாயிருப்பதால் என்மேல் இரக்கமாயிரும்.
2. என்னுடைய எலும்புகள் திகிலிட்டிருப்பதால் எனக்கு ஆரோக்கியங் கொடுத்தருளும்.
3. என் ஆத்துமமோ வெகுவாய்க் கலங்கியிருக்கிறது; ஆனால் சுவாமி, நீர் எந்த மட்டும் ( எனக்கு உதவி செய்யாமலிருப்பீர்?)
4. சுவாமி, தேவரீர் எனது முகமாய்த் திரும்பி என் ஆத்துமத்தை ஈடேற்றி உமது கிருபையைக் குறித்து என்னை இரட்சித்தருளும்.
5. ஏனெனில் மரண அந்தஸ்தில் உம்மை யாரும் நினைப்பாரில்லை; நரகத்தில் உம்மை துதிப்பவருமில்லை!
6. அகோர துக்கத்தால் பிரலாபப்பட்டு மிகவும் மெலிந்தேன்; இராத்திரி தோறும் என் கண்ணீரால் என் கட்டிலையும் என் படுக்கையையும் நனைத்துக் கொண்டு வருவேன். என் கண் கலங்கிப்போயிற்று. என் சகல சத்துருக்கள் நடுவில் விருத்தாப்பியன் போலானேன்!
7. ஆகையினால் அக்கிரமங்களைச் செய்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள். ஏனெனில் தேவன் என் மன்றாட்டைக் கேட்டருளினார்.
8. ஆண்டவர் என் வேண்டுதலைக் கேட்டு எனது விண்ணப்பத்தைக் கையேற்றுக்கொண்டார்.

9. ஆகையால் என் சத்துருக்கள் எல்லோரும் நாணி மிகவுங் கலங்கக் கடவார்கள்; அதி சீக்கிரத்தில் அவர்கள் வெட்கமடைந்து பின்னிட்டுப் போகக் கடவார்கள்.


To Read More - Please Click Here...

ஐந்தாம் சங்கீதம் (5th Psalms)

ஐந்தாம் சங்கீதம் 

பொல்லாதவர்களின் பாவக்கேட்டில் நின்று காப்பாற்றப்பட வேண்டும்
என்பதின் பேரில் பாடியிருக்கின்றது.

1. ஆண்டவரே என் விண்ணப்பத்திற்கு செவிதந்தருளும்; என் அபய சப்தத்தின் பேரில் கவனங்கொள்ளும்.
2. என் இராஜாவே, என் கடவுளே, என் வேண்டுதலின் சப்தத்தைக் கேட்டருளும்.
3. ஏனெனில் நான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வேன்; (நீரோ வெனில்,) கர்த்தாவே காலை நேரத்தில் என் குரல் சத்தத்தைக் கேட்டருளுவீர்.
4. விடியற்காலையில் உமது சன்னிதானத்தில் நிற்பேன் (அப்போது) அக்கிரமத்தில் நீர் பிரியப்படுபவரல்ல என்று தியானிப்பேன்.
5. துர்மார்க்கனும் உமது அருகிலிருக்கமாட்டான்; அநீதனும் உமது நேத்திரங்களுக்கு முன் நிற்கமாட்டான்.
6. அக்கிரமசாலி பரிச்சேதம் உம்முடன் வாசஞ் செய்யான்; தீயோர்கள் உம்முடைய கண் பார்வைக்கு முன்பாக நிலைகொள்ளார்கள்!
7. அக்கிரமத்தைச் செய்பவன் எவனோ, அவனைப் பகைப்பீர். பொய்யை பேசுபவன் எவனோ! அவனை நாசப்படுத்துவீர். கொலைபாதகனையும் மோசக்காரனையும் அருவருப்பார் தேவன்.
8. ஆண்டவரே, என்னை உமது நீதி நெறியில் நடப்பியும்; என் சத்துருக் களின் நிமித்தம் உமது பார்வையில் என் வழியைச் செவ்வைப்படுத்தும்.
9. ஏனெனில் அவர்கள் நாவில் உண்மையில்லை; அவர்கள் உள்ளம் வஞ்சனையுள்ளது.
10. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக் குழி; தங்கள் நாவைக் கொண்டு கட்டமாய் பேசினதினால், அவர்களுக்கு தீர்வையிடும். அவர்கள் எண்ணங்கள் வீணாகக் கடவன்! அவர்கள் கட்டிக்கொண்ட கணக்கிலடங்கா அக்கிரமங்களை பற்றி அவர்களை தள்ளிவிடும். ஏனெனில், கர்த்தாவே, அவர்கள் தேவரீருக்குக் கோபமூட்டினார்கள்.
11. (ஆனால்) உம்மை நம்பினவர்கள் அனைவரும் மகிழ்ந்து, சதாகாலமும் களிகூர்வார்கள். தேவரீர் அவர்களில் வாசம்பண்ணுவீர். உமது நாமத்தைச் சிநேகிக்கிறவர்கள் யாவரும் உம்மில் அகமகிழ்வார்கள்.
12. ஏனெனில் தேவரீர் நீதிமானை ஆசீர்வதிப்பீர்; ஆண்டவரே, உமது தயாளம் கேடயம் போல் எங்களை மூடிக் காப்பாற்றினது.*

To Read more - Please click here

4-ம் சங்கீதம் (4th Psalms)

4-ம் சங்கீதம்

துன்பங்களில் சுவாமியை நோக்கி நம்பிக்கையோடு போகவேண்டும்
என்பதின் பேரில் பாடியிருக்கின்றது.

1. நான் மன்றாடும்போது, என் நீதித்துவத்தை அறியும் தேவன் என் மன்றாட்டை கேட்டருளினார். நான் இடுக்கத்திலிருக்கையில் தேவரீர். என் நெருக்கத்தை நீக்கினீர். என்மேலிரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
2. மனுமக்களே, எதுவரைக்கும் நீங்கள் கல்நெஞ்சுள்ளவர்களாயிருப்பீர்கள்? ஏன் நீங்கள் வீணானதை விரும்பிப் பொய்யை நாடுகிறீர்கள்?
3. கர்த்தர் தமது பக்தனை மகிமைப்படுத்தினாரென்று அறியுங்கள்; நான் ஆண்டவரை நோக்கி அபயமிடும்போது அவர் என் மன்றாட்டைக் கேட்டருளுவார்.
4. நீ ங் க ள் கோபி த் து க் கொ ள் ளு ங் க ள் ; ( ஆனா ல் ) பா வ ஞ் செ ய் ய ா தே யு ங் க ள் . உங்கள் இருதயங்களிலே எண்ணிக்கொண்ட கருத்துகளைக் குறித்து உங்கள் படுக்கைகளிலே துயரப்படுங்கள்.*
5. நேர்மையுள்ள பலியைச் செலுத்திக் கர்த்தர் பேரில் நம்பிக்கையாய் இருங்கள். (ஏனெனில்) எங்களுக்கு நன்மைகளைக் காட்டுகிறவர்கள் யாரென்று அநேகர் சொல்கிறார்கள்.*
6. ஆண்டவரே! உமது முகத்தின் ஒளி எங்கள்மேல் முத்திரிக்கப்பட்டிருக்கிறது. என்னிருதயத்திற்கு சந்தோஷத்தை பொழிகிறவர் நீரே!
7. தங்கள் தானியம், திராட்சைப்பழம், எண்ணெய் இவைகளின் பலனால் அவர்கள் திருப்தியடைந்தார்கள்.
8. நானோவெனில் சமாதானத்தில் நித்திரை செய்து இளைப்பாறுவேன்.
9. ஏனென்றால், ஆண்டவரே, நீர் என்னை நம்பிக்கையில் விசேஷமாக ஸ்திரப்படுத்தினீர்.


to Read more., Please Click here....

மூன்றாம் சங்கீதம் (3rd Psalms)

மூன்றாம்  சங்கீதம்


சத்துருக்களால் துன்பம் வந்திடுகையில் சுவாமியை நாடிப் போகிறவர்கள்
காக்கப்படுவதின் பேரில் பாடியிருக்கின்றது.

1. ஆண்டவரே, என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் ஏன் மிகுந்து போனார்கள்? அநேகர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.
2. அவன் தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று என் ஆத்துமத்துக்கு அநேகர் சொல்கிறார்கள்.
3. ஆண்டவரே! என்னை ஆதரிக்கிறவர் நீரே! என் மகிமை நீரே! என் சிரசை உயர்த்துகிறவர் நீரே!
4. நான் ஆண்டவரை நோக்கி அபயமிட்டேன்; அவர் தமது பரிசுத்தப் பர்வதத்தில் நின்று என் மன்றாட்டைக் கேட்டருளினார்.
5. நான் படுத்து நித்திரை செய்தேன். ஆண்டவர் என்னை ஆதரித்தபடியால் (விழித்து) எழுந்திருக்கிறேன்.
6. என்னை வளைந்து கொண்டிருக்கும் ஆயிரமாயிரஞ் ஜனங்களுக்கும் பயப்படேன். ஆண்டவரே, எழுந்தருளும், என் சர்வேசுரா என்னை இரட்சித்தருளும்.*
7. ஏனெனில் நியாயமின்றி என்பேரில் எதிர்த்த யாவரையுஞ் சிதறடித்துப் போட்டீர். பாவிகளுடைய பற்களையுந் தகர்த்துப் போட்டீர்.
8. இரட்சிப்பு கர்த்தருடையது; உமது ஆசீர்வாதம் உமது பிரஜைகள்மேல் இருக்கின்றது.


சனி, 24 நவம்பர், 2018

அர்ச்சியசிஷ்டவர்கள் என்பவர்கள் யார்?

மனித ஆன்மாக்கள் பரலோகத்தில் சர்வே சுரனால் படைக்கப்படுகின்றன. அவை அழியாமையிலும், மாசற்றதனத்திலும், அழகிலும் தேவ சாயலாகவும், பாவனையாகவும் சிருஷ்டிக்கப் படுகின்றன. எனவே கடவுள் அவற்றை அளவற்ற விதமாக நேசிக்கிறார். அவையும் தாங்கள் சிருஷ்டிக்கப்பட்ட கணம் முதல் அவரை முகமுகமாய்த் தரிசித்துப் பேரின்பம் அனுபவிக் கின்றன. இந்நிலையில் அவற்றின் பேரழகு எவ் வளவு அதியற்புதமானதாக இருக்கிறது எனில், “மனிதக் கருவோடு சேருமுன் ஓர் ஆன்மாவை அதன் பேரழகில் காண்பீர்கள் என்றால், அதைக் கடவுள் என்று மதித்து ஆராதிக்க முற்படு வீர்கள்!” என்கிறாள் அர்ச். தெரேசம்மாள்.

ஆனால் ஆத்துமம் பெண்ணின் வயிற்றில் கரு உருவாகும் அதே கணத்தில் அதனுடன் இணைக்கப்பட்டவுடன், தனது உத்தமமான பேரழகையும், தேவ சாயலையும், பாவனை யையும் இழந்து போகிறது. ஜென்மப் பாவம் அதைக் கறைப்படுத்தியவுடன் அது கடவுளை “மறந்துபோகிறது. அதன் அறிவு இருளடை கிறது, சித்தம் பலவீனப்படுத்தப்படுகிறது. அது தேவ குழந்தை என்னும் பாக்கியத்தை இழந்து சாத்தானின் அடிமையாகிறது.
ஆனால் ஞானஸ்நானத்தில் கிறீஸ்துநாதரின் திரு இரத்தத்தால் கழுவப்படும் அதே கணத் தில் அது ஜென்மப் பாவம் நீக்கப்பட்டு, சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப் பட்டு, மீண்டும் கடவுளின் குழந்தையாகிறது. ஆயினும் ஜென்மப் பாவ தோஷம் மரணம் வரை அதனுடன் நிலைத்திருக்கும் என்பதால், அது இன்னும் கடவுளை "மறந்த நிலை யிலேயே நிலைத்திருக்கிறது.

இத்தகைய ஆன்மா உலக வாழ்வில் எந்த அளவுக்கு தன் பரிசுத்த ஜீவியத்தால் கடவுளை நெருங்கிச் செல்கிறதோ, அந்த அளவுக்கு அது . கடவுளை அதிகமதிகமாக “'ஞாபகப்படுகிறது.'' கணநேர தேவ காட்சிகள் முதலில் அதற்குத் தரப்படுகின்றன. மேன்மேலும் அது , கடவுளை நெருங்கிச் செல்லும்போது, இந்தக் காட்சிகளின் நேரம் அதிகரிக்கிறது. சலுகை பெற்ற ஆன்மாக்கள் இவ்வுலகிலேயே கடவுளைக் காணவும், அவரோடு உரை யாடவும், அவரது திவ்ய நன்மைத்தனத்தை வெகுவாக அனுபவிக் கவும் அனுமதிக்கப்படுகின்றன.
இத்தகைய ஆன்மாக்களையே நாம் அர்ச் சியசிஷ்டவர்கள் என்கிறோம். இவர்கள் தங்கள் பரிசுத்த ஜீவியத்தால் தேவ இஸ்பிரீத்துவான வரின் தேவாலயங்களாகவும், சேசுநாதரின் ஞான மணவாளிகளாகவும் இருக்கிறார்கள். தங்கள் பரிசுத்ததனம், மாசற்றதனம், புண்ணியங்கள் மூலம் இவர்கள் தேவ சுபாவத்தில் பங்கடை பவர்களாகவும், சர்வேசுரனின் ஒளியைப் பிரதி பலிப்பவர்களாகவும் ஆகிறார்கள். அவர்கள் வழி யாகக் கடவுள் மிக அநேக ஆன்மாக்களைத் தம்மிடம் மனந்திருப்புகிறார். அவர்களது மன்றாட்டுகளுக்கும், பரிந்து பேசுதல்களுக் கும் அவர் விருப்பத்தோடு செவிசாய்க்கிறார்.

(இங்கு நாம் கவனிக்க வேண்டிய இரு காரியங்கள்: 1) கத்தோலிக்கத் திருச்சபையால் அர்ச்சியசிஷ்ட பட்டம் வழங்கப்பட்டவர்கள் மட்டுமே இப்பெயருக்குத் தகுதியுள்ளவர் களாக இருக்கிறார்கள்; 2) உலகிலேயே தேவ காட்சி என்பது அர்ச்சியசிஷ்டவராக இருப் பதற்கு இன்றியமையாத நிபந்தனை அல்ல.)
இதிலிருந்தே அர்ச்சியசிஷ்டவர்கள் பக்தியும் வணக்கமும் தோன்றுகின்றன. நாம் அர்ச்சியசிஷ்டவர்களிடம் திரும்புவதற்கு ஐந்து காரணங்களைக் கூறலாம்:
1) அவர்கள் நம்மிலுள்ள அதே மனித சுபாவத் தைக் கொண்டிருக்கிறார்கள்: உலகில் இருந்த வரை அவர்களும் பலவீனம் உள்ளவர்களாக இருந்தார்கள். தங்கள் சொந்த அனுபவத்தால் நம் தேவைகள், துன்பங்கள் மற்றும் கட்டுப் பாடுகளை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
2) தமது அர்ச்சியசிஷ்டவர்கள் விசுவாசி களால் வணங்கப்பட வேண்டுமென கடவுள் விரும்புகிறார். தங்கள் வாழ்வில் அவர்கள் கடவுளுக்கு ஊழியம் செய்தார்கள், அவரது சித்தப்படி வாழ்ந்து மரித்தார்கள். எனவே இப் போது நம் ஜெபங்களைக் கேட்டு அவற்றைக் கடவுள் முன் சமர்ப்பிக்கவும், நமக்காக ஜெபிக் கவும் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
3) பரலோகத்தை நோக்கிய நம் பரதேச பயணத்தில் அவர்களது வார்த்தைகளும் ஒரு பரிசுத்த ஜீவியத்தின் மாதிரிகையும் நமக்குப் பேருதவியாக இருக்கின்றன. நம் வணக்கத் திற்கும், நன்றியறிதலுக்கும் அவர்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
4) அர்ச்சியசிஷ்டவர்களின் பரிந்துரையின் வழியாகக் கடவுள் நமக்குப் புதுமைகளையும், அநேக நன்மைகளையும் தொடர்ந்து நமக்குத் தந்தருளுகிறார். ஏனெனில் மனிதருக்கு வரப் பிரசாதங்களைத் தருவதில் அவர்கள் இன்னும் கூட தேவ ஊழியர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
5) பிரிவினைப் பதிதர்கள் நம்புவது போல, நாம் மரித்தோரிடம் ஜெபிக்கவில்லை. அர்ச்சிய சிஷ்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். பதித சபையினரைப் பொறுத்த வரை, மோட்சம் இன்னும் திறக்கப்படவில்லை . அதில் இரட் சிக்கப்பட்ட ஆன்மாக்கள் ஏதுமில்லை. கிறீஸ்து பாதாளத்தில் காத்திருந்த புண்ணிய ஆத்துமங்களுக்கு மோட்சம் தருவதற்காகத் தாம் மரித்தவுடன் அங்கே இறங்கிச் சென்றார் என்ற விசுவாச சத்தியத்தை அவர்கள் மறுதலிப் பதன் விளைவு இது. ஆனால் கத்தோலிக்க வேத சத்தியத்தின்படி மோட்சம் அர்ச்சிய சிஷ்டவர்களால் ஏற்கெனவே நிரம்பியிருக் கிறது. அவர்கள் கடவுளை முகமுகமாய்த் தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதி உயிர்ப்பு வரை அவர்களது சரீரங்களிலிருந்து அவர்களது ஆன்மாக்கள் தற்காலிகமாகப் பிரிக்கப்பட்டுள்ளன, என்றாலும், நம் உலக வாழ்வு முடியும்போதும், நம் ஆன்மாக்கள் முழுமையாக உயிரோடு இருக்கின்றன என்று நம் திருச்சபை நமக்கு நினைவூட்டுகிறது. வழிபாடு அல்ல, வணக்கம்!
கத்தோலிக்கர்களாகிய நாம், பதிதர்கள் குற்றஞ்சாட்டுவது போல் அர்ச்சியசிஷ்டவர் களை வழிபடுவதில்லை . அவர்கள் உத்தம தேவ ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம் என்பதே உண்மை . கத்தோலிக்கக் கலைக் களஞ்சியம் ஆராதனை அல்லது வழிபாட்டிற்கும், வணக்கத் திற்குமிடையே உள்ள வேறுபாட்டை இப்படி விளக்குகிறது:
"லாத்ரியா என்னும் வழிபாடு அல்லது ஆராதனை கடவுளுக்கு மட்டும் செலுத்தப் படுகிறது; தூலியா அல்லது வணக்கம் அர்ச் சியசிஷ்டவர்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்த வணக்கத்தின் ஓர் உயர்நிலையான ஹைப்பர்லூலியா, திவ்ய கன்னிமாமரியின் மேலான மகத்துவத்தின் காரணமாக, அவர் களுக்கு செலுத்தப்படுகிறது.''
பரிசுத்த வேதாகமம் தேவதூதர்களுக்குரிய வணக்கத்தை ஊக்குவிக்கிறது. இவர்கள் கடவு ளோடு விசேஷ உறவுள்ள சிருஷ்டிகள் என்ற முறையில் அர்ச்சியசிஷ்டவர்களோடு ஒப்பிடத் தக்கவர்களாக இருக்கிறார்கள் (யாத். 23:20; தானி.8;15 மற்றும் 10:4; மத்.18:10; லூக்.2:9; அப்.நட.12:7; மற்றும் காட்சி. 5:11 மற்றும் 7:1 காண்க).
“நேரடியாக சேசுவிடம்” என்பதற்கான மறுப்பு
“நாம் ஏன் சேசுவிடம் நேரடியாக ஜெபிக்கக் கூடாது?” என்பது பதிதர்களின் கேள்வி. சேசு விடம் நேரடியாக ஜெபிக்க வேண்டியது உண்மைதான். ஆனால் ஒருவன் தனக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்பது சரியல்ல என்பது இதன் பொருளாகாது. அர்ச்சிய சிஷ்டவர்களிடம் ஜெப உதவி கேட்பது தவறு என்று சொல்லும் இவர்கள் தங்கள் பிரசுரங் களிலும் தொலைக்காட்சிகளிலும் "ஜெப் உதவிக்கு” என்று தங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுப்பதை எப்படி நியாயப் படுத்தப் போகிறார்கள்?!
ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பது கத்தோ லிக்க வாழ்வின் ஓர் அங்கம். அர்ச். சின்னப்பர் பல சமயங்களில் தமக்காக ஜெபிக்கும்படி பிறரிடம் கேட்கிறார் (உரோ .15:30, 32; எபே.6:18, 20; கொலோ .4:3; 1தெச.5:25, 2 தெச.3:1 காண்க). தாம் அவர்களுக்காக ஜெபிப்பதாகவும் அவர் உறுதி தந்தார் (2 தெச. 1:11). மேலும், மற்றவர்களுக்காக ஜெபிக்கும் படி சேசுவே நம்மிடம் கேட்கிறார் (மத்.5:44). எனவே பரிசுத்த வேதாகமம் அர்ச்சியசிஷ்ட வர்களிடம் ஜெபிப்பதை ஊக்குவிக்கிறது என்பது தெளிவாகிறது.
இதிலிருந்து நாம் அடையும் பலன்களில் ஒன்று நம் பலவீனங்களில் அவர்களது ஆதர வையும், நம் விசுவாசம் மற்றும் பக்திக் குறை வில் அவர்களது மன்றாட்டின் பலனையும் நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதே. சேசு சிலரது விசுவாசத்தின் அடிப்படையில் மற்றவர்களுக்குப் புதுமைகள் செய்தார் (மத்.8:13; 15:18; மாற்கு.9:17, 29; லூக். 8:49, 55 காண்க). அப்படியிருக்க, பரலோகத்தில், தங்கள் சரீரங்களிலிருந்தும் உலகப் பராக்குகளிலிருந்தும் விடுபட் டிருக்கிற அர்ச்சியசிஷ்டவர்களிடம் நாம் அதிக நம்பிக்கையோடு மன்றாடலாம் என்று சொல்லத் தேவையில்லை.

அர்ச்சியசிஷ்டவர்களின் மீதான பக்தியின் மிக முக்கியமான அம்சம்
தேவ அன்னையிடமும், அர்ச்சியசிஷ்டவர் களிடமும் நம் ஆன்ம சரீர நன்மைகளுக்குத் தேவையானவற்றைப் பெற்றுத் தர மன்றாடு வதற்காக மட்டுமே அவர்களை அணுகிச் செல்வது பலரது தவறான வழக்கமாக இருக் கிறது. ஆனால் அவர்களைக் கனப்படுத்து வதன் மிக முக்கியமான வடிவம், கடவுளோடு அவர்களுக்குள்ள உறவில் அவர்களைக் கண்டுபாவிப்பதாகும். அர்ச். சின்னப்பர் இந்த ஞான அனுசாரத்தைப் பற்றிப் பல முறை எழுதியுள்ளார். ''நான் கிறீஸ்து நாதரைக் கண்டுபாவிக்கிறதுபோல நீங்களும் என்னைக் கண்டுபாவிக்க உங்களை மன்றாடுகிறேன்” என்று அவர் கூறுகிறார் (1கொரி.4:16). மீளவும் அதே மக்களிடம், "நான் கிறீஸ்துநாதரைக் கண்டுபாவிக்கிறதுபோல, நீங்களும் என்னைக் கண்டுபாவித்து நடங்கள். சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைவுகூர்ந்து, நான் உங்களுக்குப் படிப்பித்தபடி என் கற்பனை களை அநுசரித்து வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன்'' என்கிறார் (11:2). மேலும் எபிரேயருக்கு, "உங்களுக்கு தேவ வாக்கியத் தைப் போதித்து, உங்களுக்கு ஞான வழி காட்டினவர்களை நினைவுகூருங்கள். அவர் களது நடக்கையின் முடிவை உற்றுப்பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற் றுங்கள்” (3:17) என்று அறிவுறுத்துகிறார்.
ஆகவே, சகோதரரே, வேதாகம போதனை யின்படியும், திருச்சபையின் படிப்பினையின் படியும் நாம் அர்ச்சியசிஷ்டவர்களிடம் பக்தியை வளர்த்துக் கொள்வோம். நம் ஞான, சரீரத் தேவைகளில் அவர்களது உதவியை நாடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் களது புண்ணியங்களைக் கண்டுபாவித்து, அவர்களோடு மோட்சத்தில் நித்தியப் பேரின்பம் அனுபவிக்கும் பாக்கியத்தைப் பெற்றுக்கொள் வோமாக.

Download Catholic Tamil Songs. Here

திங்கள், 12 நவம்பர், 2018

ஜனவரி மாதம் 1-ம் தேதி - *The Circumcision of Our Lord*

ஜனவரி மாதம் 1-ம் தேதி*

*The Circumcision of Our Lord*
*விருத்தசேதனத்  திருநாள்*

*திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு நிறைவேற்றப்படுகிறது.*

விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களி னின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு. மோயீசன் பத்துக் கற்பனையைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச்  சடங்கு சர்வேசுரனால் ஏற்படுத்தப்பட்டது. இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள். இச்சடங்கை நிறைவேற்றும்போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும். நமது திவ்விய கர்த்தர் இந்தச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டு மென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார்.  நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளையையும் பக்தியோடு அநுசரிப்போமாக. மேலும் நமது இருதயத்தில் எழும் ஆசாபாச முதலிய ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தஞ் சிந்தப் பழகவேண்டும்.  கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு  உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.
 
இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை விட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது ஜீவியத்தில் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.

*யோசனை*

நாம் இந்தப் புதுவருடத்தில் எந்தெந்தப் பாவத்தை விட்டொழித்து, எந்தெந்தப் புண்ணியத்தைச் செய்யத் தீர்மானித்தோமோ, அதை இன்றே செய்ய முயற்சிப்போமாக.

புதன், 10 அக்டோபர், 2018

அர்ச். பிரான்சீஸ்கு போர்ஜியார் , 10/10/18


*St. Francis Borgia, C.*                                         
*அர்ச். பிரான்சீஸ்கு போர்ஜியார்*
*துதியர் - (கி.பி. 1572).*

ஸ்பெயின் தேசத்தாரான போர்ஜியார் பெயர் பெற்ற பிரபுவும், மகா தளகர்த்தரும் திரண்ட செல்வமும் உடையவராய் இருந்தார். சிறு வயதிலேயே இவர் தெய்வ பக்தியுள்ளவராய் ஞானக் காரியங்களில் வெகு நேரம் செலவு செய்து, ஒறுத்தல் முயற்சியால் தம்மை அடக்கி, கர்த்தருடைய பாடுகளின் மீது அதிக பக்தி வைத்திருந்தார். தமது எஜமானியான இராணி மரணமானபின் அவளுடைய பிரேதம் அடங்கிய சவப்பெட்டி திறக்கப்பட்ட போது, இராணியின் அழகான முகம் அவலட்சணமாயிருப்பதையும், பிரேதத்தினின்று துர்நாற்றம் வீசுவதையுங் கண்ட போர்ஜியார், சற்று நேரம் அங்கே நின்று சாவைப்பற்றி நினைத்து, தமது மனைவி தமக்கு முன் மரித்தால் தாம் துறவற அந்தஸ்தில் சேருவதாகத் தீர்மானித்துகொண்டார். சில காலத்திற்குப்பின் இவருடைய மனைவி இறக்கவே, போர்ஜியார் உலகத்தைத் துறந்து சேசு சபையில் சேர்ந்தார். சேசு சபையின் ஒழுங்குகளை வெகு நுணுக்கமாய் அனுசரித்து சகலருக்கும் நன்மாதிரிகையானார். செல்வ செழிப்பில் வளர்ந்த இவர் ஏழையின் உணவை அருந்தி, வீடு பெருக்கி, மடத்தில் தாழ்ச்சிக்குரிய வேலைகளைச் செய்துவந்தார். சில சமயம் பிச்சை எடுத்துப் புசிப்பார். மயிர்ச் சட்டையைத் தரித்து, சங்கிலியால் தமது சரீரத்தை அடித்துக்கொண்டு, ஒருசந்தி உபவாசத்தால் தமது சரீரத்தை அடக்கினார். பூசை நேரத்தில் ஒரு சம்மனசைப் போல காணப்படுவார். பாப்பாண்டவரால் தரப்பட்ட கர்தினால் பட்டத்திற்கு இவர் சம்மதிக்கவில்லை. தம்மை எப்போதும் தாழ்த்தி, தாம் பாவிகளுக்குள் பெரும் பாவியென்று சொல்லுவார். பாப்பரசரின் உத்தரவுப்படி போர்ஜியார் திருச்சபை விஷயமாக பிரயாணம் செய்கையில், தமது 61-ம் வயதில் பாக்கியமான மரணமடைந்து மோட்ச பிரவேசமானார்.   

*யோசனை*
நாம் பிரேதத்தைப் பார்க்கும்போதும், சாவு மணி சத்தம் காதில் விழும்போதும் நமது சாவைப்பற்றி நினைத்து, அதற்குத் தயாராக இருக்கிறோமா என்று யோசிப்போமாக