ஆறாம் சங்கீதம்
வியாதியஸ்தன் வைத்தியனை மன்றாடுகிறது போல் பாவத்தில் மெலிந்து கலங்கின ஆத்துமமானது சர்வேசுரனைப் பிரார்த்தித்து, அவருடைய சந்நிதியிலே அழுது பிரலாபிக்கிறதைக் குறித்தும், ஆண்டவர் அந்தப் பிரலாபத்தைக் கேட்பதைக் குறித்தும் பாடியிருக்கின்றது.
1. சுவாமி, தேவரீர் கோபமாயிருக்கும்போது என்னைத் தண்டியாதேயும்; உமது கோபாக்கினிவேளையில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும், நான் வெகு பலவீனனாயிருப்பதால் என்மேல் இரக்கமாயிரும்.
2. என்னுடைய எலும்புகள் திகிலிட்டிருப்பதால் எனக்கு ஆரோக்கியங் கொடுத்தருளும்.
3. என் ஆத்துமமோ வெகுவாய்க் கலங்கியிருக்கிறது; ஆனால் சுவாமி, நீர் எந்த மட்டும் ( எனக்கு உதவி செய்யாமலிருப்பீர்?)
4. சுவாமி, தேவரீர் எனது முகமாய்த் திரும்பி என் ஆத்துமத்தை ஈடேற்றி உமது கிருபையைக் குறித்து என்னை இரட்சித்தருளும்.
5. ஏனெனில் மரண அந்தஸ்தில் உம்மை யாரும் நினைப்பாரில்லை; நரகத்தில் உம்மை துதிப்பவருமில்லை!
6. அகோர துக்கத்தால் பிரலாபப்பட்டு மிகவும் மெலிந்தேன்; இராத்திரி தோறும் என் கண்ணீரால் என் கட்டிலையும் என் படுக்கையையும் நனைத்துக் கொண்டு வருவேன். என் கண் கலங்கிப்போயிற்று. என் சகல சத்துருக்கள் நடுவில் விருத்தாப்பியன் போலானேன்!
7. ஆகையினால் அக்கிரமங்களைச் செய்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள். ஏனெனில் தேவன் என் மன்றாட்டைக் கேட்டருளினார்.
8. ஆண்டவர் என் வேண்டுதலைக் கேட்டு எனது விண்ணப்பத்தைக் கையேற்றுக்கொண்டார்.
9. ஆகையால் என் சத்துருக்கள் எல்லோரும் நாணி மிகவுங் கலங்கக் கடவார்கள்; அதி சீக்கிரத்தில் அவர்கள் வெட்கமடைந்து பின்னிட்டுப் போகக் கடவார்கள்.
To Read More - Please Click Here...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக