Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 15 டிசம்பர், 2018

ஐந்தாம் சங்கீதம் (5th Psalms)

ஐந்தாம் சங்கீதம் 

பொல்லாதவர்களின் பாவக்கேட்டில் நின்று காப்பாற்றப்பட வேண்டும்
என்பதின் பேரில் பாடியிருக்கின்றது.

1. ஆண்டவரே என் விண்ணப்பத்திற்கு செவிதந்தருளும்; என் அபய சப்தத்தின் பேரில் கவனங்கொள்ளும்.
2. என் இராஜாவே, என் கடவுளே, என் வேண்டுதலின் சப்தத்தைக் கேட்டருளும்.
3. ஏனெனில் நான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வேன்; (நீரோ வெனில்,) கர்த்தாவே காலை நேரத்தில் என் குரல் சத்தத்தைக் கேட்டருளுவீர்.
4. விடியற்காலையில் உமது சன்னிதானத்தில் நிற்பேன் (அப்போது) அக்கிரமத்தில் நீர் பிரியப்படுபவரல்ல என்று தியானிப்பேன்.
5. துர்மார்க்கனும் உமது அருகிலிருக்கமாட்டான்; அநீதனும் உமது நேத்திரங்களுக்கு முன் நிற்கமாட்டான்.
6. அக்கிரமசாலி பரிச்சேதம் உம்முடன் வாசஞ் செய்யான்; தீயோர்கள் உம்முடைய கண் பார்வைக்கு முன்பாக நிலைகொள்ளார்கள்!
7. அக்கிரமத்தைச் செய்பவன் எவனோ, அவனைப் பகைப்பீர். பொய்யை பேசுபவன் எவனோ! அவனை நாசப்படுத்துவீர். கொலைபாதகனையும் மோசக்காரனையும் அருவருப்பார் தேவன்.
8. ஆண்டவரே, என்னை உமது நீதி நெறியில் நடப்பியும்; என் சத்துருக் களின் நிமித்தம் உமது பார்வையில் என் வழியைச் செவ்வைப்படுத்தும்.
9. ஏனெனில் அவர்கள் நாவில் உண்மையில்லை; அவர்கள் உள்ளம் வஞ்சனையுள்ளது.
10. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக் குழி; தங்கள் நாவைக் கொண்டு கட்டமாய் பேசினதினால், அவர்களுக்கு தீர்வையிடும். அவர்கள் எண்ணங்கள் வீணாகக் கடவன்! அவர்கள் கட்டிக்கொண்ட கணக்கிலடங்கா அக்கிரமங்களை பற்றி அவர்களை தள்ளிவிடும். ஏனெனில், கர்த்தாவே, அவர்கள் தேவரீருக்குக் கோபமூட்டினார்கள்.
11. (ஆனால்) உம்மை நம்பினவர்கள் அனைவரும் மகிழ்ந்து, சதாகாலமும் களிகூர்வார்கள். தேவரீர் அவர்களில் வாசம்பண்ணுவீர். உமது நாமத்தைச் சிநேகிக்கிறவர்கள் யாவரும் உம்மில் அகமகிழ்வார்கள்.
12. ஏனெனில் தேவரீர் நீதிமானை ஆசீர்வதிப்பீர்; ஆண்டவரே, உமது தயாளம் கேடயம் போல் எங்களை மூடிக் காப்பாற்றினது.*

To Read more - Please click here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக