10-ம் சங்கீதம்
தருமவாளன் துன்பங்களில் சர்வேசுரனிடத்தில் நம்பிக்கை வைப்பதின் பேரில்
பாடியிருக்கின்றது.
1. நான் ஆண்டவர்பேரில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; பின்னே ஏன் என் ஆத்துமத்தை நோக்கி அடைக்கலான் குருவி போல மலைக்கு அகன்று போ என்கிறீர்கள்?*
2. இதோ பாவிகள் வில்லை வளைத்துச் செம்மையான இருதயத்தார் பேரில் அந்தகாரத்தில் எய்யத் தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
3. ஏனெனில் நீர் ஏற்படுத்தினவைகளை அவர்கள் அழித்துப்போட்டார்கள்; ஆனால் நீதிமார்க்கன் என்ன செய்தான்?
4. ஆண்டவர் தமது பரிசுத்த ஆலயத்திலிருக்கிறார்; ஆண்டவர் தமது ஆசனமாகிய பரலோகத்திலிருக்கிறார்.
5. அவருடைய நேத்திரங்கள் தரித்திரவானை நோக்குகின்றன; அவருடைய இமைகள் மறுப்புத்திரரைச் சோதிக்கின்றன.
6. ஆண்டவர் நீதிமானையும் துர்மார்க்கனையுஞ் சோதிக்கிறார்; ஆகையால் தோஷத்தை விரும்புகிறவன் தன் ஆத்துமத்தைப் பகைக்கிறான்.
7. பாவிகள்பேரில் கண்ணிகளை வருவிப்பார்; அக்கினியும் கந்தகமும் புயல்களின் கொந்தளிப்பும் அவர்கள் பாத்திரத்தின் பங்காம்.*
8. ஆண்டவர் நீதியுள்ளவர், நீதிகளின் மேல் பிரியப்பட்டிருக்கிறார்; அவருடைய முகம் நியாயமானதைக் கிருபாகடாட்சித்துப் பார்த்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக