செப்டம்பர் 27
அர்ச். கோஸ்மானும், தமியானும்
வேதசாட்சிகள்
பிரவேசம்: சர். 44. 15-14
பரிசுத்தவான்களுடைய ஞானத்தை மக்கள் வெளிப்படுத்துவார்கள், சங்கத்தார் அவர்களுடைய புகழ்ச்சியைக் கூறுவார்கள், அவர்களுடைய நாமங்கள் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும். (சங். 32. 1) நீதிமான்களே, ஆண்டவரிடத்தில் அகமகிழ்ச்சியுடன் அவரைக் கீர்த்தனஞ் செய்யுங்கள். அவரை புகழ்வது இருதய நேர்மையுள்ளவர்களுக்குரியது. – பிதாவுக்கும். . .
சபைச் செபம்
செபிப்போமாக: எல்லாம் வல்ல சர்வேசுரா, உம்முடைய வேதசாட்சிகளான அர்ச். கோஸ்மானும், தமியானுமென்பவர்களுடைய பரலோக பிறப்புநாளைக் கொண்டாடுகிற நாங்கள், எங்களுக்கு நேரிடவிருக்கும் எவ்வித தீமையினின்றும் விடுவிக்கப்பட, அவர்களுடைய வேண்டுதலைப் பார்த்துத் திருவருள் புரிந்தருள உம்மை மன்றாடுகிறோம். - தேவரீரோடு இஸ்பிரித்துசாந்துவின் ஐக்கியத்தில் . . .
நிருபம் (ஞான. 5. 16-20)
நீதிமான்கள் என்றென்றைக்கும் சீவிப்பார்கள். கர்த்தரிடத்தில் அவர்களுக்குச் சம்பாவனையுண்டு; அதி உன்னத கடவுள் அவர்களை என்றும் பாதுகாக்கிறார். ஆகையால் ஆச்சரியமான ராசாங்கத்தையும் மகிமையின் கிரீடத்தையும் கர்த்தர் கரங்களினின்றடைவார்கள். அவருடைய வலது கரம் அவர்களை காப்பாற்றியது அவரது பரிசுத்த புஜம் அவர்களை ஆதரித்தது. அவர் பற்றுதலானது ஆயுதமணிந்து கொள்ளும். அவர் சத்துராதிகளைப் பழி வாங்குவதற்குச் சிருஷ்டிகளுக்காக ஆயுதமணிவார். இருப்புக் கவசமாக நீதியையும் சிரசாயுதமாக தமது நேர்மையுள்ள தீர்மானத்தையும் தரித்துக் கொள்ளுவார். ஊடுருவப்படாத கேடயமாக நீதித்தனத்தால் தம்மை மூடிக்கொள்வார்.
படிக்கீதம்: (சங். 33. 18-19)
நீதிமான்கள் அபயமிட்டார்கள். ஆண்டவர் அவர்களுக்கு செவிசாய்த்து, அவர்களுக்கு நேரிட்ட எல்லாத் துன்பங்களினின்று மீட்டருளினார். இருதயத்தில் வேதனைப்படுகிறவர்களுக்கு துணையாக ஆண்டவர் இருக்கிறார். மனத்தாழ்ச்சி யுள்ளவர்களை இரட்சிப்பார்.
அல்லேலுய்யா கீதம்
அல்லேலுய்யா, அல்லேலுய்யா உலகத்தின் அக்கிரமங்களை செயிக்கும். உண்மையான சகோதரத்துவம் இதுவே, இது கிறஸ்துவைப் பின்பற்றி, இப்பொழுது மோட்ச இராச்சியத்தை மகிமையாய் அடைந்து கொண்டது. அல்லேலுய்யா
சுவிஷேசம் (லூக். 6. 17-23)
அக்காலத்தில் சேசுநாதர் மலையினின்று இறங்கி, மைதானமான ஓரிடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷர் கூட்டமும், யூதேயா நாட்டின் எத்திசை யிலிருந்தும், ஜெருசலேம் நகரத்திலிருந் தும், தீர், சீதோன் நகரங்களின் கடற் கரைகளிலிருந்தும் வந்த ஏராளமான ஜனங்களும் இருந்தார்கள். இவர்கள் அவருடைய வாக்கைக் கேட்கவும், தங்கள் நோய்களினின்று சுகமாக்கப்படவும் வந்திருந்தார்கள். அசுத்த அரூபிகளால் உபாதிக்கப்பட்டவர்களும் சொஸ்த மானார்கள். அவரிடத்திலிருந்து ஒரு சக்தி புறப்பட்டு, எல்லோரையும் குணமாக் கினபடியினாலே, ஜனங்களெல்லோரும் அவரைத் தொடும்படி வழிதேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் தம்முடைய சீஷர்கள்மேல் தமது கண்களை ஏறெடுத்துப் பார்த்துத் திருவுளம்பற்றினதாவது: தரித்திரர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் உங்களு டையது. இப்பொழுது பசியாயிருக்கிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிறவர்களே, நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சிரிப்பீர்கள். மனுமகனைப்பற்றி ஜனங்கள் உங்க ளைப் பகைத்து, உங்களை விலக்கித் தூஷணித்து உங்கள் பெயரை ஆகா தென்று தள்ளும்போது, நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே அகமகிழ்ந்து களி கூறுங்கள். ஏனெனில் இதோ, பரலோகத்திலே உங்கள் சம்பாவனை ஏராளமாயிருக்கின்றது.
ஒப்புக்கொடுத்தல் (ஞான. 3. 1-3)
உமது நாமத்தை நேசிக்கும் யாவரும் உம்மில் அகமகிழ்வார்கள். ஏனெனில், ஆண்டவரே, நீர் நீதிமானை ஆசீர்வதிப்பீர். ஆண்டவரே, உமது தயாளத்தினால் கேடயம்போல் எங்களை மூடிக் காத்தருளினீர்.
அமைதி மன்றாட்டு
ஆண்டவரே, உம்முடைய பரிசுத்தவான்களுடைய உருக்கமுள்ள மன்றாட்டு எங்களுக்குக் குறைவுபடமாலிருக்கக் கடவது. மேலும் அது எங்களுடைய காணிக்கைகளை தேவரீருக்கு உகந்தனவாக்கி, உமது மன்னிப்பை எங்களுக்கு என்றும் அடைந்து கொடுப்பதாக. – தேவரீரோடு ….
உட்கொள்ளுதல் (மத். 78. 2, 11)
ஆண்டவரே உமது ஊழியர்களுயைட பிரேதங்களை ஆகாயத்தின் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களுடைய சரீரங்களைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகப் போட்டார்கள். கொலையுண்டவர்களுடைய மக்களை உமது புஜபல பராக்கிரமத்தின்படியே காப்பாற்றியருளும்.
உட்கொண்ட பின்
செபிப்போமாக: ஆண்டவரே உமது மக்கள் பரம விருந்தில் பங்கு பற்ற அநுமதிக்கப்பட்டதையும், அவர்களுக்காக அர்ச்சியசிஷ்டவர்கள் செய்யும் பெரும் வேண்டுதலையும் குறித்து, அவர்களை காப்பாற்றியருள உம்மை மன்றாடுகிறோம். – தேவரீரோடு …