Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 7 மார்ச், 2019

சேசுக்கிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளின்பேரில் தியானங்கள் - 1

*சேசுக்கிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளின்பேரில் தியானங்கள்*. 

*சாம்பல் புதன்*. 
*முதல் தியானம்*

*தபசு காலத்தில் அவசியமாய் அநுசரிக்கவேண்டிய விசேஷங்கள்*: 

*1-ம் ஆயத்த சிந்தனை*

 - தேவ கட்டளையை மீறி நடந்த நமது ஆதித் தகப்பனைப் பிதாவாகிய சர்வேசுரன் பார்த்து “நீ உற்பத்தியான மண்ணுக்குத் திரும்பிப் போகுமட்டும் உன் நெற்றியின் வேர்வையால் உனது ஆகாரம் புசித்துத் தூசியாய் இருக்கிற நீ திரும்பவும் தூசியாய்ப் போகக்கடவாய்” என்று சொல்லும் பயங்கரமான வாக்கியத்தை நீ கேட்பதாகப் பாவித்துக்கொள். 

*2-ம் ஆயத்த சிந்தனை*

 - உனது ஒன்றுமில்லாமையை உணர்ந்து எப்பொழுதும் உன்னைத் தாழ்த்தி அடிக்கடி மரணத்தைத் தியானித்து தவத்தால் சரீரத்தைத் தண்டித்து ஒறுத்துத் தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமாய் நடப்பதற்கான இஷ்டப்பிரசாதத்தை    கட்டளையிட சேசுநாதரை மன்றாடுவாயாக. 

முதற்பிரிவு யோசனை - 

"ஓ! மனிதா! தூசியாயிருக்கிற நீ திரும்பவும் தூசியாய்ப் போவாய்" என்பதை நினைத்துக்கொள். முற்காலத்தில் சீவித்த பிதாப் பிதாக்களும் தீர்க்கதரிசிகளும், இன்னும் மற்றப் புண்ணிய ஆன்மாக்களும் தங்களுக்கு யாதோர் கஸ்தி நிர்ப்பந்தம், அல்லது தேவ கோபம் வரவிருக்கிறதை அறிந்தால் தங்கள் வஸ்திரங்களை உரிந்து போட்டுத் தவத்தின் அடையாளமாகப் பெரும்படியான வஸ்திரங்களை அணிந்து கொண்டும், தலைமேல் சாம்பலைத் தூவிக்கொண்டும், ஒருசந்தியால் சரீரத்தைத் தண்டித்துக் கண்ணீர் விட்டழுது சர்வேசுரன் தங்கள் பாவங்களைப் பொறுத்துத் தங்கள் மேல் இரக்கமாயிருக்கும்படி மகா பக்தி வணக்கத்துடன் வேண்டிக் கொண்டு வருவார்கள். அதே பிரகாரம் நமது தாயாகிய திருச்சபை, தன் பிள்ளைகளாகிய நமது பேரில் கவலைகொண்டு  நாம் நமது
பாவங்களை நினைத்து மனஸ்தாபப்பட்டு அழுது அவைகளுக்குத் தகுந்த பரிகாரம் செய்யும் பொருட்டு, நம்மை எப்போதும் தூண்டி வருவதுடன் இந்தத் தபசுகாலத்தில் விசேஷ விதமாய் நமது சரீரத்தையும் அதன் இச்சைகளையும் அடக்கி ஒறுக்கும்படி இந்த நாற்பது நாட்களையும் நியமித்திருக்கின்றது. 

ஆனால் இந்தப் பரிசுத்த காலத்தில் சுத்த போசனமாயிருந்து சில நாட்களில் ஒருசந்தி பிடிப்பதினால் திருச்சபையின் கோரிக்கையை நிறைவேற்றி விடுகிறோமென்று நிச்சயம் நினைக்கலாகாது, உபவாசம் பிடித்துச் சுத்த போசனமாய் இருப்பதுடன் நாம் அடிக்கடி கட்டிக்கொள்ளும் பாவங்களை ஒழித்து, அவைகளுக்கு சம்பந்தமான மனிதர்களையும் இடத்தையும் சமயத்தையும் விட்டு விலகி, அந்தந்த துர்க்குணங்களை ஜெயிக்கப் பிரயாசைப்பட்டு நமது துர் ஆசைகளையும் நினைவையும் தள்ளி நமது சரீரத்தை ஒறுத்துக் கண் பார்வை முதலியவைகளை அடக்கி, நாவை கட்டுப்படுத்தி நடப்போமாகில் அதுவே மெய்யான தபசின் அடையாளம். இவ்விதம் செய்கிறவர்கள்தான் திருச்சபையின் கோரிக்கைப் பிரகாரம் நடக்கிறவர்கள். இப்படிப்பட்டவர்கள்தான் தங்கள் பாவங்களை எளிதாய்த் தள்ளிப் புண்ணிய வழியில் நாளுக்கு நாள் வளர்ச்சியடைவதற்கான தேவ உதவியை ஏராளமாய்ப் பெறுகிறவர்கள். 

ஆகையால் பிரிய சகோதரனே, நீ இந்தப் பரிசுத்த காலத்தில் எந்தெந்த துர்க்குணங்களை விட வேண்டுமென்றும் எந்தெந்தப் புண்ணியங்களைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் தபசு காலத்திற்கு ஆரம்ப நாளாகிய இன்றைய தினம் தீர்மானித்துக் கொண்டு இந்த நாற்பது நாளும் நீ செய்யும் ஒறுத்தல் முயற்சியால் உன் சரீரத்தையும் அதன் தீய இச்சைகளையும் அடக்கிக் கீழ்ப்படுத்துவதற்கு இஷ்டப் பிரசாதத்தைச் சர்வேசுரன் உனக்கு அளிக்கும்படி மன்றாடுவாயாக,

*ஜெபம்*

ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துவே, உமது கசப்பான திருப்பாடுகளின் நேரத்தில் வியாகுல வாளால் தன் மகா பரிசுத்த ஆத்துமத்தில் ஊடுருவப்பட்ட உமது திருத்தாயாராகிய மகா பரிசுத்த கன்னிமாமரி, உமது கிருபாசனத்திற்கு முன்பாக, இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காகப் பரிந்து பேச வரமருளும்படி உம்மை மன்றாடுகிறோம். பிதாவோடும், இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் ஜீவிக்கிறவரும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமான உலக இரட்சகருமாகிய உம் வழியாக இந்த வரத்தை மன்றாடிக் கேட்கிறோம். ஆமென்.

*பரிசுத்த திருக்குடும்பமே எங்களை புண்ணிய வாழ்வு வாழ வழிநடத்துங்கள்*

*ஆமென்*

புனிதர்களின் அழியாத சரீரங்கள் - Part 4 ஆஞ்சலா மெர்சி

தேவாலயத்தில் பக்தியோடு ஜெபித்துக் கொண்டிருந்த அந்த 32 வயது பெண் - மணிக்கு ஓர் காட்சி அருளப்பட்டது! மோட்சத்துக்கும் பூமிக்குமாக ஓர் அழகிய ஏணி காணப்பட்டது அதில் ஏராளமான பெண்களும், சம்மனசுக்களும் - எறிச் செல்வதுபோல இருந்தது. அவர்களில் ஓர் ' அழகிய பெண் படியிலிருந்து இறங்கி ஜெபித்துக் ' கொண்டிருந்த பெண்மணியிருகில் வந்து ஆஞ்சாலா , “நமது ஆண்டவர் தமது சித்தத்தை உனக்குக் காட்டவே இந்தக் காட்சியை வழங்கி உள்ளார். நீ மரிப்பதற்கு முன்பு, இது போலவே பல இளம் கன்னியர்களை பிரெஸ்சியா நகரத் தில் உருவாக்குவாய்'' என்று கூறி மறைந்தாள். அந்தக் காட்சி கண்ட பெண்தான் திருச்சபையிலேயே முதல் முதலாக கல்விப் பணியை தன் அப்போஸ்தலமாகக் கொண்ட அர்ச். ஊர்சுலா - வின் கன்னியர்சபையை ஏற்படுத்திய புனித ஆஞ்சலா மெர்சியாவாள்.
இக்காட்சிக்குப்பின் தேவ ஏவுதலுக் கொத்திருந்த ஆஞ்சலா, பிரஸ்ெஸீயா நகரத்தி ன் ஓர் செல்வந்த குடும்பத்தின் பெண்களிடம் இருந்து அழைப்புப் பெற்றாள். அக்குடும்பத்தின் இரு ஆண் மக்களும் சமீபத்தில் இறந்ததால், பெண்கள் துறவற வாழ்வை மேற்கொள்ள விரும்பினர். எனவே ஆஞ்சலா 1531 - ஆம் | ஆண்டில் தன் அப்போஸ்தலப் பணியை அக்குடும்பத்துப் பெண்களுடன், அவ்வில்லத்திலேயே தொடங்கினாள். சிறியவர்களுக்கு ஞானோபதேசம் போதிப்பதே அவர்களது முதல் பனியாயிருந்தது. அவர்களது புனித துறவற வாழ்வைக் கண்டு அந்நகரத்தின் ஏராளமான பெண்களும் அதில் சேர்ந்தனர். இது '' அர்ச். உர்சுலா சமூகம்'' என்று அழைக்கப்பட்டது.
ஆஞ்சலா 1474 ஆம் ஆண்டில் மரண - மடைந்தாள். அவளது மரணத்திற்குப் பிறகு மிலான் மேற்றிராசனத்தின் ஆயரான அர்ச்.. சார்லஸ் பொரோமியோவால் அச்சபை அதிகார பூர்வமாக அங்கிகரிக்கப்பட்டு அர்ச். உர்சுலா, கன்னியர் சபை என அழைக்கப்பட்டது, - - . ,
--

அழியாத சரீரம் :
- இறந்த ஆஞ்சுலாவின் சரீரத்தை, அடக்கம் செய்ய 30 நாட்களாகியது, அவ்வளவு கூட்டம். இருப்பினும் சரீரத்தில் எந்த விதமான - துர்வாடேையா, அழிவோ ஏற்படவில்லை. புனி) தையின் கல்லறை பிற்காலத்தில் பற்பல சமயங் களில் திறக்கப்பட்டது. சரீரத்தில் எந்தவித மான அழிவும் ஏற்பட்டிருக்கவில்லை. புதி தாகவே இருந்தது. - 1907-ஆம் ஆண்டு மே, 28-ம் நாளன்று . திருச்சபையின் அதிகாரிகளின் முன்னிலை யில் கல்லறை திறக்கப்பட்டு சான்று எழுதப்பட் டது. 1930ல் மீண்டும் கல்லறைத் திறக்கப்பட்டு புனிதையின் அழியாத சரீரம் அழகிய கண்ணா டிப் பேழையில் 'பிரெஸ்சியா' நகரின் பேரால யத்தில் நடுப்பீடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. --- ஆஞ்சலா மெர்சி 1807ம் ஆம் ஆண்டு மே, 24-ம் நாளன்று அர்ச். பட்டம் கொடுக்கப் பட்டாள்!

அரச். ஆஞ்சலா மெர்சியம்மாளே! எங்க ளுக்காக வேண்டிக் கொள்ளும்!.

- மரியாயே வாழ்க!

Tamil Catholic Blog: Life History of St. Antony in Tamil mp3 Download

Tamil Catholic Blog: Life History of St. Antony in Tamil mp3 Download: Download Life History of St. Antony in Tamil. This sermons were recorded in a Festival of St. Antony.  This sermons were preached by t...





Download Tamil Catholic prayers & songs

புதன், 6 மார்ச், 2019

அர்ச். சூசையப்பர் பிரார்த்தனை

பரிசுத்த பிதா 10ம் பத்திநாதரால்
அங்கீகரிக்கப்பட்ட
அர்ச். சூசையப்பர் பிரார்த்தனை

சுவாமீ கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும் ... மற்றதும்
அர்ச். மரியாயே, எங்க...
அர்ச். சூசையப்பரே, எங்க...
தாவீது இராஜாவின் கீர்த்தி பெற்ற புத்திரனே, எங்க...
பிதாப்பிதாக்களின் மகிமையே, எங்க...
தேவதாயாரின் பத்தாவே, எங்க...
கன்னிமரியாயின் கற்புள்ள காவலனே, எங்க...
தேவகுமாரனை வளர்த்த தகப்பனே, எங்க...
கிறீஸ்துநாதரை உற்சாகப் பற்றுதலுடன் காப்பாற்றினவரே, எங்க ...
திருக்குடும்பத்தின் தலைமையானவரே, எங்க...
உத்தம நீதிமானான அர்ச். சூசையப்பரே, எங்க
உத்தம விரத்தரான அர்ச். சூசையப்பரே, எங்க...
உத்தம விவேகமுடைத்தான அர்ச். சூசையப்பரே, எங்க...
உத்தம் தைரியசாலியான அர்ச், சூசையப்பரே, எங்க...
உத்தம் கீழ்ப்படிதலுள்ளவரான அர்ச். சூசையப்பரே, எங்க...
உத்தம பிரமாணிக்கமுள்ளவரான அர்ச். சூசையப்பரே, எங்க...
பொறுமையின் கண்ணாடியே, எங்க...
வறுமையின் அன்பனே, எங்க...
தொழிலாளிகளுக்கு மாதிரிகையே, எங்க...
சமுசார வாழ்க்கையின் ஆபரணமே, எங்க...
கன்னிகைகளின் காவலனே, எங்க...
குடும்பங்களுக்கு ஆதரவே, எங்க..
கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்க...
வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே, எங்க...
மரிக்கிறவர்களுக்கு பாதுகாவலே, எங்க...
பசாசுகளை நடுநடுங்கச் செய்பவரே, எங்க...
பரிசுத்த திருச்சபையின் பரிபாலனே, எங்க...

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையான சேசுவே எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையான சேசுவே எங்கள் பிராத்தனையை கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையான சேசுவே எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
.
முதல் - கர்த்தர் அவரைத் தமது வீட்டின் எஜமானாக ஏற்படுத்தினார்.
துணை - அவருடைய உடைமைகளையெல்லாம் நடத்தி வரவும் ஏற்படுத்தினார்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வேசுராசுவாமி, உம்முடைய மகா அர்ச்சியசிஷ்ட திருமாதாவின் பரிசுத்த பத்தாவாக முத்தனான சூசையப்பரை மனோவாக்குக்கெட்டாத பராமரிக்கையால் தெரிந்துகொள்ளத் திருவுளமானீரே. பூலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிற "வரென்று எங்களால் வணங்கப்படுகிறவர், பரலோகத்தில் எங்களுக்காக மனுப்பேசுகிறவராயிருக்கும்படிக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத்தக்கதாக தேவரீர் அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே, - ஆமென்.

புனிதர்களின் அழியாத சரீரங்கள் - Part 3

முத். பவுலா பிரெஸ்நேற்றி உலகப் | பிரசித்தி பெற்ற அர்ச். டோரொத்தி கன்னி யர் சபையை ஏற்படுத்தியவர் ஆவார். தமது நான்கு சகோதரர்களையும் குருக்களாகப் பெற பாக்கியம் பெற்ற இவள், இத்தாலியில் ஜெ னோவா நகரில் 1880 - ம் ஆண்டு பிறந்தாள். சிறு வயதிலேயே தாயை இழந்து குடும்பச் சுமையைத் தாங்கிய அவள் பொறுமையோடு துன்பங்களை ஏற்றுக் கொண்டாள். கடின உழைப்பால் உடல் நலிவுற்ற அவள்குயின்டோ பங்கின் குருவான த ன து சகோதரர்கள் உதவியால் குணமடைந்தாள். அங்கு அவருக்கு உதவிபுரிந்தும், ஞானோபதேசப் பணிபுரிந்தும் வந்த அவள் தேவ ஏவுதலால் தமது நண்பர்" களைக் கொண்டு புதிய சபையை ஏற்படுத் தினாள்.

அர்ச். டோரொத்தி கன்னியர் ச  ைப ஜெனோவா நகரில் முறையாக ஏற்படுத்தப்பட்டு பவுலா தாயாரின் கடின உழைப்பால் இத்தாலி பிரேசில் நாடு முழுவதும் பரவியது. புண்ணிய வாழ்விலும், தவத்திலும் ஈடுபட்ட அவள் மூன்று முறை பக்க வாத நோயால் பீடித்து துன்பப் பட்டாள். அவளது கடைசிக் காலத்தில் அர்ச். ஜான் போஸ் கோவைக் காணும் பேறு பெற்று அவர் முன்னுரைத்த நாளிலேயே பாக்கியமான மரண மடைத்தாள்.

அழியாத சரீரம்!

1906 - ஆம் ஆண்டில் அர்ச். 10-ம் பத்தி நாதர் பாப்பரசர் அவளது வீ ர விசுவாச வாழ்வை அங்கீகரித்து முத்திப் பேறு பட்ட நட வடிக்கைகளைக் துவக்கிவைத்தார். அதே ஆண் டில் சபையின் தலைமை மடத்தின் புதிய கல்ல றையில் ன வப்பதற்காக கல்லறை திறக்கப் பட்டது, அப்போது ச ரீ ர ம் எந்தவிதமான சேதமும் அழிவுமின்றி காப்பாற்றப்பட்டிருந்தது. சரீரம் மிகவும் நெகிழ்ச்சியுடையதாகவும் உயிருள்ளதைப்போலவும் காணப்பட்டது. சரீரத் திற்கு அணிவிக்கப் பட்டிருந்த உடுப்புகள் கூட எந்த விதமான சேதமுமின்றி இருந்தன. சரீரம் புதிய கல்லறையில் வைக்கப்பட்டது.
---
1930 -- ல் பரி. பாப்பு 11 - ம் பத்தி நாதர் - ஜீன் 8 -- ம் நாளன்று பவுலா பிரெஸ்நேற்றித் - தாயாருக்கு முத்தி பேறு பட்டம் வழங்கினார். - அதே நாளில் கல்லறை திறக்கப்பட்டு, - அவள் சரீரம் புதிய அழகிய வெள்ளிக் - கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு தலைமை மடத்தின் ஆலய பிரதானப் பீடத்தில் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. எண்ணற்ற விசுவாசிகள் தங்களது வணக்கத்தை தெரிவிக்க அங்கு திரு யாத்திரை சென்ற வண்ணமாகவே உள்ளனர்.
- முத் பவுலா பிரெஸ்நேற்றியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
மரியாயே வாழ்க!

செவ்வாய், 5 மார்ச், 2019

மார்ச் மாதம் அர்ச் சூசையப்பரின் மாதம்


மார்ச் மாதம் அர்ச் சூசையப்பரின் மாதம்.


பரிசுத்த தந்தை பாப்பரசர் 9-ம் பத்தி நாதர் மார்ச் மாதத்தை புனித சூசையப்பரின்
வணக்க மாதமாக பிரகடனம் செய்தார். நமது  ேநச தந்தையான புனித சூசையப்பரின்
மகிமை துலங்கிடும் மாதமிது! அவரது அடைக் கலத்தை நாடும் காலமிது!!
-


எனவே சிறப்பாக இம்மாதத்தில்: சங்கைக்குரிய குருக்களே! நற்கருணை
சேசுவை முதலில் கரங்களில் ஏந்திய புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.
துறவரத்தாரே! மு த ல் துறவர மடமாக விளங்கிய திருக்குடும்பத்தின்
அதிபரானபுனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.
இல்லத் தலைவிகளே!  ேத வ மாதாவை பராமரித்து காப்பாற்றிய
புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.


தொழிலாளர்களே! தொழிலாளர்களுக்கு பாதுகாவலரான
புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்!


வேலை தேடுபவர்களே! சேசுவுக்குத் தொழில் கற்றுக் கொடுத்த
புனித சூசையப்பரிடம் - மன்றாடுங்கள்.


இளைஞர்களே! குழந்தை சேசுவை இளைஞராக வளர்த்த
புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.


நங்கையரே! கற்பின் பாதுகாவலரான புனித சூசையப்பரிடம்
மன்றாடுங்கள்.


சாவைக்கண்டு கலங்குவோரே! சேசுவின் அரவணைப்பிலும்,
தேவ மாதாவின் பராமரிப்பிலும் நல்ல மரணமடைந்த புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.


திருச்சபையின் அங்கங்களான விசுவாசிகளே! உங்களுடைய கலக்கம்,
குழப்பமெல்லாம் நீங்கி சமாதான வெற்றி கிடைக்க விசேஷமாய்
இந்நேரத்தில் திருச்சபையின் பரிபாலகரான புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.

மரியாயே வாழ்க!

நம் கடமையைச் செய்வோம்!! (Do our Duty)

நம் கடமையைச் செய்வோம்!!
(திருச்சபையிலும், நம் சமுதாயத்திலும் நிலவும் குழப்பத்திற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்து
பார்த்தால் ! அதற்கு பதில் வெகு தெளிவானது. மக்கள் தங்கள் கடமைகளிலிருந்து தவறியதால்
ஏற்பட்ட விளைவே! தலைவர்கள் தங்கள் பொறுப்பை அலட்சியப்படுத்தியதால், பெற்றோர்கள்
தங்களுடைய கடமையை தட்டிக்கழித்ததால்... இப்படி பலர் செய்த தவறுகள்தான் இன்றைய
சீர்கேட்டிற்கு காரணம். இதை சீர்செய்ய நாம் செய்யவேண்டியது ! கடவுள் நமக்களித்த
பொறுப்பை சரியாய் செய்வதேயாகும். இதைத்தான் திருச்சபை நம்மிடம் எதிர்பார்க்கிறது.
இதைக் குறித்து சங். லெஞ் சுவாமிகள் எழுதிய பொதுக் கடிதத்தின் தமிழாக்கத்தை உங்களுக்கு
அளிக்கிறோம். வாசகர்களே, இதை நன்றாக சிந்திக்க உங்களை அழைக்கிறோம்! ஆசிரியர்)


நம் அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் மத்தியில், மனுக்குலத்தின் எதிரியின் தாக்குதலிலிருந்து
நம்மை அவசியம் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவேதான் ஒவ்வொரு நாளும் இரவு
கட்டளை ஜெபத்தில் நாம் "சகோதரர்களே Sobrii estote et vigilate” என்று பாடி ஜெபிக்கிறோம்.
|
இந்த போருக்காக சாத்தான் தனக்கு சாதகமாய் எல்லாவித போர்க்கருவிகளை பயன்படுத்துகிறான்.
வெற்றி ஒன்றே அவனது குறிக்கோள். அவனது இலக்கு: ஆன்மாக்களை வீழ்த்தி அவற்றை அடிமைப்
படுத்துவதே! அதற்காக அவன் தன்னிடமுள்ள பேய்தனமான வெறுப்புடன் படிப்படியாக புத்திசாலித்
தனத்துடன் நகர்கிறான். அழிவு பாதையில் அவன் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.
ஆன்மாக்களை ஏமாற்றுவதற்காக அவன் பல வித்தைகளைப் பயன்படுத்தினாலும், ஒரேயொரு
வித்தையில் மட்டுமே பல வெற்றியுடன் ஜொலிக்கிறான். அது தன்னைத் தானே ஒளியின்
தூதனாய் மாற்றி மக்களை ஏமாற்றுவது. எளிதில் கண்டுபிடிக்க முடியாத தீங்கினை மக்களால்
எவ்வாறு தவிர்க்க முடியும்? மக்களை கனவு உலகத்திலே வாழவைக்கிறான். ஜெபத்தின்
வாழ்வில்கூட புகுந்து ஆன்மாக்களை ஏமாற்றி, அதன் மூலம் ஜெபத்தின் விளைவுகளை
வெகுவாக குறைக்கிறான்.
இக்கட்டான நிலையில் நாம் என்ன செய்வது? அவனுடைய புத்திசாலித்தனத்திற்கு எதிராய்
நம்மால் எதுவும் செய்ய இயலாது என்று இப்போரில் சரணடைவதா? புற முதுகு காட்டுவதா?
நம்முடைய ஜெபத்திலே ஊடுருவி நம்மை வீழ்த்த முடியும் என்றால் ! ஏன் ஜெயிக்க வேண்டும்? நாம்
வாழ்வது கனவு வாழ்க்கையா? நனவு வாழ்க்கையா? என்று தெரியாமலே எப்படி வாழ்வது?
இதற்கு பதில் மிக எளிமையானது. ஒருவேளை நம்முடைய சிக்கலான மூளைக்கு புரிந்துகொள்ள
முடியாத அளவு எளிமையானதாய் இருக்கலாம்.
நம்முடைய கடமையில் பிரமாணிக்கமாய் இருப்பதே ! கடவுளால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையில்
நாம் சந்தேகமின்றி பயணிக்கிறோம் என்பதற்கு சாட்சியாய் அமைகிறது. வாழ்வின் தினசரி
போராட்டத்தினால், ஒரே பணியை அதே போல் செய்வதால் நம்முடைய கடமைகள் கவர்ச்சியற்று
தோன்றுகிறது. ஆனால் அச்செயல்களே கடவுள் விரும்பிய அந்த ஸ்தானத்தில் நம்மை நிலைநிறுத்த
செய்கிறது. கடவுள் சித்தத்துடன் நம்மை ஒன்றிணைப்பதே அர்ச்சியசிஷ்டதனத்தின் அடிப்படை கூறு.
அதுவே மோட்சத்திற்கு செல்ல நாம் செய்யவேண்டிய மிக முக்கிய காரியம்.
நம்முடைய கடமையைச் செய்வதற்கு கடவுள் நமக்கு அளிக்கின்ற விசுவாச ஒளியும்,
வரப்பிரசாதமுமே போதுமானது. நம்முடைய அன்றாட காரியங்களை துணிவுடன் எதிர்கொள்ளவும்
, கடவுள் சித்தத்தை நேசத்துடன் செயலாற்றவும் கடவுளின் உதவி நம்மோடு இருக்கத்தான்
செய்கிறது.
நம் முன்னோர்கள் இதனை நன்கு அறிந்திருந்தனர். செய்யும் தொழிலை அவர்கள் வணங்கினர்.
கடமையைச் சரியாய் செய்வது ஜெபத்தின் தொடர்ச்சி என்று கருதினர். தொடர்ச்சி மட்டுமல்லாது
அதுவே தயாரிப்பாய் அவர்களுக்கு அமைந்தது. |
கடமையை அலட்சியப்படுத்தும் தற்கால போக்கின் விளைவை நாம் திருச்சபையிலும்,
சமுதாயத்திலும், வன்மையாய் எதிரொலிப்பதை கண்டுகொண்டே இருக்கிறோம்.
நம்முடைய மதம் வாழும் மனிதாவதாரத்தின் தேவ இரகசியம். நம் கடமையை சரியாய் செய்வது
அத்தகைய அவதாரத்தின் நிச்சயமான வெளிப்பாடு. கடவுளை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்துவது
முக்கியமான செயல் அல்லவா? அவற்றை அலட்சியப்படுத்தலாமா?
ஒரு கிறீஸ்தவன் அவனுடைய அன்றாட செயலினால் சேசுநாதரின் பாடுகளிலும், அவருடைய
இரட்சிப்பு பணியிலும் பங்குபெறுகிறான். கடவுளின் சந்நிதானத்தில் நாம் தினமும் வளர
வேண்டுமானால், நம்முடைய ஆன்மாவில் அமைதி நிலவ வேண்டுமானால் ! நம்முடைய
கடமையை சிறப்பாய் செய்வோம்.


தேவ அன்னையை நோக்குவோமாக!

அர்ச். மரிய வியான்னி அருளப்பர் குருவாகும் முன்பு தோட்ட வேலை செய்து
வந்தார். ஒரு கம்பை நட்டி, அதன் மீது மாதாவின் சிறு சுரூபம் ஒன்றை வைப்பார்.
வேலை செய்யும்போது அடிக்கடி அதை நோக்குவார். இதனால் வேலை அவருக்கு
கடினமானதாகத் தெரியாது. வேலை முடிந்ததும் அந்த அன்னையை அன்புடன்
நோக்கி நன்றி தெரிவிப்பார்.


நாமும் நமது அன்றாட வேலையின் நடுவில் தேவ அன்னையை நினைப்
போமாக. அதனால் நமது வேலையின் சுமையை அவ்வன்னை
குறைப்பார்கள்.

புனிதர்களின் அழியாத சரீரங்கள் - Part 2




புனிதர்களின் அழியாத சரீரங்கள் கடவுளை மகிமைப் படுத்துகின்றன. Joan Carroll Cruz என்ற அமெரிக்க ஆசிரியரால் எழுதப்பட்ட 'The Incorruptibles'' என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. - P. பிரான்சிஸ் குமார்

*அர்ச். சியென்னா கத்தரீனம்மாள் (1347 - 1380)*

அர்ச். கத்தரீனம்மாள் இத்தாலி தேசத்தில் சியென்னா என்னுமிடத்தி ல் 1347 -ம் வருடம்
தனது பெற்றோருக்கு 23-வது பிள்ளையாகப் பிறந்தாள். சிறு வயதிலேயே ஞானத்தில்
தேர்ச்சி பெற்றிருந்த அவள் தனது கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணித்தாள். தமது
6-வது வய தில் தமது சகோதரனோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது
நமதாண்டவருடைய காட்சியைப் பெற்றாள். அதில் சேசுகிறிஸ்து பாப்பரசரின்
ஆடை அணிகளை அணிந்து புனித இராயப்பர், சின்னப்பர், அருளப்பர்புடைசூழ
பீடத்தில் அமர்ந்தவராய் காட்சியளித்தார். அந்தக் காட்சியின் பிறகு
அர்ச். சாமிநாதரின் தவத்தின் மூன்றாம் சபையில் சேரத் தீர்மானித்தாள்.
17 -வது வயதில் துறவற ஆடை அணிந்து மூன்று வருடம் ஜெபத் தபத்தில் ஈடுபட்டு
நோயாளிகளை பராமரிப்பதிலும், கைதிகளை சந்திப்பதிலும் தம்மையே
அர்ப்பணித்தாள்.
அர்ச். கத்தரீனம்மாள் எவ்வளவுக்கு நம்தாண்டவருடன் ஒன்றித்திருந்தாளெனில் ஒரு
காட்சியில் நமதாண்டவர் அவளுக்கு ஒரு வைரகற்களாலான தங்க மோதிரம் அணி
வித்தார். அது அவளுக்கு மட்டுமே தெரியும்படியாக அருளப்பட்டது அர்ச். கத்தரீனம்மாள்
ஆண்டவருடைய ஐந்து திருக்காயங்களையும் பெற்று அவருடைய பாடுகளையும்
சுவைக்கும் வரம் பெற்றாள். அவளது வேண்டுதலின்படி இத்திருக்காயங்கள் வெளியே
தெரியாமல் அருளப்பட்டது. அவளது இறப்பிற்  ப் பிறகே இக்காயங்கள் வெளிப்படை
யாக  சரீரத்தில் தோன்றின.
திருச்சபைக்காகவும், பாப்புவின் அப்போஸ் தலிக்க ஸ்தானத்தின் மகிமையை
நிலைநாட்டு வதற்காகவும் தமது இறுதி நாட்களை செலவழித்தாள். அச்சமயம் நாடு
கடந்து வாழ்ந்து வந்த 11-ம் கிரகொரியார் என்ற பாப்புவை மீண்டும் ரோமைக்கு வரச்
செய்ய தமது ஆலோசனைகளையும், எல்லா முயற்சிகளையும் செய்து வெற்றிப்
பெற்றாள். இறுதியில் 1380-ல் ஏப்ரல் 29-ல் திருச் சபையின் ஐக்கியத்திற்காக தன்னையே
தகனப் பலியாக ஒப்புக் கொடுத்து பாக்கியமான மரண மடைந்தாள்.

அவளது சரீரம் மூன்று நாட்களுக்கு விசுவாசிகளின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டு
பின்னர் புனித மரிய ஸ்போரா மினர்வா ஆலயத்தை ஒட்டிய கல்லறைத் தோட்டத்தில்
அடக்கம் செய்யப்பட்டது.
*அழியாத சரீரம் !*

சில காலங்களுக்குப்பின்னர் அவளது ஆன்ம குருவான முத்ரெய்மன்ட் கால்வாவால்
கல்லறை திறக்கப்பட்டது. சரீரம் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மீண்டும் சரீரம் ஜெபமாலை சிற்றாலயத்தின் தலைவாயிலில் அடக்கம் செய்யப்பட்டது
. இச்சமயத்தில் ப ா ப் ப ர ச ரி ன் உத்தரவுப் பெற்று முத். ரெய்மண்ட் சுவாமிகள்
புனிதையின் அழியாத சரீரத்திலிருந்து தலையை தனியே அகற்றி அழகியப் பேழை
யில் வைத்து சியென்னாவிலுள்ள சாமிநாதர் சபை மடத்திற்கு வழங்கினார். பின்னர்
1383-ல் சரீரம் காம்போ ரெஜியோ நகர் கன்னியர்மடத்திற்கு இரகசியமாக கொண்டு
செல்லப்பட்டு அங்குள்ள ஆலயத்தில் புனிதைக் கென்று ஏற்படுத்தப்பட்ட அழகிய
பீடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வைபவத் தில் புனிதையின் வயதான தாயாரும்
கலந்து கொண்டார்.


1385-ல் சரீரத்திலிருந்து ஒரு கரம் பிரிக்கப்பட்டு சியென்னா நகருக்கு வழங்கப்பட்டது.
அதிலிருந்து மூன்று விரல்கள் வெனிசுக்கு அருளிக்கமாக (Relic) கொடுக்கப்பட்டது.
1430-ல் சரீரம் மீண்டும் அழகிய வேலைப் பாடமைந்த பெட்டியில் வைக்கப்பட்டது.
பின் வந்த நூற்றாண்டுகளில் அச்சரீரத்திலிருந்து பலப் பகுதிகள் ஐரோப்பா முழுவதற்கும்
அருளிக்கமாக வழங்கப்பட்டன. 1487ல் மற்றொரு கரம் ரோமையிலுள்ள சாமிநாதர்
சபைக் கன்னியர் மடத்திற்குக் கொடுக்கப்பட்டது. சரீரத்தின் இடது பாதம் வெனிஸ்
நகர புனிதர்கள் அருளப்பர், சின்னப்பர் ஆலயத்திற்கு கொடுக்கப் பட்டது. 1597-ல்
இந்தப் பாதத்தில் உள்ள காயம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு
ஆராயப் பட்டது.
பின்னர் 1855ல் ஏப்ரல் மாதத்தில் சரீரம் வைக்கப்பட்டுள்ள ஆலயம் விரிவுபடுத்தப்படும்
போது புனிதையின் அழியாத சரீரம் வைக்கப் பட்டிருந்த கல்லறைப் பீடம் பல
திருச்சபை அதிகாரிகள், சபை அதிபர் முன்னிலையில் திறக்கப் பட்டது. சரீரத்திலிருந்து
பல பகுதிகள் அருளிக் கமாக எடுக்கப்பட்டு விட்டாலும் சரீரத்தின் மற்றப் பகுதிகள்
அழியாமல் மிகவும் புதியனவாக இருந்தது. அச்சமயம் நம் தாண்டவரால் மோதிரம்
அணிவிக்கப்பட்ட விரல் ப்ளாரன் சுக்கு அருகில் உள்ள பொந்தியானோ என்னுமிடத்தினுள்
தேவாலயத்திற்கு வழங்கப்பட்டது
பின்பு சரீரம் மீண்டும் அதே பெட்டியில் வைத்து, அதே பீடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 4ம் தேதி அர்ச். சாமிநாதர் திரு நாளின் போது சரீரம்
விசுவாசிகளின் வணக் கத்திற்காக வைக்கப்பட்டு பின்னர் ரோமை செனட்
அதிகாரிகள் சூழ பவனியாக எடுத்துச் செல்லப்படும்.
தன து வாழ் நாளிலேயே புனிதை என்று மதிக்கப்பட்ட அர்ச். கத்தரீனம்மாள் 1461-ல்
2ம் பத்திநாதர் பாப்புவால் புனிதப் பட்டம் வழங்கப்பட்டார், 1939ல் பாப்பரசர் 12ம் பத்தி
நாதரால் இத்தாலி தேசத்தின் பரலோகப் பாது காவலியாக அறிவிக்கப்பட்டார்.
அர்ச். கத்த ரீனம்மாள் தேவ ஏவுதலினால் பல ஞான, வேத சாஸ்திர நூல்களை
எழுதியுள்ள தால், 1970-ல் பாப்பு 6-ம் சின்னப்பர் திருச்சபையின் வேத பாரகர் என்ற
சிறப்புப் பட்டம் வழங்கினார். அர்ச். கத்தரீனம்மாள் இப்பட்டத்தைப் பெறும்
இரண்டாவது புனிதையாவாள்.

அர்ச். சியென்னா கத்தரீனம்மாளே,
* எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். திரு நாள் : ஏப்ரல், 29.*

மரியாயே வாழ்க!