Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 5 மார்ச், 2019

நம் கடமையைச் செய்வோம்!! (Do our Duty)

நம் கடமையைச் செய்வோம்!!
(திருச்சபையிலும், நம் சமுதாயத்திலும் நிலவும் குழப்பத்திற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்து
பார்த்தால் ! அதற்கு பதில் வெகு தெளிவானது. மக்கள் தங்கள் கடமைகளிலிருந்து தவறியதால்
ஏற்பட்ட விளைவே! தலைவர்கள் தங்கள் பொறுப்பை அலட்சியப்படுத்தியதால், பெற்றோர்கள்
தங்களுடைய கடமையை தட்டிக்கழித்ததால்... இப்படி பலர் செய்த தவறுகள்தான் இன்றைய
சீர்கேட்டிற்கு காரணம். இதை சீர்செய்ய நாம் செய்யவேண்டியது ! கடவுள் நமக்களித்த
பொறுப்பை சரியாய் செய்வதேயாகும். இதைத்தான் திருச்சபை நம்மிடம் எதிர்பார்க்கிறது.
இதைக் குறித்து சங். லெஞ் சுவாமிகள் எழுதிய பொதுக் கடிதத்தின் தமிழாக்கத்தை உங்களுக்கு
அளிக்கிறோம். வாசகர்களே, இதை நன்றாக சிந்திக்க உங்களை அழைக்கிறோம்! ஆசிரியர்)


நம் அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் மத்தியில், மனுக்குலத்தின் எதிரியின் தாக்குதலிலிருந்து
நம்மை அவசியம் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவேதான் ஒவ்வொரு நாளும் இரவு
கட்டளை ஜெபத்தில் நாம் "சகோதரர்களே Sobrii estote et vigilate” என்று பாடி ஜெபிக்கிறோம்.
|
இந்த போருக்காக சாத்தான் தனக்கு சாதகமாய் எல்லாவித போர்க்கருவிகளை பயன்படுத்துகிறான்.
வெற்றி ஒன்றே அவனது குறிக்கோள். அவனது இலக்கு: ஆன்மாக்களை வீழ்த்தி அவற்றை அடிமைப்
படுத்துவதே! அதற்காக அவன் தன்னிடமுள்ள பேய்தனமான வெறுப்புடன் படிப்படியாக புத்திசாலித்
தனத்துடன் நகர்கிறான். அழிவு பாதையில் அவன் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.
ஆன்மாக்களை ஏமாற்றுவதற்காக அவன் பல வித்தைகளைப் பயன்படுத்தினாலும், ஒரேயொரு
வித்தையில் மட்டுமே பல வெற்றியுடன் ஜொலிக்கிறான். அது தன்னைத் தானே ஒளியின்
தூதனாய் மாற்றி மக்களை ஏமாற்றுவது. எளிதில் கண்டுபிடிக்க முடியாத தீங்கினை மக்களால்
எவ்வாறு தவிர்க்க முடியும்? மக்களை கனவு உலகத்திலே வாழவைக்கிறான். ஜெபத்தின்
வாழ்வில்கூட புகுந்து ஆன்மாக்களை ஏமாற்றி, அதன் மூலம் ஜெபத்தின் விளைவுகளை
வெகுவாக குறைக்கிறான்.
இக்கட்டான நிலையில் நாம் என்ன செய்வது? அவனுடைய புத்திசாலித்தனத்திற்கு எதிராய்
நம்மால் எதுவும் செய்ய இயலாது என்று இப்போரில் சரணடைவதா? புற முதுகு காட்டுவதா?
நம்முடைய ஜெபத்திலே ஊடுருவி நம்மை வீழ்த்த முடியும் என்றால் ! ஏன் ஜெயிக்க வேண்டும்? நாம்
வாழ்வது கனவு வாழ்க்கையா? நனவு வாழ்க்கையா? என்று தெரியாமலே எப்படி வாழ்வது?
இதற்கு பதில் மிக எளிமையானது. ஒருவேளை நம்முடைய சிக்கலான மூளைக்கு புரிந்துகொள்ள
முடியாத அளவு எளிமையானதாய் இருக்கலாம்.
நம்முடைய கடமையில் பிரமாணிக்கமாய் இருப்பதே ! கடவுளால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையில்
நாம் சந்தேகமின்றி பயணிக்கிறோம் என்பதற்கு சாட்சியாய் அமைகிறது. வாழ்வின் தினசரி
போராட்டத்தினால், ஒரே பணியை அதே போல் செய்வதால் நம்முடைய கடமைகள் கவர்ச்சியற்று
தோன்றுகிறது. ஆனால் அச்செயல்களே கடவுள் விரும்பிய அந்த ஸ்தானத்தில் நம்மை நிலைநிறுத்த
செய்கிறது. கடவுள் சித்தத்துடன் நம்மை ஒன்றிணைப்பதே அர்ச்சியசிஷ்டதனத்தின் அடிப்படை கூறு.
அதுவே மோட்சத்திற்கு செல்ல நாம் செய்யவேண்டிய மிக முக்கிய காரியம்.
நம்முடைய கடமையைச் செய்வதற்கு கடவுள் நமக்கு அளிக்கின்ற விசுவாச ஒளியும்,
வரப்பிரசாதமுமே போதுமானது. நம்முடைய அன்றாட காரியங்களை துணிவுடன் எதிர்கொள்ளவும்
, கடவுள் சித்தத்தை நேசத்துடன் செயலாற்றவும் கடவுளின் உதவி நம்மோடு இருக்கத்தான்
செய்கிறது.
நம் முன்னோர்கள் இதனை நன்கு அறிந்திருந்தனர். செய்யும் தொழிலை அவர்கள் வணங்கினர்.
கடமையைச் சரியாய் செய்வது ஜெபத்தின் தொடர்ச்சி என்று கருதினர். தொடர்ச்சி மட்டுமல்லாது
அதுவே தயாரிப்பாய் அவர்களுக்கு அமைந்தது. |
கடமையை அலட்சியப்படுத்தும் தற்கால போக்கின் விளைவை நாம் திருச்சபையிலும்,
சமுதாயத்திலும், வன்மையாய் எதிரொலிப்பதை கண்டுகொண்டே இருக்கிறோம்.
நம்முடைய மதம் வாழும் மனிதாவதாரத்தின் தேவ இரகசியம். நம் கடமையை சரியாய் செய்வது
அத்தகைய அவதாரத்தின் நிச்சயமான வெளிப்பாடு. கடவுளை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்துவது
முக்கியமான செயல் அல்லவா? அவற்றை அலட்சியப்படுத்தலாமா?
ஒரு கிறீஸ்தவன் அவனுடைய அன்றாட செயலினால் சேசுநாதரின் பாடுகளிலும், அவருடைய
இரட்சிப்பு பணியிலும் பங்குபெறுகிறான். கடவுளின் சந்நிதானத்தில் நாம் தினமும் வளர
வேண்டுமானால், நம்முடைய ஆன்மாவில் அமைதி நிலவ வேண்டுமானால் ! நம்முடைய
கடமையை சிறப்பாய் செய்வோம்.


தேவ அன்னையை நோக்குவோமாக!

அர்ச். மரிய வியான்னி அருளப்பர் குருவாகும் முன்பு தோட்ட வேலை செய்து
வந்தார். ஒரு கம்பை நட்டி, அதன் மீது மாதாவின் சிறு சுரூபம் ஒன்றை வைப்பார்.
வேலை செய்யும்போது அடிக்கடி அதை நோக்குவார். இதனால் வேலை அவருக்கு
கடினமானதாகத் தெரியாது. வேலை முடிந்ததும் அந்த அன்னையை அன்புடன்
நோக்கி நன்றி தெரிவிப்பார்.


நாமும் நமது அன்றாட வேலையின் நடுவில் தேவ அன்னையை நினைப்
போமாக. அதனால் நமது வேலையின் சுமையை அவ்வன்னை
குறைப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக