உயர்ந்த
கோத்திரத்தாரும் பக்தியுள்ளவர்களுமான தாய் தந்தையரிடத்தினின்று ஜோசெபாத் பிறந்தார். கர்த்தருடைய
திருப்பாடுகளைப் பற்றி அவருடைய தாயார் பேசினதைக் கேட்ட ஜோசெபாத் திருப்பாடுகளின் மட்டில் இரக்கமும் பக்தியுங்கொண்டார். இவர்
ஒரு சன்னியாச மடத்தில் வளர்ந்து புண்ணிய வழியில் சுறுசுறுப்பாய் இருந்தார். இவர்
துறவியான பின் தர்ம வழியில்
அதிகரித்து வெறுங் காலால் நடந்து எப்போதும் சுத்த போசனம் அருந்தி மயிர்ச் சட்டை தரித்து கடுந் தவம் புரிவார்.
இவருடைய அதிசயத்திற்குரிய புண்ணியங்களினிமித்தம் அந்த மடத்திலுள்ளவர்களுக்குள் இவர் வயதில்
சிறுவராயினும், அதிமேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார். இவ்வுன்னத
பட்டம் பெற்ற பின் புண்ணிய வழியில்
முன்னிலும் உத்தமமாய் ஒழுகி, பிரசங்கத்தாலும் புத்தகங்களாலும் அநேக பதிதரை சத்திய
சபையில் சேர்த்துக்கொண்டு, பாவிகளை மனந்திருப்பி பிரிவினையிலிருந்த கிரேக்க சபையை சத்திய திருச்சபையுடன் ஒன்றித்திருக்கும்படி சர்வ முயற்சியும் செய்து
வந்தார். அநேக
கோயில்களைக் கட்டி அலங்கரித்துத் துறவற மடங்களை ஏற்படுத்தி திருச்சபை செழித்தோங்கும்படி பிரயாசைப்பட்டு வந்தார். பிரிவினைக்காரரான
சில தேவ துரோகிகள், இவர்
விசாரணைக்கு வெளியூர்களுக்குப் போய் தங்கியிருந்த வீட்டில்
பிரவேசித்துத் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை
அடித்து காயப்படுத்தும் தருவாயில், இப்பரிசுத்த மேற்றிராணியார் அவர்களிடம்
ஓடிப்போய்: இதோ, என்னை உங்கள்
எண்ணப்படி செய்யலாம் என்ற மாத்திரத்தில்
அந்த துஷ்டர் அவர் மேல் பாய்ந்து
அவரை வெட்டிக் கொலை செய்து அவர்
சரீரத்தை ஆற்றில் எறிந்தார்கள். ஆனால்
அது பிரகாசத்துடன் மிதப்பதைக் கண்ட கிறீஸ்தவர்கள் அதைப்
பக்தியாய் எடுத்து பத்திரப்படுத்தினார்கள். அதனால்
அநேக புதுமைகள் நடந்தேறின.
யோசனை
நமது ஞான மேய்ப்பர்களுக்கு
நாம் அமைந்து கீழ்ப்படிந்து, ஒருபோதும் அவர்களுக்கு பங்கம் வருவிக்காமலும் தீங்கு செய்யாமலும் இருப்போமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக