Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 12 நவம்பர், 2017

St. Gertrude, November 15-ம் தேதி


                                   
                அர்ச்.ஜெர்த்ருத்தம்மாள், கன்னிகை  (கி.பி.1292)

 சிறந்த கோத்திரத்தாரும் அர்ச்.மெக்டில்டெஸம்மாளின் சகோதரியுமான
ஜெர்த்ருத் ஐந்து வயதில் ஒரு கன்னியர் மடத்திற்கு அனுப்பப்பட்டு, ஞானப் படிப்பையும் உலகப் படிப்பையும் கற்று வந்தாள்.  30-ம் வயதில் அந்த மடத்தின் அதிசிரேஷ்ட தாயாராக தெரிந்துகொள்ளப்பட்டாள்.  கர்த்தருடைய திருப்பாடுகளைக் குறித்தும் தேவநற்கருணையைக் குறித்தும் அவள் தியானிக்கும்போது அவள் கண்களினின்று  கண்ணீர் தாரை தாரையாக வடியும்.  அநேக முறை அவள் ஜெப நேரத்தில் பரவசமாவாள்.  மேலும் இப்புண்ணியவதி நமது கர்த்தரை தரிசிக்கப் பாக்கியம் பெற்று, மோட்ச பேரின்பத்தை அனுபவித்தாள்.  தாழ்ச்சி, கீழ்ப்படிதல், இடைவிடா ஜெபம், ஒருசந்திää சுத்த போசனம் முதலியவைகளை அனுசரித்து, நாளுக்கு நாள் புண்ணிய வாழ்வில் உயர்ந்தாள்.  இவ்வளவு புண்ணியவதியாயிருந்தும் தன்னைத் தாழ்த்தி ஒன்றுக்கும் உதவாதவளென்று எண்ணி, மற்றவர்களுக்கு நீச ஊழியங்களை ஆசையுடன் செய்து வருவாள்.  மற்றக் கன்னியாஸ்திரீகள் சிரேஷ்ட தாயாரின் புண்ணியங்களைக் கண்டு அதிசயித்து, அவளுடைய நன்மாதிரியைப் பின்பற்ற பிரயாசைப்படுவார்கள்.  ஜெர்த்ருத் தேவதாயார் பேரில் அதிக பக்தி வைத்து வந்தாள்.  உத்தரிக்கிற ஆத்துமாக்கள் மட்டில் இவளுக்கிருந்த இரக்கத்தால், தன் ஜெபங்களை அந்த ஆத்துமங்களுக்காக ஒப்புக்கொடுப்பாள்.  ஜெர்த்ருத்தம்மாளின் சிறந்த புண்ணியங்களினிமித்தம் புதுமை வரம் பெற்றிருந்தாள்.  இந்தப் புண்ணியவதி மோட்ச பாக்கியத்தின் மட்டில் அதிக ஏக்கம் கொண்டு யாதொரு சரீர நோவுமின்றி சாகக் கிடக்கையில் நமது கர்த்தரும் அவருடைய திருத்தாயாரும் அவளுக்குத் தோன்றி அவள் ஆத்துமத்தை மோட்சத்திற்குக் கூட்டிக்கொண்டு போனார்கள்.  


யோசனை
 கர்த்தர் மட்டில் உள்ள தேவ சிநேகத்தால் அர்ச்.ஜெர்த்ருத்தம்மாளுக்கு உண்டான பெரும் பாக்கியத்தை நாமறிந்து நம்மால் முடியும் மட்டும் சர்வேசுவரனை சிநேகிப்போமாக.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக