Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 12 நவம்பர், 2017

Presentation of Our Lady, November 21-ம் தேதி            



காணிக்கை மாதா திருநாள்


                தெய்வ பக்தியுள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை சர்வேசுவரனுக்கு ஒப்புக்கொடுப்பார்கள். யூதருக்குள் சிலர் தங்கள் குழந்தைகளை தேவாலயத்தில் சர்வேசுவரனுக்கு ஒப்புக்கொடுத்து, தேவ பக்தியில் வளர்க்கும்படிக்கு அவர்களைக் குருக்கள் கையில் ஒப்படைப்பார்கள்.  கன்னிமரியாள் சிறு பிள்ளையாய் இருக்கும்போதே அவளுடைய தாய் தந்தையரான அன்னம்மாள் ஜுவக்கீன் என்பவர்கள் அத்திருக் குழந்தையைத் தேவாலயத்திற்குக் கொண்டுபோய் சர்வேசுவரனுக்கு ஒப்புக்கொடுத்த பின், அப்பரிசுத்த ஸ்தல பிள்ளைகள் வளர்க்கப்படும் இடத்திற்கு அக் குழந்தையைக்  கொண்டுபோய் அதைக் குருக்களுடைய கையில் ஒப்புவித்தார்கள்.  இத் திருக்குழந்தை தன் பெற்றோரையும், பெற்றோர் தங்கள் அருமை மகளையும் விட்டுப் பிரியும்போது உண்டான மகா துக்க துயரத்தை நல்ல மனதுடன் சகித்து சர்வேசுவரனுக்கு ஒப்புக்கொடுத்தார்கள்.  அத் திரு ஸ்தலத்தில் கன்னிமரியாள் ஒரு சரீரமுள்ள சம்மனசு போல நடந்து, தேவ சிநேகம், பிறர் சிநேகம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல், ஒறுத்தல் முதலிய புண்ணியங்களைச் சீராய் அனுசரித்து சகலருக்கும் அணையா தீபம் போல பிரகாசித்தாள்.  இப் பரிசுத்த பாலிகையின் சற்குண நடத்தையைக் கண்ட சிறுமிகள் அதிசயித்து தர்ம வழியில் அவளைக் கண்டுபாவித்தார்கள்.  இப் பரிசுத்த கன்னிகை இந்தத் தமது நூதன ஜீவியத்தால் மற்றவர்களும் மடங்களில் சேர்ந்து கன்னிமையை அனுஷ்டிக்க வழிகாட்டியானாள். 



யோசனை

                சர்வேசுவரனுடைய பணிவிடைக்கு அழைக்கப்படும் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர் தடைசெய்யாமல் அனுப்பக்கடவார்கள்.  இப் பரிசுத்த அந்தஸ்தில் சேர்ந்தவர்கள் தேவ கன்னிகையைக் கண்டுபாவித்து உலகத்திற்கு செத்து, மடத்தின் ஒழுங்குகளைத திட்டமாய் அனுசரித்து, மூன்று மகா வார்த்தைப்பாடுகளையும் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி, மற்றப் புண்ணியங்களையும் சுறுசுறுப்பாய் அனுஷ்டிப்பார்களேயாகில், தேவமாதாவுக்குப் பிரிய பிள்ளைகளும் சேசுநாதருக்கு உகந்த பத்தினிகளுமாவார்கள் என்பது நிச்சயம்.            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக