Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 12 நவம்பர், 2017

St. Edmund, King, Martyr. November 20-ம் தேதி

         
 அர்ச்.எட்மண்ட்,
இராஜா, வேதசாட்சி (கி.பி.870)

 எட்மண்டுக்கு 15 வயது நடக்கையில் இங்கிலாந்து தேசத்தின் கீழ்த்திசைக்கு இராஜாவானார்.  இவர் வயதில் இளைஞராயினும், பக்தி புத்தியிலும் தாழ்ச்சி சிரவணமாகிற புண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார்.  தமது பிரஜைகளை மகா அன்புடன் கவனித்து அரசு புரிந்தார்.  தேசத்தில் தேவ பயபக்தியும் நேர்மை குணமுமுள்ள உத்தியோகஸ்தர்களை நியமித்து, நீதி நியாயத்துடன் வேலை செய்யும்படி செய்தார்.  எப்போதும் பிரஜைகளுடைய நன்மைகளைத் தேடி, ஏழை எளியவர்களுக்கு உதவி புரிந்து, விதவைகள் அநாதை பிள்ளைகள் முதலியவர்களுக்கு  விசேஷ வருமானங்களை ஏற்படுத்தி சகலருடைய சுகத்தையும் விரும்பினதினால் இவர் தர்ம இராஜாவென்று அழைக்கப்பட்டார்.  சங்கீதங்களை மனப்பாடம் செய்து, அடிக்கடி அவற்றை ஜெபித்து சத்திய வேதம் செழித்தோங்கும்படி முயற்சித்தார்.  இந்த நல்ல இராஜா தமது பிரஜைகளை அன்பு தயவுடன் நீதி பரிபாலித்து வருகையில் டேன்ஸ் எனப்படும் முரட்டு ஜாதி ஜனங்கள் இங்கிலாந்தின் மீது சடுதியில் படையெடுத்து பட்டணங்களையும் திரளான ஜனங்களையும் நெருப்புக்கு இரையாக்கி, பல அக்கிரமங்களையும் புரிந்தபோது எட்மண்ட தமது சிறு படையைத் திரட்டி சத்துருக்களைத் தாக்கியும் அவர்களை அவரால் ஜெயிக்க முடியவில்லை.  அப்போது எட்மண்ட் மனித இரத்தத்தைச் சிந்த மனம் வராமல் சத்துருவுடன் சமாதானம் செய்ய சம்மதித்தார்.    நிஷ்டூர குணமுள்ள சத்துருக்கள் சத்திய வேதத்திற்கு விரோதமான உடன்படிக்கைக்கு அவரை உடன்படுத்தப் பார்க்கையில் எட்மண்ட் அதற்குச் சம்மதியாமல் சத்துருக்கள் கையால் கொல்லப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்.

யோசனை
 ஒரு உத்தியோகம் பெற, ஒரு காரியம் கைகூட, வியாதி தீர சத்திய வேதத்திற்கு விரோதமான யாதொரு காரியத்தைச் செய்ய பிறர் நமக்குத் துர்புத்தி சொல்லும்போது நாம் அதற்கு சம்மதிக்கக் கூடாது.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக