Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 12 நவம்பர், 2017

St. Odo., November 18-ம் தேதி


 அர்ச்.ஓடோ
மடாதிபதி  (கி.பி.942)

 ஓடோ என்பவருடைய தாய் தந்தையரின் ஜெபதபத்தாலும், தேவமாதாவுக்கு நேர்ந்த பொருத்தனைகளின் பலனாலும் சர்வேசுவரன் இவரை அவர்களுக்குக் கொடுக்கச் சித்தமானார்.  ஓடோ சிறுவயதில் புண்ணிய வழியில் சுறுசுறுப்புடன் நடந்து வந்தார்.  இவருடைய தகப்பனார் தம்மை இராஜ அரண்மனை உத்தியோகத்திலேயே இருக்கும்படிச் செய்ய முயற்சித்ததை ஓடோ அறிந்து அதற்கு இணங்காமல், சர்வேசுவரனுக்கு ஊழியஞ் செய்ய தீர்மானித்திருந்தார்.  இக் கருத்துடன் அவர் வேடிக்கை விளையாட்டு, வேட்டை, வாசாப்பு முதலியவைகளை வெறுத்து, தன் அறையில் தனித்திருந்து ஜெபதபங்களையும் ஒருசந்தி உபவாசங்களையும் புரிந்து சர்வேசுவரனோடு ஒன்றித்திருந்தார்.  தமக்குண்டான இடறுகளை நிவர்த்தி செய்து, ஓடோ உலகத்தை துறந்து ஒரு சன்னியாச மடத்தை ஏற்படுத்தினார்.  இவருடைய சிறந்த புண்ணியங்களையும் தர்ம நடத்தையையுங் கண்ட அநேக துரை மக்கள் அவருடைய மடத்தில் சேர்ந்து புண்ணிய வழியில் வாழ்ந்தார்கள்.  ஓடோவின் அர்ச்சியசிஷ்டதனத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பாப்பாண்டவர் அரசர்களுக்குள்ளே இருந்த பகை, விரோதங்களை நீக்கி அவர்களைச் சமாதானப்படுத்தும்படி அவரை அனுப்பினார்.  இந்த மேலான வேலையில் ஓடோ வெற்றியடைந்து, அரசராலும் பிரஜைகளாலும் பெருமைப்படுத்தப்பட்டார்.  இவர் தமது சீஷர்களைத் திறமையாய்      நடத்தி, மவுனத்தையும் ஏகாந்தத்தையும் அவர்களுக்கு விசேஷ விதமாய் போதித்ததினால் அவர்கள் புண்ணியவான்களானார்கள்.  ஓடோ சமாதான வேலையினிமித்தம் புறப்பட்டுப் போகையில் வழியில் வியாதியாய் விழுந்து அர்ச்சியசிஷ்டவராய் மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார். 

யோசனை

 மௌனமும் ஏகாந்தமும் ஒருவனைப் பல பாவங்களினின்று விலக்குமென்று  அறிவோமாக.          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக