Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 12 நவம்பர், 2017

St. Cecilia., V.M November 22-ம் தேதி


அர்ச்.செசீலியம்மாள்,
 வேதசாட்சி (கி.பி.230)

                செசீலியம்மாள் இளம் வயதில் கல்வி கற்று சங்கீதக் கருவிகளை வாசித்து இனிய தொனியுடன் வேத கீர்த்தனைகளைப் பாடி வருவாள்.  இவளுடைய அழகு சவுந்தரியத்தைக் கண்ட அநேக வாலிபர் இவளை மணமுடித்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள்.  தன் தாய் தந்தையரின் கட்டாயத்தால் செசீலி வலேரியான் என்னும் துரைக்கு வாழ்க்கைப்பட்டாள்.  மணமுடித்துக்கொண்ட இரவே செசீலி தன் கணவனை நோக்கி நான் என் கன்னிமையை சர்வேசுவரனுக்கு ஒப்புக்கொடுத்தேன்.  மேலும் ஒரு தேவ தூதன் என்னுடனிருப்பதால் என்னைத் தொட வேண்டாமென்றாள். அஞ்ஞானியான வலேரியான் தேவ தூதனைப் பார்க்க ஆசித்து ஞானஸ்நானம் பெற்று அவரைக் கண்டு மகிழ்ந்தார். 
           இந் நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்ட வலேரியானுடைய சகோதரனும் ஞானஸ்நானம் பெற்று சம்மனசைப் பார்க்கும் பாக்கியம் பெற்றார்.  வலேரியானும் அவர் சகோதரனும் கிறீஸ்துவர்களானதை அறிந்த அதிபதி அவர்கள் இருவரையும் வேதத்திற்காகக் கொல்லக் கட்டளையிட்டு செசீலியம்மாளைக் காவலில் வைத்தான்.  இவன் செசீலியம்மாளுடன் வேத தர்க்கஞ் செய்து தான் தோல்வியடைந்ததினால் வெட்கங்கொண்டு அவளை நெருப்பிலிட்டு சுட்டெரிக்கக் கட்டளையிட்டான்.  ஆனால் நெருப்பால் செசீலியம்மாள் சிறிதும் பாதிக்கப்படாததை அவன் அறிந்து அவள் தலையை வெட்டும்படி தீர்மானம் செய்தான்.  கொலைஞர் வேதசாட்சியைக் கத்தியால் மூன்று வெட்டு வெட்டியும் தலை துண்டிக்கப்படவில்லை.  இந்தப் பெருங்காயத்தால் செசீலி கொடூர வேதனையனுபவித்து மூன்றாம் நாள் தன் ஆத்துமத்தைத் தன் தேவ பத்தாவின் கையில் ஒப்படைத்து அவரின் அரவணைப்புக்குள்ளானாள். 




யோசனை               
நாம் ஒரு போதும் கெட்ட பாடல்களைப் பாடவும் கேட்கவுங் கூடாது.   அதற்கு விரோதமாய் தேவ கீர்த்தனைகளைப் பாடி சர்வேசுவரனை ஸ்துதித்துப் புகழக்கடவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக