அர்ச்.மார்ட்டின், பாப்பாண்டவர், வேதசாட்சி
(கி.பி.655)
மார்ட்டினுடைய சிறந்த புண்ணியத்தையும் கல்வியையும் பார்த்து அர்ச்.இராயப்பருடைய சிம்மாசனத்திற்கு நியமிக்கப்பட்டார். கான்ஸ்டாண்டிநோபிளில்
ஒரு புது பதித மதம்
முளைத்து அதில் அநேகர் சேர்ந்ததுடன் அந்நகரின் மேற்றிராணியாரான பவுல் என்பவரும் அதற்கு ஆதரவாக இருந்ததை மார்ட்டின் பாப்பாண்டவர் அறிந்து, ஸ்தானாதிபதிகளை அவ்விடத்திற்கு அனுப்பி, காரியத்தை ஒழுங்குபடுத்தும்படிச் செய்தார். பதிதனான
மேற்றிராணியார் அந்த ஸ்தானாதிபதிகளை பரதேசத்திற்கு
அனுப்பி விட்டார். இதற்குப்
பின் அர்ச்.பாப்பாண்டவர் அநேக மேற்றிராணிமாரை திருச்;சங்கமாகக் கூட்டி பவுல் மேற்றிராணியார் பேரிலும் அந்த பதித மதத்தைச்
சேர்ந்தவர்கள் பேரிலும் திருச்சபை சாபம் போட்டார். பதித மதத்தானான கன்ஸ்தான்ஸ்
இராயன் சினங்கொண்டு, தன் மந்திரிகளில் ஒருவனை
உரோமைக்கு அனுப்பி பாப்பாண்டவரைக் கொல்லும்படி கட்டளையிட்டான். திவ்விய
பூசை செய்யும் பாப்பாண்டவரைக் கொல்லும்படி மேற்கூறிய மந்திரியின் சேவகன் அவரை அணுகியபோது புதுமையாக
அவன் குருடனானான். கொடுங்கோலனான
இராயனுடைய கட்டளைப்படி ஒரு படைத்தலைவன் பெரும்
படையுடன் உரோமைக்குச் சென்று கபடமாய் பாப்பாண்டவரைச் சிறைப்படுத்தி, இராயனிடன் கூட்டிக்கொண்டு வந்தான். இராயன்
அவரைப் பலவாறாய் உபாதித்து அவரைக் கொலை செய்ய முயற்சித்தபோது,
பதித மேற்றிராணியார் கடின வியாதியாய் விழுந்து
இறந்தார். தனக்கும்
மற்ற பதிதருக்கும் போட்ட சாபத்தை எடுக்கும்படி இராயன் மார்ட்டின் பாப்பாண்டவருக்கு கட்டளையிட்டு, அவரை உபாதித்தபோதிலும் அவர்
அதற்குச் சம்மதியாததால் அவரை பரதேசத்திற்கு அனுப்பினான். அவர்
பரதேசத்தில் சொல்ல முடியாத வாதைகளை அனுபவித்து வேதத்திற்காக தமது உயிரைக் கொடுத்தார்.
யோசனை
நாம் எந்த காரணத்தைக் கொண்டும் இதர மதத்தாருடைய தேவாரதனையில் பங்கு பெறக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக