Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 12 நவம்பர், 2017

St. Gregory, Bishop November 17-ம் தேதி

     
 அர்ச்.கிரகோரி மேற்றிராணியார்(கி.பி.270)

 அதிசயங்களைச் செய்பவர் என்று வழங்கப்படும் கிரகோரியென்பவர் அஞ்ஞானிகளான தாய் தந்தையர்களிடத்தினின்று பிறந்து, பல தேசங்களுக்குச் சென்று உயர்ந்த சாஸ்திரங்களைக் கற்றறிந்து கிறீஸ்தவ
வேதமே சத்திய வேதமென்று நிச்சயித்து ஞான தீட்சை பெற்றார்.  இவர் ஒரு நாள் பிரயாணஞ் செய்கையில் பெரும் மழை பெய்ததினால் அருகிலிருந்த பசாசின் கோவிலுக்குச் சென்றார்.  அதில் பல முறை சிலுவை அடையாளம் போட்டு, மழை நின்ற பின் அதை விட்டு புறப்பட்டார்.  சற்று நேரத்திற்குப் பின் பூசாரி அதில் பிரவேசித்து பசாசை விடை கேட்கையில் கிரகோரியின் உத்தரவின்றி தான் விடை கொடுக்கக் கூடாதென்று சொல்லி விட்டது.  அக்கணமே பூசாரி கிரகோரியாரைத் தொடர்ந்து போய் மன்றாடியதின் பேரில், ஒரு சீட்டில், "பசாசே நீ கோவிலில் பிரவேசிக்கலாம்" என்று எழுதியனுப்பினார்.  உடனே பசாசு விடை கொடுக்க ஆரம்பித்ததை அவன் கண்ட பின், தன் தொழிலை விட்டுவிட்டு ஞானஸ்நானம் பெற்றான்.  இவர் ஊர்ஊராய்ச் சென்று வேதம் போதித்து திரளான ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து அநேக கோவில்களைக் கட்டுவித்தார்.  ஒரு கோவிலைக் கட்டுவதற்கு ஒரு பெரும் பாறை தடையாயிருந்தபோது விசுவாசத்துடன் அப் பாறையை அப்பாலே அகலும்படி கட்டளையிட்ட மாத்திரத்தில் அது அகன்று போயிற்று.  ஒரு நதி கரைபுரண்டு விளைச்சல் நிலங்களில் பாய்ந்தபோது இவர் தமது ஊன்றுகோலை அங்கே நட்டு நதி நீர் அப்புறம் வராதபடிக்கு கட்டளையிட்ட மாத்திரத்தில் நீர் நின்றதுடன், அந்த கோல் பெரும் மரமாயிற்று.  இரு சகோதரர் ஒரு ஏரியின் சுதந்திரத்தினிமித்தம் விவாதம் செய்து ஆயுதபாணிகளாய் சண்டைக்கு நிற்கும் தருவாயில் அந்த ஏரியின் நீரை இவர் சடுதியில் வற்றச் செய்தார்.  இவருடைய புண்ணியங்களினிமித்தம் இவர் மேற்றிராணியார் பட்டம் பெற்று, ஜெபதபத்தாலும் புதுமைகளாலும் கணக்கற்றவர்களை சத்திய வேதத்தில் சேர்த்து, வயோதிகம் வரைக்கும் ஆத்துமங்களுக்காக உழைத்து, மரணமடைந்து மோட்சத்தில் தமது சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.

யோசனை

 நாம் சத்திய வேதத்தின் மட்டில் அதிக விசுவாசமுள்ளவர்களாய் இருப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக