Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 24 நவம்பர், 2017

St. Satrunius., November - 29-ம் தேதி




அர்ச்.சாற்றுர்னினுஸ், மேற்றிராணியார், வேதசாட்சி

                                                       (கி.பி.257)

                பிரான்ஸ் தேசத்திற்குப் போய் சத்திய வேதம் போதிக்கும்படி சாற்றுர்னினுஸ் என்பவர் அர்ச்.பாப்பாண்டவரால் அனுப்பப்பட்டார்அப்படியே இந்த மேற்றிராணியார் சில துணைவர்களுடன் அத் தேசத்திற்குச் சென்று, பலவிடங்களில் பிரசங்கம் செய்து, அநேகரை சத்திய வேதத்தில் சேர்த்து, கோவில்களைக் கட்டி வேத பரம்புதலுக்காக பிரயாசைப்பட்டு வந்தார்பிறகு துலூஸ் நகருக்குச் சென்று அதைத் தமது பிரதான இருப்பிடமாக்கிக்கொண்டார்அவருடைய முயற்சியால் திரளான அஞ்ஞானிகள் ஞானஸ்நானம் பெற்றார்கள்இதையறிந்த பொய் மதத்தார் சாற்றுர்னினுஸைப் பகைத்து வந்தார்கள்மேலும் இவர் இருக்கும் கோவிலுக்கு அருகாமையில் பசாசு கோவில் இருந்தமையால் அந்த வழியாய்த் தமது இருப்பிடத்திற்கு போகவும் வரவும் வேண்டியிருந்ததுஅவர் அந்த கோவில் வழியாய் செல்லும்போதெல்லாம் பசாசு விடை கொடுக்காமல் ஊமையாயிருக்கும்இதையறிந்த பூசாரி அர்ச்சியசிஷ்டவர் மேல் கோபம்கொண்டு அவரைப் பழி வாங்க சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்ஒரு நாள் அந்த பசாசு கோவிலில் திரளான ஜனங்கள் கூட்டம் கூடி பசாசு கொடுக்கும் விடையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்அந்நேரத்தில் சாற்றுர்னினுஸ் அந்த வழியாய்ச் சென்றபோது பசாசு விடையை நிறுத்தி ஊமை போலாயிற்றுஇதன் காரணத்தை பூசாரி ஜனக் கூட்டத்திற்கு அறிவிக்கவே, அவர்கள் அவர் மேல் பாய்ந்து அவரைப் பசாசின் கோவிலுக்கு இழுத்துக்கொண்டு போய் தங்கள் தேவர்களுக்குப் பலியிடும்படி கூறினார்கள்தமக்குப் பயப்படும் பசாசுக்கு தாம் பலியிடுவதில்லையென்று கூறியதை அஞ்ஞானிகள் கேட்டு சினங்கொண்டு, பலியிடும்படி அங்கு கட்டிவைத்திருந்த ஒரு எருதின் வாலில் இவரைக் கட்டி அதைத் துரத்தவே, அது மிரண்டு காடு, மலை பக்கமாய் ஓடினதினால் அவர் சரீரம் முழுவதும் ஏக காயமாகி வேதனைப்பட்டு வேதசாட்சியானார்.



யோசனை

                பசாசு நமக்குத் தந்திர சோதனைகளை வரவிடும்போது அதைக் காலால் மிதித்து ஜெயித்த வேதசாட்சிகளின் உதவியை அடைய அவர்களை மன்றாடுவோமாக.

              


St. Stephen., November - 28-ம் தேதி


         



                                       
அர்ச்.ஸ்டீபென், வேதசாட்சி

                                                       (கி.பி.764)

                முடியப்பர் எனப்படும் ஸ்டீபென் கொன்ஸ்தாந்திநோபளின் புண்ணியவந்தரும் தனவந்தருமான தாய் தந்தையரிடத்தினின்று பிறந்து, சாஸ்திரங்களில் சிறந்து, புண்ணிய மார்க்கத்தில் நடந்து வந்தார்ஸ்டீபென் சாஸ்திரத்திலும் புண்ணியத்திலும் தேர்ந்து, ஒரு சன்னியாச மடத்திற்கு மடாதிபதியானார்இவர் அந்த மடத்தில் ஜெபத்தியானத்திலும் தவமுயற்சிகளிலும் வெகு நேரம் செலவழித்து கூடை முடைதல், வலை நெய்தல், புத்தகம் எழுதுதல் முதலிய கைவேலைகளைச் செய்து ஏழைகளுக்கு உதவி புரிந்து வந்தார்ஆட்டுத்தோலை ஆடையாக அணிந்து இரும்பு வளையத்தை இடைக் கச்சையாகக் கட்டிக்கொண்டார்அநேகர் இந்த புண்ணியவானுக்கு சீஷர்களானார்கள்அந்தக் காலத்தில் பதிதனான இராயன் திருச்சுரூபங்களை உடைக்க தலைப்பட்டு, சகலராலும் அர்ச்சியசிஷ்டவராக எண்ணப்படும் ஸ்டீபென் தன் கருத்துக்கு இணங்கினால் தான் துவக்கின தேவ துரோக வேலை சுலபமாய் அனுகூலமாகுமென்று நினைத்து, அர்ச்சியசிஷ்டவரிடம் தூதரை அனுப்பினான்ஆனால் அவர் தன் கருத்துக்கு இணங்காததினால் அவரைப் பரதேசத்திற்கு அனுப்பினான்அவ்விடத்தில் அவருடைய அற்புதங்களாலும் அரிதான புண்ணியங்களாலும் இவர் சகலராலும் ஸ்துதிக்கப்படுவதை இராயனறிந்து, அவர் மேல் பல குற்றங்களைச் சாட்டினான்ஆனால் அவர் மாசற்றவர் என்றறிந்த இராயன் அவரைத் தன்னிடம் வரவழைத்து, சிலுவைச் சுரூபத்தைக் காலால் மிதிப்பதால் என்ன தவறு என்று வினவ, ஸ்டீபென் ஒரு பொற்காசை கீழே போட்டு, தன் காலால் மிதித்ததைக் கண்டவர்கள் அவர் பெருந் தண்டனைக்குப் பாத்திரவானென்று ஆர்ப்பரித்தார்கள்இதை அவர் கேட்டு, மனித ரூபமடங்கிய ஒரு நாணயத்தை மிதிப்பது குற்றமானால் சேசுநாதருடைய சுரூபத்தை மிதிப்பது எப்பேர்ப்பட்ட பாதகம் என்று அவர் கூறியதைக் கேட்ட இராயன் சினந்து அவரைக் கொல்;லக் கட்டளையிட்டான்



யோசனை

                கர்த்தருடையவும் அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் சுரூபம், படம் முதலியவைகளை நாம் மரியாதையுடன் ஸ்தாபித்து, அவைகளைப் பக்தியுடன் கண்ணோக்கி, அவர்களுடைய புண்ணிய மாதிரிகையைப் பின்பற்றுவோமாக.    

St. James., November 27 ம் தேதி


27-ம் தேதி
                             

அர்ச்.ஜேம்ஸ், வேதசாட்சி

                                                       (கி.பி.421)

                யாகப்பர் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் என்பவர் பெர்சியா தேசத்தில் மிகவும் கீர்த்தியும் வெகுமானமும் மகிமையும் பெற்ற ஓர் பிரபுஇவருடைய சிறந்த பிறப்பைப் பற்றியும் அவரடைந்த வெகுமானங்களைப் குறித்தும் இராயனுடைய அரண்மனையில் மேலான உத்தியோகம் பெற்றிருந்தார்இராயனும் இவரை நேசித்து சிறந்த விருதுகளையும் இவருக்கு அளித்திருந்தான்அத் தேசத்தில் கிறீஸ்துவர்களுக்கு விரோதமாய் வேதகலகம் உண்டானபோது ஜேம்ஸ் என்பவர் இராயனுடைய உறவை முறிக்க மாட்டாதவராய் சத்திய வேதத்தை மறுதலித்தார்இதையறிந்த அவருடைய தாயாரும் மனைவியும் வெகு துக்கங் கொண்டு அவர் மனந்திரும்பும்படி சர்வேசுவரனைப் பார்த்து பிரார்தித்து வந்தார்கள்சில காலத்திற்குப் பின் இராயன் இறந்து புது இராயன் சிம்மாசனம் ஏறினான்அப்போது அவ்விரு ஸ்திரீகளும் ஒரு கடிதம் எழுதி ஜேம்ஸ{க்கு அனுப்பினார்கள்அது யாதெனில்: இராயனுக்குப் பிரியப்படும்படி உன் தேவனை மறுதலித்தாய்அந்த இராயன் இப்போது எங்கே இருக்கிறான்மண்ணிலிருக்கிறான்இவனுடைய வெகுமானத்தை விரும்பி நித்திய கேட்டுக்கு உள்ளான உனக்கும் எங்களுக்கும் இனி யாதொரு சம்பந்தமுமிராது என்று எழுதினார்கள்அவர் இதை வாசித்த பின் சொல்லி முடியாத துக்கப்பட்டு, அக்கணமே அஞ்ஞான வேதத்தை விட்டு சத்திய வேதத்தை அனுசரிக்கத் துவங்கினார்இதையறிந்த புது இராயன் சினங்கொண்டு ஜேம்ஸை நிஷ்டூரமாய் அடித்துக் கொல்லும்படி கட்டளையிட்டான்அவர் கட்டளைப்படியே சேவகர் வேதசாட்சியை உபாதித்து அவருடைய கை, கால்களை கணுக்கணுவாய் நறுக்கினதினால், வேதசாட்சி சொல்லிமுடியாத வேதனை அனுபவித்து தன் ஆத்துமத்தைத் தன் சிருஷ்டிகர் கையில் ஒப்படைத்து நித்திய சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்



யோசனை
                யாதொருவன் வேதத்திற்கு விரோதமாய் நடப்பதை அவனுடைய பெற்றோர், உறவினர்கள் அல்லது சிநேகிதர் பார்க்கும்போது அந்தப் புண்ணிய ஸ்திரீகளைக் கண்டுபாவிக்க வேண்டும்