Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 22 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 21-ம் தேதி*



*St. Agnes, V.M.*
*அர்ச். ஆக்னேஸ்*
*கன்னிகை, வேதசாட்சி - (கி.பி. 304).*
ஆக்னேஸ் உரோமையில் பிறந்து, சிறுவயதிலேயே தன் கன்னிமையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தாள்.  இவளுடைய உயர்குலப் பிறப்பையும், அழகையும், மிகுந்த செல்வத்தையும் பார்த்து பிரபுக்களான அநேக வாலிபர் இவளை மணமுடித்துக்கொள்ள விரும்பியபோது “என் கன்னிமையை என் தேவ பத்தாவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன்’’என்று கூறினாள். அவர்கள் இதைக் கேட்டு சினங்கொண்டு இவள் கிறீஸ்தவளென்று நியாயாதிபதிக்கு அறிவித்தார்கள். நியாயாதிபதி ஆக்னேஸிடம் நயமாகப் பேசியும், பயமுறுத்தியும் கிறீஸ்தவ வேதத்தை மறுதலிக்கும்படி கட்டாயப்படுத்தினான். இவள் அதற்குச் சம்மதியாதிருப்பதை அவன் கண்டு, இவள் கண்ணுக்கு முன் நெருப்பை மூட்டி, ஆணி, குரடு முதலிய ஆயுதங்களைப் பழுக்கக் காய்ச்சும்படி கட்டளையிட்டான். ஆக்னேஸ் அவைகளைக் கண்டு சற்றும் கலங்காதிருப்பதை அவன் கண்டு, இவளை அஞ்ஞான கோவிலுக்கு இழுத்துக்கொண்டு போய் பொய்த் தேவர்களுக்குத் தூபம் காட்டும்படி கட்டளையிட்டான். இவளோ தன்மேல் சிலுவை வரைந்துக் கொண்டாளேயன்றி, தூபக்கலசத்தைத் தொடவில்லை. இதனால் அதிகாரி கோபவெறி கொண்டு, இவளை ஒரு விலைமாதர் வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய் அங்கே இவள் கற்பை அழிக்கும்படி உத்தரவிட்டான். அப்போது அநேக வாலிபர் இவளைப் பின்தொடர்ந்தும் ஒருவித பயத்தால் அவர்கள் பின்வாங்கினார்கள். ஆனால் ஒருவன் மாத்திரம் இவளை அணுகின மாத்திரத்தில் மின்னலைப் போன்ற ஒருவித பிரகாசமான ஒளியால் அவன் குருடனாகி, கீழே விழுந்தான். அவனுடைய நண்பர்களின் மன்றாட்டின்பேரில், ஆக்னேஸ் அவனுக்குப் பார்வைக் கொடுத்தாள். இதையெல்லாம் கண்ட அதிகாரி வெட்கமும் சினமும் கொண்டு, அவளைச் சிரச்சேதம் பண்ணும்படி கட்டளையிட, ஆக்னேஸ் தலை வெட்டுண்டு, கன்னிமை முடியும் வேதசாட்சி முடியும் பெற்று தன் தேவ பத்தாவிடம் சென்றாள்.            

*யோசனை*

தங்கள் கன்னிமையைத் தங்கள் தேவ பத்தாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள், அதை சாகும் வரையில் பழுதின்றிக் காப்பாற்றுவார்களாக.

y



*St. Sebastian, M.*
*அர்ச். செபஸ்தியார்*
*வேதசாட்சி - (கி.பி. 288).*
செபஸ்தியார் பிரான்சு தேசத்தில் பிறந்து, இத்தாலியா தேசத்தில் வளர்ந்து சாஸ்திரங்களைப் படித்தார்.  இவர் காலத்தில் வேதத்தினிமித்தம் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் உபாதித்துக் கொல்லப்படுகிறதைக் கண்ட இவர், அவர்களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்யும் பொருட்டு படையில் போர்ச்சேவகரானார்.  அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட சக்கரவர்த்தி அவருக்குப் படையில் உயர் பதவியைக் கொடுத்தான்.  ஒருநாள் வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்ட மார்க்குஸ், மார்செல்லினுஸ் என்னும் இரு சகோதரருக்கு அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் வேதத்தை மறுதலிக்கும்படி தவறான ஆலோசனை கொடுப்பதைக் கண்ட செபஸ்தியார் அவர்களிருவரையும் தமது நற்புத்திமதியால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதனால் அநேகர் வேதசாட்சி முடி பெற்றார்கள். கணக்கற்ற பிறமதத்தினர் வேதத்தில் சேர்ந்தார்கள். மேலும் இவர் சிலுவை அடையாளத்தால் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தினார். கடைசியாய் இவர் வேதத்துக்காகப் பிடிபட்டு, அம்பால் எய்துக் கொல்லும்படி இராயனால் தீர்ப்பிடப்பட்டார். இராயனின் கட்டளையை நிறைவேற்றியபின், இவர் இறந்துவிட்டார் என்று எண்ணிய கிறீஸ்தவர்கள், இவர் சரீரத்தை எடுத்து அடக்கம் செய்ய முற்பட்டார்கள். அப்போது, இவருக்கு கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டு, இவரைக் கவனமாய் பராமரித்ததினால், இவர் விரைவில் பூரண சுகத்தை அடைந்தார். பிறகு இவர் இராயனுடைய அரண்மனைக்குச் சென்று, அவன் கிறீஸ்தவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தைரியத்துடன் அவனுக்கு அறிவுரைக் கூறினார். இதைக் கேட்ட அந்தக் கொடுங்கோலன் கோபத்தால் பொங்கியெழுந்து இவரைத் தடிகளால் அடித்துக் கொல்லக் கட்டளையிட்டான். அவரும் மரித்து வேதசாட்சியானார்.            

*யோசனை*

நாமும் சமயம் வரும்போது, கெட்டக் கிறீஸ்தவர்களுக்கும் இதர மதத்தினருக்கும் நற்புத்தி சொல்வோமாக. Bu மாதம் 20-ம் தேதி*

*St. Sebastian, M.*
*அர்ச். செபஸ்தியார்*
*வேதசாட்சி - (கி.பி. 288).*
செபஸ்தியார் பிரான்சு தேசத்தில் பிறந்து, இத்தாலியா தேசத்தில் வளர்ந்து சாஸ்திரங்களைப் படித்தார்.  இவர் காலத்தில் வேதத்தினிமித்தம் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் உபாதித்துக் கொல்லப்படுகிறதைக் கண்ட இவர், அவர்களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்யும் பொருட்டு படையில் போர்ச்சேவகரானார்.  அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட சக்கரவர்த்தி அவருக்குப் படையில் உயர் பதவியைக் கொடுத்தான்.  ஒருநாள் வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்ட மார்க்குஸ், மார்செல்லினுஸ் என்னும் இரு சகோதரருக்கு அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் வேதத்தை மறுதலிக்கும்படி தவறான ஆலோசனை கொடுப்பதைக் கண்ட செபஸ்தியார் அவர்களிருவரையும் தமது நற்புத்திமதியால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதனால் அநேகர் வேதசாட்சி முடி பெற்றார்கள். கணக்கற்ற பிறமதத்தினர் வேதத்தில் சேர்ந்தார்கள். மேலும் இவர் சிலுவை அடையாளத்தால் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தினார். கடைசியாய் இவர் வேதத்துக்காகப் பிடிபட்டு, அம்பால் எய்துக் கொல்லும்படி இராயனால் தீர்ப்பிடப்பட்டார். இராயனின் கட்டளையை நிறைவேற்றியபின், இவர் இறந்துவிட்டார் என்று எண்ணிய கிறீஸ்தவர்கள், இவர் சரீரத்தை எடுத்து அடக்கம் செய்ய முற்பட்டார்கள். அப்போது, இவருக்கு கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டு, இவரைக் கவனமாய் பராமரித்ததினால், இவர் விரைவில் பூரண சுகத்தை அடைந்தார். பிறகு இவர் இராயனுடைய அரண்மனைக்குச் சென்று, அவன் கிறீஸ்தவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தைரியத்துடன் அவனுக்கு அறிவுரைக் கூறினார். இதைக் கேட்ட அந்தக் கொடுங்கோலன் கோபத்தால் பொங்கியெழுந்து இவரைத் தடிகளால் அடித்துக் கொல்லக் கட்டளையிட்டான். அவரும் மரித்து வேதசாட்சியானார்.            

*யோசனை*
நாமும் சமயம் வரும்போது, கெட்டக் கிறீஸ்தவர்களுக்கும் இதர மதத்தினருக்கும் நற்புத்தி சொல்வோமாக.fcc 20-ம் தேதி*

*St. Sebastian, M.*
*அர்ச். செபஸ்தியார்*
*வேதசாட்சி - (கி.பி. 288).*

செபஸ்தியார் பிரான்சு தேசத்தில் பிறந்து, இத்தாலியா தேசத்தில் வளர்ந்து சாஸ்திரங்களைப் படித்தார்.  இவர் காலத்தில் வேதத்தினிமித்தம் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் உபாதித்துக் கொல்லப்படுகிறதைக் கண்ட இவர், அவர்களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்யும் பொருட்டு படையில் போர்ச்சேவகரானார்.  அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட சக்கரவர்த்தி அவருக்குப் படையில் உயர் பதவியைக் கொடுத்தான்.  ஒருநாள் வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்ட மார்க்குஸ், மார்செல்லினுஸ் என்னும் இரு சகோதரருக்கு அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் வேதத்தை மறுதலிக்கும்படி தவறான ஆலோசனை கொடுப்பதைக் கண்ட செபஸ்தியார் அவர்களிருவரையும் தமது நற்புத்திமதியால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதனால் அநேகர் வேதசாட்சி முடி பெற்றார்கள். கணக்கற்ற பிறமதத்தினர் வேதத்தில் சேர்ந்தார்கள். மேலும் இவர் சிலுவை அடையாளத்தால் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தினார். கடைசியாய் இவர் வேதத்துக்காகப் பிடிபட்டு, அம்பால் எய்துக் கொல்லும்படி இராயனால் தீர்ப்பிடப்பட்டார். இராயனின் கட்டளையை நிறைவேற்றியபின், இவர் இறந்துவிட்டார் என்று எண்ணிய கிறீஸ்தவர்கள், இவர் சரீரத்தை எடுத்து அடக்கம் செய்ய முற்பட்டார்கள். அப்போது, இவருக்கு கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டு, இவரைக் கவனமாய் பராமரித்ததினால், இவர் விரைவில் பூரண சுகத்தை அடைந்தார். பிறகு இவர் இராயனுடைய அரண்மனைக்குச் சென்று, அவன் கிறீஸ்தவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தைரியத்துடன் அவனுக்கு அறிவுரைக் கூறினார். இதைக் கேட்ட அந்தக் கொடுங்கோலன் கோபத்தால் பொங்கியெழுந்து இவரைத் தடிகளால் அடித்துக் கொல்லக் கட்டளையிட்டான். அவரும் மரித்து வேதசாட்சியானார்.            

*யோசனை*

நாமும் சமயம் வரும்போது, கெட்டக் கிறீஸ்தவர்களுக்கும் இதர மதத்தினருக்கும் நற்புத்தி சொல்வோமாக.

*ஜனவரி மாதம் 19-ம் தேதி*


*St. Canutus, K.M.*
*அர்ச். கனூத்துஸ்*
*இராஜா, வேதசாட்சி - (கி.பி. 1086).*
இவர் டென்மார்க் தேசத்தின் அரசனாகி, நற்குணசாலியும் தேவபக்தி உள்ளவருமாயிருந்தார்.  இவருடைய சகோதரர் சிம்மாசனம் ஏறி அரசு புரிந்த இரண்டாம் வருடம் மரித்தபடியால், கனூத்துஸ் என்பவர் இராஜாவாகத் தெரிந்துகொள்ளப்பட்டார். இவர் காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தார்மேல் படையெடுத்து அவர்களை ஜெயித்து, சத்திய வேதக் குருக்களை அவ்விடம் அனுப்பி அவர்களை கிறீஸ்தவர்களாக்கினார். தன் தேசத்தில் நிலவிய அநேக அலங்கோலங்களைத் திருத்தியமைத்து, மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றி, எங்கும் சமாதானமும், திருப்தியும் உண்டாகும்படி செய்தார். மேலும் அநேக தேவாலயங்களைக் கட்டிவைத்து, குருக்களுடைய தேவைகளுக்கு, மக்கள் வேண்டிய உதவி புரியும்படி நாட்டில் சட்டம் இயற்றினார். கடைசியாய் சகலமும் ஆண்டவரால் உண்டாகிறதென்று தெளிவாய் அறிந்து தமது இராஜ முடியை பாடுபட்ட சுரூபத்தின் பாதத்தில் காணிக்கையாக சமர்ப்பித்தார். இந்த நல்ல அரசர், வேதம் பரவுவதற்காக பல சட்டதிட்டங்களைக் கொண்டுவந்தார். இதனால் இவர்மீது கோபம்கொண்ட சில துஷ்டர், ஒருநாள் இவர் ஜெபித்துக்கொண்டிருக்கும் போது இவரை ஈட்டியால் குத்திக் கொன்றார்கள். இவருடைய மரணத்துக்குப்பின், இவரை ஆண்டவர் அநேக புதுமைகளால் மகிமைப்படுத்தி, இவரைக் கொலை செய்தவர்களைப் பலவாறான துன்பங்களால் தண்டித்தார்.            

*யோசனை*


தேவ காரியங்களுக்கு வேண்டிய உதவி செய்யப் பின்வாங்காது இருப்போமாக.

*ஜனவரி மாதம் 18-ம் தேதி*



*St. Peter’s Chair at Rome*
*உரோமையில் அர்ச். இராயப்பருடைய* 
*பத்திராசனத் திருநாள்.*

நமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் அர்ச். இராயப்பரை திருச்சபைக்குத் தலைவராக ஸ்தாபித்தார். ஆகையால் அப்போஸ்தலர்களும், விசுவாசிகளும அர்ச். இராயப்பரை சேசுநாதருக்குப் பதிலாகப் பாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்துவந்தார்கள். அவர் தமது சிம்மாசனத்தை அந்தியோக்கியா நகரில் ஸ்தாபித்து, அங்கிருந்து திருச்சபையை நடத்திக்கொண்டு வந்தார். ஆனால் அக்காலத்தில் உலகத்தின் முக்கிய பாகத்தை அரசாண்ட உரோமைச் சக்கரவர்த்திகள் உரோமையைத் தங்களுக்குத் தலைநகரமாக ஸ்தாபித்ததினாலும், உலகத்தின் நான்கு திசைகளிலுமிருந்து சகல ஜாதி ஜனங்கள் அவ்விடத்திற்கு அடிக்கடி வந்து போயிருந்ததினாலும், அவ்விடத்தில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்தால் திருச்சபைக்கு அதிக நன்மை உண்டாகும் என்று                                                                                                                                                                            அர்ச். இராயப்பர் கருதி, உரோமையில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்தார். அவர் அவ்விடத்தில் அநேகரை மனந்திருப்பி, அர்ச். சின்னப்பருடன் அவ்விடத்தில் வேதசாட்சியாக மரணமடைந்தார். அது முதற்கொண்டு சகல பாப்பரசர்களும்                                 அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்து திருச்சபையை நடத்தி வருகிறார்கள்.           

*யோசனை*

திருச்சபைப் போதகர்களாகிய ஆயர், குருக்கள் இவர்களை நாம் மதித்து இவர்களுக்குக் கீழ்படியவேண்டும்.

சனி, 18 ஜனவரி, 2020

ஏழு தேவதிரவிய அனுமானங்கள்




  • ஞானஸ்தானம்
  • உறுதிபூசுதல்
  • தேவநற்கருணை
  • பாவசங்கீர்த்தனம்
  • மெய்விவாகம்
  • குருத்துவம்
  • அவஸ்தை பூசுதல்


வெள்ளி, 17 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 17-ம் தேதி

**

*St. Antony, A.*
*அர்ச். பெரிய அந்தோணியார்*
*மடாதிபதி - (கி.பி. 356).*
இவர் எஜிப்து தேசத்தில் செல்வந்தரான பெற்றோரிடமிருந்து பிறந்து புண்ணியவாளராய் வாழ்ந்துவந்தார். இவருடைய பெற்றோர் இறந்தபின்  “நீ உத்தமனாக வேண்டுமானால் உனக்குள்ளதை விற்று கேட்பவருக்கு கொடுத்துவிட்டு என்னைப் பின்செல்” என்னும் சுவிசேஷ வாக்கியத்தைக் கேட்டு, தனக்கு இருந்த மிகுதியான செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, காட்டிற்குச் சென்று ஆண்டவருக்கு ஊழியம் செய்தார்.  கெட்ட எண்ணம் கொண்ட பசாசோவெனில், இவருடைய அரிதான புண்ணியங்களைக் கண்டு காய்மகாரப்பட்டு பலவிதத்திலும் இவரைத் துன்புறுத்தியது. பயங்கரமும் அவலட்சணமுமான தோற்றங்கள் எடுத்து இவரை அடிக்கடிப் பயமுறுத்தியது.  பெண்போல் வடிவமெடுத்து இவரைப் பாவத்தில் விழத்தாட்ட முயன்றது. அந்தோணியார் ஜெபத்தாலும் ஒருசந்தியாலும், விசேஷமாய் சிலுவை அடையாளத்தாலும் துஷ்டப் பேயைத் துரத்தினார். இந்த சோதனைகளுக்கு இவர் உட்படாததைக் கண்ட பசாசு, இவரை ஒருநாள் கடுமையாக அடித்துவிட்டு ஓடிப்போனது. அப்போது நமதாண்டவர் இவருக்குத் தரிசனையாகி, இவருக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும் அளித்தார். அந்தோணியார் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கொஞ்சம் அப்பமும், தண்ணீரும் புசித்துவந்தார். ஆட்டுத்தோலை ஆடையாகத் தரித்துக்கொண்டு வெகு நேரம் ஜெபம் செய்வார். பலமுறை சாயங்காலம் தொடங்கி விடியற்காலம் வரை முழந்தாளிலிருந்து ஜெபிப்பார். இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்டுணர்ந்த அநேக மக்கள் இவரது ஆசீர்வாதத்தைப் பெறும்படி இவரிடம் போவார்கள். அர்ச். அந்தோணியார் சகல புண்ணியநெறிகளையும் ஒழுங்காய் அநுசரித்து,  105-ம் வயதில் உயிர் துறந்து மோட்ச சம்பாவனையை அடைந்தார்.         

*யோசனை*

பசாசால் நமக்கு உண்டாகும் சோதனைகளை ஜெபத்தாலும், ஒறுத்தலாலும் ஜெயிப்போமாக.

வியாழன், 9 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 8-ம் தேதி*

*

*St. Apollinaris, B.*
*அர்ச். அப்போலினார் - ஆயர்*
*(கி.பி. 175).* 
ஆதியில் வேதக் கலாபனைக் கொடுமையாய் நடந்தேறி வந்தது.  அப்போலினார் காலத்தில் அரசரும் பிரஜைகளும் உண்மையான கிறீஸ்தவர்களை வேதத்தினிமித்தம் கொடூரமாய் வதைத்துக் கொன்றார்கள். அக்காலத்தில் உரோமை இராயனான மார்க்குஸ் அவ்ரேலியஸ், ஜெர்மன் தேசத்தின்மேல் படையெடுத்துப் போனான். அவனுடைய படைகள் தங்கியிருந்த இடம் மலைகளால் சூழப்பட்டு, பின்னடைவதற்கு வசதியற்ற இடமாய் இருந்தபடியால், அங்கிருந்து தப்பித்துக்கொள்ள வழியில்லாதிருந்தது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையினாலும் அவனுடைய படைகள் வருந்தித் தவித்தது. அந்நேரத்தில் எதிரிகள் போரைத் தொடங்க, கிறீஸ்தவர்களாயிருந்த இவனுடைய சேனையின் ஒரு பகுதியார் முழந்தாளிலிருந்து ஆண்டவரைப் பார்த்துப் பிரார்த்திக்கவே, இடிமுழக்கத்துடன் ஓரு பெரும் மழை பெய்தது.  மழைத் தண்ணீரால் உரோமையர் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு எதிரிகளை எதிர்த்துப் போரிட்டார்கள்.  இந்த மழையால் எதிரிகளுக்கு மிகுந்த சேதமுண்டாக, அவர்கள் புறங்காட்டி ஓட்டம் பிடித்தார்கள். இந்த அற்புதத்தைக் கண்ட உரோமை இராயன் அதிசயித்து, அந்தக் கிறீஸ்தவ படைக்கு “இடிமுழக்கப் படை” என்று பெயர் கொடுத்தான். அர்ச். அப்போலினார், இராயனுக்கு ஓரு விண்ணப்பம் எழுதி, அதில் கிறீஸ்தவ வேதத்தின் படிப்பினையை விவரித்துக் காட்டினதுடன், கிறீஸ்தவ சேவகர்களுடைய வேண்டுதலால் அவனுடைய கண்ணுக்குமுன் நடந்த அற்புதத்தையும் எடுத்துக்காட்டி, வேத கலாபனையை நிறுத்தும்படி அவனைக் கேட்டுக்கொண்டார். இதனால் இராயனுடைய மனம் இளகி, வேதத்தினிமித்தம் எந்த கிறீஸ்தவர்களையும் கொலை செய்யக்கூடாதென்று ஒரு சட்டத்தை வெளியிட்டான். அர்ச். அப்போலினார் பல நூல்களை வெளியிட்டு, இறுதியில் அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.

*யோசனை*

சத்திய வேதத்தைப்பற்றிப் பேச நமக்கு சமயம் வாய்க்கும்போது, வெகு விமரிசையுடன் பேசுவோமாக.

*ஜனவரி மாதம் 7-ம் தேதி*



*St. Lucian, P.M.*
*அர்ச். லூசியான் - குரு,வேதசாட்சி*
*(கி.பி. 312).* 

இவர் சிரியா தேசத்தில் பிறந்தார். இவர் வாலிபனாயிருந்தபோதே இவருடைய தாயும் தந்தையும் இறந்துபோனபடியால், தனக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,         புண்ணியவாளரான மக்காரியுஸ் என்பவருக்கு சீஷனாகி, வேதாகமங்களை வாசிப்பதிலும் புண்ணியச் செயல்களைச் செய்வதிலும் காலத்தைச் செலவிட்டார்.  இவர் சாஸ்திரங்களைப் படித்தபின், குருப்பட்டம் பெற்று வேதம் போதித்துவந்தார்.  அக்காலத்தில் எழுந்த வேத கலகத்தில்             அர்ச். லூசியான் பிடிபட்டு, சிறைப்படுத்தப்பட்டு, வெகு கொடூரமாய் உபாதிக்கப்பட்டார். அநேக நாட்களாய் இவருக்கு உணவு கொடுக்கப்படாததால், இவர் இளைத்து, களைத்துக் குற்றுயிராய் இருந்தார். அந்நேரத்தில், பசாசுக்குப் படைக்கப்பட்ட பண்டங்களை இவருக்குக் கொடுக்க, இவர் அவைகளை உண்ணாமல் ஒதுக்கிவைத்தார். மேலும் இவர் சங்கிலியால் கட்டப்பட்டு சிறையில் இருந்தபடியால், கிறீஸ்தவர்கள் கொண்டுவந்த அப்பத்தையும் இரசத்தையும் தமது நெஞ்சின்மேல் வைத்து தேவ வசீகரம் செய்து கிறீஸ்தவர்களுக்கு கொடுத்துவந்தார்.  மறுபடியும் இவர் நடுவனுக்குமுன் நிறுத்தப்பட்டு, வேதத்தை மறுதலிக்கும்படி பயமுறுத்தி உபாதிக்கப்பட்டபோது இவர் எதற்கும் அஞ்சாமல் தாம் கிறீஸ்தவன் என்று தைரியமாக சாட்சி கூறினார். இவரை சித்திரவதை செய்துக் கொலைசெய்யும்படி நடுவன் தீர்ப்பிட்டான். அதன்படியே சேவகர் இவரை வதைத்துக் கொல்லும்போது, தான் கிறீஸ்தவன் என்று சொல்லிக்கொண்டே உயிர்விட்டு வேதசாட்சி முடி பெற்றார்.

*யோசனை*

நமது சத்திய வேதத்தை சாக்குபோக்குச் சொல்லி ஒருபோதும் மறுதலிக்காதிருப்போமாக.

திங்கள், 6 ஜனவரி, 2020

திருச்சபை வழிபாட்டு நிறங்கள்



திவ்விய பலி பூசையின் பொது பல்வேறு நிறங்களில் பூசை ஆயத்தங்களை பயன்படுத்துவார்கள். அந்த நிறங்கள் திருச்சபையின் ஒவ்வொரு காலங்களை அல்லது திருவிழாக்களை குறிக்கும்.

1. வெள்ளை

2. சிகப்பு

3. பச்சை

4.  ஊதா

5. கருப்பு




*ஜனவரி மாதம் 6-ம் தேதி*

*The Epiphany of our Lord*
*கர்த்தர் மூன்று இராஜாக்களுக்குத்* 
*தம்மைக் காட்டியத் திருநாள்.* 



நமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் பிறந்தபோது நடந்த பல அற்புத அதிசயங்களை தீர்க்கதரிசிகள் அவர் பிறப்பதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார்கள். அவைகளுள் ஒன்று புது நட்சத்திரம். கர்த்தர் பிறந்தபோது அற்புதமாய்க் காணப்பட்ட புது நட்சத்திரத்தை சகல மனிதரும் கண்டபோதிலும், சோதிட சாஸ்திரிகளான மூன்று இராஜாக்கள் மாத்திரம், பிறந்த உலக இரட்சகரை உடனே சந்திக்கத் தீர்மானித்தார்கள். இவர்கள் இந்த நெடும் பிரயாணத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல், நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து பெத்லகேம் என்னும் ஊருக்குச் சென்று, சிறு குடிசையில் சேசு பாலனைக் கண்டு மகிழ்ந்தார்கள். அங்கு காணப்பட்ட வறுமையையும், தரித்திரத்தையும் பார்த்து சற்றும் மனம் சோர்ந்து சந்தேகியாமல் அந்த பாலனே பரலோக பூலோக இராஜாவென்றும், மெய்யான தேவனென்றும் நம்பி விசுவசித்து, பொன், தூபம், மீறை முதலியவைகளை அவர் பாதத்தில் சமர்ப்பித்து அவரை ஆராதித்தார்கள்.  கர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் அப்போஸ்தலரான அர்ச். தோமையாரால் இம்மூவரும் ஞானஸ்நானமும், பிறகு ஆயர் பட்டமும் பெற்று, வேதத்தைப் போதித்து, வேதத்திற்காக இரத்தம் சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்கள்.

*யோசனை*

நமக்கு ஆண்டவர் பலவிதத்திலும் அருளும் ஞான ஒளியில் பிரமாணிக்கமாய் நடப்போமாக.


ஞாயிறு, 5 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 5-ம் தேதி*



*St. Simeon Stylites, C.*
*தூணில் நின்று தவம் புரிந்த* 
*அர்ச். சிமெயோன் - துதியர்.* 

இவர் சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துவந்தார்.  தமது 13-ம் வயதில், இவர் நமது கர்த்தரின் மலைப் பிரசங்கத்தைக் கேட்டு, அவைகளின்படி நடக்க
விருப்பம்கொண்டு, இடைவிடாமல் ஜெபமும் தியானமும் செய்து கண்ணீர் சிந்தி அருந் தவம் புரியத் தொடங்கினார். இதில் திருப்திகொள்ளாமல் ஒரு மலையின் மேல் ஒதுங்கி கடின தவம் செய்துவந்தார். இவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஏராளமான ஜனங்கள் அவ்விடம் சென்று இவருடையப் புண்ணியங்களையும் புதுமைகளையும் கண்டு அதிசயப்பட்டார்கள். இவர் மேலும் கடின தவம் புரிய தீர்மானித்து 60 அடி உயரமுள்ள தூண் ஒன்றின்மேல் ஏறித் தவம் புரிந்துவந்தார். ஆட்டுத் தோலை ஆடையாக உடுத்தி, கடுமையாக ஒருசந்தி இருப்பார். ஒரு நாளைக்கு அநேகத் தடவை முழந்தாற்படியிட்டு ஆண்டவரை ஆராதிப்பார். ஒவ்வொரு நாளும் இருமுறை தூணைச் சுற்றிக் கூடியிருக்கும் திரளான ஜனங்களுக்குப் பிரசங்கம் செய்வார். இவருடையப் புண்ணியச் செயல்களைப் பரிசோதிக்கும் எண்ணத்துடன் அருகாமையில் இருந்த மேற்றிராணிமார் சிலர், இவரைத் தூணிலிருந்து இறங்கி வரும்படி கட்டளையிட்டார்கள். உடனே சிமெயோன் இறங்க முயற்சிப்பதை அவர்கள் கண்டு, இவர் தேவசித்தப் பிரகாரம் நடக்கிறாரென்று அறிந்து, இவரைத் தூணிலேயே இருக்கும்படி சொன்னார்கள். இவர் செய்துவந்த கடின தபசையும் பல புதுமைகளையும் கண்ட அரசர்கள் இவரைச் சந்தித்து, இவர் ஆலோசனையைக் கேட்டுவந்தனர். இவர் ஒருநாள் தூணில் அசைவற்று இருந்ததைக் கண்ட சிலர், அதன்மேல் ஏறிப் பார்த்தபோது இவர் மரித்திருப்பதைக் கண்டார்கள். அர்ச். சிமெயோன் தமது 69-ம் வயதில் இவ்வாறு மரித்து வெகு ஆடம்பரமாக அடக்கம் செய்யப்பட்டார்.

*யோசனை*

நாம் கடினத் தவம் செய்யாவிடினும் நமது ஐம்புலன்களையும், உணர்ச்சிகளையும் அடக்கி ஒறுக்கப் பழகுவோமாக.

சனி, 4 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 4-ம் தேதி*

*ஜனவரி மாதம் 4-ம் தேதி*

*St. Titus, B.*
*அர்ச். தீத்துஸ் - ஆயர்*. 
அஞ்ஞானியாயிருந்த இவர் அர்ச்.சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று அவருக்கு சீஷனாகி அவர் வேதம் போதிக்கச் சென்ற ஊர்களுக்கெல்லாம் அவருடனே சென்றார். பிறகு இவர் விசுவாசிகளை விசாரித்து வரும்படி அர்ச். சின்னப்பரால் பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டார். வேதத்தில் தத்தளித்து துர்மாதிரிகையாய் வாழ்ந்த கொரிந்தியரை திருத்தும் பொருட்டு தீத்துஸ்  அவர்களிடம் அனுப்பப்பட்டபோது, அவர் அவர்களுக்கு அன்போடு புத்திமதி சொல்லி அவர்களை நல்வழிக்கு கொண்டுவந்தார். இந்த நல்ல செய்தியைக் கேள்விப்பட்ட அர்ச். சின்னப்பர் சந்தோஷத்தால் பூரித்து ஆறுதல் அடைந்தார்.  தீத்துஸ் அர்ச். சின்னப்பரின் உத்தரவின்படி ஆங்காங்கு தர்மம் எடுத்து ஜெருசலேமிலுள்ள ஏழைகளுக்கு அனுப்பிவந்தார். சில காலத்துக்குப்பின் அர்ச். சின்னப்பர் தீத்துசுக்கு ஆயர் பட்டம் கொடுத்து கிரேத் என்னும் தீவில் வேதம் போதிக்கும்படி அனுப்பினார். ஆயர்களின் மேலான கடமைகளைக் குறித்தும், விசுவாசிகளை நடத்திச்செல்ல வேண்டிய ஒழுங்கு திட்டங்களைக் குறித்தும் ஒரு நிருபத்தை அர்ச். சின்னப்பர் எழுதி இவருக்கு அனுப்பினார். தம் குருவும் ஆசிரியருமான அர்ச். சின்னப்பர் போதனைக்குத் தீத்துஸ் இணங்கி புண்ணிய வழியில் நடந்து, மிக்க ஊக்கத்துடன் வேதம் போதித்து, நல்ல மரணமடைந்து, மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார். 

*யோசனை*

நாம் செய்யும் தவறுகளை அறியும் நமது ஞானப் போதகர்கள், நமக்கு அறிவுரை கூறும்போது, நமது தவறுகளை விட்டொழித்து அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்.

வெள்ளி, 3 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 3-ம் தேதி


*St. Genovieve, V.*
*அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் - கன்னிகை*

*(கி.பி. 422).* 


அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் 422-ம் வருஷம் பிரான்சு தேசத்தில் பிறந்தாள். அவள் ஏழு வயதில் தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தாள். தன் 15-ம் வயதில் கன்னியர் உடுப்பு தரித்துக்கொண்டாள்.  நாளுக்கு நாள் புண்ணியத்தில் வளர்ந்து 50 வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சிறிது ரொட்டியும், பருப்பும் அருந்திவந்தாள்.  மயிர் ஒட்டியாணம் தரித்துக் கடுமையாக தவம் புரிவாள். மிகவும் பக்தி உருக்கத்துடன் இடைவிடாமல் ஜெபத் தியானம் செய்வாள். பிறர் சிநேகத்தை மனதில் கொண்டு பெரிய பட்டணங்களுக்குப் பயணமாய் போய் அநேக புதுமைகளைச் செய்து, தீர்க்கதரிசனங்களைக் கூறி, எல்லோராலும் வெகுவாய் மதிக்கப்பட்டாள். இந்தப் புண்ணியவதியின் மீது காய்மகாரம் கொண்டவர்கள் இவளைப் பலவிதத்திலும் துன்பப்படுத்தினபோதிலும், இந்த அர்ச்சியசிஷ்டவள் சற்றும் கலங்காமல் தன் நம்பிக்கையை ஆண்டவர் மீது வைத்து, ஜெப தபத்தால தன் பகைவர்களை வென்றாள். அச்சமயம் அத்தில்லா என்னும் கொடுங்கோலன் பாரிஸ் நகரைக் கொள்ளையடிக்க வந்தபோது அவள் உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி அந்தப் பெரும் பொல்லாப்பு நீங்கியது. ஜெனோவியேவ் அம்மாள் தன் 89-ம் வயதில் அர்ச்சியசிஷ்டவளாக மரித்தாள்.

*யோசனை*

நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவளைக் கண்டுபாவித்து, துன்ப துரிதத்தாலும் பொல்லாதவர்களுடைய தூற்றுதலாலும் மனம் சோர்ந்துபோகாமலும் உலக உதவியை விரும்பாமலும் ஜெபத்தால் தேவ உதவியை மன்றாடுவோமாக.

வியாழன், 2 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 2-ம் தேதி

*ஜனவரி மாதம் 2-ம் தேதி*
*St.Macarius, A.*
*அர்ச்.மக்காரியுஸ் - மடாதிபதி*
*(கி.பி.394)*

அலெக்சாந்திரியா என்னும் பட்டணத்தில் பிறந்து, பழம் வியாபாரம் செய்து வந்த மக்காரியுஸ் உலக வாழ்வில் கசப்புற்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்ய தீர்மாணித்து, நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று அவ்விடத்தில் கடும் ஜெப தபங்களை நடத்தி வந்தார். அவருக்கு சீஷர்களான அநேகர் அக்காட்டில் சிறு குடிசைகளில் வசித்து, தங்கள் சிரேஷ்டரான மக்காரியுஸின் தர்ம செயல்களைப் பின்பற்றி, புண்ணியவாளராய் வாழ்ந்தார்கள்.

மக்காரியுஸ் இடைவிடாமல் ஜெபம் செய்வார். கூடைகளை முடைவார்.  கனி, கிழங்கு, கீரை முதலியவற்றை ஒரு நாளைக்கு ஒரு தடைவ மாத்திரம் புசிப்பார். பல முறை இரவில் நித்திரை செய்யாமல் சங்கீதங்களைப் பாடி ஜெபிப்பார். ஒருநாள் இவருக்கு அனுப்பப்பட்ட ஒரு திராட்சைக் குழையைப் புசிக்காமல் தமது சன்னியாசிகளுக்கு அனுப்பினார். அவர்களும் அதை புசிக்காமல் மக்காரியுசுக்கு அனுப்பி விட்டார்கள். அவரும் தமது சன்னியாசிகள் மட்டசனம் என்னும் புண்ணியத்தைக் கண்டிப்பாய் அனுசரிப்பதை அறிந்து சந்தோஷமடைந்தார். வனவாசிகளுக்குள் ஒருவர் தான் முடைந்த பாய் கூடைகளை விற்றதினால் வந்த பணத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு இறந்ததினால், அப்பணத்தை அவருடைய பிரேதக் குழியில் அவரோடு போட்டுப் புதைக்கும்படி அர்ச்.மக்காரியுஸ் கட்டளையிட்டார். இவர் இவ்வளவு கடின தவம் செய்துவந்தும், இவருக்குப் பல சோதனைகளுண்டாக, அவைகளை ஜெபத்தால் ஜெயித்தார். ஆரிய பதிதர் வயோதிகரான அர்ச்.மக்காரியுஸை பல விதத்தில் துன்பப்படுத்தினார்கள். இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து கி.பி.394-ம் வருடம் மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார்.

*யோசனை*

நாமும் இந்தப் பரிசுத்த வனவாசிகளைப் பின்பற்றி போசனப்பிரியத்துக்கு இடம் கொடாமல், மட்டசனமென்னும் புண்ணியத்தை கடைபிடிப்போமாக.

ஜனவரி மாதம் 1-ம் தேதி* *The Circumcision of Our Lord*. *விருத்தசேதனத் திருநாள்

*LIVES OF SAINTS*
*அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரம்*

ஒவ்வொரு தேதியிலும் வாசிக்க வேண்டிய அந்தந்த  அர்ச்சியசிஷ்டவரின் சரித்திரம் சுருக்கமாய் கொடுக்கப்பட்டிருப்பதின் காரணம் யாதெனில், பலர் தங்களுக்கு வாசிக்கப் போதுமான நேரமில்லையென்று சொல்லி அதை வாசியாமல் விட்டுவிடக்கூடாதென்பதற்காகவே.  நாலைந்து நிமிடங்கூட கிடைக்கப் பெறாமற் போகிறவர்கள் யாருமிரார். மேலும் அந்தந்த தேதியில் குறிக்கப்பட்டிருக்கின்ற யோசனையை விசுவாசிகள் தங்கள் மனதில் வைத்து, அதை அந்தந்த நாளில் அப்போதைக்கப்போது சிந்திப்பார்களேயானால், பெரிதும் ஞானப்பிரயோசனமடைவார்கள்.

*ஜனவரி மாதம் 1-ம் தேதி*
*The Circumcision of Our Lord*
*விருத்தசேதனத் திருநாள்*
  
*திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு*
*நிறைவேற்றப்படுகிறது.*

விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களினின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு.  மோசஸ் பத்துக் கற்பனையைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச் சடங்கு சர்வேசுவரனால் ஏற்படுத்தப்பட்டது.  இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள்.  இச் சடங்கை நிறைவேற்றும் போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும்.  நமது திவ்விய
கர்த்தர் இச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டுமென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார்.  நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளையையும் பக்தியோடு அநுசரிப்போமாக.  மேலும் நமது இருதயத்தில் கிளம்பும் ஆசாபாசங்களையும், ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தம் சிந்தப் பழக வேண்டும்.  கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.

இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை விட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது வாழ்க்கை வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.

*யோசனை*

நாம் இந்தப் புதுவருடத்தில் எந்தெந்தப் பாவத்தை விட்டொழித்து, எந்தெந்தப் புண்ணியத்தைச் செய்ய தீர்மாணித்தோமோ, அதை இன்றே செய்ய முயற்சிப்போமாக.