Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 3 ஆகஸ்ட், 2024

August 3 - FINDING OF THE BODY OF SAINT STEPHEN

 

ஆகஸ்டு0️3ம்தேதி

முதல்வேதசாட்சியாக மரித்த அர்ச்‌. முடியப்பரின்பரிசுத்த சரீரம்கண்டெடுக்கப்பட்ட திருநாள்

 

                அர்ச்‌. முடியப்பருக்குத்தோத்திரமாக அனுசரிக்கப்படுகிற இந்த 2வது திருநாள்‌, (முதல்திருநாள்‌- அர்ச்‌.முடியப்பா்யூதர்களால்கல்லாலெறிந்து வேதசாட்சியாகக்கொல்லப்பட்ட திருநாள்‌) அவருடைய பரிசுத்த சரீரம்கண்டெடுக்கப்பட்டபோது, திருச்சபையால்ஸ்தாபிக்கப்பட்டது. அர்ச்‌.ஸ்டீஃபன்‌ (அர்ச்‌. முடியப்பர்‌) நமதாண்ட வருக்காக, தனது உயிரை ஒப்புக்கொடுத்து, முதல்வேதசாட்சியானர்‌; கோபவெறிகொண்ட யூதர்களின்கூட்டத்தினால்‌, முதல்வேதசாட்சியான அர்ச்‌. முடியப்பா்‌, கல்லால்எறிந்து கொல்லப்பட்டதை விவரிக்கும்போது, பரிசுத்த வேதாகமம்‌, இந்நிகழ்வை, “பயபக்தியுள்ள மனிதர்கள்முடியப்பரை எடுத்து அடக்கம்செய்து, அவருக்காக மிகுந்த துக்கம்கொண்டாடினார்கள்!” (அப்‌. நட 8:2) என்று கூறி முடிக்கிறது. ஆனால்,‌ யார்இந்த பயபக்தியுள்ள மனிதர்கள்‌? அர்ச்‌. முடியப்பருடைய விலைமதியாத பரிசுத்த சரீரத்தை எங்கே அடக்கம்செய்தனர்‌? இக்கேள்விகளுக்கான பதில்கள்‌, இந்நிகழ்விற்குப்பின்ஏறக்குறைய 400 வருடங்களுக்குப்பின்னரே வெளிப்படுத்தப்பட்டன!  கி.பி.410ம்வருடம்‌, உரோமாபுரி நகரமானது, வட ஐரோப்பாவிலிருந்து வந்த காட்டுமிராண்டி இனத்தவரால்‌, சூறையாடப்பட்டு கொள்ளை யடிக்கப்பட்டது! இதைக்கண்ட உரோமை அஞ்ஞானிகள்‌, உரோமா புரிக்கு நேர்ந்த இப்பேரழிவு, கிறீஸ்துவர்கள்செய்த தவறினால்தான்நேர்ந்தது என்றும்‌, உரோமை அஞ்ஞானிகள்வழிபட்டு வந்த விக்கிரகங்களை, கிறீஸ்துவர்கள்மதியாமல்‌, அவமதித்து வந்ததாலேயே, இந்த விக்கிரகங்கள்‌, உரோமை சாம்ராஜ்ஜியத்திற்கு தங்கள்முதுகைத்திருப்பிக்கொண்டன என்றும்‌, அதனாலேயே, இப்பேரழிவு ஏற்பட்டது என்றும்‌, கூறினர்‌. 

கிறீஸ்துவர்களுக்கு எதிராக அஞ்ஞானிகள்பரப்பிவந்த அநீதமானதும்‌, அவதூறானதுமான புறணியை அழித்து ஒழிப்பதற்காக, அதற்கான சரியான தெளிந்த பதிலை அளிப்பதற்காகவும்‌, அர்ச்‌. அகுஸ்தீனார்‌, சர்வேசுரனுடைய நகரம்‌, என்கிற மாபெரும்உன்னதமான புத்தகத்தை எழுதினார்‌. கிறீஸ்துவ வேதத்தின்சத்தியத்தையும்‌, உன்னதமான மகிமையையும்வெளிப்படுத்தி, கிறீஸ்துவ வேதத்திற்கு, ஆதரவாகவும்‌, கிறீஸ்துவர்களைப்பாதுகாப் பதற்காகவும்‌, தேவசிநேகத்தாலும்‌, தேவஏவுதலாலும்தூண்டப் பட்டவராக அர்ச்‌.அகுஸ்தீனாரால்‌,  எழுதப்பட்ட இப்புத்தகத்திலுள்ள உண்மைகளால்‌, சகல கிறீஸ்துவர்களும்வெகுவாக ஆறுதலும்சந்தோஷமும்அடைந்தனர்‌. ஆனால்‌, இதைவிட மேலான பரலோக ஆறுதலாக அநேக ஆச்சரியத்திற்குரிய புதுமைகள்நிகழலாயின! ஏனெனில்‌, இச்சமயம்‌, சுபாவத்திற்கு மேற்பட்ட அற்புதங்கள்நிகழலாயின: அநேக அர்ச்சிஷ்டவர்களுடைய பரிசுத்த அருளிக்கங்கள் கண்டெடுக்கப்பட்டன!

இவற்றில்ஒன்றாக தான்‌, அர்ச்‌.முடியப்பருடைய பரிசுத்த அருளிக்கங்களும்‌, கண்டெடுக்கப்பட்டன! கி.பி.415ம்வருடம்‌, அர்ச்‌. கமாலியேலின்பரிசுத்த ஆத்துமம்‌, சங்‌. லூசியான்என்கிற குருவானவருக்குக்காட்சியளித்து, அர்ச்‌.முடியப்பருடைய பரிசுத்த சரீரமும்அருளிக்கங்களும்எங்கே கண்டெடுக்கலாம்?‌ என்பதை அறிவித்தார்‌! அர்ச்‌. கமாலியேல்‌, லூசியான்சுவாமியாரை, ஜெருசலேம்மேற்றிராணியாரான வந்‌.அருளப்பர்ஆண்டகையிடம்‌ , ஒரு நூதனமான செய்தியுடன்அனுப்பி வைத்தார்‌. அந்த செய்தி பின்வருமாறு : “நம்கல்லறையில்உள்ளவற்றைச்சாதனங்களாகக்கொண்டு, சர்வேசுரன்‌, தமது தேவ இரக்கத்தின்கதவை, உலகத்திற்குத்திறந்து விடும்படி யாகவும்‌, இந்த அகில உலக துன்ப உபத்திரவத்தின்காலத்தில்‌, தமது மக்கள்மீது இரக்கம்கொள்ளும்படியாகவும்‌, நமது கல்லறையை திறப்பதற்கு துரிதமாக செயல்படுங்கள்‌!” அதன்படி, ஜெருசலேமி லிருந்து 20 மைல்தூரத்திலிருந்த கேப்பர்  கமேலா என்ற இடத்திலிருந்த அர்ச்‌. கமாலியேலுக்குச்சொந்தமான தோட்டத்திலிருந்த அந்த கல்லறை திறக்கப்பட்டபோது, அர்ச்‌.முடியப்பர், அர்ச்‌. கமாலியேல்‌, அர்ச்‌. நிக்கோதேமுஸ்‌, அர்ச்‌. ஆபிபோ ஆகியோருடைய பரிசுத்த அருளிக்கங்கள்கண்டுடடுக்கப்பட்டன!

அர்ச்‌. முடியப்பரின்சவப்பெட்டி திறக்கப்பட்டபோது, பூமி  அதிர்ந்தது! அந்த பெட்டியிலிருந்து, இதுவரை யாரும்அறிந்திராத உன்னதமான இனிய பரலோக நறுமணம்வீசியது! 415ம்வருடம்ஆகஸ்டு 3ம்தேதியன்று, அர்ச்‌.முடியப்பருடைய பரிசுத்த சரீரமும்அருளிக்கங்களும்கண்டுடடுக்கப்பட்டன! பின்‌, இவை, ஜெருசலே மிலுள்ள தேவாலயத்திற்கு, 415ம்வருடம்‌, டிசம்பர்‌ 26ம்தேதியன்று, இடமாற்றம்செய்யப்பட்டு,பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டன!  ஆகஸ்டு மாதம்‌ 3ம்தேதிக்கான திருச்சபையின்திருவழிபாட்டிற்கான  வாசகத்தில்‌, அர்ச்‌.முடியப்பரின்பரிசுத்த சரீரம்கண்டெடுக்கப்பட்ட போது, நிகழ்ந்த நிகழ்வைப்பின்வருமாறு வாசிக்கிறோம்‌:

அர்ச்‌.முடியப்பரின்பரிசுத்த சரீரம்கண்டெடுக்கப்பட்டது! என்கிற செய்தியைக்கேட்டு ஒரு மாபெரும்ஜனக்கூட்டம்திரண்டு வந்தது; அதில்வந்த அநேக வியாதியஸ்தர்களும்‌, அநேக நோய்களால்பலவீனமடைந்தவர்களும்‌, அந்த க்ஷண நேரத்திலேயே, புதுமையாகத்தங்கள்நோய்களிலிருந்து, பரிபூணமாகக்குணமடைந்தனர்‌. இவற்றிற்குப்பிறகு, அர்ச்‌.முடியப்பரின்பரிசுத்த சரீரம்மாபெரும்ஆடம்பரத்துடனும்‌, மகிமையுடனும்சீயோன்நகரின்பரிசுத்த தேவாலயத்திற்குக்கொண்டுச்செல்லப்பட்டது! ஆச்சரியத்திற்குரிய இவ்வதிசயங்கள்கிறீஸ்துவ நாடுகளிலெல்லாம்தொடர்ந்து நிகழலாயின! அர்ச்‌.முடியப்பரின்பரிசுத்த சரீரத்தின்அருளிக்கங்கள்உலகெங்கிலுமுள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்டபோது, இதே அதிசய நிகழ்வுகள்‌, அந்த நாடுகளிலும்நிகழலாயின! வட ஆப்ரிக்காவிற்கு அனுப்பப்பட்டபோது, அங்கும்ஏராளமான புதுமைகள்நிகழ்ந்தன. அர்ச்‌.அகுஸ்தீனார்‌, அர்ச்‌.முடியப்பருக்கு தோத்திரமாக அச்சமயம்‌, அங்கு ஒரு தேவாலயம்கட்டினார்‌.

அப்‌.நடபடியாகமத்தில்‌, அர்ச்‌.முடியப்பரை யூதர்கள்கொன்ற போது, அவர்களிடம்‌, “நீங்கள்இந்த மனிதர்களை (கிறீஸ்துவர்களை) தொடாமல்‌, விலக அவர்கள்பாட்டுக்கு விட்டு விடுங்கள்‌. இந்த யோசனை அல்லது, அலுவல்மனிதரால்உண்டாயிருந்தால்பிரிந்து அழிந்துபோம்‌. இது, சர்வேசுரனால்உண்டாயிருந்தால்‌, நீங்கள்சர்வேசுரனையே எதிர்த்து விரோதிக்கிறவர்களாக எண்ணப்படுவீர் களல்லாதே, இதை அழிக்க உங்களாலேகூடாது!” (அப்நட 5:38-39) என்று கூறிய பரிசேயரான கமாலியேல்தான்‌, இந்த அர்ச்‌.கமாலியேல்!  சவுலாயிருந்த அர்ச்‌.சின்னப்பரும்‌, அவருடைய குருவும்பரிசேயனுமாயிருந்த அர்ச்‌. கமாலியேலும்‌, அர்ச்‌. முடியப்பருடைய வேதசாட்சிய மரணத்தின்சாட்சிகளாயிருந்தனர்‌. ஆகவே தான்‌, அர்ச்‌. கமாலியேல்‌, முதல்வேதசாட்சியான அர்ச்‌. முடியப்பருடைய பரிசுத்த சரீரத்தை தனது சொந்தத்தோட்டத்தின்கல்லறையிலேயே அடக்கம்செய்தார்‌, என்பதை நாம்அறிந்துகொள்ளலாம்‌.  திருச்சபையின்தந்தையரில்ஒருவரான ஃபோதியுஸ்என்பவர்‌, அர்ச்‌. இராயப்பரும்அர்ச்‌. அருளப்பரும்‌, அர்ச்‌. கமாலியேலுக்கும்அவருடைய குமாரருக்கும்‌, அர்ச்‌. நிக்கோதேமுசுக்கும்‌, ஞானஸ்நானம்கொடுத்ததாக எழுதி வைத்திருக்கிறார்‌. பாரம்பரியம்வெளிப்படுத்தியதின்அடிப்படையில்‌, அர்ச்‌.சின்னப்பா்மனந்திரும்புவதற்கு முன்பாகவே, அர்ச்‌. கமாலியேல்மனந்திரும்பி, சத்திய வேகத்தில்சேர்ந்தார்‌, என்று அர்ச்‌. கிறிசோஸ்தம்அருளப்பர்‌, அறிவிக்கின்றார்‌. அர்ச்‌. ஆபிபோ, அர்ச்‌. கமாலியேலின்இரண்டாவது குமாரராவார்‌. அர்ச்‌. நிக்கோதேமுஸ்‌, ஆண்டவருடைய மகா பரிசுத்த திவ்ய திருச்சரீரத்தை, சிலுவையில்மரித்தபிறகு, அடக்கம்செய்வதற்கான அனுமதியை பிலாத்துவிடம்பெற்றுத்தந்த பரிசேயராவார்‌.

 

முதல்வேதசாட்சியான அர்ச்‌. முடியப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!





FINDING OF THE BODY OF SAINT STEPHEN


This subsequent celebration to pay tribute to St. Stephen, (the Primary Saint) was initiated by the congregation on the event of the disclosure of his valuable remaining parts.

St. Stephen was battered to the point of death for Our Ruler by a crowd of furious Jews. Sacred writing closes its record by letting us know that "sincere men took request for Stephen's memorial service, and made extraordinary grieving over him." (Acts 8:2)

However, who were those "faithful men" and where did they cover the valuable remains⁉

The solutions to these inquiries were uncovered to the world very nearly 400 years after the occasion.

In the year 410, the city of Rome was sacked and pillaged by the brute clans. The Agnostics asserted that this disaster was the issue of the Christians. Since the Roman divine beings had been so offended by the Christians who declined them divine honor, that the divine beings had walked out on the Roman Domain.

To shield the Congregation against this slander, St. Augustine of Hippo composed his incredible work, "The City of God". Such a protection probably been an extraordinary reassurance to the dedicated, yet more noteworthy still was the superb comfort that came as wonders. For right now started a progression of otherworldly wonders which included supernatural discoveries of the relics of the holy people. One of these was the inexplicable discoveries of the relics of St. Stephen.

The spirit of Holy person Gamaliel appeared to the cleric Lucian in Promotion 415 and let him know where to track down the relics of Stephen.

Holy person Gamaliel sent Lucian to Minister John of Jerusalem with a bizarre message: "Make flurry to open our catacomb, that by our method God might open to the world the entryway of His pardon, and may show compassion for His kin in the widespread hardship."

The relics of Holy people Stephen, Gamaliel, Nicodemus, and Abibo. were seen as per the headings given to the minister Lucian by St. Gamaliel, who uncovered that they had been covered on his own home in Capergamela, around twenty miles beyond Jerusalem.

Upon the launch of St. Stephen's final resting place the earth shook, and there emerged from the casket such a sweet scent that nobody made sure to have at any point smelled anything like it.

The relics were seen as on 3 August Promotion 415. The relics of Holy person Stephen were made an interpretation of a while later to Jerusalem legitimate on 26 December Promotion 415.

The Congregation's ceremonial example for third August relates that "at the gossip of what had happened, an extraordinary group met up, and a large number of them who were wiped out and feeble from different sicknesses disappeared flawlessly relieved. The consecrated assemblage of St. Stephen was then conveyed with amazing privilege to the heavenly church of Sion."


The wonderful fixes proceeded and the entire wonder extended when segments of the relics were sent all around the Catholic world, including North Africa, where St. Augustine fabricated a place of worship to pay tribute to St. Stephen.


    🍁🍁🍁🍁🍁🍁🍁


St. Gamaliel is, as a matter of fact, the well known Pharisee referenced in Acts, Part Five, who directed the Sanhedrin not to put St. Peter and his allies to death. ("I share with you, cease from these men — assuming it be of God, you can't topple it" Acts 5:38-39.)

St. Paul and St. Gamaliel had seen the suffering of St. Stephen. This would make sense of to some extent why the Protomartyr was covered on Gamaliel's home.

Photius relates that the Witnesses St. Peter and St. John, had purified through water Gamaliel along with his child and Nicodemus.


Maybe more solid is St. John Chrysostom's reference to an old custom that Gamaliel changed over even before St. Paul did indeed.


St. Abibo was the second child of Gamaliel


St. Nicodemus was the Pharisee, who had gotten the consent from Pontius Pilate to cover the Assortment of Jesus after Execution.

🔵

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

August 1st - SAINT PETER'S CHAINS - அர்ச்‌. இராயப்பர்‌ சங்கிலிகளால்‌ கட்டுண்ட திருநாள்‌.

 

ஆகஸ்டு 1ம்‌ தேதி

அர்ச்‌. இராயப்பர்‌ சங்கிலிகளால்‌ கட்டுண்ட திருநாள்‌.

 

ஏரோது அரசனான அகிரிப்பா, யூதர்களை சந்தோஷப்படுத்துவதற்காக, அர்ச்‌.பெரிய யாகப்பரைக்‌ கொன்றான்‌; பின்‌ கி.பி.44ம்‌ வருடம்‌ அர்ச்‌. இராயப்பரையும்‌ கொன்று போட திட்டமிட்டான்‌; அர்ச்‌. இராயப்பரை ஜெருசலேம்‌ சிறையிலடைத்து, இரும்புச்‌ சங்கிலிகளால்‌, அவருடைய கால்களுடன்‌ பிணைத்துக்‌ கட்டி வைத்தான்‌. பலத்தப்‌ பாதுகாப்பு ஏற்பாடு செய்தான்‌; பல வீரர்களைக்‌ கொண்டு அவரைக்‌ கண்காணிக்கச்‌ செய்தான்‌. அர்ச்‌. இராயப்பர்‌ சிறையிலிருந்து தப்பிக்காதபடிக்கு, 16 வீரர்கள்‌ இரவு பகலாகக்‌ காவல்‌ காத்தனர்‌. அதில்‌ நான்கு வீரர்களில்‌, இருவர்‌ அர்ச்‌.இராயப்பரின்‌ சிறை இருந்த இருண்ட குழிக்குள்ளேயும்‌, இருவர்‌ வாசலண்டையிலும்‌ நின்றபடி, கண்காணித்து வந்தனர்‌; ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும்‌, நால்வர்‌ நால்வராக மாறி வந்து, இரவு பகலாகத்‌ தொடர்ந்து, சிறையைக்‌ காவல்‌ காக்கும்‌ வேலையில்‌ ஈடுபட்டிருந்தனர்‌. ஜெருசலேமிலிருந்த எல்லா கிறீஸ்துவர்களும்‌, முதல்‌ பாப்பரசரான அர்ச்‌. இராயப்பரின்‌ உயிர்‌ பாதுகாக்கப்படும்படியாகவும்‌, அவரின்‌ விடுதலைக்காகவும்‌, பக்திபற்றுதலுடன்‌ இடைவிடாமல்‌ ஆண்டவரிடம்‌ ஜெபித்து வேண்டிக்கொண்டிருந்தனார்‌. அன்று இரவே, அவர்களுடைய ஜெபத்தின்‌ வேண்டுதல்‌ கேட்கப்பட்டது: அடுத்த நாள்‌ காலையில்‌, அர்ச்‌.  இராயப்பரைக்‌ கொல்வதற்கு ஏரோது திட்டமிட்டிருந்தான்‌. அதற்கு முந்தின இரவில்‌, சர்வேசுரன்‌, அர்ச்.‌இராயப்பரை அவருடைய எதிரிகளின்‌ கரங்களிலிருந்து விடுவிக்கச்‌ சித்தமானார்‌. அர்ச்‌. இராயப்பர்‌ சிறையில்‌ இரண்டு சிறைக்காவலர்களுக்கு மத்தியில்‌, கால்‌கள்‌ சங்கிலிகளாலும்‌, கைகள்‌ விலங்குகளாலும்‌ கட்டப்பட்டிருந்த படி, அன்றிரவு உறங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு சம்மனசானவர்‌ சிறையில்‌ தோன்றினார்‌. அர்ச்‌. இராயப்பரை பக்கவாட்டில்‌ தொட்டு எழுப்பி விட்டார்‌. சம்மனசானவர்‌, இராயப்பரிடம்‌, உடனே எழுந்து, அவருடைய அங்கியை அணிந்து கொண்டு, தம்மைப்‌ பின்தொடர்ந்து வரும்படிக்‌ கூறினார்‌; அர்ச்‌.இராயப்பா்‌ எழுந்து நின்றதும்‌ அவருடைய கைகளிலிருந்த விலங்குகளும்‌, கால்களைக்‌ கட்டியிருந்த இரும்புச்‌ சங்கிலியும்‌, புதுமையாகக்‌ தானாகவே கழன்றன! அர்ச்‌. இராயப்பர்‌, சம்மனசானவரைப்‌ பின்பற்றி, சிறையை விட்டு வெளியேறத்‌ துவக்கினார்‌. முதல்‌ காவலையும்‌, இரண்டாம்‌ காவலையும்‌ கடந்து சென்றனர்‌. பின்னர்‌, நகரத்திற்குச்‌ செல்கிற பெரிய இரும்புக்‌ கதவண்டையில்‌ வந்து சேரவே, அதுவும்‌ தானாக, அவர்களுக்குத்‌ திறக்கப்பட்டது! அதன்பின்‌, ஜெருசலேம்‌ நகரத்திற்குள்‌ சம்மனசானவர்‌, ஒரு தெருவழியாகக்‌ கூட்டிச்‌ சென்று, அங்கே இராயப்பரை விட்‌டு, சம்மனசானவர்‌ மறைந்துபோனார்‌! இதுவரை தூக்கத்தில்‌ ஏதோ ஒரு கனவு காண்பதாக நினைத்திருந்த அர்ச்‌. இராயப்பர்‌, இப்போது, சிறையிலிருந்து, தன்னை மீட்பதற்காகவே, சர்வேசுரன்‌ ஒரு சம்மனசானவரை அனுப்பியிருக்கிறார்‌! என்பதை உணர்ந்தார்‌. மாற்கு என்கிற காரணப்பெயரையுடைய அருளப்பரின்‌ தாயாரான மரியம்மாளின்‌ வீட்டிற்குச்‌ சென்றார்‌; அங்கு கிறீஸ்துவர்கள்‌ எல்லோரும்‌ கூடி, அர்ச்‌. இராயப்பருடைய (அப்‌.நட 12:3-19) பாதுகாப்பிற்காக ஜெபித்துக்‌ கொண்டிருந்தனர்‌. இந்த புதுமை, உங்களில்‌ இரண்டு பேர்‌, தாங்கள்‌ மன்றாடிக்‌ கேட்கும்‌ எந்தக்‌ காரியத்திலும்‌, பூமியில்‌ ஒருமனப்பட்டிருந்தால்‌, அது பரமண்டலங்களி லிருக்கிற என்‌ பிதாவினால்‌, அவர்களுக்கு செய்தருளப்படும்‌! (மத்‌ 18:19) என்று நமதாண்டவா்‌ தாமே,நமக்கு அளித்திருக்கிற தேவ வாக்குறுதியை, மிகத்‌ தெளிவாக  நிச்சயப்படுத்துகிறது!  ஜெருசலேம்‌ சிறையில்‌ அர்ச்‌. இராயப்பரைக்‌ கட்டியிருந்த சங்கிலி,  உரோமைச்‌ சக்கரவர்த்தியான 3ம்‌ வாலென்டினியனின்‌ மனைவியான யுடோக்ஸியாவிற்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. பின்னர்‌, அந்த சங்கிலியை 3ம்‌ வாலன்டினியன்‌, முதலாம்‌ சிங்கராயர்‌ பாப்பரசருக்கு, அன்பளிப்பாக அளித்தார்‌. பாப்பரசர்‌ முதலாம்‌ சிங்கராயர்‌, ஜெருசலேம்‌ சிறையில்‌, அர்ச்‌. இராயப்பரைக்‌ கட்டியிருந்த சங்கிலியை, பிற்காலத்தில்‌ உரோமாபுரியில்‌ அர்ச்.இராயப்பரை அவருடைய வேதசாட்சிய மரணத்திற்கு முன்பாக, ஒரு சிறையில்‌ கட்டியிருந்த சங்கிலியுடன்‌ ஒப்பிட்டுப்‌ பார்ப்பதற்காகக்‌ கொண்டு சென்றபோது, இரு சங்கிலிகளும்‌ புதுமையாக, ஒன்று சேர்ந்து, ஒரே சங்கிலியாக ஒன்றிணைந்தன!

அர்ச்‌. இராயப்பருடைய கரங்களையும்‌ கால்களையும்‌ பிணைத்துக்‌ கட்டிய இவ்விரும்புச்‌ சங்கிலிகள்‌, சர்வேசுரனுடைய தேவ வார்த்தையைக்‌ கட்டிப்போடக்கூடாதவையாயிருந்தன! அதே சமயம்‌, அர்ச்‌. இராயப்பரின்‌ வேதசாட்சிய மரணத்திற்குப்‌ பின்‌, இந்த இரும்புச்‌ சங்கிலிகள்‌, விலையுயா்‌ தங்க நகைகளையும்‌, தங்கத்‌தையும்‌ விட மேலான அதிக விலைமதிப்புள்ளவையாக மதிக்கப்படுகின்றன! உரோமாபுரியிலுள்ள சங்கிலிகளால்‌ கட்டுண்ட அர்ச்‌.இராயப்பரின்‌ பசிலிக்கா தேவாலயத்தின்‌ பெரிய முதன்மைப்‌ பீடத்தின்‌ அடியிலிருக்கும்‌ ஒரு அருளிக்கப்‌ பேழையினுள்‌, புதுமையாக ஒன்றிணைந்த இந்த சங்கிலிகள்‌ பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக் கின்றன! 439ம்‌ வருடம்‌, 3ம்‌ சிக்ஸ்துஸ்‌ பாப்பரசரால்‌, இந்த பசிலிக்கா தேவாலயம்‌ அபிஷேகம்‌ செய்யப்பட்டது.

உரோமாபுரி சிறையில்‌ அர்ச்‌.இராயப்பரைக்‌ கட்டியிருந்த சங்கிலி  உரோமாபுரியின்‌ சிறைகளின்‌ அதிபதியான குவிரினுஸ்‌ என்பவனுடைய மகளான பால்பினா ஒருசமயம்‌, பரிசுத்த பாப்பரசரான அலெக்சாண்டரைக்‌ கட்டியிருந்த சங்கிலிகளைக்‌ தொட்டவுடன்‌, அவளுடைய வியாதியிலிருந்து, புதுமையாகக்‌ குணமடைந்தாள்‌. தன்னைக்‌ குணப்படுத்திய பாப்பரசரின்‌ கரங்களை, அவள்‌ இடைவிடாமல்‌, பக்தியுடன்‌ முத்தி செய்துகொண்டே இருந்தாள்‌; அச்சமயம்‌, பாப்பரசர்‌, அவளிடம்‌. என்‌ கரங்களை முத்தி செய்வதை விட, அர்ச்‌.இராயப்பரைக்‌ கட்டியிருந்த சங்கிலிகளைக்‌ கண்டுபிடித்து, அவற்றை முத்தி செய்‌! என்று கூறினார்‌. பாப்பரசருக்குக்‌ கீழ்ப்படிந்து, அர்ச்‌.இராயப்பரைக்‌ கட்டியிருந்த சங்கிலிகளை (அவருடைய வேதசாட்சிய மரணத்‌திற்கு முன்பாக உரோமாபுரியிலிருந்த ஒரு சிறையில்‌ அவரைக்‌ கட்டியிருந்த சங்கிலிகளை) கண்டுபிடித்தாள்‌; அந்த சங்கிலிகளை பரிசுத்த அருளிக்கங்களாக பாவித்து, பால்பினா, மிகுந்த பக்திபற்றுதலுடன்‌ தன்‌ ஆவல்‌ தீர அவற்றை முத்தி செய்தாள்‌;

பின்னர்‌, வேதசாட்சியாக மரித்த அர்ச்‌.ஹெர்மெஸின்‌ சகோதரியும்‌ உயர்குடிமகளுமான தியோடோராவிடம்‌ இந்த சங்கிலிகளை அளித்தாள்‌. தன்னை ஆண்ட மனிதனையே கடவுளாக உருவாக்கிய உரோமாபுரி, அகஸ்டஸ்‌ சீசருக்கு, ஆகஸ்டு மாதத்தை அர்ப்பணித்தது!

ஆனால், ‌நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதர்சுவாமி, உரோமாபுரியை அஞ்ஞானத்திலிருந்து விடுவித்தபோது, உரோமாபுரி, மறுபடியும்‌ சம்பாதித்த உன்னதமான சுதந்திரத்தின்‌ வெற்றிக் கோப்பையாக, இதே ஆகஸ்டு மாதத்தின்‌ தலையில்‌, அதாவது இம்மாதத்தின்‌ முதல்‌ தேதியன்று, அர்ச்‌.இராயப்பரின்‌ இந்த சங்கிலிகளை வைத்தது! ஏனெனில்‌, உரோமாபுரியின்‌ தலையிலிருந்த அஞ்ஞான மகுடத்தை உடைத்தெறியும்படியாகவே, கிறீஸ்துநாதரின்‌ பிரதிநிதியான அர்ச்‌. இராயப்பர்‌ இந்த சங்கிலிகளால்‌ கட்டுண்டி ருந்தார்‌!  சீசரின்‌ சுவீகார புத்திரனை விட மேலான விதமாக இந்த ஆகஸ்டு மாதத்தை ஆளக்கூடிய உரிமை கோருகின்ற ஓ! தேவ ஞானமே! உம்முடைய சாம்ராஜ்ஜியத்தை, இதைவிட அதிக உண்மையான விதமாக துவங்கியிருக்க முடியாது! பலமும்‌ மதுரமான இனிமையும்‌, உமது அலுவல்களின்‌ குணாதிசயங்களாக இருக்கின்றன! உம்மால்‌ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின்‌ பலவீனத்தில்‌ தான்‌, தேவரீர்‌, வல்லமையுள்‌ளவர்கள்‌ மீது வெற்றியடைகின்றீர்‌! எங்களுக்கு ஜீவனைத் தரும்படியாக, மரணத்தை நீர்தாமே, விழுங்கி விடுகிறீர்‌! யோனாவின்‌ குமாரனான அர்ச்‌. சீமோன்‌ இராயப்பர்‌, தன்னிடம்‌ ஒப்படைக்கப் பட்டிருந்த உலகத்தை விடுவிக்கும்படியாக , ஒரு சிறைக்கைதியானார்‌!

திருச்சபையின்‌ முதல்‌ பாப்பரசரான அர்ச்‌.இராயப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌! 




If you want any book from Archeive.org 

I can download it for you. 
Contact me on Email (lourdhurobin@gmail.com) or Telegram or https://t.me/Lourdhurobin

Catholic Quotes of the Day - St. Alphonsus Liguori

 கனியை விரும்புகிற எவனும்‌ கட்டாயமாக அதனுடைய மரத்தினிடம்‌ செல்ல வேண்டும்‌;   நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்து  நாதரை ஆசிக்கிற எவனும்‌ கட்டாயமாக 
அவருடைய மகா பரிசுத்த  மாதாவிடம்‌ செல்ல வேண்டும்‌! மகா பரிசுத்த தேவமாதாவை யாரெல்லாம்‌  கண்டடைகின்றனரோஅவர்களெல்லாம்‌, மிகவும்‌ நிச்சயமாக
நமதாண்டவரான திவ்ய சேசுநாதர் சுவாமியைக்‌ கண்டடைந்து கொள்வார்கள்!”  

அர்ச்‌.அல்ஃபோன்ஸ்‌ மரிய லிகோரியார்‌. 


Books by St. ALphonsus 

Visits to Jesus and Mary : excerpted from visits to - Link the most blessed Sacrament and the Blessed Virgin Mary  


The Glorious of Mary - Link


The practice of the love of Jesus Christ - Link




If you want any book from Archeive.org about St. Alphonsus Liguori 
I can download it for you. 
Contact me on Email (lourdhurobin@gmail.com) or Telegram or https://t.me/Lourdhurobin



August 2 - St. Alphonsu Ligouri

 

ஆகஸ்டு 2ம்தேதி

திவ்ய இரட்சகர்சபையின்ஸ்தாபகரும்‌,ஸ்துதியரும்‌, மேற்றிராணியாரும்‌, வேதபாரகருமான அர்ச்‌. மரிய அல்ஃபோன்ஸ்லிகோரியார்திருநாள்

 

 அர்ச்‌. அல்ஃபோன்ஸ்‌, இத்தாலியிலுள்ள நேப்பிள்ஸில்பிறந்தார்‌. நேப்பிள்ஸ்நாட்டின்கப்பற்படையின்தலைவருடைய எட்டுப்பிள்ளைகளில்மூத்த மகனாக, 1696ம்வருடம், இவர்பிறந்தார்‌. இவர்குழந்தையாக இருந்தபோது, சேசுசபையைச் சேர்ந்த அர்ச்‌. பிரான்சிஸ்ஜிரோலாமா, இவரை ஆசிர்வதித்தார்‌; இவர்‌ 90 வயது வரை உயிர்வாழ்ந்து, ஒரு மேற்றிராணியார்ஆவார்என்றும்‌, திருச்சபைக்கு அதிக நன்மை செய்வார்என்றும்தீர்க்கதரிசனமாகக்கூறினார்‌. இவர்மிகவும்பலவீனராயிருந்ததால்‌, இராணுவத்தில்இவரால்சேரக்கூடாமல்போனது. ஆகவே, இவரை ஒரு சட்டவல்லுனராக்க வேண்டும்என்று, இவருடைய தந்தை, இவரை சட்டக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்‌. இவர்தனது அபூர்வமான அறிவுத்திறனால்‌, நேப்பிள்ஸ்பல்கலைக் கழகத்தில்‌, 16 வயதிலேயே சமூக  சட்டக்கல்வியிலும்‌, வேதஇயல்கல்வியிலும்நிபுணத்துவம்பெற்று (டாக்டா்‌ ) முனைவர்பட்டம்பெற்றார்‌. 27வது வயதில்‌, நேப்பிள்ஸ்நாட்டிலேயே, இவர்மிகச்சிறந்த வழக்கறிஞரானார்‌. தினமும்‌, தவறாமல்திவ்ய பலிபூசை கண்ட பிறகே, இவர்தனது அன்றாட அலுவலை துவக்குவார்‌; ஒவ்வொரு முறை, இவர்நீதிமன்றத்திற்குச்செல்வதற்கு முன்பாக, தவறாமல்‌, முதலில்‌, திவ்ய பலிபூசையை பக்திபற்றுதலுடன்காண்பார்‌; அதன்பிறகே நீதிமன்றத்திற்குச்செல்வார்‌. ஒருநாள்‌, இவர்‌, தன்நண்பருக்கு பின்வருமாறு ஒரு கடிதம்எழுதினார்‌:  என்நண்பரே! நம்முடைய வக்கீல்தொழில்‌, அதிக கஷ்டங்களாலும்‌, ஆபத்துக்களாலும்நிறைந்தி ருக்கிறது; நாம்நிர்ப்பாக்கியமான ஜீவியம்‌, ஜீவிக்கிறோம்‌; நித்தியத்திற்குமாக நிர்ப்பாக்கியமாக இறந்துபோகக்கூடிய ஆபத்தும்நமக்கு இருக்கிறது!”  ஒருசமயம்‌, இவர்வெற்றியடைந்த ஒரு நீதிமன்ற வழக்கில்‌ , இவருக்குத்தெரியாமல்‌, இவர்ஒரு பொய்சொல்ல நேர்ந்ததைக்குறித்து,  பெரிதும்வருந்தினார்‌; இதன்பின்‌, நேப்பிள்ஸில்மிகப்பெரிய சட்ட வல்லுனராக இருந்த அர்ச்‌. அல்ஃபோன்ஸ்‌ , தன்‌ 27வது வயதில்‌, தன்னை வஞ்சித்த இந்த வக்கீல்தொழிலையும்‌, உலகத்தையும்துறந்து விட்டார்‌; 1723ம்வருடம்‌, இவர்அர்ச்‌. பிலிப்நேரியாரின்ஜெபக்கூட துறவற சபையில்சேர்ந்தார்‌; 1726ம்வருடம்‌, டிசம்பர்‌ 21ம்தேதியன்று தனது 30வது வயதில்‌, குருப்பட்டம்பெற்றார்‌. வீடு இல்லாத ஏழைகளிடையே, இளைஞர்களிடையே, வியாதியஸ்தர்களிடையே, அவர்களுடைய ஆத்தும சரீர நன்மைகளுக்காக, உழைத்தார்‌; இவர்‌, நிகழ்த்திய எளிய தெளிவான பிரசங்கங்கள் மூலமாகவும்‌,  கனிவுமிக்க இரக்கத்துடனும்‌, ஞானத்துடனும்பாவசங்கீர்த்தனம்கேட்பதன்மூலமாகவும்‌, நேப்பிள்ஸ்நாட்டின்மக்களிடையே மிகவும்பிரபலமடைந்தார்‌. பாவத்தின்மட்டிலான மிக அற்பக்காரியங்கள்பேரிலும்‌, இவர்குற்ற உணர்வுடன்வருத்தமுற்றிருந்தார்‌; அர்ச். அல்ஃபோன்ஸ்‌, மன உறுத்தல்களால்அவதியுற்றார்‌. ஆனால்‌, இவர்எழுதிய நூல்களில்‌, “மன உறுத்தல்கள், மனந்திரும்புகிறவர்களின்துவக்க காலத்தில்மிக பயனுள்ளவையாக இருக்கின்றன! என்றும், அவை ஆத்துமத்தைத்தூய்மைப்படுத்துகின்றன! என்றும்‌, அதே சமயம்‌, அவை, ஆத்துமத்தை மிகவும்கவனமுள்ளதாகவும்‌, விழிப்புள்ளகாகவும்‌, மாற்றிவிடுகின்றன! என்றும்எழுதியுள்ளார்‌. 1732ம்வருடம்‌, மகா பரிசுத்த திவ்ய இரட்சகர்சபை என்கிற ஒரு துறவற சபையை, அர்ச்‌.அல்ஃபோன்ஸ்மரிய லிகோரியார்ஸ்தாபித்தார்‌. அட்ட தரித்திரத்திலும்‌, கடின தபசிலும்இத்துறவியர்ஜீவிக்கலாயினர்‌; 1752ம்வருடம்முதல்‌, ஞான நூல்களை எழுதுவதில்தன்னையே அர்ப்பணித்தார்‌; எவ்வளவுக்கு அதிக தேவசிநேகத்துடனும்‌, ஜெப தப ஒறுத்தல்களுடனும்‌, இந்த உன்னதமான ஞான நூல்களை எழுதினார்என்றால்‌, அதை வாசிக்கிறவர்களின்இருதயத்தில்புதுமையாக தேவசிநேக அக்கினி தூண்டப்படுவதை, எல்லா காலங்களிலும்விசுவாசிகள்கண்டுணர்கின்றனர்‌! அதனால்ஏராளமான ஞான நன்மைகளை அடைகின்றனர்‌! மேற்கூரை இல்லாத மடங்களில்அர்ச்‌. அல்ஃபோன்ஸ்இப்புத்தகங்களை எழுதும்போது, பனிப்பொழிவு, இவர்மேல்நேரடியாக விழுந்ததால்‌, தாங்கமுடியாக குளிரினால்‌, இவருடைய விரல்கள்மரத்துப்போகும்‌! அச்சமயத்தில்‌, உஷ்ணப்படுத்து வதற்காக அறையில்வைத்திருந்த அடுப்பில்கையை அடிக்கடி வைத்தபடி, எழுதுவதில்தொடர்ந்து ஈடுபட்டார்‌; அதனாலேயே தான்‌, இவருடைய எல்லா புத்தகங்களும்‌, இக்காலத்தில் நாம்வாசிக்கும்போதுகூட, நம்இருதயத்தில்தேவசிநேக நெருப்பு மூட்டப்படுகிறதை, உணர்கிறோம்‌!

அர்ச்‌. அல்ஃபோன்ஸ்மரிய லிகோரியார்‌, தன்ஜீவிய காலத்தில்‌ 111 புத்தகங்களும், பலபிரபந்த நூல்களும்எழுதியுள்ளார்‌; இவை 60 மொழிகளில்‌, 4000 பதிப்புகளாக பிரசுரமாயிருக்கின்றன, என்பது, குறிப்பிடத்தக்கது! மகா பரிசுத்த தேவநற்கருணையைப்பற்றியும்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமைகள்பற்றியும்‌, ஆண்டவரின்பரிசுத்தப்பாடுகள்பற்றியும்‌, ஆண்டவருடைய ஜீவிய சரித்திரத்தைப்பற்றியும்‌, நன்மரண ஆயத்தம்பற்றியும்‌, இன்னும்அதிக புத்தகங்களை எழுதியுள்ளார்‌; இக்காலத்தில்இணையதளத்தில்‌, இலவசமாகக்கிடைக்கிற பாரம்பரிய கத்தோலிக்க புத்தகங்களில்‌, இவரின்எல்லா புத்தகங்களும்ஏறக்குறைய நமக்குக் கிடைக்கும்படியாக இருப்பதே, இக்காலத்திலும்எக்காலத்திலும்நமக்கு அருளப்படுகிற தேவபரா மரிப்பின்அரிய அடையாளமாக இருக்கிறது! இவர்‌ 1762ம் வருடம்‌, அர்ச்‌.  ஆகத்தா மேற்றிராசனத்தின் மேற்றிராணியாராக அபிஷேகம்செய்யப்பட்டார்‌. இம்மேற்றிராசனத்தில்‌ 13 வருட காலம்‌, ஆன்ம ஈடேற்ற அலுவலில்‌, அயராமல்உழைத்தார்‌; குருமடங்களையும்‌, துறவற மடங்களையும்சீரமைத்தார்‌; கேட்பவர்இருதயங்களில்தேவ சிநேகத்தை மூட்டிய இவரின்ஞானதியானப்பிரசங்கங்களால்‌, அநேக வெதுவெதுப்பு கிறீஸ்துவர்கள்‌, உத்தம கிறீஸ்துவர்களாக மாறினர்‌; விசுவாசத்தை மறுதலித்திருந்தவர்கள்‌, மனந்திரும்பி, மறுபடியும்சத்திய திருச்சபையில்சேர்ந்தனர்‌; அர்ச்‌.அல்ஃபோன்ஸ்‌, தனது 91வது வயதில்‌, 1787ம்வருடம்‌, ஆகஸ்டு 1ம்தேதியன்று, மத்தியானம்‌ 12 மணிக்கு திரிகால ஜெபத்திற்காக தேவாலய மணி அடிக்கத்துவக்கிய போது, பாக்கியமாய்மரித்தார்‌. 1839ம்வருடம்‌, இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்அளிக்கப்பட்டது; 1871ம்வருடம்இவருக்கு வேதபாரகர்பட்டம்அளிக்கப்பட்டது. 1950ம்வருடம்‌, பாவசங்கீர்த்தனம்கேட்கிற ஆன்ம குருக்களுக்கும்‌, நல்லொழுக்க வேத இயல்அறிஞர்களுக்கும்‌ , பாதுகாவலர்என்று அறிவிக்கப்பட்டார்‌.

 கனியை விரும்புகிற எவனும்கட்டாயமாக அதனுடைய மரத்தினிடம்செல்ல வேண்டும்‌; நமதாண்டவரான திவ்ய சேசு கிறீஸ்து  நாதரை ஆசிக்கிற எவனும்கட்டாயமாக அவருடைய மகா பரிசுத்த  மாதாவிடம்செல்ல வேண்டும்‌! மகா பரிசுத்த தேவ மாதாவை யாரெல்லாம்கண்டடைகின்றனரோ, அவர்களெல்லாம்‌, மிகவும்நிச்சயமாக, நமதாண்டவரான திவ்ய சேசுநாதர் சுவாமியைக்கண்டடைந்து கொள்வார்கள்!”  

அர்ச்‌.அல்ஃபோன்ஸ்மரிய லிகோரியார்‌. 

அர்ச்‌.அல்ஃபோன்ஸ்மரிய லிகோரியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!




Books by St. ALphonsus 

Visits to Jesus and Mary : excerpted from visits to - Link the most blessed Sacrament and the Blessed Virgin Mary  


The Glorious of Mary - Link


The practice of the love of Jesus Christ - Link




If you want any book from Archeive.org about St. Alphonsus Liguori 
I can download it for you. 
Contact me on Email (lourdhurobin@gmail.com) or Telegram or https://t.me/Lourdhurobin

August is the Month of Immaculate Heart of Mary - Aug. 2

 

ஆகஸ்டு 02ம் நாள்

அப்போஸ்தலரான அர்ச்.சின்னப்பர் கூறுவதற்கேற்ப  நமதாண்டவர், தமது ஞான சரீரமாகிய திருச்சபைக்கு தலையாகவும், நாம் அதன் உறுப்புகளாகவும் இருக்கிறோம். அப்படியென்றால், நாம் கட்டாயமாக, ஆண்டவருடைய இஸ்பிரீத்துவினால், உயிரூட்டப்பட வேண்டும்; அவருடைய ஏவுதல்களை நாம் நிச்சயமாகப் பின்பற்றி ஜீவிக்க வேண்டும்; ஆண்டவர் நடந்து சென்ற பாதையைப் பின்பற்றி நடக்க வேண்டும்! ஆண்டவர் இப்பூமியில் ஜீவித்தபோது அனுசரித்த சகல புண்ணியங்களையும், நாமும் அனுசரிக்க வேண்டும்! மகா பரிசுத்த தேவமாதாவின் மீது நாம் கொண்டிருக்கிற பக்தி, நமதாண்டவர் தாமே, தமது மகா பரிசுத்த மாதாவின் மீது கொண்டிருந்த பக்தியின் தொடர்ச்சியாகக் கட்டாயமாக  இருக்க வேண்டும், என்பதை இதிலிருந்து, நாம் கண்டுணரவேண்டும். பூமியிலிருந்த போது, ஆண்டவர் தமது மகா பரிசுத்த மாதாவின் பேரில் கொண்டிருந்ததும், இன்னும் கொண்டிருக்கிறதுமான மேரை மரியாதை யினுடையவும், கையளித்தலினுடை யவும், பற்றுதலினுடையவும் உணர்வுகளால் நாமும் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும் 

மகா பரிசுத்த மரியாயின் மதுரமான இருதயமே! என் இரட்சணியமாயிரும்!

மகா பரிசுத்த மரியாயின் மாசற்ற இருதயமே! வாழ்க!