சர்வேசுரனுடைய கற்பனைகளையும், திருச்சபைக் கட்டளைகளையும் அநுசரித்து பாவத்தைப் புறம்தள்ளி புண்ணியத்தைச் செய்யவேண்டியது.
இரட்சண்யம் அடைவதற்கு தேவ கற்பனைகளை அநுசரிக்க வேண்டியது அவசியமோ?
புத்தி விவரமடைந்த சகல மனிதர்களும் இரட்சணியமடைவதற்கு தேவ கற்பனைகளை அநுசரிப்பது அத்தியாவசியமாகும். "சீவியத்திற் விரவேசிக்க உனக்கு மனதனால் கற்பனைகளை அநுசரி".( மத். 19:17)
புத்தி விவரமடைந்த கிறீஸ்தவர்கள் இரட்சணியமடைவதற்கு ஞானஸ்தானமும் விசுவாசமும் போதாதா? போதாது. ஏனெனில் கிரியைகள் இல்லாத விசுவாசம் உயிரற்றது. (யாக. 2: 20). தேவனில் விசுவாசங்கொண்டிருப்பது நல்லதுதான். ஆனால் அந்த விசுவாசத்திற்கு தக்கவாறு நமது நடத்தையை சீர்படுத்தி பாவத்தை வட்டு ஒழுக வேண்டும். இதுதான் கற்பனைகளை அநுசரிக்கும் விதமாகும். ஆதலால் விசுவாசத்தோடு கற்பனைகளையும் அநுசரித்தால் தான் புத்தி விவரமடைந்த மனிதர் இரட்சணியமடையலாம்.
பத்து கற்பனைகளும் விசுவாசத்திற்கு அத்தியாவசியமோ? அவசியந்தான். விசுவாச மந்திரத்தில் நாம் விசுவசிக்க வேண்டிய சத்தியங்கள் எவ்வாறு சுருக்கமாய் கூறப்பட்டுள்ளதோ, அப்படியே நாம் அநுசரிக்க வேண்டிய நல்லொழுக்க சட்டங்கள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பத்துகற்பனைகளே, சத்திய கடவுளை நம்பி அவரது படிப்பினைகளை விசுவசிக்கவும், அவரது கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கவும் போதிக்கின்றன. நித்திய நன்மைசுசூரூபியான சர்வேசுரன் நமக்கு இக்கட்டளைகளை அருளிச்செய்து நாம் இவ்வுலகிலே சந்தோஷத்தையும், நன்மையையும் அடையும்பொருட்டே. ||நீதியானது சாதியை உயர்த்துகிறது. பாவமோவெனில் பிரசைகளை நிற்பாக்கியராக்குகிறது. (பழ. 14:34).
சர்வேசுரன் நமக்கு அருளிச்செய்த கற்பனைகள் பத்து. 1. உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே. நம்மை தவிர வேறு சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.
மோட்சத்தை அடைகிறததற்கு வேத சத்தியங்களை விசுவசிக்கிறதல்லாமல் இன்னுஞ் செய்யவேண்டியதென்ன?
2. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாக சொல்லாதிருப்பாயாக.
3. சர்வேசுரனுடைய திருநாள்களை பரிசுத்தமாய் அநுசரிக்க மறாவாதிருப்பாயாக.
4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக.
5. கொலை செய்யாதிருப்பாயாக.
6. மோக பாவம் செய்யாதிருப்பாயாக.
7. களவு செய்யாதிருப்பாயாக.
8. மோக பாவம் செய்யாதிருப்பாயாக.
9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.
10. பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.
இந்த பத்து கற்பனைகளும் இரண்டு கட்டளைக்குள் அடங்கும்.
1. எல்லாத்தையும் பார்க்க சர்வேசுரனைச் சிநேகிக்கிறது.
2. தன்னைத் தான் சிநேகிக்கிறது போல் பிறரையும் சிநேகிக்கிறது.
இந்தப் பத்துக் கற்பனைகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. முதல் மூன்று கற்பனைகளும் தேவ ஆராதனைகளும், தேவ வழிப்பாட்டிற்கும் உரித்தானவை: மற்றவை நாம் நம் மீதும் புறத்தியார் மீதும் செலுத்தவேண்டிய கடமைகளைப் போதிக்கின்றன.