ஒரு சமயம் தாய்மார் சிலர் தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு சேசுவிடம் வந்தார்கள். ஆண்டவரது ஆசிரை பெற விரும்பினார்கள். அவர் இருந்த இடத்தை அனுகினார்கள். சீடர்கள் அதைக் கண்டு அவர்கள
அதட்டினார்கள். ஆண்டவர் சீடர்களைப் பார்த்து, "பாலர்களை என்னிடத்தில் வரவிடுங்கள். அவர்களை தடுக்காதேயுங்கள். ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் இப்படிப் பட்டவர்களுடையதே. சிறுபிள்ளையைப் போல் சர்வேசுரனுடைய இராச்சியத்தை ஏற்றுக் கொள்ளாத எவனும் சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசியானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". என்று கூறினார். பின் அக்குழந்தைகளை அரவணைத்தார். அக்குழந்தைகளின் தலைமீது கை வைத்து ஆசிரளித்தார்.
நாம் எப்போதும் சிறு குழந்தைக்குரிய தூய உள்ளம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். எப்போதும் சேசுவை நாம் நேசிக்க வேண்டும். சேசுவும் எப்போதும் நம்மை தமது அரவணைப்பில் வைத்திருப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக