இரண்டாம் பிரிவு
உலக சிரிஸ்டிப்பின் பேரிலும் மனிதனுடைய கேட்டின் பேரிலும்
14. சர்வேசுரன் எல்லாத்துக்கும் ஆதி காரணமாய் இருப்பது எப்படி?
பரலோகத்தையும் பூலோகத்தையும் அவற்றில் அடங்கிய சகலத்தையும் உண்டாக்கி காப்பாற்றுகிரதினாலே எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாய் இருக்கிறார்.
15. சர்வேசுரன் உண்டாக்கினவைகளில் பிரதான வஸ்துக்கள் எவை?
சரீரமில்லாத சம்மனசுக்களும் சரீரமும் ஆத்துமமும் உள்ள மனிதர்களும் தான்.
16. சம்மனசுக்கள் எல்லாரும் தங்கள் மேன்மையான அந்தஸ்திலே நிலைக் கொண்டார்களா?
இல்லை. சிலர் ஆங்கரதினாளே மோட்சத்தை இழந்து நரக ஆக்கினைக்கு உள்ளானார்கள்.
17. இப்படி கேட்டுப் போன சம்மனசுக்கள் பெயர் என்ன?
பசாசுக்கள்.
18. சர்வேசுரன் மனிதனை எதற்காக உண்டாக்கினார்?
தம்மை அறிந்து சிநேகித்து சேவிக்கவும் அதனால் மோட்சம் அடையவும் உண்டாக்கினார்.
19. அவர் எந்த அந்தஸ்திலே ஆதிப் பெற்றோரை உண்டாக்கினார்?
பரிசுத்தமும் பாக்கியமுமான அந்தஸ்திலே அவர்களை உண்டாக்கினார்.
20. அவர்கள் அதை போக்கடித்ததெப்படி?
பசாசை நம்பி சர்வேசுரனால் விலக்கப்பட்ட கனியை தின்றதினாலே அதைப் போக்கடித்தார்கள்.
21. அதனால் அவர்களுக்கும் அவர்கள் சந்ததியர்ருக்கும் வந்த கேடு என்ன?
பசாசுக்கு அடிமையாகி, சாவு நரகம் முதலிய ஆக்கினைக்கு பாதிரவான்கள் ஆனார்கள்.
மூன்றாம் பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக