ஆறாம் நாள்
மோந்ததே பாவோலோ மடத்தில் நடந்த வரலாறு
பாவிகளை மனந்திருப்புவதற்கும், பிரிவினைக்காரரை வெட்கப்படுத்திக் கலங்க அடிக்கிறதற்கும் அர்ச். அந்தோனியாரைத் தெரிந்துகொண்ட கடவுள், கொஞ்ச காலம் அவர் தனிவாசத்திலும் தாழ்மையிலும் இருக்கும்படி சித்தமானார்,

உயர்ந்த குலத்திற் பிறந்த அவர், மேலான சாஸ்திரம்களைக் கற்றறிந்த அவர், அநேகரைத் தமது அருமைப் பிரசங்கங்களால் மனம் திருப்ப வேண்டிய அவர், பதிதருடைய சம்மட்டியென்று அழைக்கப்பட வேண்டிய அவர், சர்வேசுரன் அவருக்கு அருளிய வரத்தால் அதிக அற்புதங்களைச் செய்ய வேண்டிய அவர், இப்படி தம்மை தானே தாழ்த்தி நீசத் தொழில்களைச் சந்தோஷமாய்ச் செய்து வந்தது எவ்வளவோ ஆச்சரியத்துக்குரிய தாயிருக்கின்றது. அர்ச். அந்தோனியார் தம்முடைய புண்ணியத்துக்காகவும், அர்ச்சியசிஷ்டதனம் அடையவும், பிறர் ஆத்துமங்களை ஈடேற்றத் துக்கு முந்தியும் (செய்துவந்த புண்ணியங்களை நாம் கண்டு அதிசயிக்கத் தான் செய்வோம். ஆத் (At) என்னுங் குருவானவர் சொல்லியிருக்றெதென்னவென்றால், தாழ்ச்சியென்னும் புண்ணியம் அர்ச். அந்தோனியாரிடத்தில் விசேஷமான விதமாய் விளங்கிற்று. (கொத்திர மகிமையையும், சாஸ்திரத் திறமையையும் கொஞ்சமாவது யோசிக்காமல் தன்னை அற்பமாகவே எப்போதும் எண்ணி வந்தார் என்கிறார்,
தாழ்ந்த வேலைகளை மனச் சந்தோஷத்தோடு செய்து வருவார். இஸ்பிரீத்துசாந்துவானவருடைய நல்ல ஏவுதல்களை அறிந்து தம் இருதயத்தில் அவைகளைப் பதியவைக்க கெபிகளையும் தனி இடங்களையும் தேடித் தியானஞ் செய்வார்,
இந்த அர்ச்சியசிஷ்டவரிடத்தில் விளங்கின புண்ணிய மாதிரிகளை, மட்டற்ற தாழ்ச்சியை, உலக மகிமை கீர்த்தியின்மேல் வெறுப்பைக் கண்ட நாம் நம்மிடத்திலும் அந்தப் புண்ணியங்கள் கொஞ்சமாவது விளங்குவதற்குப் பிரயாசைப்படாதிருக்கலாமோ. பிரயாசைப்பட்டால் அவருடைய ஒத்தாசையைக் கொண்டு நமது பிரயாசைக் களவு அந்தப் புண்ணியங்களை அடைவோம்.
செபம்
உலக வீண் பெருமை சிலாக்கியங்களை அகற்றி நிந்தித்துத் தள்ளின அர்ச். அந்தோனியாரே, தாழ்ச்சியின் உத்தம மாதிரியான சேசுநாதரை பணிவுடன் கண்டுபாவித்த நீர், நாங்களும் எங்கள் ஆங்காரப் பெருமை சிலாக்கியத்தைத் தள்ளி, உம்மை எங்களால் கூடுமான மட்டும் கண்டு பாவிக்கத் தயை செய்தருளும். - ஆமென்.
நற்கிரியை - தாழ்ச்சி முயற்சி ஏதாவது செய்கிறது
மளவல்லயச் செபம் - உத்தம் தாழ்ச்சியிள் மாதிரி யான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக